பூ4தளதி3 ஜனருக3ளு மர்மக
மாதுக3ளனாடித3ரெ ஸஹிஸதெ3
கா4தி ஸுவரதி1 கோபதி3ந்த3லி எச்சரிப தெரதி3 |
மாதுளாந்தக ஜார ஹே நவ
நீத சோரனே எனலு தன்ன நி
கேதனதொ3ளிட்டவர ஸந்தெயிஸுவனு கருணாளு ||31
பூததலி = பூமியில்
ஜனருகளு = மக்கள்
மர்மத மாதுகளனாடிதரெ = மனதை வருத்தும்படியான
பேச்சுக்களை பேசினால்
ஸஹிஸதெ = அதை பொறுக்காமல்
அதிகோபதிந்தலி = மிகவும் கோபத்துடன்
காதிஸுவரு = தண்டனை கொடுப்பர்
எச்சரிபதெரதி = அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பர்
மாதுளாந்தக = ஹே தாய் மாமனைக் கொன்றவனே
ஜார = (கோபிகையரின்) பெண்களின் மனம் கவர்ந்தவனே
ஹே,
நவனீத சோரனே = வெண்ணையை திருடித் தின்றவனே
எனலு = என்று பக்தியுடன் கூறினால்
அவர = அவர்களை
தன்ன நிகேதனதொளிட்டு = தன் வீட்டில் வைத்து
(முக்தியில் தன் உலகத்தில் வைத்து)
கருணாளு = கருணைக்கடலான
ஸந்தெயிஸுவனு = காப்பாற்றுவான்
உலகத்தில் யாராவது யாரையாவது, அவர் மனம் புண்படும்படி பேசிவிட்டால், உடனே அவர் அதை பொறுக்காமல், அவருக்கு தக்க தண்டனை கொடுப்பார்.
உயர்ந்த குரலில் மறுபடி இதைப்போல செய்யாதே என்று எச்சரிப்பார். ஆனால், ஸ்ரீபரமத்மன் அப்படியல்ல. ஹே மாதுளாந்தகா. ஹே ஜார. ஹே நவனீத சோரா. என்று உரத்த
குரலில் அழைத்தால், மிகுந்த கருணையுடன் அவர்களுக்கு முக்தியைக் கொடுத்து காப்பாற்றுவான்.
ஆகையாலேயே, கருணாளு என்கிறார்.
ஹரிகதாsம்ருத ஸாரவிது3 ஸ
ந்தரு ஸதா3 சித்தயிஸுவுது நி
ஷ்டுரிக3ளிகெ3 பிஷுனரி க3யோக்3யரிகி3த3னு பேளத3லெ |
நிருத ஸத்3ப4க்தியலி ப4க3வ
ச்சரிதெக3ள கொண்டா3டி3 ஹிக்கு3வ
பரம ப4கவத்3தாஸரிகெ3 திளிஸுவுது ஈ ரஹஸ்ய ||32
ஹரிகதாம்ருத சாரவிது = இது ஹரிகதை என்னும் உத்தமமான
அமிர்தம்
ஸந்தரு = சஜ்ஜனர்கள்
ஸதா = எப்போதும்
சித்தயிஸுவுது = சித்தத்தில் நினைக்கத் தக்கது
நிஷ்டுரிகளிகெ = இந்த கிரந்தத்தை புறக்கணித்து, திட்டுபவர்களுக்கு
பிஷுனரிகெ = புறம் பேசுபவர்களுக்கு
அயோக்யரிகெ = ஹரி குரு த்வேஷிகளுக்கு
இதனு பேளதலெ = இந்த கிரந்தத்தை விளக்காமல்
நிருத = எப்போதும்
ஸத்பக்தியலி = சிறந்த திடமான பக்தியில்
பகவத்சரிதெகள = பகவந்தனின் சரிதைகளை
கொண்டாடி = பூஜித்து
ஹிக்குவ = மகிழும்
பரம பகவத்தாஸரிகெ = பகவந்தனின் பக்தர்களுக்கு
ஈ ரஹஸ்ய = இந்த ரகசிய விஷயங்களை
திளிஸுவுது = சொல்ல வேண்டும்
இப்போது நாம் சொன்னது அனைத்தும் ரகசியமான ஹரிகதை
என்னும் அமிர்தத்தின் சாரம். இதைக் கேட்பதற்கு சஜ்ஜனர்கள் மட்டுமே அதிகாரம்
கொண்டவர்கள். மற்றவர்கள் அல்ல. ஆகையால், இதனை பகவன்மஹிமை கேட்பதில் ஆர்வம்
இல்லாமல் அதற்கு எதிராக பேசுபவர்களுக்கு சொல்லக்கூடாது. பரமாத்மனிடம் த்வேஷம்
செய்பவர்களுக்கும், பிற தேவதைகளை பூஜிப்பவர்களுக்கும் தமோ யோக்யர்களுக்கும் இதை சொல்லக்கூடாது. யார்
மிகச்சிறந்த பக்தியால் பகவத் சரித்திரங்களை கேட்டு பூஜித்து மகிழ்கின்றனரோ, அத்தகைய பகவத் தாசர்களுக்கு மட்டுமே இந்த ரகசியத்தை உபதேசம் செய்யவேண்டும்.
ஸத்யஸங்கல்பனு ஸதா3 ஏ
நித்துதெ3 புருஷார்த்தவெந்த3ரி
த3த்யதி4க ஸந்தோஷதி3ம் நெனெவுத்த பு4ஞ்சிபுது3 |
நித்ய ஸுக2ஸம்பூர்ண பரமஸு
ஹ்ருத்தம ஜகன்னாத2விட்டல
ப3த்திஸி ப4வாம்பு3தி4ய சித்ஸுக2வ்யக்தி கொடு3திப்ப ||33
சத்யசங்கல்பனு = பரமாத்மனின் அனைத்து வேலைகளும்
சுஜீவர்களுக்கு நல்லதாகவே தோன்றுகிறது.
எனித்துதெ = அத்தகைய சங்கல்ப ஸ்வரூபனாக இருக்கும்
பரமாத்மன் ஜீவர்களுக்கு எந்த தேச, கால, அவஸ்தைகளை கொடுக்கிறானோ,
சதா = எப்போதும்
புருஷார்த்தவெந்து = அதுவே அவன் கொடுத்த
பரமபுருஷார்த்தம் என்று அறிந்து,
அத்யதிக சந்தோஷதிம் = மிகவும் அதிகமான மகிழ்ச்சியில்
நெனெவுத்த = அவனின் மகிமைகளை நினைத்தவாறு
புஞ்சிபுது = அந்த பலன்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நித்யசுக சம்பூர்ண = நித்ய ஆனந்தமயமான
பரம சுஹ்ருத்தம = ஆபத்துகளை பரிகரித்து காப்பாற்றும்
உத்தமனான
ஜகன்னாதவிட்டல = பிம்பமூர்த்தியான ஜகன்னாத விட்டலரூபி
பகவந்தன்
பவாம்புதிய = சம்சாரம் என்னும் சாகரத்தை
பத்திஸி = தாண்டச் செய்து
சித்சுகவ்யக்தி = ஸ்வரூப ஆனந்தத்தை
கொடுதிப்ப = கொடுக்கிறான்.
சத்யசங்கல்பன் என்றால், தன் மனதில் முதலில் எது தோன்றுகிறதோ, அதையே நடத்தி முடிக்கிறான். அவன்
நினைத்ததை மாற்றுவதற்கு பிரம்மாதிகளாலும் முடிவதில்லை. ஆகையாலே, பரமாத்மனுக்கு சத்யசங்கல்பன் என்று பெயர்.
ஈஷாவாஸமிதம் சர்வம் யக்ஞகத்யாம் ஜகன்மன: |
தேனத்யக்தேன புஞ்சீதா: ||
என்னும் ஈஷாவாஸ்ய உப நிஷத்தின் வாக்கியத்தைப் போல, இத்தகைய பகவந்தன், தன் இஷ்டத்திற்கு தான் நினைத்ததை எப்போதும் நமக்குக் கொடுக்கிறான். ஆகையால், நம் தகுதிக்கேற்ப, அவன் கொடுப்பதே புருஷார்த்தம் என்று (அதாவது தர்ம, அர்த்த, காம,
மோட்ச என்னும் புருஷார்த்தங்களை) நினைத்து, கிடைக்காத பொருட்களில் ஆசையை வைக்கக்கூடாது என்று சொல்கிறார்.
யத்ருச்சா லாபதுஷ்டஸ்ய தேஜோவிப்ரஸ்ய வர்த்ததே |
ஈஸ்வர ப்ரேரணையால் கிடைத்ததை வைத்து யாரொருவன்
மகிழ்கிறானோ, அவனுக்கு தேஜஸ் வளர்கிறது.
அஸந்துஷ்ட: சுகம்விப்ரனாப்னோத்யபி ஸுரேஷ்வர: ||
ஹே பிராமணனே, திருப்தி அடையாமல் இருந்தால், அவன் தேவேந்திரனாக இருந்தாலும், அவனுக்கு சுகம் கிடைக்காது.
இது பாகவத 10ம் ஸ்கந்தத்தில், ருக்மிணி தேவி அனுப்பிய கடிதத்தைக் கொண்டு வந்திருந்த பிராமணனிடம்
ஸ்ரீகிருஷ்ணன் கூறியதாகும்.
இப்படியாக, ஸ்ரீஹரி கொடுத்ததை மகிழ்ச்சியுடன்
போகித்தவாறு, பரமாத்மனை துதிக்துக் கொண்டிருந்தால், பரம நண்பனான ஸ்ரீஹரி, சம்சாரம் என்னும் சாகரத்தைத் தாண்ட
வைத்து (முக்தனாக மாற்றி) முக்தியில் ஸ்வரூப ஆனந்தத்தைக் கொடுத்து
காப்பாற்றுகிறான்.
நாமஸ்மரண சந்தி என்னும் 13ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் முடிவுற்றது.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
No comments:
Post a Comment