ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, July 7, 2020

21-25 தியான ப்ரக்ரிய சந்தி

ஜலதி4யொளு ஸ்வேச்சானுஸாரதி3

ஜலசர ப்ராணிக3ளு தத்த

த் ஸ்த2லக3ளலி ந்தோஷபடு3தலி ஞ்சரிஸுவந்தெ |

நலினனாப4னொளப்3ஜப4வ மு

ப்பொளலுரிக3 மைக3ண்ண மொத3லா

3லவ ஜீவர க3ணவு வர்த்திஸுதிஹுது நித்யத3லி ||21

 

ஜலதியொளு = கடலில்

ஸ்வேச்சானுசாரதி = தத்தம் இஷ்டத்திற்கேற்ப

ஜலசர ப்ராணிகளு = நீரில் வசிக்கும் மீன் முதலை ஆகியவை

தத்தத் ஸ்தலகளலி = அந்தந்த இடங்களில்

சந்தோஷபடுதலி = மகிழ்ந்திருப்பதைப் போல

நளினனாபனொளு = பத்பனாபனுக்குள்

அப்ஜபவ = தாமரையில் பிறந்த பிரம்மதேவர்

முப்பொளலுரிக = மூன்று பட்டணங்களை சுட்ட ருத்ரதேவர்

மைகண்ண மொதலாத = உடம்பெல்லாம் கண்களை உடைய தேவேந்திரன் முதலான

ஹலவு ஜீவரகணவு = பலவகை ஜீவ கணங்கள்

நித்யதலி = நிரந்தரமாக

வர்த்திஸுதிஹது = சஞ்சரிக்கின்றனர்.

 

கடலில் மீன், முதலை ஆகிய பிராணிகள் எப்படி தத்தம் இஷ்டத்திற்கேற்ப மகிழ்ந்து வசித்திருப்பதைப் போல, பரமாத்மனின் உதரத்தில் பிரம்ம ருத்ராதி தேவதைகள், தத்தம் ஸ்தானங்களில் இருந்துகொண்டு சஞ்சரித்து, மகிழ்ச்சியுடன் பகவந்தனை தியானித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

வாஸுதே3வனு ஒளஹொரகெ3

பா4கனு தானாகி3 பி3ம்ப3 ப்ர

காஷிஸுவ தத்3ரூப தன்னாமத3லி ர்வத்ர |

மன்வய வெந்தெ3னிப ஸது3

பாஸனெய கை3வப1னு மோக்‌ஷா

ந்வேஷிக3ளொளுத்தமனு ஜீவன்முக்த நவனியொளு ||22

 

வாசுதேவன் ஒளஹொரகெ ஆபாஸகனு = ஜீவரின் ஸ்வரூப தேகத்தின் உள்ளே வெளியே பிரதிபிம்பனாக வாசுதேவன்

தானாகி = தானேயாகி

பிம்ப = பிம்பரூபத்தினால்

சர்வத்ர = அனைத்து இடங்களிலும்

தத்ரூப = அந்தந்த ரூபங்களில்

தன்னாமதலி = அந்தந்த பெயர்களில்

ப்ரகாஷிஸுவ = ஒளிர்கிறான் (நிலைத்திருக்கிறான்)

ஈ ஸமன்வய யெந்தெனிப = பிம்ப, பிரதிபிம்ப ரூபங்களில் தானே இருந்து அனைத்து காரியங்களை செய்விக்கிறான் என்னும்

ஸதுபாஸனெய = இந்த உத்தமமான உபாசனையை

கெய்வவனு = செய்பவன்

மோக்‌ஷான்வேஷிகளொளு = மோட்சத்தை விரும்புபவர்களில்

உத்தமன் = சிறந்தவன்

அவனியொளு = பூமியில்

ஜீவன்முக்த = ஜீவன் முக்தன் எனப்படுகிறான்.

 

ஜகத்தின் உள்ளேயும் வெளியேயும் ஸ்ரீபரமாத்மன் நிலைத்திருக்கிறான். பிம்பரூபனாக, ஜீவனின் ஸ்வரூப தேகத்தில் ப்ரதிபிம்பனாக, அனைத்து பிராணிகளில் அந்தந்த ரூபங்களில் அந்தந்த பெயர்களில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். பிம்பரூபியாகி எந்த பரமாத்மன் இருக்கிறானோ அதே பரமாத்மன் பிரதிபிம்பனான ஜீவர்களில் இருக்கிறான். இந்த இரு பகவத்ரூபங்களுக்கு பரஸ்பரம் வேறுபாடு இல்லை என்னும் உத்தம சிந்தனையை / உபாசனையை செய்பவரே, முக்தியோக்யர்களில் உத்தமன் மற்றும் பூமியில் ஜீவன் முக்தர்கள்.

 

போ4க்3ய வஸ்துக3ளொளகெ3 யோக்3யா

யோக்3ய ரஸக3ளனரிது யோக்3யா

யோக்3யரலி நெலெஸிப்ப ஹரிகெ3 மர்ப்பினுதி3னதி3 |

பா4க்3ய ப33தன ப3ரலு ஹிக்க3தெ3

குக்3கி3 ஸொரக3தெ3 த்ப4கு3தி1 வை

ராக்3யக3ளனே மாடு3 நீ நிர்பா4க்3ய னெனி3லெ ||23

 

போக்யவஸ்துகளொளகெ = நாம் போகிக்க யோக்யமான பதார்த்தங்களில்

யோக்யாயோக்ய ரஸகளனரிது = இந்த பதார்த்தம் போகிக்க தகுதியானது, இது தகுதியற்றது என்று குரு முகத்தினாலோ, சம்பிரதாயத்தினாலோ, சாஸ்திரங்களிலிருந்தோ அறிந்து

யோக்யாயோக்யரலி நெலஸிப்ப = தேவ பிராமண சண்டால பசுக்களில் இருக்கும்

ஹரிகெ = பகவத் ரூபங்களுக்கு

அனுதினதி = தினந்தோறும்

சமர்ப்பிஸு = சமர்ப்பித்து வா

பாக்ய படதன பரலு ஹிக்கதெ, குக்கி ஸொரகதெ = செல்வம் வந்ததென்று கர்வப்படாமல், ஏழ்மை வந்ததென்று கவலைப்படாமல், நீ,

நிர்பாக்யனெனிஸதலெ = இந்த பிறவியே வீண் என்று நினைக்காமல்

ஸதுபகுதி = பரமாத்மனிடம் நல்ல பக்தியை

வைராக்யகளனெ = சம்சாரத்தில் வைராக்கியங்களை வேண்டு.

 

நாம் பயன்படுத்தும் தகுந்த பதார்த்தங்களில் தேவர நைவேத்தியத்திற்குத் தகுதியான பதார்த்தங்கள் எவை? தகுதியில்லாத பதார்த்தங்கள் எவை? என்பதை ஒரு குருவிடமிருந்தோ, சாஸ்திரங்களிலிருந்தோ அறிந்து, சாத்விகர்கள், ராஜஸர்கள், தாமசர்கள் என்னும் மூன்றுவித ஜீவர்களில் நிலைத்திருக்கும் ஸ்ரீபரத்மானுக்கு சாத்விக, ராஜஸ, தாமஸாத்மகமான போக்ய பதார்த்தங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது, சாத்விகர்கள், சாத்விக ஆகாரத்தை வணங்கியவாறு, ஏகபத்னி விரதனாக இருக்கிறான். ராஜஸர், தாமஸர் இருவரும் தத்தம் தகுதிகளுக்கேற்ப ராஜஸ தாமஸ பதார்த்தங்களான உருளைக்கிழங்கு, சுரைக்காய் ஆகிய பதார்த்தங்களிலும், வேசி முதலான பர-ஸ்த்ரியர்களை விரும்பி மகிழ்ந்திருப்பர்.

 

ஸ்ரீபரமாத்மன் அவர்களில் இருந்து அவரவர்களின் தகுதிக்கேற்ப பலன்களைக் கொடுப்பதற்காக, சாத்விக தாமஸ முதலான பதார்த்தங்களில் ரசங்களை தான் ஸ்வீகரித்து, அவரவர்களுக்கு தகுதியான பலன்களைக் கொடுக்கிறான். இவற்றை அறிந்து சாத்விகரான பகவத்பக்தர்களில் இருக்கும் பரமாத்மனுக்கு சாத்விக பதார்த்தங்களையே அர்ப்பிக்க வேண்டும். தாமஸாதி பதார்த்தங்களை ஸ்வீகரித்தால், பரமாத்மனுக்கு தோஷங்கள் வந்துவிடும் என்று சந்தேகப் படக்கூடாது. ஏனெனில், தகுதியான / தகுதியில்லாத பதார்த்தங்களில் எந்த பரமாத்மன் இருக்கிறானோ, அந்த உண்பவரில்கூட அதே பரமாத்மனே இருப்பதால், அந்த பதார்த்தங்களுக்கும், அதை உண்பவருக்கும் பரஸ்பரம் வேறுபாடு உண்டே தவிர, அவற்றில் இருக்கும் பகவத்ரூபங்களுக்கு கொஞ்சம்கூட வேறுபாடு இல்லை.

 

ஆகையால், எந்தெந்த பிராணிகள் எந்தெந்த பதார்த்தங்களை விரும்புகிறதோ, அவரவர்களில் இருக்கும் பரமாத்மனுக்கு, அந்தந்த பதார்த்தங்களையே சமர்ப்பிக்க வேண்டும். இப்படியாக சமர்ப்பித்து பூஜிப்பதற்கு அன்வய பூஜைஎன்று பெயர். இப்படி அனைத்து இடங்களிலும் வியாப்தனாகி இருக்கும் பகவத் ரூபங்களில் வேறுபாடுகளை சிந்திக்காமல் பூஜிப்பதனால், நெருப்பில் நெருப்பையே போட்டது போல ஒன்றாக இருக்கிறான். இப்படியாக அறிந்து பூஜித்தால், பரமாத்மன் மகிழ்ச்சியடைகிறான்.

 

இப்படி இல்லாமல், செல்வம் வரும்போது மகிழ்வது / கர்வம் கொள்வது; ஏழ்மை வரும்போது வருந்துவது கூடாது. எந்த காலத்திற்கு எது வந்தாலும் அது பகவந்தனின் விருப்பத்தினாலேயே வந்தது என்று நினைத்து, இந்தப் பிறவியை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொண்டு, ஞான வைராக்ய பக்தியினால் பகவந்தனை ஆராதிக்க வேண்டும்.

 

ஸ்த ஜலாத்3ரிக3ளல்லி ஜனிஸு

2ஸுபுஷ்ப ஸு3ந்த3ரஸ ஸ்ரீ

துளஸி மொத3லாத3கி2ல பூஜாஸா3ன பதா3ர்த்த4 |

ஹலவு ப3கெ3யிந்த3ர்ப்பிஸுத பா3

ம்பொ3ளெய ஜனககெ3 நித்ய நித்யதி3

திளிவரிது வ்யதிரேக பூஜெக3ளெந்து3 கோவித3ரு ||24

 

ஸ்தல = பூமி

ஜல = நீர்

அத்ரிகளலி = மலைகளில்

ஜனிஸுவ = பிறக்கும்

பலஸுபுஷ்பஜ = பழங்கள், பூக்களால் பிறக்கும்

கந்த = வாசனையானது

ரஸ = சாறு ஆகியவை

ஸ்ரீதுளசி மொதலாத அகில பூஜா சாதன பதார்த்த = பகவந்தனின் பூஜைக்கு தகுதியான பதார்த்தங்களை

ஹலவு பகெயிந்த = பல விதமாக

பாம்பொளெய ஜனககெ = கங்கையைப் பெற்ற பரமாத்மனுக்கு

நித்ய நித்யதி = தினந்தோறும்

அர்பிஸுத = அர்ப்பிப்பவர்கள்

ஈ பூஜெயு = இந்த பூஜையானது

கோவிதரு = பண்டிதர்கள்

வியதிரேக பூஜெகளெந்து = வியதிரேக பூஜை என்று நினைப்பார்கள்.

 

பூமி, தண்ணீர், மலை இவற்றில் கிடைக்கும் பழம், பூ இவற்றின் சாறு, நறுமணம் ஆகியவற்றை, ஸ்ரீதுளசி முதலான அனைத்து பூஜைக்குத் தகுதியான பதார்த்தங்களை, பல்வேறு விதமாக ஸ்ரீபரமாத்மனுக்கு அர்ப்பிக்க வேண்டும். இந்த பூஜையை ஞானிகள் வியதிரேக பூஜை என்கிறார்கள்.

 

ஸ்ரீகரன ரூப க்ரியெ கு3ணவ

லோகிஸுர்வத்ரதி3 வ்யதி

ரேக திளியதெ3 அன்வயிஸு பி3ம்ப3னலி மரெயத3லெ |

ஸ்வீகரிஸுவனு கருணதி3ந்த3 நி

ராகரிதெ3 க்ருபாளு4க்தர

ஷோகக3ள பரிஹரிஸி ஸு2வித்தனவரத1 பொரெவ ||25

 

ஸ்ரீகரன = ஐஸ்வர்யத்தைக் கொடுக்கும் ஸ்ரீபரமாத்மனை

சர்வத்ரதி = அனைத்து இடங்களிலும்

அவலோகிஸுத = சிந்தித்து / நினைத்து

குண = ஆனந்தாதி குணங்களில்

ரூப = அனைத்து இடங்களிலும் இருக்கும் ரூபங்கள், மத்ஸ்யாவதார ரூபங்கள் இவற்றில்

க்ரிய = ஸ்வாமி, நண்பர்களில் இருந்து செய்து, செய்விக்கும் செயல்களில் ஆகட்டும்

வைதிரேக திளியதலெ = பேதங்களை சிந்திக்காமல்

பிம்பனலி = நம் தேகத்தில் இருக்கும் பிம்பமூர்த்தியில்

அன்வயிஸு = ஒன்றேயாகும் என்னும் சிந்தனையை

சிந்திஸு = நினை

ஸ்வீகரிஸுவனு = ஏற்றுக்கொள்கிறான்

கருணதிந்த = கருணையுடன்

நிராகரிஸதெ = அதை நிராகரிக்காமல்

க்ருபாளு பக்தர ஷோககள பரிஹரிஸி = பக்தர்களின் சோகங்களை பரிகரிக்கும் கருணாளு

சுகவித்து = சுகங்களைக் கொடுத்து

அனவரத = எங்கும் எப்போதும் இருப்பவன்

பொரெவ = அருள்கிறான்.

 

முந்தைய பத்யத்தில் கூறியதைப் போல, நிலம், நீர், மலைகளில் கிடைக்கும் பழ, பூ ஆகியவற்றிலும்கூட பகவந்தனே அந்தந்த ரூபங்களில், அந்தந்த உருவங்களில் இருக்கிறான் என்று சிந்தித்து, நம் பிம்ப மூர்த்தியான ஸ்ரீபரமாத்மனுக்கும், துளசி ஆகியவற்றிலும், சண்டாலர்களிலும் இருக்கும் பகவந்தனின் அனந்தாதி ரூபங்களில், செயல்களை செய்யும் சக்திகளில், சிறிதளவுகூட வேறுபாட்டினை எண்ணாமல், பிம்பரூபியே நம்மிலும், அனைத்து இடங்களிலும் இருக்கிறான் என்று சிந்திக்க வேண்டும்.

 

துளசி ஆகியவற்றில் இருக்கும் பகவந்தனை, பிம்பரூபியான ஸ்ரீபரமாத்மனுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று நினைக்க வேண்டும். பூஜா த்ரவ்ய ரூபமான பகவந்தனை பிம்பனில் நினைப்பதே அன்வய பூஜை என்று சொல்வர். இதற்கு நேர்மாறாக, துளசிகளில், போக்ய பதார்த்தங்களில், பகவந்தனை அறிந்திருந்தாலும், அந்த பொருட்களை வேறாக சிந்தித்து, சாலிகிராம பிரதிமைகளில், பகவத் ப்ரீதிக்காக சமர்ப்பிப்பது, வியதிரேக பூஜை என்று அறியவேண்டும்.

 

அன்வய பூஜையில், அனைத்து இடங்களிலும் நிலைத்திருக்கும் பகவத்ரூபங்களின் குண ரூப க்ரியைகளில் வேறுபாட்டினை சிந்திக்கக்கூடாது என்றால் என்ன? பதார்த்தங்கள் அனைத்தும் ஒன்றே என்று பொருள் இல்லை. இவற்றில் இருக்கும் பகவந்தனின் குணம் க்ரியைகளுக்கு பேதம் இல்லை. அது எப்படியெனில், பாகவத ஸ்ருதி கீதையில் நஹி விக்ருதந்த்யஜந்திகனகஸ்ய ததாத்மதயா’ - சிறந்த தங்கத்தினால் ஆபரணங்களை செய்தால், அந்த ஆபரணங்களின் உருவ பேதத்தினால் பெயர்களில் மட்டும் வேறுபாடு இருக்குமே தவிர, அந்த தங்கத்தில் வேறுபாடு இல்லை. நிறம், குணம், செயல் ஆகியவற்றில் எப்படி வேறுபாடு இருக்காதோ, அப்படியே, ராம கிருஷ்ணாதி ரூபங்களிலும், பசு, பறவை, மரம் ஆகியவற்றில் வேறுபாடு காண்பவர்கள், அந்தந்த பெயர் அந்தந்த ரூபங்களில் பகவந்தன் இருந்தாலும், பகவத்ரூப, குண, க்ரியாதிகளில் வேறுபாடு சிந்திக்கக்கூடாது. இப்படியாக பகவந்தனை ஒரு மனதுடன் பூஜித்தால், அந்த பூஜையை நிராகரிக்காமல் கருணாமயியான ஸ்வாமி கருணையுடன் அதனை ஏற்றுக்கொண்டு, பக்தர்களின் சோகங்களை பரிகரித்து, முக்தி சுகங்களைக் கொடுத்து அருள்கிறான். 

No comments:

Post a Comment