ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, July 21, 2020

11-15 நாமஸ்மரண சந்தி

அனல ஸோமார்கேந்து3 தாரா

வனி ஸுராபக3முக்2ய தீர்த்த23

ளனில க33ன மனாதி3 இந்த்ரியக3ளிகெ3 அபி4மானி

எனிப ஸுரரு விபஸ்சிதர

ந்மனதி34ஜி3லிப்பவர பா

வனவ மாட3ரு தம்மபூஜெய மாடி33ரு ரியே ||11

 

அனல = அக்னி

ஸோம = உமா சமேதரான ருத்ரதேவர்

அர்க = சூரிய

இந்து = சந்திர

தாரா = நட்சத்திரங்கள்

அவனி = பூமி

ஸுராபான = கங்கை

முக = முதலான தீர்த்தங்கள்

அனில = வாயு

ககன = ஆகாஷ

மனாதி = மனஸ் முதலான இந்திரியங்களுக்கு

அபிமானி எனிப சுரரு = தேவதைகள்

விபஸ்சிதரு = ஞானிகள்

தம்ம பூஜெய மாடிதரு சரியே = தங்களின் பூஜையை செய்தாலும்

ஸன்மனதி = பரமாத்மனிடம் திடமான மனதை வைத்து

பஜிஸதலிப்பர = துதிக்காமல் இருப்பவர்களை புனிதம் ஆக்க மாட்டார்கள்

 

அக்னி, பார்வதி பரமேஷ்வரன், சூர்ய, சந்திர, நட்சத்திர கூட்டம், நவக்கிரகங்கள், பூமி, கங்கை முதலான தீர்த்தங்கள், வாயு, ஆகாஷ முதலான பஞ்சபூதங்கள், தன்மாத்ரா குணங்கள், ஞானேந்திரிய, கர்மேந்திரிய மனஸ் முதலான இந்திரியங்கள், இவற்றின் அபிமானி தேவதைகள், பகவத்பக்தர்களான ஞானிகள் - என இவர் அனைவரும் பரமாத்மனின் சன்னிதானம் கொண்டவர்கள் என்று அறிந்து, அந்தந்த இடங்களில் பூஜித்தால், அவரின் அந்தர்யாமி பரமாத்மன் மகிழ்ந்து, இவனை பவித்ரனாக மாற்றுவர். அவர்களில் பகவந்தனின் சன்னிதானத்தை அறியாமல் பூஜித்தால், அதை அவர்களின் அந்தர்யாமியான பகவந்தனின் பூஜையென்று நினைக்காமல், வெறும் தேவதா பூஜை என்று நினைத்தால், மேற்சொன்ன எந்த தேவதைகளும் இவனை பவித்ரனாக மாற்றுவதில்லை.

 

கெண்ட3 காணதெ3 முட்டித3ரு ரி

கண்டு3 முட்டலு த3ஹிஸதிப்புதெ3

புண்ட3ரிகத3லாயதா3க்‌ஷன விமலபத3பத்3

3ண்டு3ணிக3ளெந்தெ3னிப ப4குதர

ஹிண்டு3 நோடி33 மாத்ரத3லி தனு

தி3ண்டு3 கெ33திஹ நரன பாவனமாள்புதா3க்‌ஷணதி3 ||12

 

கெண்ட = கங்கு

காணதெ முட்டிதரு சரி = தொட்டால் சுடும் என்கிற ஞானம் இல்லாமல் தொட்டாலும் அது சுட்டுவிடும்

கண்டு முட்டலு = தொட்டால் சுடும் என்று தெரிந்து தொட்டாலும்

தஹிஸதிப்புதெ = சுடாமல் இருக்குமா?

புண்டரீக தளாயதாக்‌ஷன = தாமரை போன்ற கண்களை உடைய ஸ்ரீபரமாத்மனின்

விமல = தோஷங்கள் இல்லாத

பதபத்ம = பாத கமலங்களை

பண்டுணிகளெந்தெனிப = தேனி (வண்டு) என்று நினைக்கும் பக்தர்களின்

ஹிண்டு = குழுவை

நோடித மாத்ரதலி = பார்த்த உடனேயே

தனுதிண்டு = சரீரம் என்னும் தண்டத்தை

கெடதிஹ = கீழே போட்ட (அதாவது, தண்டத்தைப் போல கீழே விழுந்து சாஷ்டாங்கமாக வணங்கிய)

நரன = மனிதனை

ஆ க்‌ஷணதி = அந்த நொடியிலேயே

பாவன மாள்பரு = புனிதம் ஆக்குகின்றனர்.

 

நெருப்பு கங்கினை தொட்டால் அது சுடும் என்று தெரிந்தோ, தெரியாமலோ அதைத் தொட்டாலும், அது கண்டிப்பாக நம்மை சுடும். ஒரு தேனி தாமரையின் மகரந்தத்தை எப்படி தொடர்ந்து குடிக்கிறதோ, அதைப்போல, யார் எப்போதும் பரமாத்மனின் பாத-தியானத்தில் எப்போதும் ஈடுபட்டிருக்கிறாரோ, அத்தகைய பக்தர்களின் குழுவின் தரிசனத்தாலேயே, ஒருவரது பாவங்கள் அனைத்தும் பரிகாரம் ஆகிறது. அத்தகையவர்களை பார்ப்பவர்களுக்கு, அந்த பிராமணர்களின் மஹாத்ம்ய ஞானம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தால், இவனை அவர்கள் உடனடியாக பவித்ரனாக மாற்றுகிறார்கள். தன்யராக மாற்றுகிறார்கள்.

 

ஸ்லோக தர்மத்தில் இதே விஷயத்தை:

விப்ரௌக தர்ஷனாத்க்‌ஷிப்ரம் க்‌ஷீயந்தே பாபராஷய: |

வந்தனான் மங்களாவாப்தி ரர்ச்சனாதச்யுதம் பரம் ||

 

பிராமணர்களின் குழுவை பார்த்தவுடன், இவனின் பாவ ராசிகள் அனைத்தும் அழிகின்றன. அவர்களை நமஸ்காரம் செய்தால், மங்களம் உண்டாகிறது. அவர்களை பூஜித்தால், பரமாத்மன் மகிழ்ந்து தன் பதவியைக் கொடுக்கிறான் - என்று சொல்லியிருக்கின்றனர்.

 

நெருப்பைத் தொடுபவர்கள், அது சுடும் என்னும் ஞானம் இல்லாமல் தொட்டாலும், அந்த நெருப்பு அவனை கண்டிப்பாக சுடுகிறது. அது போலவே, இவர்கள் பிராமணோத்தமர்கள் என்ற ஞானம் இல்லாமல் பார்த்தாலும், அவர்கள் இவனுக்கு நல்ல உபதேசங்களைக் கொடுக்கின்றனர். பாகவதம் 10ம் ஸ்கந்தம் 47ம் அத்தியாயத்தில்:

 

நஹ்யம்மயானி தீர்த்தானி நதேவா ம்ருச்சிலாமயா: |

தீபுனந்த்யுரு காலேன தர்ஷனாதேவ ஸாதவ: ||

 

கங்கை முதலான தீர்த்தங்கள், அதில் குளிப்பவர்களை பவித்ரராக மாற்றுவதில்லை என்று இல்லை. மண்ணால், சிலையால் செய்யப்பட்ட பிரதிமைகள், தம்மை தரிசனம் / பூஜை செய்வோரை, பவித்ரர்களாக மாற்றுவதில்லை என்று இல்லை. ஆனால், பெரியவர்களின் சகவாசத்தால், அவற்றின் மஹாத்ம்ய ஞானத்தை அறிந்து, அவற்றில் அந்தர்யாமியாக இருப்பவர்களை அறிந்து சிந்தித்தால், அப்போது அவை ஒருவரை பவித்ரராக மாற்றுகிறது.

 

ஆனால், சாதுக்கள் அப்படியல்ல. அவர்களைப் பார்த்தாலே, ஞானோபதேசத்தை செய்து, ஒருவரை பவித்ரராக மாற்றுகின்றனர் என்கிறார். பிராமணர்களுக்கு இவ்வளவு மகிமையைக் கொடுப்பதால், தேவதைகளைவிட பிராமணர்கள் உத்தமரா என்ற சந்தேகம் வரக்கூடும். இந்த விஷயத்தில், பாகவதம் 11ம் ஸ்கந்தம், 2ம் அத்தியாயத்தில், நாரதரிடம் வசுதேவன் கூறுவதாக இருப்பது:

 

பூதானாம் தேவசரிதம் துக்காயச சுகாயச |

சுகாயைவஹி சாதூனாம் த்வாத்ருஷா மச்யுதாத்மனாம் ||

பஜந்தியே யதா தேர்வா தேவா அபி ததைவர்த்தா |

சாயேவ கர்ம ஸசிவாஸாதவோ தீனவத்ஸலா: ||

 

தேவதைகள், பிராணிகளின் சுகம் துக்கம் இரண்டிற்கும் காரணமாகின்றனர். எப்போதும் பரமாத்மனிடமே மனதை நிறுத்தியிருக்கும், உம்மைப் போன்ற சாதுகள், சுகத்திற்கு மட்டுமே காரணமாகின்றீர்கள். அது எப்படியெனில், தேவதைகளை, யார்யார் எப்படிஎப்படி வணங்குகின்றனரோ, அதற்கேற்ப அவர்கள் அவர்களுக்கு சுகத்தையோ, துக்கத்தையோ கொடுக்கின்றனர். அவர்கள், முக்கியமாக கர்மத்தை எதிர்பார்த்து, அதற்கேற்ப பலன்களைக் கொடுக்கின்றனர்.

 

இதன் பொருள் என்னவெனில், தேவதைகள்,

 

* சாத்விகாதி மூன்றுவித ஜீவர்களின் யோக்யதையை அறிந்து, சாத்விகர்களுக்கு தம்மில் பக்தியை அதிகரித்து, தாரதம்ய பிரகாரம் தம் பூஜையை செய்யவைத்து, மனது பரமாத்மனிடம் நிற்குமாறு செய்து, முக்தி சாதனையை செய்விக்கின்றனர்.

* ராஜஸர்களிடம் மிஸ்ர (கலவை) புத்தியைக் கொடுத்து, அதற்கேற்ப பலன்களைக் கொடுக்கின்றனர்.

* தாமஸர்களுக்கு தம்மில் த்வேஷத்தை பிறக்க வைத்து, பரமாத்மனிடமும் த்வேஷத்தை பிறக்க வைத்து, தமஸ் சாதனையை செய்விக்கின்றனர்.

 

** இது விஜயத்வஜீய வியாக்யானத்தைப் பொறுத்து எழுதப்பட்டிருக்கிறது.

 

ஆனால், சாதுக்கள் அப்படியல்ல. அவர்கள் கருணாசாலிகள். தம்மை யார் பார்க்கின்றனரோ, அவன் எத்தகையவனோ ஆகட்டும், அவனுக்கு சத் உபதேசத்தை செய்கிறார்கள், என்று சொல்கிறார்.

 

இதிலிருந்து, தேவதைகளைவிட ரிஷிகள் (பிராமணர்கள்) உத்தமர்கள் என்று நினைக்கக்கூடாது. தேவதைகள், பகவத் ஆக்ஞா பிரகாரம் யோக்யதானுசாரவாகி பலன்களைக் கொடுப்பவர்கள் ஆகையால், அவர்கள் ஸ்ரேஷ்டர்களே. ரிஷிகள், மக்கள் அயோக்யராகட்டும், யோக்யராகட்டும், பெற்றோர் குழந்தையிடம் எப்படி அன்பு காட்டுகின்றனரோ, அப்படி மக்கள் கஷ்டப்படுவதை காண சகிக்காமல், அவர்களுக்கு நல்வழியைக் காட்டுகின்றனர். அப்படியிருந்தும், தேவதைகளைவிட, ரிஷிகள் தாரதம்யத்தில் குறைந்தவர்களே.

 

இப்படி செய்தாலும், இவர்களின் உபதேசம், தமோயோக்யர்களுக்கு ருசிக்கிறதா? என்றால், இல்லை. ஒருவருக்கு என்ன/ எவ்வளவு வருமோ, அதை/ அவ்வளவு செய்கிறார்கள். இவர்கள் யோக்யரானால் அவர்களுக்கு அருள்கின்றனர். அவர்கள் அயோக்யர்களாக இருந்தால், சாபங்களைக் கொடுக்கிறார்கள்.

 

ஆக, சாதுக்களின் சந்திப்பினாலேயே, யோக்யர்களுக்கு ஞானோதயம் உண்டாகி, பரமாத்மனை துதிக்கும் புத்தி பிறக்கிறது. ஆகையாலேயே, பக்தர்களுக்கு நமஸ்காரம் செய்தாலும், அல்லது, அவர்களைக் கண்டாலும்கூட பாப பரிகாரம் ஆகிறது என்று சொல்கிறார்கள்.

 

ஈ நிமத்த புன:புன: ஸு

க்ஞானிக3ஹவாஸ மாடு3 கு

மானவர கூடா33தி3ரு லௌகிககெ மருளாகி3 |

வைனதே1யாம்3ர்வ

ஸ்தா2னத3லி தன்னாம ரூபவ

தே4னிஸுஞ்சரிஸு இதராலோசனெய பி3ட்டு ||13

 

ஈ நிமித்த = மேலே கூறிய காரணங்களால்

புன: புன: = திரும்பத்திரும்ப

சுக்ஞானிகள சஹவாஸமாடு = சஜ்ஜனர்களுடன் நட்பில் இரு

குமானவர = பகவத் த்வேஷம் செய்பவர்களை, பகவத் பக்தரின் த்வேஷம் செய்பவர்களுடன்

கூடாடதிரு = பழகாதே

லௌகிககெ மருளாகெ = இவரே செல்வந்தர் என்று நினைப்பது, எப்போதும் மனைவி, மக்கள் என்று சம்சாரத்தில் மூழ்கியிருப்பது, செல்வத்தில் மயங்கியிருப்பது

வைனதேயாம்ஸகன = கருடனின் முதுகில் அமர்ந்திருக்கும் ஸ்ரீஹரியை

சர்வ ஸ்தானதலி = எல்லா இடங்களிலும்

தன்னாம ரூபவ = பார்க்கும் பொருட்களிலெல்லாம் அந்தந்த ரூபங்களில், அந்தந்த பெயர்களில் பரமாத்மன் இருக்கிறான் என்று நினைத்து

தேனிஸுத = சிந்தித்தவாறு

இதராலோசனெய பிட்டு = மற்ற யோசனைகளை அப்படியே விட்டு

சஞ்சரிஸு = செயல்களை செய்து கொண்டிரு.

 

மேற்சொன்ன காரணங்களால், ஞானிகளுடன் நட்பில் இருந்தால், ஞானோதயம் கிடைக்கிறது. அயோக்யரின் நட்பில் இருந்தால் கெட்டதே நடக்கிறது. ஆகையால், பகவத்பக்தர்களின் நட்பையே செய். செல்வங்களுக்கு மயங்கி, அயோக்யர்களின் செல்வத்திற்காகவோ, வேறு எந்த காரணத்திற்காகவோ, அவரின் நட்பை நாடாதே. பரமாத்மன் அனைத்து இடங்களிலும் இருக்கிறான் என்று அறிந்து, அந்தந்த இடங்களில் அந்தந்த நாம, ரூபங்களால் அவனை சிந்தித்து, பிற எந்தவொரு யோசனைகளையும் விட்டு, நடமாடு. வீட்டு லௌகிக விஷயங்களை மறந்துவிட்டு சுற்று என்றால் மனைவி, மக்கள் என்ன ஆவார்கள் என்று கேட்கலாம்.

 

அனன்யாஸ் சிந்தயந்தோமாம் யேஜனா: பர்யுபாஸதே |

தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்‌ஷேமம் வஹாம்யஹம் ||

 

என்னைத் தவிர அவர்களை காப்பாற்றுபவர்கள் வேறு யாரும் இல்லை என்று நினைத்து யார் என்னை உபாசனை செய்கிறார்களோ, அவர்களின் நலன்களை நான் பார்த்துக் கொள்கிறேன். என்று கீதையில் ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். ஆகையால், இவற்றைப் பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தாலும், எதுவும் ஆகப்போவதில்லை. பரமாத்மனே கதி என்று நம்பிவிட்டால், நம் பிரச்னைகளை பரமாத்மனே பார்த்துக் கொள்கிறான் என்று பொருள்.

 

ஈ நளினஜாண்ட3தொ3ளு ர்வ

ப்ராணிக3ளொ ளித்த3னவரத வி

க்ஞானமய வ்யாபாரக3ள மாடு3வனு திளி3லெ |

ஏனு காணதெ3 சகல கர்மக3

ளானெ மாடுவெனெம்ப3 நரனு கு

யோனி ஐது3வ கர்த்ருஹரி எந்த3வனெ முக்தனஹ ||14

 

ஈ நலினஜாண்டதொளு = இந்த பிரம்மாண்டத்தில்

சர்வ ப்ராணிகளொளு = அனைத்து பிராணிகளிலும்

இத்து = நிலைத்திருந்து

அனவரத = எப்போதும்

விக்ஞானமய = விக்ஞான ஸ்வரூபனான ஸ்ரீஹரி

திளிஸதலெ = ஜீவர்களுக்கு தான் செய்ததை காட்டிக் கொள்ளாமல்

வ்யாபாரகள = கர்மங்களை

மாடுவனு = செய்கிறான்

ஏனு காணதெ = ஸ்ரீபரமாத்மனே தன்னில் இருந்து அனைத்து செயல்களையும் செய்விக்கிறான் என்பதை அறியாமல்

சகல கர்மகள = அனைத்து கர்மங்களையும்

ஆனே மாடுவெனெம்ப = தானே செய்கிறேன் என்று நினைக்கும்

நரனு = மனிதன்

குயோனியைதுவ = நாய், நரி முதலான பிறவிகளை எடுக்கிறான்

ஹரி = பரமாத்மன்

கர்த்து = ஸ்ரீஹரியே ஸ்வதந்த்ர கர்த்தா என்று அறிந்தவனே

முக்தனஹ = ஜீவன் முக்தர் என்று கருதப்படுகிறான்.

 

இந்த பிரம்மாண்டத்தில் அனைத்து பிராணிகளிலும் இருந்து, ஸ்ரீபரமாத்மனே அனைத்து காரியங்களையும் செய்கிறான். அஸ்வதந்த்ரனான ஜீவன், தானே செய்ததைப் போல செய்விக்கிறான். ஆனால், தன்னில் இருந்து செயல்களை பரமாத்மனே செய்வித்தான் என்று யாருக்கும் தெரிவதில்லை. ஆகவே, அனைத்தையும் தானே செய்தேன் என்ற மயக்கத்தில், பாவங்களை சம்பாதித்து, நாய், நரி முதலான கீழ் பிறவிகளை எடுக்கிறான். அனைத்திற்கும் பரமாத்மனே காரணம் என்று அறிந்து, செய்த புண்ணிய பாப கர்மங்களை பரமாத்மனுக்கே சமர்ப்பணம் செய்தவன், ஜீவன் முக்தர் என்று கருதப்படுகிறான்.

 

கலிமலா பளெனிஸுதிஹ பா3

ம்பொ3ளெயொளகெ3 ஞ்சரிஸி ப3து3குவ

ஜலசர பிராணிக3ளு ப3ல்லவெ தீர்த்த2 மஹிமெயனு |

ஹலவு ப3கெ3யலி ஹரிய கருணா

3லதி ப3ல்லித3ராத3 பி3ரம்மா

நில விபேஷாத்3யமர ரரியர நந்தனமல கு3||15

 

கலிமலாபஹளெனிஸுதிஹ = கலியுகத்தின் பாவங்களை பரிகரிப்பவன் என்று புகழ்பெற்றிருக்கும்

பாம்பொளெயொளகெ = கங்கையில்

சஞ்சரிஸி பதுகுவ ஜலசர பிராணிகளு = அங்கேயே பிறந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் மீன், முதலை போன்ற நீர்வாழ்  உயிரினங்கள்

தீர்த்தமஹிமெயனு = அந்த கங்கையின் புனிதத்தன்மையையும், மகிமையையும்

பல்லவே = அறியுமா?

ஹலவு பகெயலி = பல்வேறு விதங்களில்

ஹரிய கருணாபலதி = ஸ்ரீஹரியின் கருணையால்

பல்லிதராத = பரமாத்மனின் தயா பலத்தினால் அறிந்தவரான

பிரம்மா நில விப ஈஷாதி = பிரம்மா, வாயு, கருட, ருத்ரதேவர்களே முதலானவர்கள்

அமரரு = தேவதைகள்

அனந்தன = எல்லையற்ற மகிமைகளைக் கொண்ட ஸ்ரீஹரியின்

அமலகுண = தோஷங்கள் அற்ற குணங்களை

அரியரு = முழுமையாக அறிய மாட்டார்கள்.

 

கலியுகத்தில் இருக்கும் பாபிகளின் பாபங்களை பரிகரிக்கும் சக்திகொண்ட கங்கையில், பற்பல மீன், முதலைகள் ஆகிய நீர்வாழ் உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றிற்கு, அந்த கங்கையின் மகிமையைப் பற்றி தெரியுமா? அதுபோலவே, அபாரமான மகிமையுள்ள, குண சமுத்திரனான பரமாத்மனிடம், கடலில் நீர்த்துளிகள் இருப்பது போல குணங்கள் இருக்கின்றன. அதில் ஒரேயொரு குணத்தையாவது, நீர்வாழ் உயிரினங்களைப் போல இருக்கும் சாமான்ய மனிதர்கள் அறிவார்களா? இல்லை. பகவத் அனுக்கிரக பலத்தினால், சர்வக்ஞர் என்று அழைக்கப்படும் பிரம்ம, வாயுகளே, அந்த பகவன் மகிமைகளை முழுமையாக அறிவதற்கு சாத்தியம் இல்லை. தத்தம் யோக்யதைக்கேற்ப அவற்றை அறிவர் என்பது கருத்து. பிரம்ம வாயுகள் அறிந்த அளவிற்கு, கருட ருத்ராதிகள் அறிந்தவரில்லை. இப்படி இருக்கையில், இன்னும் பகவன் மகிமைகளை முழுமையாக சொல்லத் தக்கவர்தான் யார்?

 

பாகவத 2ம் ஸ்கந்தம் 7ம் அத்தியாயம் 40-42 ஸ்லோகங்கள்:

விஷ்ணோர்னவீர்ய கணனாம் கதமோர்ஹதீஹய: பார்த்திவ்யான்யபி கவிர்விமமேரஜாம்ஸி |

சஸ்கம்பய: ஸ்வரபஸா ஸ்கலிதந்த்ரி ப்ருஷ்டம் யன்மாம் நிஷாம்ய ஸதனாதுது கம்பமானம் ||40

(பிரம்மதேவர் நாரதருக்கு உபதேசம் செய்கிறார்).

 

ஸ்ரீபரமாத்மன், வாமனாவதாரம் செய்து, பலிசக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலம் தானம் கேட்டு, த்ரிவிக்ரம ரூபத்தினால் பூமியை அளந்தபோது பரமாத்மனின் இடது பாதம், ஸத்யலோகத்தை அடைந்தபோது, சத்யலோகம் இடம்பெயர்ந்து கீழே விழும்படி ஆயிற்று. பிரம்மதேவருக்கு அஞ்ஞானம் இல்லாதபோதும், பகவன்மகிமையைக் காட்டுவதற்காக, தமக்கு நாசம் வந்துவிடுமோ என்னும் பயத்துடன், நடுநடுங்கினார். இதனைக் கண்ட பரமாத்மன் உருகம்பமானம், மாம், த்ரிப்ருஷ்டஞ்ச சஸ்கம்பபயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த என்னை, கீழே விழுந்து கொண்டிருந்த சத்யலோகத்தை நிறுத்தினார். அத்தகைய விஷ்ணுவின் மகிமையை அறிவதற்கு யாருக்குதான் சாத்தியம்? யாருக்கும் சாத்தியமில்லை.

 

ஒரு காலத்தில் ஆதிகவியான பிரம்மதேவர் பார்த்திவானி ரஜாம்ஸ்யபிபூமியில் இருக்கும் மிகச்சிறிய அணுத்துகள்கள் எவ்வளவு என்று கணக்கெடுத்தார். அத்தகைய பிரம்மானாலேயே, பகவன் குணங்களை வர்ணிப்பது சாத்தியமாகவில்லை என்றபிறகு, மற்ற எந்த ஞானியால்தான் அது சாத்தியமாகும்? யாராலும் சாத்தியமில்லை. ||40

 

நாந்தம்விதாம்ருஹமிமுனய: ப்ரஜேஷா மாயாபலஸ்ய குதோபரேயே |

காயன்குணான்வஷ ஷதானன ஆதிதேவ: சேஷோsதுனாபி ஸமவஸ்யபி நாஸ்யபாரம் ||41

 

(பிரம்மன் மேலும் கூறுவது):

ஹே நாரதனே. இச்சா சக்தியுள்ள மகாபுருஷ்னான ஸ்ரீபரமாத்மனின் மகிமைகளை, நானே முழுமையாக அறியமாட்டேன். இங்கிருக்கும் மரீச்யாதி ரிஷிகள் ஆகட்டும், பரமாத்மனின் மகிமையை அறியமாட்டார்கள். இப்படி இருக்கையில், மற்றவர்கள் அதனை அறிவாரோ? சேஷதேவருக்கு ஆயிரம் முகங்கள் உள்ளது. ஆகையால், அவர் பிரம்மதேவரை விட அதிகமாக விஷயம் தெரிந்தவரா என்னும் அல்ப கேள்விக்கு பதில் சொல்கிறார்.

 

1000 முகங்களைக் கொண்ட சேஷதேவர் தனது 1000 முகங்களால் பரமாத்மனை துதித்துக் கொண்டிருந்தாலும், அவரால் இன்னும் பகவந்தனின் மகிமைகளின் எல்லையைக் காணமுடியவில்லை. இனி அவர் அதை காணப்போவதும் இல்லை. ||41

 

பரமாத்மனின் மகிமைகளை யாரும் அறியாததால், அவரது மகிமைகளை அறிந்தபிறகே அவர்களுக்கு புருஷார்த்தம் என்றும், அப்படி யாரும் காணாததால் இனி யாருக்கும் புருஷார்த்த சித்திகள் கிடையாதா என்னும் கேள்விக்கு பதில் அளித்தவாறு, பகவந்தனின் அருளைப் பெற்றவர்களுக்கு அனைத்தும் சுலபமே என்று சொல்கிறார்.

 

ஏஷாம்ஸ ஏவ பகர்வா தயயோதனந்த: ஸர்வாத்மனா ஸ்ரிதபதோ யதி நிர்வ்யலீகம் |

தேவைவிதந்த்யதி தரந்திச தேவமாயாம் நைஷாம் மமாஹவிதிதீ: ஷ்வஸ்ருகாளபக்‌ஷ்யே ||42

 

ஸ்ரீஹரி, தானாக யாரிடம் கருணை காட்டுகிறானோ, அவர், பரமாத்மனின் மாயையை தாண்டி, தம் யோக்யதைக்கேற்ப பரமாத்மனை அறிவர். அப்படியெனில், பரமாத்மன், சிலருக்கு கருணை காட்டுகிறான், சிலருக்கு காட்டுவதில்லை என்றாகிறது. இதனால், பரமாத்மனுக்கு வைஷம்ய இருக்கிறது என்று சொல்லலாமா? என்றால்:ஸர்வாத்மனா ஸ்ரீதபதூயதி நிர்வ்யலீகம் - கபடம் இல்லாமல், அனைத்து விதங்களிலும் தன் பாதாரவிந்தங்களையே யார் நம்புகிறாரோ, அவரில் கருணையைக் காட்டுவான். என்று சொல்லியிருப்பதால், அவரவர்களின் யோக்யதைக்கேற்ப த்வேஷிகளுக்கு த்வேஷபலன், பக்தர்களுக்கு பக்தி பலன் கொடுக்கிறான் என்பதால், பரமாத்மனுக்கு வைஷம்ய இல்லை என்று தெரிகிறது.

 

தன்னை அனைத்து விதங்களிலும் நம்புபவர்களுக்கு தான் கருணை காட்டுகிறேன் என்றான். அதாவது, நாய், நரி, ஆகியவற்றிற்கு உணவாகக்கூடிய இந்த தேகத்தின் மேல், நான், எனது என்று யாருக்கு எண்ணம் இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டும் பகவந்தன் கருணை காட்டமாட்டான் என்று சொல்கிறார். ||42

 

இந்த மூன்று ஸ்லோகங்களில் அபிப்பிராயத்தையே, தாசராயர் இந்த பத்யத்தில் விளக்கியிருக்கிறார் என்று அறியவேண்டும். 

No comments:

Post a Comment