ஹானி வ்ருத்தி3 ஜயாபஜயக3ள
ஏனு கொட்டுத3 பு4ஞ்சிஸுத ல
ட்சுமி நிவாஸன கருணவனெ ஸம்பாதிஸனுதி3னதி3 |
ஞானசுக2மய தன்னவர பர
மானுராக3தி3 ஸந்தயிப தே3
ஹானு ப3ந்தி4க3ளந்தெ ஒளஹொரகி3த்து3 கருணாளு ||16
ஹானி வ்ருத்தி ஜயாபஜயகளு = குன்றுவது, வளர்வது, வெற்றி, தோல்வி என இவை அனைத்தும்
ஏன் கொட்டுத = எப்போது எவை பகவத் ப்ரேரணையின்படி
வருகிறதோ
புஞ்சிஸுத = அதனை அனுபவித்தவாறு
லட்சுமி நிவாஸன = ஸ்ரீனிவாசனின்
கருணவனெ = கருணையையே
அனுதினதி = தினந்தோறும்
சம்பாதிசு = சம்பாதித்துக் கொள்
ஞானசுகமய = ஞானானந்த ஸ்வரூபமான ஸ்ரீஹரி
தன்னவர = தன் பக்தர்களை
தேஹானு பந்திகளந்தெ = தேக சம்பந்தம் உள்ள
உறவினர்களைப் போல
பரமானுராகதி = பரம ப்ரீதியுடன்
ஒள ஹொரகித்து = உள்ளேயும் வெளியேயும் இருந்து
கருணாளு = கருணாமயியானவன்
சந்தயிப = காப்பாற்றுவான்
வளர்வது, குன்றுவது, வெற்றி, தோல்வி ஆகிய எதுவாயினும், ஈஸ்வர சங்கல்பத்தால் எந்த
காலத்தில் எது வந்தாலும்,
ஈஷாவாஸ்யம் இதம் சர்வம் யஜ்ஜகத்யாம் ஜகன்மன: |
தேனத்யக்தேன புஞ்ஜீதா மாக்ருத: கஸ்யசித்தனம்
என்னும் ஈஷாவாஸ்ய உபநிஷத்தின் வாக்கியத்தின்படி
வந்ததை அனுபவித்தவாறு, ஸ்ரீபரமாத்மனின் அருளை மட்டும் எப்போதும் சம்பாதிக்க வேண்டும். அப்படி
செய்பவர்களை, ஞானானந்த ஸ்வரூபனான ஸ்ரீஹரி மிகப்பெரிய கருணாளு ஆகையால், மிகவும் நெருங்கிய உறவினர்களைப்போல, அவர்களின் உள்ளேயும் வெளியேயும்
இருந்து,
பரம ப்ரீதியுடன் அவர்களை காப்பாற்றுவான்.
ஆ பரம ஸகலேந்த்ரியக3ளொளு
வ்யாபகனு தானாகி3 விஷயவ
தா பரிக்3ரஹிஸுவனு திளிஸதெ3 ஸர்வஜீவரொளு |
பாபரஹித புராணபுருஷ ஸ
மீபத3லி நெலெஸித்து3 நானா
ரூபதா4ரக தோரிகொள்ளதெ3 கர்மக3ள மாள்ப ||17
ஆ = மேற்சொன்ன
பரம = பரமாத்மன்
சகலேந்திரியகளொளு = அனைத்து இந்திரியங்களிலும்
வியாபகனு தானாகி = தானே நிலைத்திருந்து
சர்வஜீவரொளு = அனைத்து ஜீவர்களிலும் இருந்து
திளிஸதெ = ஜீவர்களுக்குத் தெரியாமல்
தா = தான்
விஷயவனு = விஷய போகங்களை
பரிக்ரஹிஸுவனு = பரிகரிக்கிறான்
பாபரஹித = பாவங்கள் இல்லாதவனான
புராணபுருஷ = புராதன புருஷனான ஸ்ரீபரமாத்மன்
ஸமீபதலி நெலெஸித்து = ஜீவர்களின் சமீபத்தில் இருந்து
தோரிகொள்ளதே = தான் இருப்பதை அறிவித்துக் கொள்ளாமல்
நானா ரூபதாரக = உற்றார் உறவினர்களின் ரூபங்களை
தரித்து
கர்மகள மாள்ப = கர்மங்களை செய்கிறான்.
ஸ்ரீபரமாத்மன், அனைத்து பிராணிகளின், அனைத்து இந்திரியங்களிலும்
நிலைத்திருந்து, அவர்களுக்கே தெரியாமல் விஷய சுகங்களை தான் பரிகரிக்கிறான். தோஷங்கள் அற்றவனான, பாவங்களே இல்லாதவனான, புராண புருஷனான ஸ்ரீஹரி, உற்றார், உறவினர், யானை,
குதிரை போன்ற பற்பல ரூபங்களால், அவற்றில் தானே இருந்து, அப்படி தான் இருப்பதை யாருக்கும் தெரிவிக்காமல், அவரவர்களால் எந்தெந்தெ செயல்கள் செய்யவேண்டுமோ அவற்றை தானே செய்கிறான்.
கே2சரரு பூ4சரரு வாரி னி
ஷாசரரொளித்த3வர கர்மக3
ளாசரிஸுவனு க4ன மஹிம பரமல்பனோபா1தி3 |
கோ3சரிஸனு ப3ஹு ப்ரகாரா
லோசனெய மாடி3த3ரு மனஸிகெ3
கீசகாரியப்ரீய கவிஜனகே3ய மஹராய ||18
கன மஹிம = மகாமகிமையுள்ள ஸ்ரீஹரி
கேசரரு = ஆகாயத்தில் பறக்கும் பறவைகள்
பூசரரு = பூமியில் வசிக்கும் பசு, மனிதர்கள்
வாரிசரரு = தண்ணீரில் வசிக்கும் மீன் முதலைகள்
நிஷாசரரொளு = அசுரர்கள் என இவர்களில் இருந்து
பரமால்பனோபாதி = மிகவும் சிறியதான மீன் முதலான
பிராணிகளைப் போல
கர்மகள = செயல்களை
ஆசரிஸுவனு = செய்கிறான்
கீசகாரிப்ரிய = கீசகாதிகளைக் கொன்ற பீமசேன அவதாரத்தை
எடுத்த வாயுதேவரின் ப்ரியனான
கவிஜனகேய = ஞானிகளால் வணங்கப்படுபவனான
மஹராய = பிரம்மாதிகளுக்கு அதிபதி ஆனதால் சக்ரவர்த்தி
என்று அழைக்கப்படும்
ஸ்ரீஹரி
பஹு ப்ரகார = பல்வேறு விதங்களில்
ஆலோசனெய மாடிதரு = யோசித்தாலும்
மனஸ்ஸிகெ கோசரிஸனு = தன் முழுமையான மகிமையை தெரியப்
படுத்தமாட்டான்.
* வானத்தில் பறக்கும் பறவைகள், தேவதைகள், கந்தர்வர்கள் ஆகியோர்,
* பூமியில் வசிக்கும் பசு, மனிதர்கள்,
* தண்ணீரில் வசிக்கும் மீன், முதலைகள்,
* இரவில் நடமாடும் அசுரர்கள்
ஆகியோருக்குள் இருந்து,
அவன் மகாமகிமை உள்ளவனாக இருந்தாலும், மிகவும் சிறிய பிராணிகளைப் போல, அந்தந்த ஜீவர்களின் செயல்களை
செய்து செய்விக்கிறான். வாயுதேவரின் ப்ரியனான, ஞானிகளால் வணங்கப்படுபவனான, பிரம்மாதிகளால் பூஜிக்கப்படுபவனான
ஸ்ரீஹரி,
மஹாராய என்று அழைக்கப்படுகிறான். அதாவது, சக்ரவர்த்தியான ஸ்ரீபரமாத்மன் தன் பக்தர்களுக்கு அவரவர்களின் தகுதிக்கேற்ப
தானாக தரிசனம் அளிக்கிறானே தவிர, தேகத்தைக் கொண்டவர்கள் எவ்வளவு
விதமாக யோசித்தாலும் பரமாத்மன் தரிசனம் அளிப்பதில்லை. மஹாராஜா என்னும் பெயர்
ஸ்ரீஹரிக்கு காரணப்பெயர். மற்றவர்களுக்கு உபசாரப் பெயரே ஆகும்.
பாகவத 10ம் ஸ்கந்தம், 64 அத்தியாயம், 30ம் ஸ்லோகம் - ஸ்ருதி கீதையில்,
வர்ஷ புஜோகிள க்ஷிதிபரிவ விஷ்வஸ்ய
ஜோவிதரதியத்ரயேத்வதி க்ருதாபவதஸ்சகிதா: |
த்வமேக: ஸ்வராடகிள காரகஷக்திதவ ஸ்தவ பலிமுத்வஹந்தி
ஸமதந்தி சயீனிமிஷா: ||
ஹே ஸ்வாமி. நீ ஒருவனே சக்ரவர்த்தி. அனைத்து
செயல்களையும் அனைவரின் மூலமாகவும் செய்விக்கும் சக்தி உள்ளவன். பிரம்மாதி தேவதைகள்
அனைவரும் மற்றவர்களிடமிருந்து தான் பூஜாதிகளை ஏற்றுக்கொண்டு, உனக்கு பூஜாரூபமான கப்பத்தை செலுத்துகிறார்கள்.
கண்டாதீஷா: ஸார்வபௌமஸ்ய யத்வத்ச்ரஹ்மேஷாத்யா: குர்வதி
தேனுஷாஸ்தி: -- என்னும் சாண்டில்ய ஸ்ருதியிலும் இதே அர்த்தம் வெளிப்படுகிறது.
ஒந்தெ3 கோ3த்ர ப்ரவர ஸந்த்4யா
வந்த3னெக3ளனு மாடி3 ப்ராந்தகெ
தந்தெ3 தனயரு பே3ரே தம்மய பெஸருகொ3ம்ப3ந்தெ |
ஒந்தெ3 தேஹதொ3ளித்து3 நிந்த்3யா
நிந்த்3ய கர்மவ மாடி3 மாடி3ஸி
இந்தி3ரேஷனு ஸர்வஜீவரொ ளீஷனெனிஸுவனு ||19
ஒந்தே கோத்ர ப்ரவ்ர = ஒரே கோத்திர பிரவரங்களைக் கொண்ட
தந்தை,
மகன்கள்
ஸந்த்யாவந்தனெகளனு மாடி = சந்தியாவந்தனத்தை செய்து
ப்ராந்தகெ = இறுதியில்
தந்தெ தனயரு = தந்தை மகன்கள்
பேரெ தம்மய பெஸருகொம்பந்தெ = தத்தம் பெயர்களை மட்டும்
வெவ்வேறாக சொல்வதைப் போல
இந்திரேஷனு = லட்சுமிபதி
ஒந்தே தேஹதொளித்து = ஒரே தேகத்தில் இருந்து
நிந்தியானிந்த்ய கர்மவ = புண்ய பாவ கர்மங்களை செய்து, செய்வித்து
ஸர்வ ஜீவரொளகெ = அனைத்து ஜீவர்களிலும்
ஈஷனெனிஸுவனு = ஸ்வாமி என்று அழைத்துக் கொள்கிறான்.
ஒரே கோத்திரம், ஒரே ப்ரவரத்தில் பிறந்த தந்தை மகன்கள், சந்தியாவந்தனத்தை செய்து, இறுதியில் ஒரே கோத்திரம், பிரவரத்தை சொல்லி, தத்தம் பெயர்களை மட்டும் வெவ்வேறாக சொல்வார்கள். அப்படியே, பரமாத்மன் ஒவ்வொரு தேகங்களிலும் இருந்து, புண்ணிய பாவ கர்மங்களை தான் செய்து, செய்வித்து, இறுதியில் தன்னை ஈசன் என்று அழைத்துக் கொள்கிறான். அதாவது, தந்தை மக்கள் கோத்ராதிகளை உச்சரிக்கும்போது அது ஒன்றாகவே இருந்தாலும், பெயரை சொல்லும்போது வெவ்வேறாக எப்படி இருக்கிறதோ அது போல, ஜீவர்களின் உள்ளே இருந்து, கர்மங்களை தான் செய்து, செய்விப்பவன் ஒருவனே இருந்தாலும், பலன்களை அனுபவிக்கும் காலத்தில்
ஜீவன் வேறு பரமாத்மனான ஸ்வாமி வேறு என்று ஆகிறார்கள். அதாவது, ஜீவன் சுக துக்கங்களை அனுபவிக்கிறான். பரமாத்மன் அவற்றிற்கு சம்பந்தப்படாமல்
நிர்லிப்தனாக இருக்கிறான்.
கிட்டிக3ட்டித3 லோஹ பாவக
சுட்டு விங்க3ட3 மாடு3வந்தெ க4
ரட்ட வ்ரீஹியொளிப்ப தண்டு3ல கடெ3கெ3 தெ3கெ3வந்தெ |
விட்டலாயெந்தொ3ம்மெ மை மரெ
த3ட்டஹாஸதி3 கரெயெ துரிதக3
ளட்டுளி பி3டி3ஸி அவன தன்னொளகி3ட்டு ஸலஹுவனு ||20
கிட்டகட்டித லோஹ = துருப்பிடித்த இரும்பு
பாவக = நெருப்பு
சுட்டு = எரித்து
விங்கட மாடுவந்தெ = அந்த துரு, இரும்பு இரண்டையும் பிரிப்பதைப் போல
மத்து கரட = உமியைக் குட்டி அரிசியை தனியாகப்
பிரிக்கும் இயந்திரம்
வ்ரீஹிகளொளிப்ப = உமியில் இருக்கும் அரிசி
கடெகெ தெகெவந்தெ = வேறாக எடுப்பதைப் போல
துரிதகள = பாவங்களை
அட்டி = தூர விலக்கி
உளிய = பீஜமாக இருக்கும் லிங்க சரீரத்தை
பிடிஸி = விடுவித்து
இவன = இந்த பக்தனை
தன்னொளகித்து = தன் லோகத்திலிருந்து, அல்லது, தன் அருகில் வைத்து முக்தனாக மாற்றி காப்பாற்றுவான்.
No comments:
Post a Comment