ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, July 10, 2020

1-5 நாடி பிரகரண சந்தி

ஹரிகதா2ம்ருதசார கு3ருக3

கருணதிந்தா3பநிது பே1ளுவே

பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

 

இந்த சந்தியில் நம் தேகத்தில் இருக்கும் நாடிகள் எவ்வளவு, எந்தெந்த அங்கங்களில் எவ்வளவு நாடிகள் இருக்கின்றன, அங்கிருக்கும் பகவத் ரூபங்கள் எவ்வளவு என்னும் விஷயங்களை சொல்கிறார். பின்வரும் முதலாம் பத்யத்தில், சந்தியின் நோக்கத்தை விளக்குகிறார்.

 

வாசுதே3வனு ப்ராணமுக2

த்வேஷரிந்த3லி ஸேவெ கை1கொ1ளு

தீ ஷரீரதொ3ளிப்ப மூவத்தாரு ஸாஹஸ்ர |

ஸுனாடிக3ளொளகெ3 ஸ்ரீ பூ4

மி மேத விஹாரகை3வ ப

ரேஷனமல ஸுமூர்த்திக3ள சிந்திசுத ஹிக்கு3திரு ||1

 

வாசுதேவனு = அனைத்திடங்களிலும் வியாப்தனாக இருக்கும் ஸ்ரீபரமாத்மன்

ப்ராணமுக தத்வேஷரிந்தலி = சித்தாதி அபிமானிகளான வாயுதேவரே முதலான தத்வாபிமானி தேவதைகளால்

ஸேவெ மைகொளுத = சேவைகளை பெற்றுக்கொண்டு

ஈ ஷரீரதொளிப்ப = இந்த தேகத்தில் இருக்கும்

மூவத்தாரு சாஹஸ்ர = 36,000

ஈ சுனாடிகளொளகெ = இந்த நாடிகளுக்குள்

ஸ்ரீ பூமி சமேத = ஸ்ரீதேவி பூதேவி சமேத

விஹாரகைவ = நடவடிக்கைகளை செய்யும்

பரேஷன = இத்தகைய பரமாத்மனின்

அமல சுமூர்த்திகள = தோஷங்கள அற்ற அழகான மூர்த்திகளை

சிந்திஸுத ஹிக்குதிரு = நினைத்தவாறு ஸ்தோத்திரம் செய்

 

ஸ்ரீபரமாத்மன், இந்த தேகத்தில் இருக்கும் தத்வாபிமானி தேவதைகளிடமிருந்து சேவைகளைப் பெற்றுக்கொண்டு, இந்த தேகத்தில் இருக்கும் புருஷ நாடிகளான 36,000 நாடிகளில் அவ்வளவே ரூபங்களால் ஸ்ரீபூதேவியரின் சமேதனாக நிலைபெற்றிருக்கிறான். இத்தகைய 36,000 ரூபங்களை சிந்தித்தவாறு மகிழ்ச்சியடைய வேண்டும்.

 

சரணக3ளொளிஹ நாடிக3ளு ஹ

ந்னெரடுஸாவிர மத்3யதே3ஹதொ3

ளிருதிஹவு ஹதி3னால்கு பாஹுக3ளொளகெ3 ஈரெரடு |

ஷிரதொ3ளாரு ஹஸ்ர சிந்திஸி

இருளு ஹக3லபி4மானி தி3விஜர

நரிதுபானெ கை3வரிளெயொளு ஸ்வர்க்க3வாஸி3ளு ||2

 

சரணகளொளு = பாதங்களில்

இஹ = இருக்கும்

நாடிகளு = நாடிகள்

ஹன்னெரடு சாவிர = 12,000

மத்யதேஹதொளு = சரீரத்தின் நடுப்பாகத்தில்

இருதிஹவு = இருக்கின்றன

ஹதினால்கு = 14,000

பாஹுகளொளகெ = இரு தோள்களில்

ஈரெரடு = 4,000

ஷிரதொளாரு சஹஸ்ர = தலையில் 6,000 (ஆக மொத்தம் 36,000 நாடிகளை சிந்தித்து)

இரளு ஹகலபிமானி திவிஜர = ஆண்டு ஒன்றுக்கு 360 பகல், 360 இரவுகள் என்று 100 ஆண்டுகளுக்கு 36,000 பகல்கள், 36,000 இரவுகள் என அந்த நாடிகளில் அறிந்து

உபாசனெ கைவரு = உபாசனை செய்பவர்கள்

ஸ்வர்க்க வாசிகளு = தேவதைகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

 

முந்தைய பத்யத்தில் கூறிய 36,000 நாடிகளில்:

 

* பாதங்களில் 12,000

* சரீரத்தின் நடுப்பகுதியில் 14,000

* தோள்களில் 4,000

* தலையில் 6,000, என மொத்தம் 36,000 நாடிகள் சரீரத்தின் வலது பாகத்தில் இருக்கின்றன.

 

இதைப்போலவே 36,000 நாடிகள் இடது பக்கத்திலும் இருக்கின்றன. இவற்றில், 100 ஆண்டுகளுக்கு ஆகும் 36,000 பகல்கள், 36,000 இரவுகள் இவற்றின் அபிமானி தேவதைகளே இந்த தேகத்திற்குள் இடது-வலது நாடிகளான 72,000 நாடிகளில் இருக்கிறதென்று சிந்தித்து உபாசனை செய்பவர்கள் பூமியில் இருந்தாலும், அவர்களை தேவதைகள் என்றே சிந்திக்க வேண்டும். அதாவது, தேவதைகள் எப்படி வணங்கத்தக்கவரோ, அப்படியே இவர்களும் வணங்கத்தக்கவர்கள் ஆவர்.

 

ப்3ருஹதி நாமக வாசுதேவனு

வஹிஸி ஸ்த்ரி பும் தோ3ஷவி

ரஹித எப்பத்தெரடு ஸாவிர நாடிக3ளொளித்து3 |

த்3ருஹிண மொத3லாத3மரக3

ன் மஹித ர்வப்ராணிக3ள மஹ

மஹிம ந்தைஸுவனு ந்தத பரமகருணாளு ||3

 

ப்ருஹதி நாமக = ப்ருஹதி சந்தஸ்ஸால் போற்றப்படும் ப்ருஹதி நாமகனான வாசுதேவன்

ஸ்த்ரி புருஷ = 72,000 ஸ்த்ரி புருஷ நாடிகளை (36000 புருஷரூப + 36,000 ஸ்த்ரிரூபங்களை)

வஹிஸி = தரித்து

தோஷவிரஹித = தோஷங்கள் அற்றவனான ஸ்ரீஹரி

எப்பத்தெரடு சாவிர நாடிகளொளித்து = 72,000 நாடிகளில் இருந்துகொண்டு

த்ருஹிண் மொதலாதமரகண = பிரம்மனே முதலான தேவதைகள்

ஸன்மஹித = நன்றாக பூஜிக்கப்படுபவனான

மஹாமஹிம = மகிமைகளைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன்

சர்வப்ராணிகள = அனைத்து பிராணிகளையும்

சந்தத = எப்போதும்

பரம கருணாளு = கருணாமயி

சந்தைசுவனு = காப்பாற்றுவான் / அருள்வான்.

 

மேற்சொன்ன விதத்தில் இந்த தேகத்தில் 72,000 நாடிகள் இருக்கின்றன. அந்த நாடிகளில் 36,000 ஸ்த்ரி நாடிகள் இடது பக்கத்திலும், 36,000 புருஷ நாடிகள் வலது பக்கத்திலும் இருக்கின்றன. ப்ருஹதி சந்தஸ்ஸின் தலைவனாகையாலும், ப்ருஹபூர்ண என்று பூர்ணனாக இருப்பதால், ப்ருஹதி என்னும் பெயருள்ள ஸ்ரீபரமாத்மன், 36,000 ஸ்த்ரி ரூபங்களையும், 36,000 புருஷ ரூபங்களையும் தரித்து, மேற்சொன்ன ஸ்த்ரிபுருஷ நாடிகளில் இருந்து, பிரம்மாதி தேவதைகளால் வணங்கப்பட்டு, மிகக் கருணையுடன் மகாமகிமை உள்ளவனாகி தினமும் அனைவரையும் அருள்கிறான்.

 

நூருவருஷகெ தி3 மூவ

த்தாரு ஸாவிரவஹவு நாடி ஷ

ரீரதொ3ளகி3னி திஹவு யெந்த3ரிதொந்து3 தி33லி |

சூரிக3த்கரிஸி3வ ப்ரதி

வாரத3லி த3ம்பதிகளர்ச்சனெ

தா ரசிசித3த்ய ம்ஷயவில்ல வெந்தெ3ந்து3 ||4

 

நூருவருஷகெ = 100 ஆண்டுகளுக்கு

திவச மூவத்தாரு சாவிரவஹவு = 36,000 நாட்கள் வருகிறது

இனிது = இவ்வளவு எண்ணிக்கையில்

நாடி = நாடிகளில்

ஷரீரதொளு = சரீரத்தில்

இஹவு = இருக்கின்றன

யெந்தரிது = என்று அறிந்து

ஒந்து திவஸதலி = ஒரு நாளில்

ஸூரிகள = ஞானிகளை

ஸத்கரிஸிதவ = பூஜிப்பவன்

ப்ரதிவாரதலி = 100 ஆண்டுகள் வரை தினந்தோறும்

தம்பதிகளரச்சனெ = தம்பதி பூஜையை

தா = தான்

ரசிஸிதவ = செய்த பலன்களைப் பெறுகிறான்

ஸத்ய = இது உண்மை

சம்ஷயவெல்ல எந்தெந்து = இதில் என்றைக்கும் சந்தேகமே இல்லை

 

மனிதர்களுக்கு 100 ஆண்டு கால ஆயுள் என்று சொல்லப்படுகிறது. இந்த 100 ஆண்டுகளுக்கு 36,000 நாட்கள். அதில் 36,000 பகல்கள் + 36,000 இரவுகள் இருக்கின்றன. திவஸ (நாள்) என்றால் பகல்+இரவு இரண்டும் சேர்ந்ததையே சொல்கிறோம். 36,000 திவஸ என்று சொன்னதால், பகல்+இரவு இரண்டையும் சேர்த்தே இந்த எண்ணிக்கையை சொல்லியிருக்கிறார். முந்தைய பத்யத்தில் இரவு, பகல் இரண்டையும் தனித்தனியாக சொல்லியிருப்பதால், 72,000 என்று கூறினார். ப்ருஹதி சந்தஸ்ஸிற்கு எழுத்துக்கள் 36. சஹஸ்ர சேர்த்தால் 36,000. அந்த ப்ருஹதி சஹஸ்ரத்திற்கு தலைவனே, 36,000 திவஸங்களுக்கும் தலைவனாக இருக்கிறான்.

 

அத்தகைய ஸ்வாமியே பகல் 36,000 இரவு 36,000 எண்ணிக்கையுள்ள ஸ்த்ரி, புருஷ நாடிகளில் இருக்கிறான் என்று சிந்தித்து, ஒரு நாளில் ஞானிகளை அழைத்து பூஜித்தால், 100 ஆண்டுகள் பகல் இரவு பூஜித்தால் எவ்வளவு பலனோ, அவ்வளவு பலன் கிட்டுகிறது. இந்த விஷயத்தில் சந்தேகமே இல்லை.

சதுரவிம்ஷதி த1த்வக3ளு த

த் பதிக3ளெனிஸுவ பி3ரம்மமுக2 தே3

வதெகளனுதி3ன ப்ரதிப்ரதி நாடியொளகி3ருதித்து3 |

சதுரத3ஷ லோகதொ3ளு ஜீவ

பிரததிக3ம்ரக்‌ஷிஸுவ ஷா

ஷ்வத தத்தத்ஸ்தானத3லி நோடு3தலெ மோதி3பரு ||5

 

சதுர்விம்ஷதி தத்வகளு = 24 தத்வங்கள்

தத்பதிகளெனிஸுவ = அந்த தத்வங்களுக்கு அபிமானிகள் என்று சொல்லப்படும்

பிரம்மமுக தேவதெகளு = பிரம்மரே முதலான தேவதைகள்

அனுதின = தினந்தோறும்

ப்ரதிப்ரதி நாடிகளொளிருதித்து = ஒவ்வொரு நாடியிலும் இருந்துகொண்டு

சதுர தஷலோகதொளு = 14 உலகங்களின்

ஜீவப்ரததிகள = ஜீவ சங்கங்களை

சம்ரக்‌ஷிஸுவ = காப்பாற்றுகிறான்

ஷாஷ்வதன = எப்போதும் ஒரு மாதிரியாக இருக்கக்கூடிய பரமாத்மனை

தத்தத்ஸ்தானதலி = அந்தந்த நாடிகளில்

நோடுதலெ = பார்த்தவாறு

மோதிபரு = மகிழ்ந்திருப்பர்

 

24 தத்வங்கள், அதன் தத்வாபிமானிகளான பிரம்மாதி தேவதைகள், இந்த தேகத்தில் இருக்கக்கூடிய 72,000 நாடிகளின் ஒவ்வொரு நாடிகளிலும் இருந்துகொண்டு, அந்த நாடிகளில் இருக்கக்கூடிய ஸ்ரீபகவத் ரூபங்களை பார்த்தவாறு, மகிழ்ந்து கொண்டிருப்பர்.


No comments:

Post a Comment