ஸத்யஸங்கல்பனு ஸதா3 எ
ப்பத்தெரடு3 ஸாஹஸ்ரதொ3ளு மூ
வத்து நாலகு லட்சதை3ய்வத்தாரு ஸாஹஸ்ர |
சித்ப்ரக்ருதியொடகூ3டி3 பரமனு
நித்ய மங்களமூர்த்தி ப4குதர
தெத்திக3னு தானாகி3 ஸர்வத்ரதலி ஸந்தெயிப ||6
ஸத்யசங்கல்பனு = தன் விருப்பத்தின் பேரில்
அனைத்தையும் செய்யும் ஸ்ரீஹரி
சதா = எப்போதும்
எப்பத்தெரடு சாஹஸ்ரதொளு = 72,000 நாடிகளில்
மூவத்து நாலகு லட்சதைய்வத்தாரு சாஹஸ்ர = 34,56,000 ரூபங்களில்
சித்ப்ரக்ருதியொடகூடி = சேதன ப்ரக்ருதியான
லட்சுமிதேவியுடன் கூடி
பரமனு = சர்வோத்தமனான
சுனித்ய மங்கலமூர்த்தி = நித்ய மங்கள மூர்த்தியான
ஸ்ரீஹரி
பகுதர = பக்தர்களின்
தெத்திகனு = நலன்களை ஏற்றிருப்பவன்
தானாகி = தானாகவே
சர்வத்ரதலி = எப்போதும்
சந்தயிப = மகிழ்ச்சிப்படுத்துகிறான்
சர்வோத்தமனும், நித்ய மங்கள ஸ்வரூபனும், சத்யசங்கல்பனும் ஆன ஸ்ரீஹரி, 72,000 நாடிகள் ஒவ்வொன்றிலும், 24 தத்வங்கள், 24 தத்வாபிமானிகள் என மொத்தம் 48 ரூபங்களில்; மொத்தம் 72,000 * 48 = 34,56,000 ரூபங்களில் இந்த தேக நாடிகளில், லட்சுமி சமேதனாக இருந்து, பக்தர்களின் நலன்களை தானே கவனித்துக் கொண்டு, தினந்தோறும் அனைத்து இடங்களிலும் அவரை காப்பாற்றுகிறான் / அவருக்கு
அருள்கிறான்.
மணிக3ளொளகி3ஹ ஸூத்ரதந்த3தி3
ப்ரணவபாத்3யனு ஸர்வ சேதன
க3ணதொளித்த3னவரத ஸந்தெயிஸுவனு தன்னவர |
ப்ரணதகாமத3 ப4க்த சிந்தா
மணி சிதானந்தை3க தே3ஹனு
அணு மஹத்க3த நல்பனோபாதி3யலி நெலெஸிப்ப ||7
மணிகளொளு = மாலையாக கட்டப்பட்டிருக்கும் மணிகளின்
நடுவில்
இஹ = இருக்கும்
சூத்ரதந்ததி = கயிறைப் போல
ப்ரணவபாத்யனு = ஓம்கார ப்ரதிபாத்யனான
சர்வசேதன கணதொளித்து = அனைத்து சேதனர்களிலும் இருந்து
அனவரத = அனைத்து காலங்களிலும்
தன்னவர = தன் பக்தர்களை
சந்தெயிஸுவனு = அருள்கிறான்
ப்ரணதகாமத = தன்னை வணங்குபவர்களின் மனோபீஷ்டங்களை
நிறைவேற்றும்
பக்தசிந்தாமணி = பக்தருக்கு சிந்தாமணியைப்
போலிருக்கும்
சிதானந்தைகதேஹனு = எப்போதும் ஆனந்தமே தேகமாகக்
கொண்டிருப்பவனான ஸ்ரீஹரி
அணுமஹத்கதனு = சூக்ஷ்ம ஸ்தூல சரீரங்களில் இருந்தவாறு
அல்பனோபாதியலி = அல்ப சக்தி உள்ளவர்களைப் போல
நெலெசிப்ப = காட்டிக் கொள்கிறான்.
தன்னை பூஜிப்பவர்களின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றுவதால், ஸ்ரீபரமாத்மனுக்கு ப்ரணதகாமத என்று பெயர். சிந்தாமணி என்றால் நினைப்பதைக்
கொடுக்கும் மணி என்று பொருள். பக்தர்களின் விஷயத்தில் பரமாத்மன் இப்படியே
இருக்கிறான் என்று பொருள். எப்போதும் ஆனந்த ஸ்வரூபனும், மிகச்சிறிய பதார்த்தங்களிலும், ஜீவர்களிலும், மிகப்பெரிய பிரம்மாண்டத்தின் உறையாகவும் இருக்கும் சூக்ஷ்ம ஸ்தூல ரூபங்களை
ஸ்வீகரிக்கும் மஹா சாமர்த்தியசாலி ஆனாலும், சாதாரண மனிதர்களைப் போல
காட்டிக்கொண்டு, அனைத்து ஜீவராசிகளிலும் மணிகளைக் கோர்க்கும் கயிறினைப் போல, ஆதாரபூதனாக அனைத்து காலங்களிலும் இருந்து, பக்தர்களை காக்கிறான்.
ஈ ஸுஷும்னாத்3யகி2ல நாடி
கோ1ஷ நாபி4 மூலத3லி வ்ருஷ
நாஸனத3 மத்4யத3லி இப்புது3 துந்தி3னாமத3லி |
ஆ ஸரோஜாஸன முக2ரு மூ
லேஷனானந்தா3தி3 ஸுகு3ணோ
பாஸனெய கை3வுதலி தே3ஹக3ளொளகெ3 இருதிஹரு ||8
ஈ சுஷும்னாத்யகில நாடிகோஷ = சுஷும்னா முதலான அனைத்து
நாடிகளும்
நாபிமூலதலி = நாபிக்கு கீழ்பாகத்தில்
வ்ருஷணாஸனத மத்யதலி = விதைப்பைக்கும் மல
இந்திரியத்திற்கும் நடுவில்
துந்தினாமதலி = துந்தி என்னும் பெயருள்ள இடத்தில்
இப்பது = இருக்கிறது
தேஹதொளகெ = அந்த துந்தி என்னும் இடத்தில்
மூலேஷன = மூலேஷ நாமக பரமாத்மன்
ஆனந்தாதி சுகுணோபாஸனெய = ஆனந்தாதி மிகச்சிறந்த
குணங்களை
உபாஸனெய கைவுதலி = உபாசனையை செய்தவாறு
ஆ ஸரோஜாஸன முகரு = தத்வாபிமானிகளான பிரம்மாதி
தேவதைகள்
இருதிஹரு = இருக்கின்றனர்
சுஷும்னா நாடியை ஆதாரமாகக் கொண்டு இருக்கும் 72,000 நாடிகளும் (நாபிக்கு கீழ் ஆசனம் வரை இருக்கும் இடத்திற்கு துந்தி என்று பெயர்), துந்தியின் மூலஸ்தானத்தில், மேற்சொன்ன சுஷும்னா முதலான பிரதான
நாடிகள் சேர்ந்து 72,101 நாடிகளுக்கு ஒரு முடிச்சு இருக்கிறது. அங்கு, மூலேஷ நாமக பரமாத்மன் வசிக்கிறான். அங்கு, பிரம்மாதி தேவதைகள் அந்த மூலேஷனின் ஆனந்தாதி குணங்களை உபாசனை செய்தவாறு
வசிக்கின்றனர்.
முந்தைய 9ம் சந்தி 17ம் பத்யத்தில் தொடங்கி சில பத்யங்களில் இந்த நாடியைப் பற்றி தாசராயர்
விவரித்திருக்கிறார். அதே இடத்தில், தகுந்த ஆதாரங்களுடன் சுஷும்னா
நாடியைப் பற்றி விவரமாக சொல்லப்பட்டிருக்கிறது. அதைத்தவிர மேலதிக விஷயங்கள் இங்கு
உள்ளன.
நாபிக்குக் கீழ் இருக்கும் துந்தி என்று
அழைக்கப்படும் ஒரு இடத்தில் உள்ள ஒரு முடிச்சு இந்த நாடிகளுக்கு ஆதாரமாகும். அதில்
பிரதான நாடிகள் 101. அதிலும் பிரதான நாடிகள் 5. அதன் விவரம்: நடுவில் இருக்கும்
சுஷும்னா நாடி, அதன் 4 திசைகளில் இடா, பிங்களா, வஜ்ரிகா, தாரிணீ என்னும் 4 நாடிகள் இருக்கின்றன. இந்த நான்கு நாடிகள் ஒவ்வொன்றும் 25ஆக பிரிந்து, 4*25 = 100 ஆகிறது. மத்ய நாடி 1. ஆக 101 நாடிகள் ஆகின்றன. இந்த நாடிகள் ஒவ்வொன்றிலும் பல கிளைகள் இருக்கின்றன.
மொத்தம் 101
* 100 = 10100 ஆகிறது. இவற்றில்,
100 நாடிகள் ஒவ்வொன்றிலும் 10 கிளைகள் எனவும்,
மற்றொரு 100 நாடிகள் ஒவ்வொன்றிலும் 9 கிளைகள் எனவும்,
அடுத்த 300 நாடிகளில் 8 கிளைகள் எனவும்,
மிச்ச 9600 நாடிகள் 6 கிளைகளைக் கொண்டதாகவும் இருக்கின்றன.
இவைகளைக் கூட்டினால்:
மூல நாடிகள் = 10100
இவற்றில்:
10 கிளைகள் கொண்ட நாடிகள் = 100*10 = 1000
9 கிளைகள் கொண்ட நாடிகள் = 100*9 = 900
8 கிளைகள் கொண்ட நாடிகள் = 300*8 = 2400
6 கிளைகள் கொண்ட நாடிகள் = 9600*6 = 57600
மொத்தம் : 10,100 நாடிகள் = 61,900.
இந்த 61,900க்கு மூலமாக 10,100ஐ சேர்த்தால், மொத்தம் 72,000 நாடிகள் ஆகின்றன. இவற்றிற்கு ஆதாரமான நாடிகள் 101. இந்த எண்ணிக்கைகளுக்கு ஆதாரமாக, விஜயதாசராயரின் சுளாதி ஒன்று
உள்ளது.
ஹத்தைது விம்ஷதி மேலெரடுஸாவிர
மத்தெ நூரொந்து நாடி தேஹதொளகெ
தத்தளிஸுதிப்பது பலஸவ்யாதிடிது
இனிது கேளுவுது நாடிகள ஷாகா ஹத்து |
ஹத்தொந்து முக்ய நாடிய நூரரிந்த
பித்தரிஸி குணிஸி ஆயுதா நூரு
ஸத்யவாயிது நோடெ இதகெ விவர உண்டு.
உத்தமகணதாவரு திளியபேகு
ஹத்து ஹத்து குணிஸி அதன்னு அஷ்டரிந்த
மத்தெ ஹெச்சிஸலு ஸாவிரவஹுது
இத்த முந்தக்கெ நூரு இட்டுகொண்டு ஒம்பத்து நூரு.
சுத்தாதீரின்னு த்ரயனூரு எண்டாரிந்த
சித்தாதலி குணிஸி ஆதுதிதகெ
இப்பத்து நால்குனூரு. ஆ தருவாய
ஒம்பத்து ஸாவிரதாருனூரு
அர்த்தியிந்தலெ இதெ. ஆராரிந்தாலி குணிஸி
ஹத்தைது ஏளுஸாவிர நூராரு
இத்தண்டதிந்த பூர்வோத்தர நோடெ அர
வத்தொந்து சாவிரதெண்டொந்து நூரு.
மத்தெ இதர கெளகெ மேலின ஆயுதானூரு
இத்தரெ ஸப்பெரடுயுத நாடியு
நித்யவே ஸரி இதகெ நூரொந்து முக்ய நாடி
தத்தளகொளவெ கூடிஸலு, மொத்த உள்
ளத்தக்கெ ஹெச்சுவாதிஷ்டெ நாடிகளு
மர்த்ய லோகாதஜனரு குணிஸிதரு
அத்யந்த மஹிமனம்ம விஜயவிட்டலரேயா
ஸ்தோத்ர மாடிதவர மனகெ இந்து திளிபுவ ||
என்று இந்த சுளாதியில் சொல்லியிருக்கும் அர்த்தத்தையே
மேலே விளக்கியிருப்பதால், இந்த சுளாதியை மறுபடி
விளக்கவில்லை. இதற்கான ஆதாரங்கள் இன்னும் ஷட்ப்ரஷ்னோ உபநிஷத் பாஷ்யத்திலும், நாடிகல்பலதா என்னும் கிரந்தத்திலும் இருக்கின்றன. கிரந்தம் பெரிதாகிவிடும்
என்பதால் அவற்றை இங்கு விளக்கவில்லை.
ஸூரிக3ளு சித்தைஸுவுது பா4
கீ3ரதியெ மொத3லாத3 தீர்த்த2க3
ளீரதி3க வெப்பத்து ஸாவிர நாடி3யொளகி3ஹவு |
ஈ ரஹஸ்யவனல்ப ஜனரிகெ3
தோரி பேளதெ3 நாடி3நதி3யொளு
தீ4ரரனுதி3ன மஜ்ஜனவ மாடு3தலெ சுகி2ஸுவரு ||9
ஸூரிகளு = ஞானிகள்
சித்தைஸுவது = கவனத்தில் வைக்க வேண்டும்
பாகீரதியெ மொதலாத = கங்கையில் தொடங்கி அனைத்து
தீர்த்தகளு = ஆறுகள்
ஈரதிக வெப்பத்து சாவிர = 72,000
நாடியொளகிஹவு = நாடிகளில் இருக்கின்றன
ஈ ரஹஸ்யவனு = இந்த ரகசியத்தை
அல்ப ஜனரிகெ = பாமர மக்களுக்கு
தோரி பேளதெ = சொல்லி புரியவைக்காமல்
தீரரு = திடமான நம்பிக்கை உள்ளவர்கள்
நாடி நதியொளு = நாடிகளில் உள்ளே இருக்கும் நதிகளில்
அனுதின = தினந்தோறும்
மஜ்ஜனவ மாடுதலெ = ஸ்னானம் செய்தவாறு (நாடிகளில் கங்கை
முதலான நதிகள் இருக்கிறதென்று அறிந்து சிந்திப்பதே ஸ்னானம் என்று அர்த்தம்)
சுகிசுவரு = மகிழ்ந்திருப்பர்.
இந்த விஷயத்தை ஞானிகள் கவனத்தில் வைக்க வேண்டும்.
மேற்சொன்ன 72,000 நாடிகளில் கங்கா, துங்கா முதலான அனைத்து தீர்த்தாபிமானி தேவதைகளும் வசிக்கின்றனர். இந்த விஷயம்
மிகவும் ரகசியமானது. பாமரருக்குக் கூறினால் அவர்கள் நகைச்சுவை என்று
சிரிப்பார்கள். அத்தகையவர்களுக்கு இதை சொல்லக்கூடாது. இந்த நம்பிக்கை உள்ளவர்கள், எப்போதும் தம் நாடிகளில் அனைத்து நதிகளும் இருக்கின்றன என்று சிந்தித்து, அவற்றில் ஸ்னானம் செய்கிறோம் என்று மனதில் நினைத்தால், அனைத்து தீர்த்தங்களில் ஸ்னானம் செய்த பலன் கிடைக்கும்.
திளிவுதீ3 தேஹதொ3ளகி3ஹ எட
ப3லத3 நாடிக3ளொளு தி3விஜரனு
ஜலஜஸம்ப4வ வாயு வாண்யாதி3க3ளு ப3லத3ல்லி |
எலருணிக3 விஹகே3ந்த்3ர சளிவெ
ட்டளிய ஷண்மஹிஷியரு வாருணி
குலிஷத4ர காமாதி3களு எடபா4க3தொளகி3ஹரு ||10
ஈ தேஹதொளகெ = இந்த தேகத்தில்
இஹ = இருக்கும்
எடபலத நாடிகளொளகெ = இடது வலது பக்கங்களில் இருக்கும்
நாடிகளில்
திவிஜரு = தேவதைகளை
திளிவது = இந்த விதமாக அறியவேண்டும்
ஜலஜசம்பவ = பிரம்மதேவர்
வாயு = வாயுதேவர்
வாண்யாதிகளு = சரஸ்வதி முதலான
திவிஜரு = தேவதைகள்
பலதல்லி = வலது பக்கத்து நாடிகளில், இருக்கிறார்கள் என்று அறியவேண்டும்
எடபாகதொளு = இடது பக்கத்து நாடிகளில்
எலருணிப = காற்றை விழுங்குபவன் என்றால், சர்ப்ப என்று அர்த்தம்; சேஷதேவர்
விஹகேந்த்ர = பக்ஷிகளில் சிறந்தவனான கருடன்
சளி பெட்டளிய = இமாலய மலையில் மாப்பிள்ளையான ருத்ரர்
ஷண்மஹிஷியரு = கிருஷ்ணனின் மனைவியரில் ஜாம்பவதி
முதலான 6 பேர்
வாருணி = சேஷதேவரின் மனைவி
குளிஷதர = வைரம் அணிந்த தேவேந்திரன்
காமாதிகளு = மன்மதன் முதலானவர்கள்
இஹரு = இருக்கிறார்கள்.
இந்த தேகத்தில், பகல் நாடிகள் 36,000 வலது பக்கத்திலும்; இரவு நாடிகள் 36,000 இடது பக்கத்திலும் இருக்கின்றன. வலது நாடிகள் புருஷ நாடிகள் என்றும், இடது நாடிகள் ஸ்த்ரி நாடிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. வல, இட நாடிகளில், 500-500 நாடிகளுக்கு தக்ஷிணாயன நாடிகள், உத்தராயண நாடிகள் என்றும்
பெயருண்டு. ஷாண்டில்ய தத்வத்தில்:
தேஹேத்ரிஸ்ரஸ்து நாட்ய:ஸ்யு: பிங்களெடாஸுஷும்னாகா: |
தக்ஷிணாபிங்களானாம இடா வாமாப்ரகீர்த்திதா: ||
பிங்களாயா: ஷதம் பஞ்சனாட்யோவை தக்ஷிணாயனா: ||
தாவந்த ஏவாசீடாயா: நாட்யஸ்தேசோத்தராயணா: ||
இந்த தேகத்தில் முக்கிய நாடிகள் மூன்று இருக்கின்றன.
நடுவில் சுஷும்னா; வலது பக்கத்தில் பிங்களா, இடதில் இடா. பிங்களா
நாடியிலிருந்து பிறந்த 500 நாடிகளுக்கு தக்ஷிணாயன நாடிகள்
என்றும்,
இடா நாடியிலிருந்து பிறந்த 500 நாடிகளுக்கு உத்தராயன நாடிகள்
என்றும் பெயர் உண்டு -- என்று சொல்லியிருக்கின்றனர்.
No comments:
Post a Comment