ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, July 1, 2020

16-20 சர்வ பிரதீக சந்தி

வேத சாஸ்திர புராண கதெ23

நோதி3 பேளித3ரேனு சகல நி

ஷேத3கர்மவ தொரெது3 சத்கர்மக3ள மாடே3னு |

ஓத3னங்க3ள ஜரிது ஷ்வாஸ நி

ரோத3கைஸி3ரேனு காம

க்ரோதவளியதெ3 நானு நன்னது3 எம்ப மானவனு ||16

 

காம க்ரோதவளியதெ = காம கிரோதங்களை விடாமல்

நானு நன்னது எம்ப மானவனு = நான், எனது எனது கர்வத்துடன் திரியும் மனிதன்

வேத சாஸ்திர புராண கதெகள = வேத சாஸ்திர புராணங்களின் கதைகளை

ஓதி பேளிதரேனு = படித்து, மற்றவர்களுக்கு சொன்னால்தான் என்ன?

சகல நிஷேத கர்மவ = செய்யக்கூடாது என்று சொல்லப்பட்ட கர்மங்களை

தொரெது = செய்யாமல் விட்டு

சத்கர்மங்கள மாடேனு = சத்கர்மங்களை மட்டும் செய்துவந்தால்தான் என்ன?

ஓதனங்கள ஜரிது = அன்ன ஆகாரங்களை விட்டு

ஷ்வாஸ நிரோத கைஸிதரேனு = மூச்சை அடக்கி, தான் ஒரு யோகி என்று சொன்னால்தான் என்ன?

(இவை அனைத்தும் எவ்வித பலன்களையும் கொடுக்காதவை என்று பொருள்).

 

காம, குரோதங்களை விடாமல், எப்போதும் நான், எனது என்னும் ஸ்வதந்த்ர பாவத்துடன் உள்ள மனிதன், என்ன புராண, வேத சாஸ்திரங்களை படித்தால், கேட்டால், அதனால் எந்தவொரு பலனும் இல்லை. செய்யக்கூடாத செயல்களை விட்டு, விதிப்படி செய்யவேண்டிய சத்கர்மங்களை சரியாக பின்பற்றினாலும், எந்தவொரு பலனும் இல்லை. தான் ஒரு மிகப்பெரிய யோகி என்று சொல்லிக்கொண்டு அன்ன ஆகாரங்களை விட்டு, மூச்சினை அடக்கினாலும், இவை அனைத்தையும் பரமாத்மனே செய்விக்கிறான் என்று அறிந்து, காம, குரோதங்களை வெல்லும்வரை, எந்தவொரு பிரயோஜனமும் இல்லை என்பது கருத்து.

 

ஏனு கே1ளித3ரேனு நோடித3

ரேனு ஓதி33ரேனு பேளித3

ரேனு பாடி33ரேனு மாடி33ரேனு தி3னதி3னதி3 |

ஸ்ரீனிவான ஞான கர்மதி3

ஸானுராக3தி3 நெனெது3 தத்த

த் ஸ்தா2னத3லி தத்3ரூப தன்னாமகன ஸ்மரி3||17

 

ஸ்ரீனிவாசன ஜென்ம கர்ம = லட்சுமிதேவியை தன் வக்‌ஷஸ்தலத்தில் வைத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீபரமாத்மனின் அவதார சரித்திரங்களை

ஸதா = எப்போதும்

அனுராகதி = பக்தியினால்

நெனது = நினைத்தவாறு

தத்தத் ஸ்தானதலி = அந்தந்த இடங்களில்

தத்ரூப தன்னாமகன = அந்தந்த ரூபங்களில் அந்தந்த பெயர்களால் ஆன பரமாத்மனை

ஸ்மரிஸதவ = நினைக்காதவன்

ஏனு கேளிதரேனு = எந்த கிரந்தத்தைக் கேட்டால் என்ன?

நோடிதரேனு = எந்த கடவுளரின் பிரதிமைகளை / பூஜைகளை பார்த்தால் என்ன?

ஓதிதரேனு = எந்த கிரந்தத்தைப் படித்தால் என்ன?

பேளிதரேனு = பாராயணம் / ஸ்தோத்திரங்களை சொன்னால் என்ன?

பாடிதரேனு = தேவர நாமாக்களை பாடினால் என்ன?

மாடிதரேனு = எந்தவொரு நற்செயல்களை செய்தால் என்ன?

தினதினதி = தினந்தோறும் செய்தால் என்ன?

 

ஸ்ரீபரமாத்மனின் அவதார சரித்திரங்களை அனைத்து காலங்களிலும் (எப்போதும்) பக்தியுடன் நினைத்தவாறு, தீர்த்தங்களில் க்‌ஷேத்திரங்களில் வேத புராணாதிகளிலும், அனைத்து பிராணிகளிலும், அந்தந்த ரூபமாக அந்தந்த பெயர்களால் நிலைத்திருந்து, அனைத்து செயல்களையும் பரமாத்மனே செய்விக்கிறான் என்று உபாசனை செய்யாமல், அனைத்தையும் தானே செய்கிறேன் என்று நினைக்கும் புருஷன், எந்த பகவந்தனின் கதையைக் கேட்டால் என்ன? எந்த பிரதிமைகளை பார்த்தால் என்ன? எந்த கிரந்தங்களை படித்தால் என்ன? எந்த கிரந்தங்களை கேட்டால் என்ன? புராணம் சொன்னால் என்ன? எதை பாடினால்தான் என்ன? எந்த சத்கர்மங்களை அனுஷ்டானம் செய்தால் என்ன? எந்தவொரு செயல்களாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.

 

பு3த்தி3 வித்3யாபலதி3 பேளித3

ஷுத்த3 காவ்யவித3ல்ல த1த்வ ஸு

பத்த3திகளனு திளித3 மானவனல்ல புத3ரிந்த3 |

மத்4வவல்லப4 தானெ ஹ்ருதயதொ3

ளித்து3 நுடித3ந்த33லி நுடிதெ3

பத்த43ள நோடத3லெ கிவிகொட்டாலிபுது3 பு34ரு ||18

 

புத்தி வித்யா பலதி = என் அறிவு, கல்விகளால்

பேளித = கூறிய

ஷுத்த காவ்யவிதல்ல = சுத்தமான காவியம் அல்ல இது

புதரிந்த = ஞானிகளிடமிருந்து

தத்வஸுபத்ததிகளனு = சிறந்த சாஸ்திர மார்க்கங்களை

திளித = அறிந்த

மானவனல்ல = மனிதன் அல்ல

மத்வ வல்லப = ஸ்ரீமன் மத்வாசார்யருக்கு ஸ்வாமியான பரமாத்மன்

தானே ஹ்ருதயதொளித்து = என் மனதில் இருந்து

நுடிதந்ததலி = சொன்னதைப் போல

நுடிதென = சொல்கிறேன்

புதனு = ஞானிகள்

அபத்தகள நோடதலெ = இதில் இருக்கும் தோஷங்களை கண்டுகொள்ளாமல்

கிவிகொட்டாலிபுது = காது கொடுத்து கேட்க வேண்டும்.தாசராயர் தமது ஹரிதாசத்வத்தை வெளிப்படுத்துகிறார்.

 

நான் இந்த கிரந்தத்தை ஏதோ எழுதிவிட்டேன். ஆனால் நான் அறிவாளி என்றோ, அறிஞன் என்றோ நினைத்து இதை எழுதவில்லை. சிறந்த காவிய லட்சணங்களுடன் கூடிய சுத்தமான காவியம் என்றும் நான் இதை கூறுவதில்லை. நல்ல சித்தாந்த பத்ததிகளை ஞானிகளிடமிருந்து நான் அறிந்தவனும் அல்ல. ஸ்ரீமத்வேஷன் தானே எனக்குள் இருந்து சொல்லியிருப்பதைப் போல எழுதியிருக்கிறேன். ஆகையாலேயே, சாதுக்கள் இதனை காது கொடுத்து கவனத்துடன் கேட்க வேண்டும், என்று தாசராயர் இந்த பத்யத்தில் கூறுகிறார்.

 

ஆனால், உண்மையாக தாசராயர் மிகச்சிறந்த பண்டிதர் என்பதும், சுதாதி கிரந்தங்களைப் படித்தவர், பிரவசனங்களை செய்தவர் என்பதும் இவரது சரித்தத்தைப் படிப்பதன் மூலம் அறியலாம். அப்படியிருந்தும், நான் அறிஞன் அல்ல, அறிவாளி அல்ல என்று ஏன் சொல்கிறார் என்றால் வித்யார்வா புத்திர்வாஅறிஞன் அறிவாளி ஆகியவை அந்தர்யாமி பரமாத்மனுடையதே தவிர என்னுடையது அல்ல என்று சொல்வதற்காகவும், இந்த சந்தியில் முன்பு சொல்லியிருப்பதைப் போல, நான் எனது என்பவன் என்ன நற்செயல்களை செய்தாலும் அது பலன்களைக் கொடுப்பதில்லை என்பதை தன்னுடைய அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்திருப்பதால், இங்கு இவ்வாறு சொல்லியிருக்கிறார். ஆகையால், இந்த பதத்தை புரிந்து கொள்ளும் விதம் இப்படியாக இருக்கிறது.

 

அறிவு, கல்வி ஆகியவற்றின் சக்தியில் இயற்றப்பட்ட சுத்தமான காவியம் இது அல்ல என்றால், நானே அறிவாளி, நானே அறிஞன் என்னும் கர்வத்தில் இயற்றப்பட்ட அசுத்தமான காவியம் இது அல்ல. பரமாத்மனே எனக்குள் இருந்து, வித்யா, புத்தி ஆகியவற்றைக் கொடுத்து செய்து, செய்வித்த சுத்தமான காவியம் இது என்று அறியவேண்டும்.

 

ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் பரம்பரையில் வந்த வரதேந்திர தீர்த்த ஸ்வாமிகளிடம் வியாகரண சாஸ்திரங்களை, வேதாந்த கிரந்தங்களைப் படித்து, இந்த இரு சாஸ்திரங்களையும் தாசராயர், தம் சிஷ்யர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஞானிகளிடமிருந்து தத்வ பத்ததிகளை தாம் அறிந்தவரல்ல என்று தாசராயர் சொல்கிறார். இந்த வாக்கியத்திற்கும், ஞானிகளில் இருந்து உபதேசம் செய்தவனும், எனக்குள் இருந்து படித்து, படிக்க வைத்து, தான் பண்டிதன் என்னும் பெயர் பெறுவதற்கு காரணம் அந்த பரமாத்மனே என்னும் சிந்தனையுடன் நான் அறிந்தவனல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 

கப்பி3னொளகி3ஹ ரஸ வித3ந்தனி

3ப்ப3 3ல்லதெ பா4க்ய யௌவன

மப்பி3னலி மைமரெதவகெ3 ஹரி ஸுசரிதாம்ருதவு |

லப்4யவாக3து3 ஹரிபதா3ப்3ஜதி3

ஹப்பி33தி1 சத்ப4க்திர

ண்டு3ப்பி3 கொப்பி3 ஸுகா2ப்4தி3யொள கா3டுவவக3ல்லத3லெ ||19

 

கப்பினொளகிஹ = கரும்பினில்

ரஸ = சாறு

விதந்தனிகெ = பல் இல்லாதவருக்கு

அப்தபல்லதெ = சுவைக்குமோ? கடித்து அதன் சுவையை உணர்வதற்கு சாத்தியம் இல்லை என்று அர்த்தம்

இதைப்போல,

ஹரிபதாப்ஜதி = பரமாத்மனின் பாதாரவிந்தங்களில்

ஹப்பித = சேர்ந்திருக்கும்

அதி ஸத்பக்திரஸவ = மிகச்சிறந்த பக்தி ரசத்தை

உண்டு = குடித்து

உப்பி = மகிழ்ந்து

கொப்பி = அதில் மயங்கி

சுகாப்தி யொளாடுவவ கல்லதலெ = சுக சமுத்திரத்தில் விளையாடுபவனுக்கு

பாக்யயௌவன மப்பனலி = செல்வம், வாலிபம் என்னும் இந்த இரு இருட்டில்

மைமரதவகெ = மெய் மறந்தவனுக்கு

ஹரிஸுசரிதாம்ருதவு = இந்த ஹரிகதாம்ருதமானது

லப்யவாகது = கிடைக்காது

 

இந்த கிரந்தமானது, ஞானிகளுக்கு சுவையாக இனிக்குமே தவிர, அஞ்ஞானிகளுக்கு இனிக்காது என்கிறார்.

 

கரும்பைக் கடித்து அதன் சாறினைக் குடிக்க வேண்டுமெனில், அது பல் இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம். பல் இல்லாதவர்களுக்கு அது எப்படி சாத்தியம் இல்லையோ, அப்படியே பரமாத்மனின் பாதாரவிந்தத்தில் மனதை வைத்து, திடபக்தி என்னும் சாற்றைக் குடித்து, அதிலிருந்து மகிழ்ச்சியடைந்து, அதில் மயங்கி, சுக சமுத்திரத்தில் நீந்தி விளையாடுவர்களுக்கு மட்டுமே இந்த ஹரிகதாம்ருதசாரத்தின் சுவை தெரியும். கரும்பினைப் போல இருக்கும் ஹரிகதாம்ருதசாரத்தின் சாற்றினை, ஞானம் என்னும் பல் இல்லாத அஞ்ஞானிகள் குடிக்க முடியுமா? முடியாது.

 

23வரத்4வஜனங்க்4ரி ப4கு3தி1

3கெ3யனரியத3 மானவரிகி3து3

ஒக3டி1னந்த3தி3 தோருதிப்புது3 எல்ல காலத3லி |

த்ரிகு3ண வர்ஜிதனமல கு3ணக3

பொக3ளி ஹிக்கு3வ பா43வதரிகெ3

மிகெ34கு3தி1 விக்ஞான சுக2வித்தவரரக்‌ஷிபுது3 ||20

 

ககவரத்வஜ = பக்‌ஷிகளில் சிறந்தவனான கருடத்வஜன்

அங்க்ரி பகுதிய = பாதாரவிந்தங்களின் பக்தியின்

பகெய = விதத்தை

அரியத = அறியாத

மானவரிகெ = மனிதர்களுக்கு

இது = இந்த கிரந்தம்

ஒகடினந்ததி = ஒரு புதிரைப் போல

தோருதிப்பது = சரியாக புரிவதில்லை

எல்லகாலதலி = அனைத்து காலங்களிலும்

த்ரிகுணவர்ஜிதன = ப்ராக்ருதமான சத்வ ரஜஸ் தமோ குணங்கள் இல்லாதவனான ஸ்ரீபரமாத்மனின்

அமல = நிர்மலமான (தோஷங்கள் அற்ற)

குணகள = ஆனந்தாதி குணங்களை

பொகளி = ஸ்துதித்து

ஹிக்குவ = மகிழ்ச்சியடையும்

பாகவதரிகெ = பகவத் பக்தர்களுக்கு

மிகெ பகுதி = அதிக பக்தியை

ஸுக்ஞான சுகவன்னு = பகவத் சம்பந்தமான சிறந்த ஞான சுகத்தை

இத்து = கொடுத்து

அவர = அந்த பக்தரை

ரக்‌ஷிபுது = காப்பாற்றுகிறான்

 

முந்தைய பத்யத்தில் சொன்னதையே மறுபடி சற்று விளக்குகிறார்.

 

ஸ்ரீபரமாத்மனின் பாதாரவிந்த பக்தி மார்க்கத்தையே அறியாத மனிதர்களுக்கு, இந்த கிரந்தம் ஒரு புதிர் போல இருக்கிறது. அப்ராக்ருதமான பரமாத்மனிடம் த்ருடபக்தி உள்ளவர்களாக, அவனின் மகிமையை எப்போதும் பாடியவாறு, புகழ்ந்தவாறு, மகிழ்ச்சியடைந்திருக்கும் பகவத் பக்தர்களுக்கு, சிறந்த பக்தியை, ஞானத்தை அதிகப்படுத்தி சுகத்தைக் கொடுக்கிறது. 

No comments:

Post a Comment