அபரிமித ஸன்மஹிம நரஹரி
விபினதொ3ளு ஸந்தெயிஸுவனு கா
ஷ்யபியனளெவவ ஸ்த2லக3ளலி ஸர்வத்ர கேஷவனு |
க2பதி க3க3னதி3 ஜலக3ளலி மஹ
ஷப4ர நாமக ப4க்தரனு நி
ஷ்கபடதி3ந்த3லி ஸலஹுவனு கருணாளு தி3னதி3னதி3 ||26
அபரிமித ஸன்மஹிம = எல்லைகளற்ற மகிமைகளைக் கொண்ட
நரஹரி = நரசிம்மரூபி ஸ்ரீஹரி
விபினதொளு = காக்கிறான் (காட்டில் ஸ்ரீஹரி, நரசிம்மரூபத்தை தியானித்தால் காக்கிறான்)
காஷ்யபியனு = பூமியை
அளெதவனு = மூன்றடிகளால் பூமியை அளந்த வாமனமூர்த்தி
ஸ்தலகளலி = கிராமங்களில், நகரங்களில்
சர்வத்ர = எல்லா இடங்களிலும்
கேசவனு = கேசவரூபி பரமாத்மன் காக்கிறான்
கபதி ககனதி = வானில் சஞ்சரிப்பவர்களை, ஹ்ருஷிகேஷ ரூபி காக்கிறான்
ஜலகளலி மஹ ஷபர நாமக = தண்ணீரில் சஞ்சரிப்பவர்களை, மத்ஸ்யரூபி காக்கிறான்
நிஷ்கபடதிந்தலி = எவ்வித உள் நோக்கமும் இல்லாமல்
பக்தரனு = பக்தர்களை
ஸலஹுவனு = காக்கிறான்
கருணாளு = கருணைக்கடலானவன்
தினதினதி = தினந்தோறும்
பாகவத 6ம் ஸ்கந்தத்தில் இருக்கும் நாராயண
வர்மத்தில்:
துர்கேஷ்ட்யடவ்யாஜி மகாதிஷுப்ரபு: பாயான் ந்ருஸிம்ஹோஸுரமூதபாரி:
மலைகளில், காடுகளில், போர்க்களத்தில், பிரபுவான நரசிம்மன் நம்மை காப்பாற்றட்டும் என்று சொல்கிறார்.
ஸ்தளேசமாயா வடு வாமனோவ்யாத்.
என்னும் பாகவத வியாக்யானத்திற்கேற்ப, பூமியை அளந்த வாமனரூபி பரமாத்மன், ஸ்தளங்களில் (கிராமங்களில், நகரங்களில்) நம்மை காப்பாற்றுகிறான். அனைத்து இடங்களிலும் கேசவன் நம்மை
காக்கிறான். மூன்றடி நிலத்தை தானமாக வேண்டி, த்ரிவிக்ரம ரூபத்தினால் அளந்து, இந்திரனுக்கு ஸ்வர்க்கத்தைக்
கொடுத்ததால், த்ரிவிக்ரம ரூபத்திற்கு கபதி என்று பெயர்.
* மூன்று அடிகளால் நிலத்தை அளந்ததால்
த்ரிவிக்ரம என்றும்,
* உலகம் முழுக்க வியாபித்ததால்
விஸ்வரூபி என்றும்,
* நிலம் உள்ள அனைத்து இடங்களை 2 அடிகளால் அளந்து, ‘ நவைத்ருதீயஸ்ய ததீயமண்யபி’ மூன்றாம் அடிக்கு கொஞ்சம் கூட இடம்
இல்லாமல் வியாபித்திருப்பதால், கபதி என்றும் பெயர். கபதி என்றால்
ஆகாயத்திற்கு பதி என்றும் அர்த்தம்.
த்ரிவிக்ரமரூபிக்கு இந்த மூன்று பெயர்களும் உண்டு
என்று அறியவேண்டும். ‘த்ரிவிக்ரம: கேமது விஷ்வரூப:’
ஆகையால், நாராயண வர்மத்தில் விஷ்வரூபியான
த்ரிவிக்ரமன், ஆகாயத்தில் காப்பாற்றட்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ‘ஜலேஷுமாம்ரக்ஷது மத்ஸ்ய மூர்த்தி:’ என்னும் வியாக்யானத்திற்கேற்ப, தண்ணீரில் மத்ஸ்யரூபி காப்பாற்றுகிறான். இத்தகைய ரூபங்களை தரித்து பரம
தயாளுவான ஸ்வாமி, பக்தர்களை அனைத்து விதங்களிலும் காப்பாற்றுகிறான்.
காரணந்தர்யாமி ஸ்தூ2லவ
தார வ்யாப்தாம்ஷாதி3 ரூபகெ
ஸார ஷுப4 ப்ரவிவிக்தனந்த3 ஸ்தூ2ல நிஸ்ஸார |
ஆரு ரஸக3ளனர்ப்பிஸல்ப1ரி
கீ3ரஹஸ்யவ பேளதெ3 ஸதா3
பாரமஹிமன ரூப கு3ணக3ள நெனெது3 ஸுகி2ஸுதிரு ||27
காரண = காரணரூப
அந்தர்யாமி = அந்தர்யாமிரூப
ஸ்தூல = ஸ்தூலரூப
அவதார = அவதாரரூப
வியாப்த = வியாப்தரூப
அம்ஷாதிரூபகெ = அம்ஷ முதலான ஆறு ரூபங்களுக்கு
ஸார = சாத்விக பதார்த்தங்களின் சுவை
ஷுப = மங்களகரமான பதார்த்தங்கள்
ப்ரவிவிக்த = ஏகாந்தமான பொருட்கள்
அனந்த = போகங்களால் வரும் ஆனந்தங்கள்
ஸ்தூல = மரங்களுக்கு தண்ணீர் போன்ற பதார்த்தங்கள்
நிஸ்ஸார = பசுக்களுக்கு புல் போன்ற பதார்த்தங்கள்
ஆரு ரசகளனு = மேற்கூறிய 6 சுவைகளை
அர்ப்பிஸலு = அர்ப்பணம் செய்
ஈ ரஹஸ்யவ = இந்த ரகசியத்தை
அல்பரிகெ = துஷ்டர்களுக்கு
பேளதே = சொல்லாமல்
அபாரமஹிமன = எல்லையற்ற மகிமைகளைக் கொண்டவனின்
ரூப குணகள = ரூப குணங்களை
சதா = எப்போதும்
நெனெது = நினைத்தவாறு
சுகிஸுதிரு = மகிழ்ந்திரு.
பகவத்ரூபங்களில்,
* காரணரூபம்
* அந்தர்யாமிரூபம்
* ஸ்தூலரூபம்
* அவதாரரூபம்
* வியாப்த ரூபம்
* அம்ஷரூபம்
என்று ஆறு விதங்கள் உண்டு
இதைப்போலவே, சுவைகளிலும்
* ஸார ரஸ
* ஷுப ரஸ
* ப்ரவிவிக்த ரஸ
* அனந்த ரஸ
* ஸ்தூல ரஸ
* நிஸ்ஸார ரஸ
என்று ஆறு விதங்கள் உண்டு.
காரணரூபம்:
காரியம் எனப்படும் ஒவ்வொரு பதார்த்தங்களுக்கும், கர்த்தா, காரண இந்த இரண்டும் உண்டு.
* பானை என்பது காரியம். இதற்கு
காரணம் ப்ரக்ருதி (மண்). குயவன் கர்த்தா.
* மக்கள் என்பது காரியம். தந்தை
கர்த்தா. விந்து காரணம்.
இதைப்போல,
* ஜகத் என்பது காரியம்.
த்ரிகுணங்களைக் கொண்ட ப்ரக்ருதி காரணம். பரமாத்மன் கர்த்தா.
இப்படி ஆதிஸ்ருஷ்டியிலிருந்து, ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார என்று அனைத்து செயல்களுக்கும், காரியம், காரண,
கர்த்தா என்னும் மூன்றும் உண்டு. இவற்றில் ஸ்ருஷ்டிக்கு காரணம் ப்ரக்ருதி. இப்படி
ஒவ்வொரு காரண வஸ்துகளிலும் இருக்கும் பகவத்ரூபங்களுக்கு காரண ரூபம் என்று பெயர்.
அனைத்து காரணரூபங்களையும் எடுத்துக்கொண்டு, ஒவ்வொன்றிற்கும் சுவைகளை பிரித்துக் கொடுத்தால், கிரந்தம் பெரிதாகிவிடும் . ஆகையால், முக்கியமான ஜகத் ஸ்ருஷ்டிக்கு, ஸ்திதிக்கு, சம்ஹாரத்திற்கு காரண ஸ்வரூபளான ப்ரக்ருதியில், பரமாத்மனே இருந்து ப்ராக்ருத குணங்களை வகித்து, ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயங்களை செய்கிறான். ஆகையால், ப்ரக்ருத்யாதிகளில் இருக்கும்
பகவத் ரூபங்களுக்கு காரண ரூபங்கள் என்று பெயர். இவற்றிற்கு ஸார ரஸங்களை அர்ப்பிக்க
வேண்டும்.
ஸார ரஸ என்றால், பரமாத்மன் ஸாத்விக, ராஜஸ, தாமஸ என்னும் மூன்றுவித ஜீவர்களை ஸ்ருஷ்டித்து, அவர்கள் போகிப்பதற்காக சாத்விக, ராஜஸ, தாமஸ பதார்த்தங்களை படைக்கிறான். அதாவது, நெய்,
பால் ஆகியவை சாத்விக பதார்த்தங்கள். கடலை, மிளகு ஆகியவை ராஜஸ பதார்த்தங்கள். உருளை, கத்திரி ஆகியவை தாமஸ பதார்த்தங்கள் என்று இவற்றை படைத்திருக்கிறான். இவற்றில்
ஸார என்றால், சாத்விக பதார்த்தங்களின் சுவையையே த்ரிகுணரூப காரணனாக இருக்கும்
பகவத்ரூபத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று பொருள்.
அந்தர்யாமிரூபம்:
அந்தர்யாமி என்றால் பிரம்மாதி அனைத்து பிராணிகளிலும்
அந்தர்யாமியாக இருக்கும் ரூபம். இந்த ரூபத்திற்கு ஷுப ரஸவை அர்ப்பிக்கவேண்டும்.
ஷுப என்றால் மங்களகரமான பதார்த்தங்கள் என்று பொருள். அந்தர்யாமியான பகவந்தனுக்கு
நாம் பார்ப்பது, கேட்பது, உண்பது, போகிப்பது ஆகியவற்றில், இது நல்லது, இது மங்களப் பொருள் என்று நமக்கு எது தோன்றுகிறதோ, உடனடியாக அதனை சமர்ப்பிக்க வேண்டும்.
ஸ்தூலரூபம்:
ஸ்தூலரூபம் என்றால் பிரம்மாண்டமே சரீரமாகக் கொண்ட
விராட்ரூபம். இந்த ரூபத்திற்கு ப்ரவிவிக்த ரஸத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
ப்ரவிவிக்த என்றால் ஏகாந்தம் என்று பொருள். மக்கள் நடமாட்டம் இல்லாத இடம் என்று
பொருள். உலகத்தில் இத்தகைய ஏகாந்தமான இடங்களில் அனேக புண்ய தீர்த்தங்கள், க்ஷேத்திரங்கள் இருக்கின்றன. யாத்திரைகளை செய்துகொண்டிருக்கும்போது, அங்கு நாம் செய்யும் புண்ணிய செயல்கள், நமக்கு ஆகும் மகிழ்ச்சி ஆகியவற்றை விராட்ரூபியான பரமாத்மனுக்கு அர்ப்பிக்க
வேண்டும் என்று பொருள்.
அவதாரரூபம்:
ராமகிருஷ்ணாதி ரூபங்களே அவதார ரூபங்கள். இந்த
ரூபங்களுக்கு நாம் உண்பது, குடிப்பது, தூங்குவது, போகங்களால் வரும் ஆனந்தங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது பொருள்.
வியாப்தரூபம்:
வியாப்தரூபம் என்றால், பிரம்மாண்டத்திலும், அதற்கு வெளியேயும், சேதன,
அசேதன நிறைந்த அனைத்து உலகங்களிலும், வியாபித்துக் கொண்டிருக்கும்
ரூபம். இந்த ரூபத்திற்கு ஸ்தூல ரஸத்தை சமர்ப்பிக்க வேண்டும். மரங்களுக்கு தண்ணீரே
ஸார. இந்த தண்ணீரை ஊற்றினால், மரங்களில் வியாபித்திருக்கும்
பரமாத்மனுக்கு, இது ப்ரீதி ஆகட்டும் என்று சமர்ப்பிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு வஸ்துவில்
இருக்கும் பகவத்ரூபங்களுக்கும் அதற்கு ஸார என்று தெரியும் ரஸங்களை சமர்ப்பிக்க
வேண்டும் என்பது பொருள்.
அம்ஷரூபம்:
அம்ஷ ரூபம் என்றால், ‘மமைவாம்ஷோ ஜீவலோகே ஜீவபூத: ஸனாதன:’ என்னும் கீதா வாக்கியத்தால், அனைத்து ஜீவராசிகளும் பகவந்தனின் அம்ஷ ரூபமே என்று அறியவேண்டும். இங்கு ‘அம்ஷ’
என்றால் பிரதிபிம்ப என்று அர்த்தம். இத்தகைய பிரதிபிம்பரான ஜீவருக்குள்ளும்
அவர் உருவம், அந்த ரூபத்தில் பரமாத்மன் இருக்கிறான்.
அந்தர்யாமி ரூபத்தை சொல்லும்போது, தேவ மனுஷ்யாதிகளை சொல்லியாயிற்று. இங்கு பசு முதலான மிருகங்களை எடுத்துக்
கொள்ளவேண்டும். நமக்கு எது நிஸ்ஸார என்று தோன்றுகிறதோ, அத்தகைய புல் ஆகியவை இவற்றிற்கு ஆகாரமாக இருக்கிறது. பசு முதலிய ரூபியான
பரமாத்மனுக்கு இத்தகைய நிஸ்ஸாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
ஷுபம் பிபத்யஸோனித்யம் நாஷுபம்பிபதே ஹரி: என்னும்
ஆதாரத்தினால் பரமாத்மன் எப்போதும் சாரத்தையே ஏற்றுக் கொள்கிறான் என்று
அறியவேண்டும். அப்படியிருக்கையில், நிஸ்ஸாரத்தை எப்படி அர்ப்பிப்பது
என்றால்,
பசு முதலானவற்றிற்கு அது சார என்றிருக்கிறது. நமக்கு அது நிஸ்ஸார.
இது பரம ரகசியமான விஷயம். இதனை அயோக்கியர்களுக்கு
சொல்லக்கூடாது. நீ மட்டும் இதனை அறிந்து மேற்கூறிய ஷட்ரூபியான பரமாத்மனுக்கு
ஷட்ரஸங்களை அர்ப்பிக்க வேண்டும். அபார மகிமையுள்ள பரமாத்மனை துதித்து மகிழ்ச்சியாக
இரு என்று தாசராயர் தன் ஆப்த சிஷ்யர்களிடம் கூறுகிறார் என்று எண்ணவேண்டும்.
ஜலக3தோடு3பனமல பி3ம்ப3வ
மெலுவெவெம்ப1தி ஹருஷதி3ந்த3லி
ஜலசர பிராணிக3ளு நித்யதி3 யத்னகை3வந்தெ |
ஹலத4ரானுஜ போ4க்3ய ரஸக3ள
நெலெயனரியதெ3 பூஜிஸுத ஹ
ம்ப3லிஸுவரு புருஷார்த்த2க3ள ஸத்குலஜராவெந்து3 ||28
ஜலகத = தண்ணீரில் இருக்கும்
உடுபன = சந்திரனின்
விமல பிம்பவ = தூய்மையான பிம்பத்தை
மெலுவெனெந்ததி ஹருஷதிந்தலி = தின்னவேண்டும் என்று
நினைத்து
ஜலசர பிராணிகளு = நீரில் வசிக்கும் உயிரினங்கள்
நித்யதி = தினமும்
யத்னகைவந்தெ = முயல்வதைப்போல
ஹலதரானுஜ = பலராமனின் தம்பியான ஸ்ரீகிருஷ்ணனுக்கு
போக்யரஸகள = சம்மதமான ரஸங்களை
நெலெயனு = ஸ்வரூபத்தை
அரியதெ = அறியாமல்
ஆவு = நாம்
ஸத்குலஜரெந்து = பெரிய வம்சத்தவர்கள் என்று எண்ணி
பூஜிஸுத = பரமாத்மனின் பிரதிமாதிகளை பூஜித்தவாறு
புருஷார்த்தகள = தர்ம அர்த்த காம மோட்ச என்னும்
நான்கு புருஷார்த்தங்களை
ஹம்பலிசுவரு = விதவிதமாக வேண்டுகிறோம்.
சந்திரனின் பிரதிபிம்பத்தை நீரில் காணும் நீர்வாழ்
உயிரினங்கள், அதை தங்களின் ஆகாரம் என்று எண்ணி, மிகவும் மகிழ்ச்சியுடன் அதை
தின்பதற்கு முயல்கின்றன. ஆனால் அதை உண்பது என்றைக்கும் சாத்தியம் ஆவதில்லை.
அதுபோலவே,
அங்கங்கு இருக்கும் பகவத்ரூபங்களுக்கு எந்தெந்த ரஸங்களை எப்படிஎப்படி
சமர்ப்பிக்க வேண்டும் என்று அறியாத ஒருவர், தாம் நற்குலத்தில் பிறந்தவர் என்று எண்ணி, பிரதிமாதிகளை மிகவும் ஆடம்பரத்துடன் பூஜித்து புருஷார்த்தங்களை வேண்டுவார்.
அந்த நீர்வாழ் உயிரினங்கள், நிலவின் பிரதிபிம்பத்தை உண்பதற்கு
முயன்று தோல்வியுறுவதைப் போலவே இவரது நிலையும் ஆகிறது. (எவ்வித பலன்களும்
இவருக்குக் கிடைப்பதில்லை என்பது கருத்து).
தே3வ ரிஷி பித்ருக3ளு கா3யக
தே3வ நர நர த3னுஜ கோ3ஜ க2
ராவி மொத3லாத3கி2ல சேதனபோ4க்3ய ரஸக3ளனு |
யாவத3வயவ க3ளொளகி3த்து3 ர
மாவரனு ஸ்வீகரிப யாவ
ஜ்ஜீவ க3ணக்கெ ஸ்வயோக்3ய ரஸக3ளனீய நெந்தெ3ந்து3 ||29
தேவ ரிஷி பித்ருகளு = தேவதைகள், ரிஷிகள், பித்ருகள்
நரதேவ = ப்ரியம்வ்ரத முதலான சக்ரவர்த்திகள்
மானவ = மனிதர்கள்
தனுஜரு = தைத்யர்கள்
கோ = பசுக்கள்
அஜ = ஆடுகள்
கர = கழுதைகள்
ஆவி = செம்மறி ஆடுகள்
மொதலாத = ஆகிய
அகில சேதன போக்ய ரஸகளனு = அனைத்து பிராணிகளும்
உண்ணும் அனைத்து பதார்த்தங்களின் ஸாரங்களையும்
யாவதவயவகளொளகெ = கண், காது முதலான அனைத்து அங்கங்களிலும்
இத்து = இருந்து
ரமாவரனு = லட்சுமிபதி
ஸ்வீகரிப = ஏற்றுக்கொள்கிறான்
யாவஜ்ஜீவகணக்கெ = எல்லா ஜீவராசிகளுக்கும்
ஸ்வயோக்ய = அவரவர்களின் யோக்யதைக்கேற்ப
ரஸகளனு = ரஸங்களை
எந்தெந்து = எப்போதும்
ஈவனு = கொடுக்கிறான்
தேவதைகள், ரிஷிகள், பித்ருகள், சக்ரவர்த்திகள், மனிதர்கள், தைத்யர்கள், பசுக்கள், ஆடுகள், கழுதைகள், செம்மறி ஆடுகள் போன்ற அனைத்து பிராணிகளின் போக்ய வஸ்துகள்
* அதாவது ஞானேந்திரிய, கர்மேந்திரிய மனஸ் முதலான உறுப்புகளால் அனுபவிக்கும் அனைத்து பொருட்கள்
* கண்ணில் பார்த்து மகிழும்
பொருட்கள்.
* காதில் கேட்டு மகிழும் பொருட்கள்.
* உண்பது
போன்ற அனைத்து போக்ய வஸ்துகளின் ஸாரத்தை, ஸ்ரீபரமாத்மன், அந்தந்த பிராணிகளில் இருந்து, ஏற்றுக்கொண்டு, அனைத்து ஜீவகணங்களுக்கும் அவரவர்களின் யோக்யதைக்கேற்ப ரஸங்களைக் கொடுக்கிறான்
என்பது கருத்து.
ஒரடு1 பு3த்தி4ய பி3ட்டு லௌகிக
ஹரடெக3ளனீடா3டி3 காஞ்சன
பரட லோஷ்டாதி3க3ளு ஸமவெந்த3ரிது3 நித்யத3லி |
புருட க3ர்ப்பா4ண்டோ3த3ரனு ஸ
த்புருட நெந்தெ3னிஸெயெல்லரொளகி3
த்துருடு கர்மவ மாள்பனெந்த3டிக3டிகெ3 நெனெயுதிரு ||30
ஒரடுபுத்திய பிட்டு = பிரதிமைகளே தேவர், திருப்பதியிலேயே ஸ்ரீனிவாசன் இருக்கிறான், கங்கையே தீர்த்தம் என்று சொல்லும் தவறான புத்தியை விட்டு
லௌகிக ஹரடெகளனு = வெறும் வீண் அரட்டைகளை
ஈடாடி = விட்டு,
காஞ்சன = தங்கம்
பரட = தேங்காய் ஓடு
லோஷ்டாதிகளு = உலோகங்கள் முதலியன
ஸமவெந்தரிது = சமம் என்று அறிந்து
நித்யதலி = தினந்தோறும்
புரட கர்ப்பாண்டோதரனு = புரட கர்ப்ப = ஹிரண்யகர்ப்ப
அதாவது பிரம்ம. அண்டோதரனு = பிரம்ம+அண்டம் =
பிரம்மாண்டம். அதை வயிற்றில் வைத்திருக்கும், ஸ்ரீஹரி என்று பொருள்.
ஸ்த்புருடனெந்தெனிஸி = புருஷோத்தமன் என்று நினைத்து
உருடகர்மவ = தன்னுடைய செயல்களை
மாள்பனெந்து = செய்கிறான் என்று
அடிகடிகெ = ஒவ்வொரு கணமும்
நெனெவுதிரு = நினைத்துக் கொண்டிரு.
* ஸ்ரீஹரி இங்கேயே இருக்கிறான்.
அங்கே என்ன இருக்கிறது?
* பிரதிமையே ஸ்ரீஹரி
* இந்த கடவுளே கடவுள்
No comments:
Post a Comment