ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, July 12, 2020

11-15 நாடி பிரகரண சந்தி

இக்கெலதொ3ளிஹ நாடி3யொளு தே3

ர்க்3ளிந்தொ3ட நாடு3தலி பொ

ம்ப3க்கிதே3ரனு ஜீவரதி4காரானு ஸாரத3லி |

தக்கஸா4ன மாடி மாடிஸு

தக்கரதி3 ந்தெய்ப ப4குதர

தக்ககொ33னு அஸுரர த்புண்யக3ள னபஹரிப ||11

 

இக்கெலதொளு = இரு பாகங்களில்

இஹ = இருக்கும்

நாடியொளு = நாடிகளில்

தேவக்களிந்த = தேவதைகளுடன்

ஒடனாடுதலி = அவர்களுடன் சேர்ந்து சஞ்சரிக்கும்

பொம்பக்கிதேவனு = கருடனே வாகனனாக உள்ள ஸ்ரீபரமாத்மன்

ஜீவர = சாத்விக, ராஜஸ, தாமஸ என்னும் மூன்றுவித ஜீவர்கள்

அதிகாரானு சாரதலி = தகுதிக்கேற்ப

தக்க சாதன மாடி = சாதனைகளை செய்து

மாடிசுத = செய்வித்து

பக்தர = பக்தர்களை

அக்கரதி = அன்புடன்

சந்தெய்ப = காப்பாற்றுவான்

அசுரர்கெ = தைத்யர்களுக்கு

சத்புண்யகள = சிறந்த புண்ணியங்களை

தக்ககொடனு = கொடுக்கிறான்

அபஹரிப = தான் அவர்களில் இருந்து செய்து செய்வித்த புண்ணியங்கள் சிறிதே இருந்தாலும், அதனை தானே அபகரிக்கிறான்.

 

நம் சரீரத்தில் இருக்கும் நாடிகளில் கருடவாகனான ஸ்ரீஹரி, தேவதைகளுடன் சேர்ந்துகொண்டு, அங்கு வசித்தவாறு மூன்றுவித ஜீவர்களின் யோக்யதைக்கேற்ப தக்க சாதனைகளை செய்து செய்வித்து, பக்தர்களுக்கு புண்ய பலன்களைக் கொடுத்து, அவர்களுக்கு அருள்கிறான். த்வேஷிகளான தைத்யர்களில் இருந்து, செய்து செய்விக்கும் புண்ய பலன்களை தான் அபகரித்து அவர்களுக்கு அந்த பலன் கிடைக்காதவாறு செய்கிறான்.

 

துந்தி3விடி3தா3ஷிரத3 பர்ய

ந்தொந்தெ3 வ்யாபிஸி இஹுது3 தாவரெ

கந்த3னிஹனத3ரொளகெ3 அத3கீரைது3 ஷாகெ23ளு |

ஒந்த3தி4க தஷகரணக3ளு

ம்ப3ந்த4 கை3தி3ஹவல்லி ரவி சஷி

ஸிந்து நாத்யாதி33ளு நெலெகொண்டி3ஹரு தத ||12

 

துந்திவிடிது = நாபிக்கு கீழுள்ள பகுதியிலிருந்து

ஷிரதபரியந்த = தலை வரைக்கும்

ஒந்தேவ்யாபிஸிஹது = பிரம்ம நாடி வியாபித்துக் கொண்டிருக்கிறது, அதற்குள்

தாவரெகந்த = தாமரையிலிருந்து பிறந்தவர் என்றால், பரமாத்மனின் நாபி கமலத்திலிருந்து பிறந்த பிரம்மதேவர், அந்த பெயர் கொண்ட வாயுதேவர் என்று பொருள்; அத்தகைய வாயுதேவர் அல்லது பிரம்ம வாயுகள்

இஹனு = இருக்கிறார்கள்

இதகெ = இந்த பிரம்ம நாடிக்கு

ஈரைது ஷாகெகளு = 10 கிளைகள் இருக்கின்றன. பிரம்ம நாடி 1. கிளைகள் 10. மொத்தம் 11 நாடிகளில்

ஒந்ததிக தஷ கரணகளு = ஞானேந்திரிய 5, கர்மேந்திரிய 5, மனஸ் 1. மொத்தம் 11 இந்திரியங்கள், சம்பந்தப்பட்டிருக்கின்றன

அல்லி = அந்த இந்திரிய சம்பந்தத்தினால் கூடிய நாடிகளில்

ரவி = சூரியன்

ஸிந்து = வருணன்

நாஸத்யாதிகளு = அஸ்வினி தேவதை முதலானவர்கள்

ஸதத = அனைத்து காலங்களிலும்

நெலெகொண்டிஹரு = வசிக்கின்றனர்.

 

நாபிக்குக் கீழுள்ள பகுதிக்கு துந்தி என்று பெயர். அந்த துந்தி, மல இந்திரியம் வரை இருக்கிறது. துந்தியின் மூல ஸ்தானத்திலிருந்து தலை வரைக்கும் பிரம்ம நாடி வியாபித்திருக்கிறது. அதில் ஸ்ரீ பிரம்மதேவர் மற்றும் வாயுதேவர் இருக்கின்றனர். இங்கு வாயுதேவரை தனியாக சொல்லாவிட்டாலும், அடுத்த பத்யத்தில் தனியாக சொல்லியிருப்பதாலும், வாயுதேவரே பிரம்மதேவராக ஆகப்போவதாலும், பிரம்மதேவரைக் கூறியதால், வாயுதேவரையும் சேர்த்து சொன்னதாகவே அர்த்தம். இந்த பிரம்ம நாடிக்கு 10 நாடிகள் கிளைகளாக இருக்கின்றன. பிரம்ம நாடியை சேர்த்து மொத்தம் 11 நாடிகள். இந்த 11 நாடிகளில் மனஸ் 1, ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, என 11 இந்திரியங்கள் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. அவற்றில் சூரியன், சந்திரன், வருணன், அஸ்வினி தேவதைகள் ஆகியோர் வசிக்கின்றனர்.

 

மேலே 101 நாடிகளின் எண்ணிக்கையைக் கூறியபோது சுஷும்னா நாடியை அதில் ஒன்றாக எடுத்துக்கொண்டு, மற்ற நான்கு நாடிகளில் 24 என கிளைகளைச் சொல்லி, மொத்தம் 101 என்று கூறியிருந்தார். இப்போது சுஷும்னா நாடியின் கிளைகளைப் பற்றி சொல்கிறார்.

 

பொக்களடி3விடி3தொந்தெ3 நாடி3யு

சுக்கத3லெ தா4ராளரூபதி3

ஸிக்கிஹுது நடுதே3ஹதொ3ளகெ3 ஸுஷும்ன நாமத3லி |

ரக்கசரனொள பொக3கொ33தெ33

தி3க்கினொளகெ3 மீரதே3வனு

லெக்கிஸதெ3 மத்தொ3ப்பரனு ஞ்சரிப தே3ஹதொ3ளு ||13

 

பொக்களவிடிது = வயிற்றின் கீழ் பாகத்திலிருந்து

ஒந்தே நாடியு = ஒரே நாடியானது

ஸுக்கதலெ = வக்ரங்கள் இல்லாமல்

தாராளரூபதி = நேராக

நடுதேஹதொளகெ சுஷும்ன நாமதலி = தேகத்தின் நடுவில், சுஷும்னா என்னும் பெயரில்

சிக்கிஹது = இருக்கிறது

ஸமீரதேவனு = வாயுதேவர்

ரக்கசரனு = அசுரர்களை

ஒள்போககுடதெ = உள்ளே நுழையவிடாமல்

மத்தொப்பரனு = மற்றவர்களை

லெக்கிஸதெ = கவனத்தில் கொள்ளாமல்

தேஹதொளு = தேகத்தில்

தஷதிக்கினொளகெ = பத்து திசைகளிலும்

சஞ்சரிப = சஞ்சரிக்கிறான்

 

முந்தைய பத்யங்களில் சொன்னவாறு, வயிற்றின் கீழ் பாகத்திலிருந்து புறப்படும் சுஷும்னா நாடி, எந்தவித சுருளும் இல்லாமல் நேராக தலைவரைக்கும் செல்கிறது. அதில் வாயுதேவர் இருந்துகொண்டு, தேகத்தில் 10 திசைகளிலும் சுற்றியவாறு, அசுரர்களை அந்த நாடிகளின் அருகில் வரவிடாமல், வேறு எவரையும் லட்சியம் செய்யாமல் காப்பாற்றி வருகிறார்.

 

இனிது நாடி3ஷாகெ23ளு ஈ

தனுவினொள கி3ஹவெந்து3 ஏகா

த்மனு த்விப்த1தி1 ஸாவிராத்மகனாகி3 நாடி3யொளு |

வனிதெயிந்தொடகூ3டி3 நாரா

யண தி3வாராத்ரியொளகீ3பரி

வனஜஜாண்டதொ3ளகி2ல ஜீவரொளித்3து3 மோதி3சுவ ||14

 

இனிது = இந்த விதமாக

நாடிஷாகெகளு = நாடியின் கிளைகள்

ஈ தனுவினொளகெ = தேகத்தில்

இஹவெந்து = இருக்கிறதென்று

ஏகாத்மனு = தன் அனந்தானந்த ரூபங்களில் வேறுபாடு இல்லை ஆகையால் ஏகாத்மன் என்று அழைக்கப்படும்

நாராயண = ஸ்ரீ நாராயணன்

த்விஸப்ததி ஸாவிராத்மகனாகி = 72,000 ரூபங்களை தரித்து

வனிதெயிந்தொடகூடி = அவ்வளவு ரூபங்களைக் கொண்ட லட்சுமிதேவியருடன்

திவாராத்ரியொளகெ = பகல் இரவுகளில்

ஈபரி = இப்படியாக

வனஜ ஜாண்டதொளு = பிரம்மாண்டத்தில்

அகிளஜீவரொளு = எல்லா பிராணிகளில்

இத்து = இருந்து

மோஹிஸுவ = தான் இருப்பதை அறிவித்துக் கொள்ளாமல் மக்களிடம் அன்பு செய்கிறான் என்றும் அறிந்து உபாசனை செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

 

இந்த விதமாக தேகத்தில் நாடியின் கிளைகள் மொத்தம் 72,101 இருக்கிறதென்றும், இந்த நாடிகளில், பரமாத்மன் ஒருவனே ஆனாலும் 72,101 ரூபங்களை தரித்து இருப்பதைப் போல 72,101 ரூபங்களை லட்சுமிதேவியும் தரித்து, அவனுடன், பகலும் இரவும், இந்த பிரம்மாண்டத்தில் இருக்கும் அனைத்து பிராணிகளில் இருந்து, மக்களை அன்பு செய்கிறார்கள் என்று அறிந்து உபாசனை செய்யவேண்டும் என்பது கருத்து.

 

தி3னதி3னதி3 வர்த்தி2ஸுவ குமுதா3

ப்1தன மயூக23 ஸொ333தலோ

சனவலோகி2ஸி மோத3333ல்லனெ நிரந்தரதி3 |

குனரிகீ3 சுக2தாsம்ருதத3 போ4

ஜனத3 ஸு2 தொரகுவுதெ3 லகுமி

னோஹரன த்கு3ணவ கீர்த்திப ப4குதக3ல்லத3லெ ||15

 

தினதினதி = தினந்தோறும்

வர்த்திசுவ = சஞ்சரிக்கும்

குமுதாப்தன = சந்திரனின்

மயூகத = கிரணங்களின்

சொபக = அழகினை

கதலோசன = குருடன்

அவலோகிஸி = பார்த்து

நிரந்தரதி = எப்போதும்

மோத படபல்லனெ = மகிழ முடியுமா?

அதைப்போல,

லகுமி மனோஹரன = லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மனின்

ஸத்குணவ = நற்குணங்களை (சரித்திரங்களை)

கீர்த்திப = கொண்டாடும் பக்தர்கள்

குனரகெ = ஹீன புத்தியுடனான, பகவத் த்வேஷம், பகவத் பக்தரின் த்வேஷாதிகளை வளர்க்கும் மனிதர்களுக்கு

ஈ சுகதாம்ருதத = இந்த சிறந்த ஹரிகதை என்னும் அமிர்தம், உணவின் சுகம் கிடைக்குமா? என்றும் கிடைக்காது என்று அர்த்தம்.

 

தினந்தோறும் வளரும் சந்திரனின் கிரணங்களின் அழகினைப் பார்த்து மகிழவேண்டுமெனில் கண் இருப்பவர்களுக்கு சாத்தியமே தவிர, குருடனுக்கு அது சாத்தியமில்லை. அதுபோலவே இந்த ஹரிகதை என்னும் மிகச்சிறந்த கிரந்தத்தைக் குடிக்க பகவத் பக்தர்கள் அல்லாது, ஞானசூன்யர்களாகி, பகவத் த்வேஷ, பகவத் பக்தர்களின் த்வேஷம் ஆகியவற்றை செய்யும் கீழ்புத்தி மனிதர்களுக்கு இந்த சுகம் கிடைக்குமா? என்றும் கிடைக்காது. 

No comments:

Post a Comment