ஸூஜி கரத3லி பிடி3து3 ஸமரவ
நா ஜயிஸுவெனு எம்ப3 நரன
ந்தீ3 ஜக3த்தினொளுள்ள அஞ்ஞானிக3ளு நித்யத3லி |
ஸ்ரீஜகத்பதி சரணயுக3ள ஸ
ரோஜ ப4க்தி ஞானபூர்வக
பூஜிஸதெ3 த3ர்மார்த்த4 காமவ ப3யஸி ப3ளலுவரு ||16
சூஜி = ஒரு குண்டூசியை
கரதலி பிடிது = கையில் ஏந்தி
ஸமரவ = போர்க்களத்தில் எதிரிகளை
நா ஜயிஸுவேனு = நான் வெல்வேன்
எம்ப = என்று சொல்லும்
நரனந்தெ = மனிதனைப் போல
ஜகத்தினொளுள்ள = இந்த உலகத்தில் உள்ள
அஞ்ஞானிகளு = அஞ்ஞானிகள்
நித்யதலி = தினந்தோறும்
ஸ்ரீஜகத்பதி = ஜகத்பதியான பரமாத்மனின்
சரணயுகள ஸரோஜ = பாதபத்ம என்னும் கமலங்களை
பக்தி ஞான பூர்வக பூஜிஸதெ = பக்தி ஞானத்துடன்
பூஜிக்காமல்
தர்மார்த்த காமவ = தர்ம, அர்த்த, காம என்னும் புருஷார்த்தங்களை
பயஸி = வேண்டி
பளலுவரு = கஷ்டப்படுவார்கள்.
போர்க்களத்தில் வேல், வாள் ஆகியவற்றை ஏந்தி போருக்கு நின்றிருக்கும் எதிரிகளை, நான் ஒரு குண்டூசி வைத்துக்கொண்டே வென்றுவிடுவேன் என்று சொன்னால், அது எப்படி சாத்தியமாகாதோ அது போலவே, பகவந்தனிடம் பக்தி, ஞானம் இல்லாமல், பரமாத்மனை பூஜிக்காமல், எனக்கு தர்ம அர்த்த காம ஆகிய
புருஷார்த்தங்கள் வேண்டும் என்று வேண்டும் அஞ்ஞானிகளின் காரியமும் வேண்டிய
பலன்களைக் கொடுக்காது. அதாவது, குண்டூசியால் எதிரிகளை வெல்ல
முடியாது;
பரமாத்மனிடம் பக்தி இல்லாதவனுக்கு புருஷார்த்தங்கள் கிடைக்காது என்பது
கருத்து.
ஷகடப4ஞ்சன ஸகலஜீவர
நிகடகனு தானாகி3 லோககெ3
ப்ரகடனாக3தெ3 ஸகலகர்மவ மாடி3 மாடி3ஸுத |
அகுடிலாத்மக ப4குதஜனரிகெ3
ஸுக2த3னெனிஸுவ ஸர்வகாலதி3
அகடகட ஈதன மஹா மஹிமெக3ளிகே3 னெம்பே3 ||17
ஷகடபஞ்சன = வண்டியில் ரூபத்தில் வந்த ஷகடாசுரனைக்
கொன்ற ஸ்ரீகிருஷ்ணரூபி ஸ்ரீஹரி
சகலஜீவர நிகடகனு = அனைத்து ஜீவர்களின் பிம்பரூபியாக
அவர்களின் அருகிலேயே இருக்கிறான்
தானாகி = தானாகவே
லோககெ = உலகத்திற்கு
ப்ரகடனாகதே = தன்னை காட்டிக்கொள்ளாமல்
சகலகர்மவ மாடி மாடிசுத = அனைத்து செயல்களையும் செய்து, செய்வித்து
அகுடிலாத்மக = தோஷங்கள் அற்ற பரமாத்மன்
பகுதஜனரிகெ = பக்தர்களுக்கு
சர்வகாலதி = எப்போதும்
சுகதனெனிஸுவ = சுகம் கொடுப்பவன் என்று அழைத்துக்
கொள்கிறான்
அகடகட = என்ன ஆச்சரியம்?
ஈதன மஹா மஹிமெகளு = இவனின் மகா மகிமைகளை
ஏனெம்பே? = நான் என்னவென்று சொல்வேன்? (சொல்லி முடிக்கவே முடியாது என்று அர்த்தம்).
ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில், மூன்று மாதங்கள் குழந்தையாக இருந்தபோது, யசோதை, ஸ்ரீகிருஷ்ணனை முதல்முறையாக கோயிலுக்கு அழைத்துப் போகும் சந்தர்ப்பத்தில், ஒரு வண்டியின் கீழ் அவனை படுக்கவைத்து, தான் வந்தவர்களுக்கு உபசாரம் செய்து கொண்டிருக்கும்போது, ஷகடாக்ஷ என்னும் ஒரு அசுரன், அதே வண்டியின் ரூபமாக வந்து, கிருஷ்ணனை கொல்ல முயன்றான். இதை அறிந்த ஸ்ரீகிருஷ்ணன், தாய் தன்னை தூக்கிக் கொள்ளவில்லை என்று அழுவதைப்போல, அந்த வண்டியின் சக்கரத்தை தன் காலால் எட்டி உதைக்க, அந்த வண்டி பொடிப்பொடியாக நொறுங்கி, அந்த தைத்யன் இறந்தான் என்று பாகவத
10ம் ஸ்கந்தத்தில் பார்க்கிறோம்.
ஆகையால், தாசராயர் இங்கு ஷகடபஞ்சன என்றார்.
அதாவது,
வண்டியை உதைத்தவன் என்று பொருள். இத்தகைய ஸ்ரீபரமாத்மன், அனைத்து பிராணிகளின் அருகிலும் இருந்து, அவர்களுக்குத் தெரியாதவாறு, அனைத்து செயல்களையும் தான் செய்து, செய்வித்து, தோஷங்கள் அற்றவனான ஸ்ரீஹரி, அனைத்து காலங்களிலும்
பக்தர்களுக்கு சுகங்களைக் கொடுக்கிறான். ஆஹா. இவனின் கருணையை, மகா மகிமையை நான் என்னவென்று கொண்டாடுவேன்? அதை சொல்வதற்கு சாத்தியமே இல்லை என்பதை ‘அகடகட’ என்ற சொல்லின் மூலம் சொல்கிறார்.
ஸ்ரீலகுமிவல்லப4னு வைகு
ண்டாலயதி ப்ரணவ ப்ரக்ருதி கீ3
லாலஜாஸன முக்ய சேதனரொளகெ3 நெலெஸித்து3 |
மூல காரண அம்ஷினாமதி3
லீலெகை3ஸுத தோரிகொள்ளதெ3
பாலினொளு க்4ருதவித்த தெரத3ந்திப்ப த்ரிஸ்த2ளதி3 ||18
ஸ்ரீலகுமிவல்லபனு = லட்சுமிபதியான ஸ்ரீஹரி
வைகுண்டாலயதி = வைகுண்ட என்னும் தன் வீட்டில்
ப்ரணவ = அனைத்து வேதங்களுக்கும் மூலமான ப்ரணவ என்றால்
ஓம்காரத்திலும்
ப்ரக்ருதி = வேதமானியான சேதன ப்ரக்ருதி மற்றும் ஜட ப்ரக்ருதிகளிலும்
கீலாலஜ = தண்ணீரில் மலர்ந்த தாமரை
ஆஸன = ஆசனமாகக் கொண்ட பிரம்மன்
முக்ய = முதலான
சேதனரொளகெ = சேதனர்களில்
நெலஸித்து = நிலைத்திருந்து
மூல = மூலரூபியாகவும் அந்தந்த பெயர்களிலும்
தோரிகொள்ளதெ = தன்னை காட்டிக் கொள்ளாமல்
லேலெகைஸுத = செயல்களை செய்தவாறு
பாலினொளு க்ருதவித்த தெரதந்திப்ப = பாலைக் காய்ச்சி, உரை ஊற்றினால் வரும் தயிரைக் கடைந்தால் வரும் வெண்ணையைக் காய்ச்சினால் வரும்
நெய்யைப் போல இருக்கிறான்
த்ரிஸ்தலதி = மூன்று இடங்களிலும்
இப்ப = இருக்கிறான்
ஸ்ரீலட்சுமிபதியான ஸ்ரீமன் நாராயணன், மூலரூபத்தினால் சர்வவேதாத்மகமான ப்ரணவ, அதாவது, ஓம்காரத்தில் வசிக்கிறான். லட்சுமிதேவிக்கு ப்ரக்ருதி என்று பெயர். பாகவத
ஸ்ருதி கீதா வியாக்யானத்தில்:
ஸ்ரீர்பூமிரிதி ரூபாக்யாம் ப்ரக்ருதிர் விஷ்ணுனாஸஹ |
சேதேஸ்ருதிஸ்ச ரூபேண ஸ்தௌதிப்ரம்ம லயேஹரிம் ||
என்னும் வாக்கியத்தில் ப்ரக்ருதி; ஸ்ரீ,
பூ என்னும் இரு ரூபங்களால் பரமாத்மனுடன் சயனம் செய்கிறாள். துர்கா நாமக
ப்ரக்ருதி வேத ஸ்வரூபளாகி பரமாத்மனை ஸ்துதிக்கிறாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த ப்ரக்ருதியில் சேதன ப்ரக்ருதி, ஜட ப்ரக்ருதி என்று இரு விதங்கள்
உண்டு. ஜட ஸ்ருஷ்டிக்கு ஜட ப்ரக்ருதி. சேதனர்களான பிரம்மாதிகளுக்கு சேதன ப்ரக்ருதி
காரணமாகிறது. இந்த ஜட, சேதன ப்ரக்ருதிகளில் காரண ரூபத்தினால் பரமாத்மன் இருக்கிறான்.
* பிரபஞ்சத்தின் ஸ்ருஷ்டிக்கு காரணம், ப்ரக்ருதி ஆகையால், அங்கு காரண ரூபத்தினாலும்;
* ப்ரக்ருதி நாமகனாக பிரம்மாதி அனைத்து
பிராணிகளிலும் பின்னாம்ஷ ரூபனாக வசிக்கிறான்.
அம்ஷ ரூபங்கள் இரு விதங்களாக இருக்கின்றன. அவை
ஸ்வாம்ஷ &
பின்னாம்ஷ.
ஸ்வாம்ஷ: பரமாத்மனே அவதாரம் செய்திருக்கும் ராம
கிருஷ்ணாதி ரூபங்கள்.
பின்னாம்ஷ: இதர ஜீவர்களில், அவர்களிடமிருந்து வேறுபட்டு அந்த தேகத்தில் இருந்து காரியங்களை செய்விக்கும்
ரூபம். இதற்கு வியாப்தி ரூபம் என்றும் பெயர் உண்டு.
இப்படி பரமாத்மன், மூன்று இடங்களில்; அதாவது,
* வைகுண்டத்தில் ஓம்கார பிரதிபாத்ய
ரூபம் 1,
* ப்ரக்ருதி காரணரூப 1,
* பிரம்மாதி அனைத்து ஜீவர்களில் அம்ச
ரூபம் 1.
இப்படி மூன்றுவித ரூபங்களால் மூன்று இடங்களில்
வசிக்கிறான். இந்த இடங்களில் பரமாத்மன் இருந்து, யாருக்கும் தெரியாமல், பாலுக்குள் நெய் இருப்பதைப் போல
இருக்கிறான். பாலைப் பார்த்தால் நெய் தெரிகிறதா? இல்லை. பாலைக் காய்ச்சி, பிறகு அதில் சிறிதளவு உரை மோர்
ஊற்றி அதை தயிர் ஆக்க வேண்டும். பிறகு அந்த தயிரை கடைய வேண்டும். அங்கு வெண்ணெய்
வருகிறது. அந்த வெண்ணெயைக் காய்ச்சினால் நெய் வருகிறது. இங்கு எப்படி பால், பாலிலிருந்து தயிர், தயிரிலிருந்து வெண்ணெய், வெண்ணெயிலிருந்து நெய் வந்து, அதை பார்க்கிறோமோ, அப்படியே மேற்சொன்ன மூன்று இடங்களில் பகவந்தனை பார்க்க வேண்டும்.
வேதம், பாலைப் போல இருக்கிறது. அதில்
நெய்யைப் போல இருக்கும் பகவத் ரூபங்களை பார்ப்பது எப்படி? பாலைக் காய்ச்சி அதில் உரை மோர் ஊற்றினால், தயிர் ஆகும் என்னும் ஞானம் நமக்கு வேண்டுமல்லவா?
சதுர்வேத்யபியோவிப்ரோ வாஸுதேவம் நவிந்ததி |
வேதபாவ பராக்ராந்த: ஸவைப்ராம்ஹண கார்தப: ||
என்னும் பிரமாண வாக்கியத்திற்கேற்ப, நான்கு வேதங்களையும் அத்யயனம் செய்தாலும், வேத-பிரதிபாத்யன் பரமாத்மனே என்னும் ஞானம் இல்லாதவன், வேதம் என்னும் பாரத்தை சுமக்கும் கழுதை என்று சொல்கிறார். வேதம் என்னும் பாலை, தயிர் ஆக்கும் வழியை, குருகளிடமிருந்து அறிந்து, ஞான-அக்னியில் இந்த பாலைக் காய்ச்சி, ஓம்காரம் என்னும் உரைமோரை
ஊற்றினால், அனைத்து வேத அர்த்தங்களும் அந்த ஓம்காரத்தில் அடங்கி, பால் எப்படி தயிராக மாறுகிறதோ, அப்படியே, வேதம் அனைத்தும் ஓம்கார ஸ்வரூபமாக தயிராகிறது.
அடுத்து, இதனை காய்ச்ச வேண்டும். அ-கார, உ-கார, ம-காரங்களின் கூட்டான ஓம் என்னும் எழுத்தினை சிந்தித்து, மூச்சை அடக்கி, யோகா பயிற்சி செய்து, அபரோக்ஷத்தில் பரமாத்மனை
காணவேண்டும் என்று பாகவத 2ம் ஸ்கந்தத்தில்:
அப்யஸேன்மனஸாஷுத்தம் த்ரிவ்ருத் ப்ராம்ஹணாக்ஷரம்
பரம் |
மனோயச்சேஜ்ஜித ஸ்வாஸோ பிரம்மபீஜ மனுஸ்மர ||
நியச்சேத்விஷயேப்யோ அக்ஷான்மனஸா புத்திஸாரதி: ||
யோகி முதலில் ஒரு ஆசனத்தில் அமர்கிறான். அடுத்து, மூச்சை அடக்கி, மனதை ஸ்திரமாக நிறுத்தி, த்ரிவ்ருக்; அதாவது, அ,
உ,
ம என்னும், பிரம்மாக்ஷரம் என்னும் ஓம்காரத்தை பயிற்சி செய்ய வேண்டும். அதாவது, ஜெபிக்க வேண்டும் என்று பொருள். பிறகு தியானம் செய்ய வேண்டும். தியானம்
செய்யவேண்டுமெனில், மனம் என்னும் லகானைப் பயன்படுத்தி, புத்தி என்னும் சாரதியால், இந்திரியங்கள் என்னும் குதிரைகளை, தன் வசப்படுத்திக் கொள்ளவேண்டும்.
அதன்பிறகு, பகவத்ரூபங்களை தியானிக்க வேண்டும்.
ஆகையால், பிரம்மபீஜமான ஓம்காரம் எனும் தயிரை, யோகாப்பியாசத்தால் கடைந்து, வெண்ணெய் எடுக்க வேண்டும்.
வெண்ணெய் என்பது வாஸனாத்மகமான அபரோக்ஷம் ஆகும். சாதாரணமாக பிரதிமைகளை பூஜித்து, புஷ்பம், துளசி, நைவேத்யாதிகளை வைத்து எப்படி பூஜிக்கிறோமோ, அவையே அதே உருவமாக, நாம் கண் மூடினாலும் நம் அபரோக்ஷத்தில்
காண்கிறோம். இதற்கு ‘வாஸனா-அபரோக்ஷம்’ என்று பெயர். இது வெண்ணெயைப் போல இருக்கிறது.
இப்படியாக, தினந்தோறும் பகவத் ஸ்வரூபங்களை
தியானித்தவாறு ஞானாக்னியால், வெண்ணெய் எப்படி நெய் ஆகிறதோ, அதன்படியே பகவத் அபரோக்ஷம் ஆகிறது. அந்த அபரோக்ஷத்தில், நம் யோக்யதைக்கேற்ப மின்னலைப் போலவோ, சந்திரனைப் போலவோ, சூரியனைப் போலவோ ஒளிபொருந்திய பகவத் ரூபத்தை பார்க்க முடியும். இப்படி,
மூலரூபத்தைப் பார்க்க வேண்டுமென்றாலும்,
காரண ரூபத்தைப் பார்க்க வேண்டுமென்றாலும்,
அம்ஷ ரூபத்தைப் பார்க்க வேண்டுமென்றாலும்
இப்படியான அபரோக்ஷத்தினாலேயே பார்க்க வேண்டும். இந்த
அபரோக்ஷம் இல்லாதவன், பாலில் நெய் இருந்தாலும், அதை நாம் எப்படி பார்ப்பதில்லையோ, அப்படியே வியாப்தனான பரமாத்மனை பார்க்க மாட்டார்கள்.
மூருயுக3தலி மூலரூபனு
ஸூரிகள ஸந்தெயிஸி தி3திஜ கு
மாரரனு ஸம்ஹரிஸி த4ர்மவனுளுஹ பே3கெந்து3 |
காருணிக பூ4மியொளு நிஜபரி
வார ஸஹிதவதரிஸி ப3ஹுவித3
தோரித3னு நரவத் ப்ரவ்ருத்திய ஸகல சேதனகெ ||19
காருணிக = கருணாளுவான
மூலரூபனு = மூலரூபியான ஸ்ரீபத்பனாபன்
ஸூரிகள = ஞானிகளான தேவதைகளை
ஸந்தெயிஸி = சமாதானம் செய்து
திதிஜ குமாரகர = திதி மக்களான தைத்யர்கள் -
திதிஜர்கள். அவர்களின் அம்சத்தினால் பூமியில் பிறந்தவர்கள். ராவண, ஜராசந்த, கம்ஸ முதலானவர்கள் என்று பொருள். இத்தகைய தைத்ய ராஜர்களைக்
சம்ஹரித்து = கொன்று,
தர்மவனு = தர்மத்தை
உருளபேகெந்து = காப்பாற்ற வேண்டும்.
மூரு யுகதலி = க்ருத, த்ரேதா, த்வாபர யுகங்களில்
நிஜ பரவாரஸஹித = தன் பக்தரான வாயுதேவரே முதலான
தேவதாகணத்துடன் அவதரித்து
பஹுவித = பல விதமாக
நரவத்ப்ரவ்ருத்திய = மனுஷ்யனைப் போல பிறத்தல், வளர்தல், சுகதுக்கங்களை அனுபவித்தல், இறத்தல் ஆகியவற்றை
சகல சேதனகெ = அனைத்து ஜீவர்களுக்கும்
தோருவனு = கொடுக்கிறான்.
ஏதன்னானாவதாராணாம் நிதானம் பீஜமத்யயம் |
யஸ்யாம்ஷாம்ஷேன ஸ்ருஜ்யந்தீ தேவதிர்யம் நராதய: || (1-2-3)
முதல் ஸ்கந்தத்தின் வாக்கியத்தின்படி, பத்பனாப ரூபமே மூலரூபம் என்றும், இந்த மூல ரூபத்திலிருந்தே ஸ்வாம்ஷ
பின்னம்ஷங்கள் அனைத்தும் பிறக்கிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இத்தகைய
பரமாத்மன் :
யதாயதாஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத |
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் ||
என்னும் கீதா வாக்கியத்தின்படி, எந்தெந்த காலங்களில் புண்ணியங்கள் குறைகின்றதோ, அந்தந்த காலங்களில் பரமாத்மன் அவதரிக்கிறான். கலியுகமானது வெறும்
பாப-யுகமானதால், இந்த யுகத்தில் பரமாத்மனின் அவதாரம் இல்லை. ஆகையால், மூன்று யுகத்தில் என்று சொல்கிறார்.
கிருத யுகத்தில் 4 அவதாரங்கள்.
த்ரேதா யுகத்தில் 3 அவதாரங்கள்
த்வாபர யுகத்தில் 2 அவதாரங்கள்
கலியுகத்தின் இறுதியில், கலியுக க்ருதயுக சந்தியில் 1 அவதாரம். ஆக, மொத்தம் 10 அவதாரங்கள்.
இந்த ஒவ்வொரு அவதாரமும், தர்மத்தை வளர்ப்பதற்காக, தேவதைகளின் பிரார்த்தனைக்கேற்ப, தைத்யர்களைக் கொல்வதற்காக செய்த அவதாரங்களாகும்.
தைனந்தின பிரளயத்தில், பிரம்மதேவர் இரவில் படுத்திருக்கும்போது, அவரின் முகத்திலிருந்து வெளிவந்த வேதங்களை; அதாவது வேதபுருஷனை ஹயக்ரீவ என்னும் தைத்யன் அபகரித்தான். பிரம்மதேவரால்
வணங்கப்பட்டு, மத்ஸ்யாவதாரம் எடுத்து ஹயக்ரீவாசுரனைக் கொன்று பிரம்மதேவருக்கு வேதங்களை
திருப்பிக் கொடுத்தான்.
தைத்யர்கள் தேவதா-ராஜ்ஜியத்தை அபகரித்தபோது, பரமாத்மன், தேவதைகளால் வணங்கப்பட்டு, அவர்களுக்கு உதவியாக இருந்து, பாற்கடலைக் கடைந்தபோது, மந்தர மலை, நீரில் மூழ்க, கூர்மாவதாரத்தை எடுத்து அந்த மலையைத் தாங்கினான்.
ஹிரண்யாக்ஷ என்னும் தைத்யன் பூமியை பாதாளத்திற்கு
எடுத்துப் போகையில், தேவதைகளால் வணங்கப்பட்டு, வராக அவதாரம் எடுத்து, ஹிரண்யாக்ஷனைக் கொன்று, பூமியை மேலே திரும்ப எடுத்து
வந்தான்.
பிரம்மதேவரின் வரத்தினால், ஹிரண்யகசிபு, யாராலும் வெல்லப்பட முடியாதவனானபோது, தேவதைகளை துன்புறுத்தியும், தன் சிறந்த பக்தனான பிரகலாதனைக் கொல்ல முயன்றபோதும், அனைத்து தேவதைகளால் வணங்கப்பட்டு, ஸ்ரீஹரி, நரசிம்ம ரூபத்தினால் கம்பத்திலிருந்து வெளிவந்து, அந்த ஹிரண்யகசிபுவைக் கொன்று, பிரகலாதனையும், அனைத்து தேவதைகளையும், அருளினான்.
இப்படி க்ருத யுகத்தில் நான்கு அவதாரங்கள் ஆயின.
பலி சக்ரவர்த்தி, தேவேந்திரனின் ராஜ்ஜியத்தை அபகரித்தபோது, ஸ்ரீஹரி, அதிதியால் பிரார்த்திக்கப்பட்டு, வாமனாவதாரம் எடுத்து, பலியிடம் மூன்றடி நிலம் தானம் கேட்டு, இரண்டு அடியில் பிரம்மாண்டத்தையே அளந்து, இந்திரனுக்கு அவருடைய ராஜ்ஜியத்தை திருப்பிக் கொடுத்தான்.
கார்த்தவீர்யார்ஜுனன் தன் 1000 தோள்களால், ஜமதக்னி ரிஷிகளின் காமதேனுவை அபகரிக்க, பரமாத்மன் பரசுராம அவதாரத்தினால் அவனைக் கொன்றார். அதற்கு எதிர்வினையாக, கார்த்தவீர்யனின் மக்கள் ஜமதக்னி ரிஷிகளை கொன்றனர். அதே கோபத்துடன், ஸ்ரீபரசுராமன், 21 முறை துஷ்ட ப்ரக்ருதியை சம்ஹரித்து குருக்ஷேத்திரத்தில் ஸ்மந்த பஞ்சக
என்னும் க்ஷேத்திரத்தை நிறுவினார்.
ராவணாதி அசுரர்களின் தொந்தரவுகளை தாங்கமுடியாமல்
தேவதைகள் பரமாத்மனை பிரார்த்திக்க, பரமாத்மன், தசரதனின் மகனாக ராமனாக அவதரித்து, தன் பக்தரான தேவதைகள் அனைவரும்
கபிகளாக / கரடிகளாக அவதரிக்க, அவர்களுடன் ராவணாதி அசுரர்களைக்
கொன்றான்.
இந்த மூன்று அவதாரங்களும் த்ரேதா யுகத்தில்
நடைபெற்றன.
தைத்ய ராஜர்களின் பாரத்தை தாங்க முடியாத பூமிதேவி, பரமாத்மனை வேண்ட, பரமாத்மன் கிருஷ்ணாவதாரத்தை எடுத்தான். அப்போது வாயுதேவர், சேஷதேவர் ஆகியோர் பீமசேன, பலராம ரூபங்களால் அவதரித்தனர்.
ஜராசந்த,
துர்யோதன, கம்ஸ முதலான அனைத்து தைத்யர்களையும் கொன்று ஸ்ரீகிருஷ்ணன் பூ-பாரத்தைக்
குறைத்தான்.
தைத்யர்கள் பலஹீனர்களாக வேறு வழியில்லாமல், பரமாத்மனையே கதியென்று வேண்டும் காலம் வர, அயோக்கியர்களான தைத்யர், இது தமக்கு யோக்யமல்ல என்று
சிந்திக்க, த்வாபர கலியுக சந்தியில் ஸ்ரீபரமாத்மன் புத்தாவதாரத்தை எடுத்து, தைத்யர்களை ஏமாற்றி, அவரின் யோக்யதைக்கேற்ப, அவர்களுக்கு தமஸ்-சாதனமான மதத்தை போதித்தான்.
கலியுக-க்ருதயுக சந்தியில், பரமாத்மன் கல்கி அவதாரம் செய்து துஷ்ட ராஜர்களைக் கொன்று, க்ருதயுகத்தின் தர்மத்தை நிலைநாட்டினான்.
இவை மட்டுமல்லாமல், தத்த,
கபில,
வியாஸ அவதாரங்களால் மக்களுக்கு ஞானோதயத்தைக் கொடுத்து, தர்மத்தை நிலைநாட்டினார். ஒவ்வொரு அவதாரங்களிலும் தேச-காலத்திற்கேற்ப, பூமியில் மனிதர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே தானும் மனிதனைப் போல
அவதரித்து ‘வித்தவன் மக்தவச்சைவ கேஷபோவே தனார்த்தவத்’ ஆகிய நிர்ணய வாக்கியத்தின்படி, அஞ்ஞானியைப் போலவும், திட்டு வாங்குவதைப் போலவும், வேதனையால் கவலைப் படுபவனைப்
போலவும் மக்களை மயக்கியிருப்பார்.
இந்த அபிப்பிராயத்தையே தாசராயர் சுருக்கமாக ஒரே
பதத்தில் சொல்லியிருக்கிறார்.
காரணாஹ்வய ப்ரக்ருதியொளகி3
த்தா3ரதி3க ஹதி3னெண்டு த1த்வவ
தா ரசிஸி தத்3ரூப தன்னாமங்க3ளனெ த4ரிஸி |
நீரஜ ப4வாண்ட3வனு நிர்மிஸி
காருணிக கார்யாக்2ய ரூபதி3
தோருவனு ஸஹஜாஹிதாசலக3ளலி ப்ரதிதி3னதி3 ||20
காரணாஹ்வய = காரண நாமகனான ஸ்ரீபரமாத்மன்
ப்ரக்ருதியொளகித்து = காரண ரூபளான ப்ரக்ருதியில்
இருந்து
ஆரதிக ஹதினெண்டு = 24 தத்வங்கள்
தா ரசிஸி = தான் இயற்றி
தத்ரூப தன்னாமங்களனெ தரிஸி = அந்த உருவம், பெயர்களையே தான் ஏற்று
நீரஜபவாண்டவனு = பிரம்மாண்டத்தை
நிர்மிஸி = படைத்து
காருணிக = கருணாளுவான ஸ்ரீஹரி
கார்யாக்ய ரூபதி = கார்ய என்று புகழ்பெற்ற
ரூபத்தினால்
ஸஹஜ = சாலிகிராமத்தை
அஹித = ப்ரதிமைகள்
அசலகளலி = மலைகளில்
ப்ரதினதி = தினந்தோறும்
தோருவனு = இருக்கிறான்.
காரணரூபளான ப்ரக்ருதியில், பரமாத்மன் காரணரூபமாக இருந்து, அவ்யக்த, அஹங்கார, புத்தி, மனஸ்,
ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, பஞ்சபூதங்கள் 5, தன்மாத்ரா 5, என 24 தத்வங்களை படைத்தான். அந்தந்த ரூபமாக, அந்தந்த பெயர்களில் அவற்றில் இருந்து, கார்ய ரூபமான பிரம்மாண்டத்திலும், ஸாலிக்ராம ரூபங்களிலும், பிரதிமா ரூபங்களிலும், மலைகளில் மலையின் ரூபமாகவும்
மக்களுக்கு தரிசனம் அளித்தான். ஒவ்வொரு பதார்த்தத்திற்கும் காரண, கார்ய, கர்த்தா என்று மூன்று உண்டு.
பானை கார்யம். மண் காரணம். குயவன் கர்த்தா.
இதைப்போலவே,
ஜகத் கர்த்தா, ஸ்ரீபரமாத்மன். ப்ரக்ருதி, காரணள். ஜகத் கார்யம்.
இப்படி, கர்த்தா, காரண,
கார்ய என அனைத்தும் தானே ஆகி, கார்ய காரணங்களில், தானே கார்ய ரூபத்தாலும், காரண ரூபத்தாலும்
நிலைத்திருக்கிறான் என்று அர்த்தம்.
இங்கு, காரணரூபியான பரமாத்மன் காரண
ப்ரக்ருதியில் இருந்து, 24 தத்வங்களை படைத்து, அவற்றில் நிலைத்திருந்து, பிரம்மாண்டத்தைப் படைத்தான் என்று
சொல்கிறார். பாகவத 2ம் ஸ்கந்தம் 5ம் அத்தியாயத்தில் 18ம் ஸ்லோகமான ‘ஸத்வம் ரஜஸ்தம இதி நிர்குணாஸ்ய குணத்ரய:’ இங்கிருந்து, இந்த ப்ரகரணத்தை மிகவும் விளக்கமாக சொல்லியிருப்பர். மேலும் 3ம் ஸ்கந்தம், 6ம் அத்தியாயத்திலும் இதே விஷயத்தை விளக்கியிருப்பர். அதன் சுருக்கத்தை இங்கு
சொல்கிறோம்.
* காரணாத்மகளான பிரக்ருதியிடமிருந்து
முதலில் மஹத் தத்வம் பிறந்தது.
* அதிலிருந்து அஹங்கார தத்வம்
பிறந்தது.
* அந்த அஹங்காரமே வைகாரிக, தைஜஸ,
தாமஸ என்று மூன்றாக இருக்கிறது.
* தாமஸ அஹங்காரத்திலிருந்து
ஷப்த-குணத்தை பிரதிபலிக்கும் ஆகாஷ தத்வம் பிறந்தது.
* ஆகாஷ தத்வத்திலிருந்து ஸ்பர்ஷ
குணத்தைக் கொண்ட வாயுதத்வம் பிறந்தது.
* அந்த வாயுதத்வத்திலிருந்து ரூப
குணத்தைக் கொண்ட தேஜஸ் தத்வம் பிறந்தது.
* அதிலிருந்து, ரஸ குணத்தைக் கொண்ட உதக தத்வம் பிறந்தது.
* அதிலிருந்து, கந்த குணத்தைக் கொண்ட ப்ருத்வி தத்வம் பிறந்தது.
இப்படி தாமஸ அஹங்காரத்திலிருந்து 5 மஹபூத தத்வங்கள், பஞ்சதன்மாத்ரா குணங்கள் பிறந்தன.
தேஜஸ் அஹங்காரத்திலிருந்து ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5 என கண், காது முதலான 10 இந்திரியங்களைப் படைத்தான்.
வைகாரிக அஹங்காரத்திலிருந்து மனஸ்ஸை, தத்வாபிமானி தேவதைகளை படைத்தான். பாகவத 3ம் ஸ்கந்தம் 7ம் அத்தியாயத்தில்:
இதிதாஸாம் ஸ்வஷக்தீ நாமஸமேத்யஸ: |
ப்ரஸுப்தலோகதந்த்ராணாம் நிஷம்யகிரமீஷ்வர: ||1
காலஸம்ஞானம் ததாதேவீம்பிப்ரச்சக்தி முருக்ரம: |
த்ரயோவிம்ஷதி தத்வானாம் கணம் யுகபதாவிஷத் ||2
ஸோனுப்ரவிஷ்டோ பகவான்சேஷ்டா ரூபேணதங்கணம் |
பின்னம்ஸம் யோஜயாமாஸ ஸுப்தம்கர்ம ப்ரபோதர்ய ||3
ப்ரபுத்தகர்மாதைவேன த்ரயோவிம்ஷதி கோகண: |
ப்ரேரிதோsஜனயத்ஸ்வாபிர் மாத்ராபிரபி போருஷம்
||4
மஹத்தத்வ 1
அஹங்காரதத்வ 1
பஞ்சபூதங்கள் 5
தன்மாத்ரா குணங்கள் 5
மனஸ 1
ஞானேந்திரியங்கள் 5
கர்மேந்திரியங்கள் 5;
ஆக மொத்தம் 23ம் சேர்ந்து ஒரு ‘தத்வ கணம்’ என்று அழைக்கப்பட்டது.
அவ்யக்த தத்வம் லட்சுமிஸ்வரூபமே ஆகையால், இதில் அது சேரவில்லை. 6ம் அத்தியாயத்தில், இந்த தத்வகுணம், தன்னால் பிரம்மாண்டத்தை படைக்க முடியாமல், பரமாத்மனையே துதித்த விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள். இந்த ஸ்லோகத்தின்
அர்த்தம் என்னவென்றால்:
தன் ஸ்வாதீனத்தில் இருப்பதால், ஷக்தி என்று அழைக்கப்படும் இந்த 23 தத்வங்களின் குணம் ஒன்றுக்கொன்று
சம்பந்தப்படாமல், உலகத்தை படைக்க முடியாமல், தன்னை பிரார்த்திப்பதை அறிந்து, ஸ்வதந்த்ரனான ஸ்ரீபரமாத்மன், தன் சக்தியை தரித்திருக்கும் கால
நாமகளான லட்சுமிதேவியுடன் சேர்ந்து, ஒரே சமயத்தில் 23 தத்வகணத்தில் நுழைந்தான் ||2
ஸ்ரீபரமாத்மன் அந்த கணத்தில் நுழைந்து சேஷ்டா
ரூபத்தினால் ஒருவருக்கொருவர் சம்பந்தப்படாமல் இருக்கும் கர்மங்களைக் கொண்ட
அனைவரையும் சேர்த்து, ஒரே கர்மத்தைக் கொண்டவர்களாக மாற்றினார். அதாவது, 10 பேர் சேர்ந்து ஒரு வேலை செய்யவேண்டுமெனில், அனைவரும் ஒரே மனதுடன் அந்த வேலையை செய்தால் மட்டுமே முடியும். அப்படியில்லாமல், 10 பேர் 10 விதமாக செய்தால், அந்த வேலை முடிவது எப்போது? இப்படி 23 தத்வங்களின் காரியம், 23 வகையாக இருந்தது. ஒரே மார்க்கமாக
இருந்திருக்கவில்லை. பின் பரமாத்மன் அவர்களில் நுழைந்து, இவர்கள் அனைவரின் காரியங்களை ஒரே முகமாக இருக்குமாறு செய்தான். அப்போது
அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்வதற்கு தயாராயினர். ||3
அடுத்து, 23 தத்வங்களின் குணங்கள், தம்மில் நுழைந்த பரமாத்மனின் ஆணைப்படி, தம் அம்சத்தினால் புருஷ ஷப்த வாச்யனான பிரம்மதேவருக்கு சரீரமாக, புருஷ என்னும் பெயருள்ள பிரம்மாண்டத்தைப் படைத்தனர் ||4
என்று சொல்லியிருக்கிறார்கள். இதே அபிப்பிராயத்தையே, தாசராயர் ‘
.. ப்ரக்ருதியொளகி
த்தாரதிக ஹதினெண்டு தத்வவ
தா ரசிஸி தத்ரூப தன்னாமங்களனெ தரிஸி |
நீரஜபவாண்டவனு நிர்மிஸி’
No comments:
Post a Comment