ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, July 16, 2020

31-35 நாடி பிரகரண சந்தி

3னுஜ தி3விஜரொளித்து3 அவரவ

ரனுரிஸி கர்மக3ள மாள்பனு

ஜனன மரணாத்யகி2ல தோ3ஷவிதூ3ர எம்மொடனெ

ஜனிஸுவனு ஜீவிஸும்ர

க்‌ஷணெய மாடு3வனெல்ல காலதி3

4னவ காய்தி3ர்பனந்த நிமித்த பா4ந்த3வனு ||31

 

தனுஜ திவிஜரொளித்து = தைத்யர்களிலும், தேவதைகளிலும் இருந்து

அவரவரனு = அவர்களை

அனுசரிஸி = அனுசரித்து

கர்மகள மாள்பனு = செயல்களை செய்கிறான்

ஜனன மரணாத்யகில தோஷவிதூர = பிறப்பு, இறப்பு ஆகிய தோஷங்கள் அற்றவன்

எம்மொடனெ = நாம் பிறக்கும்போது பிறக்கிறான்

ஜீவிசுவ = நாம் வாழும்போது நம்மில் இருந்து வளர்ந்து வருகிறான்

சம்ரக்‌ஷணெய மாடுவனு = நம்மைக் காக்கிறான்

எல்ல காலதி = அனைத்து காலங்களிலும்

தனவ காய்திஹ சர்ப்பனந்த = புதையலைக் காக்கும் பாம்பினைப் போல

அநிமித்த பாந்தவனு = எவ்வித எதிர்பார்ப்புகளும் (பிரதிபலனும்) எதிர்பார்க்காத நண்பனைப் போன்றவன்.

 

ஸ்ரீபரமாத்மன், தேவதைகளில் இருந்து அவர் செய்யும் பகவத்பக்தி, ஸ்தோத்திர, பூஜை ஆகியவற்றை, அவர்களுக்கேற்ப செய்து செய்விக்கிறான். தைத்யர்களில் இருந்து, தன்னில் த்வேஷத்தை, தேவதா த்வேஷத்தை, தமஸ்ஸிற்கு காரணமாகும் காரியங்களை, அவர்களுக்கேற்ப செய்து செய்விக்கிறான். பரமாத்மனுக்கு பிறப்பு, இறப்பு தோஷங்கள் இல்லை என்றாலும், ஜீவர்கள் கர்ப்பத்தில் நுழைந்து, பூமியில் பிறக்கும்போது தானும் பிறக்கிறான். அவர்கள் வளரும்போது தானும் வளர்கிறான்.

 

புதையலைக் காக்கும் சர்ப்பமானது எப்படி அதனை தனக்காக பயன்படுத்திக் கொள்வதில்லையோ, மற்றவர்களுக்கும் அதைக் கொடுப்பதில்லையோ, அப்படியே பரமாத்மன், எந்தவொரு சுயநலமும் இன்றி, ஜீவனுக்கு உறவினராக, அனைத்து காலங்களிலும் அவரை உறவினர்களைப் போலவே நினைத்து காக்கிறான்.

 

பி3ருஹாப்தா33தி3 தானுத3

யிலு வ்ருக்‌ஷங்க3ள நெளலு ப

ரிஸுவவிளெயொளு ஸ்தமிலல்லல்லெ லீனிபவு |

ஷ்வசன முக்2யமராந்தராத்மன

வஷதொ3ளகெ3 இப்புது3 ஜக3த்ரய

3ஸுரொளிம்பி3ட்டெல்ல கர்மவ தோர்ப்ப நோள்பரிகெ3 ||32

 

பிஸருஹாப்த = தாமரைக்கு தந்தையான சூரியன்

ஆகஸதி = ஆகாயத்தில்,

தானுதயிஸலு = தான் உதிக்கும்போது

வ்ருக்‌ஷங்கள நெளனு = மரங்களின் நிழல்

பசரிசுவவு = அதன் கீழேயே இருக்கிறது

இளெயொளகெ = பூமியில்

அஸ்தமிஸலு = சூரியன் அஸ்தமிக்கும்போது

அல்லல்லெ = அங்கங்கு

லீனிபவு = மறைகிறது

ஷ்வஸன முக்ய = வாயுதேவரே முதலான

அமராந்தராத்மகன = தேவதைகளின் அந்தராத்மகனான ஸ்ரீஹரி

வஷதொளகெ = அவர்களின் வசத்தில்

ஜகத்ரய = மூன்று உலகங்களை

பசரொளு = தன் வயிற்றில்

இம்பிட்டு = பத்திரமாக வைத்துக்கொண்டு

நோள்பரிகெ = தன்னை வணங்குபவர்களுக்கு

எல்லா கர்மவ = அனைத்து கர்மங்களை

தோர்ப்ப = காட்டுவான்

 

சூரியன் உதயமானால், மரங்களின் நிழல் நன்றாக தெரிகிறது. சூரியன் அஸ்தமனமானால், நிழலும் அங்கங்கே மறைந்துவிடுகிறது. இதே ரீதியில், ஸ்ரீபிரம்ம வாயு முதலான தேவதைகளின் அந்தராத்மகனான ஸ்ரீபரமாத்மனின் வசத்தில், இந்த மூன்று உலகங்களும் இருக்கின்றன. அவற்றை தன் வயிற்றில் வைத்துக்கொண்டு, பிரளய காலத்தில் படுத்திருக்கும்போது, தங்களின் செயல்கள் என்ன என்று எந்த ஜீவர்களுக்கும் தெரிவதில்லை. ஜீவர்களை ஸ்ருஷ்டிக்குக் கொண்டுவந்த உடனேயே, அவரவர்கள் செய்யவேண்டிய கர்மங்களை, அவரவர்களால் செய்வித்து, அந்தந்த கர்மங்களை, தன்னை பக்தியுடன் வணங்குபவர்களுக்கு காட்டிக் கொடுக்கிறான்.

 

சூரியன் அஸ்தமனமானபிறகு, நிழல் காணாமல் போய், மறுபடி உதயமானபிறகு எப்படி நிழல் தோன்றுகிறதோ, அப்படியே, பிரளயகாலத்தில் மக்களின் கர்மங்கள் தெரிவதில்லை. ஸ்ருஷ்ட்யாதி செயல்களை விட்டு, பரமாத்மன் யோக நித்திரையில் இருப்பதால், அஸ்தமன உவமையை சொல்கிறார். ஸ்ருஷ்டி ஆனபிறகு உதய காலத்தை ஒப்பிட்டு, மக்களின் செயல்களை அவர்களுக்கு காட்டிக் கொடுக்கிறான்.

 

த்ரிபு4வனைகாராத்4ய லக்‌ஷ்மி

சுபு4ஜ யுக3ளாலிங்கிதாங்க3

ஸ்வபு4 ஸுகா2த்ம ஸுவர்ணவர்ண ஸுபர்ண வரவஹன |

அப4யதா3னந்தார்க்க ஷஷி

ந்னிப4 நிரஞ்சன நித்யத3லி தன

3பி4னமிசுவரி கீவ ர்வார்த்த43ள தடெ3யத3லெ ||33

 

த்ரிபுவனைகாராத்ய = மூன்று உலகத்து மக்களாலும் வணங்கப்படுபவனான

லக்‌ஷ்மிசுபுஜ யுகளாலிங்கிதாங்க = லட்சுமிதேவியின் இரு கைகளால் ஆலிங்கனம் செய்யப்பட்ட சரீரத்தைக் கொண்ட

ஸ்வபு = தன் விருப்பதால் தானே பூமியில் அவதரிக்கும்

சுகாத்ம = சுக ஸ்வரூபனான, அல்லது,

ஸ்வபு சுகாத்ம = தன்னிலிருந்து தானாகவே பிறந்த சுக ஸ்வரூபனான (ஸ்வரமணன் என்று பொருள்)

சுவர்ணவர்ண = தங்கத்தின் நிறத்தைக் கொண்டவன்

சுவர்ண வரவஹன = கருடன் என்னும் உத்தமமான வாகனத்தைக் கொண்ட

அபயத = அனைவருக்கும் அபயத்தைக் கொடுக்கும்

அனந்தார்க்க ஷஷிஸன்னிப = அனந்த சூரியர்களைப் போல ஒளி உள்ளவன் ஆனாலும், அனந்த சந்திரர்களைப் போல குளிர்ச்சியைக் கொண்டவன் (கருணை என்னும் குளிர்ச்சியை அதிகம் கொண்டவன் என்று பொருள்).

நிரஞ்சன = தோஷங்கள் அற்றவனான ஸ்ரீபரமாத்மன்

நித்யதலி தனகெ அபினமிஸுவரிகெ = எப்போதும் தன்னை வணங்குபவர்களுக்கு

ஸர்வார்த்தகள = அனைத்து புருஷார்த்தங்களையும், அவர்களின் யோக்யதைக்கேற்ப

தடெயதலெ = சீக்கிரமாகவே (எவ்வித தாமதங்களும் இல்லாமல்)

ஈவ = கொடுக்கிறான்.

 

விளக்கம்: மேலே தெளிவாக உள்ளதால் இங்கு மறுபடி விளக்கவில்லை.

 

கவிக3ளிந்த3லி திளிது3 ப்ராத:

ஸவன மாத்4யந்தி3னவு ஸா

வனக3ள வஸு ருத்ர ஆதி3த்யரொளு ராஜிஸுவ |

பவனனொளு க்ருதி ஜய ஸுமாயா

4வன மூர்த்தி த்ரயவ சிந்திஸி

தி3வஸ வெம்பாஹுதிக3ளிந் த3ர்ச்சிஸுத சுகி2ஸுதிரு ||34

 

கவிகளிந்தலி = ஞானிகளால்

ப்ராத: ஸவன = காலை நேரத்து

மாத்யந்தினவு = மதிய நேரத்து ஆஹுதியின் கிரமத்தை

ஸாயம ஸவனகளு = சாயங்கால சந்தியா ஆஹுதி கிரமத்தை

திளிது = அறிந்து, இந்த மூன்று சமயங்களின் அபிமானிகளான

வசு ருத்ர ஆதித்யரொளு = வசுகண, ருத்ரகண மற்றும் ஆதித்யகணரில்

ராஜிஸுவ = அந்தர்யாமியாக ஒளிரும்

பவனனொளு = பாரதிரமண முக்யபிராணதேவருக்குள்

க்ருதி ஜய சுமாயாதவன = க்ருதி, ஜயா, மாயா என்னும் மூன்று லட்சுமிரூபங்களின் கணவர்களான ப்ரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவரின்

மூர்த்தித்ரயவ = மூன்று ரூபங்களை

சிந்திஸி = நினைத்து

திவஸவெம்ப = நாள் என்னும்

ஆஹுதிகளிந்த = ஆஹுதிகளால்

அர்ச்சிசுத = அர்ச்சித்தவாறு

சுகிசுதிரு = சுகமாக இரு.

 

யாகங்களில் மூன்று காலங்களில் ஆஹுதி கொடுப்பதற்கு த்ரி-ஸவன என்று பெயர். இந்த ப்ராத: ஸவன, மத்யான்ஹ ஸவன, ஸாயம் ஸவன என்னும் மூன்று ஸவனங்களுக்கும் அபிமானிகள் வசுகண, ருத்ரகண, ஆதித்யகணங்கள் ஆவர். இந்த மூன்று கணங்களிலும் பாரதிரமண முக்யபிராணதேவர் இருக்கிறார். அவரில், க்ருதிரமண ப்ரத்யும்ன, ஜயாரமண சங்கர்ஷண, மாயாரமண வாசுதேவ என்னும் மூன்று ரூபங்களில் பரமாத்மன் வசிக்கிறான் என்று அறிந்து, அந்த பரமாத்மனுக்கு நம் ஆயுளில் நாட்களையே ஹவிஸ் என்று நினைத்து, பூஜித்தால், யாகம் செய்த புண்ணிய பலனே கிடைக்கிறது என்பது தாத்பர்யம்.

 

சதுரவிம்ஷத்யப்3த வஸுதே3

வதெக3ளொளு ப்ரத்3யும்ன நிப்பனு

சது: சத்வாரிம்ஷதிக3ளலி ங்கருஷணாக்2

ஹுதவஹாக்‌ஷரொளிஹனு மாயா

பதியு ஹதி3னாரதி4க த்3வாத்ரிம்

ஷதி வருஷக3ளலிப்ப னாதி3த்யரொளு ஸிதகாய ||35

 

சதுர விம்ஷத்யப்த = 24 ஆண்டுகள் வரை

வசுதேவதெகளொளு = அஷ்ட வசுக்களில்

ப்ரத்யும்னனிப்பனு = ப்ரத்யும்னன் இருக்கிறான்

சதுஷ்சத்வாரிம்ஷதிகளலி = 44 ஆண்டுகள் வரை

ஹுதவஹாக்‌ஷரொளு = அக்னி நேத்ரனான ருத்ரதேவரில்

சங்கர்ஷணாக்ய = சங்கர்ஷண நாமக பரமாத்மன்

இஹனு = இருக்கிறான்

ஸிதகாய = வெள்ளை வண்ண சரீரம் கொண்ட

மாயாபதியு = வாசுதேவன்

ஹதினாதரிக த்வாத்ரிம்ஷதி வருஷகளலி = 16+32=48 ஆண்டுகள் வரை

ஆதித்யனொளு = சூரியனில்

இப்ப = இருக்கிறான்

 

* மனிதர்களின் ஆயுளில் முதல் 24 ஆண்டுகள் வரை, அஷ்ட வசுக்களின் அபிமானிகள் என்று அழைக்கப்படும் ப்ராத:ஸவன காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வசுதேவதைகளுக்குள் ப்ரத்யும்னரூபி ஸ்ரீபரமாத்மன் இருக்கிறான்.

 

* அதன் பிறகு 44 ஆண்டுகள் வரை மாத்யான்ன ஸவன காலம். இதன் அபிமானிகள் ருத்ரகண. அவரில் சங்கர்ஷணரூபி பரமாத்மன் வசிக்கிறான்.

 

* அதன் பிறகு 48 ஆண்டுகள் வரை ஸாயம் ஸவன காலம். அதன் அபிமானிகள் ஆதித்யகண. அவரில் வாசுதேவ மூர்த்தி வசிக்கிறான். 

No comments:

Post a Comment