ஷோட3ஷஷோத்தரஷத வருஷத3லி
ஷோடஷோத்தரஷத ஸுரூபதி3
க்ரீடி3ஸுவ வஸு ருத்ர ஆதி3த்யரொளு ஸதிஸஹித |
வ்ரீட3வில்லதெ3 ப4ஜிப ப4குதர
பீடி3ஸுவ து3ரிதௌக4க3ள தூ3
ரோடி3ஸுத ப3ளியலி பி3டதெ3 நெலெசிப்ப ப4யஹாரி ||36
ஷோடஷோத்தர ஷதவர்ஷதலி = முந்தைய பத்யத்தில் கூறிய
ஆண்டுகளின் கூட்டுத்தொகை மொத்தம் 116. இவற்றில்.
ஷோடஷோத்தர ஷத சுரூபதி = 116 ரூபங்களில்
வசு ருத்ர ஆதித்யரொளு = வசுகண, ருத்ரகண, ஆதித்யகணங்களுடன்
சதிசஹித = தன் மனைவியுடன்
க்ரீடிசுவ = நிலைத்திருக்கிறான்
வ்ரீடவில்லதெ = வெட்கம் இல்லாமல்
பஜிப பகுதர = தன்னை துதிக்கும் பக்தர்களின்
பீடிஸுவ துரிதௌககள = கஷ்டங்களை, துக்கங்களை அல்லது பாப சமூகங்களை
தூரோடிசுத = தூர ஓட்டுவான்
பயஹாரி = பயங்களை பரிகரிப்பவன்
பளியலி பிடதெ = பக்தர்களை விட்டுவிடாமல்
நெலஸிப்ப = வசிக்கிறான்
மேற்சொன்ன பத்யங்களில் மூன்று ஸவனங்களை, மனித ஆயுளின்படி சொன்னபோது, முதல் ஸவன - 24 ஆண்டுகள், இரண்டாம் ஸவன - 44 ஆண்டுகள்; மூன்றாம் ஸவன 48 ஆண்டுகள் என்று கூறினர். மொத்தம் 116 ஆண்டுகள். மனிதர்களுக்கு ஆயுள் 100 ஆண்டுகளே என்று சொன்னபின், 116 என இங்கு ஏன் சொல்ல வேண்டும்?. சாந்தோக்ய பாஷ்யத்தில் 3ம் அத்தியாயத்தில்:
விஷ்ணுபூஜார்த்த யக்ஞேஹ மித்யுபாஸன மாதராத் |
குர்மீத புருஷோனித்யம் தஸ்யயத்க்ஷோட ஷோத்தரம் ||
ஷத மாயுஸ்தத்ஸவனத்ரய மீரித முத்தமம் |
சதுர்விம்ஷத்து யத்பூர்வம் ப்ராத: ஸவன மேவதத் ||
ப்ரார்த்தயித்வா வஸூம்ஸ்தத்கம் புர்மா
ம்ருத்யுமபானுதேத் |
மத்யே சதுஷ்சத்வாரிம்ஷ மத்யமம் ஸவனம் ஸ்வயம் |
ருத்ராணாம் ப்ரார்த்தனேனாத்ர புர்மா
ம்ருத்யுமபானுதேத் |
ததோஷ்ட சத்வாரிம்ஷத்து த்ருதீயம் ஸவனம் ஸ்ம்ருதம் |
ஆதித்யானாம் ப்ரார்த்தனேனதத்கம் ம்ருத்யுமனுதேதிதி ஸர்வயக்ஞி:
||
இதன் பொருள்:
விஷ்ணு பூஜைக்காக நானே யக்ஞமாகிறேன். அதாவது என்
ஸ்வரூபமே யக்ஞம் ஆகும் என்று புருஷன் தினமும் உபாசனை செய்யவேண்டும். இப்படி
செய்வதால், அவனுக்கு ஆயுள் 116 ஆகும். இந்த ஆயுள் ஆண்டினையே யாகத்தில் ஆஹுதியாக கொடுக்க வேண்டும். அதில்
முதல் 24 ஆண்டுகள் வரை, ப்ராத: ஸவன என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸவனத்திற்கு அபிமானிகள் வசுகணர்கள்.
அந்த வசுகணர்களை பிரார்த்தித்து, அந்த ஆண்டுகள் வரை வரக்கூடிய
துர்மரணத்தை பரிகரித்துக் கொள்ளவேண்டும். அதாவது, அவரின் அந்தர்யாமி பிரத்யும்னதேவன் பரிகரிக்கிறார் என்பது கருத்து.
அதற்குப்பின், ஆயுளின் 44 ஆண்டுகள் (25ம் வயது முதல் 68 வயது வரை) மத்யம ஸவன எனப்படுகிறது. அந்த காலத்தின் அபிமானிகளான ருத்ரகணர்களை
பிரார்த்தித்து, அந்த காலத்து மரணத்தை பரிகரித்துக் கொள்ளவேண்டும்.
அதற்குப்பின், 48 ஆண்டுகள் (69ம் வயது முதல் 116 ஆண்டுகள் வரை) மூன்றாம் ஸவன காலம் ஆகும். அந்த காலத்தின் அபிமானிகளான
ஆதித்யகணத்தை ஆராதித்து, அந்த காலத்து மரணத்தை பரிகரித்துக்
கொள்ளவேண்டும்.
என்று சர்வயக்ஞ என்னும் கிரந்தத்தில்
சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியாக நினைப்பவர்கள் யாராவது இருப்பார்களோ என்னும்
கேள்விக்கு, சம்பிரதாயத்தைக் காட்டுவதற்காக ஐதரேய இதரா தேவியின் குமாரரான மஹிதாஸ நாமக (இது
பரமாத்மன் அல்லாத மற்றொரு இதரா தேவியின் குமாரனான மஹிதாஸ) ரிஷி, இத்தகைய உபாஸனையை செய்து, 116 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்.
ஆகையால்,
இப்படியான உபாசனையை செய்பவர்கள், 116 ஆண்டுகள் வரை
வாழ்ந்திருப்பர் என்று சாந்தோக்ய உபநிஷத் பாஷ்யத்தில் இருக்கிறது.
அதே அபிப்பிராயத்தையே தாசராயர் முந்தைய பத்யத்தில்
கூறி, இந்த பத்யத்தில், அந்த ஆண்டுகளின் அந்தர்யாமி பகவத்ரூப சிந்தனையின் பலனை கூறுகிறார். 116 ஆண்டுகளில் 116 ரூபங்களால், தன் மனைவியுடன், ஸ்ரீஹரி, வசு,
ருத்ர, ஆதித்யருக்குள் நிலைத்திருக்கிறான். வெட்கத்தை விட்டு, யாரொருவன் இப்படியாக துதிக்கின்றரோ, அத்தகைய பக்தர்களை தாக்கும்
துர்மரண முதலான துக்க சமூகத்தை தூர விலக்கி, தான் அவர்கள் அருகே எப்போதும் இருந்து, பயங்களைப் போக்குபவனானவன், காப்பாற்றுகிறான்.
மூரதி4கவெம்ப4த்து ஸஹஸ்ரை
நூரயிப்பத்தெனிப ரூபதி3
தோருதிப்ப தி3வா னிஷாதி4பரொளகெ3 நித்யத3லி |
பா4ரதி ப்ராணரொளகி3த்து3 நி
வாரிஸுத ப4குதர து3ரித ஹீ
ங்கார நித4ன ப்ரத2மரூபதி3 பித்ருக3ள பொரெவ ||37
மூரதிக எம்பத்து ஸஹஸ்ரைனூர இப்பத்தெனிப ரூபதி = 83520 ரூபங்களில்
திவானிஷாதிபரொளகெ = மேற்கூறிய 116 ஆண்டுகளின் பகல் இரவுகளின் அதிபதி தேவதைகளுக்குள்
நித்யதலி = தினந்தோறும்
தோருதிப்ப = இருக்கிறான்
பாரதி ப்ராணரொளகெ = பாரதிதேவி பிராணதேவரின்
அந்தர்யாமியாகி
ஹிங்கார நிதன ப்ரதம ரூபதி = ப்ரஸ்தாவ ரூபங்களால்
அந்தந்த சொற்களால் அழைக்கப்படுபவனான ப்ரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ ரூபங்களால் இருந்து
பகுதர துரித = பக்தர்களின் கஷ்டங்களை
நிவாரிஸுத = பரிகரித்தவாறு
பித்ருகளனெ = பித்ரு தேவதைகளை
பொரெவ = அருள்கிறான்.
முந்தைய பத்யங்களில் கூறிய 116 ஆண்டுகளில், ஆண்டு ஒன்றிற்கு 360 பகல்கள் என மொத்தம் 116*360 = 41760. இதைப்போலவே இரவுகளும் 41760. மொத்தம் 41760+41760=83520 ஆகிறது. இவ்வளவு ரூபங்களால், ஹிங்கார, நிதன,
ப்ரஸ்தாவ ரூபங்களால் இருக்கிறான். இதன் விவரம்:
முதல் ஸவன காலமான 24 ஆண்டுகளில் 24 * 360 = 8640 பகல்கள், அவ்வளவு இரவுகள். இவற்றிற்கு
ஹிங்கார நாமக பிரத்யும்னன்.
இரண்டாம் ஸவன காலமான 44 ஆண்டுகளில் 44 * 360 = 15840 பகல்கள். அவ்வளவு இரவுகள். இவற்றிற்கு நிதன நாமக
சங்கர்ஷணன்
மூன்றாம் ஸவன காலமான 48 ஆண்டுகளில் 48 * 360 = 17280 பகல்கள். அவ்வளவு இரவுகள். இவற்றிற்கு ப்ரதம ரூபதி
என்றால்,
ப்ரதமாவதாரம் ஆகையால், ப்ரஸ்தாவ நாமக வாசுதேவ ரூபத்தினால்
என்று பொருள்.
நிதன ஹிங்கார ப்ரதம ரூபதி என்று தாசராயர்
கூறியிருக்கிறார். இதில் இருக்கும் ப்ரதம என்பதற்கு ப்ரஸ்தாவ என்று எப்படி
சொல்லமுடியும் என்றால், சாந்தோக்ய பாஷ்யம் 2ம் அத்தியாயம் 2ம் உப நிஷத் வாக்கியத்தில்
ப்ரதமாவதார ரூபத்வாத்வாஸுதேவ: பர: புர்மா |
ப்ரஸ்தாவோ நிதனன்சாபி ஸங்கர்ஷண உதாஹ்ருத: |
ஸங்கர்ஷணோஹி ஸம்ஹர்த்தா ப்ரத்யும்ன: பரமேஷ்வர: ||
ஹிங்கார இதி ஸம்ப்ரோக்தோ ஹீதி ஸ்ருஷ்டிருதீர்யதே ||
ப்ரதமாவதார ரூபமாகையால், பரமபுருஷனான வாசுதேவன் ப்ரஸ்தாவ எனப்படுகிறான். சங்கர்ஷனன், சம்ஹார கர்த்தன் ஆகையால், நிதன எனப்படுகிறான். ப்ரத்யும்னன்
ஸ்ருஷ்டி கர்த்தன் ஆகையால், ‘ஹிங்கரோதீதி ஹிங்கார:’ ஹி என்றால், ஸ்ருஷ்டி; அதனை செய்பவன் ஆகையால், ஹிங்கார எனப்படுகிறான் -- என்று
சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால், இதன்படி இங்கு ப்ரதம என்னும்
சொல்லிற்கு ப்ரஸ்தாவ என்றும் ஹிங்கார, நிதன, ப்ரஸ்தாவ சொற்களுக்கு ப்ரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ என்றும் அர்த்தம் சொல்ல வேண்டும். இத்தகைய மூன்று ரூபங்களால் பாரதி
ப்ராணர்களின் அந்தர்யாமியாகி மொத்தம் 83,520 இரவு பகல்களுக்கு
அபிமானிகளான வசு, ருத்ர, ஆதித்யர்களில் இருந்து, பக்தர்களுக்கு வரும் கஷ்டங்களை
பரிகரித்தவாறு, அவர்களின் பித்ருகளை அருளியவாறு இருக்கிறான் என்பது கருத்து.
பு3த்தி3பூர்வக உத்தமோத்தம
ஷுத்3த4 ஊர்ணாம்ப3ரவ ப1ங்க1தொ3
ளத்தி3 தெகெ3யலு லேபவாகு3வுதெ3 பரீக்ஷிஸலு |
பத்ப3னாப4னு சர்வஜீவரொ
ளித்த3ரேனு கு3ணத்ரயக3ளி
ம்ப3த்த4 நாகு3வனேனு நித்யஸுகா2த்ம சின்மயனு ||38
புத்திபூர்வக = புத்திபூர்வகமாக
உத்தமோத்தம = மிகச்சிறந்த
ஷுத்த = சுத்தமான
ஊர்ணாம்பரவ = பட்டுத் துணியை
பரீக்ஷிஸலு = பரிசோதித்தால்
பங்கதொளு = அழுக்கில்
அத்தி தெகெயலு = தோய்த்து எடுத்தால்
லேபவாகுவுதெ = சேறு அந்த துணியில் நுழையுமா? (இல்லை)
பத்பனாபனு,
சர்வ ஜீவரொளித்தரேனு = அனைத்து ஜீவர்களில் இருந்தால்
என்ன
நித்யசுகாத்ம = நித்ய சுகஸ்வரூபனும்
சின்மயனு = சின்மய ஸ்வரூபனும் ஆன ஸ்ரீஹரி
குணத்ரயகளிந்த = ஸத்வாதி மூன்று குணங்களால்
பத்தனாகுவனேனோ? = கட்டுப்படுவானோ? (இல்லை).
மிகச்சிறந்த அற்புதமான பட்டுத்துணியை, பரிசோதிப்பதற்காக, சேற்றில் அமிழ்த்தி எடுத்தால், அந்த துணியில் சேறு எப்படி சேராதோ, அப்படியே பரமாத்மன் மூன்று குணங்களுக்கு கட்டுப்பட்டவர்களான அனைத்து
பிராணிகளிலும் இருந்து, தான் மட்டும் அந்த குணங்களுக்கு
கட்டுப்படாமல், அதற்கு சம்பந்தப்படாமல் இருக்கிறான். சிதானந்த ஸ்வரூபனான பரமாத்மனை இந்த
ப்ராக்ருத குணங்கள் கட்டுப்படுத்துமா? என்றும் இல்லை.
ஸகலதோ3ஷவிதூ3ர ஷஷி பா
வக ஸஹஸ்ரானந்த3 ஸூர்ய
ப்ரகரஸன்னிப4 கா3த்ர லகுமிகளத்ர ஸுரமித்ர |
விக2னஸாண்ட3 தொ3ளிப்ப பி3ரம்மா
த்3யகி2ள சேதனக3ணக்கெ தானெ
ஸக2னெனிஸி கொண்ட அகுடிலாத்மக நிப்பனவரந்தெ ||39
சகலதோஷவிதூர = எவ்வித தோஷங்களும் இல்லாதவன்
சஹஸ்ரானந்த = எல்லையற்ற எண்ணிக்கையிலான
ஷஷி = சந்திரன்
பாவக = அக்னி
சூர்ய = சூரியன் இவற்றின்
ப்ரகர = குழுவிற்கு
சன்னிப = சமமான ஒளியுடன் ஒளிரும்
காத்ர = உருவம் கொண்ட
லகுமிகளத்ர = லட்சுமிபதியான
ஸுரமித்ர = தேவதைகளுக்கு மித்ரனான ஸ்ரீஹரி
விகனஸாண்டதொள = பிரம்மாண்டத்தில்
இப்ப = இருக்கிறான்
பிரம்மாதி = பிரம்ம முதலான
அகிள சேதனகணகெ = அனைத்து சேதன கணங்களுக்கு
தானே
அகுடிலாத்மக = தோஷங்கள் இல்லாதவன்
சகனெனிஸிகொண்டு = நண்பன் என்று சொல்லிக் கொண்டு
அவரந்தெ = அவர்களைப் போல
பிரம்மாதி சேதனரந்தெ = பிரம்மாதி சேதனர்களைப் போல
இப்ப = இருக்கிறான்.
பிறப்பு, இறப்பு போன்ற எவ்வித தோஷங்களும்
அற்றவன் ஸ்ரீஹரி. பற்பல ஆயிரம் சந்திரன், அக்னி, சூர்யர்களைப் போல ஒளிரும் தேக ஒளி உள்ளவன். சந்திரன், அக்னி, சூரியன் என மூன்று உவமானங்களைக் கொடுத்திருக்கிறார். இந்த மூன்றையும் சேர்த்து
பார்க்காமல், தனித்தனியாக பார்க்கவேண்டும். சந்திரனைப் போல குளிர்ச்சி குணம். சூரியனைப் போல
ஒளி. பாவங்களை எரிக்கும் விஷயத்தில் அக்னியைப் போன்றவன். என இந்த மூன்று உவமைகளை
புரிந்து கொள்ளவேண்டும். இத்தகைய ஸ்வாமி பிரம்மாண்டத்தில் இருக்கிறான். பிரம்மாதி
அனைத்து சேதன ராசிகளுக்கும் நண்பனாக, செயற்கையாக இல்லாமல், அவரைப்போலவே அவரில் இருக்கிறான்.
தே3ஷபே4த3க3ளல்லி இப்பா
காஷதோ3பாதி3யலி சேதன
ராஷியொளு நெலெஸிப்பனவ்ய வதா4னத3லி நிருத |
ஸ்ரீஸஹித ஸர்வத்ரதி3 நிரவ
காஷ கொடுவந்த3த3லி கொடு3த நி
ராஷெயலி ஸர்வாந்தராத்மக ஷோபிஸுவ ஸுக2த3 ||40
தேஷபேதகளல்லி = பானை, பாத்திரம் முதலான இட பேதங்களில்
இப்ப = இருக்கிறான்
ஆகாஷதோபாதியலி = ஆகாயத்தைப் போல
சேதன ராஷியொளு = சேதனர்களில்
நிருத = எப்போதும்
அவ்யவதானதலி = பானைகள் எப்படி இருக்கின்றவோ அதே
ரூபத்தில், அவற்றின் அனைத்து பாகங்களிலும் எப்படி இடைவெளி விடாமல் ஆகாயம்
நிறைந்திருக்கிறதோ அப்படியே நிறைந்து
நெலஸிப்பனு = ஸ்ரீபரமாத்மன் நிலைத்திருக்கிறான்
ஸ்ரீ ஸஹித = லட்சுமிதேவியருடன்
ஸர்வத்ர = அனைத்து இடங்களிலும்
ஆகாஷ = ஆகாயம்
இரவ = தன் இருப்பிடமான
கொடுவந்ததலி = கொடுப்பதைப் போல
கொடுத = பரமாத்மன் கொடுத்தவாறு
நிராஷெயலி = பிறரிடம் தான் எவ்வித பிரதிபலன்களையும்
எதிர்பார்க்காமல்
சர்வாந்தராத்மக = அனைவரின் அந்தர்யாமியாகி
சுகத = சுகங்களைக் கொடுத்தவாறு
ஷோபிஸுவ = ஒளிர்கிறான்.
No comments:
Post a Comment