ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, July 30, 2020

21-25 பித்ருகண சந்தி

ஜீவரந்தர்யாமி அம்ஷி க

லேவரக3ளொள கி3ந்த்3ரியக3ளலி

தா விஹாரவகை3வுத3னுதின அம்ஷ நாமத3லி |

ஈ விஷயக3ளனுண்டு ஸு2மய

ஈவ ஸு2 ம்ஸார து3க்க2

தே3வ மானவ தா3னவரிக3விரத ஸுதா32 ||21

 

ஜீவரந்தர்யாமி அம்ஷ = ஜீவர்களின் அந்தர்யாமியாக இருக்கும் அம்ஷரூபியான ஸ்ரீஹரி

களேவரகளொளகெ = அந்தந்த பிராணிகளின் சரீரங்களில்

இந்திரியங்களலி = இந்திரியங்களில்

தா = தான்

விஹாரகைவுத = இந்திரிய வியாபாரங்களை செய்விப்பதே விஹார. அத்தகைய விஹாரங்களை செய்தவாறு

அனுதினவு = தினந்தோறும்

அம்ஷ நாமதலி = அம்ஷ என்னும் பெயரில்

ஈ விஷயகளன்னு = ஷப்த, ஸ்பர்ஷ ஆகிய விஷய சுகத்தின் சாரத்தினை

உண்டு = ஸ்வீகரித்து

சுகமயனு = சுக சமுத்திரனாக இருப்பவனான

ஸுதாம சக = குசேலனின் நண்பனான ஸ்ரீஹரி

தேவ மானவ தானவரிகெ = இவர்களுக்கு

சுக சம்சார துக்கவ = தேவதைகளுக்கு நித்ய சுகத்தை; மானவர்களுக்கு நித்ய சம்சாரத்தை; தானவர்களுக்கு நித்ய துக்கத்தையும்

அவிரத = அனைத்து காலங்களிலும்

ஈவ = கொடுக்கிறான்.

 

அனைத்து சேதனர்களின் அந்தர்யாமியாக இருந்து, அம்ஷரூபி என்று அழைத்துக்கொண்டு, ஸ்ரீபரமாத்மன், அனைத்து பிராணிகளின் தேகங்களிலும், அந்த தேகத்தில் இந்திரியங்களிலும், அம்ஷ நாமகனாக இருந்து, இந்திரிய கார்யங்களை செய்து செய்வித்து, தன் விருப்பத்தால் ஜீவேந்திரியங்களில் நடவடிக்கைகளை செய்து, இந்த தேக சம்பந்தமான விஷய சுகங்களின் சாரத்தை, தான் ஸ்வீகரிக்கிறான். ஆனால், அந்த சுகத்தினால் பரமாத்மனுக்கு ஆகவேண்டியது என்று ஒன்றும் இல்லை. தான் சுக-மயன், எப்போதும் சுக-ஸ்வரூபன். ஸ்வ-ரமணன். இப்படி இருக்கையில், பிராணிகளின் தேக சம்பந்தமான விஷய சுகங்களால் பரமாத்மனுக்கு ஆவது என்ன? எதுவும் இல்லை எனில், அவற்றை பரமாத்மன் ஏன் ஸ்வீகரிக்கிறான் என்றால், ஜீவர்களுக்கு சுகங்களைக் கொடுப்பதற்காக, அவற்றை தான் ஏற்றுக்கொண்டு, ஜீவர்களுக்கு மிகச்சிறிய பாகத்தை அளிக்கிறான்.

 

குசேல-சக என்றதால், இந்த விஷய சுகம் பரமாத்மனுக்கு இருந்ததென்றால், பரம தரித்திரனான குசேலனுக்கு நண்பன் ஆவானா? மஹாராஜர்களின் தேகங்களில் இருந்து, அவருக்கு நண்பன் ஆனால், பக்‌ஷ்ய போஜ்யங்களின் சுகங்கள் அவனுக்கு தேவையான சுகங்களைக் கொடுப்பதாக இருந்தது. அத்தகைய சுக விருப்பம் அவனுக்கு என்றும் இருந்ததில்லை. பக்திக்கு மட்டுமே மகிழ்கிறான். சாத்விக, ராஜஸ, தாமஸர்களான மூன்றுவித ஜீவர்களால் அவரவர்களின் தகுதிக்கேற்ப கர்மங்களை செய்து செய்வித்து, அவரவர்களின் தகுதிக்கேற்ப, சாத்விகர்களான தேவதைகளுக்கு நித்ய சுகமயமான முக்தியையும், ராஜஸர்களான மனிதர்களுக்கு சுகதுக்க மிஸ்ரவான நித்ய சம்சாரத்தையும், தாமசர்களான தைத்யர்களுக்கு நித்ய துக்கமயமான தமஸ்ஸையும் கொடுக்கிறான். மனிதர்களில் மனுஷ்யோத்தமர்கள் நித்ய சுகத்தையே பெறுகின்றனர் என்று அறியவேண்டும்.

 

தே3ஷ தே3ஷவஸுத்தி தே3ஹா

யாகொ3ளிதெ3 காம்யகர்ம து

ராஸெகொ3ளகா333லெ பிரம்மாத்3யகி2ல சேதனரு |

பூ4 லில பாவக மீரா

காஷ மொத3லாத3கி2ல த1த்வ ப

ரேஷகி3வதி3ஷ்டான வெந்த3ரித3ர்ச்சி னவரத ||22

 

தேஷ தேஷவ சுத்தி = தீர்த்தயாத்திரை என்று எவ்வித அனுசந்தானமும் இன்றி பல இடங்களுக்கும் சென்று

தேஹாயாசகொளிசதெ = தேகத்திற்கு சோர்வு உண்டாக்கி

காம்யகர்மதுராஷெகெ = காம்ய கர்மங்களை செய்து, தன தான்ய முதலான ஐஹிக பலன்களைப் பெறும் ஆசையில்

ஒளகாகதலெ = விழாமல்

பிரம்மாத்யகில சேதனரு = பிரம்மாதிகளின் துவங்கி அனைத்து சேதனர்களும்

பூ = பூமி

ஸலில = தண்ணீர்

பாவக = அக்னி

ஸமீர = வாயு

ஆகாஷ = ஆகாயம்

மொதலாத = ஆகிய

அகில தத்வ = என்றால் 24 தத்வங்கள்

பரேஷகெ = பிரம்மாதி அனைத்து சேதனர்களுக்கு தலைவனான ஸ்ரீபரமாத்மனுக்கு

அதிஷ்டானவெந்து = சன்னிதானம் என்று அறிந்து

அரிது = அறிந்து

அனவரத = தினமும்

அர்ச்சிஸு = பூஜை செய்.

 

அனைத்து சேதன ராசிகளும், இந்திரியங்களும், தத்வாபிமானிகளும் - இவை அனைத்தும் பகவந்தனின் சன்னிதானம் என்று அறிந்து பூஜிக்காமல் இருப்பவன், தீர்த்தயாத்திரை செய்கிறேன் என்று தேகத்திற்கு சோர்வினை உண்டாக்கி தேசதேசமாக சுற்றினாலும், அதனால் ஆகும் பயன் ஒன்றும் இல்லை. காம்ய பலனை எதிர்பார்த்து அனைத்து செயல்களை செய்தாலும் பலன் இல்லை. ஆகையால், பிரம்மாதி தேவர்களே முதலான அனைத்து சேதனர்கள், ப்ருத்வி, அபு, தேஜஸ், வாயு, ஆகாஷ ஆகிய 24 தத்வாபிமானி தேவதைகள் பகவந்தனின் பிரதிமா சன்னிதானர்கள் என்று அறிந்து, அனைத்து நேரங்களிலும் பூஜிக்க வேண்டும் என்பது கருத்து.

 

எரடு3 வித33லி லோகதொளு ஜீ

வருக3ளிப்பரு ந்தத க்‌ஷரா

க்‌ஷர விலிங்க3 லிங்க3 ஸ்ருஜ்யாஸ்ருஜ்ய பே43தலி |

கரெஸுவுது3 ஜட3 ப்ரக்ருதி ப்ரணவா

க்‌ஷர மஹத்தணு காலனாமதி3

ஹரிஹித பே43கள பஞ்சக ஸ்மரிஸு ர்வத்ர ||23

 

லோகதொளு = உலகத்தில்

சந்தத = எப்போதும்

க்‌ஷராக்‌ஷர = க்‌ஷர என்றும், அக்‌ஷர என்றும்

எரடு விததலி = இரு விதமாக

ஜீவருகளிப்பரு = ஜீவர்கள் இருக்கிறார்கள்

க்‌ஷர - புருஷரில்

விலிங்க = லிங்க சரீரம் அழிந்த முக்த ஜனர்கள்

ஸலிங்க = அமுக்தரான லிங்க சரீரம் கொண்டவர்கள்

ஸ்ருஜ்ய = ஸ்ருஷ்டிக்கு வந்தவர்கள்

அஸ்ருஜ்ய = ஸ்ருஷ்டிக்கு வராதவர்கள்

பேததலி = இத்தகைய பேதங்களால் இருக்கிறார்கள்

ஜட = ஜடங்களில்

ப்ரக்ருதி = ஜட ப்ரக்ருதி

ப்ணவாக்‌ஷர = ஓம் என்னும் அக்‌ஷரம்

மஹதணுகால நாமதி = மஹத்கால, அணுகால என்னும் பெயரால்

கரெஸுவது = அழைக்கப்படுகிறது

ஹரிஸஹித = இந்த ஜட பதார்த்தங்களுடன், பரமாத்மனை சேர்த்தால் மூன்று வகைகள் ஆகின்றன

பேதகள பஞ்சக = அடுத்த பத்யத்தில் கூறிவதைப் போல, ஐந்து பேதங்களை அனைத்து இடங்களிலும் சிந்திக்கவும்.

 

அனைத்து உலகங்களிலும், க்‌ஷர புருஷ, அக்‌ஷர புருஷர் என்று இரு வகை ஜீவர்கள் உண்டு. க்‌ஷரஸ்ஸர்வாணி பூதானி கோடஸ்தூ அக்‌ஷர உச்யதேஎன்னும் கீதா தாத்பர்யத்தால் க்‌ஷர என்றால் பிரம்மதேவர் முதலான அனைத்து பிராணிகளும் என்று அர்த்தம். க்‌ஷர என்றால் நாசம் உள்ளவன் என்று அர்த்தம். பிரம்மதேவர் முதல் அனைத்து ஜீவர்களுக்கும் சரீர நாசம் இருப்பதால், அவர்களுக்கு க்‌ஷர என்று பெயர். தேக நாசம் இல்லாத ரமாதேவியருக்கு அக்‌ஷர என்று பெயர். அக்‌ஷர புருஷன் என்று ஸ்த்ரீயான ரமாதேவிக்கு புருஷ சொல் எப்படி பொருந்தும் என்றால், புருஷரைப் போல பிரம்மாதிகளை ஸ்ருஷ்டிக்கும் சக்தி உள்ளவராகையால், புருஷ சொல் அவருக்கு பொருந்துகிறது.

 

இப்படி அனைத்து உலகங்களிலும் க்‌ஷர அக்‌ஷர என்னும் இரு வித புருஷர்கள் உண்டு. இவரில் க்‌ஷர புருஷரான பிரம்மாதிகளில், விலிங்க, சலிங்க என்று இரு விதம் உண்டு.

 

விலிங்க:

* சாதனை முடிந்தபிறகு, விரஜா நதி ஸ்னானம் ஆனபிறகு, லிங்க சரீரம் பங்கம் ஆனபிறகு, முக்தியை அடையும் முக்தரான பிரம்மாதி அனைத்து சேதனர்களும்; மற்றும்

* தமோ யோக்யர்களான கலி முதலானவர்கள், வாயுதேவரின் கதா பிரயோகம் பெற்று லிங்க சரீரம் பங்கமாகி, நித்ய துக்கமயமான, அந்தம்தமஸ்ஸை அடைபவர்கள்,

விலிங்க என்று அழைக்கப்படுகின்றனர்.

 

ஸலிங்க:

லிங்க தேகத்துடன் இருப்பவர்கள், ஸலிங்க ஆவார்கள். இந்த ஸலிங்கர்களில் இரு விதம் உண்டு. ஸ்ருஜ்யரு, அஸ்ருஜ்யரு.

 

ஸ்ருஜ்யர்: பிரம்மகல்பத்தில் ஸ்ருஷ்டிக்கு வந்தவர்கள் என்று அர்த்தம்.

அஸ்ருஜ்யர் : இன்னும் ஸ்ருஷ்டிக்கு வராதவர்கள்.

 

இப்படி சேதனர்களில் பேதங்கள் இருக்கிறது.

 

ஜடங்களில் ஓம் எனும் ப்ரணவாக்‌ஷர, வேதங்கள், த்விபரார்த்த மஹாகால, பரமாணு முதலான அணுகால, இவை அனைத்தும் ஜட என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்திலும் பஞ்ச பேதங்களை அறிந்து, சிந்திக்க வேண்டும் என்பது கருத்து.

 

ஜீவ ஜீவர பே43 ஜட3 ஜட3

பே43 ஜீவ ஜட33ளபே43 பரமனு

ஜீவ ஜட3 ஸுவிலக்‌ஷணனு எந்த3ரிது நித்யதலி |

ஈ விரிஞ்ச்யாண்டதலி எல்லா

டாவினலி திளிதை3து3 பே43

லேவரதொ3ளரிதச்யுதன பத3வைது3 ஷீக்ரத3லி ||24

 

ஜீவ ஜீவர பேத = ஜீவருக்கும் ஜீவருக்கும் பரஸ்பர பேத

ஜட ஜட பேத = ஜடர்களுக்கும் ஜடர்களுக்கும் பரஸ்பர பேத

ஜீவ ஜடகள பேத = ஜீவர்களுக்கும் ஜடர்களுக்கும் பேத

பரமனு = பரமாத்மன்

ஜீவஜட ஸுவிலக்‌ஷணனு = ஜீவரைவிடவும், ஜடர்களைவிடவும், வேறுபட்டவன் என்றால், பரமாத்மன் - ஜீவன், பரமாத்மன் - ஜடர் வேறுபாடு

எந்தரிது = என்று அறிந்து

நித்யதலி = தினந்தோறும்

ஈ விரிஞ்சாண்டதலி = இந்த பிரம்மாண்டத்தில்

எல்லா டாவினலி = அனைத்து இடங்களிலும்

ஐது பேத = இந்த ஐந்து பேதங்களை

களேவரதொளு = தேகத்தில்

திளிது = பரமாத்மன், ஜீவர்களிலிருந்து வேறுபட்டவன், தேகத்திலிருந்து வேறுபட்டவன் என்று அறிந்து, பிம்பரூபியான ஸ்ரீஹரியை ஹ்ருதயாகாஷத்தில் சிந்தித்து தியானம் செய்து

அச்யுதன = நாசம் இல்லாத ஸ்ரீபரமாத்மனின்

பத = பாதாரவிந்தங்களை

யெய்து = அடை

சீக்ரதலி = விரைவாக.

 

இந்த பஞ்சபேத லட்சணத்தை, 7ம் சந்தி, 12ம் பத்யத்தில் பார்த்திருக்கிறோம். அங்கு இந்த பஞ்சபேதங்களை, அதன் ஆதாரங்களுடன் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அதே விஷயத்தை தாசராயர் இன்னொரு முறை இங்கு ஏன் சொல்கிறார்? இதனால் புனருக்தி தோஷம் ஆகவில்லையா என்றால், அதற்கு பதில் இதுவே.

 

சாதாரணமான ஸ்லோகங்களில் அல்லது வாக்கியங்களில் ஒரு முறை சொன்னதையே மறுபடி சொன்னால், அதை புனருக்தி தோஷம் என்பர். உபதேசரூபமாக போதிக்கும் கிரந்தங்களில், மக்களுக்கு நன்றாக புரிய வேண்டும் என்று ஒரே விஷயத்தையே திரும்பத்திரும்ப கூறினால், அதனை தோஷம் என்று சொல்ல முடியாது. பாகவத 4ம் ஸ்கந்தம் 1ம் அத்தியாயம் 1ம் ஸ்லோகத்தில்: கதாம்ப்ரூய: அப்யாஸாதுத்தமம் பலம்’ - தெரிந்த கதைகளை ஞானிகள் திரும்பத்திரும்ப சொல்வார்கள். இதற்கு என்ன காரணம் என்றால், 3ம் ஸ்கந்தத்தில் : ஸ்வாயம்புவ மனுவிற்கு ஷதரூபி என்னும் மனைவியில், அகூதி, தேவஹூதி, ப்ரஸூதி என்னும் மூன்று பெண்கள் பிறந்தனர் என்று சொல்லியிருப்பர். அடுத்து 4ம் ஸ்கந்தத்தில்

 

மனோஸ்து ஷதரூபாயாம் திஸ்ர:கன்யாஸ்சஜக்ஞிரே |

அகூதிர்தேவஹூதிஸ்ச ப்ரஸூதிரிதி விஸ்ருதா: ||1

 

என்று அதே அர்த்தத்தையே சொல்லியிருப்பர். புனருக்தி தோஷத்தை பரிகரிப்பதற்காக இங்கு அந்த ஸ்லோகம் வந்திருக்கிறது. அதைப்போலவே, தாசராயர் இதுவரை பல இடங்களில் மற்றும் இன்னும் பல இடங்களில் சொன்னதையே சொல்லியிருப்பார். இதன் நோக்கம் என்னவெனில், எப்படி ஓம் ராம் ராமாய நம: என்று மந்திரங்களை, ஒரே முறை சொல்லாமல், பல முறை சொல்கிறோமோ அப்படியே சில முக்கியமான விஷயங்களை ஒரே முறை சொல்லிவிட்டால், இதை எங்கேயோ ஒரு முறை கேட்டோம் என்று அசிரத்தை வந்துவிடும். ஆகையால், சாதாரண விஷயத்தை ஒரு முறை சொன்னால் போதும். விசேஷமான விஷயங்களை திரும்பத்திரும்ப சொன்னால், 1க்கு நான்கு முறை சொல்லியிருக்கிறாரே, அதில் ஏதோ விசேஷம் இருக்கிறதோ என்று மக்களுக்கு எண்ணம் வரும்.

 

இப்படி சொல்லியிருப்பவர் தாசராயர் ஒருவர் மட்டும் அல்ல.

 

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் புஜமுத்ருத்ய போஜ்யதே |

வேதஷாஸ்த்ராத்பரம் நாஸ்தினதைவம் கேஷவாத்பரம் ||

 

என் இரு கைகளை மேலே தூக்கி, உண்மையாக உண்மையாக திரும்பத்திரும்ப உண்மையை சொல்வேன். அது என்னவெனில், வேதத்திற்கு சமமான சாஸ்திரம் இல்லை. கேசவனைவிட உத்தம தெய்வம் இல்லை என்று உரக்க சொல்வேன் என்று வேதவியாஸதேவரே சொல்லியிருக்கிறார். பாகவத 11ம் ஸ்கந்தத்தில், ஸ்ரீகிருஷ்ணன் உத்தவருக்கு உபதேசம் செய்தவாறு, பக்தியோகத்தை சொல்கிறான். இதை ஸ்ரீகிருஷ்ணன் முன்னரே ஒரு முறை சொல்லியிருந்தாலும், நினைவிற்காக இன்னொரு முறை சொல்கிறேன் கேள் என்று சொல்கிறான். ஆகையால், இதுவே சரியான சமாதானம் என்று அறியவேண்டும்.

 

நிற்க.

பகவத் உபாசனைக்கு முக்கியமானவை பஞ்சபேத, தாரதம்யஞான இவ்விரண்டும். மகாபாரத தாத்பர்ய நிர்ணய 1ம் அத்தியாயத்தில்:

 

தாரதம்யந்ததோஞ்ஞேயம் ஸர்வோச்சத்வம் ஹரேஸ்ததா |

ஏதத்வினானகஸ்யாபி விமுக்திஸ்யாத் கதஞ்சன ||81

பஞ்சபேதாம்ஸ்ச விக்ஞாய விஷ்ணோ:ஸ்வாபேதமேவச |

நிர்தோஷத்வம் குணோத்ரேகம் ஞாத்வார்முக்திர் நசான்யதா ||82

அவதாரான் ஹரேர்ஞாத்வான் நாவதாராஹரேஸ்சயே |

ததாவேஷாம் ஸ்ததாஸம்யக்ஞாத்வா முக்திர் நசான்யதா ||83

 

ஸ்ரீஹரியே சர்வோத்தமன் என்று அறிந்து லட்சுமி பிரம்மாதி அனைத்து பிராணிகளிலும் தாரதம்யத்தை அறிந்து உபாசனை செய்யவேண்டும். இதைத்தவிர வேறு எந்த வழியிலும், எந்த காரணத்தாலும், எந்த காலத்திலும், முக்தி கிடைக்காது ||83

 

பஞ்சபேதங்களை அறியவேண்டும். இந்த பஞ்சபேதங்கள் எவை என்றால்:

 

ஜீவேஷயோர் பிதாச்சைவ ஜீவபேத: பரஸ்பரம் |

ஜடேஷயோர் ஜடானாஞ்ச ஜடஜீவாபிதாஸ்ததா ||70

பஞ்சபேதேமேனித்யா: ஸர்வாவஸ்தாஸு ஸர்வஷ: |

முக்தானாஞ்ச நஹீயந்தே தாரதம்யஞ்ச சர்வதா ||71

 

ஜீவனுக்கும், பரமாத்மனுக்கும் பேதம்,

ஜீவனுக்கும், ஜீவனுக்கும் பரஸ்பரம் பேதம்,

ஜடர்களுக்கும், பரமாத்மனுக்கும் பேதம்,

ஜடர்களுக்கும், ஜடர்களுக்கும் பேதம்,

ஜடர்களுக்கும், ஜீவர்களுக்கும் பேதம்.

 

இப்படியாக இந்த 5 பேதங்கள் அனைத்து காலங்களிலும், அனைத்து நிலைகளிலும் உண்மையாகும். முக்தர்களில் கூட பஞ்சபேதம் உண்டு. இதைப்போல, தாரதம்யமும் அனைத்து நிலைகளிலும், அனைத்து காலங்களிலும், முக்தியிலும்கூட இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இத்தகைய பஞ்சபேதங்களை அறியவேண்டும்.

 

பரமாத்மனின் மூலரூப, ஆவேஷரூப, ஆகியவற்றிலும், அனைத்து இடங்களிலும் வியாப்தனான பகவத்ரூபங்களிலும் பேதங்களை சொல்லக்கூடாது. பரமாத்மன் தோஷங்கள் அற்றவன். ஆனந்தாதி குணபூர்ணன் என்று சிந்தித்து உபாசனை செய்யாவிட்டால், முக்தி வராது ||82

 

ராமகிருஷ்ணாதி அவதாரங்கள் பரமாத்மனின் ஸ்வரூபம் என்று அறியவேண்டும். எவை சாட்சாத் அவதாரங்கள் இல்லை என்று சாஸ்திரங்களில் சொல்லப்படவில்லையோ, அந்த ரூபங்களில் பரமாத்மனின் விசேஷ-ஆவேசம் அறியவேண்டும். இப்படி நன்றாக அறிந்து உபாசனை செய்தாலேயே முக்தி கிடைக்கிறதே தவிர, இல்லையேல் முக்தி இல்லை என்கிறார்.

 

இவை அனைத்தும் முக்கியமான விஷயங்கள் என்று ஸ்ரீமதாசார்யரே சொல்லியிருப்பதால், தாசராயர் இவற்றில் பக்தர்களுக்கு திட நம்பிக்கை பிறப்பதற்காக திரும்பத்திரும்ப சொல்கிறாரே தவிர, அவருக்கு பொழுது போகாமல் கிரந்தத்தை, எவ்வித காரணமுமின்றி வளர்க்கும் உத்தேசத்தில் சொல்லவில்லை என்று அறியவேண்டும். இந்த பஞ்சபேதங்கள் எப்படி இருக்கின்றன என்பதை 7ம் சந்தி 12ம் பத்யத்தின் விளக்கத்தில் சொல்லியிருக்கிறோம். இத்தகைய பஞ்சபேதங்களை இந்த பிரம்மாண்டத்தில் அனைத்து இடங்களிலும் அறிந்து ஜீவ ஜடர்களிலிருந்து வேறுபட்டிருக்கும் பரமாத்மனை, தன் சரீரத்தின் இதயாகாஷத்தில் சமாதி லட்சணத்தால், அதாவது மேலே 18ம் பத்யத்தில் பாலில் நெய் இருப்பதைப்போல என்று சொல்லியிருக்கிறோம். அதைபோல, இதயாகாஷத்தில் இருக்கும் பரமாத்மனை தியானம் செய்து அபரோக்‌ஷத்தில் அச்யுதனைக் கண்டு அவனின் அருளால் சீக்கிரத்தில் பரமாத்மனின் பாதாரவிந்தங்களை அடை என்றால், முக்தியை சேர் என்று அர்த்தம்.

 

ஆதி3யல்லி க்‌ஷரக்‌ஷராக்2

த்3வேத3 அக்‌ஷரதொளு ரமா மது

ஸூ3னரு க்‌ஷரக3ளொளு ப்ரக்ருதி ப்ரணவ காலக3ளு |

வேதமுக்2ய த்ருணாந்த ஜீவர

பே433ளனரிதீ ரஹஸ்யவ

போ3தி3ஸதெ3 மந்த3ரிகெ3 ர்வத்ரத3லி சிந்திபுது3 ||25

 

ஆதியல்லி = துவக்கத்தில்

க்‌ஷராக்‌ஷராக்ய = க்‌ஷர அக்‌ஷர என்று பெயர் பெற்ற

த்வேத = இரு வகையான புருஷர்களில்

அக்‌ஷரதொளு = அக்‌ஷர புருஷனில்

ரமா மதுஸூதனனு = லட்சுமி நாராயணன்

க்‌ஷரகளொளு = க்‌ஷர புருஷர்களில்

ப்ரக்ருதி = குண த்ரயாத்மகளான ஜடப்ரக்ருதி

ப்ரணவ = ஓம்கார

காலகளு = காலம் (நொடிகள், நிமிடங்கள்..)

வேதமுக்ய = பிரம்மதேவரே முதலாக

த்ருணாந்தஜீவர = த்ருணஜீவர்கள் வரை

பேதகளனு = வேறுபாடுகளை

அரிது = அறிந்து

ஈ ரஹஸ்யவ = இந்த ரகசியங்களை

மந்தரிகெ = தமோ யோக்யர்களுக்கு

போதிஸதெ = சொல்லிக் கொடுக்காமல்

ஸர்வத்ரதலி சிந்திபுது = அனைத்து இடங்களிலும் சிந்திக்க வேண்டும்.

 

த்வாவிமௌ புருஷௌலோகே க்‌ஷரஸ்சாக்‌ஷர ஏவச |

க்‌ஷரஸ்ஸர்வாணி பூதானி கூடஸ்தோsக்‌ஷர உச்யதே ||

 

என்னும் கீதா வாக்கியத்திற்கேற்ப க்‌ஷரபுருஷ, அக்‌ஷரபுருஷர் என்று இரு வகையினர் உள்ளனர். நாசம் அடையும் அனைத்து பிராணிகளும் க்‌ஷர என்றும், தேக நாசம் இல்லாத ரமாதேவியவர் அக்‌ஷரர் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதே அர்த்தத்தையே தாசராயர் இங்கு விளக்கமாக சொல்லியிருக்கிறார். க்‌ஷர அக்‌ஷர இந்த இரண்டில் ரமாதேவி, பரமாத்மன் இந்த இருவரையும் அக்‌ஷரபுருஷர் என்று சொல்லவேண்டும்.

 

உத்தம:புருஷஸ்யன்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத: - க்‌ஷர, அக்‌ஷரர் இந்த இருவரைத்தவிர இன்னொரு புருஷர் இருக்கிறான் என்று கீதையில் சொல்லியிருந்தாலும்,  ‘யஸ்மாத்க்‌ஷரமதீதோ ஹமக்‌ஷராதபி சோத்தம: ஆதோஸ்மிவேதேலோகேச ப்ரதித: புருஷோத்தம:எந்த காரணத்தால் நான் க்‌ஷரர்களை மீறியிருக்கிறேனோ, அக்‌ஷரளான ரமாதேவியைவிட நான் உத்தமனாக இருக்கிறேனோ, அதே காரணத்தால் உலகத்திலும், வேதங்களிலும் நான் புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறேன் என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியிருக்கிறான்.

 

இப்படி இருக்கையில் தாசராயர் அக்‌ஷர புருஷர்களில் நாராயணனையும் ஏன் சேர்த்துவிட்டார் என்றால், கீதையின் வாக்கியத்தினால் லட்சுமிதேவியரைவிட பரமாத்மனுக்கு உத்தம ஸ்தானத்தை கொடுத்ததைப் போலாயிற்று. தாசராயர் சொன்னது என்னவெனில்: தேஷத: காலத: தேக நாசம் இல்லாதவர்கள் அக்‌ஷரர்கள். ரமாதேவியும் பரமாத்மனும் அப்படிப்பட்ட கணத்தை சேர்ந்தவர்கள் என்றார். இப்படி சொல்லிவிட்டதால், இது கீதை வாக்கியத்திற்கு எதிரானது என்று சொல்லக்கூடாது. ஸ்வாதந்த்ர்ய பரதந்த்ரம் போன்ற பேதங்களால், லட்சுமிதேவியைவிட பரமாத்மன் உத்தமன் என்பது அனைவரும் அறிந்ததே என்ற பிறகு, இங்கு தனியாக கூறத்தேவையில்லை என்னும் அபிப்பிராயத்தால் தாசராயர் புருஷோத்தமன் என்று பரமாத்மனை தனியாகக் கூறவில்லை என்று அறியவேண்டும்.

 

க்‌ஷர ஜீவர்களான ஜட சேதன ஜீவர்களை சொல்கிறார். க்‌ஷரரில் ஜடப்ரக்ருதி, ப்ரணவ மஹாகால, அணுகால, பிரம்மதேவர் முதலாக த்ருணம் வரைக்கும் அனைத்து சேதனர்களும் தேக நாசம் உள்ளவர்கள ஆகையால், க்‌ஷர என்று அழைக்கப்படுகின்றனர். இதில் ப்ரக்ருதி, வேத, கால இவை அனாதி என்று புகழடைந்திருப்பதால், தாசராயர் இவற்றை ஏன் க்‌ஷரரில் சேர்த்திருக்கிறார் என்றால், ப்ரக்ருதியில் சேதன ரூபளான லட்சுமிதேவி மட்டுமே அக்‌ஷர. ஜடப்ரக்ருதியின் ரூபத்தை ஸ்ருஷ்டி காலத்தில் ஸ்வீகரிப்பதால் க்‌ஷரத்தில் சேர்க்கப்பட்டது. ப்ரளய காலத்தில் வேத ஸ்வரூபளாக துர்காதேவி இருந்தாலும், ஓம் என்னும் எழுத்து ஸ்ருஷ்டி ஆனபிறகு பிரம்ம தேவருக்கு உபதேசமாக வெளியே வந்தது.

 

அதைப்போலவே, கால அனாதியானாலும், இப்போது நொடி ஆயிற்று, நாழிகை ஆயிற்று, நாள் ஆயிற்று என்று காலம் நொடி நொடிக்கு போய்க்கொண்டிருப்பதால், அனித்ய ஆகிறது. இவை அனைத்தும் ப்ரவாஹ ரூபத்தினால் நித்ய என்று அழைக்கப்பட்டாலும், நதியில் முன்னர் ஓடிய நீர் மறுபடி வராததால் அந்த நீர் அனித்ய என்றும் சொல்லலாம். அதைப்போலவே, கால, பிரணவாதிகள் ப்ரவாகிப்பதால் நித்யம். ஸ்ருஷ்டி காலத்தில் வருகின்றன. ப்ரளய காலத்தில் ப்ரணவம் வேதங்களில், காலம் மஹாகாலத்தில் சேர்ந்து விடுகிறது. ஆகையால், இவற்றை க்‌ஷரத்தில் சேர்த்தார். இப்படி க்‌ஷராக்‌ஷர புருஷர்களின் பேதங்களை அறிந்து தமோயோக்யருக்கு இந்த ரகசியத்தை சொல்லாமல், அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் மட்டும் இதனை சிந்திக்க வேண்டும் என்கிறார் தாசராயர். 

No comments:

Post a Comment