ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, July 8, 2020

25-30 தியான ப்ரக்ரிய சந்தி

இனிது வ்யதிரேகான்வயக3ளெ

ந்தெ3னிப பூஜாவிதி43ளனு திளி

3னிமேஷேஷன த்ருப்தி ப3டி3சுதலிரு நிரந்தரதி3 |

4னமஹிம கைகொண்டு3 ஸ்திதி ம்ருதி

ஜனுமக3ள பரிஹரிஸி ஸேவக

ஜனரொளிட்டானந்த33டிஸுவ ப4க்தவத்ஸலனு ||26

 

இனிது = இந்த விதமாக

வ்யதிரேகான்வயகளெந்தெனிப = வியதிரேக பூஜை, அன்வய பூஜை ஆகியவற்றின் விதிகளை அறிந்து

அனிமிசேஷன = தேவதைகளின் தலைவனான ஸ்ரீபரமாத்மனை

நிரந்தரதி = விடாமல் தினந்தோறும்

த்ருப்தி படிசுதலிரு = பரமாத்மன் மகிழ்ச்சியடையுமாறு பூஜையை செய்

கனமஹிம = மகா மகிமையுள்ள ஸ்ரீஹரி

கைகொண்டு = ஏற்றுக்கொண்டு

ஸ்திதி = இருப்பது

ம்ருதி = மரண

ஜனுமகள = பிறப்பு இவற்றினை

பரிஹரிஸி = பரிகரித்து

ஸேவக ஜனரொளு = பிரம்மாதி தேவதைகளின் சமீபத்தில்

இட்டு = முக்த ஸ்தானங்களில் வைத்து

பக்த வத்ஸலனு = பக்தவத்ஸலனான

ஆனந்தபடிஸுவ = சுகங்களைக் கொடுப்பான்.

 

மேலே நான்கு பத்யங்களில் விவரித்ததைப் போல, அன்வய வியதிரேக பூஜைகளை அறிந்து, தேவோத்தமனான ஸ்ரீபரமாத்மனை நினைத்து, அவன் மகிழுமாறு அந்த பூஜைகளை செய்தால், பரமாத்மன் பக்தவத்ஸலன் ஆகையால், பிறப்பு இறப்பு ரூபமான சம்சார பந்தனங்களிலிருந்து நம்மை விடுவித்து, முக்தியைக் கொடுத்து, அந்த முக்த ஸ்தானத்தில் முக்தர்களான பிரம்மாதிகளின் நடுவில் நம்மை வைத்து சுகப்படுத்துவான்.

 

ஜலஜனாப4னிகெ3ரடு3 ப்ரதிமெக3

ளிளெயொளகெ3 ஜட சேதனாத்மக

சலதொளிர்ப3கெ3 ஸ்த்ரி புருஷபே433லி ஜடதொ3ளகெ3

திளிவுதா3ஹித ஹஜ மிகெ3 ஜட3

சலக3ளெந்தி3ர்ப3கெ3 ப்ரதீகதி3

லலித பஞ்ச த்ரய ஸுகோ3ளகவரிது ப4ஜிஸுதிரு ||27

 

ஜலஜனாபனிகெ = தாமரைக் கண்ணனுக்கு

இளெயொளகெ = பூமியில்

ஜடசேதனாத்மக = ஜட பிரதிமைகளிலும், சேதன ப்ரதிமைகளிலும்

எரடு ப்ரதிமெகளு = இரு விதமான பிரதிமைகள் இருக்கிறது

சலதொளு = அந்த இரண்டில்,

ஈர்பகெ = இரு வகைகள் உண்டு

ஸ்த்ரி புருஷ பேததலி = ஸ்த்ரி, புருஷ என்னும் பேதங்கள்

ஜடதொளகெ = ஜட பிரதிமைகளில், ஆஹித பிரதிமை, ஸஹஜாசல பிரதிமை என்றும்

ஈர்பகெ = இரு வகைகள் உண்டு

ப்ரதீகதி = பிரதிகளில்

லலித = அழகான

பஞ்சத்ரய சுகோளகவரிது = 5, 3 என்று இரு வகையான கோளகங்களை அறிந்து துதிக்க வேண்டும்.

 

ஸ்ரீபத்மனாபனுக்கு ஜடபிரதிமை என்றும், சேதன ப்ரதிமை என்றும் இரு வகைகள் உண்டு. சல ப்ரதிமைகள் ஸ்த்ரி, புருஷ வேறுபாட்டினால் இரு விதங்கள். ஜட ப்ரதிமைகளில் அஹித பிரதிமை, ஸஹஜாசல ப்ரதிமை என்று இரு வகைகள் உண்டு. அஹித ப்ரதிமை என்றால், பஞ்சலோகங்களால் செய்யப்பட்டது. ஸஹஜாசல ப்ரதிமை என்றால் சாலகிராமாதிகள். இந்த ப்ரதிமைகளில், ப்ரதிமைகளே பகவந்தன் என்று சிந்திக்காமல், கோளகபஞ்சக, கோளகத்ரய என்று இரு விதமாக சிந்திக்க வேண்டும். சாலிகிராமத்தில் மட்டும் கோளக சிந்தனை இல்லை.

 

ஸ்வயம்வ்யக்த என்று சொல்லப்படும் ப்ரதிமைகளில் கோளகத்ரய சிந்தனை செய்ய வேண்டும். எப்படியெனில்:

* நம் கண்ணிற்கு தெரியும் பிரதிமை ஒன்று

* அதற்குள் பாரதிரமண முக்யபிராணாந்தர்கத வாயுதேவரால் பூஜிக்கப்படும் ப்ரதிமை ஒன்று

* அதற்குள் லட்சுமிதேவி இருக்கும் ப்ரதிமை ஒன்று - என மொத்தம் மூன்று கோளகங்கள்

அதில் லட்சுமிசமேத பரமாத்மனை நினைக்க வேண்டும். இதற்கு கோளகத்ரய என்று பெயர்.

 

தச்சன், சிற்பி ஆகியோரால் செய்யப்பட்டும் பிரதிமைகளில் 5 கோளகங்களை சிந்திக்க வேண்டும்.

* நம் கண்ணிற்கு தெரியும் பிரதிமை ஒன்று

* அதற்குள் விஸ்வகர்ம நிர்மாணித்த பிரதிமை ஒன்று

* அதற்குள் பாரதிரமண முக்யபிராணாந்தர்கத வாயுதேவரால் பூஜிக்கப்படும் பிரதிமை ஒன்று

* அதற்குள் வாயுதேவர் இருக்கும் பிரதிமை ஒன்று

* அதற்குள் லட்சுமிதேவி இருக்கும் பிரதிமை ஒன்று - என மொத்தம் ஐந்து கோளகங்கள்.

* அதற்குள் லட்சுமிசமேத பரமாத்மனை நினைக்க வேண்டும். இதற்கு கோளபஞ்சக என்று பெயர்.

 

சிவ விக்ரகம், லிங்கம் ஆகியற்றில்

* லிங்கம் 1.

* விஸ்வகர்ம நிர்மாணித்த 1

* எந்த தேவதா ரூபம் என்று பார்க்கிறோமோ, அது 1

* அதில் வாயுதேவர் 1

* அந்தர்யாமி விஷ்ணு 1 - என மொத்தம் ஐந்து கோளகங்கள்

 

இவற்றை அறிந்து ப்ரதிமாதிகளை பூஜிக்க வேண்டும்.

 

வாரிஜான வாயு வீந்த்3ர உ

மாரமண நாகே1ஷ ஸ்மரஹ

ங்காரிக1 ப்ராணாதி33ளு புருஷர கலேவரதி3 |

தோரிகொளத3னிருத்34 தோ3ஷவி

தூ3ர நாராயணனரூப ஷ

ரீர மானிக3ளாகி34ஜிஸுஸு2வ கொடு3திஹரு ||28

 

வாரிஜாஸன = பிரம்மதேவர்

வாயு வீந்த்ர உமாரமண நாகேஷ = வாயு, கருட, பார்வதிரமணனான ருத்ர, ஸ்வர்க்காதிபதியான தேவேந்திரன்

ஸ்மர = மன்மதன்

அஹங்காரிக பிராணாதிகளு = அஹங்காரிக பிராண முதலானோர்

புருஷ களேவரதி = புருஷரின் சரீரங்களில்

தோரிகொளதெ = காட்டிக் கொள்ளாமல்

ஷரீர மானிகளாகி = சரீர அபிமானிகளாக

அனிருத்த தோஷவிதூர் நாராயணரூப = அனிருத்த ரூப, தோஷங்கள் அற்றவனான நாராயணரூபம்

பஜிஸுத = துதித்தால்

சுகவ கொடுதிஹரு = சுகங்களைக் கொடுக்கிறார்கள்

 

புருஷ தேகத்தில் பிரம்மா, வாயு, கருட, ருத்ர, இந்திர, மன்மத, அஹங்காரிக பிராண முதலான தேவதைகள் சரீர அபிமானிகளாக, அந்த சரீரத்தில் இருக்கும் அனிருத்த நாராயண ரூபங்களை துதித்தவாறு, பிராணிகளுக்கு சுகத்தைக் கொடுக்கிறார்கள் என்று அனைத்து புருஷ தேகத்தில் சிந்தித்து, புருஷர்கள் அனைவரும் புருஷ ரூபியான பரமாத்மனின் சலப்ரதிமைகள் என்று பூஜிக்க வேண்டும்.

 

ஸிரி ரஸ்வதி பா4ரதி ஸௌ

பரணி வாருணி பார்வதிமுக2

ரிருதிஹரு ஸ்த்ரீயரொள கபி4மானிக3ளு தாவெனிஸி |

அருணவர்ண நிபா4ங்க3 ஸ்ரீ

ங்கருஷண ப்ரத்3யும்ன ரூபக3

ளிருளு ஹக3லு உபானவ கை3வுதலி மோதி3பரு ||29

 

சிரி = லட்சுமி

சரஸ்வதி பாரதி சௌபரணி வாருணி பார்வதிமுக = இவர்கள் அனைவரும்

இருதிஹரு = இருக்கிறார்கள்

ஸ்த்ரீயரொளகெ = பெண்களில்

அபிமானிகளு தாவெனிஸி = தாமே அபிமானிகள் என்று சொல்லிக் கொண்டு

அருண = சிவப்பு வண்ணம் உள்ளவனாகவும்

ஸ்வர்ணனிபாங்க = தங்கத்தைப் போல ஒளிரும் சரீரங்களில்

ஸ்ரீசங்கர்ஷண ப்ரத்யும்ன ரூபகளு = ஸ்ரீசங்கர்ஷண ப்ரத்யும்ன ரூபங்கள்

இருளு ஹகலு = எப்போதும்

உபாஸனவகைவுதலி = உபாசனை செய்தவாறு

மோதிபரு = மகிழ்ந்திருப்பார்கள்

 

ஸ்த்ரிகள் அனைவரையும் பரமாத்மனின் சலப்ரதிமைகளாக நினைத்து, அந்த தேகங்களில் லட்சுமி, சரஸ்வதி, பாரதி, ஸௌபர்ணி, வாருணி, பார்வதி ஆகிய தேவதா ஸ்த்ரியர்கள் இருந்து, அவர்களில் சிவப்பு வண்ணனான சரீரம் உள்ளவனாக, தங்கத்தைப் போல ஒளிர்பவனாக சங்கர்ஷண ப்ரத்யும்ன ரூபங்களைக் கொண்ட பகவந்தன் இருக்கிறான் என்று நினைத்து, இந்த தேவதைகள் அவனை எந்நேரமும் சேவித்து, சுகத்தோடு இருக்கிறார்கள் என்று ஸ்த்ரி தேகங்களில் பகவந்தனை பூஜிக்க வேண்டும்.

 

க்ருதப்ரதீகதி3 டங்கி பா4ர்க3

ஹுத வஹானிலமுக்2ய தி3விஜரு

துதிஸிகொளுத பி4மானிக3ளு தாவாகி3 நெலெஸித்து3 |

ப்ரதிதி3வஸ ஸ்ரீதுளஸி3ந்தா4

க்‌ஷதெ குஸும ப2ல தீ3ப பஞ்சா

ம்ருத1தி3 பூஜிப ப4குதரிகெ3 கொடு3திஹரு புருஷார்த்த2 ||30

 

க்ருதப்ரதீகதி = செய்யப்பட்ட பஞ்சலோக பிரதிமைகளில்

டங்கி = டங்கி நாமக பரமாத்மன்

பார்கவ = பரசுராம தேவர்

ஹுதவஹ = அக்னி

அனிலமுக்ய = வாயுதேவரே முதலான

திவிஜரு = தேவதைகள்

துதிஸிகொளுத = வணங்கப்படும்

அபிமானிகளு தாவாகி = பிரதிமைகளின் அபிமானிகளாக

நெலெஸித்து = நிலைத்திருந்து

ப்ரதிதிவஸ = தினந்தோறும்

ஸ்ரீதுளசி கந்தாக்‌ஷதெ குசும பல தீப பஞ்சாம்ருததி = ஸ்ரீதுளசி, கந்த, அக்‌ஷதை, பூ, பழம், தீபம், பஞ்சாமிருதம்

பூஜிப பகுதரிகெ = பூஜிக்கும் பக்தர்களுக்கு

புருஷார்த்த = தர்ம அர்த்த காம மோட்ச என்னும் நான்கு புருஷார்த்தங்களை

கொடுதிஹரு = கொடுக்கின்றனர்.

 

வெள்ளி, தங்கம், இரும்பு, தாமிரம், ஈயம் என்னும் ஐந்து லோகங்களின் கலவையால் தயாரான, பஞ்சலோக பிரதிமைகளில், டங்கி நாமக பரமாத்மன், பரசுராமதேவருடன் அபிமானிகளாக இருக்கிறான். இந்த மூர்த்திகளை வணங்கியவாறு, அக்னி, வாயு, முதலான தேவதைகள் அமுக்யாபிமானி தேவதைகளாக இருக்கின்றனர். என்று அறிந்து தினந்தோறும் ப்ரதிமைகளை, ஸ்ரீதுளசி, சந்தனம், அக்‌ஷதை, பூ, பழம், பஞ்சாம்ருதம் ஆகியவற்றால் பூஜித்தால், அத்தகைய பக்தர்களுக்கு, அதில் இருக்கும் அபிமானி தேவதைகள் மூலமாக பரமாத்மன் மகிழ்ச்சியடைந்து சதுர்வித புருஷார்த்தங்களை கொடுக்கிறார். 

No comments:

Post a Comment