நக3க3ளபி4மானி க3ளெனிப ஸுர
ருக3ளு ஸஹஜாசலக3ளிகெ3 மா
நிக3ளெனிஸி ஸ்ரீவாசுதே3வன பூஜிஸுதலிஹரு |
ஸ்வக3தபே4த3 விவர்ஜிதன நா
ல்ப3கெ ப்ரதீகதி3 திளிது3 பூஜிஸெ
விக3ட3ஸம்ஸாராப்4தி தா3டிஸி முக்தரனு மாள்ப ||31
நககளபிமானிகளெனிப = பர்வதங்களின் அபிமானிகள் என்று
அழைக்கப்படும்
சுரருகளு = தேவதைகள்
சஹஜாசலகளிகெ = சாலிகிராம முதலான ஜட பிரதிமைகளுக்கு
மானிகளெனிஸி = அபிமானிகள் என்று நினைத்து
ஸ்ரீவாசுதேவன பூஜிஸுதலிஹரு = ஸ்ரீவாசுதேவனை
பூஜிக்கின்றனர்
ஸ்வகதபேத விவர்ஜிதன = சர்வத்ர வியாப்தனான ரூபங்களில்
பரஸ்பரம் பேதங்கள் இல்லாத ஸ்ரீபரமாத்மனை
நால்பகெ ப்ரதீகதி = ஸ்த்ரி, புருஷ, ஆஹித,
ஸஹஜாசல என்னும் நான்கு விதம ப்ரதிமைகளில்
திளிது பூஜிஸி = அறிந்து பூஜித்து வர
விகத = வி என்னும் கருடனில் அமர்ந்து சஞ்சரிக்கும்
பக்ஷிவாஹனனான ஸ்ரீஹரி
சம்சாராப்தி தாடிஸி = பிறப்பு இறப்பு என்னும்
சுழற்சியை தாண்டவைத்து
முக்தரனெ = முக்தர்களாக
மாள்ப = செய்வான்
மேரு, மந்தார முதலான பர்வதங்களுக்கு
அபிமானியாக இருக்கும் தேவதைகளே, சாலிக்ராம முதலானவைகளுக்கும்
அபிமானிகளாக இருந்து, அங்கு அந்தர்யாமியாக இருக்கும் வாசுதேவ மூர்த்தியை வணங்கிக்
கொண்டிருக்கிறார்கள். அனைத்து இடங்களிலும் வியாப்தனான பகவத் ரூபங்களில் பரஸ்பரம்
பேதம் இல்லாததால், பரமாத்மனுக்கு ஸ்வகதபேத விவர்ஜிதன் என்று பெயர். இத்தகைய ஸ்ரீ பரமாத்மனின் சல, அசல என்னும் இரு ப்ரதிமைகளில், ஒவ்வொன்றிலும் இரு விதங்களாக, மொத்தம் நான்கு விதங்கள் உண்டு என்று சொல்கிறார்கள். அத்தகைய, ஸ்த்ரி, புருஷ, ஆஹித,
ஸஹஜாசல என்னும் நான்கு வித ப்ரதிமைகளில் மேற்கூறியவாறு பகவத் ரூபங்களை அறிந்து
பூஜித்தால், பக்ஷிவாகனனான ஸ்வாமி, தன் பக்தர்களை சம்சார சமுத்திரத்தை
தாண்ட வைத்து, அவருக்கு முக்தியைக் கொடுக்கிறான்.
ஆவ க்ஷேத்ரகெ போத3ரேனி
ந்னாவ தீர்த்த2தி3 முளுக3லேனி
ந்னாவ ஜப தப ஹோம தா3னவ மாடி3 ப2லவேனு |
ஸ்ரீவர ஜகன்னாத2விட்டல ஈ
வித4தி3 ஸ்தா2வரதி3 ஜங்க3ம
ஜீவரொளு பரிபூர்ண நெந்த3ரியதி3ஹ மானவனு ||32
ஸ்ரீவர = ஸ்ரீலட்சுமிதேவிக்கு ஸ்ரேஷ்டனன
ஜகன்னாதவிட்டல = ஜகன்னாதவிட்டல அங்கிதனான ஸ்ரீஹரியை
ஈ விததி = மேற்சொன்ன பத்யங்களில் விளக்கியதைப் போல
ஸ்தாவரதி ஜங்கம ஜீவரொளு = சல அசல ரூபமான மனுஷ்ய, பசு,
மலை,
மரங்கள் ஆகிய அனைத்திலும்
பரிபூர்ண நெந்தரியதிஹ = நிறைந்திருக்கிறான் என்று
அறியாத
மானவனு = மனிதன்
யாவ க்ஷேத்ரகெ போதரேனு = எந்த க்ஷேத்திரத்திற்கு
சென்றால் என்ன?
ஆவ தீர்த்ததி முளுகலேனு = எந்த தீர்த்தத்தில்
மூழ்கினால் என்ன?
ஆவ ஜப தப ஹோம தானவ = எந்த ஜப தப ஹோம தானத்தை
மாடி பலவேனு = செய்தால் என்னதான் பலன்? (பலன் இல்லை என்று பொருள்)
இந்த சந்தியில் விவரித்ததைப் போல ஜடப் பொருட்களான
தண்ணீர்,
மரங்கள், மலை,
ஆகியவற்றிலும், பஞ்சலோகங்களிலும், சிலை பிரதிமைகளிலும், சாலிகிராம ஆகியவற்றிலும், மனிதர்கள், பசு முதலானவற்றில், ஸ்த்ரி புருஷர்களில் கூட
பகவத்ரூபங்களை வேறுபாடுகள் இன்றி சிந்திப்பவர்கள், எங்கு சென்றாலும், எங்கு ஸ்னானம் செய்தாலும், தீர்த்தக்ஷேத்திர யாத்திராதி
பலன்கள் வரும்.
ஆனால் இதனை அறியாமல் பரமாத்மன் திருப்பதியிலேயே
இருக்கிறான். தீர்த்தம் என்றால் கங்கையே என்று நினைத்து, சில இடங்களில் பகவந்தன் இருக்கிறான் என்றும், சில இடங்களில் பகவந்தன் இல்லை என்றும் நினைக்கும் மனிதர்கள், எந்த க்ஷேத்திரங்களுக்கு போனால் என்ன? எந்த தீர்த்தங்களில் ஸ்னானம் செய்தால் என்ன, என்ன ஜப, தப,
ஹோம,
தான ஆகியவற்றை செய்தால்தான் என்ன? அவை அனைத்தும் பலன்களைக்
கொடுக்காது என்று நினைக்க வேண்டும்.
தியானப்ரக்ரியா சந்தி என்னும் 11ம் சந்தி இங்கு முடிவுற்றது.
***
No comments:
Post a Comment