ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, July 15, 2020

26-30 நாடி பிரகரண சந்தி

லவணமிஸ்ரித ஜலவு தோர்புது3

லவணதோ3பாதி3யலி ஜிஹ்வெகெ3

விவரகை3லு ஷக்யவாகு3வுதே3னு நோள்பரிகெ3 |

ஸ்வவஷவ்யாபி எனிஸி லகுமி

4வ சராசரதொளகெ3 தும்பி3

நவிதி3தன ஸாகல்ய ப3ல்லவராரு ஸுரரொளகெ3 ||26

 

லவணமிஸ்ரித = உப்பு சேர்ந்த தண்ணீர்

லவணதோபாதியலி = உப்பைப் போலவே

ஜிஹ்வெகெ = நாக்கிற்கு

தோர்ப்புது = தெரிகிறது

நோள்பரிகெ = பார்க்கும் மக்களுக்கு

விவரகைஸலு = உப்பை வேறாக எடுத்துக் காட்டினால்

ஷக்யவாகுவுதேனு = சந்தேகம் வருவது ஏன்

லகுமிதவ = லட்சுமிபதி

ஸ்வவஷவியாபி எனிஸி = தானே ஸ்வதந்த்ரன் என்று நினைத்து

சராசரதொளகெ = ஸ்தாவர ஜங்கம நிறைந்த உலகத்தில்

தும்பிஹனு = நிறைந்திருக்கிறான்

அவிதிதன = தன் ஸ்வரூபம் இத்தகையது என்று அடுத்தவருக்குக் காட்டிக் கொள்பவனின்

ஸுரரொளகெ = தேவதைகளுக்குள்

ஸாகல்ய = நன்றாக / முழுமையாக

பல்லவராரு = சொல்பவர்கள் யார்?

 

உப்பு கலந்த நீரை, குடித்தால் மட்டுமே அதில் உப்பு இருப்பது தெரியும். அந்த தண்ணீரை பார்த்தால் அதில் உப்பு கலந்திருப்பது தெரியுமா? அந்த உப்பை வேறுபடுத்திக் காட்டுவது சாத்தியமா? அப்படியே, ஸ்ரீபரமாத்மன், தண்ணீரில் உப்பு கலந்திருப்பதைப் போல அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கிறான். இத்தகைய பகவந்தனின் ஸ்வரூபத்தை அறிவதற்கு, ரமாதேவியருக்கே சாத்தியமில்லை. அப்படியிருக்கையில், வேறு தேவதைகள் அவனது ஸ்வரூபத்தை பிரபஞ்சத்திலிருந்து வேறுபடுத்தி அவனை முழுமையாக அறிவது என்று? தேவதைகளுக்கு அவ்விஷயம் தெரியாதபோது, மனிதர்களின் பாடு என்ன? பகவந்தனின் அருளால் மிகச்சிறிய அளவில் அறிவரே தவிர, முழுமையாக யாரும் அவனை அறியமாட்டார்கள். பகவந்தனின் அருள் இல்லாதவர்கள் எதையும் அறிவதற்கு சாத்தியமில்லாதவர்கள் என்று அறியவேண்டும்.

 

வ்யாப்யனந்த3தி3 சர்வஜீவரொ

ளிப்ப சின்மய கோ4 4

ந்தப்மானரு ப4ஜிஸெ ப4கு3தி13ளிந்த3லிஹபரதி3 |

ப்ராப்ய நாகு3வனவரவ கு3ணக3

ளொப்புகொ3ம்ப3னு ப4க்தவத்ஸல

தப்பிஸுவ பஹுஜன்மதோ3ஷக3 ளவரிக3னவரத ||27

 

சின்மய = சிதானந்த ஸ்வரூபன்

வ்யாப்யனந்ததி = தன்னுடைய வியாபக ரூபங்களில்

சர்வஜீவரொளிப்ப = அனைத்து ஜீவர்களிலும் இருக்கிறான்

கோரபவ = பயங்கரமான சம்சார பந்தத்தினால்

சந்தப்தமானரு = நன்றாக மூழ்கியவர்கள்

பகுதிகளிந்தலி = திட பக்தியினால்

பஜிஸெ = துதிக்க

இஹபரதி = இந்த உலகத்திலும், பர உலகத்திலும்

ப்ராப்தவாகுவ = அவர்களுக்கு கிடைக்கிறான்

அவர = அவர்களின்

அவகுணவ = துர்குணங்களை

பக்தவத்ஸல = பக்தவத்ஸலனானவன்

ஒப்பிகொம்பனு = ஏற்றுக்கொள்கிறான்

அவரிகெ = அப்படி வணங்கும் பக்தர்களுக்கு

அனவரத = நிரந்தரமானவன்

ஜன்மாதி தோஷகள = பிறப்பு இறப்பு சுழற்சியை

தப்பிஸுவ = அவர்களை தப்ப வைக்கிறான்

 

வியாப்தன் என்றால், ஒரு சம்புடத்தைப் போல, அனைத்து ஜீவர்களிலும் அவர்களின் உள்ளேயும் வெளியேயும் பகவந்தன் இருக்கிறான் என்று பொருள். வியாப்யன் என்றால், அவனால் நிலைத்திருக்கப்பட்டவன் என்று பொருள். சிதானந்த ஸ்வரூபனான ஸ்ரீஹரி, வியாப்தரான சாமான்ய ஜீவரைப் போல அனைத்து ஜீவர்களிலும் இருக்கிறான். அவர்களில், கோரமான சம்சாரம் என்னும் பெருங்கடலில் விழுந்து கஷ்டப்பட்டு, தன்னை பக்தியுடன் வழிபடும் பக்தர்களை பக்தவத்ஸலனெம்பொ பிரிது பொத்தமேலே பக்தரதீனனாகிரபேடவேஎன்னும் தாசராயரின் வாக்கிற்கேற்ப, ஸ்வயம் தானே அவர்களின் வசமாகிறான். அவர்களில் இருக்கும் அவகுணங்களை லட்சியம் செய்வதில்லை. பக்தவத்ஸலனான ஸ்வாமி, அந்த பக்தர்களுக்கு வரும் பிறப்பு இறப்பு ஆகிய கஷ்டங்களைப் போக்கி, நிரந்தர சுகங்களைக் கொடுக்கிறான்.

 

ஹலவு ப3கெ3யலி ஹரிய மனத3லி

ஒலிஸி நில்லிஸி ஏனு மாடு3

கெலஸக3ளு அவனங்க்4ரி பூஜெக3ளெந்து3 நெனெவுதிரு |

ஹலத4ரானுஜ தானெ ர்வ

ஸ்த2லக3ளலி நெலெஸித்து3 நிஸ்ச

ஞ்சல ப4கு3தி1 ஸுக்3ஞான பா4க்3யவ கொட்டு ந்தெயி||28

 

ஹலவு பகெயலி = பல்வேறு விதங்களாக

ஹரிய = ஸ்ரீஹரியை

மனதலி = மனதில்

ஒலிஸி = தரிசனம் தருபவனாக செய்து

நில்லிஸி = ஸ்திரமாக நிறுத்தி

ஏனு மாடுவ கெலஸகளு = எந்த வேலைகளை செய்தாலும், அந்த வேலைகள்

அவன = அந்த ஸ்ரீஹரியின்

அங்க்ரிபூஜெகளெந்து = அவனின் பாத பூஜை என்று

நெனெவுதிரு = சிந்தித்திரு

ஹலதரானுஜ = பலராமனின் தம்பியான ஸ்ரீகிருஷ்ணன்

தானே,

ஸர்வஸ்தலகளலி = அனைத்து காலங்களிலும்

நெலெசித்து = நிலைத்திருந்து

நிஸ்சல பகுதி = திடமாக பக்தி

சுக்ஞான = உண்மையான ஞானம்

பாக்யவ = ஆகிய செல்வங்களை

கொட்டு = கொடுத்து

சந்தெய்ப = அருள்கிறான்

 

அனைத்து விதங்களிலும் பரமாத்மனிடம் திடமான பக்தியை வைத்து, அந்த பக்தியினால் பரமாத்மன் தரிசனம் கொடுப்பது போல செய்து, சஞ்சலமற்ற மனதுடன் பரமாத்மனை நிறுத்தி, நீ செய்யும் ஒவ்வொரு வேலையும் பரமாத்மனின் பூஜை என்றே நினைத்திரு. இப்படி செய்வதால், ஸ்ரீகிருஷ்ணன் தானே அனைத்து இடங்களிலும் இருந்து, நீ செய்யும் அனைத்து செயல்களையும் தன் பூஜையென்றே ஏற்றுக்கொண்டு, சிறந்த பக்தியை, திவ்யஞான செல்வத்தைக் கொடுத்து உன்னை அருள்வான் என்று தாசராயர் அன்புடன் சஜ்ஜனர்களுக்கு உபதேச ரூபமாக சொல்லியிருக்கிறார்.

 

தோ3ஷக3ந்த4விதூ3ர நானா

வேஷதா4ரக ஈ ஜக3த்ரய

போஷக புராதனபுருஷ புருஹூதமுக2 வினுத |

ஸேஷவர பரியங்க ஷயன வி

பீ4ஷணப்ரிய விஜயசக2

ந்தோஷ ப3டி3ஸுஸுஜனரிஷ்டார்த்த23ள பூரயிஸி ||29

 

தோஷ கந்தவிதூர = தோஷத்தின் வாசனையே இல்லாதவன்

நானா வேஷதாரக = அனைத்திடங்களிலும் வியாப்தனாகவும், மத்ஸ்யகூர்மாதி அவதார ரூபங்களாலும் பற்பல வித ரூபங்களை தரித்திருக்கிறான்

ஈ ஜகத்ரய போஷக = மூன்று உலகங்களில் வசிக்கும் பிராணிகளை காக்கிறான்

புராதனபுருஷ = ஆதியிலிருந்து இருப்பவன்

புருஹூதமுகவினுத = இந்திராதி தேவதைகளால் வணங்கப்படுபவன்

சேஷவர பர்யங்க ஷயன = சேஷன் என்னும் பாம்பில் படுத்திருப்பவன்

விபீஷணப்ரிய = விபீஷணனால் வணங்கப்படுபவன்

விஜயஸக = அர்ஜுனனின் நண்பன் (இத்தகைய பரமாத்மன்)

சுஜனர = சஜ்ஜனர்களின்

இஷ்டார்த்தகள = இஷ்டார்த்தங்களை

பூரயிஸி = நிறைவேற்றி

சந்தோஷ படிசுவ = மகிழ்ச்சியளிப்பான்.

 

தோஷகந்தவிதூர என்றால், சிறிதளவும் தோஷங்களின் வாசம் அற்றவன் என்று பொருள். விஷ்ணுரஹஸ்ய 15ம் அத்தியாயம் 31ம் ஸ்லோகத்தில்

 

யதானாலோகதே ஸூர்யஸ்தமோலேஷமபிக்வசித் |

ததாதுக்கஸ்யலேஷோபி கர்ஹிசின்னமயேக்‌ஷதே ||

 

சூரியன் மேகங்களில் மறைந்திருந்தாலும் எப்படி இருட்டை காணமுடியாதோ, அப்படியே நான் எக்காலத்திலும் துக்கத்தின் சாயலைக் காணமாட்டேன் என்று ஹயக்ரீவரூபி ஸ்ரீபரமாத்மன் பிரம்மதேவருக்கு சொல்கிறார். அதே அபிப்பிராயத்தையே தோஷகந்தவிதூரஎன்று தாசராயர் இங்கு சொல்லியிருக்கிறார்.

 

ஸ்ரீமஹீஸேவித பதா3ம்பு3

பூ4த்ப4க்த்யைகலப்4ய பி

தாமஹாத்3யமரா ஸுரார்ச்சித பாத3பங்கேஜ |

வாம வாமன ராம ம்ஸா

ராமயௌஷத3 ஹே மமகுல

ஸ்வாமி ந்தயிஸெனலு ப3ந்தொ33கு3வனு கருணாளு ||30

 

ஸ்ரீ = லட்சுமிதேவி

மஹீ = பூதேவி இவர்களால்

சேவிதபதாம்புஜ = வணங்கப்படும் பாதங்களை உடையவன்

பூம = ஹே பூர்ணனே

சத்பக்த்யைகலப்ய = உத்தமமான பக்திக்கு மட்டுமே தரிசனம் அளிப்பவனே

பிதாமஹாதி = பிரம்மதேவரே முதலான

அமர = தேவதைகளால்

அசுர = அசு என்றால் முக்யபிராண தேவர். அவரில் ரதர், என்றால் அவரிடம் பக்தி கொண்டவர்கள் - கருட சேஷாதி அனைத்து தேவதைகள்; மற்றும் வாயுதேவரை குருவாக நினைத்து வணங்கும் அனைத்து மனிதர்களாலும்

அர்ச்சித = பூஜிக்கப்படும்

பாதபங்கேஜ = பாத கமலங்களைக் கொண்டவனே

வாம = அழகானவனே

வாமன, ராம,

சம்சாரமயௌஷத = சம்சாரம் என்னும் நோய்க்கு மருந்தினைப் போன்றவனே

ஹே மமகுலஸ்வாமி = என் குலதெய்வமே

ஸந்தயிஸெனலு = என்னைக் காப்பாற்று என்று வேண்டினால்

கருணாளு = கருணைக் கடலானவன்

பந்தொதகுவனு = வந்து காப்பாற்றுவான்.

 

பிதாமஹாத்யமரா சுரார்ச்சித - என்று தாசராயர் சொல்லியிருக்கிறார். இதில் பிதாமஹாதி = பிரம்மதேவரே முதலான. அமர = தேவதைகள் அனைவரும். அசுரார்ச்சித = தைத்யர்களாலும் பூஜிக்கப்படும் பாத கமலங்களைக் கொண்டவன் என்று பொதுவாக அர்த்தம் சொல்லலாம். அசுரர் என்னும் பதத்திற்கு தைத்யர் என்று அர்த்தம் கூறினால், தைத்யர்களால் பூஜிக்கப்படும் பாத கமலங்களைக் கொண்டவன் பரமாத்மன் என்று அர்த்தம் வருகிறது. தைத்யர்கள் பரமாத்மனை பூஜிப்பது என்பது நடக்காத செயல் என்று நினைத்து சில வியாக்யானகாரர்கள் அஸுஷுரத: அசுர:பிராணர்களில் இருப்பதால் பிராணதேவருக்கு அசுர என்று பெயர் இருக்கிறது என்று சொல்கின்றனர். இப்படி விளக்குவதில் ஒரு பிரச்னை வருகிறது. அது என்னவெனில்:

 

பிரம்மாதி தேவதைகளாலும், வாயுதேவராலும், பூஜிக்கப்படும் பாத கமலங்களைக் கொண்டவன் என்று அர்த்தம் வருகிறது. பிரம்ம முதலான தேவதைகள் என்றபிறகு, வாயுதேவரும் அதிலேயே வந்துவிடுகிறார். அசுர என்று வாயுதேவரை தனியாக மறுபடி சொல்வது, புனருக்தி தோஷம் வருவதைப் போலாகிறது. ஆகையால், அசுர என்பதற்கு பிராணதேவரை சொல்வது யோசிக்க வேண்டியதாகிறது. அப்படியெனில், இதை எப்படி அர்த்தம் சொல்வது என்றால்:

 

இந்த தேகத்தில் இருக்கும் 24 தத்வாபிமானி தேவதைகளுக்கு, வாயுதேவரே முதல்வனாக, பாக்கி 23 தேவதைகளுக்கு தலைவனாக இருக்கிறார். அனைத்து தேவதைகளும் இருந்தாலும், 1 வாயுதேவர் இருந்தால் மட்டுமே, பிராணன் இருக்கிறது என்கிறோம். அனைத்து தேவதைகளும் இருந்தாலும், 1 வாயுதேவர் இல்லாவிட்டால், அந்த சரீரத்தினால் எந்த செயலும் ஆவதில்லை. இந்த விஷயத்தை பாகவதம் 3ம் ஸ்கந்தத்தில் அக்னிர்வாசா முகம்பேஜேஎன்னும் ஸ்லோகத்தில், முதலில், முகத்தில் அக்னிதேவர் நுழைந்தார். விரார் சரீரம் எழவில்லை. பின்னர் அடுத்தடுத்து 23 தத்வாபிமானி தேவதைகள் நுழைந்தாலும், அந்த சரீரம் எழவில்லை.

 

சித்தேனஹ்ருதயம் சைத்யக்‌ஷேத்ரக்ஞ: ப்ராவிஷத்யதா |

விராட்ததைவ புருஷ: ஸலிலாதுததிஷ்டத் ||

 

சித்தாபிமானி பிரம்மதேவர். வாயுதேவரே பிரம்மதேவர். அவர் அந்தர்யாமியான க்‌ஷேத்ரக்ஞன் பிரம்மவாயுகளுடன் சேர்ந்து, அந்த விராட் சரீரத்தில் நுழைந்தவுடன் அந்த சரீரம் எழுந்தது என்று பிராணதேவருக்கு சர்வ சேதனோத்தமத்வத்தை நிரூபித்தார். அஸு என்றால் பிராண. பிராண ஷப்தம் குறிப்பது வாயுதேவரை. அஸௌரதா: அசுரா:அதாவது பிராணதேவரை யார் நம்பிக்கையுடன் வணங்கி, வாயுமதத்தை பின்பற்றுகின்றனரோ அவர்களுக்கு அசுரா: என்னும் பெயர் வருகிறது. பிதாமஹாத்யமரா ஸுரார்ச்சிதஎன்பதற்கு பதில் பிரம்மாதி தேவதைகள் மற்றும், தேவதைகள் அல்லாத வாயு மதத்தைப் பின்பற்றுபவர்களாலும் பூஜிக்கப்படும் பாத கமலங்களைக் கொண்டவன் என்னும் அர்த்தம் வருகிறது. யார்யார் மத்வ மதத்தைப் பின்பற்றுகிறார்களோ, அவரே ஹரிசர்வோத்தமா வாயுஜீவோத்தமா என்னும் ஞானத்தைப் பெற்று, ஸ்ரீஹரியே சர்வோத்தமன் என்று சிந்தித்து துதிக்கின்றனர். மற்றவர்கள் அப்படி நினைத்து வணங்குவதில்லை.

 

அத்வைதிகள் ஈஷ்வர பிரம்மவாதிகள். விசிஷ்டாத்வைதிகள் விஷ்ணு தீக்‌ஷையைப் பெற்று வைஷ்ணவராக இருந்தாலும் யர்ஸ்தாத்வேஷ்டி ஸமாந்த்வேஷ்டிஎன் பக்தர்களிடம் த்வேஷம் செய்பவர்கள், என்னிடம் த்வேஷம் செய்பவர்கள் என்றே நான் நினைக்கிறேன் என்னும் பரமாத்மனின் வாக்கியத்திற்கு விரோதமாக, ருத்ராதிகளில் த்வேஷத்தை செய்கிறார்கள். ஆகையால், மத்வமதத்தைப் பின்பற்றுகிறவர்கள் மட்டுமே தாரதம்யத்தின்படி பகவந்தனை துதிக்கின்றனர். 

No comments:

Post a Comment