ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, July 23, 2020

21-25 நாமஸ்மரண சந்தி

ஹலவு கர்மவ மாடி3 தே3ஹவ

3ளலிஸதெ3 தி3னதி3னதி3 ஹ்ருத3

1மல தனதி விராஜிஸுவ ஹரிமூர்த்தியனெ ப4ஜிஸு |

திளியதீ3 பூஜா ப்ரகரணவ

2ஸுபுஷ்பாக்3ர்யோத3க ஸ்ரீ

துளசித3ல வர்ப்பிலு ஒப்பனு வாஸுதேவ3தா3 ||21

 

ஹலவு கர்மவ மாடி = பற்பல விதமான நியம கர்மங்களை செய்து

தேஹவ பளலிஸதெ = தேகத்திற்கு சோர்வினைக் கொடுத்து துன்புறுத்தாமல்

தினதினதி = தினந்தோறும்

ஹ்ருதயகமல சதனதி = இதய கமலம் என்னும் தூய்மையான வீட்டில்

விராஜிஸுவ = வீற்றிருக்கும்

ஹரிமூர்த்தியனெ = பகவத்ரூபங்களை, அவற்றின் குணங்களை

பஜிஸு = துதித்துக் கொண்டிரு

ஈ பூஜா ப்ரகரணவ திளியதெ = இப்படியான பூஜா விதானங்களை அறியாமல்

பல சுபுஷ்ப அக்ர்யோதக ஸ்ரீதுளசிதல = பழம், பூ, அர்க்யம், துளசிதளம்

அர்ப்பிஸலு = ஆகியவற்றை அர்ப்பித்தால்

வாசுதேவ = வாசுதேவன்

ஒப்பனு = ஒப்புக் கொள்ளமாட்டான்

சத = எப்போதும்

 

முக்திக்கு சாதனையான இந்த சரீரத்தை, பற்பல விரதங்கள், உபவாசங்களை செய்து தேகத்தை சுத்தம் செய்து கெடுத்துக் கொள்வதில் எவ்வித பலன்களும் இல்லை. உன் இதய கமலம் என்னும் கோயிலில் ஒளிரும் பிம்பமூர்த்தியான ஸ்ரீஹரியே சர்வகர்த்தன் என்று அறிந்து, சர்வசமர்ப்பணம் செய்து அவனை வணங்கு. இதுவே பகவத்பூஜை. இந்த பூஜையைப் பற்றி அறியாமல் வெறும், பூ, துளசி, சந்தனம், முதலான வெளிப்புற / படாடோப பூஜையை செய்தால், அதனால் பரமாத்மன் மகிழ்வதில்லை.

 

இந்த வாக்கியத்தால், வெளிப்புற பூஜை செய்யக்கூடாது என்று அர்த்தமல்ல. எந்த செயல்களை செய்தாலும், பரமாத்மனே கர்த்தா என்னும் ஞானம் இல்லாமல், நான் பூஜை செய்தேன்; பூ, துளசி கொண்டு வந்து அர்ச்சித்தேன்; பீஷ்மபஞ்சக விரதம் செய்தேன் என்று ஸ்வதந்த்ர கர்த்ருத்வத்தால் அனைத்தையும் செய்தேன் என்று நினைத்தால், அப்படி செய்த அனைத்தும் நிஷ்பலனே (பலன்களே கொடுக்காது) ஆகுமே தவிர, பகவந்தன் அதிலிருந்து மகிழ்வதில்லை.

 

4ரணி நாராயணனு உத3கதி3

துரிய நாமக அக்3னியொளு

ங்கருஷணாஹ்வய வாயுக3 பிரத்3யும்ன அனிருத்த3

நிருதிஹனு ஆகாஷதொ3ளு மூ

ரெரடு ரூபவ த4ரிஸி பூ4தக3

கரெஸுவனு தன்னாமரூபதி3 ப்ரஜர ந்தெய்ப ||22

 

தரணி = ப்ருத்வி தத்வத்தில்

நாராயணனு = நாராயணன்

உதகதி = அபு (தண்ணீர்) தத்வத்தில்

துரிய நாமகனு = வாசுதேவ மூர்த்தி

அக்னியொளு = தேஜஸ் (நெருப்பு) தத்வத்தில்

சங்கருஷணாஹ்வயனு = சங்கர்ஷண நாமகன்

வாயுக = வாயு தத்வத்தில்

பிரத்யும்ன = பிரத்யும்ன நாமகன்

ஆகாஷதொளு = ஆகாஷ தத்வத்தில்

அனிருத்த இருதிஹனு = அனிருத்தன் இருக்கிறான்

மூரெரடு ரூபவ = இப்படி 3+2=5 ரூபங்களை

தரிஸி = ஸ்வீகரித்து

பூதக = பஞ்சபூதங்களில்

தன்னாமரூபதி = அந்தந்த ரூபங்களால் இருந்து, அந்தந்த பெயர்களால் அழைக்கப்படுகிறான்

ப்ரஜர ஸந்தெய்ப = மக்களை காக்கிறான்.

 

பரமாத்மனின் இத்தகைய விபூதி ரூபங்களை அறிந்த பக்தர்களை அவன் கருணையால் காக்கிறான்.

 

4னக3தனு தானாகி3 நாரா

யணனு தன்னாமத3லி கரெஸு

வனத3 கர்ப்போ43கதி3 நெலெஸிஹ வாஸுதேவாக்2|

த்4வனி ஸிடி3லு ங்கர்ஷணனு மி

ஞ்சினொளு ஸ்ரீப்ரத்3யும்ன வ்ருஷ்டிய

ஹனிக3ளொள க3னிருத்த3னிப்பனு வர்ஷனெந்தெ3னிஸி ||23

 

நாராயணன்,

கனகதனு தானாகி = மேகங்களில் தான் இருந்து

தன்னாமதலி = மேகம் என்னும் பெயரில்

கரெசுவ = அழைத்துக் கொள்கிறான்

வனத கர்ப்போதகதி = மேகத்தில் இருக்கும் தண்ணீரில்

நெலெஸிஹ வாசுதேவாக்ய = வாசுதேவன் நிலைத்திருக்கிறான்

த்வனி ஸிடிலு = கர்ஜிக்கும் இடியில்

சங்கர்ஷணனு = சங்கர்ஷண மூர்த்தி

மிஞ்சினொளு = மின்னலில்

ஸ்ரீபிரத்யும்ன = ஸ்ரீபிரத்யும்ன ரூபி

வ்ருஷ்டிய ஹனிகளொளகெ = மழைத்துளிகளில்

அனிருத்தனிப்பனு = அனிருத்தரூபி இருக்கிறான்

வர்ஷனெந்தெனிஸி = மழை என்று தன்னை அழைத்துக் கொள்கிறான்.

 

மேகத்தில் நாராயணன்,

மேகத்தில் இருக்கும் தண்ணீரில் வாசுதேவன்,

கர்ஜிக்கும் இடியில் சங்கர்ஷணன்,

மின்னலில் பிரத்யும்னன்,

மழைத்துளிகளில் அனிருத்தன்,

என இந்த 5 ரூபங்களால், அந்தந்த பெயர், ரூபங்களை தரித்து, ஸ்ரீஹரி அங்கங்கு நிலைத்திருக்கிறான்.

 

க்3ருஹ குடும்ப34னாதி33

ந்னஹக3ளுள்ளவராகி3 விஹிதா1

விஹித 4ர்ம ஸு2ர்மக3ள திளியத3லெ நித்யத3லி |

அஹர மைது2ன நித்3ரெயொளகா3

கி3ஹரு ர்வபிராணிக3ளு ஹ்ரு

த்கு3ஹ நிவாஸியனரியத3லெ ப4வதொ3ளகெ33ளலுவரு ||24

 

க்ருஹ குடும்ப தனாதிகள = வீடு, குடும்பம், செல்வம் ஆகியவற்றை

சன்னஹகளுள்ளவராகி = இவற்றை சம்பாதிப்பதில் நேரம் செலவழித்து

விஹித = செய்யவேண்டிய

அவிஹித = செய்யக்கூடாத

தர்ம சுகர்மகள = தர்ம காரியங்களை

திளியதலெ = தெரியாமல்

நித்யதலி = தினந்தோறும்

அஹர மைதுன நித்ரெ யொளகாகி = உணவு, பெண்களுடன் சேர்க்கை, தூக்கம் இவற்றில் மயங்கி

சர்வப்ராணிகளு = அனைத்து பிராணிகளும்

இஹரு = இருக்கிறார்கள்

ஹ்ருத்குஹ நிவாஸியனு = தன் இதய கமலத்தில் நிலைத்திருக்கும் ஸ்ரீபிம்பமூர்த்தி பரமாத்மனை

அரியதலெ = அறியாமல்

பவதொளகெ = சம்சாரத்தில்

தொளலுவரு = மூழ்கியிருப்பர்.

 

மனைவி, மக்கள், வீடு, நிலம், சொத்து ஆகியவற்றை சம்பாதிப்பதற்குத் தேவையான வழிகளை செய்தவாறு, அவற்றிலேயே மெய்மறந்து, தர்ம விஷயங்களோ, கர்மங்களோ விதிப்படி செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது ஆகியவற்றையே அறியாமல், அனைத்து பிராணிகளும் தேவையான ஆகாரங்களை தின்று, ஸ்த்ரீயாதி போகங்களை அனுபவித்து, சுகமான தூக்கத்தை விரும்பியிருக்கிறார்கள். இவை உலகத்தில் நாம் காணும் சாமான்ய விஷயங்களாகும்.

இதய கமலத்தில் வசிப்பவனான பிம்பரூபி பரமாத்மனின் மகிமைகளை அறிந்து, அவனையே ஒரு மனதுடன் உபாசனை செய்பவர்கள் மிகச்சிலரே. ஆகையால், மக்கள் சம்சாரத்தில் பற்பல விதங்களாக கஷ்டத்தை அனுபவிக்கின்றனர்.

 

ஜடஜ ம்ப4வ க232ணிப கெ

ஞ்ஜடெ3யரிந் தொ33கூ3டி3 ராஜிஸு

தட3வியொளகி3ப்பனு தா3 கோ3ஜாத்3ரிஜனு எனிஸி |

உடு3பனிந்த3பி4 வ்ருத்தி43ள தா

கொடு3த ப1க்‌ஷி ம்ருகா3ஹிக3ள கா

ரொட3ல காவனு தத்ததா3ஹ்வயனாகி3 ஜீவரனு ||25

 

ஜடஜசம்பவ = பிரம்மதேவர்

கக = கருடன்

பணிப = சேஷன்

கெஞ்செடெயரிந்த = ருத்ரர் ஆகியோரால்

ஒடகூடி = சேர்ந்து

ராஜிஸுத = ஒளிர்ந்தவாறு

சதா = எப்போதும்

கோஜாத்ரிஜனு = மலைகளில் பிறந்த ஸ்தாவர ஜங்கம ஜீவர்களில்

எனிஸி = கோஜா + அத்ரிஜ என்ற பெயரில்

இப்பனு = இருக்கிறான்

தா = தான்

உடுபனிந்த = சந்திரனிடமிருந்து

அபிவ்ருத்திகள கொடுத = காடு, மிருகங்களுக்கு வளர்ச்சியைக் கொடுத்து

பக்‌ஷி ம்ருக அஹிகள = பறவை, மிருகம், பாம்புகளின்

காரொடல = கிருஷ்ண வர்ணனான ஸ்ரீபரமாத்மன்

தத்ததாஹ்வயனாகி = கோஜா + அத்ரிஜ என்ற பெயர்களில்

ஜீவரனு = அந்த ஜீவர்களை

காவனு = காக்கிறான்

 

காடுகளில், மலைகளில் நிலைத்திருக்கும் பரமாத்மனை வேதங்களில் சொல்லப்பட்ட கோஜா, அத்ரிஜா என்னும் நாமங்களால் தியானிக்கவேண்டும். 

No comments:

Post a Comment