த்3ரவ்யனெனிஸுவ பூ4த மாத்ரதொ3
ளவ்யயனு கர்மேந்த்3ரியக3ளொளு
ப4வ்ய ஸத்க்ரியனெனிப ஞானேந்த்ரியக3 ளொளகி3த்து3 |
ஸ்தவ்ய காரகனெனிஸி ஸுக2மய
ஸேவ்ய ஸேவகனெனிஸி ஜக3தொ3ளு
ஹவ்யவாஹன அரணியொளகி3ப்பந்தெ1 இருதிப்ப ||11
பூதமாத்ரதொளு = பஞ்ச மஹாபூதங்களிலும் தன்மாத்ரா
குணங்களிலும்
அவ்யயனு = அழிவு இல்லாதவனான ஸ்வாமி
த்ரவ்யனெனிஸுவ = த்ரவ்ய என்று அழைத்துக் கொள்கிறான்
கர்மேந்த்ரியகளொளு = கை, கால் முதலான கர்மேந்திரியங்களில்
பவ்யனெனிப = குஷல என்னும் பெயர் இருக்கிறான்.
ஞானேந்திரியக ளொளகித்து = ஞானேந்திரியங்களில்
இருக்கிறான்
ஸ்த்க்ரியனெனிப = ஸத்க்ரிய என்று அழைத்துக் கொள்கிறான்
ஜகதொளு = இந்த உலகினில்
ஹவ்யவாஹனனு = அக்னி
அரணியொளகிப்பந்தெ = அரணிக்கட்டையில் இருப்பதைப் போல
(அந்தக் கட்டைக்கு சம்பந்தப்படாமல் அதற்குள் இருப்பதைப் போல)
இருதிப்ப = இருக்கிறான்
ஸ்ரீஹரி,
* பஞ்சபூதங்களில் திரவ்ய நாமகனாகவும்
* ஷப்த ஸ்பர்ஷாதி மாத்ரா குணங்களில்
அவ்யய நாமகனாகவும்
* கர்மேந்திரியங்களில் குஷல
நாமகனாகவும்
* ஞானேந்திரியங்களில் ஸத்ரிய
நாமகனாகவும் இருந்து,
* வணங்குபவன்
* வணங்கப்படுபவன்
* சுகப்படுபவன், என அனைத்தும் தானே ஆகி,
* சிலர்களில் இருந்து வணங்கப்பட்டு
* சிலர்களில் இருந்து வணங்கி
அந்தந்த செயல்களை செய்து, செய்விக்கிறான்.
கட்டையில் இருக்கும் நெருப்பினைப் போல நிர்லிப்தனாக
இருக்கிறான். அரணிகட்டையில் நெருப்பு இருப்பதை அறியவேண்டுமெனில், அதை கடைய வேண்டும். அப்போதே அதிலிருந்து நெருப்பு வருகிறது. நெருப்பு
வந்தவுடன் அந்த கட்டையை சுட்டுவிடுகிறது. அதே நெருப்பு, கடைவதற்கு முன்பு அதில் இருப்பது மற்றவர்களுக்கு தெரிவதில்லை. அப்படியே, பரமாத்மன் அனைத்து இடங்களிலும் இருந்தாலும், தான் காட்டிக் கொள்ளாமல், பகவத்ஸ்வரூபத்தை தியானம் செய்யும்
சஜ்ஜனர்களுக்கு மட்டுமே தெரிகிறான்.
மனவெ மொத3லாதி3ந்த்3ரியக3ளொள
க3னிலதே3வனு ஷுசியெனெஸிகொ
ண்ட3னவரத நெலெஸிப்ப ஷுசிஷத்தோ4த னெந்தெ3னிஸி |
தனுவினொளகி3ப்பனு ஸதா3 வா
மன ஹ்ருஷிகேஷாக்2ய ரூபதி3
அனுப4வகெ தந்தீ3வ விஷயஜ சுக2வ ஜீவரிகெ3 ||12
மனவெ மொதலாத = மனஸ் முதலான
இந்திரியகளொளு = இந்திரியங்களில்
அனிலதேவனு = வாயுதேவர்
ஷுசி எனிஸிகொண்டு = ஷுசி என்னும் பெயரில்
அனவரத = எப்போதும்
நெலஸிப்ப = இருக்கிறார், இந்த வாயுதேவரின் அந்தர்யாமியாக
ஷுசிஷத், ஹோத நெந்தெனிஸி = ஷுசிஷத், ஹோத என்ற பெயர்களில்
இப்பனு = இருக்கிறான்
தனுவினொளகெ = சரீரத்தில்
ஸதாவாமன ஹ்ருஷிகேஷாக்ய ருபதி = வாமன, ஹ்ருஷிகேஷ ஆகிய இரு ரூபங்களில்
விஷயஜ = விஷயத்தால் ஆகும்
சுகவ = சுகத்தை
அனுபவகெ = அனுபவத்திற்கு
தந்தீவ = கொண்டு வந்து கொடுக்கிறார்
* மனஸ், ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் ஆகிய 11 இந்திரியங்களில், ஷுசி என்னும் பெயரில் வாயுதேவர் இருக்கிறார். அவரின் அந்தர்யாமியாக ஷுசிஷத்
என்னும் ரூபத்தில் ஸ்ரீபரமாத்மன் இருக்கிறான்.
* மற்ற அனைத்து இந்திரியங்களிலும்
ஹோத நாமக வாயுதேவரில் ஹோத நாமகனாக பரமாத்மன் இருக்கிறான்.
* சரீரத்தில் வாமன, ஹ்ருஷிகேஷ என்னும் இரு ரூபங்களில் இருந்து, உணவு,
ஸ்த்ரி போகங்கள் என்னும் விஷய சுகங்களை ஜீவர்களின் அனுபவத்திற்குக் கொண்டு
வந்து தருகிறார்.
ப்ரேரக ப்ரேர்யரொளு ப்ரேர்ய
ப்ரேரகனு தானாகி3 ஹரி நி
ர்வைரதி3ந்த3லி வர்தி1ஸுவ தன்னாம ரூபத3லி |
தோரிகொள்ளதெ3 ஸர்வரொளு பா4
கீரதீ ஜனகனு ஸகலவ்யா
பாரக3ள தா மாடி3 மாடி3ஸி நோடி3 நகு3திப்ப ||13
ப்ரேரக ப்ரேர்யரொளு = புண்ய பாவங்களை செய்யும்
விஷயத்தில், அதை முடிவுசெய்யும் தத்வாபிமானி தேவதைத்யர்களில் இருந்து, அதை செய்யும் அனைத்து ஜீவர்களில் இருந்து,
ப்ரேர்ய ப்ரேரகனு = ஆணையிடுபவனும், செய்பவனுமாகி
ஹரி = ஸ்ரீஹரி
நிர்வைரதிந்த = தேவ, தைத்யர்களில் பரஸ்பரம் த்வேஷத்தை வளர்க்காமல்
தன்னாம ரூபதலி = அந்தந்த தேவ தைத்ய பிராணிகளின் நாம
ரூபங்களில் இருந்து
ப்ரவர்த்திசுவ = நடமாடுகிறான்
பாகீரதி ஜனகனு = கங்கையைப் பெற்ற ஸ்ரீபரமாத்மன்
தோரிகொள்ளதே = தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொள்ளாமல்
சர்வரொளு = அனைவரிலும் இருந்து
சகல வ்யாபாரகள = அனைத்து செயல்களையும்
தா மாடி மாடிஸி = தான் செய்து, செய்வித்து
நோடி நகுதிப்ப = அதற்கு சம்பந்தப்படாமல், தான் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பான்.
நம் தேகங்களில் எப்படி 24 தத்வாபிமானி தேவதைகள் இருக்கின்றனரோ, அதைப் போலவே, தைத்யர்களும் இருக்கின்றனர். தேவதைகள் புண்ய கர்மங்களை செய்யத் தூண்டுவர்.
தைத்யர்கள் பாவ கர்மங்களை செய்யத் தூண்டுவர். மூன்று வித குணங்களைக் கொண்டவர்களும், இந்த தேவதை, தைத்யர்களின் தூண்டுதல்களின்படியே புண்ய பாவ கர்மங்களை செய்கின்றனர்.
பரமாத்மன், தேவதைகளிலும், தைத்யர்களிலும், அனைத்து பிராணிகளிலும், அதே உருவம், அதே பெயரில் இருந்து, அவர்கள் செய்யத் தூண்டும் புண்ணிய
பாவங்களை,
செய்யத் தூண்டுகிறான். செய்பவர்களான அனைத்து பிராணிகளிலும் இருந்து, தானே அவற்றை செய்கிறான். இப்படியாக, செய்பவன், செய்விப்பவனாக தானே இருந்து, அனைத்து கர்மங்களையும் செய்து, செய்வித்து, தான் நிர்லிப்தனாக இருந்து, பார்த்து சிரித்துக்
கொண்டிருக்கிறான்.
ஹரியெ முக்2ய நியாமகனு எ
ந்த3ரிது3 புண்யாபுண்ய ஹருஷா
மருஷ லாபா4லாப4 சுக2துக்கா2தி3 த்3வந்த்3வக3ள |
நிருத அவனங்க்ரிகெ3 ஸமர்ப்பிஸு
நரக பூ4 ஸ்வர்க்கா3பவர்க3தி3
கரண நியாமகன ஸர்வத்ரத3லி நெனெவுதிரு ||14
ஹரியே, முக்ய நியாமகனு = அனைத்து
கர்மங்களையும் செய்விப்பவன், ஸ்ரீஹரியே
எந்தரிது = என்று அறிந்து
புண்யாபுண்ய = புண்ணிய, பாவ
ஹருஷாமருஷ = மகிழ்ச்சி, கோபம்
லாபாலாப = லாப நஷ்டம்
சுகதுக்காதி = சுகம், துக்கம் ஆகிய
த்வந்த்வகள = இருவித நிலைகளையும்
நிருத = எப்போதும்
அவனங்க்ரிகெ = அந்த பரமாத்மனின் பாதங்களுக்கு
சமர்ப்பிஸு = சமர்ப்பித்து
நரக பூ ஸ்வர்க்க = நரகம், பூமி,
ஸ்வர்க்கம்
அபவர்க்கதி = முக்தியில்
ஸர்வத்ரதலி = அனைத்து இடங்களிலும்
கரண நியாமகன = இந்திரியங்களை செயல் செய்விப்பவனான ஹ்ருஷிகேஷனை
நெனெவுதிரு = நினைத்துக் கொண்டிரு.
ஸ்ரீஹரியே அனைத்து செயல்களையும் செய்விக்கிறான் என்று
அறிந்து புண்ய பாவங்களை, ஸ்ரீபரமாத்மனுக்கு சமர்ப்பணம்
செய்யவேண்டும். மகிழ்ச்சி, கோபம், லாபம், நஷ்டம், சுக,
துக்கம், என அனைத்தையும், எது வந்தாலும், அவை அனைத்தும் பகவத் விருப்பமே என்று சிந்தித்து, பரமாத்மனுக்கு சமர்ப்பித்து, நரக, பூமி,
ஸ்வர்க்க, முக்தி முதலான எந்த இடத்திற்கு நாம் சென்றாலும், நம் இந்திரிய நியாமகனான ஸ்ரீஹரியே அங்கும் இருந்து, அந்தந்த சுக துக்கங்களை கொடுக்கிறான் என்று அனைத்து இடங்களிலும் பரமாத்மனை சிந்திக்க
வேண்டும்.
மாணவக தத்ப2லக3ளனுஸ
ந்தா3னவில்லதெ3 கர்மக3ள ஸ்வே
ச்சானுஸாரதி3 மாடி3 மோதி3ஸுவந்தெ ப்ரதிதி3னதி3 |
ஞானபூர்வக விதி4 நிஷேத4க3
ளேனு நோடதெ3 மாடு3 கர்ம ப்ர
தா4ன புருஷேஷனலி ப4கு3தி1ய பே3டு3 கொண்டா3டு3 ||15
மாணவக = சிறுவர்கள்
தத்பலகளனு = தான் செய்யும் செயல்களின் பலன்களை
அனுஸந்தானவில்லதெ = பெறவேண்டும் என்னும் விருப்பம்
இல்லாமல்
கர்மகள = அந்த செயல்களை
ஸ்வேச்சானுசாரதி = தன் இஷ்டத்திற்கு
மாடி = செய்து
மோதிஸுவந்தெ = மகிழ்ச்சியடைவதைப் போல
ப்ரதிதினதி = தினந்தோறும்
ஞானபூர்வக = தெளிவான ஞானத்துடன்
விதி நிஷேதகளேனு நோடதெ = இது செய்யலாம், இது செய்யக்கூடாது என்றெல்லாம் பார்க்காமல்
கர்ம ப்ரதான புருஷேஷன = அனைத்தையும் செய்விப்பனான
புருஷோத்தமனே பிரதான கர்த்தன் என்று அறிந்து
பகுதிய பேடு கொண்டாடு = பக்தி செய்து, ஸ்தோத்திரம் செய்.
புதோ பாலகவத்க்ரீடேத் |
ஆத்மக்ரீட ஆத்மரத: விசாராமீஹ பாலவத் ||
என்னும் பாகவத 11ம் ஸ்கந்த வாக்கியத்தின்படி, ஞானியானாலும், ஒரு சிறுவனைப்போல இருக்கவேண்டும். அவதூத பிராமணனுக்கும், யதுராஜனுக்கும் ஒரு சமயம் பேச்சுவார்த்தை நடந்த சமயத்தில், சிறுவன் எப்படி தனக்குத்தானே பேசிக்கொண்டு, விளையாடிக் கொண்டிருப்பானோ அது போல, ‘நான் செய்வது அனைத்தும் பரமாத்மனே
செய்விக்கிறான் என்னும் சிந்தனையில் செய்து, என்னை நானே மகிழ்ச்சிப்படுத்தியவாறு நடமாடிக் கொண்டிருக்கிறேன்’ என்று அந்த அவதூதன் கூறுகிறார். அதையே இங்கும் அறிய வேண்டும். சிறுவர்கள்
எப்படி தமக்குத் தெரிந்ததை விளையாடிக் கொண்டிருக்கிறார்களோ, அப்படி அனைத்தையும் பரமாத்மனே செய்விக்கிறான் என்னும் நிச்சய ஞானத்தினால், இது விதி; இதை செய்தால் இஷ்டார்த்தங்கள் பூர்த்தி ஆகின்றன; இது விதிவிலக்கு; இதை செய்தால் நான் கெட்டுப் போகிறேன். ஆகையால் இந்த விதியை செய்வேன். இந்த விதிவிலக்கினை
செய்ய மாட்டேன் என்னும் கர்த்ருத்வ- அபிமானத்தை விட்டு, விதியை செய்பவன் நான் அல்ல. விதிவிலக்கினை விடுபவன் நான் அல்ல. அனைத்து
செயல்களும் ஸ்ரீபரமாத்மனுடையதே என்று சிந்தித்து, பகவந்தன் எந்த காலத்தில் எதை செய்வித்தாலும், அதை செய்து அவனுக்கே அர்ப்பிக்க வேண்டும்.
இந்த விஷயத்தைப் பற்றி, பாகவத 5ம் ஸ்கந்த ஜடபரத கதையில் ஆதாரம் இருக்கிறது. ரிஷபதேவரின் மகனான ஜடபரதன், அனைத்தையும் தியாகம் செய்து வனத்தில் இருந்தபோது, அவனின் வினைப்பயனின் காரணமாக ஒரு மான்குட்டியின் பரிச்சயம் கிடைத்தது.
இறுதியில் மரணகாலத்தில் அந்த மானையே நினைத்தவாறு உயிரை விட்டதால், அடுத்த பிறவியில் மானாகவே பிறந்தார். முந்தைய பிறவியின் நற்பலன்களின் காரணமாக, பரமாத்மனிடம் பக்தி பிறந்து, பிறகு அடுத்த பிறவியில்
பிராமணோத்தமனாகப் பிறந்தார்.
அந்த பிராமண பிறவியிலும், முந்தைய வினைப்பயன்களால், முந்தைய இரு பிறவிகளின் நினைவு
இருந்ததால், மகா ஞானியாகி, தேக அபிமானத்தை விட்டு, பால்யத்திலிருந்தே விரக்தனாக
இருந்து,
செயல்களை செய்து வந்து கொண்டிருந்தார். பகவத்பக்தரான ரஹோகண என்னும் ராஜன்
ஒருவன்,
தான் தத்வோபதேசத்தை பெறுவதற்காக கபிலரின் ஆசிரமத்திற்கு செல்லும் வழியில், அவரது பல்லக்கை தூக்குவதற்கு மனிதர்களை நியமிக்க வேண்டி அந்த கிராம அதிகாரியை
கேட்டுக் கொண்டான். அவரும் இந்த பிராமணோத்தமரை பல்லக்கு தூக்குமாறு கூற, இவர்,
அதுவும் ஒரு பகவத் சேவைதானே என்று சிந்தித்து பல்லக்கை தூக்கிக் கொண்டு
சென்றார். போகும்போது கீழே இருக்கும் கிருமி, புழு,
பூச்சிகளின் மேல் கால் பட்டுவிடுமோ என்று நினைத்து தன் காலடிகளை கவனத்துடன்
வைத்து சென்றதால், பல்லக்கு மேல்கீழாக அல்லாடியது. அதைக் கண்ட ராஜன், ஓரிருமுறை அதை சாதாரணமாக எடுத்துக் கூறினாலும், அவர் அப்படியே நடந்து கொண்டார். அந்த ராஜனுக்கு கோபம் வந்தது. ‘கிமரேத்வம் ஜீவன்ம்ருதோபி மாங்கதர்த்தீக்ருத்ய பர்த்ருஷாஸன மதிசரஸி, ப்ரமத்தஸ்யதே கரோமி சிகித்ஸாந்தண்டபாணிம்வ’ என்றான்.
‘ஹே நீசனே. ஏன் நடைப்பிணமாக
இருக்கிறாய்? நான் யார் என்று உனக்கு தெரிகிறதா? அரசனான எனது ஆணையை மீறி நடக்கிறாயா? இப்போதே நான் உன்னை யமனிடம் அனுப்புகிறேன்’ என்றான். இதைக் கேட்ட பிராமணோத்தமன் சிரித்து, கூறியது. (பாகவதம் 5ம் ஸ்கந்தம் 10ம் அத்தியாயம். 10ம் ஸ்லோகம்).
பிராமண உவாச||
த்வயோதிதம் வ்யக்தமவிப்ரலப்தம் பர்த்து: ஸமேஸ்யாத்யதி
வீர பார: |
கந்துர்யதிஸ்யாத திகம்யமத்வாபீவேதி சாஸௌனவிதாம்
ப்ரவாத: ||
‘ஹே ராஜனே. பாரத்தை சுமந்து செல்வது
நானாக இருந்தால், நீ சொல்வது அனைத்தும் நிஜமே. ஆனால், அது பொய். பாரத்தை சுமப்பது
நானல்ல. வழியில் செல்வதும் நானல்ல. வழியும் இதுவல்ல’ என்று பதில் அளித்தான். முதலில் அரசன் நகைச்சுவையாக பேசியபோது இவன் ‘ஸுசிரம் நாதிபீவான்’ ஸ்தூல தேகம் கொண்டவன் (ஊனமுற்றவன்
என்னும் பொருளில்) என்றிருந்தான். அதற்கு பதிலாக ‘பீவேதி சானௌனவிதாம்ப்ரவாத’ - என்னை ஊனமுற்றவன் என்றாய். இது
அறிந்தவர்கள் பேசும் பேச்சல்ல. என்றால், முட்டாள்கள் பேச்சும் பேச்சு இது
என்று அர்த்தம். ஜீவன், மிகவும் சூக்ஷ்மனான ரூபம்
கொண்டவன். தேகம் மட்டுமே ஸ்தூலமானது. தேகம் ஜடமாகையால், கர்த்ருத்வங்கள் தேகத்திற்கு இல்லை. நீ என்று அழைப்பது ஜீவனையே அன்றி தேகத்தை
அல்ல. ஆகையால், இப்படி பேசுவது முட்டாள்களின் பேச்சே ஆகும்.
பிரத்யட்சமாக நடந்து போகும் பாதை தெரிகிறது. தூக்கிக்
கொண்டு போகும் மனிதரும் தெரிகிறார். இப்படி இருக்கையில் இந்த பிராமணன் ‘தூக்கிக் கொண்டு போவது நானல்ல. நடப்பதும் நானல்ல. வழியும் இதல்ல’ என்று ஏன் கூறுகிறார் என்றால், தேகம் ஜடம். ஜீவன் அஸ்வதந்த்ரன், அஷக்தன். ‘பர்தாஸன் ப்ரியமாணோபிபர்த்திய வுத்ரிதாது ப்ருதிவீமுதத்யாம்’ என்னும் ஸ்ருதிகளில் சொல்லியிருப்பதைப் போல, தூக்கியிருப்பவன், நடப்பவன், வழிகாட்டுபவனும் பரமாத்மனே. அவனே அனைத்து செயல்களையும் செய்து செய்விக்கிறான்
என்ற சிந்தனையில், மேற்சொன்ன பதிலை பரதராஜன், ராஜனுக்குக் கூறினான். இதே
அபிப்பிராயத்தையே தாசராயர் இந்த பத்யத்தில் சொல்லியிருக்கிறார் என்று நினைக்க
வேண்டும்.
பரமாத்மனின் பூஜையை, சேவையை செய்துவிட்டு பலன்களை எதிர்பார்க்கக்கூடாது. பக்தியை வேண்டு, கொண்டாடு என்று தாசராயர் கூறுகிறார். பக்தியையாவது கேட்கலாமா? அது காம்ய பலன் இல்லைதானே? என்றால், பக்தி, ஞானம் ஆகியவை பலன்கள் அல்ல. பக்தி செய்வது பகவந்தனின் அருளுக்காக. அதிலிருந்து
கிடைக்கும் பலன் முக்தி. அதை மட்டும் கேட்கக்கூடாது. பாகவத 11ம் ஸ்கந்தத்தில் :
ஸாலோக்ய ஸார்ஷ்டி ஸாமீப்ய ஸாரூப்யைக த்யமித்யுத |
தீயமானம் நக்ருண்ஹந்தி வினாமத்ஸேவனஞ்சனா: ||
ஸாலோக்ய = பரமாத்மனின் உலகத்தில் வசிப்பது
ஸார்ஷ்டி = பரமாத்மனுக்கு சமமான செல்வங்களைப் பெறுவது
ஸாமீப்ய = பரமாத்மனின் அருகில் வசிப்பது
ஸாரூப்ய = பரமாத்னைப் போல ரூபம் பெறுவது
ஏகத்வ = சாயுஜ்யம் பெறுவது;
No comments:
Post a Comment