ஸ்னான ஜப தேவார்ச்சனெயு வ்யா
க்2யான பா4ரதமுக2 மஹ உப பு
ராண கதெ2க3ள பேளி கே1ளித3ரேனு தி3னதி3னதி3 |
ஞான கர்மேந்தி3ரியக3ளிந்
தே3னு மாடு3வ கர்மக3ளு ல
க்ஷ்மி நிவாஸன பூஜெயிந் த3ர்ப்பிஸத3 மானவனு ||6
ஞான கர்மேந்திரியங்களிந்த = கண், காது முதலான ஞானேந்திரியங்களாலும், கை, கால் ஆகிய கர்மேந்திரியங்களாலும்
ஏனு மாடுவ கர்மகளு = என்ன செயல்களை செய்தாலும், அவை அனைத்தையும்
லகுமி நிவாஸன = ஸ்ரீனிவாசனின்
பூஜெயெந்து அர்ப்பிஸத = பரமாத்மனுக்கு அர்ப்பணம்
செய்யாத
மானவனு = மனிதன்
ஸ்னான, ஜப, தேவார்ச்சனெ = ஸ்னான, ஜப, பூஜை ஆகியவற்றை செய்தால் என்ன?
வியாக்யான = மற்றவர்களுக்கு இந்த அர்த்தத்தை
விவரித்தால் என்ன?
பாரதமுக = பாரதம் முதலான
மஹ உப புராண கதெகள = பாகவதம் முதலான மஹா புராணங்கள், பிரம்ம வைவர்த்த, விஷ்ணு ரஹஸ்ய முதலான உப புராணங்கள் என இத்தகைய கதைகளை
பேளி கேளிதரேனு = தானே சொன்னால் என்ன? பிறரிடமிருந்து கேட்டால் என்ன? (அதிலிருந்து பலன் எதுவும்
கிடைப்பதில்லை என்று பொருள்).
பாகவத 1ம் ஸ்கந்தம் 5ம் அத்தியாயம் 12ம் ஸ்லோகம்:
நைஷ்கர்ம்ய மப்யச்யுத பாவவர்ஜிதம் நஷோபதே ஞானமலம்
நிரஞ்சனம் |
குத: புன: ஷஸ்வத பத்ரமீஷ்வரே கர்மயதப்யகாரணம் ||
நைஷ்கர்ம்ய என்றால், பலன்களை எதிர்பார்க்காமல் செய்யும் கர்மங்கள். இவை முக்திக்கு காரணமானவை என்று
அறியப்படுகின்றன. இத்தகைய நைஷ்கர்ம்ய எனப்படும் செயல்கள், நிரஞ்சனம் -> சுத்தமான வைராக்கியத்துடன் கூடிய, அலம் = முக்தி சாதனத்திற்கு
சாதனையாகும் ஞானம் ஆகியவை இருந்தாலும், பக்தி ஒன்று மட்டும் இல்லையெனில், அந்த அதிகாரிக்கு எந்த நற்பலன்களும் வருவதில்லை. அல்லது, பரமாத்மனின் பாதாரவிந்தங்களில் திடமாக தன் மனதை நிறுத்தாவிடில், முழுமையான பலன்கள் வருவதில்லை. இப்படியிருக்கையில், விஷயங்களில் மயங்கி, எப்போதும் அமங்களங்களையே பேசி, பகவந்தனுக்கு அர்ப்பிக்காத கர்மங்களை எவ்வித பலன்களையும் எதிர்பார்க்காமல்
செய்தாலும், அதன் பலன்கள் கிடைப்பதில்லை என்று சொல்லவும் வேண்டுமா? என்கிறார். இதே அபிப்பிராயத்தையே தாசராயர் இங்கு சொல்கிறார்.
தன் ஞானேந்திரியங்களாலும், கர்மேந்திரியங்களாலும் செய்யும் கர்மங்களை பகவந்தனின் பூஜையென்று நினைத்து, அந்த அனைத்து கர்மங்களையும் பரமாத்மனுக்கு அர்ப்பித்தால், செய்த அனைத்தும் அர்த்தமுள்ளதாக ஆகின்றன. அப்படி இல்லையெனில், இவன் எவ்வளவு ஆறுகளில் ஸ்னானம் செய்து, ஜபங்களை செய்யட்டும், மக்கள் விரும்பியவாறு தேவரபூஜையை
ஆடம்பரமாக செய்யட்டும், பாரதாதி கிரந்தங்களை உபன்யாசம்
செய்யட்டும், பாரத,
பாகவத முதலான புராணங்கள், பிரம்மவைவர்த்த முதலான உப
புராணங்கள் சொல்லட்டும், கேட்கட்டும், பரமாத்மனை எப்போதும் தன் மனதில் நிறுத்தி வைக்காதிருந்தால், இவை எவையும் பலன்களை தருவதில்லை.
தே3வ க3ங்கெ3 யொளுள்ளவகெ3 து3ரி
தாவளிக3ளுண்டெ விசாரிஸெ
பா1வுக3ள ப4யவுண்டெ விஹகா3தி2பன மந்தி3ரதி3 |
ஜீவ கர்த்ருத்வவனு மரெது3 ப
ராவரேஷனெ கர்த்ருவெந்த3ரி
தா3வ கர்மவ மாடி3த3ரு லேபிஸவு கர்மக3ளு ||7
தேவகங்கெயொளுள்ளவகெ = ஆகாச கங்கை அல்லது தேவ நதி
என்று புகழ்பெற்றிருக்கும் கங்கையில் இருப்பவனுக்கு -
அதாவது, அதன் மஹாத்ம்ய ஞானத்தை அறிந்து
அதில் ஸ்னானாதிகளை செய்துகொண்டு அங்கேயே இருப்பவனுக்கு
விசாரிஸெ = விசாரித்துப் பார்த்தால்
துரிதாவளிகளுண்டே = பாவ ராசிகள் இருக்கிறதா? (இல்லை)
விஹகாதிபன = பக்ஷிகளில் சிறந்தவனான கருடனின்
மந்திரதி = வீட்டில்,
பாவுகள பயவுண்டே = பாம்புகளின் பயம் இருக்கிறதா? (இல்லை)
ஜீவ கர்த்ருத்வவனு = ஜீவன் ஸ்வதந்த்ரத்துடன்
கர்மங்களை செய்கிறான் என்பதை
மரெது = மறந்து (அறியாமல்)
பராவரேஷன = பிரம்மனிலிருந்து துவங்கி ஸ்தாவர வரை
அனைத்து பிராணிகளுக்கும், ஈஸ்வரான ஸ்ரீஹரியே
கர்த்ரு = ஸ்வதந்த்ரமாக செய்து, செய்விக்கிறான்
எந்தரிது = என்று அறிந்து
ஆவகர்மவ மாடிதரு = எந்த செயல்களை செய்தாலும் - அதாவது
அதிலிருந்து வரும் பலன்கள்
லேபிஸவு = வராது என்று பொருள்.
கங்கையைப் பற்றிய மஹாத்ம்ய ஞானம் இல்லாமல் அதில்
மூழ்கினால் எதுவும் பலன் இல்லை. பகவத் பக்தியோடு அதன் மகிமைகளை அறிந்து, ‘ஸ ஏவத்ரவரூபேண கங்காம்போ நாத்ரஸம்ஷய:’ ஸ்ரீஹரியே திரவ்ய ரூபத்தில் கங்கையின் தண்ணீரில் இருக்கிறான். இந்த விஷயத்தில்
சந்தேகமே வேண்டாம் என்று அறிந்து, ஸ்னானாதிகளை செய்து அங்கேயே
வசித்து வந்தால், அவனுக்கு பாவங்களின் சங்கமே ஆவதில்லை.
அதுபோலவே, கருட மந்திரத்தை ஜெபித்து அதனை தன்
வசப்படுத்தியிருந்தால், கருடன் வசிக்கும் இடங்களில் எப்படி
சர்ப்பங்களின் பயமே இருப்பதில்லையோ அப்படியே ‘நாஹம்கர்த்தா ஹரி:கர்த்தா’ என்று அறிந்து, ஜீவனின் ஸ்வதந்திரத்தினால் எவ்வித செயல்களை செய்வதற்கும் முடியாது, ‘தேனவினா த்ருணமபி நசலதி’ பரமாத்மன் இல்லாமல், கிருமிகூட நகர்வதில்லை. அதாவது, மிகச்சிறிய காரியமானாலும், பரமாத்மன் இன்றி ஆவதில்லை என்று அறிந்து, பரமாத்மன் செய்வதைப் போல செய்பவன் நான். பரமாத்மன் ஸ்வதந்த்ர கர்த்தன் என்று
அறிந்து உபாசனை செய்பவன், பாவங்களை செய்வதே இல்லை. ஒருவேளை
தெரியாமல் பாவங்களை செய்துவிட்டாலும், அதன் பலன் அவனை சேர்வதில்லை என்பது
கருத்து.
‘ஏனு மாடிதரு’ என்றால், செய்யக்கூடாதவற்றை செய்வதல்ல. பிரம்மஹத்யா தோஷத்தை செய்துவிட்டு, அதை ஸ்ரீஹரிதான் செய்வித்தான் என்று சொல்வது அல்ல. ஏனெனில், யாரொருவன், பிரம்மஹத்யா தோஷம் முதலான பெரிய பாவங்களை செய்வதற்கு பயப்படுவதில்லையோ, அவனுக்கு பகவத்பக்தி இருப்பதே இல்லை. யாரொருவன் எல்லா இடங்களிலும் பகவந்தனை
சிந்தித்திருக்கிறானோ, அவன் எறும்பு, பூச்சி போன்றவற்றிலும், தத்ரூபமாக பகவந்தனே இருக்கிறான்
என்று அறிகிறானோ, அவன் அவற்றை துன்புறத்துவது எப்படி? ஆகையால், பக்தர்கள் பாவங்கள் செய்ய விரும்புவதில்லை.
வினைப்பயன்களாலோ அல்லது பகவத் இச்சையாலோ ஏதோ ஒரு
வேளையில் பாவ கர்மங்கள் நடந்தாலும், அதற்கு அவன் உடனடியாக
வருத்தப்படுகிறான். அப்போதே பரமாத்மனை சிந்தித்து, அதை பரமாத்மனே செய்வித்தான் என்று அறிந்து, அவனுக்கு அதை சமர்ப்பித்தால், அந்த பாவங்கள் அனைத்தும்
பொசுங்கிவிடுகிறது. பாகவத 6ம் ஸ்கந்தம் அஜாமிளனின் கதையில்:
ப்ராயஸ்சித்தானி சீர்ணானி நாராயண பராங்மக்யை: |
நவை புனந்தி ராஜேந்திர ஸுராகும்ப மிவாபகா: ||
கெட்ட பதார்த்தங்கள் நிறைந்த மண் குடத்தை எந்த
ஆற்றில் கழுவினாலும் எப்படி அது சுத்தமாவதில்லையோ, அப்படியே நாராயணனிடமிருந்து விலகியவர்கள் எவ்வகையான பிராயச்சித்தத்தை
செய்தாலும், அவர்களின் பாவங்கள் அழிவதில்லை என்று சொல்லி, மேலும்:
ஸ்தேனஸ்ஸுராபோ மித்ரத்ருக் பிரம்மணா குருதல்பக: |
ஸ்த்ரி ராஜ பித்ருகோஹந்தா யேசபாதகி நோsபரே ||
ஸர்வேsஷாமப்யகவதாமிதமேவ ஸுனிஷ்க்ருதம் ||
தங்கத்தை திருடுதல், சுராபானம், மித்ர துரோகம், பிரம்மஹத்யா, குருஸ்த்ரீ கமனம், ஸ்த்ரிஹத்யா, ராஜஹத்யா, பித்ருஹத்யா, கோஹத்யா என இன்னும் வேறு பாவங்களை செய்தவர்களுக்கும் பக்தி பூர்வகமான
பரமாத்மனின் ஸ்மரணையே ப்ராயச்சித்தம் என்று சொல்கிறார். இதில் முக்கியமானவை, பக்தி மற்றும் பிராயச்சித்தம். மனப்பூர்வமாக பாவம் செய்யும் பாவிகளுக்கு இந்த
இரண்டும் பிறப்பதே இல்லை. வழிப்பறி செய்பவர்களுக்கும், ஆடு ஆகியவற்றை வெட்டுபவர்களுக்கும் பச்சாதாபம் வருவது எப்படி? எப்போதும் வருவதே இல்லை. ஆகையால், எதேச்சையாக நடந்த பாவங்கள் மட்டுமே
அழிகின்றன என்பது இந்த பத்யத்தின் கருத்து.
ஏனு மாடு3வ புண்ய பாபக3
ளானெ மாடு3வெனெம்பு3வ னத4ம
ஹீனகர்மகெ பாத்ர நா புண்யக்கெ ஹரியெம்ப3
மானவனு மத்4யமனு த்3வந்த்3வகெ
ஸ்ரீனிவாஸனெ கர்த்ருவெந்து3 ஸ
தா3னுராக3தி3 நெனெது3 சுகி2சுவவனெ நரோத்தமனு ||8
ஏனு மாடுவ புண்யபாபகள = மனிதர்கள் செய்யும் அனைத்து
பாவ புண்ணியங்களும்
ஆனே மாடுவெனெம்புவ = நானே செய்தேன் என்பவன்
அதமனு = கீழானவன்
ஹீன கர்மகெ = தவறான / பாவ செயல்களுக்கு
நா = நான்
பாத்ர = செய்பவன்
புண்யகே = புண்ணிய செயல்களுக்கு
ஹரியெம்ப = செய்தவன் ஹரி என்பான்
மத்யமனு = நடுநிலையானவன்
த்வந்த்வகெ = இந்த இரு செயல்களுக்கும்
ஸ்ரீனிவாசனெ
கர்த்ருவெந்து = செய்பவன் என்று
சதானுராகதி = சதா+அனுராகதி = எப்போதும் பக்தியுடன்
நெனெது = சிந்தித்து
சுகிசுவவனே = சுகப்ப்படுபவனே
நரோத்தமனு = மிகச்சிறந்தவன்
தான் செய்த பாவ புண்ணியங்களை, ஸ்வதந்திரமாக தானே செய்தேன் என்று நினைப்பவன் மனிதர்களில் அதமன் (கீழானவன்). பாவம் செய்பவன் நான், புண்ணியத்தை செய்விப்பவன்
பரமாத்மன் என்று நினைப்பவன் மத்யமன். ஏனெனில், ஜீவர்களுக்கு ஸ்வதந்த்ர கர்த்ருத்வம் இல்லை என்றானபிறகு, பாவம் மட்டும் எப்படி அவனால் செய்ய முடியும்? ஆகையால், பாவமோ புண்ணியமோ, அனைத்திற்கும் காரணம் பரமாத்மனே என்று அந்த பலன்களை பரமாத்மனிடம் ஒப்பித்து, அவனையே நினைத்தவாறு சுகப்பட்டுக் கொண்டிருப்பவனே மனுஷ்யோத்தமன் ஆவான்.
ஈ உபாஸனெகை3வ ரிளெயொளு
தே3வதெக3ளல்லத3லெ நரர
ல்லாவ ப3கெ3யிந்தா3த3ரிவரர்சனவெ ஹரிபூஜெ |
கேவல ப்ரதிமெக3ளெனிபரு ர
மாவினோதி3கெ3 இவரனுக்3ரஹ
வெ வரானுக்3ரஹவெனிஸுவுது முகுதியோக்3யரிகெ3 ||9
ஈ உபாசனெகைவரு = முந்தைய பத்யத்தில் கூறிய உபாசனையை
செய்பவர்கள்
இளெயொளு = பூமியில்
தேவதெகளல்லதலெ = தேவதைகளுக்கு சமம் ஆவார்கள்
நரரல்ல = சாதாரண மனிதர்கள் அல்லர்
ஆவபகெயிந்தாதரு = எந்த வகையிலாவது
இவரர்ச்சனவெ = இந்த பக்தர்களை பூஜிப்பது
ஹரிபூஜெ = ஸ்ரீஹரியின் பூஜையே
ரமாவினோதிகெ = லட்சுமி ரமணனுக்கு
இவரு கேவல ப்ரதிமெகளெனிபரு = இவர்கள் சல-பிரதிமைகளே
ஆவர்
முக்தியோக்யரிகெ = முக்தி யோக்யர்களுக்கு
இவரனுக்ரஹவெ = இவர்களின் அருளே
தேவர அனுக்ரஹவெனிஸுவுது = ஸ்ரீஹரியின் அருள் என்று
ஆகிறது.
அனைத்தையும் செய்வது பரமாத்மனே என்று உபாசனை
செய்பவர்களை, இந்த பூமியில் தேவதைகள் என்று அறிந்து, அனைத்து விதங்களிலும் அவரின் பூஜையை செய்தால், அது சாட்சாத் பரமாத்மனின் பூஜையென்றே ஆகிறது. இவர்களை பகவந்தனின் சல-பிரதிமை
என்றே நினைக்க வேண்டும். முக்தி யோக்யர்கள் இவரின் அருளைப் பெற்று, அதையே பரமாத்மனின் அருள் என்று நினைக்க வேண்டும்.
தனுவே நானெம்பு3வனு ஸதி ஸுத
மனெ த4னாதி3க3ளென்னதெ3ம்பு3வ
த்3யுனதி3 மொத3லாது3த3கக3ளெ ஸத்தீர்த்த2வெம்பு3வனு |
அனல லோஹாதி3 ப்ரதீகா
ர்ச்சனவெ தே3வரபூஜெ ஸுஜனர
மனுஜரஹுதெ3ம்பு3வனு கோ3க2ரனெனிப பு3த3ரிந்த3 ||10
தனுவெ நானெம்புவ = தேகமே நான் (ஜீவன்) என்பவன்
ஸதி ஸுத மனெ தனாதிகளு = மனைவி மக்கள் வீடு செல்வம்
என்னதெம்புவ = அனைத்தும் என்னுடையது என்பவன்
த்யுனதி மொதலாத = கங்கை முதலான
உதககளெ = தண்ணீரே
ஸத்தீர்த்தவெம்புவனு = புனித நீர் என்கிறான்
அனல = அக்னி
லோஹாதி = தங்கம், வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட
ப்ரதீகார்ச்சனவே = ப்ரதிமைகளின் பூஜையே
தேவரபூஜெ = தேவரபூஜை என்கிறான்
சுஜனரே = பகவத்பக்தர்களான சஜ்ஜனர்களே
மனுஜரஹுதெம்புவனு = சாமான்யரான மனிதர்கள் என்று
நினைப்பவன்
புதரிந்த = ஞானிகளால்
கோகரனெனிப = பூமியில் கழுதை என்று அழைக்கப்படுவான்.
தேகம் அநித்யமானது. ஜடம். ஜீவன் நித்யன். சேதனன்.
பிறப்பது,
வளர்வது, மாறுவது, இறப்பது, என இந்த மாறுதல்கள் அனைத்தும் ‘தேஹஸ்யைவ நசாத்மன:’ - தேகத்தை சேர்ந்ததே தவிர, ஜீவனுக்கு அல்ல. தேகமே தான் என்று
சொல்லிக்கொண்டு இருப்பதாலும், அத்தகைய தேக சம்பந்தம் ஜீவனுக்கு
இருந்தாலும், தேகத்திற்கு உண்டாகும் பிறப்பு, இறப்பு, சுக துக்கங்கள் ஆகியவை தேகத்திற்கு மட்டுமே சம்பந்தப்பட்டவை ஆகும்.
ஜீவன் பிறப்பவனும் அல்ல. வளர்பவனும் அல்ல. இறப்பவனும்
அல்ல. ஜடமான தேகத்திற்கு சம்பந்தம் ஆகும்போது, சுகதுக்கங்களுக்கு மட்டுமே சம்பந்தப்படுகிறான். குடம் நன்றாக
இருக்கும்வரையிலும், அதில் அந்த ரூபத்தில் ஆகாயம் அதற்குள் இருக்கிறது. ‘கடபின்னே யதாகாஷ ஆகாஷ ஸ்யாத்யதாபுரா’ என்னும் பாகவத 12ம் ஸ்கந்தத்தின் வாக்கியத்தின்படி, குடம் உடைந்தால் ஆகாயம் முன்னர்
இருந்ததைப் போல ஆகாயமாகவே நின்றுவிடுகிறது. அதாவது குடம் நாசமடைகிறதே தவிர, ஆகாயம் நாசம் அடைவதில்லை.
அப்படியே, தேகம் நஷ்டமடைந்தாலும், ஜீவன் இருந்தே இருக்கிறான். ஜீவனுக்கும் தேகத்திற்கும் இருக்கும் வேறுபாட்டினை
அறியாமல்,
தானே தேகம் என்றால் (தேகமே ஆத்மன் என்றால்), அது பிரமையே தவிர உண்மையல்ல.
பாகவத 11ம் ஸ்கந்தம் 22ம் அத்தியாயம் 45ம் ஸ்லோகத்தில்:
ஆத்ய: ஸ்வகர்ம பீஜேன ஜாயதே ஸோவ்யய: புமான் |
ம்ரியதீ சாமரோப்ராந்த்யா யதாக்னிர்தாரு ஸம்யுத: ||
விஜயத்வஜீய வியாக்யானம்:
நனுதேஹஸ்யைவ விகாரஸ்சேதஹம் ஜாதோஹம் ம்ருத இதி
ப்ரதீதி: கதமத்ராஹ ||
மாறுதல்கள் தேகத்திற்கே தவிர, ஜீவனுக்கு அல்ல என்றபிறகு, நான் பிறந்தேன். நான் இறக்கிறேன்
என்று எப்படி சொல்வது என்றால்: ஜீவன் ஆத்யன். முதலிலிருந்தே இருப்பவன். உத்பத்தி
இல்லாதவன்.
அமர வாக்கியம்:
மரணரஹித: ஆத்யந்த ஷூன்ய இத்யர்த்த:
ஜீவன் - மரணம் இல்லாதவன் ஆதி அந்தம் இல்லாதவன்.
வளர்ச்சி குறைபாடுகள் இல்லாதவன். பிறந்தான், இறந்தான் என்று நடைமுறையில் சொல்வதெல்லாம் மயக்கத்தினால். அதாவது, விவேக ஞானம் இல்லாமல் சொல்லப்படுபவை. எப்படி அக்னிக்கு உற்பத்தி, அழிவு இல்லாமல் இருந்தாலும், கட்டைகளை தேய்த்தால் அக்னி
பிறந்துவிட்டது என்று சொல்லமுடியாதோ, கட்டையே இல்லாமல் இருந்தால் அக்னி
நாசமடைந்துவிட்டது என்று சொல்வரோ, அப்படியே, ஜனன மரணங்கள் இல்லாத ஜீவனுக்கு அ-விவேகத்தினால் பிறப்பு, இறப்புகளை சொல்கிறார்கள்.
ஸஜாய மிதிதுக்ஞானம் நம்ருஷாயம் ஸ ஏவது |
இதி ஞானம் ம்ருஷைவஸ்யாத் பேதா பேதௌ யதஸ்தயோ: ||
அபேத ஏவ ஜீவஸ்ய நித்யம்ப்ரத்யேகஷ: ப்ருதக் |
தேஹதீப நதீவாரி பலாதீனாம் ப்ருதக்வத: ||
பேதாபேதௌ பரிக்ஞேயௌ கார்ய காரணயோபி ||
குணஸ்ய குணனஸ்சைவ ஜாதிவ்யாக்த்யோஸ்ததைவச |
கால சம்பந்தத்தினால் பால்யம், கௌமாரம், யௌவன ஆகியவை சரீரத்திற்கு மாறுதல்கள் கொண்டு வந்தாலும், குழந்தையாக பிறந்தபோது எந்த சரீரம் இருக்கிறதோ, அதே சரீரமே தொடர்ந்து இருக்கிறது என்று சொல்வதில் தவறு இல்லை. உண்மையே ஆகும்.
குழந்தையாக இருந்த சரீரமே வளர்ந்து மாறுதல் அடைந்ததால், இந்த சரீரத்தில் வேறுபாடு இல்லை என்று சொல்வது நியாயமே. ‘அயமேவஸ:’ அந்த தேகமே இவன் என்றால், அது உண்மையல்ல.
ஜீவனுக்கும் தேகத்திற்கும் வேறுபாடு இருப்பதால், இரண்டும் ஒன்றே என்று சொல்வது சாத்தியமில்லை. முதலில், மனித தேகத்தில் பிறந்த ஜீவனே, அந்த பிறவியை விட்டு, பின்,
நாயாக பிறந்திருக்க முடியும். தேகம் மட்டும், பால்ய, யௌவனாதி மாறுதல்களை அடைந்தாலும், அது (தேகம்) மாறுவதில்லை. அந்த
சரீரத்தை விட்டு, ஜீவனுக்கு வேறு சரீரம் வந்தால், தேகத்தில் ஒன்றுக்கொன்று வேறுபாடு
வருகிறது. ஆனால், ஜீவன் ஒருவனே. அந்த விஷயத்தில் சில ஆதாரங்களை இங்கு பார்க்கலாம்.
இப்படி வேறுபாடுகள் வருவது தேகத்திற்கு மட்டும் அல்ல.
நதியில் பாயும் தண்ணீர், பழங்கள் இவை அனைத்தும்
வேறுபாட்டிற்கு உள்ளாகின்றன. ஒரு மனிதனோ, மிருகமோ எந்த தேகத்தை பார்த்தாலும், இவன் மனிதன், இது மிருகம் என்று சொல்வர். ஆனால், அவனே இவன் அல்ல. இவன் வேறு, அவன் வேறு என்று ரூபங்களாலும், குணங்களாலும், பேதங்களை சொல்கிறோம். இவனும் மனிதன், அவனும் மனிதன் என்னும் விஷயத்தில்
வேறுபாடு இல்லை. ஆனாலும், ரூப,
குணங்களால் தேகங்களுக்கிடையே வேறுபாடுகள் இருக்கின்றன.
போலவே தீபங்களில், இதுவும் தீபமே அதுவும் தீபமே. ஆனால், இவ்வளவு நேரம் எரிந்து கொண்டிருந்த
தீபம் இதுவல்ல. இது வேறு என்று சொல்வார்கள். கங்கை நீரும் அப்படியே. இவ்வளவு நாள்
ஓடிக்கொண்டிருந்த தண்ணீர் இதுவல்ல. இது புதிதாக வருகிறது என்று சொல்கிறோம்.
பழங்களில், இதுவும் மாம்பழம்தான். ஆனால், நான் தின்ற பழம் இதுவல்ல. என்று, இவற்றிற்கு வேறுபாடுகளை நடைமுறையில் சொல்கிறோம். இதைப்போலவே, கார்யகாரண வஸ்துகளுக்கும், குண-குணிகளுக்கும் வேறுபாட்டினை
ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
இந்த பானை மண்ணால் செய்யப்பட்டிருந்த போதிலும், இது மண்ணல்ல. இது பானை. போலவே, தந்தையிடமிருந்தே மகன்
பிறந்திருந்தாலும், அவனே இவனல்ல என்று சொல்கிறோம். குண என்றால் என்ன? குணி என்றால் என்ன? பிறப்பு இறப்புகளே குணங்கள்.
அவற்றிலிருந்து தோன்றுவது குணி. அதாவது, தேகம். பிறப்பு இறப்புகளே தேகம்
அல்ல. பிறப்பு இறப்புகளால் கூடியது இந்த தேகம் என்று அர்த்தம். இவற்றிற்கு
வேறுபாடுகள் உண்டு. ஆகையால், ஜீவனே தேகம் என்று சொல்வது
சாத்தியமில்லை.
பாகவத மூல ஸ்லோகம் 46:
விசேஷ கர்ப்ப ஜன்மானி பால்ய கௌமார யௌவனம் |
வயோமத்யம் ஜராம்ருத்யு ரித்யவஸ்தாத னோர்னவ ||
பெண் வயிற்றில் நுழைவு, கர்ப்பத்தில் வளர்வது, பிறப்பு, குழந்தையாவது, பால்ய, யௌவனம், நடுத்தர வயது, முதுமை, இறப்பு என்னும் ஒன்பது நிலைகள் இருப்பது சரீரத்திற்கே தவிர, ஜீவனுக்கு அல்ல. இத்தகைய ஆதாரங்களின் பலத்தினால், ஜீவனுக்கும், தேகத்திற்கும் வேறுபாடு இருக்கிறது என்றும், ஜீவனே தேகம் என்று அறிபவன், கழுதையே ஆகிறான். மற்றும், மனைவி, மக்கள் ஆகியோர் என்னுடையவர்கள் என்று சொல்பவர்களையும் கழுதை என்றே சொல்ல
வேண்டும். இது எப்படியெனில், ஜீவனுக்கு, மனைவி, மக்கள், தந்தை, தாய் என்னும் எந்தவொரு சம்பந்தங்களும் இல்லை. தேக சம்பந்தத்தினால் தாய், தந்தை, கணவன், மனைவி, மக்கள் ஆகியவை வருகின்றன. ஒரு தேகத்தை விட்டவுடன், அந்த சம்பந்தங்கள் அனைத்தும் அங்கேயே முடிந்து போகின்றன.
மற்றொரு பிறவியை (தேகத்தை) எடுத்தால் அங்கு வெவ்வேறு
தாய் தந்தைகள் மக்கள் சம்பந்தம் வருகின்றன. தேகம் எப்படி ஸ்திரம் இல்லையோ, அப்படியே மனைவி, மக்களும் ஸ்திரம் அல்ல. ஜீவனுக்கும் ஜீவனுக்கும் சம்பந்தம் இல்லை. தேகமோ
இவருடையதும் ஸ்திரமல்ல. அவருடையதும் ஸ்திரமல்ல. இத்தகைய மனைவி, மக்கள், வீடு,
செல்வங்களில், என் மனைவி, என் மக்கள் என்று அபிமானம் செய்கின்றனர். தேகத்தை விட்டு, ஜீவன் ஆகாயத்தைப் போல நிற்கும்போது ‘க்வததீயரதிர் பார்யா
க்வேதந்துச்சம் அபிமான களேவரம்’ இவனின் சுகம் எங்கே? அவனின் மனைவி எங்கே? தற்காலிகமான அந்த தேகம்தான் எங்கே? எதுவும் தனக்கு அந்த சமயத்தில் உதவிக்கு வருவதில்லை.
ஆகையால், தேக சம்பந்தமான வஸ்துகளை, அவை தன்னுடையது என்று சொல்வது மயக்கமே தவிர வேறில்லை. கங்காதி நதிகளே
தீர்த்தங்கள் என்று அவற்றின் மஹாத்ம்ய ஞானம் இல்லாமல், பகவத் சன்னிதானத்தினாலேயே கங்கா நதிகளுக்கு மகிமை என்னும் ஞானம் இல்லாமல், அவற்றில் மூழ்கி எழுந்தாலும் எவ்வித பலன்களும் கிடைப்பதில்லை.
யதிச்சஸி மஹாராஜ ஸர்வதீர்த்தாவகாஹனம் |
விப்ரபாத வினிர்முக்தம் தோயம் ஷிரஸிதாரய ||
மோட்ச தர்மத்தின் வாக்கியத்திற்கேற்ப:
ஹே தர்மராஜனே. அனைத்து தீர்த்தங்களிலும் ஸ்னானம்
செய்யவேண்டும் என்று உனக்கு விருப்பம் இருந்தால், பிராமணரின் பாத பிரட்சாலனம் செய்து, அந்த தண்ணீரை உன் தலையில்
தெளித்துக் கொள், என்று பீஷ்மாசார்யர் கூறுகிறார். அதைப்போல, அனைத்து இடங்களிலும் பரமாத்மனை சிந்தித்து, சர்வகர்த்தா பரமாத்மனே என்று அறிந்து, ஸ்வகர்த்ருத்வ அபிமானத்தை கொஞ்சம்கூட வைத்துக்கொள்ளாமல் இருக்கும் மஹனீயர்களின்
பாதோதகங்களைவிட கங்காதி நீர் உன்னை புனிதமாக்கிவிடுமா? இல்லை. இத்தகைய உத்தமர்களை, சாமான்ய மனிதர் என்று நினைத்து, புறக்கணித்து, வெள்ளி, தங்க பிரதிமைகளை வைத்துக்கொண்டு, ஆடம்பர பூஜைகளை செய்தால், பரமாத்மன் மெச்சுவனோ? இல்லை.
பாகவத 3ம் ஸ்கந்தம் 30ம் அத்தியாயத்தில் 22-23ம் ஸ்லோகங்கள்:
யோவாம் ஸர்வேஷு பூதேஷு ஸந்தமாத்மானமீஷ்வரம் |
ஹித்வார்சாம் பஜதே மௌட்யாத்பஸ்மன்யேவ ஜுஹோதிஸ: ||
த்விஷத: பரகாயேமாம் மானினோ பின்னதர்ஷன: |
பூதேஷு பத்ததைரஸ்யன மன:ஷாந்தி ம்ருச்சதி ||
அனைத்து பிராணிகளிலும் வசிக்கும் ஈஸ்வரனான என்னை
விட்டுவிட்டு, எந்தவொரு மனிதன், மூடன் போல, பிரதிமைகளில் மட்டும் நான் இருக்கிறேன் என்று நினைத்து அந்த பிரதிமைகளை
பூஜிக்கிறானோ, அவன்,
சாம்பலில் ஹோமம் செய்தவன் என்று அறியவேண்டும். மந்திர உச்சாரணை செய்து ஹோமம்
செய்தால்,
ஏதோ கொஞ்சமாவது பலன் வரும். சாம்பலில் ஹோமம் செய்தால், எந்த பலனும் இல்லை. பகவத்பக்தர்களில் விசேஷ சன்னிதானத்தில் இருக்கும் என்னை
அறியாமல்,
பிரதிமைகளிலும் பக்தர்களிலும் இருக்கும் என் ரூபங்களில் வேறுபாட்டினை
சிந்தித்து, விஷ்ணு பக்தர்களிடம் த்வேஷத்தை வளர்த்தவாறு, என்னை பிரதிமைகளில் மட்டும் பூஜித்தால், அத்தகையவனின் மனம், என்றும் என்னிடம் ஸ்திரமாக
நிற்பதில்லை. அதாவது, அவன் எனக்கு ப்ரியன் ஆவதில்லை என்று பொருள். மேற்சொன்ன ஸ்லோகத்தில் இருக்கும் ‘பூதேஷு’ என்னும் சொல்லிற்கு, ‘வைஷ்ணவேஷு’ என்றும் ‘ஷாந்தி’ என்னும் சொல்லிற்கு, ’மன்னிஷ்டதா’ என்றும் அர்த்தம் சொல்லியிருப்பர்.
No comments:
Post a Comment