ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, July 2, 2020

21-25 சர்வ பிரதீக சந்தி

பரமத1த்வ ரஹஸ்யவிது3 பூ4

ஸுரரு கேள்வுது3 சாத3ரதி3 நி

ஷ்டுரிக3ளிகெ3 மூடரிகெ3 பண்டி3தமானி பி1ஷுனரிகெ3 |

அரஸிகரிகி3து பேள்பு33ல்லன

வரத ப4கவத்3 பாதயுக3ளா

ம்பு3ருஹ மது4கரரெனி ஸுவரரிகி33னருபு மோத33லி ||21

 

இது = இந்த கிரந்தம்

பரமதத்வ ரஹஸ்யவிது = மிகச்சிறந்த ரகசியமான தத்வ கிரந்தம் இது

பூசுரரு = பிராமணர்கள்

ஸாதரதி = மரியாதை பக்தியுடன்

நிஷ்டுரிகளிகெ = கடுமையாக பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு

மூடரிகெ = மூடர்களுக்கு

பண்டிதமானி = நானே பண்டிதன் என்னும் கர்வத்தில் இருப்பவர்களுக்கு

பிஷுனரிகெ = குருவிடமிருந்து கற்காமல், தான் சொல்வதே சரி என்று நிரூபிக்க முயல்பவர்களுக்கு

அரஸிகரிகெ = தத்வ ரகசியங்களை போற்றத் தெரியாதவர்களுக்கு

இது = இந்த கிரந்தமானது

பேள்வுதல்ல = சொல்லத்தக்கது அல்ல

அனவரத = எப்போதும் (இடைவிடாமல்)

பகவத் பாதயுக்ளாம்புருஹ மதுகரரெனிஸுவரரிகெ = பரமாத்மனின் பாத கமலங்களில் தேனைப் போல சுற்றி வருபவர்களுக்கு

மோததலி = மகிழ்ச்சியுடன்

இதனு = இந்த கிரந்தத்தை

அருபு = சொல்

 

பகவத் பக்தர்களே இந்த கிரந்தத்தை கேட்கத் தகுந்தவர்கள் என்கிறார். இந்த கிரந்தம், பரம ரகசியமான பகவத் தத்வத்தை அடக்கியிருக்கிறது. இதனை, பக்தர்களான பிராமணர்கள் கவனத்தில் வைக்க வேண்டும். எப்போதும் எதையும் எதிர்த்துப் பேசுபவர்கள், மூடர்கள், தாமே பண்டிதர் என்னும் கர்வத்தில் இருப்பவர்கள், பிடிவாதக்காரர்கள், தத்வ ரகசியங்களை போற்றத் தெரியாதவர்கள் இவர்களுக்கு இந்த கிரந்தத்தை சொல்லக்கூடாது. எப்போதும் பரமாத்மனின் பாதார விந்தங்களிலேயே யார் திட பக்தியை வைத்திருக்கிறார்களோ அவருக்கு மட்டுமே இதை சொல்ல வேண்டும்.

 

லோகவார்த்தெ இத3ல்ல பரலோ

கைகனாத2ன வார்த்தெ கேள்வரெ

காகுமனுஜரிகி3து3 சமர்ப்பகவாகி3 ஸொயிஸது3 |

கோ11னத3 பரிமளவ ஷட்பத3

ஸ்வீகரிஸுவந்த33லி ஜல சர

பே413ல்லுதெ3 இத3ர ரஸ ஹரிப4குதக3ல்லத3லெ ||22

 

இது = இந்த கிரந்தம்

லோகவார்த்தெ = ஆண் பெண்களை வைத்து நடத்தும் நாடகம் அல்ல

பரலோகைக நாதன வார்த்தெ = வைகுண்டாதி லோகங்களுக்கு ஸ்வாமியான பரமாத்மனின் மகிமைகளை வர்ணிக்கும் காவியம்

கேள்வரெ = இதனை பாவிகள் கேட்பார்களா? என்றைக்கும் கேட்கமாட்டார்கள்

ஏனெனில்,

காகுமனுஜரிகிது = விஷய சுகத்தையே சுகம் என்று நினைத்து, ஸ்ரீஹரியை மறந்து, நான் எனது என்று இருக்கும் ஸ்வதந்த்ர கர்த்ருத்வ அபிமானிகளுக்கு, இந்த கிரந்தமானது

ஸமர்ப்பகவாகி = மனதை திருப்திப்படுத்துமாறு

ஸொகசுவுதெ = தெரிகிறதே

கோகனத = சிகப்பு தாமரையின்

பரிமளவு = சுகந்தமானது (மகரந்தம்)

ஷட்பத = தேனீ

ஸ்வீகரிசுவந்ததலி = குடித்து மகிழ்ந்திருப்பதைப் போல

ஜலசர = நீரில் வசிக்கும்

பேக = தவளை

பல்லுதெ = அறியுமோ, அதுபோலவே

இதர ரஸ = இந்த கிரந்தத்தின் சுவை

ஹரிபகுதகல்லதலெ = சிறந்த ஹரிபக்தர் மட்டுமே இதனை அறிந்து போற்ற முடியும்

 

உலகத்தில் பொதுவாக மக்கள் எந்தத் தொழிலில் இருக்கின்றரோ, அதே தொழிலில் இருப்பவர்களுடனே நட்பு கொண்டிருப்பர். அவர்களுக்கு ஏற்ற கதைகளைக் கேட்பதே சம்பிரதாயமாக இருக்கிறது. நடன, நாடகம் போடுபவர்கள், சிறந்த நாடகங்களையே விரும்புவர். நாட்டிய நாடகங்களைப் பார்த்து மகிழ்வர். அதைப்போலவே, பகவத் பக்தர்கள், பகவந்தனின் கதைகளைக் கேட்பது, படிப்பது, உற்சவங்களைப் பார்த்து மகிழ்வது என்றே இருப்பர். ஆகையால், பொதுவாக பகவந்தனிடம் பக்தி இல்லாதவர்களுக்கு இந்த கிரந்தம் சுவைக்காது. ஏனெனில், இது வெறும் பகவந்தனின் மகிமைகளையே சொல்கிறதே தவிர, ஸ்த்ரி புருஷர்களின் வர்ணனை பற்றிய காவியம் அல்ல. பகவத் பக்தர்களைத் தவிர பிறருக்கு இந்த கிரந்தம் சுவைக்காது.

 

அது எப்படியெனில், தேனியானது, பூ வெகு தூரத்தில் இருந்தாலும், அதில் இருக்கும் மகரந்தத்தை அங்கிருந்தே கண்டுபிடித்து வந்துவிடுவதைப் போல, நீரில் இருக்கும் தவளையால் அது முடியுமா? இதைப்போலவே, பக்தர்களைத் தவிர இதரருக்கு இக்கிரந்தம் ருசிக்காது.

 

ஸ்வப்ரயோஜன ரஹித கலே

ஷ்ட ப்ரதா3யக ர்வகு3ண பூ

ர்ண ப்ரமேய ஜராமரண வர்ஜித விக3 க்லேஷ |

விப்ரதம விஷ்வாத்ம க்4ருணி ஸூ

ர்ய ப்ரகாஷானந்த3 மஹிம க்4ரு

த ப்ரதீகாராதி4ங்க்4ரி ரோஜ ஸுரராஜ ||23

 

ஸ்வப்ரயோஜன ரஹித = ஸ்ரீபரமாத்மன், யாரிடமிருந்தும் எவ்வித பலனையும் எதிர்பாராமல்

ஸகலேஷ்ட ப்ரதாயக = அனைவரின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றுபவன்

ஸர்வகுண பூர்ண = சகல குண சம்பூர்ணனானவன்

அப்ரமேய = அறியமுடியாத அபாரமான மகிமைகளைக் கொண்டவன்

ஜராமரண வர்ஜித = முதுமை, இறப்பு, இத்தகைய தோஷங்கள் அற்றவன்

விகதக்லேஷ = எந்தவித கஷ்டங்களையும் அடையாதவன்

விப்ரதம = விசேஷ ஞானம் பெற்று ஒளிர்பவர்களான பிரம்மாதிகளைவிட சிறந்தவன்

விஷ்வாத்ம = பிரபஞ்சத்தில் எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவன்

க்ருணி = தயாவந்தன்

ஸூர்ய ப்ரகாஷ = கோடி சூர்யர்களைவிட அதிக ஒளி தரக்கூடியவன்

அனந்தமஹிம = எல்லைகளற்ற மகிமைகளைக் கொண்டவன்

க்ருத ப்ரதிக = லட்சுமிதேவியின் கரங்களால் (நெய்யின் ரூபத்தில் தினமும் பரமாத்மனின் போஜனத்திற்கு உதவி செய்வதால், லட்சுமிதேவிக்கு க்ருதப்ரதீகா என்று பெயர்)

அங்க்ரி சரோஜ = தாமரை போன்ற கால்கள்

சுரராஜ = பிரம்மாதி தேவதைகளின் நடுவில் வீற்றிருப்பதால் சுரராஜன் என்று பெயர்.

ஜயஜயா என்னும் அடுத்த பத்யத்தில் இருக்கும் சொல்லை இங்கு பயன்படுத்த வேண்டும். ஜயஜயா என்றால் உன் வெற்றியை உலகத்திற்கு எடுத்துக்காட்டு என்று வேண்டுதல்.

 

வனசராத்3ரி த4ராத4ரனெ ஜய

மனுஜ ம்ருக3வரவேஷஜய வா

மன த்ரிவிக்ரம தேவஜய ப்4ருகு3ராம பூ4மஜய |

ஜனகஜாவல்லப4னே ஜய ரு

க்மிணி மனோரத ஸித்3தி4தா3யக

ஜினவிமோஹக கலிவிதா3ரண ஜய ஜயாரமண ||24

 

வனசர = நீரில் வாழும் - மத்ஸ்யரூபி

ஜய = வெற்றியைக் கொடு

அத்ரிதர = மந்தர மலையைத் தூக்கியவன் - கூர்மரூபியே, ஜய

தராதரனே = பூமியை காப்பாற்றிய வராகரூபியே, ஜய

மனுஜ ம்ருகவரவேஷ = நரசிம்ம ரூபத்தை தரித்த ஸ்வாமியே, ஜய

வாமன த்ரிவிக்ரம தேவஜய = வாமனனாக வந்து த்ரிவிக்ரமனாக வளர்ந்தவனே, ஜய

ப்ருகுராம பூம = பூஜ்யனான பரசுராமன், ஜய

ஜனகஜாவல்லபனெ = சீதாபதியான ராம, ஜய

ருக்மிணி மனோரத ஸித்திதாயக = ருக்மிணியின் மனதில் இருப்பவனே, ஸ்ரீகிருஷ்ணனே, ஜய

ஜினவிமோஹக = புத்த ரூபத்தினால் மக்களை மயக்கியவனே, ஜய

கலிவிதாரண = கல்கி ரூபத்தினால் கலியுகத்தின் பாவிகளை அழித்தவனே, ஜய

ஜயாரமண = ஜயா என்னும் பெயருள்ள ரமாதேவியின் பதியான சங்கர்ஷண நாமக ஸ்ரீஹரியே

ஜய = உலகத்தில் வெற்றியைக் கொடு

 

பரமாத்மனின் மத்ஸ்ய, கூர்மாதி தசாவதாரங்களை வணங்குகிறார்.

 

அத்ரிதர = கூர்மாவதாரம்

தராதர = பூமியைத் தூக்கிய வராகாவதாரம்

வாமனாவதாரம் செய்து தானம் பெற்று பூமியை அளந்தபோது த்ரிவிக்ரம ரூபத்தை தரித்திருப்பதால், வாமனாவதாரமே

த்ரிவிக்ரமாவதாரம்.

 

மற்ற சொற்களின் அர்த்தம் மேலே சொன்னதைப் போலவே இருக்கிறது.

 

சச்சிதானந்தா3த்ம பி3ரம்ம

ரார்ச்சிதங்க்4ரி ரோஜ ஸுமனஸ

ப்ரோச்ச ன்மங்கத மத்4வாந்த: கரணரூட4 |

அச்யுத ஜகன்னாத2விட்டல

நிச்சனெச்சித ஜனர பி33 கா

ட்3கி3ச்சனுண்டு3 அரண்யதொளு கோ3 கோ3பரனு காய்த3 ||25

 

சச்சிதானந்தாத்ம = சச்சிதானந்த ஸ்வரூபன்

பிரம்ம கரார்ச்சிதங்க்ரி சரோஜ = பிரம்மதேவரின் கைகளால் பூஜிக்கப்பட்ட பாத கமலங்களைக் கொண்டவன்

சுமனஸ = தேவதைகளால்

ப்ரோச்ச = புகழப்படுபவன்

சன்மங்களத = உத்தமமான சுப பலன்களை கொடுப்பவன்

மத்வாந்த:கரணரூட = மத்வாசார்யரின் அந்தரங்கத்தில் திடமாக அமர்ந்திருப்பவன்

அச்யுத = அழிவு இல்லாதவன்

அரண்யதொளு = யமுனா நதிக்கரையில் இருக்கும் ஒரு காட்டினில்

காடுகிச்சனுண்டு = காட்டினை எரித்து வரும் ஒரு காட்டுத்தீயை விழுங்கி

கோ கோபரன = பசுக்களையும், கோபாலகர்களையும்

காய்த = காப்பாற்றினான்

இத்தகைய

ஜகன்னாதவிட்டல = பிம்பரூபியான ஜகன்னாதவிட்டலன்

நிச்ச = இவன் தோஷங்கள் அற்றவன் என்று

மெச்சித = யாரின் பக்திக்கு மெச்சுவனோ, அத்தகைய

ஜனர = மக்களை, பக்தர்களை

பிட = விடாமல் காப்பாற்றுகிறான்.

 

யாருக்கு அருளவேண்டும் என்று பக்தவத்ஸலனான பகவந்தனின் மனதிற்கு படுகிறதோ, அவர்களை கண்டிப்பாக அருளியே தீர்வான். அதாவது, யார் தான் செய்யும் பக்தியை, பரமாத்மன் மெச்சுமாறு செய்கிறானோ, அவனுக்கு பரமாத்மன் தரிசனம் அளிக்கிறான் என்று சொல்லியவாறு, இந்த சந்தியை முடிக்கிறார். ஸ்ரீபரமாத்மன், சச்சிதானந்த ஸ்வரூபன். பிரம்மதேவரின் கைகளால் பூஜிக்கப்படும் பாத கமலங்களைக் கொண்டவர். தேவோத்தமன். அனைத்து பக்தர்களுக்கும் மங்களங்களைத் தருபவன். ஸ்ரீமன் மத்வாசார்யரின் இதய கமலத்தில் வசிப்பவன்.

 

ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில், ஒரு சமயம், கோபாலகர்கள் தங்கள் பசுக்களை யமுனா நதிக்கரையில் மேய்த்தவாறு, அங்கிருந்த ஒரு காட்டிற்கு அருகில் படுத்திருந்தபோது, இரவில் காட்டினில் காட்டுத்தீ பரவியதைக் கண்டு, அங்கிருந்தவர் பயந்து, கிருஷ்ணனிடம் முறையிட்டனர். 

 

நிமீலியத மாப்யைஷ்டலோசனானீத்ய பாஷத |

ததைவ மீலிதாக்‌ஷேஷு பகவானக்னி முல்பணம் |

பீத்வாமுகேன ர்த்தா க்ருசாத்யோகாதீ ஷோவ்யமோசயத் ||

 

ஸ்ரீகிருஷ்ணன், கோபாலகர்களைப் பார்த்து, பயப்படாதீர்கள். நீங்கள் அனைவரும் ஒரு நிமிடம் கண் மூடிக்கொள்ளுங்கள். என்று சொல்லி, அந்த கடுமையான காட்டுத்தீயினை விழுங்கி, கோபாலகர்கள் அனைவரையும் காட்டுத்தீயிலிருந்து காப்பாற்றினான் என்று பாகவத 10ம் ஸ்கந்தத்தில் வருகிறது.

 

நாசம் இல்லாதவனான ஜகன்னாதவிட்டலன் யமே வைஷவ்ருணுதெ தீனலப்ய:’ (அத்தியாயம் 13, ஸ்லோகம் 11-13) என்னும் ஸ்ருதியில் சொல்லியிருப்பதைப் போல, யார் தன்னிடம் பக்தி செய்து தன்னை மெச்சுவரோ, தான் யாருடைய பக்திக்கு மெச்சுகிறானோ, அவரை என்றைக்கும் கை விடமாட்டான்.

 

இத்துடன் 10ம் ஸந்தியான சர்வப்ரதீக சந்தி முடிவுற்றது.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

 

***


No comments:

Post a Comment