ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, July 26, 2020

1-5 பித்ருகண சந்தி

ஹரிகதா2ம்ருதசார கு3ருக3

கருணதிந்தா3பநிது பே1ளுவே

பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

 

முந்தைய சந்தியில், பரமாத்மன் அனைத்து பொருட்களிலும், கர்த்ரு, காரண முதலான ரூபங்களில் இருந்து, அவற்றை வழி நடத்துகிறான் என்று அறிந்து, எப்போதும் அவனை நினைத்தவாறு செய்யும் கர்மங்கள் அனைத்தும் சுப பலன்களைக் கொடுக்கின்றன. பக்தி இல்லாமல் செய்யும் இத்தகைய செயல்கள் நற்பலன்களைக் கொடுக்காது என்று சொல்லி, அனுசந்தானம் மற்றும் பக்தி இல்லாதவன் செய்யும் செயல்கள், அல்ப பலன்களையே கொடுப்பதாக இருந்தாலும், தனக்கான செயல்களை செய்வதே சரியானதாகும். அவற்றை விடக்கூடாது என்னும் அர்த்தத்தை இந்த 14ம் சந்தியில் பித்ருகளைக் குறித்து செய்யும், நித்ய நைமித்திக கர்மங்கள் மிகவும் அவசியமானவை என்று கூறுகிறார்.

 

க்ருதிரமண ப்ரத்3யும்ன வஸுதே3

வதெக3ள அஹங்கார த்ரயதொ3ளு

சதுரவிம்ஷதி ரூபதி3ந்த3லி போ4ஜ்யனெனிஸுவனு |

ஹுதவஹாக்‌ஷாந்தர்க3த ஜயா

பதியு தானெ மூரதி4க த்ரிம்

ஷதி ஸுரூபதி3 போ3க்த்ரு எனிஸுவ போக்த்ருக3ளொளித்து3 ||1

 

க்ருதிரமண ப்ரத்யும்ன = க்ருதி தேவியின் பதியான பிரத்யும்ன நாமக பரமாத்மன்

வசுதேவதெகள = அஷ்ட வசுக்களில் இருக்கும்

அஹங்காரத்ரயதொளு = வைகாரிக, தைஜஸ, தாமஸ என்னும் மூன்றுவித அஹங்காரங்களில்

சதுரவிம்ஷதி ரூபதிந்தலி = 8 வசு * 3 ரூபம் = 24 ரூபங்களால்

போஜ்யனெனிஸுவனு = போஜ்ய என்று அழைத்துக் கொள்கிறான்

ஹுதவஹாக்‌ஷ = அக்னி நேத்ரரான ருத்ரரே முதலான 11 ருத்ரரில்

அந்தர்கத = அந்தர்யாமியான

ஜயாபதியு = ஜயாதேவியின் பதியான ஸ்ரீசங்கர்ஷணன்

தானே,

மூரதிக த்ரிம்ஷதி சுரூபதி = 33 சிறந்த ரூபங்களில்

போக்த்ருகளொளித்து = போக்த்ருகளில் இருந்து

போக்த்ரு எனிஸுவ = போக்த்ரு என்று அழைத்துக் கொள்கிறான்.

 

பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹ என்னும் 3வித பித்ருகளுக்கு வசுகண, ருத்ரகண, ஆதித்யகண என்னும் மூன்று கணங்கள் உள்ளன. அதில் வசுகணத்தை சேர்ந்தவர் 8 பேர். ஒவ்வொருவரிலும், வைகாரிக, தைஜஸ, தாமஸ என்னும் மூன்றுவித அஹங்கார தத்வங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்று அஹங்காரத்தில் ஒவ்வொரு ரூபம் என்று, 8*3=24 ரூபங்களால்; ஸ்ரார்த்தத்தில் போஜன யோக்யமான பதார்த்தங்களில் இருந்து, க்ருதிபதியான பிரத்யும்னன், தன்னை, போஜ்ய என்று அழைத்துக் கொள்கிறான். 11 ருத்ரதேவரில் ஒவ்வொருவரிலும் மூன்று அஹங்காரங்களாக 11*3=33 அஹங்காரங்களில் 33 ரூபங்களால் ஜயாபதியான சங்கர்ஷணன் பித்ருகளை ஆவாஹனம் செய்திருக்கும் பிராமணரில் இருந்து பதார்த்தங்களை உண்டு, போக்த்ரு என்று அழைத்துக் கொள்கிறான்.

 

ஆரதி4க மூவத்து ரூபதி3

வாரிஜாப்தனொளிருதிஹனு மா

யாரமண ஸ்ரீவாஸுதேவனு கால நாமத3லி |

மூருவித3 பித்ருக3ளொளு வஸு த்ரிபு

ராரி ஆதி3த்யகனிருத்த4னு

தோரிகொள்ளதெ கர்த்ருகர்ம க்ரியவெனிஸிகொம்ப3 ||2

 

ஆரதிக மூவத்து ரூபதி = 36 ரூபங்களால்

மாயாரமண = மாயாரூபியான ஸ்ரீலட்சுமிதேவியின் பதியான வாசுதேவரூபி பரமாத்மன்

கால நாமதலி = கால என்று அழைத்துக் கொண்டு

வாரிஜாப்தனொளு = சூர்யர்களில்

இருதிஹனு = இருக்கிறான்

மூருவித பித்ருகளொளு = மூன்று வித பித்ருகளில்

வசு = வசுகண

த்ரிபுராரி = ருத்ரகண

ஆதித்யக = ஆதித்ய கண

அனிருத்தன் = இவர்களில் அனிருத்தன் இருக்கிறான்

தோரிகொள்ளதே = தன்னை காட்டிக் கொள்ளாமல்

கர்த்ரு = செய்பவர்

கர்ம = செய்யும் செயல்

க்ரிய = செய்யும் விதம்

எனிஸிகொம்ப = கர்த்ருக்குள் இருந்து கர்த்ரு என்றும்; கர்மத்தில் இருந்து கர்ம என்றும்; க்ரியாவில் இருந்து க்ரிய என்றும் அழைத்துக் கொள்கிறான். மேலும் இந்த ரூபங்களில் இருந்து அந்த பெயர்களாலேயே அழைத்துக் கொள்கிறான்.

 

ஆதித்யகணங்கள் 12 பேர். இவர்கள் ப்ரபிதாமஹர்களில் இருப்பவர்கள். இவர்களில் ஒவ்வொருவரிலும் வைகாரிகாதி மூன்று அஹங்காரங்கள் என்று மொத்தம் 12 * 3 = 36 ரூபங்களால், மாயாதேவியின் பதியான ஸ்ரீவாசுதேவன், கால நாமகனாக ஸ்ரார்த்த காலத்தில் வியாப்தனாக இருக்கிறான். இப்படியே, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ இந்த மூவரையும் சொல்கிறார்.

 

அடுத்து, அனிருத்தன் எங்கு இருக்கிறான் என்கிறார். ப்த்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹ என்னும் மூன்று வித பித்ருகளுக்கு அதிபதிகளான வசுகண, ருத்ரகண, ஆதித்ய கணங்களில் அனிருத்தன் இருக்கிறான். அவன், தன் கர்த்ருத்வத்தை தெரியப்படுத்தாமல்,

 

* ஸ்ரார்த்தம் செய்பவரில் இருந்து, கர்த்த என்றும்,

* ஸ்ரார்த்த கர்மத்தில் இருந்து கர்ம என்றும்,

* பிராமண பாதபிரட்சாலன, போஜன முதலான செயல்களில் இருந்து க்ரிய என்றும்

அழைத்துக் கொள்கிறான்.

 

ஸ்ரார்த்த கல்பத்தில், விஸ்வேதேவதைகளில் அனிருத்த, நாராயண ரூபங்களாலும், பித்ராதிகளில் ப்ரத்யும்னாதி ரூபங்களாலும், இருக்கிறார் என்று சொல்கிறார். ஆனால் இங்கு பித்ருகளிலேயே அனிருத்தனை ஏன் சொல்கிறார் என்றால், கல்பத்தில், விஸ்வேதேவதைகளில் இருந்து ஆவாகனம் செய்யப்பட்டு, அனிருத்த, நாராயணர்கள், போஜ்ய, போக்‌ஷ்ய என்று அழைக்கப்படுகிறார் என்று சொல்கிறார். அது மட்டுமல்ல. பித்ருகளிலும்கூட இருந்து கர்த்ரு, கர்ம, க்ரிய என்றும் ஆகிறான் என்னும் விசேஷ அர்த்தத்தை சொல்கிறார்.

 

ஸ்வவஷ நாராயணனு தா ஷ

ண்ணவதி நாமதி3 ரெஸுதலி வஸு

ஷிவ திவாகர கர்த்ரு கர்ம க்ரியெக3ளொளகி3த்து |

நெனவவில்லதெ3 நித்யத3லி த

ந்னவரு மாடு3ஸேவெகை3கொ

ண்ட3வர பித்ருக3ளிகீ3வ நந்தா3னந்த3 ஸு23ளனு ||3

 

ஸ்வவஷ = ஸ்வதந்த்ரனான

நாராயணனு

தா = தான்

வசு = 8 வசுக்களில் 24 ரூபங்களாலும்

ஷிவ = 11 ஆதித்யரில் 33 ரூபங்களாலும்

திவாகர = 12 சூரியர்களில் 36 ரூபங்களாலும்

கர்த்ரு கர்ம க்ரியெகளொளகித்து = கர்த்ரு, கர்ம, க்ரியை ஆகியவற்றில் இருந்து

ஷண்ணவதி நாமதலி = ஷண்ணவதி (96) என்னும் பெயரில்

கரெஸுதலி = அழைத்துக் கொண்டு

இத்து = இருந்து

நெவனவில்லதெ = எந்தவொரு பிரதிபலனும் இல்லாமல்

நித்யதலி = தினந்தோறும்

தன்னவரு = தன் பக்தர்கள்

மாடுவ = மேற்கூறியவாறு அனுசந்தானத்துடன் செய்யும்

சேவெ கைகொண்டு = ஸ்ரார்த்தாதி சேவைகளை ஏற்றுக்கொண்டு

அவர பித்ருகளிகெ = அவர்களின் பித்ருக்களுக்கு

அனந்தானந்த சுககளன்னு = அனந்தானந்த சுகங்களை

ஈவ = கொடுக்கிறான்.

 

மேற்கூறியதைப்போல, ப்ரத்யும்னன் 8 வசுக்களிலும், ஒவ்வொருவரிலும் இருக்கும் வைகாரிக, தைஜஸ, தாமஸ என்னும் மூன்று வித அஹங்காரங்களில் மூன்று ரூபங்களால் 8*3=24 ருபங்களில் இருக்கிறான். இதைப்போல,

* 11 ருத்ரரில் சங்கர்ஷண ரூபி 33 ரூபங்களிலும்,

* 12 ஆதித்யரில் வாசுதேவ ரூபி 36 ரூபங்களிலும் இருக்கிறார்கள்.

* கர்த்ரு, கர்ம, க்ரியைகளில் அனிருத்தனின் ரூபங்கள் 3.

ஆக மொத்தம் 96 ரூபங்கள் ஆகின்றன. அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ என்னும் 96 ‘கண்டரூபங்கள் இவற்றில் அகண்டவாகி ஸ்ரீ நாராயணன், அனிருத்தாதி 4 ரூபங்களால் வியாபித்து ஷண்ணவதி என்னும் பெயரில் அழைத்துக் கொள்கிறான்.

 

அதாவது,

* அனிருத்தனின் ரூபங்கள் கர்த்ரு, கர்ம, க்ரியா என்னும் 3,

* வசுகளில் பிரத்யும்ன ரூபங்கள் 24

* ருத்ரரில் சங்கர்ஷண ரூபங்கள் 33

* ஆதித்யரில் வாசுதேவ ரூபங்கள் 36

 

ஆக மொத்தம் 96 ரூபங்கள், அனிருத்தாதி 4 ரூபங்களுக்கு பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்ரீ நாராயணன், வசுகண, ருத்ரகண, ஆதித்யகண, கர்த்ரு, கர்ம, க்ரியை இவற்றில் வியாப்தனாகி மொத்தம் 96 ரூபங்களால் ஷண்ணவதி என்னும் பெயரால் இருந்து, தன் பக்தர்கள் செய்யும் ஸ்ரார்த்த கர்மத்தை ஏற்று, அவர்களின் பித்ருகளுக்கு அனந்தானந்த சுகங்களைக் கொடுத்து அவர்களை காப்பாற்றுகிறான்.

 

தந்துபடத3ந்தத3லி லகுமி

காந்த பஞ்சாத்மகனெனிஸி வஸு

கந்துஹர ரவி கர்த்ருக3ளொளித்த3னவரத தன்ன

சிந்திஸுந்தரனு கு3ரு ம

த்வந்தராத்மக ந்தயிஸுவனு

ந்ததகி2லார்த்த23ள பாலிஸி இஹ பரங்க3ளலி ||4

 

தந்துபடதந்ததலி = துணியில் நூல்கள் குறுக்கும் நெடுக்குமாக இருந்து, ஆடையாக மாறியிருப்பதைப் போல

லகுமிகாந்த = லட்சுமிபதி

பஞ்சாத்மகனெனிஸி = அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ, நாராயண ஸ்வரூபன் என்று அழைத்துக் கொண்டு

வசு = வசுகண

கந்துஹர = மன்மதனை எரித்த ருத்ரர்; அதாவது ருத்ரகண

ரவி = ஆதித்யகண

கர்த்ருகளொளு = கர்ம செய்பவர்களில் இருந்து

அனவரத = எப்போதும்

தன்ன = தன்

சிந்திஸுவ = தியானம் செய்யும்

சந்தரனு = பக்தர்களை

குரு மத்வந்தராத்மக = நம் முக்கிய குருவான ஸ்ரீமன் மத்வாசார்யரின் அந்தர்யாமியாக இருக்கும் ஸ்ரீபரமாத்மன்

இஹபரங்களலி = இஹ பரங்களில்

ஸந்தத = எப்போதும்

அகிலார்த்தகள = அவரின் விருப்பங்களை

பாலிஸி = கொடுத்து (நிறைவேற்றி)

சந்தயிஸுவனு = அருள்கிறான்.

 

நூல் எப்படி குறுக்கும் நெடுக்குமாக சென்று ஒரு ஆடையாக உருவாகிறதோ, அதுபோலவே அனிருத்தாதி ரூபங்களால், வசு ருத்ராதி ஆதித்யரில் 96 ரூபங்களில் இருந்து, லட்சுமிபதியான நாராயணன், தன்னை தினந்தோறும் தியானம் செய்தவாறு, ஸ்ரார்த்தாதிகளை அனுசந்தானத்துடன் செய்பவர்களை ஆயு: ப்ரஜாம் தனம் வித்யாம் ஸ்வர்க்கம் மோக்‌ஷம் சுகானிச ப்ரயச்சந்திஎன்று ஸ்ரார்த்த காலத்தில் சொல்வதைப் போல, ஆயுள், வாரிசு, செல்வம், கல்வி, ஸ்வர்க்கம், மோட்சம் என்னும் இஹபர சுகங்களைக் கொடுத்து, அருள்கிறான் என்பது கருத்து.

 

தந்தெ3 தாய்க3ள ப்ரீதிகோஸு2

நிந்த்யகர்மவ தொரெது3 விஹிதக3

ளொந்து3 மீரதெ3 ஸாங்க3 கர்மக3ளாசரிஸுவவரு |

வந்த3னியராகி3 இளெயொளு தை3

நந்தி3னதி3 தை3ஷிக தஹிக ஸு2

தி3ந்த3 பா3ள்வரு பஹுதி3வஸத3லி கீர்த்தியுதராகி3 ||5

 

தந்தெ தாய்கள = பெற்றோரின்

ப்ரீதிகோசுக = அவர்களை மகிழ்விப்பதற்காக

நிந்த்யகர்மவ = செய்யக்கூடாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட செயல்களை

தொரெது = விட்டு

விஹிதகளொந்து மீரதெ = செய்யவேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவற்றை

சாங்க கர்மங்கள = அத்தகைய கர்மங்களை

ஆசரிசுவவரு = செய்பவர்கள்

இளெயொளகெ = பூமியில்

வந்தனியராகி = அனைவராலும் வணங்கப்பட்டு

தைனந்தினதி = தினந்தோறும்

கீர்த்தியுதராகி = புகழ்பெற்று

பஹுதிவஸதலி = வெகு காலம் வரைக்கும்

தைஷிக = தேச சம்பந்தமான

தஹிக = தேக சம்பந்தமான

சுகதிந்த = சுகங்களால்

பாளுவரு = வாழ்வர்.

 

ஸ்ரார்த்த கர்மங்களை செய்பவர்கள், தம் தாய் தந்தைகளில் அன்புடன், செய்யக்கூடாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட விஷயங்களை செய்யாமல், செய்யவேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கர்மங்களை - ஸ்ரார்த்தாதிகளை - செய்து, பித்ருகளின் அந்தர்யாமியான ஜனார்த்தன வாசுதேவருக்கு ப்ரீதி ஆகட்டும் என்று அவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி செய்தால், பூமியில் மக்களால் பூஜ்யராகி, தினந்தோறும் தேச சம்பந்தமாகவும், தேஹ சம்பந்தமாகவும், சுகங்களையே அனுபவித்து, புகழ்பெற்றவர்களாக, வெகு காலம் வரைக்கும் இருப்பர்.

 

தேச சம்பந்தம் என்றால், சில இடங்களில் கோடையிலும் குளிர் தெரியலாம். சில இடங்களில் குளிர் காலத்திலும், வெப்பம் அதிகம் இருக்கலாம். அத்தகைய இடங்களில் இருந்தாலும், தேச சம்பந்தமான சீதோஷ்ண பிரச்னைகள் இல்லாமல் சுகமாக இருப்பார்கள் என்பது கருத்து.

 

தேக சம்பந்தம் என்றால், நோய் நொடி இல்லாமல், திடமாக இருப்பார்கள் என்று அர்த்தம். 

No comments:

Post a Comment