ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, July 22, 2020

16-20 நாமஸ்மரண சந்தி

ஸ்ரீலகுமிவல்லப4னு ஹ்ருத்கீ1

லாலஜதொ3ளித்த3கி2ல சேதன

ஜாலவனு மோஹிஸுவ த்ரிகு3ணதி33த்தரனு மாடி3 |

ஸ்தூ2 கர்மதி3 ரதர மாடி3 ஸ்வ

லீலெக3ள திளி3லெ ப4வதி3 கு

லால சக்ரத3 தெரதி3 திருகி3ஸுதிஹனு மானவர ||16

 

ஸ்ரீலகுமி வல்லபனு = லட்சுமிபதி

ஹ்ருத்கீலாலஜதொளு = இதய கமலத்தில் (கீலால = நீர். ஜ = அதில் பிறந்தது, அதாவது கமலம்)

இத்து = இருந்து

அகிள சேதன ஜாலவனு = அனைத்து ஜீவ சமூகத்தை

த்ரிகுணதி = சத்வ ரஜஸ் தமோ குணங்களால்

பத்தரனமாடி = கட்டப்பட்டவர்களாக செய்து

மோஹிஸுவனு = விரும்புவான்

ஸ்தூலகர்மதி ரதர மாடி = ஸ்தூலமான கர்மங்களை செய்ய வைத்து

சுலேலெகள திளிஸதலெ = தன் உத்தமமான மகிமைகளை, லீலைகளை மக்களுக்கு தெரியப்படுத்தாமல்

மானவர = மனிதர்களை

பவதி = சம்சாரத்தில்

குலாலசக்ரவதெரதி = குயவனின் சக்கரத்தைப் போல

திருகிசுதிஹனு = சுற்றுவான்.

 

ஸ்ரீலட்சுமிபதி, அனைத்து மக்களின் இதய கமலத்தில் நிலைத்திருந்து, அனைத்து ஜீவர்களையும் த்ரிகுணங்களில் கட்டி, அவர்களை விரும்புவான் என்கிறார் தாசராயர். இதைப் பார்த்தால், பரமாத்மனே ஜீவர்களை மூன்று குணங்களில் கட்டி வைத்திருக்கிறான் என்று அர்த்தம் வருகிறது. அப்படி சொல்வதற்கில்லை. ஏனெனில், மகாபாரத தாத்பர்ய நிர்ணய 1ம் அத்தியாயத்தில்:

 

த்ருஷ்ட்வாஸ சேதனகர்ணா ஜடரே ஷயனானானந்த மாத்ர வபுஷ: ஸ்ருதி விப்ரமுர்க்தா |

த்யானம் கதா ஸ்ருதிகதாம்ஸ்ச சுஷுப்தி சம்ஸ்தா பிரம்மாதிர்கா கலிபர்கா மனுஜாம் ஸ்தத்யைக்‌ஷத் ||

 

* வெறும் ஆனந்த ஸ்வரூபத்தைக் கொண்டிருக்கும் முக்தர்களை, ஸ்ருஷ்டிக்கு யோக்யர் ஆனவர்களில், த்யானம் செய்பவர்கள், நித்ய சம்சாரிகள், சுஷுப்தி நிலையில் இருப்பவர்கள் என்றால் பிரம்மதேவரே முதலான சாத்விகர்,

* கலி முதலான தாமஸர்,

* மனுஷ்யரான ராஜஸர்,

 

என அனாதி காலத்திலிருந்து மூன்று குணங்களால் கட்டுப்பட்ட ஜீவர்களை தன் வயிற்றில் வைத்திருக்கிறான் என்று தெரிகிறது. இதே விஷயத்தை விஷ்ணு ரஹஸ்யத்தில் 2ம் அத்தியாயத்தில் விளக்கியுள்ளனர்.

 

கல்பயித்வாகிளான் பஸ்சாஜ்ஜீவரஷீர் வலோகயம் ||24

கதிசித்புருஷாகார: கதிசித்தயரூபிண: ||

ஸிம்ஹ வ்யாக்ர ம்ருகாதீனாம் கஜகோஜா விபக்‌ஷிணாம் ||35

வ்ருக்‌ஷகுல்மலதாதீனாம் மாகாரம் பிப்ரதோபரே ||

அபரே ஸத்ருஷாகாரா ஜுஷமீனாதி யாதஸாம் ||36

ஸ்வரூபேணைவ யோஜீவா ஸ்தாத்ருஷானந்த ஸஞ்ஞகா: |

குணைரனேக ஸங்க்யைகை: ப்ரத்யேகமபிசான்விதா: ||37

ஸாத்விகா ஷ்வேதரூபாஸ்து ஷ்யாமாஸ்தத்ரேவ தாமஸா: |

தத்ராபி தாரதம்யேன ஷ்வேதஸ்வேத தராதிகம் ||38

யதாயோக்ய தயாஸர்வே ராஜஸா ஷபலாஸ்ததா |

தத்ததாகார ஸத்ருஷைர் லிங்கதேஹைரனாதிபி: ||39

கஞ்சுகைரிவ ஸஞ்சலான்னாஸ் தத்தத்வர்ணை: ப்ருதக் ப்ருதக் |

 

பரமாத்மன் பிரம்மதேவருக்கு சொல்வது:

மஹத்தத்வங்களை ஸ்ருஷ்டித்த பிறகு, ஜீவராசிகளை பார்த்தேன். அதில் ஸ்வரூபத்திலேயே சிலர் புருஷ ரூபத்திலும், சிலர் குதிரையின் ரூபம், வேறு சிலர் சிங்கம், புலி, மான் முதலான மிருகங்களின் ரூபங்களாகவும், வேறு சிலர் யானை, பசு, ஆடு, பறவைகளின் ரூபங்களாகவும், வேறு சிலர், மரங்கள், செடி கொடிகளைக் கொண்டும், வேறு சிலர் மீன், ஆமை, முதலான நீர்வாழ் உயிரினங்களின் உருவங்களைக் கொண்டும் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஸ்வரூபத்திலேயே இப்படி இருந்தனர். இத்தகைய ஜீவர்கள் ஏராளமாக இருந்தனர். ஒவ்வொரு ஜீவரின் குணமும் தனித்தனியாக அனேக எண்ணிக்கையிலான குணங்களால் பிறந்திருந்தன. இந்த ஜீவர்கள், மூன்று குணங்களால் கட்டுப்பட்டிருந்தனர். சாத்விக, ராஜஸ, தாமஸ குணங்கள் அனைத்து ஜீவராசிகளிலும் இந்த மூன்று பேதங்கள் இருந்தன. இந்த மூன்று குணங்களை அவர்களின் வர்ணங்களே காட்டியது. சாத்விகர்கள் வெண்மையாக இருந்தனர். தாமஸர்கள் கருப்பு வண்ணத்தில் இருந்தனர். ராஜசர் சிகப்பு வண்ணத்தில் இருந்தனர்.

 

இந்த சாத்விகரில்

சிலர் சாத்விக-சாத்விகர்,

சிலர் சாத்விக-ராஜ்ஸர்,

வேறு சிலர் சாத்விக-தாமஸர்.

 

ராஜஸர்களில்,

சிலர் ராஜச-சாத்விகர்,

சிலர் ராஜச-ராஜசர்

வேறு சிலர் ராஜச-தாமஸர்.

 

இதைப்போலவே தாமசர்களில்

சிலர் தாமச-சாத்விகர்,

சிலர் தாமச-ராஜசர்

வேறு சிலர் தாமச-தாமசர்களாக இருந்தனர்.

 

இவற்றில் ஒவ்வொன்றிற்கும் நடுவே வேறுபாடுகள் உண்டு. அவை கலவையான வண்ணங்களால் இருக்கின்றன. சுத்தமான வெண்மை, வெண்மை கலந்த கருப்புவெண்மை கலந்த சிவப்பு என அனேக வண்ணங்கள் இருந்தன.

இப்படியாக அந்த ஜீவர்களின் ஸ்வரூபங்கள், அவர்கள் சாத்விக, ராஜஸ, தாமசர்கள் என அடையாளம் காட்டின. ஜீவர்களின் ஸ்வரூப தேகத்தின் மேலே, கவசம் போட்டதைப் போல, அதே வண்ணங்களால், அதே உருவத்தினால் ஆன, லிங்க சரீரம், ஒரு உறையைப் போல மூடிக்கொண்டிருந்தது, என்று பரமாத்மன், பிரம்மதேவருக்குக் கூறுகிறான். இத்யாதி பிரமாணங்களால், அனாதி காலங்களிலிருந்து ஜீவர்கள் த்ரிகுணங்களால் கட்டப்பட்டவர்கள் என்று தெரிகிறது.

 

இப்படி இருக்கையில், தாசராயர், ‘த்ரிகுணதி பத்தரன மாடிஎன்னும் வாக்கியத்தால், பரமாத்மன் ஜீவர்களை தன் விருப்பப்படியே, சிலரை சாத்விகர்களாக, சிலரை ராஜஸர்களாக, சிலரை தாமசர்களாக செய்தான் என்று சொல்வதாக தோன்றுகிறது. இது சித்தாந்தத்திற்கு எதிராக இருப்பதால், இதை அப்படி அர்த்தம் கொள்ளக்கூடாது.

 

அனாதி காலத்திலிருந்து, ஜீவர்கள் த்ரிகுணங்களால் கட்டுப்பட்டவர்களாக இருந்தாலும், ஜீவாச்சாதிகா, பரமாச்சாதிகா என்னும் இரு துஷ்ட ப்ரக்ருதியின் ஆவரணத்தினால் (உறை) மூடப்பட்டு, சாத்விகர் என்றும், ராஜசர் என்றும், தாமசர் என்றும் அழைத்துக் கொண்டனர். ஜீவனின் ஸ்வரூபம், ஜீவனுக்கு தெரிவதில்லை. அத்தகைய ஜீவருக்கு அவரவர்களின் யோக்யதைக்கேற்ப உள்ள கர்மங்களை செய்வித்து அதன் பலன்களைக் கொடுப்பதற்காக, சாத்விகர்களுக்கு பரமாத்மனில் பக்தி ஆகியவற்றை வளர்ப்பதற்காக, சாத்விக தேகமான தேவதா சரீரத்தையும், ராஜஸர்களுக்கு மனுஷ்ய சரீரத்தையும், தாமஸர்களுக்கு தைத்ய சரீரத்தையும் கொடுத்து அவரவர்களின் யோக்யதைக்கேற்ப கர்மங்களை செய்விக்கிறான். -- என்கிற அர்த்தமே வருகிறதே தவிர, ஜீவர்களையே சாத்விகாதி குணங்களைக் கொண்டவர்களாக ஆக்கினான் என்னும் அர்த்தம் வருவதில்லை. பரமாத்மன் செய்யும் செயல்களை, ஜீவன், பகவன் மாயையால் அவற்றை தானே செய்தேன் என்று அறிகிறான். பரமாத்மன் அனைவரிலும் இருந்து கர்மங்களை செய்கிறான் என்றால், இதை யாராவது அறியாமல் இருப்பார்களா? ஞானிகள் தங்களின் ஞான-சமாதிகளால் பகவன் மகிமைகளை அறிகின்றனர். அஞ்ஞானிகள் அதை அறிவதில்லை.

 

இது உண்மையானால், அது சிலருக்கு மட்டும் ஏன் தெரிகிறது? ஏன் சிலர் அதனை அறிவதில்லை என்றால், பாகவதம் 7ம் ஸ்கந்தம் 1ம் அத்தியாயம், 6ம் ஸ்லோகத்தில்: நிர்குணோபி ஹ்யசோவ்யக்த:என்று இருக்கிறது. இதில் இருக்கும் அவ்யக்தசப்தத்திற்கு, வியாக்யானத்தில், ‘தர்ஹிகுதோ விவிச்யனஞாயதே இத்யதோ வ்யக்த இதி’  என்கிறார்.

 

(ஜீவ-பின்ன-பரமாத்மனே அனைவரிலும் இருந்து கர்மங்களை செய்வித்தவாறு கட்டுப்படுபவனும், கட்டுப்படுத்துபவனும் தானே ஆனால்? என்னும் முந்தைய ஸ்லோகத்திற்கான விளக்கம் இது).

 

ஜீவ-பின்ன-பரமாத்மன் ஏன் தெரிவதில்லை? என்றால், அதற்கு விடையாக அவ்யயஎன்கின்றனர்.

 

ததிஸ்த க்ருதவத்காஷ்டே வன்ஹிவச்ச ஜனார்த்தன: |

தேஹேந்த்ரியாஸு ஜீவேப்யோ விவிச்ச ஞாயதே நது ||

 

தயிருக்குள் நெய் இருக்கிறது. இது நமக்குத் தெரியும். ஆனால், தயிரைப் பார்த்தால் உடனடியாக நெய் தெரிகிறதா? அதை கடைந்து, வெண்ணெய் எடுத்து, அதை காய்ச்சினால் நெய் வருகிறது. அதைப்போலவே, கட்டையில் நெருப்பு இருக்கிறது. கட்டையைப் பார்த்தால் நெருப்பு தெரிவதே இல்லை. இரு கட்டைகளை தேய்த்தால், அங்கு நெருப்பு வருகிறது. அப்படியே பரமாத்மன், ஜீவர்களில் இருந்து அனைவருக்கும் தெரிவதில்லை. தயிர் கடைந்து, வெண்ணெய் காய்ச்சுவதைப் போல, ஞானம் என்னும் தயிரை கடைந்து, அங்கு வரும் பரமாத்மனின் மகிமை என்னும் வெண்ணையை எடுக்க வேண்டும். ஹரிசர்வோத்தமத்வ இத்யாதி குரு உபதேச ஞானம், தயிரைப் போல இருக்கிறது. அதற்குள், பகவன் மகிமை கலந்திருக்கிறது. அதனை கடைந்து அறியவேண்டும். அதாவது, சமாதியில், பகவத் தியானம் செய்து, பகவத் அனுக்கிரகத்தால், ஜீவபின்னனான பரமாத்மனை காணவேண்டும். இதனை ஞானிகள் காண்கின்றனர். அஞ்ஞானிகள் காண்பதில்லை என்பது கருத்து.

 

குயவனின் சக்கரத்தைப் போல சம்சாரத்தில் சுற்றிவிடுவான் என்று சொல்லியிருக்கிறார். சக்கரத்தின் மேல் ஒரு கருப்புப் புள்ளி, ஒரு வெள்ளைப் புள்ளி வைத்து, சக்கரத்தை சுற்றினால், அதன்படியே வெள்ளையும், கருப்புமாக மாறி மாறி புள்ளிகள் அந்த பானையில் வரும். அதுபோலவே, பிறப்பு, வாழ்தல், இறப்பு என்னும் சுழற்சி மற்றும் இதன் நடுவில், சுகம், துக்கம். சுகஸ்த்யானந்தரம் துக்கம் துக்கஸ்யானந்தரம் சுகம்என்னும் ஆதார வாக்கியத்தின்படி, ஜீவனும் சக்கரத்தைப் போலவே சுற்றிவருகிறான் என்பது கருத்து. இதற்காகவே குயவனின் சக்கர உதாரணத்தை சொல்லியிருக்கிறார்.

 

வேத3 ஸாஸ்திர விசாரகை3து3 நி

ஷேத4 கர்மவ தொரெது3 நித்யதி3

ஸாது4 கர்மவ மாள்பரிகெ3 ஸ்வர்க்கா3தி3 சுக2வீவ |

ஐதிஸுவ பாபிக3ள நிரயவ

கே2த மோத3 மனுஷ்யரிகெ3 து

ர்வாதி3 3ளிக3ந்த4ந்த1மதி3 மஹது3க்கக3ணனுணிப ||17

 

வேத சாஸ்திரவிசாரகைது = வேத சாஸ்திரங்களை நன்றாக படித்து அதன் சாரத்தை அறிந்து

நிஷேத கர்மவ தொரெது = வேதங்களில், தர்ம சாஸ்திரங்களில் எந்த செயல்களை செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதை செய்யாமல் துறந்து

நித்யதி = தினந்தோறும்

சாதுகர்மவ மாள்பரிகெ = சாஸ்திரங்களில் சொல்லியவாறு விதிபூர்வகமான கர்மங்களை செய்பவர்களுக்கு

ஸ்வர்க்காதி சுகவீவ = ஸ்வர்க்கம் முதலான சுகங்களைக் கொடுக்கிறான்

பாபிகள = பாபிகளை

நிரயவ = நரகத்தை

ஐதிஸுவ = தள்ளுகிறான்

மனுஷ்யரிகெ கேதமோத = சுக துக்க மிஸ்ரத்தை கொடுக்கிறான்

துர்வாதிகளிகெ = மித்யாவாதிகளுக்கு, அன்யதா ஞானிகளுக்கு

அந்தம்தமதி = அந்தந்தமஸ்ஸில்

மஹதுக்ககள = மிகப் பெரிய துக்கங்களை

உணிப = உண்ண வைக்கிறான்.

 

இங்கு ராஜஸர், தாமஸர் இவர்களுக்குக் கிடைக்கும் கதியை சொல்கிறார்.

 

ராஜஸ சாத்விகர், வேத சாஸ்திரங்களைப் படித்து, தத்வார்த்தங்களை அறிந்து கர்மங்களை செய்ய வேண்டும். செய்யக்கூடாதவற்றை விடவேண்டும் என்று அறிந்து, துஷ்டகர்மங்களை விட்டு, சத்கர்மானுஷ்டானங்களை செய்தாலும், அனைத்தையும் செய்வது பரமாத்மன் என்று, சர்வ சமர்ப்பணையை பரமாத்மனுக்கு செய்யவேண்டும் என்ற ஞானம் இல்லாமல் சத்கர்மங்களை மட்டும் செய்து வருவர். இவர்களுக்கு ஸ்வர்க்க பலன் கிடைக்கிறது.

 

ராஜஸ தாமஸர் பாப கர்மங்களை செய்பவர்கள். இத்தகைய சாமான்ய பாபிகளுக்கு நரக துக்கம் கிடைக்கிறது. ராஜஸ ராஜஸர் மனுஷ்யர்கள். இவர்கள் சுக துக்கங்கள் கலந்த பலனையே பெறுவார்கள்.

 

மொத்தத்தில், மூன்றுவித ராஜஸர்களுக்கும் சுக துக்கம் மிஸ்ரமான பலனே கிடைக்கிறதே தவிர, நிரந்தரமான சுகமோ, நிரந்தரமான துக்கமோ இல்லை என்பது கருத்து. மித்யாவாதிகள், அன்யதா ஞானிகள் ஆகியோர் தாமஸ ஜீவர்கள் என்று அறியவேண்டும். இவர்களுக்கு நிரந்தர துக்கமான அந்தந்தமஸ்ஸே கிடைக்கிறது.

 

நிர்கு3ணோபாககெ3 கு3ம்

சர்க்க3 தோ3ஷக3ளீயத3லெ அப

வர்க்க33லி சுக2வித்து பாலிஸுவனு க்ருபாஸாந்த்3|

துர்க3மனு எந்தெ3னிப த்1ரைவி

த்யர்கெ3 த்ரிகு3ணாதீத ந்தத

ஸ்வர்க்க3 பூ4 நரகத3லி ஞ்சாரவனெ மாடி3ஸு||18

 

நிர்குணோபாஸககெ = ஸ்ரீஹரி, ப்ராக்ருத குணசம்பந்தங்கள் இல்லாதவன் என்பதை அறிந்து, அவரை பூஜிப்பவர்களுக்கு

குணஸம்ஸர்க்க தோஷகள = அந்த ஜீவன் செய்த குண சம்பந்தமான அஞ்ஞான தோஷங்களை

ஈயதலெ = கொடுக்காமல் (அதை பரிகரித்து)

க்ருபாஸாந்த்ர = தயாளுவான ஸ்ரீஹரி

அபவர்க்கதலி = முக்தியில்

சுகவித்து பாலிஸுவனு = சுகங்களைக் கொடுத்து அருள்கிறான்

த்ரைவித்யர்கெ = த்ரிவித்யை, ரிக், யஜுஸ்ஸாம என்னும் மூன்று வேதங்களை கற்பித்து, ஸ்தூலமாக தெரியும்

அர்த்தத்தை பரமார்த்தம் என்று அறிந்து, ஸ்வர்க்காதி பலன்களையே வேதோக்தங்கள் என்று அறிந்து, அவற்றைக் கொடுக்கும் நான் தேவதைகளை பூஜிப்பதே தர்மம் என்றும், வேதங்களுக்கு வேறு தாத்பர்யம் இல்லை என்றும் சிந்தித்து, வேதங்களில் சொல்லப்பட்ட ஸ்தூல கர்மங்களை அனுஷ்டிப்பவர்கள் த்ரைவித்யர்கள். அத்தகையவர்களுக்கு, ஸ்ரீமன்

நாராயணன்,

துர்கமன் = சுலபனல்ல

எந்தெனிப = என்று சொல்லிக் கொள்கிறான்

ஸந்தத = எப்போதும்

த்ரிகுணாதீத = ஸ்வயம் தான் இந்த மூன்று குணங்களின் சம்பந்தம் இல்லாதவன்

அத்ரைவித்யர்கெ = ஸ்வர்க்கம், பூமி, நரகத்தில் இருக்கும் சுகதுக்க போகங்களை கொடுக்கிறான்

ஸ்வர்க்க பூ நரகதலி = ஸ்வர்க்கம், பூமி, நரகத்தில்

சஞ்சாரவனெ மாடிசுவ = சஞ்சாரத்தை செய்விக்கிறான்.

 

இந்த த்ரைவித்யர்களில், சிலர் ஸத்வபாகம் அதிகம் உள்ளவர்கள். சிலர் ரஜோ பாகம் அதிகம் உள்ளவர்கள். சிலர் தமோ பாகம் அதிகம் உள்ளவர்கள். இப்படி அதிகமாக இருக்கும் சத்வாதி குணங்களுக்கேற்ப, வெவ்வேறு தேவதைகளை பூஜிப்பதால், ஸ்வர்க்க பூமி நரகத்தில் அவர்களுக்கு பலன்கள் கிடைக்கின்றன.

 

ஸாத்விக முதலான மூவரைத் தவிர, த்ரிகுணாதீதர் (நிர்குணர்கள்) என்று வேறு சிலர் இருக்கின்றனர். சாத்விகர் முக்தியோக்யர்கள். ஆனால், அவர்களுக்கு இவ்வளவு கல்ப சாதனை செய்யவேண்டும், இவ்வளவு பிறவிகள் சாதனை செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறது. சாத்விகர்கள் தங்கள் சாதனை முடியும்வரை, சத்வகுண சம்பந்தத்தில் இருப்பார்கள். சாதனை முடிந்தபிறகு அவரே நிர்குணர்கள் (குணாதீதர்கள்) ஆகின்றனர். சத்வகுண சம்பந்தம் இருக்கும்வரைக்கும் ஸ்வர்க்க சுகத்தையோ, ராஜ்ய போகங்களையோ, வேறு போகங்களையோ விரும்புவர்.

நிர்குணர்களான பிறகு,

 

ஸாலோக்ய ஸார்ஷ்டி ஸாமீப்யைகத்வமித்யுததீயமான ன க்ருஹ்ணந்தி வினாமத்யே வனஞ்சனா: ||

 

சாலோக்யாதி 5 வித முக்திகளைக்கூட விரும்பமாட்டார்கள் என்று பரமாத்மனே சொல்லியிருக்கிறார். இந்த ஞானம், குணாதீதருக்கு மட்டுமே பிறக்கிறது. இதே அர்த்தத்தையே தாசராயர் இந்த பத்யத்தில் சொல்கிறார். குணசம்பந்த தோஷங்கள் என்றால், ஸ்வர்க்கத்திற்குப் போய் சில காலம் சுகங்களை அனுபவித்து, மறுபடி பூமியில் பிறப்பர். அங்கும் அனித்ய சுகத்தையே அனுபவிப்பர்.

 

மேலே கூறியதைப் போல த்ரிகுணாதீதரான, சாதனை முடிந்த சாத்விகர்களுக்கு, இத்தகைய குணசம்பந்த தோஷங்களைக் கொடுக்காமல், முக்தியைக் கொடுத்து காப்பாற்றுகிறான். இதைத்தவிர, இன்னும் சாதனை முடியாதிருக்கும் சாத்விகர்கள், சில காலம் சாதனையை செய்துமுடிக்க அவர்களின் சுகங்கள் அனைத்தையும் ஸ்வர்க்கத்திலேயே அனுபவிப்பார்கள்.

 

விஷ்ணோஸ்து மத்யமோபக்தோ னிரயன்யைவ கச்சதிஎன்னும் 11ம் ஸ்கந்தத்தின் தாத்பர்யத்திற்கேற்ப, பக்தர்களான மனுஷ்யோத்தமர்கள் என்றும் நரகத்திற்குப் போவதில்லை. பூமியிலேயே சுகங்களை அனுபவிப்பர். நாளடைவில் இவர்களுக்கும் முக்தி கிடைக்கிறது.

 

ராஜஸர்கள், பூமியில் துக்கம் கலந்த சுகங்களையே அனுபவிக்கின்றனர். தாமஸர்கள், நரக வாசிகள். சில காலங்கள் வரை, பூமியில் துக்கம், சில காலம் சுகம் என அனுபவித்தவாறு இருப்பார்கள். சாத்விகர்களில் நிர்குணர்கள் எப்படி உத்தமர்களோ, அப்படியே தாமஸர்களில் நிர்குணோபாசனை (நிர்குணோபாசனை என்றால், பரமாத்மன் நிர்குணன். நிராகாரன் என்று உபாசனை செய்வது) செய்துகொண்டிருப்பர் என்று அர்த்தம். இந்த உபாசனையை செய்யக்கூடாது என்று ஸ்ரீமதாசார்யர் கண்டிக்கிறார். இதிலும் அன்யதோபாசனை (நானே பிரம்மன் என்று சொல்லி உபாசனை செய்வது) செய்பவர்களுக்கு, அந்தம்தமஸ்ஸே கிடைக்கிறது என்று சொல்கிறார்.

 

மூவரொளகி3த்த3ரு ரியெ சுக2

நோவுக3ளு ம்ப3ந்த4வாக3வு

பாவனகெ பாவன பராத்பர பூர்ணசுக2வனதி3 |

ஈ வனருஹ ப4வாண்ட3தொ3ளு ஸ்வ க

ளேவர ததா3கார மாடி3

ராவரேஷ சராசராத்மக லோகக3ள பொரெவ ||19

 

மூவரொளகெ = ஸாத்விக, ராஜஸ, தாமஸ ஜீவர்களில்

இத்தரு சரியே = ஸ்ரீஹரி இருந்தாலும்

சுக நோவுகளு = சுகதுக்கங்கள்

சம்பந்தவாகவு = பரமாத்மனுக்கு ஏற்படுவதில்லை

பாவனகெ பாவன = ஏனெனில் அவன், பரம பவித்ரம் எனப்படும் பொருட்களைவிட பரம பவித்ரனானவன்

பராத்பர = உலகில் உத்தமர்கள் எனப்படும் ரமா பிரம்மாதிகளைவிட உத்தமர்கள்

பூர்ண சுகவனதி = பூர்ணசுகங்கள் நிறைந்தவன்

ஈ வனருஹ பவாண்டதொளு = இந்த கமலத்தில் பிறந்தவரான பிரம்மனின் பெயர் கொண்ட அண்டத்தில் (பிரம்மாண்டத்தில்)

ஸ்வ களேவர = அதே தேகத்துடன்

ததாகார மாடி = தன் சரீரம் என்று சொல்லப்படும் ஜகத்தினை, அந்தந்த உருவத்தில் (பற்பல ரூபங்களால்)

பராவரேஷ = உத்தமரான ரமா முதல் அல்பரான த்ருணஜீவர் வரைக்கும், அனைவருக்கும் நியாமகனான

சராசராத்மக = ஸ்தாவர, ஜங்கமங்களில் அந்தர்யாமியாக இருந்து

லோககள = அனைத்து உலகங்களையும்

பொரெவ = காப்பாற்றுகிறான்.

 

பிரம்மாதி உள்ள அனைத்து பிராணிகளுக்கும் ஸ்வாமியானவன். பூர்ண சுக-சமுத்திரன். கடலுக்கு ஜலதி, வனதி என்று பெயர்கள் உண்டு. எப்படியெனில்: வனம்பாஸ்யப்ஸுகானனேஎன்னும் இலக்கணத்தால் வன என்றால் நெருப்பிலிருந்து வரும் ஒளி, தண்ணீர் என்றும் அர்த்தங்கள் இருக்கின்றன. ஆகையால், பூர்ண சுக வனதி என்றால், பூர்ண சுக ஜலதி என்று அர்த்தம் சொல்ல வேண்டும். வஜருஹ பவாண்டதொளுஎன்றாலும் இதே அர்த்தம்தான். கமலபவஎன்றால், கமலத்திலிருந்து பிறந்தவர் பிரம்மன். அந்தப் பெயருள்ள அண்ட என்றால் பிரம்மாண்டம். இத்தகைய பிரம்மாண்டத்தில், ஸ்தாவர ஜங்கம பிராணிகளின் உருவங்களை தான் பெற்று, அனைவரிலும் இருந்து, அனைவரையும் காப்பாற்றுகிறான்.

 

ஈ நிமித்த நிரந்தரதி3 ஸ்வா

தீ4ன கர்த்ருத்வவனு மரெதெ3

நேனு மாடு3வதெ3ல்ல ஹரி ஒளஹொரகெ3 நெலெஸித்து3 |

தானெ மாடு3வனெந்த3ரிது3

த்தானெயந்த3தி3 ஞ்சரிஸு பவ

மான வந்தி3தனொந்த3ரேக்‌ஷண பிட்டக3ல நின்ன ||20

 

ஈ நிமித்த = எந்த பிரதிபலன்களையும் விரும்பாமல்

நிரந்தர = தினந்தோறும்

ஸ்வாதீன கர்த்ருத்வவனு மரெது = ஸ்வதந்த்ர கர்த்ருத்வன் என்பதை மறந்து

ஏனேனு மாடுவதெல்ல = செய்யும் செயல்கள் அனைத்தும்

ஹரி ஒளஹொரகெ நெலஸித்து = ஹரியே உள்ளும் வெளியேயும் நிலைத்திருந்து

தானே மாடுவனெந்தரிது = ஸ்ரீஹரி தானே செய்கிறான் என்பதை அறிந்து

மத்தானெயந்ததி = பயம் இல்லாமல் கர்வத்துடன்

சஞ்சரிஸு = நடமாடு

பவமானவந்தித = முக்யபிராணரால் பூஜிக்கப்படுபவனான

ஒந்தரேக்‌ஷண = ஒரு அரைக்கணமும்

பிட்டகல = விட்டு அகல மாட்டான்

நின்ன = உன்னை

 

பவமான வந்திதனான ஸ்ரீபரமாத்மன், அனைவரிலும் முக்யபிராண அந்தர்யாமியாக இருந்து, அவர்கள் மூலமாக அனைத்து செயல்களையும் செய்விக்கிறான் என்று அறிந்து துதிப்பது அவசியம் என்று குறிப்பிடுகிறார் தாசராயர். 

No comments:

Post a Comment