ஸ்வரமணனு ஷக்த்யாதி3ரூபதி3
கரணமானிக3ளொளகெ3 நெலெஸி
த்த3ரவிதூ3ரனு ஸ்தூ2ல விஷயக3ளுண்டு3ணிப நித்ய |
அரியதெ3லெ நானும்பே3னெம்பு3வ
நிரயக3ளனும்பு3வனு நிஸ்சய
மரளி மரளி ப4வாட1விய ஸஞ்சரிஸி ப3ளலுவனு ||6
அரவிதூரனு = தோஷங்கள் அற்றவனான
ஸ்வரமணனு = தானே ஸ்த்ரி, புருஷ ரூபங்களில் இருந்து ஆனந்தத்தை அடையும் பரமாத்மன்
ஷக்த்யாதி ரூபதி = ஷக்தி, ப்ரதிஷ்டா முதலான 11 ரூபங்களில் இருந்து
கரணமானிகளொளகெ = 11 இந்திரிய அபிமானி தேவதைகளில்
நெலெஸித்து = நிலைத்திருந்து
ஸ்தூல விஷயகள = தற்காலிக விஷய போகங்களை
நித்ய = தினந்தோறும்
உண்டு = தான் உண்டு
உணிப = ஜீவரையும் உண்ண வைக்கிறான்
அரியதலெ = இருக்கிறான் என்று அறியாமல்
நானும்பேனெம்புவ = நானே இந்த விஷயங்களை, ஸ்வதந்திரனாக அனுபவிக்கிறேன் என்று சொல்பவன்
நிஸ்சய = நிச்சயமாக
நிரயகளனு = நரகங்களை
உம்புவனு = அனுபவிக்கிறான்
மரளி மரளி = திரும்பத்திரும்ப
பவாடவிய = சம்சாரம் என்னும் காட்டினில்
சஞ்சரிஸி பளலுவனு = அலைந்து திரிந்து கஷ்டப்படுவான்
தோஷங்கள் அற்றவனான ஸ்ரீபரமாத்மன் ஸ்வரமணன் ஆவான்.
மஹா ஸௌந்தர்ய யுக்தேஷு நிர்தோஷேஷுச ஸர்வதா |
ரமதே ஸ்த்ரி ஸ்வரூபாணி பும்ரூபாணி விதாயச ||
என்னும் ஸத்தத்வ ரத்னமாலா என்னும் கிரந்த
வசனத்தின்படி, தானே அழகான பெண் ரூபத்தையும், புருஷ ரூபங்களையும் தரித்து, சுகப்படுகிறான் ஆகையால், பரமாத்மனுக்கு ஸ்வரமணன் என்று
பெயர். கண், காது ஆகிய 10 இந்திரியங்களுடன், மனஸ் சேர்த்து 11 இந்திரியங்களில்; ஷக்தி, ப்ரதிஷ்டா, ஸம்வித், ஸ்பூர்த்தி, ப்ரக்ருதி, கலா,
வித்யா, மதி,
நியதி, மாயா,
காலா என்னும் 11 ரூபங்களில் இருந்து, விஷய போகங்களை தான் அனுபவித்து, ஜீவருக்கும் உண்ண வைக்கிறான். இதனை அறியாமல், தானே ஸ்வதந்திரத்தால் இவற்றையெல்லாம் அனுபவிக்கிறேன் என்று சொல்பவன், நிச்சயமாக நரகத்திற்கே போகிறான்.
அல்லது,
திரும்பத்திரும்ப சம்சாரத்திற்கு வந்து, கஷ்டப்படுகிறான்.
ஸுருசி ருசிர ஸுக2ந்த ஷுசி எ
ந்தி3ருதிஹனு ஷட்ரஸக3ளொளு ஹ
ந்னெரடு ரூபத3லிப்ப ஸ்ரீ பூ4 து3ர்கெ3யர ஸஹித |
ஸ்வரமணனு எப்பத்தெரடு ஸா
விர ஸமீரன ரூபதொ3ளகி3
த்து3ருபராக்ரம கர்த்ருயெனிஸுவ நாடி3க3ளொளித்து3 ||7
ஷட்ரஸகளொளு = இனிப்பு, கசப்பு முதலான அறுசுவைகளில் ஒவ்வொன்றிலும்
ஸுருசி, ருசிர, சுகந்த, ஸுசி,
என்னும் பெயர்களால்
இருதிஹனு = இந்த நான்கு ரூபங்களில் இருக்கிறான்
ஹன்னெரடு ரூபதலிப்ப = ஷக்தி, பிரதிஷ்டா முதலான 12 ரூபங்களில்
ஸ்ரீபூதுர்கெயர ஸஹித = ஸ்ரீதேவி, பூதேவி, துர்காதேவி ஆகியோருடன் சேர்ந்து
இப்ப = இருக்கிறான்
ஸ்வரமணன் = ஸ்வரமணனான ஸ்ரீஹரி
எப்பத்தெரடு சாவிர = 72,000
ஸமீரன = வாயுதேவரின்
ரூபதொளகெ = ரூபத்தில்
இத்து = இருந்து
உருபராக்ரம = மகா பராக்ரமசாலியான ஸ்ரீஹரி
கர்த்ரு = அனைத்து செயல்களையும் செய்கிறான்
யெனிஸுவ = என்று அழைத்துக் கொண்டு
நாடிகளொளகித்து = நாடிகளில் இருந்து
அறுசுவைகளில் ஒவ்வொன்றிலும் ஸுருசி, ருசிர, ஸுகந்த, ஸுசி என்னும் 4 ரூபங்களால் பரமாத்மன் இருக்கிறான்.
ஸுருசி = நல்ல சுவை.;
ருசிர = சுவையான பதார்த்தங்களை உண்ணும்போது, இன்னும் வேண்டும் என்னும் ஆசையை தூண்டும் உணர்வு
ஸுகந்த = நறுமணம்
ஸுசி = எவ்வித தோஷங்களும் அற்ற பவித்ரமானது
இப்படியான 4 குணங்களும் ஒவ்வொரு சுவைகளிலும்
இருப்பது. இந்த 4 ரூபங்களால் பகவந்தனே அந்த சுவைகளில் இருப்பது. மற்றும் சக்தி, ப்ரதிஷ்டா முதலான 12 ரூபங்களால் ஒவ்வொன்று சுவைகளிலும்
இரண்டிரண்டு ரூபங்கள் இருந்து, 6 சுவைகளில் மொத்தம் 12 ரூபங்கள் இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், 72,000 நாடிகளில் வாயு தேவர், 72,000 ரூபங்களில் வசிக்கிறார். அவரின்
அந்தர்யாமியாக 72,000 ரூபங்களால் நாடிகளில் இருந்து, மகா பராக்ரமசாலிகளான பரமாத்மன், இந்த ஸ்தூல தேகத்தினால் செய்யவேண்டிய கர்மங்களை செய்தவாறு கர்த்தா என்னும்
பெயரைப் பெறுகிறான்.
நின்ன ஸர்வத்ரத3லி நெனெவவ
ரன்யகர்மவ மாடி3த3ரு ஸரி
புண்யகர்மக3 ளெனிஸுவுவு ஸந்தே3ஹ வினிதில்ல |
நின்ன ஸ்மரிஸதெ ஸ்னான ஜப ஹோ
மான்ன வஸ்த்ர க3ஜாஷ்வ பூ4 த4ன
தா4ன்ய மொத3லாத3கி2ல தா3னவ மாடி3 ப2லவேனு ||8
(ஹே ஸ்ரீஹரியே)
நின்ன = உன்னை
ஸர்வத்ரதலி = அனைத்து இடங்களிலும்
நெனெவவரு = நினைப்பவர்கள்
அன்யகர்மவ = புண்ணியம் கொடுக்காத செயல்களை
மாடிதரு ஸரி = செய்தாலும், அவையும்
புண்யகர்மக ளெனிஸுவுவு = புண்ணிய செயல்களே என்றே
அறியப்படும்
ஸந்தேஹ வினிதில்ல = இந்த விஷயத்தில் எந்தவொரு
சந்தேகமும் இல்லை
நின்ன ஸ்மரிஸதெ = உன்னை நினைக்காமல்
ஸ்னான, ஜப, ஹோம = ஸ்னான, ஜப,
ஹோமங்களை செய்தாலும்
அன்ன, வஸ்திர, கஜ,
அஷ்வ,
பூ,
தன,
தான்ய = அன்ன, வஸ்திர, யானை,
குதிரை, பூமி,
தன,
தான்ய
மொதலாதகில = ஆகிய அனைத்தையும்
தானவ மாடி = தானமாகக் கொடுத்தால்
பலவேனு = என்ன பலன்? (பலன் கிடைக்காது என்று பொருள்).
தர்மோsபவத்ய தர்மோபி க்ருதோ பக்த்யைஸ்த
வாச்யுத |
பாபம் பவதி தர்மோபி யேன பக்த்யை: க்ருதோஹரே ||
என்னும் ஸதாசார ஸ்ம்ருதி வாக்கியத்தை மனதில் வைத்து, அதே அர்த்தம் வருமாறு, ஸ்ரீஹரியைக் குறித்து இந்த
பத்யத்தில் சொல்கிறார் தாசராயர். ஹே தேவாதிதேவா! உன்னை மனதில் நினைத்தவாறு
பக்தர்கள் எந்த செயல்களை செய்தாலும், ’நாஹம் கர்த்தா ஹரி:கர்த்தா’ என்னும் சிந்தனையுடன், நான் அஸ்வதந்திரன், பரமாத்மன் செய்வித்ததைப் போல நான் செய்தேன் என்னும் ஞானத்தினால் கர்மங்களை
செய்தால்,
அவன் செய்த பாவ கர்மங்களும்கூட புண்ணிய பலன்களையே கொடுக்கின்றன.
இந்த விஷயத்தில் சந்தேகமே வேண்டாம். தேவேந்திரன், வ்ருத்ராசுரனைக் கொன்றதால், மஹாத்மன் என்று பெயர் பெற்றார்.
பீஷ்ம,
த்ரோண ஆகியோர் பிராமணர்கள். போரில், பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணன் இவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, துரியோதனர்களின் பட்சத்தில் சேர்ந்து, பாண்டவர்களுக்கு எதிராக போர் புரிந்தனர். ஆனாலும், பூ-பாரத்தைக் குறைப்பதற்காக அவதாரம் எடுத்த ஸ்ரீகிருஷ்ணனின் சேவை செய்ததால், புண்ணிய பலன்களையே பெற்றனர். துரியோதனனும் பாண்டவர்களுடன் போர் புரிந்தான்.
ஆனால்,
அவனுக்கு அது பாவ சாதனையே ஆனது. ஆகையாலேயே, தாசராயர், ஹே தேவா! உன்னை நினைக்காமல் எந்த தான தர்மங்களை செய்தாலும், அது நற்பலன்களைக் கொடுக்காது. என்று சொல்கிறார்.
இஷ்டபோ4க்ய பதா3ர்த்த2தொ3ளு ஷிபி1
விஷ்ட நாமதி3 ஸர்வஜீவர
துஷ்டி ப3டி3ஸுவ தி3னதி3னதி3 ஸந்துஷ்ட தானாகி3 |
கோ1ஷ்டதொ3ளு நெலெஸித்து3 ரஸமய
புஷ்டியைதி3ஸு திந்த்3ரியக3ளொளு
ப்ரேஷ்டனாகி3த்தெ3ல்ல விஷயக3ளும்ப திளிஸத3லெ ||9
இஷ்ட = விருப்பமான
போக்ய = அனுபவிக்கும்
பதார்த்ததொளு = பதார்த்தங்களில்
ஷிபிவிஷ்ட நாமதி = ஷிபிவிஷ்ட என்னும் பெயரில் இருந்து
சந்துஷ்ட தானாகி = தான் திருப்தனாகி
தினதினதி = தினந்தோறும்
ஸர்வஜீவர = அனைத்து ஜீவர்களையும்
துஷ்டிபடிஸுவ = திருப்திப்படுத்தும்
ரஸமய = ரஸமய நாமகன்
கோஷ்டதொளு = அன்னாதி கோஷங்களில்
நெலெஸித்து = நிலைத்திருந்து
புஷ்டிகைஸுத = பிராணிகளின் தேகங்களுக்கு புஷ்டியைக்
கொடுத்து
இந்த்ரியகளொளு = அவர்களின் இந்திரியங்களில்
ப்ரேஷ்டனாகித்து = நெருங்கிய நண்பனாக இருந்து
திளிஸதலெ = பிராணிகளுக்கு தன் கர்த்ருத்வத்தை
தெரிவிக்காமல்
விஷயகளும்ப = விஷய சுகங்களை அனுபவிக்கிறான்
பிராணிகள், விருப்பத்துடன் உண்ணும்
பதார்த்தங்களில் ஷிபிவிஷ்ட என்னும் பெயரைக் கொண்ட பரமாத்மன் இருந்து, தான் திருப்தனாகி, அனைத்து ஜீவர்களையும் திருப்திப்படுத்துகிறான். ‘யக்ஞோவைவிஷ்ணு: பஷவ: ஷிபிர்யக்ஞ ஏவை பஷுஷுப்ரவிஷ்ட:’ என்னும் ஸ்ருதி வசனத்தை அனுசரித்து, விஷ்ணுவிற்கு யக்ஞ என்று பெயர்.
ஷிபி என்றால் யக்ஞபசு. யக்ஞ நாமகன், பசுக்களில் ப்ரவிஷ்டனாக இருக்கும்
அன்னமயாதி கோஷங்களில் (கோஷ்டங்களில்), ரஸமய என்னும் பரமாத்மன் இருந்து, தேகங்களுக்கு புஷ்டியைக் கொடுக்கிறான். இந்திரியங்களில் அனைவருக்கும்
வேண்டியவனாக இருந்து, ஜீவனுக்கு தெரியாமலேயே, விஷயபோகங்களை தான் உண்டு, அவர்களையும் உண்ண வைக்கிறான்.
காரணாஹ்வய ஞான கர்ம
ப்ரேரகனு தானாகி3 க்ரியெக3ள
தோருவனு கர்மேந்தி3ரியாதி4பரொளகெ3 நெலெசித்து3 |
மூரு கு3ணமய த்3ரவ்யக3 ததா3
கார தன்னாமத3லி கரெஸுவ
தோரிகொள்ளதெ3 ஜனர மோஹிப மோஹகல்பகனு ||10
காரணாஹ்வய = காரணரூபி என்னும் பெயரால்
ஞான கர்ம ப்ரேரகனு = ஞானேந்த்ரிய, கர்மேந்த்ரியங்களை வழி நடத்துபவன்
தானாகி = தானாகவே
கர்மேந்த்ரியாதிபரொளகெ = கை, கால் ஆகிய இந்திரிய அபிமானி தேவதைகளில்
நெலெஸித்து = நிலைத்திருந்து
க்ரியெகள = ஞான கர்ம கிரியைகளை
தோருவனு = செய்யும் முறைகளை காட்டுவான்
மூரு குணமய த்ரவ்யக = ஸத்வ ரஜஸ் தமோ குணாத்மக பதார்த்தங்களில்
இருந்துகொண்டு
ததாகார தன்னாமதலி = அந்த ஆகாரத்தில், அந்தப் பெயரில்
கரெஸுவ = அழைத்துக் கொள்கிறான்
தோரிகொள்ளதெ = தான் அங்கிருப்பதை, காட்டிக் கொள்ளாமல்
அமோக கல்பகனு = சத்ய சங்கல்பன்
ஜனர = தன் பக்தர்களை
மோஹிப = விரும்புகிறான்
ஸ்ரீபரமாத்மன், காரண என்னும் பெயரால் ஞானேந்திரிய, கர்மேந்திரியங்களின் அபிமானி
தேவதைகளில் இருந்து அவற்றை வழிநடத்தி, ஞானகர்ம க்ரியைகளை செய்ய
வைக்கிறான். ஸத்வ ரஜஸ் தமோ என்னும் மூன்று குண சம்பந்தமான பதார்த்தங்களில், அந்தந்த பதார்த்தங்களின் உருவத்தில், அந்தந்த பெயர்களில், சத்யசங்கல்பனான ஸ்ரீஹரி, தன் இருப்பைக் காட்டிக் கொள்ளாமல், மக்களை மகிழ்விக்கிறான்.
விஷ்ணுரஹஸ்ய 4ம் அத்தியாயம்:
கடாகாரம்பவத்யேவ கடஸ்தம் ஸலிலம்யதா |
தத்ததாகாரர்வா விஷ்ணு: தத்தத்வஸ்து ஸ்தித:ஸ்ததா ||5
தன்மோடானைவஜானந்தி மாயாமுஷித சக்ஷுஷ: |
தேஹேஹம் பாவினோன்யத்ர மமதா புத்தய: ஸதா ||8
அனிச்சந்தோபி புஞ்சந்தி துக்கானி விவிதான்யபி ||9
No comments:
Post a Comment