#8 - கருணா சந்தி
ஒப்பனலினிந்து = ஒருவரின் சரீரத்தில் இருந்துகொண்டு
ஆடுவனு = ஆடுவான்
மத்தொப்பனலி = இன்னொருவரின் சரீரத்தில் இருந்துகொண்டு
நோடுவனு = பார்க்கிறான்
பேடுவ = வேண்டுகிறான்
ஒப்பனலி = இன்னொருவரில் இருந்துகொண்டு
நீடுவனு = கொடுக்கிறான்
பெரகாகி = வியப்புடன், பேசுகிறான்
இவ = இவன்
அப்பரத = இடியுடன்
ஹெத்தெய்வ = தேவோத்தமன்
மத்தொப்பரனு = தேவ, தைத்ய ஆகியோரை
லெக்கிஸனு = லட்சியம் செய்வதில்லை
நிர்பீத = எப்போதும், எந்த இடத்திலும், யாரிடமும் பயப்படாதவன் இந்த பரமாத்மன்
பாத்ய பாதகனு = சம்பந்தப்பட்டவனாக
ஆஹ = இருக்கிறான்
ஒப்ப3னலி நிந்தா1டு3வனு ம
த்தொப்பனலி நோடு3வனு பே3டுவ
நொப்பனலி நீடுவனு மாதாடு3வனு பெ3ரகா3கி3 |
அப்ப3ரத ஹெத்தெ3ய்வனிவ ம
த்தொப்ப3ரனு லெக்கி1சனு லோகதொ3
ளொப்ப3னெ தா பா3த்4ய பா3த4கனாஹ நிர்பீ4த ||9ஒப்பனலினிந்து = ஒருவரின் சரீரத்தில் இருந்துகொண்டு
ஆடுவனு = ஆடுவான்
மத்தொப்பனலி = இன்னொருவரின் சரீரத்தில் இருந்துகொண்டு
நோடுவனு = பார்க்கிறான்
பேடுவ = வேண்டுகிறான்
ஒப்பனலி = இன்னொருவரில் இருந்துகொண்டு
நீடுவனு = கொடுக்கிறான்
பெரகாகி = வியப்புடன், பேசுகிறான்
இவ = இவன்
அப்பரத = இடியுடன்
ஹெத்தெய்வ = தேவோத்தமன்
மத்தொப்பரனு = தேவ, தைத்ய ஆகியோரை
லெக்கிஸனு = லட்சியம் செய்வதில்லை
நிர்பீத = எப்போதும், எந்த இடத்திலும், யாரிடமும் பயப்படாதவன் இந்த பரமாத்மன்
பாத்ய பாதகனு = சம்பந்தப்பட்டவனாக
ஆஹ = இருக்கிறான்
பொருள்:
ஒருவன் உள்ளிருந்து விளையாடுகிறான். இன்னொருவரின் உள்ளிருந்து பார்க்கிறான். மற்றொருவரின் உள்ளிருந்து வேண்டுகிறான். இன்னொருவரின் உள்ளிருந்து கொடுக்கிறான். ஒருவருக்குள் இருந்து வியப்படைகிறான். பயங்கரமாக அனைவரையும் பயமுறுத்தும் காளி முதலான தேவதைகளைவிட மிகப்பெரிய தேவனாக இருக்கிறான். ஒருவரையும் லட்சியம் செய்யாதவன். பயமில்லாமல் தான் ஒருவனே இந்த உலகத்தில் பாத்யனாக (சம்பந்தப்பட்டவனாக) இருக்கிறான்.
சிறப்புப் பொருள்:
ஒப்பனலி நிந்தாடுவனு - சிறுவர்களில் இருந்துகொண்டு பாலலீலைகளை செய்கிறான். தந்தை போன்றவரில் நின்று, அதை பார்க்கிறான். அல்லது, ’ஒப்பனலி நிந்து’ என்றால் கிருஷ்ணாதி ரூபனாக இருந்து பாலலீலைகளை செய்கிறான். வசுதேவரில் இருந்து அதை பார்க்கிறான். யாசகனின் உள்ளிருந்து வேண்டுகிறான். கொடுக்கும் மனிதரில் இருந்து அதை கொடுக்கிறான். அல்லது, வாமனாதி ரூபங்களால் வேண்டுகிறான். பலி சக்ரவர்த்தியின் உள்ளிருந்து கொடுக்கிறான். கிருஷ்ணாதி ருபங்களால் கோவர்த்தன மலையைத் தூக்கி, காளிங்க மர்த்தன ஆகியவற்றை செய்து, நந்தகோபி, யசோதை ஆகிய கோபியர்களில், ரிஷி முனிவர்களில் இருந்து அதைப் பார்த்து வியந்து மகிழ்ச்சியடைகிறான்.
தைத்ய தானவர்களுக்கு நாரசிம்ம ரூபத்தினால் பயங்கர சப்தம் செய்தவாறு, இவனைவிட வேறு பெரிய தேவதை இல்லை என்று சொல்லியவாறு, அவர்களைக் கொல்கிறான். பயம் என்பதே இல்லாமல், ஒருவரில் நன்மையாகவும் இன்னொருவரில் கேடாகவும் இருக்கிறான். அதாவது, ராவண, கம்சர்களில் இருந்து கொன்று, கொல்லப்படுகிறான். ராம கிருஷ்ணாதி ரூபங்களால் கொல்லுகிறான். பாகவத 7ம் ஸ்கந்தத்தில் ‘ஸ்வமாயா குணமாவிஷ்ய பாத்ய பாதகதாங்கத:’ ஸ்லோகத்திலிருந்து மேற்கண்ட பொருள் விளங்குகிறது. கேடு விளைவிப்பவர்களின் தேகத்தில் கேடாக இருப்பதால், பரமாத்மனுக்கு சரீர சம்பந்தமான துக்கங்கள் வருகின்றதோ என்னவோ என்னும் சந்தேகத்தை, ஸ்ரீமதாசார்யர் தகுந்த ஆதாரத்தினால் நிவர்த்தி செய்கிறார்.
மேற்சொன்ன ஸ்லோகத்தின் தாத்பர்யத்திலேயே
பாத்யாதிஸ்தோ ஹரிர்நித்யம் பாத்யதாதிக தேத்யபி |
கீயதேனது பாத்யத்வாதி தோஷயுதத்வத: இதிபவிஷ்யத்வர்வணி.
தேகத்தில் கேடாக இருக்கிறான் என்று சொல்கிறானே தவிர, உண்மையாக அவனே பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில், சரீரகரமான எவ்வித துக்கங்களும் பரமாத்மனை பாதிப்பதில்லை. அனைவரின் தேகங்களிலும் நிர்லிப்தனாக (சம்பந்தமில்லாமல்) பரமாத்மன் இருக்கிறான். மேலும் :
ததிஸ்த க்ருதவத்காஷ்டே வன்ஹிவச்ச ஜனார்த்தன: |
தேஹேந்திரியாஸு ஜீவேப்யோ விவிச்ய ஞாயதேனத்விதிச ||
தயிருக்குள் வெண்ணையும், கட்டைக்குள் நெருப்பும் எப்படி மறைந்திருக்கிறதோ, தயிரைக் கடைந்து காய்ச்சினால் எப்படி நெய் வேறாக வெளிவருகிறதோ, அதுபோலவே பரமாத்மனும் எல்லா இடத்திலும் இருந்தாலும் மறைந்திருந்து, தியானாதிகளால் பூஜிக்கும் பக்தர்களுக்கு மட்டும் காட்டிக் கொள்கிறான் என்று ஹரிவம்சத்தில் பவிஷ்ய பர்வத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஸ்ரீமதாசார்யர் சொல்கிறார்.
ஆனால், ஒரு தேகத்தில் பரமாத்மன் இருக்கிறான் என்றால், அந்த தேகத்திற்கு வரும் துக்கங்கள் பரமாத்மனை எப்படி பாதிக்காது என்று சொல்கிறீர்கள் என்று கேட்டால்: தாத்பர்ய மூன்றாம் ஸ்கந்தத்தில்,
துர்பகாதி ஷரீரஸ்தஸ்யாபி தத்தோஷாஸ்பர்ஷ ஏவன்மஹிமெத்யர்த்த: |
கதம் நதுக்கே ஸபவேத்துக்கெசேத்தீஷ்வர: குத: மஹிமா பரமஸ்யெஷ யத்தேஹஸ்தோ நபாத்யதே |
யததுக்கேஸ ஈஷானோ யாயேதி மஹிமோச்யதே ||
அதாவது, நிர்பாக்யமான மக்களில் தேகத்தில் இருந்தாலும், அந்த தேகத்திற்கு வரும் தோஷங்களின் சம்பந்தம் இல்லாமல் இருப்பதே அவனது மகிமையாகும். ஒரு தேகத்தில் இருந்தபிறகு, அந்த தேகத்திற்கு சம்பந்தமான பந்தனங்களில் சம்பந்தப்படாமல் இருப்பது எப்படி? துக்கமடையாமல் இருப்பது எப்படி? அப்படி துக்கமடைந்து விட்டால் அவன் எப்படி ஈஸ்வரன் ஆனான்?
பரமாத்மன் தேகத்தில் இருந்தாலும், நிர்லிப்தனாக (தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாமல்) இருக்கிறான் என்று பல ஸ்ருதி ஸ்ம்ருதி வாக்கியங்கள் சொல்கின்றன. இப்படியாக, தேகங்களில் இருந்தாலும், அதற்கு வரும் துக்கங்களில் சம்பந்தப்படாமலேயே இருக்கிறான் என்பதே அவனது மகாமகிமை என்று மேற்கூறிய ஸ்லோகத்தின் அர்த்தமாகும். இதே அர்த்தத்தையே தாசராயர், ‘தானொப்பனெ பாத்யபாதகனாஹ நிர்பீத’ என்ற வாக்கியத்தில் விளக்குகிறார்.
***
நான் தங்களுடைய விளக்க உரைகள் இப்போது தான் படித்து கொண்டு வருகிறேன். மிகவும் அருமையாக உள்ளது.
ReplyDeleteபரமாத்மன் தேகத்தில் இருந்தாலும், நிர்லிப்தனாக (தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாமல்) இருக்கிறான் என்று பல ஸ்ருதி ஸ்ம்ருதி வாக்கியங்கள் சொல்கின்றன.
மேலே தாங்கள் ஸ்ருதி ஸ்மிருதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளீர். அவைகள் பற்றி சிறிது விளக்கம் கூறினால் நன்று. பரமாத்மா மனித தேகத்தில் சம்பந்தமில்லாமல் இருக்கின்றார் என்று ஸ்ருதி ஸ்மிருதி வாக்கியங்கள் உள்ளன என்று எழுதி உள்ளீர்கள்.அவ்வாக்கியங்கள் போஸ்ட் செய்தால் நன்றாக இருக்கும். என் அங்ஞானகங்ள் விலகும். நன்றி.
The above comment is put by Ramachandran, Nanganallur. I will be grateful for the Sruti Smriti for the saying that Paramatma exist in the Deha of a human being without any attachment.
ReplyDelete