#19 - கருணா சந்தி
பாபகர்மவ = பாவ கர்மங்களை
சஹிசுவடெ = மன்னிப்பதில்
லட்சுமிபதிகெ சமராத = லட்சுமிபதிக்கு இணையான
திவிஜரனு = தேவதைகளை
ஈ பயோஜபவாண்டதொளகெ = இந்த பிரம்மாண்டத்தில்
ஆவல்லி = எங்கும்
நாகாணெ = என்னால் பார்க்கமுடியவில்லை
கோப = ஸ்வர்க்க அதிபதியான இந்திரன் (அல்லது சந்திரன்)
குருவின மடதி = பிருகஸ்பதி ஆசார்யரின் மனைவியான தாரா
ப்ருகு = ப்ருகு முனிவர்
நகசாப = மலையையே வில்லாக ஏந்திய ருத்ரர்,
மொதலாதவரு = ஆகியோர்
மாடித = செய்த
மஹாபராதகள = மிகப்பெரிய தவறுகளை
எணிஸிதனெ = எண்ணிப் பார்த்தானா? (இல்லை)
கருணா சமுத்ர ஹரி = கருணைக்கடலான ஹரி.
பொருள்:
***
பாபகர்மவ சஹிஸுவொடெ3 லகு
மீபதிகெ3 சமராத3 திவிஜர
நீ பயோஜப3வாண்ட3 தொ3ளகா3வல்லி நா காணே |
கோப கு3ருவினமட3தி3 ப்4ருகு3 நக3
சாப மொத3லாத3வரு மாட்3த ம
ஹாப1ராத4களெ ணிசிதனெ கருணாசமுத்ர ஹரி ||19பாபகர்மவ = பாவ கர்மங்களை
சஹிசுவடெ = மன்னிப்பதில்
லட்சுமிபதிகெ சமராத = லட்சுமிபதிக்கு இணையான
திவிஜரனு = தேவதைகளை
ஈ பயோஜபவாண்டதொளகெ = இந்த பிரம்மாண்டத்தில்
ஆவல்லி = எங்கும்
நாகாணெ = என்னால் பார்க்கமுடியவில்லை
கோப = ஸ்வர்க்க அதிபதியான இந்திரன் (அல்லது சந்திரன்)
குருவின மடதி = பிருகஸ்பதி ஆசார்யரின் மனைவியான தாரா
ப்ருகு = ப்ருகு முனிவர்
நகசாப = மலையையே வில்லாக ஏந்திய ருத்ரர்,
மொதலாதவரு = ஆகியோர்
மாடித = செய்த
மஹாபராதகள = மிகப்பெரிய தவறுகளை
எணிஸிதனெ = எண்ணிப் பார்த்தானா? (இல்லை)
கருணா சமுத்ர ஹரி = கருணைக்கடலான ஹரி.
பொருள்:
பக்தர்கள் செய்யும் பாவ கர்மங்களை மன்னிப்பதில், லட்சுமிபதியான, கருணைக்கடலான ஸ்ரீஹரியை விட்டால், இந்த பிரம்மாண்டத்தில் எங்கு தேடினாலும், வேறு யாரும் கிடைக்கமாட்டார்கள். தேவேந்திரன், சந்திரன், பிருஹஸ்பதி ஆச்சார்யரின் மனைவியான தாரா, ப்ருகுரிஷி, ருத்ரதேவர் ஆகியோர் செய்த மகா அபராதங்களை (தவறுகளை), கண்டுகொள்ளாமல் இருந்தானே? ஆகையாலேயே, அவனுக்கு கருணைக்கடல் என்று பெயர் வந்தது.
சிறப்புப் பொருள்:
'கோப' என்றால் அது இந்திரனையும், சந்திரனையும்கூட குறிக்கலாம். எப்படியெனில் ‘கௌர்னாகே வ்ருஷபே சந்திரே வாக் பூதிக்தேனு ஷுஸ்த்ரியா மித்யமர:’ கோ என்றால் ஸ்வர்க்கம், பசு, எருது, சந்திரன், வாக்கியம், பூமி, திசை என இவற்றைக் குறிக்கும் என அமரகோசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ’த்வயோஸ்து ரஷ்மித்ருக்பாண ஸ்வர்கவஜ்ராம்பு லோமஸு’ என்னும் வாக்கியத்தில் கோ என்றால் ரஷ்மி அதாவது கிரணங்களுக்கும்கூட பொருந்தும். ‘காம்பாதீதி கோப:’ ஸ்வர்க்கத்திற்கு அதிபதியானதால், தேவேந்திரனுக்கு கோப என்று பெயர். தன் கிரணங்களால் பிராணிகளை காப்பாற்றுவதால் சந்திரனுக்கும் கோப என்று பெயர். இந்திரன், அகலிகையை மயக்கியதால், மிகப்பெரிய பாவத்தை சம்பாதித்தான். பாரிஜாத மரத்தின் அபஹரண காலத்தில் கிருஷ்ணனுடன் போர் புரிந்தான். கோபாலகர்கள் செய்யத் தீர்மானித்த இந்திர யாகத்தை ஸ்ரீகிருஷ்ணன் தடுத்தான் என்ற கோபத்தினால் கோகுலத்தை மூழ்கடிக்க முயன்றான். இப்படி பல தகாத செயல்களால் சம்பாதித்த பாவங்களை எல்லாம் பரிகரித்து அவனை காப்பாற்றினான் ஸ்ரீபரமாத்மன்.
சந்திரன், குருபத்னியான தாரையை மயக்கினாலும், அதற்கேற்ப தண்டனையான நரகதண்டனையை ஸ்வாமி சந்திரனுக்கு விதித்தானா? இல்லை. ‘குருவின மடதி’ பிருஹஸ்பதியின் மனைவியான தாரையை சந்திரன் மயக்கி, மிகப்பெரிய பாவத்தை சம்பாதித்தாலும், அதனை கவனத்தில் கொள்ளாமல், அவனுக்கு அருளினான்.
யார் சர்வோத்தமன் என்று சோதிப்பதற்காக ப்ருகுரிஷிகள் பரமாத்மனை அவன் மார்பில் எட்டி உதைத்தார். இதற்கான தண்டனையை பரமாத்மன் அவருக்கு கொடுத்தானா? இல்லை. ‘நகசாப’ - நக என்றால் மலைகள். அத்தகைய மலைகளை தனுஸ்ஸாக வைத்துக் கொண்டிருப்பவன் என்று பெயர். இதே ஜகன்னாததாசர் செய்த, ருத்ர தேவரைக் குறித்த இன்னொரு ஸ்தோத்திரத்தில், ’த்ருத டமருக ஸாரங்க நின்னயபாத ஷதபத்ரார்ச்சிபர சங்க ஸதத பாலிஸொ ஜகன்னாத விட்டலன சம்ஸ்துதிசுவெ நீக்ஷிதிரத பூதரதன்வி’ என்று சொல்லியிருக்கிறார். பூதரதன்வி என்றால் நகசாப என்னும் அர்த்தமே வருகிறது. த்ரிபுராசுரர்களின் சம்ஹார காலத்தில் ருத்ரதேவருக்கு பூமியே ரதமாக ஆனது என்றும், நான்கு வேதங்களே குதிரைகள் ஆனது என்றும், பிரம்மதேவர் சாரதியானார் என்றும், மேரு பர்வதமே தனுஸ் ஆனது என்றும், ஸ்ரீஹரி பாணமாக ஆனார் என்றும் பாரதத்திலும், ஹரிவம்ச, பவிஷ்யோத்தர புராணங்களிலும் கதை உண்டு. ஆகையாலேயே, நகசாப என்றார். இத்தகைய ருத்ரதேவர், பாணாசுரனுக்கும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மனுக்கும் உஷாவிற்காக போர் நடந்தபோது பாணாசுரனின் சார்பாக, ஸ்ரீகிருஷ்ணனுடன் போர் புரிந்தார்.
இது மட்டுமல்லாமல், ராமாவதார சமயத்தில், ராவணனின் சம்ஹாரம் ஆனபிறகு, பிரம்மதேவர் தேவதைகளுடன் சேர்ந்து ராமனைக் குறித்து ஸ்தோத்திரம் செய்துகொண்டிருக்க, ருத்ரர் ராமனைக் குறித்து ‘யாராலும் கொல்லப்படக்கூடாது என்ற வரத்தை என்னிடமிருந்து பெற்றிருந்த ராவணனை, என் வரத்தை மீறி கொன்றாய். ஆகையால், என்னுடன் போருக்கு வா’ என்றார். இந்த விஷயத்தில் நிர்ணய வாக்கியம் இப்படி இருக்கிறது.
இதீரிதேத்வப்ஜ பவேனஷூலி சமாஹ்வய த்ராகவ மாஹவாய |
வரம் மதீயம் த்வகணய்ய ரக்ஷோ ஹதம் த்வயாதேன ரணாய மைஹி || (8-218)
இதிலிருந்து மேற்கூறிய அர்த்தம் புலப்படுகிறது. பாரிஜாத அபஹரண காலத்தில், இந்திரனுடன் சேர்ந்து ருத்ரதேவர், ஸ்ரீகிருஷ்ணனுக்கு எதிராக போர் புரிந்தார். இப்படியாக ருத்ரதேவர் பலமுறை ஸ்ரீபரமாத்மனுடன் போர் புரிந்திருக்கிறார் என்று புரிகிறது. நகசாப மொதலாதவரு - என்று சொல்லியதால், ருத்ரதேவருடன், பலராம, அர்ஜுன, திருதராஷ்டிர, பீஷ்மாசார்யர், துரோணர் ஆகியோரையும் சேர்த்து சொல்லியிருக்கிறார் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
இவர்கள் அனைவரும் செய்த அபராதங்கள் மிகப்பெரியதாக இருப்பினும், அவற்றை கவனத்தில் கொண்டுவராமல், இவர்கள் அனைவருக்கும் ஸ்ரீபரமாத்மன் இஹ பரங்களில் சுகங்களைக் கொடுக்கிறார். ஆகையால், ஸ்ரீஹரி கருணைக்கடல் என்று சொல்கிறார் தாசராயர்.
இவர்களின் தவறுகளையெல்லாம் மன்னித்ததைப் போல, நம் தவறுகளையும் (பாவங்களையும்) கூட ஸ்ரீபரமாத்மன் மன்னிக்காமல் இருந்தால், அவனை பக்ஷபாதி (ஒருதலைப் பட்சமானவன்) என்று சொல்ல முடியுமா என்றால் அப்படியல்ல. பாவம் செய்தவர்களின் தகுதி (யோக்யதை), தேவதாகார்ய சாதனை, பாவம் செய்தவர்களின் சுயபச்சாதாபம் ஆகியவையே அந்த பாவங்களுக்காக மன்னிப்பதற்கும், தண்டிப்பதற்காகவும் காரணமாக அமைந்திருக்கிறது தவிர, பரமாத்மனை பக்ஷபாதி என்று சொல்லமுடியாது.
No comments:
Post a Comment