#20 - கருணா சந்தி
அங்குடாக்ரதி = ஸ்ரீபரமாத்மனின் இடது காலின் கட்டைவிரல் முனையில்
ஜனிஸித = பிறந்த
அமரதரங்கிணியே = தேவ நதியான கங்கை
லோகத்ரயகள = மூன்று உலகத்தின் மக்களின்
அக = பாவங்களை
ஹிங்குசுவளு = பரிகரிப்பாள்
அவ்யாக்ருதாகாஷாந்த = பிரம்மாண்டத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் லட்சுமி ஸ்வரூபமான, சர்வதந்த்ர ஸ்வதந்த்ரரான,
இங்கடல மகள = பாற்கடலின் பிரதியான ரமாதேவி
ஒடெயன = தலைவனான ஸ்ரீபரமாத்மனின்
அங்கோபாங்ககளலி = அங்க = கை கால்களில். உபாங்க = நகம், முடிகளில்.
இப்ப = வியாபித்திருக்கும்
அமல = தோஷங்கள் அற்ற
அனந்த = அபரிமிதமான
சுமங்களப்ரத = உத்தமமான மங்களத்தைக் கொடுக்கும்
நாம = பகவந்தனின் நாமம்
பாவனமாள்பது = பவித்ரமாக ஆக்குகிறது
யேனரிது = என்ன ஆச்சரியம்?
பொருள்:
***
அங்கு3டாக்3ரதி3 ஜனிஸித3மர த
ரங்கி3ணியு லோகத்ரயக3ளக4
ஹிங்கி3ஸுவ ளவ்யாக்ருதா காஷாந்த வியாபிஸித3 |
இங்க3டல மக3ளொடெயனங்கோ
பாங்க3க3ள லிப்பமலனந்த சு
மங்களப்ரத3நாம பாவன மாள்புதே3னரிது3 ||20அங்குடாக்ரதி = ஸ்ரீபரமாத்மனின் இடது காலின் கட்டைவிரல் முனையில்
ஜனிஸித = பிறந்த
அமரதரங்கிணியே = தேவ நதியான கங்கை
லோகத்ரயகள = மூன்று உலகத்தின் மக்களின்
அக = பாவங்களை
ஹிங்குசுவளு = பரிகரிப்பாள்
அவ்யாக்ருதாகாஷாந்த = பிரம்மாண்டத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் லட்சுமி ஸ்வரூபமான, சர்வதந்த்ர ஸ்வதந்த்ரரான,
இங்கடல மகள = பாற்கடலின் பிரதியான ரமாதேவி
ஒடெயன = தலைவனான ஸ்ரீபரமாத்மனின்
அங்கோபாங்ககளலி = அங்க = கை கால்களில். உபாங்க = நகம், முடிகளில்.
இப்ப = வியாபித்திருக்கும்
அமல = தோஷங்கள் அற்ற
அனந்த = அபரிமிதமான
சுமங்களப்ரத = உத்தமமான மங்களத்தைக் கொடுக்கும்
நாம = பகவந்தனின் நாமம்
பாவனமாள்பது = பவித்ரமாக ஆக்குகிறது
யேனரிது = என்ன ஆச்சரியம்?
பொருள்:
ஸ்ரீபரமாத்மனின் இடது கால் கட்டைவிரல் நகத்தின் முனையிலிருந்து பிறந்த கங்கையே, பூலோக, புவர்லோக, சுவர்லோகத்தில் இருக்கும் அனைவரின் பாவங்களையும் போக்குகிறாள். இப்படியிருக்கையில், பாற்கடலின் மகளான லட்சுமிக்கு பதியான, லட்சுமிஸ்வரூபனான, பிரம்மாண்டத்தின் வெளியும் உள்ளேயும் வியாபித்திருக்கும் ஸ்ரீபரமாத்மனின், மகிமையுள்ள நாமம் அதாவது பரமாத்மனின் தேகத்தில் கை, கால்களில், நகம், முடிகளிலும், இவற்றின் ஒவ்வொன்று பாகங்களிலும் அபரிமிதமான குணநாமங்கள் வியாபித்திருக்கின்றன.
இந்த விஷயம் முதல் சந்தியில் இரண்டாம் பத்யத்தில் ‘க்ரியா விசேஷகள, பகெபகெய நூதனவ காணுத’ என்னும் பதத்தின் விளக்கத்தில் பார்த்திருக்கிறோம். அதை பார்த்துக்கொள்ளவும். இத்தகைய தோஷங்கள் அற்ற, நிர்மலமான பகவன் நாமமானது, மூன்று லோகங்களையும் பவித்ரமாக மாற்றுகிறது என்றால் அதில் வியப்பென்ன? அது மிகவும் சாதாரணமான விஷயமாகும்.
சிறப்புப் பொருள்:
அங்குடாக்ரதி ஜனிஸிதமர தரங்கிணியு - இந்த விஷயத்தில், பாகவத 5ம் ஸ்கந்தத்தில் ’தத்ர பகவத: சாக்ஷாத்யக்ஞ லிங்கஸ்ய விஷ்ணோர்விக்ரமதோ வாமபாதாங்குஷ்ட நக நிர்பினோர்த்வாண்ட கடாஹ விவரேணாந்த: ப்ரவிஷ்டாயா:’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியத்திலிருந்து, பரமாத்மனின் இடது பாத கட்டைவிரலானது, மேலிருக்கும் பிரம்மாண்டத்தில் தாக்கி, அது உடைய, வெளியில் இருக்கும் நீரானது உள்ளே பாய்ந்தது. அதையே தேவ நதி என்றும் கங்கை என்றும் அழைக்கிறோம்.
கங்கா கங்கேதி யோப்ரூயாத் யோஜனானாம் ஷதைரபி |
முச்யதே சர்வபாபேப்யோ விஷ்ணுலோகம் சகச்சதி ||
என்ற வேத வாக்கியத்தின்படி, கங்கை அனைத்து பாவங்களையும் போக்குபவள் என்று புலனாகிறது.
அவ்யாக்ருதாகாஷாந்த என்றால், நம் கண்ணுக்குத் தெரியும் ஆகாயம் இல்லாமல், பிரம்மாண்டத்தின் வெளிப்புறத்தில் பிரளய காலத்திலும்கூட இருக்கும் ஆகாயம் என்று பொருள். ஆனால் பிரளய காலத்தில் ‘நாஸதாஸீன்னோ ஸதாஸீத்ததானீ’ - எந்தவொரு பொருளும் இருக்காது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியிருக்கையில், ஆகாயம் இருக்கும் என்று இந்த வேத வாக்கியத்தில் சொல்லப்பட்டிருப்பது தவறானது என்றால், பிரளய காலத்தில் ப்ராக்ருத முதலான ஆகாயமும், நீர் முதலான விஷயங்களும் இருக்காது என்று அர்த்தமே தவிர, அவ்யாக்ருதாகாஷவு இருக்காது என்று அர்த்தம் அல்ல.
அது ஏன் என்றால், பிரளய காலத்தில் லட்சுமிதேவி கண்டிப்பாக இருக்கிறாள் என்னும் விஷயத்தை ‘ஜகதுதரன’ என்னும் பத்யத்தில் விளக்கமாக பார்த்திருக்கிறோம். அந்த லட்சுமிதேவியே அவ்யாக்ருதாகாஷ ரூபத்தில் இருந்து, தமோ ரூபத்தைக் கொண்டு, ஜலரூபளாகவும் இருக்கிறாள். ஆகையால், மேற்சொன்ன ஸ்ருதிக்கு களங்கம் வரவில்லை. இப்படியாக, அவ்யாக்ருதாகாஷமானது பிரம்மாண்டத்திற்கு வெளியே, அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கிறது.
இந்த ஆகாயமானது, எங்கெங்கு வியாபித்திருக்கிறதோ, அதன் இறுதிப்பகுதி வரைக்கும் பரமாத்மன் வியாபித்திருக்கிறான். இத்தகைய பரமாத்மனின் கை, கால் முதலான அங்கங்களிலும், முடி, நகம் முதலான அங்கங்களிலும்கூட, அனந்தானந்தமாக அவனது குண நாமங்கள் நிரம்பியிருக்கின்றன. இத்தகைய நாமாதிகளில் ஒரு முடியை பல பாகங்களாக பகுத்தாலும், அதன் ஒரு பாகத்தில் இருக்கும் குண நாமங்களில், ரமாதேவியானவர், தினந்தோறும் புத்தம்புதிய விஷயங்களையே பார்த்து வந்தாலும், அதை பார்த்து முடிக்க அவரால் முடியவில்லை என்ற பிறகு, அந்த பரமாத்மனின் நாமத்தின் மகிமைகளை என்னவென்று சொல்லி வியப்பது? இத்தகைய நாமமானது உலகத்தை பவித்ரமாக மாற்றுவதில் என்ன வியப்பு? இதையே தாசராயர் இந்த பத்யத்தில் விளக்குகிறார்.
Translating Patha very simple and understanding
ReplyDeleteDhanyavad RAJHARAO tirukoilur