#12 - கருணா சந்தி
தனவ = நிலத்தில் புதைந்திருக்கும் செல்வத்தை
சம்ரக்ஷிசுவ = காத்துக்கொண்டு, காவலுக்கு இருக்கும்
பணி = பாம்பு
தானுணதெ = தானும் உண்ணாமல்
மத்தொப்பரிகெ கொடதெ = வேறு யாருக்கும்கூட கொடுக்காமல்
அனுதினதி = தினந்தோறும் பார்த்தவாறு
சுகிசுவந்ததி = சுகப்படுவதைப் போல
லகுமிவல்லபனு = லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மன்
ப்ரணதரன = தன்னை வணங்குபவர்களை
நிஷ்காமனதி = அவரிடமிருந்து பிரதிபலன்களை எதிர்பாக்காமல்
காதிஹனு = காத்துக்கொண்டிருக்கிறான்
நித்யானந்தமய = நித்யானந்த ஸ்வரூபமான ஸ்ரீபரமாத்மன்
ஜகக்கெல்ல = இந்த அனைத்து உலகங்களுக்கும்
அப்ரதிமல்ல = யாரும் தனக்கு சமம் இல்லாதவன்
துர்ஜனர = தமோயோக்யர் செய்யும்
சேவெய = சேவையை
ஒல்ல = ஏற்றுக்கொள்கிறான்
பொருள்:
த4னவ சம்ரக்ஷிசுவ ப2ணி தா
நுணதே3 மத்தொ1ப்ப3ரிகெ3 கொட3த3னு
தி3னதி3 நோடு3த சுகிசுவந்ததி3 லகுமிவல்லப4னு |
ப்ரணதரனு காய்தி3ஹனு நிஷ்கா1
மனதி3 நித்யானந்த3மய து3
ர்ஜனர சேவேயனொல்லன ப்ரதிமல்ல ஜக3க்கெல்ல ||12தனவ = நிலத்தில் புதைந்திருக்கும் செல்வத்தை
சம்ரக்ஷிசுவ = காத்துக்கொண்டு, காவலுக்கு இருக்கும்
பணி = பாம்பு
தானுணதெ = தானும் உண்ணாமல்
மத்தொப்பரிகெ கொடதெ = வேறு யாருக்கும்கூட கொடுக்காமல்
அனுதினதி = தினந்தோறும் பார்த்தவாறு
சுகிசுவந்ததி = சுகப்படுவதைப் போல
லகுமிவல்லபனு = லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மன்
ப்ரணதரன = தன்னை வணங்குபவர்களை
நிஷ்காமனதி = அவரிடமிருந்து பிரதிபலன்களை எதிர்பாக்காமல்
காதிஹனு = காத்துக்கொண்டிருக்கிறான்
நித்யானந்தமய = நித்யானந்த ஸ்வரூபமான ஸ்ரீபரமாத்மன்
ஜகக்கெல்ல = இந்த அனைத்து உலகங்களுக்கும்
அப்ரதிமல்ல = யாரும் தனக்கு சமம் இல்லாதவன்
துர்ஜனர = தமோயோக்யர் செய்யும்
சேவெய = சேவையை
ஒல்ல = ஏற்றுக்கொள்கிறான்
பொருள்:
நிலத்தில் புதைந்திருக்கும் செல்வத்தை பாதுகாத்து வரும் பாம்பானது, அதில் இருக்கும் ஒரு காசையும், தானும் பயன்படுத்தாமல், யாரையும் பயன்படுத்த விடாமல் எப்படி பாதுகாத்து வருகிறதோ, அதைப்போலவே, ஒப்புமை இல்லாத, அனைவரையும் விட உத்தமமான (யாரும் அவனுக்கு சமம் இல்லாத), எப்போதும் நித்யானந்த ஸ்வரூபமான ஸ்ரீபரமாத்மன், பக்தர்களிடமிருந்து எந்தவொரு பிரதிபலன்களையும் விரும்பாமல், தன்னை வணங்குபவர்களை காத்துக்கொண்டு, அவர்களுக்கு எந்தவொரு ஆபத்துகளும் வராமல் காப்பாற்றுவான். தமோயோக்யர் செய்யும் சேவைகளைக்கூட ஏற்றுக்கொள்கிறான்.
சிறப்புப் பொருள்:
செல்வம் நிறைந்த புதையலை பாம்பு காத்துக்கொண்டிருக்கும் என்பது பரவலான நம்பிக்கை. அந்த பாம்பிற்கு, அந்தப் புதையலால் எந்தவொரு பயனும் இல்லை. அந்த புதையலை வைத்தவனுக்கும், அதை கண்டுபிடித்து எடுப்பவனுக்கும், அந்த பாம்பு உதவுவதும் இல்லை (எடுக்க விடுவதில்லை). அப்படியிருந்தும், எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல், எப்படி அந்த பாம்பு அந்த புதையலை பாதுகாத்து வருகிறதோ, அப்படியே, பரமாத்மனும் தன் பக்தர்களை காத்து வருகிறான். அந்த பக்தரிடமிருந்து பரமாத்மனுக்கு எந்தவொரு பிரதிபலனும் இல்லை. அவரின் பக்திக்கு மெச்சி, அவர்களை காக்கிறான். ’தேவஸ்யைஷ: ஸ்வபாடோயமாத்ம காயஸ்ய காஸ்வ்ருஹா’ பரமாத்மனுக்கு இது ஸ்வபாவ குணமே தவிர, பூர்ணகாமனான ஸ்வாமிக்கு வேறொருவரால் ஆகவேண்டிய வேலைதான் என்ன? (ஒன்றும் இல்லை) என்று ஸ்ருதி சொல்கிறது.
அப்படியெனில், பரமாத்மன் பக்தர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளாமல், அனைவரையும் தானே ஏன் அருளக்கூடாது? என்று கேள்வி வரலாம். உதாரணத்திற்கு: குசேலன் அவலைக் கொடுத்தான். இப்படியே யார் பரமாத்மனை பஜிக்க வேண்டுமென்றாலும், பத்ர, புஷ்ப, பல, தூபதீபாதிகளால் பூஜிக்கின்றனர்.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி |
ததஹம் பக்த்யுபஹ்ருதமஷ்னாமி ப்ரயதாத்மன: ||
இலைகளால், பூக்களால், நீரினால் யார் பக்தியுடன் என்னை வணங்கினால் (அவற்றை எனக்குக் கொடுத்தால்) அதை நான் அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று பரமாத்மனே சொல்லியிருக்கிறான். இப்படியிருக்கையில், பக்தர், ஏதாவது ஒன்றை கொடுத்தால் மட்டுமே அவர்களுக்கு அருளுவான் என்று தெரிகிறது.
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது, அவர்களிடம் ஒரு அக்ஷயபாத்திரம் இருந்தது. அதன் சிறப்பு என்னவெனில், திரௌபதி, சமையல் செய்வதற்கு முன் அதில் என்ன வைத்தாலும், அது அனைத்தும் அக்ஷயமாக வளர்ந்து வந்தன. திரௌபதியும், உண்டு முடித்துவிட்டு, அந்த பாத்திரத்தைக் கழுவிவிட்டால், மறுபடி அதே நாளில் அந்த அக்ஷயபாத்திரம் உதவிக்கு வருவதில்லை. இந்த விஷயத்தை அறிந்திருந்த துரியோதனன், பரம கோபசாலிகளான துர்வாசரை அழைத்து, அவரை உபசரித்து, மகிழ்வித்து, பிறகு அவரை பாண்டவர்களிடம் அனுப்பி அவர்களுக்கு அவர் மூலமாக சாபம் வாங்கித்தர வேண்டுமென்று நினைத்தான். அவரிடம் ‘நீங்கள் வனத்திலிருக்கும் பாண்டவர்களிடம் செல்லுங்கள். திரௌபதியின் போஜனத்திற்குப் பிறகு, சென்று அன்னத்தை யாசியுங்கள்’ என்றான்.
அதன்படியே துர்வாசரும், திரௌபதியின் போஜனத்திற்குப் பிறகு, பாண்டவர்களிடம் வந்து, அன்னத்தை யாசிக்க, தர்மராஜனும், கொடுக்கிறேன் என்றான். திரௌபதியோ, பாத்திரத்தில் அன்னம் இல்லை, கொடுக்கவில்லையெனில், துர்வாசர் சாபம் கொடுப்பார், என்ன செய்வது என்று கவலைப்பட்டு, ஸ்ரீகிருஷ்ணனை நினைக்க, ஸ்ரீகிருஷ்ணனும் அங்கு வந்தான். ‘எனக்கு பயங்கர பசியாக இருக்கிறது. நான் சாப்பிட உட்கார்வதற்குள் நீ என்னை அழைத்துவிட்டாய். நானும் அப்படியே வந்துவிட்டேன். எனக்கு சாப்பாடு போடு’ என்றான். திரௌபதியோ ‘என்ன ஸ்வாமி, என்னை சங்கடத்தில் ஆழ்த்துகிறாயே? இப்போதே துர்வாசருக்கு அன்னம் அளிக்கமுடியாத கவலையில் உன்னை அழைத்தேன். நீயே அன்னத்தைக் கேட்டால் நான் என்ன செய்வேன்?’ என்றாள்.
கிருஷ்ணனும் ‘திரௌபதி, கவலை வேண்டாம். அந்த பாத்திரத்தைக் கொண்டு வா’ என்றான். திரௌபதியும் அந்த பாத்திரத்தைக் கொண்டு வந்து காட்ட, ஸ்ரீகிருஷ்ணனும் அந்த பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு கீரைத் துண்டினை எடுத்துத் தின்றான். அங்கு ஸ்னானத்திற்காக சென்றிருந்த துர்வாச ரிஷிகளுக்கு வயிறு திடீரென்று நிரம்பிவிட்டது போல் ஆயிற்று. சாப்பிட வரவேண்டும் என்று அழைக்க வந்துகொண்டிருந்த பீமசேனரைப் பார்த்த உடனேயே, பயந்து தன் சிஷ்யர்களுடன் ஓடிப்போனார் என்று பாரத கதை சொல்கிறது. இப்படி திரௌபதி பத்ரத்தைக் கொடுத்து தன்யன் ஆனாள்.
கஜேந்திரன் முதலையால் பிடிக்கப்பட்டு கஷ்டப்படும்போது பரமாத்மனை வேண்ட, பரமாத்மனும் பிரத்யட்சம் ஆனபோது, ஒரு புஷ்பத்தை அவருக்கு சமர்ப்பித்தான். சபரி ராமனுக்கு பழங்களைக் கொடுத்து தன்யன் ஆனாள். த்ருவன் வெறும் நீரினால் ஷோடஷோபசார பூஜையை செய்தான். பரமாத்மன் அவனுக்கும் அருளினான். ஆகையாலேயே, பரமாத்மன், ’பத்ரம் புஷ்பம் பலம் தோயம்’ என்றிருந்தான்.
இப்படியிருக்கையில், பக்தர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் பரமாத்மன் அவர்களுக்கு உதவுவான் என்று பாம்பின் உதாரணத்தையும் கொடுத்து தாசராயர் விளக்கியது எப்படி என்றால்: பாகவத 7ம் ஸ்கந்தத்தில் பிரகலாதனின் கதையில்,
நைவாத்மன: ப்ரபுரயம் நிஜலாப பூர்ணோ யானம் ஜனாடவிதுஷ: கருணோ வ்ருணீதெ |
யத்யஜ்ஜனோ பகவதே விததீத யானம் தச்சாத்மனே ப்ரதிமுகஸ்ய யதா முகஸ்ரீ ||
(ஸ்லோகம் 3-9-11)
ஸ்ரீபரமாத்மன் ஆனவர், தன் பக்தர்கள் ஞானிகளோ அல்லது அஞ்ஞானிகளோ எப்படி இருந்தாலும், அவர்கள் செய்யும் பூஜாதிகளை ஏற்றுக்கொண்டு, அதன் அங்கமாக அவர்கள் சமர்ப்பிக்கும் பதார்த்தங்களை தன்னுடைய சுகத்திற்காக ஏற்றுக்கொள்வதில்லை. பின் அவற்றை ஏன் ஏற்றுக்கொள்கிறான் என்றால், பூஜையை செய்பவரின் நலனுக்காகவே அவன் அவற்றை ஏற்றுக்கொள்கிறான். பூர்ணகாமனான பரமாத்மனுக்கு இவர்கள் கொடுக்கும் பதார்த்தங்களால் ஆகக்கூடிய பலன்தான் என்ன? எப்படி நாம் அலங்காரங்களை செய்துகொண்டு, கண்ணாடி முன் நின்றால், கண்ணாடியில் தெரியும் உருவமும் அலங்கரித்துக் கொண்டிருப்பதைப் போல தெரிகிறதோ அப்படியே, பிம்பரூபியான பரமாத்மனை பூஜிக்க, பிரதிபிம்பனான ஜீவனுக்கு சுகம் உண்டாகிறது.
மகாராஜாவைப் பார்க்க செல்லும் மக்கள், புஷ்ப பழங்களை எடுத்துச் சென்றால், அதை ராஜன் ஏற்றுக்கொள்வது தன்னிடம் அவை இல்லை என்பதற்காக இல்லை. மக்களின் அன்பிற்காகவே. அதைப் போலவே, பக்தர்களை அருள்வதற்காக அவர்களின் சேவையை ஏற்றுக்கொள்கிறான். அவனுக்கு இதனால் எந்தவொரு பலன்களும் இல்லை. அதனாலேயே தாசராயர், பரமாத்மன் நிஷ்காமத்தினால் பக்தர்களுக்கு அருள்கிறான் என்றார்.
துர்ஜனர சேவெயனொல்ல.
அபக்தோதாஹ்ருதம் நைவ பலதாத்ருபவிஷ்யதி |
பூர்யப்யபக்தோபஹ்ருதம் நமேதோஷாய கல்பதே ||
இப்படிப்பட்ட வாக்கியங்களால், பக்தர்கள் செய்யும் பூஜையை பரமாத்மன் ஏற்றுக்கொள்கிறான் என்பது தெளிவாகிறது. மேலும் கீதா வாக்கியம் சொல்வது:
தானஹம் த்விஷத: க்ரூரான் சம்சாரேஷு நராதர்மா |
க்ஷிபாம்யஜ ஸ்ரமசுரானா சுரீஷ்வேவ யோனிஷு ||
அசுரீரி யோனிமாபன்ன மூடா ஜன்மனி ஜன்மனி |
மாமப்ராப்யைவ கௌந்தேய ததோயாந்த்ய தயாங்கதிம் ||
என்மேல் ஒருமுறை த்வேஷம் செய்தாலும், அவரை நிரந்தர அசுர லோகத்தில் தள்ளுவேன். இப்படி பல பிறவிகளில் தொடர்ந்து தைத்ய குலத்தில் பிறந்து, என்மேல் த்வேஷத்தையே செய்து, என்னை வந்து அடையாமலேயே இறுதியில் கோரமான தமஸ்ஸிற்கு சென்றுவிடுவர் என்று ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்கிறான். இதிலிருந்து தமோயோக்யரின் பூஜையை பரமாத்மன் ஸ்வீகரிப்பதில்லை என்பது தெளிவாகிறது. ஆகையாலேயே தாசராயர் ‘துர்ஜனர சேவயனொல்ல’ என்று சொல்லியிருக்கிறார்.
***
No comments:
Post a Comment