ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, February 2, 2020

#9 - மங்களாசரண சந்தி

#9 - மங்களாசரண சந்தி

1ஞ்சபே4தாத்மக ப்ரபஞ்சகெ
பஞ்சரூபாத்மகனெ தை3வக
பஞ்சமுக2 சக்ராதிக3ளு கிங்கரரு ஸ்ரீஹரிகெ |
பஞ்சவிம்ஷதி த1த்வ தரதம
பஞ்சிகெகளனு பே1ள்த பா4வி வி
ரிஞ்சியெனிபானந்த தீர்த்தர நெனெவெனனுதி3னவு ||9

பொருள்:
பஞ்ச பேதாத்மக ப்ரபஞ்சகெ = 5 பேதங்களைக் கொண்ட இந்த உலகத்திற்கு
பஞ்ச ரூபாத்மகனெ தெய்வக = அனிருத்தாதி 5 ரூபங்களைக் கொண்ட ஸ்ரீபரமாத்மனே தெய்வம்
ஸ்ரீஹரிகெ = இத்தகைய பரமாத்மனுக்கு
பஞ்சமுக ஷக்ராதிகளு கிங்கரரு = பஞ்சமுக = ஐந்து முகங்களைக் கொண்ட ருத்ரதேவர். ஷக்ர = தேவேந்திரன். ஆதிகளு = இவர்களிலிருந்து அனைவரும். கிங்கரரு = சேவகர்கள். 
பஞ்சவிம்ஷதி தத்வதரதம பஞ்சிகெகள = பஞ்சவிம்ஷதி = 25 தத்வங்கள். தர, தம = தேவதைகளில் உத்தம, மத்யம என்னும் தாரதம்யம் இவைகளை. 
பஞ்சிகெகள = மகிமைகளை
பேளித = தெரிவித்த
பாவிவிரிஞ்சியெனிப = அடுத்த கல்பத்தில் பிரம்மன் என்று சொல்லப்படும் வாயுதேவரின் அவதாரரான
ஆனந்த தீர்த்தர = ஸ்ரீமதானந்த தீர்த்தரை
அனுதினவு = தினந்தோறும்
நெனெவெனு = நினைப்பேன். 

பொருள்:
பஞ்சபேதங்களால் ஆன உலகம் என்றதன் விவரம். ஜீவ ஈஸ்வர பேதம், ஜீவ ஜீவ பேதம், ஜீவ ஜட பேதம், ஜட ஈஸ்வர பேதம், ஜட ஜட பேதம் என்று ஐந்து பேதங்கள். பஞ்சரூபங்கள் = அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ, நாராயண என்னும் பரமாத்மனின் 5 ரூபங்கள். இப்படி ஐந்து பேதங்களைக் கொண்ட உலகத்திற்கு, 5 ரூபங்களைக் கொண்ட ஸ்ரீபரமாத்மனே தலைவன் என்று பொருள். ‘த்யேய: பஞ்சமுகோ ருத்ர:’ என்னும் தந்திரசார வாக்கியத்தால், பஞ்சமுக என்றால் ருத்ரதேவர் என்று நிர்ணயம் ஆகிறது. 

25 தத்வங்கள் என்னவெனில்: பஞ்சபூதங்கள் 5, பஞ்ச தன்மாத்ரங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, அஹங்கார, மனஸ், புத்தி, சித்த தத்வங்கள் 4, என மொத்தம் 24 தத்வங்கள். பரமாத்மன் 1. ஆகமொத்தம் 25 தத்வங்கள். தரதம என்றால், விஷ்ணு சர்வோத்தமன். அவனுக்கு அடுத்தவர், ரமாதேவி. பிறகு பிரம்ம வாயுகள். அடுத்து சரஸ்வதி பாரதி என்ற பேதங்களைக் காட்டுவதே தாரதம்யம். இப்படியாக 25 தத்வங்களையும், பஞ்சபேதங்களையும், தாரதம்யங்களையும் உலகத்தில் பரப்பினார் என்பது கருத்து. வாயுதேவரே அடுத்த கல்பத்தில் பிரம்ம பதவிக்கு வருகிறார் ஆகையால் ‘பாவி-விரிஞ்சி’ என்று சொல்லியிருக்கிறார் என்று அறியவேண்டும். 

அடுத்து, அஹங்கார தத்வத்திற்கும் மனஸ்ஸிற்கும் அபிமானிகளான ருத்ர தேவரை, இரு ஸ்லோகங்களில் வணங்குகிறார். 

***

No comments:

Post a Comment