#11 - மங்களாசரண சந்தி
க்ருத்திவாசனே = புலித்தோலை ஆடையாக உடுத்தியவனே
மஹதேவ = தேவோத்தமனே
நீ = நீ
ஹிந்தே = ருத்ர பதவிக்கு வருவதற்கு முன்னர்
நால்வத்து கல்ப = 40 பிரம்ம கல்பத்தின் வரைக்கும்
ஸமீரனலி = வாயுதேவரிடம்
சிஷ்யத்வ = சிஷ்யனாக
வஹிஸி = இருந்து
அகிளாகமார்த்தகள = அனைத்து வேத சாஸ்திரங்களைப் படித்து
ஜலதியொளு = சமுத்திரத்தில்
ஹத்துகல்பதி = 10 பிரம்ம கல்பத்தின் வரைக்கும்
தபவகெய்து = தவம் செய்து
ஆதித்யரொளகெ = அதிதியின் மக்களான தேவதைகளிடம்
உத்தமனெனிஸி = உத்தமன் என்று போற்றப்பட்டு
புருஷோத்தமன = க்ஷாக்ஷரர்களில் சிறந்தவரான ஸ்ரீமன் நாராயணனின்
பர்யங்க = படுக்கையாக இருக்கும் சேஷனின்
பதவ = பதவியை
யைதிதெயோ = பெற்றாயே, இப்படியான நீ
எமகெ = எமக்கு
சதா = எல்லா காலங்களிலும்
மங்களவ = மங்களகரமான உத்தம ஞானத்தை
கருணிஸு = தயவுசெய்து அருள்வாயாக
க்ருத்திவாஸனெ ஹிந்தெ3 நீ நா
ல்வத்து1 க1ல்ப சமீரனலி சி
ஷ்யத்வ வஹிசகி2ளாக3 மார்த்தக3ளோதி3 ஜலதி4யொளு |
ஹத்து கல்பதி3 தபவகை3தா3
தி3த்யரொள கு3த்தமனெனிஸி புரு
ஷோத்தமன பரியங்க பத3வைதி3தெயோ மஹதேவ ||11க்ருத்திவாசனே = புலித்தோலை ஆடையாக உடுத்தியவனே
மஹதேவ = தேவோத்தமனே
நீ = நீ
ஹிந்தே = ருத்ர பதவிக்கு வருவதற்கு முன்னர்
நால்வத்து கல்ப = 40 பிரம்ம கல்பத்தின் வரைக்கும்
ஸமீரனலி = வாயுதேவரிடம்
சிஷ்யத்வ = சிஷ்யனாக
வஹிஸி = இருந்து
அகிளாகமார்த்தகள = அனைத்து வேத சாஸ்திரங்களைப் படித்து
ஜலதியொளு = சமுத்திரத்தில்
ஹத்துகல்பதி = 10 பிரம்ம கல்பத்தின் வரைக்கும்
தபவகெய்து = தவம் செய்து
ஆதித்யரொளகெ = அதிதியின் மக்களான தேவதைகளிடம்
உத்தமனெனிஸி = உத்தமன் என்று போற்றப்பட்டு
புருஷோத்தமன = க்ஷாக்ஷரர்களில் சிறந்தவரான ஸ்ரீமன் நாராயணனின்
பர்யங்க = படுக்கையாக இருக்கும் சேஷனின்
பதவ = பதவியை
யைதிதெயோ = பெற்றாயே, இப்படியான நீ
எமகெ = எமக்கு
சதா = எல்லா காலங்களிலும்
மங்களவ = மங்களகரமான உத்தம ஞானத்தை
கருணிஸு = தயவுசெய்து அருள்வாயாக
பொருள்:
கருட புராண பிரம்ம காண்டத்தில், ருத்ரதேவருக்கு வாமதேவ என்ற பெயர் வந்ததற்கான காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.
ஈஷான்யகோணே சம்ஸ்திதோயஸ்து ருத்ரோஹ்ய வாமதேவோ வாமதேவேதி சம்ஞாம் |
ஸ்வவாமபாகே சம்ஸ்திதம் வாசுதேவம் ஸ்வயோக்யபக்தா பூஜதே சர்வதெய்வ ||
இதன் பொருள்:
ஸ்ரீபரமாத்மன் நடுவில் மேற்கு நோக்கி அமர்ந்திருக்க, ருத்ரர் பரமாத்மனுக்கு ஈசான்ய மூலையில் (அதாவது பரமாத்மனின் பின்னே, வலது புறத்தில், மேற்கு நோக்கி அமர்ந்து), தம் இடது பக்கத்தில் இருக்கும் பரமாத்மனை, தம் தகுதிக்கேற்ப பக்தியுடன் பூஜித்திருப்பதால் அவருக்கு வாமதேவ என்ற பெயர் வந்தது. கிருத்திவாஸனெ என்னும் பதத்தினால் பொதுவாக தோல், ஆடை என்று பொருள் வந்தாலும், ‘வியாக்ர சர்மாம்பர தரம்’ என்னும் பாகவத வசனத்தினாலும், புரந்தரதாசரின் பதத்தில் இருக்கும் ‘உட்டத்து ஹுலி தொடலு பென்ன மேலெ ஹொத்த ஆனெய தொகலு’ என்னும் வாக்கியத்தாலும், ‘சாமஜாஸின வஸன பூஷண கிருத்திவாஸனே’ என்று இரு வேறு விஷயங்களைச் சொல்லி, மேற்சொன்ன அர்த்தத்தையே தாசராயர் குறிப்பிட்டிருக்கிறார். இதில் புனருக்தி தோஷம் இல்லை. ருத்ரதேவர், 40 பிரம்மகல்ப சாதனையை செய்துகொண்டு மேலும் 10 பிரம்மகல்ப தவத்தை செய்திருக்கிறார். மொத்தம் 50 பிரம்மகல்ப சாதனை என்று தாசராயர் சொல்லியிருக்கிறார்.
இதற்கு ஆதாரமான ஸ்ரீமதாசார்யரின் ‘ததைவ சத்வாரிம்ஷத்பி: பதம் ஷைவஞ்ச ஜன்மபி:’ என்னும் பாகவத தாத்பர்ய நிர்ணய வசனத்தாலும், ‘தஷகல்ப தபஸ்சீர்ணம் ருத்ரேண லவணார்ணவெ’ என்னும் அனுவியாக்யான வசனத்தாலும், ருத்ர தேவருக்கு 50 கல்ப சாதனை இருக்கிறது என்று தெரியவருகிறது. மேலும் பாகவத 4ம் ஸ்கந்த தாத்பர்யத்தில் மேற்கோள் காட்டியிருக்கும் அனுவியாக்யான வாக்கியத்தில்
பிரம்மணாம் ஷதகாலத்து பூர்வ வாரப்ய சம்க்ஷய |
பிரம்மணஸ்த்வேவதாவத்வம் பஞ்சாஷத் பிரம்மஸ்ததா |
ருத்ரஸ்ய விம்ஷதேவஸ்யாச் சக்ரஸ்யார்காதி கேதஷ: |
என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால் ருத்ரதேவருக்கு 50 கல்ப சாதனை இருக்கிறது என்று நிர்ணயம் ஆகிறது. இதே அபிப்பிராயத்தையே தாசராயரும் தம் கிரந்தத்தில் சொல்லியிருக்கிறார்.
ஒருவேளை புராணங்களில் சொல்லப்பட்ட வாக்கியங்கள், ஸ்ரீமதாசார்யரின் நிர்ணயத்திற்கு எதிராக இருந்தால், அதை அவர் சொன்ன மாதிரியே புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில், புராணங்களில் பல இடங்களில் கற்பனையாகவோ, அஞ்ஞானிகளை ஏமாற்றவோ பல விஷயங்கள் எதிர்ப்பதமாக சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றை சரிசெய்வதற்காகவே ஸ்ரீமதாசார்யர், தாத்பர்ய நிர்ணயாதி கிரந்தங்களை செய்திருக்கிறார். ஆகையால், புராணங்கள் நமக்கு எப்படி தெரிந்தாலும், அவர் கூறிய அர்த்தத்தையே உண்மை என்று அறியவேண்டும். இந்த விஷயத்தில் ‘நாஸ்மதுக்தி சத்ருஷம் ஹிதரூபம்’ என்னும் ஸ்ரீமதாசார்யரின் வாக்கியத்தினால் இந்த அர்த்தம் தெளிவாகிறது.
மேலும்
ருகாதயஸ்ச சத்வார: பாரதம் பஞ்சராத்ரகம் |
மூல ராமாயணம் சைவ சாஸ்த்ரமித்யபிதீயதே ||
ருகாதி 4 வேதங்கள், பாரத, பாஞ்சராத்ர ஆகம, மூல ராமாயண இவற்றிற்கு சாஸ்திரங்கள் என்று பெயர். மீதம் இருக்கும் பாகவதாதி புராணங்கள் இவற்றை சார்ந்து இருந்தால் அவையும் சாஸ்திரங்களே ஆகும். இல்லையேல் இல்லை. ஆகையால், ஸ்ரீமதாசார்யர் பாரதாதிகளை அனுசரித்து பாகவத புராணத்திற்கு வியாக்யான ரூபமாக பாகவத தாத்பர்யம் என்னும் கிரந்தத்தை இயற்றினார்.
ஆனால் இன்று சில அஞ்ஞானிகள் தாசவேடம் தரித்து, தாசகூடத்திற்கும் வியாசகூடத்திற்கும் சண்டையை உண்டு பண்ணி, தாசராயர், ஸ்ரீமதாசார்யரின் சிஷ்யர் இல்லை என்று பொருள்படவும் சொல்வதுண்டு. அதில் உண்மையில்லை. ஏனெனில், ஸ்ரீமதாசார்யரின் வாக்கியத்திற்கு எதிராக அவர் என்றும் எதையும் சொல்லியதில்லை. ஆகையால், ஸ்ரீமதாசார்யரின் கிரந்தங்களுக்கு இந்த கிரந்தம், வியாக்யானமாக இருக்கிறது என்றே நினைக்கவேண்டும்.
இப்படியிருக்கையில், ஒரு வியாக்யானகாரர் தமது ஸ்ரீஹரிகதாம்ருதசார வியாக்யானத்தில், தாசரின் அபிப்பிராயம் ருத்ரதேவருக்கு 50 கல்ப சாதனை என்று எழுதி, அதற்கு ஆதாரமாக ஸ்ரீமதாசார்யரின் வாக்கியங்களை உதாரணம் கொடுத்து, 50 கல்ப சாதனையை நிர்ணயித்து, இறுதியாக கருட புராணத்து வாக்கியம் ஒன்றை எடுத்துக்காட்டி, அந்த வரிகளுக்கு சரியான அர்த்தத்தை புரிந்துகொள்ளாமல், ருத்ர தேவருக்கு 50 கல்ப சாதனை என்று யார் சொல்வார்களோ அவர் தமோயோக்யர் என்று சொல்லி, ஸ்ரீமதாசார்யர் மற்றும் ஸ்ரீதாசராயர் இருவரும் தமோ யோக்யர் என்று சொல்லியிருக்கிறார். இது கண்டனத்திற்குரியதாகும். பிரம்ம காண்டத்தில் ருத்ரதேவருக்கு 50 கல்ப சாதனை என்று அறிபவர்கள் தமோ யோக்யர்கள் என்று இருந்தாலும், ஆசார்யரின் மதத்தை அனுசரித்து அதை விளக்க வேண்டுமே தவிர, புராணங்களை நம்பி ஸ்ரீமதாசார்யரின் எதிர்ப்பை சம்பாதிக்கக்கூடாது. அப்படி ருத்ர தேவருக்கு 50 கல்ப சாதனை என்று அறிந்தவர்கள் தமோ யோக்யர்கள் என்று கருட புராணத்தில் சொல்லவேயில்லை. அங்கிருக்கும் வாக்கியம் என்னவென்றால் :
பஞ்சாஷீதி பிரம்மகல்பம் யே விஜானந்திதே த்விஜ |
அந்தந்தம: ப்ரவிஷ்யந்தி சத்யம் சத்யம் மயோதிதம் ||
என்று இருக்கிறது. இதில் இருக்கும் பஞ்சாஷீதி என்னும் சொல்லுக்கு 50 என்னும் அர்த்தம் என்று எந்த அகராதியைப் பார்த்து அவர் அறிந்தாரோ நான் அறியேன். இத்தகைய சிறந்த கிரந்தத்திற்கு பற்பல ஆதாரங்களை உதாரணம் கொடுத்து, புகழடைந்த பல வியாக்யானகாரர்கள், பஞ்சாஷீதி என்னும் சொல்லுக்கு 50 என்றே பொருள் சொல்லியிருக்கின்றனர். இவர்களுக்கு ஏதோ குழப்பம் வந்திருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. சம்ஸ்கிருதத்தில் ‘பஞ்சாஷத்’ என்றால் 50 என்றும் ‘பஞ்சாஷீதி’ என்றால் 85 என்றும் அர்த்தம். இவர் தாம் உதாரணம் கொடுத்த ஸ்லோகத்தில் பஞ்சாஷீதி என்று இருக்கையில், பஞ்சாஷத் மற்றும் பஞ்சாஷீதி இரு சொற்களுக்கும் வித்தியாசம் உணராமல், ஒரு வித மயக்கத்தில் 50 என்று அர்த்தம் கொடுத்து, ஸ்ரீமதாசார்யரையும் தமோயோக்யராக மாற்றிவிட்டார்.
கருட புராணத்தின் வாக்கியம் என்னவென்றால்:
கருட உவாச:
பஞ்சாஷீதி பிரம்ம கல்பம் சமாரப்ய மஹாப்ரபு |
ருத்ரஸ்ய ஹ்யபரோக்ஷம் ஸ்யாத்ததாஹ்யரப்த சம்க்ஷய: |
இதிஸ்ருதம் மயா ப்ரம்ம |||
கிருஷ்ண உவாச:
பஞ்சாஷீதி பிரம்மகல்பம் மேவிஜானந்தி ... ||
கருடனின் கேள்வி: ’ருத்ரதேவருக்கு 85 கல்பங்கள் முதலில் பிராரப்தமும் பின் அபரோக்ஷமும் ஆகும் என்று நான் பிரம்மதேவரிடமிருந்து கேட்டிருக்கிறேன். ஆனால் நீயோ 50 கல்ப சாதனை என்று சொல்கிறாயே, இதனால் எனக்கு சந்தேகம் வருகிறது. உங்கள் இருவரும் அபிப்பிராயமும் எப்படி வேறுபடும். இதற்கு என்ன காரணம்?’. அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் - ‘ஹே கருடனே! ருத்ரதேவருக்கு 85 கல்பசாதனை என்று சொல்பவர்கள் தமோயோக்யர்கள். என் வாக்கியத்திற்கும், பிரம்மன் சொன்னதற்கும் வேறுபாடு சொல்பவர்கள் அஞ்ஞானிகள் என்று அறிவாயாக. நாங்கள் இருவரும் சொல்வதை ஒன்று என்றே ஞானிகள் சொல்வார்கள்’. எப்படியெனில் - பிரம்மதேவர் சொன்ன 85ஐ எழுத்தில் எழுதினால், அந்த இரு எண்களையும் பெருக்கினால் 8 x 5 = 40 வருகிறது. இதுவே பிரம்மதேவர் சொன்ன பஞ்சாஷீதி என்னும் சொல்லுக்கு அர்த்தமாகும். இதுவே கருட புராணத்தின் வாக்கியத்திற்கு அர்த்தமாகும்.
இருக்கட்டும். அப்படியும், ஜகன்னாததாசர் சொல்வது 50 கல்ப சாதனை என்று. கருட புராணத்தின்படி 40தானே வருகிறது. இதிலும் வேறுபாடு இருக்கிறதே என்றால். ஸ்ரீமதாசார்யரோ, ஜகன்னாததாசரோ இருவரும் ருத்ரதேவருக்கு 50 என்று சொல்லவில்லை. 40 கல்ப சாதனை என்றும் பிறகு தனியாக 10 கல்ப சாதனை என்றும் சொல்லியிருக்கிறார்கள். இதன் விளக்கம் என்னவெனில்: ருத்ர பதவிக்கு வரவேண்டுமெனில், 40 கல்ப சாதனையையும், சேஷ பதவியை பெற்றபிறகு முக்தியை அடைவதற்காக 10 கல்பத்தை தனியாக சாதனை செய்யவேண்டும். நிர்ணய வியாக்யானத்தில் ‘தஷகல்பஸ்ய மோக்ஷ விசேஷார்த்தம் தப: பரத்வமுக்தம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியிருக்கையில், 40 கல்பங்கள் என்று சொல்லும் கிரந்தங்கள் அவை ருத்ர பதவிக்கு வருவதற்கு மட்டுமே என்றும். 50 கல்பங்கள் என்று சொல்பவை அது மோட்ச சாதனையையும் சேர்த்து சொல்லப்பட்டிருக்கிறது என்று அறியவேண்டும். இப்படி சொல்வதால், ஆசார்யரின் வாக்கியத்திற்கும், தாசராயரின் வாக்கியத்திற்கும், கருட புராணத்து வாக்கியத்திற்கும் எவ்வித வேறுபாடும் தோன்றுவதில்லை.
புருஷோத்தமன பர்யங்க பதவைதிதெயோ மகாதேவா = என்று சேஷதேவரையும் சேர்த்து வணங்கியதைப் போல ஆயிற்று என்று நினைக்கவேண்டும்.
***
No comments:
Post a Comment