#8 - மங்களாசரண சந்தி
க்ஷிதி1யொளகெ மணிமந்த1 மொத3லா
த3தி1து3ராத்1மரு ஒந்த3தி4க விம்
ஷதி குபாஷ்யவ ரசிஸெ நடுமனெயெம்ப பிராம்மணன |
சதிய ஜடரதொளவதரிஸி பா4
ரதிரமண மத்வாபி4தானதி3
சதுரத3ஷ லோகதலி மெரெதப்ரதிமகொ3ந்திசுவெ ||8பொருள்:
மணிமந்த மொதலாத = மணிமந்தன் முதற்கொண்டு
அதி துராத்மரு = தமோ யோக்யரான தைத்யர்கள்
க்ஷிதியொளகெ = பூமியில் பிறந்து
ஒந்ததிகவிம்ஷதி குபாஷ்யவ = பிரம்மசூத்திரத்திற்கு 21 குபாஷ்யங்களை
ரசிஸி = இயற்றி
பாரதிரமண = பாரதிபதியான வாயுதேவர்
நடுமனெயெம்ப = மத்யகேஹ பட்டர் என்னும் பிராமணரின்
ஸதிய = மனைவியின்
ஜடரதொளு = வயிற்றில்
அவதரிஸி = பிறந்த குழந்தையின் தேகத்தில் பிரவேசித்து
மத்வாபிதானதி = மத்வாசார்யர் என்னும் பெயரால்
சதுரதஷ லோகதலி = 14 உலகங்களிலும்
மெரெத = புகழடைந்த
அப்ரதிமெகெ = ஒப்புமை இல்லாத (அவரை)
வந்திஸுவெ = வணங்குவேன்.
பொருள்:
’ஏகவிம்ஷதி குபாஷ்ய தூஷகம்’ என்று மத்வவிஜயத்தில் சொல்லியிருக்கும்படி, ஸ்ரீமதாசார்யர் 21 குபாஷ்யங்களை நிராகரித்து, பிரம்மசூத்திரத்திற்கு 22வது பாஷ்யத்தை இயற்றினார். ‘நடுமனெ எம்ப பிராமணன ஸதிய ஜடரதொளவதரிஸி’ என்று சொல்லியதால், பொதுவாக நமக்கு மத்யகேஹ பட்டரின் மனைவியின் கர்ப்பத்தில் குழந்தையாக வந்து பிறந்தார் என்று தோன்றும். ஆனால், இவர் சுக்ல ஷோணித சம்பந்தங்களினால் கர்ப்பவாசத்தில் வந்து பிறந்தவரல்ல.
பிறகு எப்படி பிறந்தார் என்றால்: மத்யகேஹ பட்டரின் மனைவி கர்ப்பவதியாகி, அழகான, மன்மத ஸ்வரூபனான ஒரு குழந்தையைப் பெற்றார். அப்போது வாயுதேவர் அங்கு வந்து, ஒரு நாட்டினை வென்ற அரசன், ஏற்கனவே அங்கு இருந்த அரசனை வெளியேற்றிவிட்டு தான் உள்நுழைந்து சிம்மாசனத்தில் அமர்வதைப் போல, அந்த குழந்தையின் உள்ளேயிருந்த ஜீவனை வெளியேற்றிவிட்டு, தான் உள்ளே பிரவேசித்தார். ஆகையால், அந்த குழந்தையின் உடல் மட்டுமே மத்யகேஹ பட்டரின் மனைவியின் கர்ப்பத்திலிருந்து வந்தது. பிறந்தபிறகு வாயுதேவரின் பிரவேசம். ‘ராஜீவ ஸத்சுரவரம் புவனாதிராஜோ நிஷ்காஸர்ய பரமஸௌபகர்வா விவேஷ’ என்னும் மத்யவிஜயத்தின் வாக்கியத்தின்படி இது தெளிவாகிறது.
தாசராயர் ‘ஜடரதொளவதரிஸி’ என்று ஏன் சொன்னார் என்றால், இவரின் உடல் அந்த பெண்மணியின் கர்ப்பத்திலிருந்து வந்தது என்று அறியவேண்டும். ‘சதுரதஷலோகதலி மெரெத’ என்றால், இவரின் கீர்த்தி / புகழ் 14 உலகங்களிலும் வியாபித்திருக்கிறது என்று பொருள்.
***
No comments:
Post a Comment