#3 - கருணா சந்தி
ஸ்ருதிததிகளிகெ = வேத சமூகங்களுக்கு
அபிமானி = அபிமானியான
லகுமி ஸ்துதிகளிகெ = லட்சுமிதேவி செய்யும் ஸ்தோத்திரங்களுக்கு
கோசரிசத = தரிசனம் அளிக்காத
அப்ரதிஹத மஹைஸ்வர்யாதகிள குணகணாம்போதி = அப்ரதிஹத மஹைஸ்வர்யாதி = ஒப்புமை இல்லாத பெருஞ்செல்வங்கள். அகிள = அனைத்து. சத்குணகள = நற்குணங்கள். அம்புதி = கடல் போன்றவனான ஸ்ரீபரமாத்மன்
ப்ரதிதிவஸ = தினந்தோறும்
தன்னங்க்ரி சேவாரத மஹாத்மரு = தன்னங்க்ரி = தன் பாதங்களின். சேவா = சேவையில். ரத = ஈடுபட்டுள்ள. மஹாத்மரு = மஹனீயர்கள்.
மாடுதிஹ = செய்துகொண்டிருக்கும்.
சம்ஸ்துதிகெ = ஸ்தோத்திரத்திற்கு வசமாகும்
காருண்யக்கெ = (இவனது) கருணையை
ஏனெம்பெ = என்னவென்று வர்ணிப்பேன்?
ஸ்ருதி த1திகளபி4மானி லகுமி
ஸ்துதிக3ளிகெ3 கோ3சரிசத3ப்ரதி
ஹத மஹைஸ்வர்யாத்யகி2ள சத்3கு3ண கணாம்போ4தி |
ப்ரதிதி3வஸ தன்னங்க்4ரி சேவா
ரத மஹாத்மரு மாடு3தி1ஹ சம்
ஸ்துதிகெ3 வஷனாகு3வனிவன காருண்யகேனெம்பே3 ||3ஸ்ருதிததிகளிகெ = வேத சமூகங்களுக்கு
அபிமானி = அபிமானியான
லகுமி ஸ்துதிகளிகெ = லட்சுமிதேவி செய்யும் ஸ்தோத்திரங்களுக்கு
கோசரிசத = தரிசனம் அளிக்காத
அப்ரதிஹத மஹைஸ்வர்யாதகிள குணகணாம்போதி = அப்ரதிஹத மஹைஸ்வர்யாதி = ஒப்புமை இல்லாத பெருஞ்செல்வங்கள். அகிள = அனைத்து. சத்குணகள = நற்குணங்கள். அம்புதி = கடல் போன்றவனான ஸ்ரீபரமாத்மன்
ப்ரதிதிவஸ = தினந்தோறும்
தன்னங்க்ரி சேவாரத மஹாத்மரு = தன்னங்க்ரி = தன் பாதங்களின். சேவா = சேவையில். ரத = ஈடுபட்டுள்ள. மஹாத்மரு = மஹனீயர்கள்.
மாடுதிஹ = செய்துகொண்டிருக்கும்.
சம்ஸ்துதிகெ = ஸ்தோத்திரத்திற்கு வசமாகும்
காருண்யக்கெ = (இவனது) கருணையை
ஏனெம்பெ = என்னவென்று வர்ணிப்பேன்?
பொருள்:
எந்த பரமாத்மனை ஸ்தோத்திரம் செய்து அவனது தரிசனத்தைப் பெறுவதற்கு, ஸ்ரீலட்சுமிதேவியருக்கும் சாத்தியம் இல்லையோ, யார் எப்போதும் நாசம் இல்லாமல் ஒரே மாதிரியான கருணைக்கடலாக இருக்கிறானோ, அத்தகைய மகானுபாவன், தன் பாதங்களை வணங்குபவர்களான மகாத்மர்கள் செய்யும் ஸ்தோத்திரத்திற்கு வசமாகிறான். இத்தகைய மகானுபாவனின் கருணையை நான் என்னவென்று வர்ணிப்பேன்?
சிறப்புப் பொருள்:
தன் பாதங்களை வணங்குபவரகளின் ஸ்தோத்திரங்களுக்கு பரமாத்மன் வசமாகிறான் என்று தாசராயர் சொல்கிறார். இதற்கு என்ன ஆதாரம் என்றால். தாசர் தன்னுடைய அனுபவத்தினால், பெரியவர்களின் வாக்கின் ஆதாரத்தினாலும் அப்படி சொல்லியிருக்கிறார். சொந்த அனுபவம் என்றால், விஜயதாசர், பாகண்ணதாசர் இருவரும், ஜகன்னாததாசர் உடம்பு சரியில்லாதிருந்தபோது, அவரை அழைத்துக் கொண்டு திருப்பதி க்ஷேத்திரத்திற்கு சென்றனர். அங்கு, மிகவும் சோர்வுற்றிருந்த தாசரை விட்டுவிட்டு, பாகண்ணதாசர் ஆகியோர் பகவந்தனின் தரிசனத்தைப் பெறுவதற்கு கோயிலுக்குச் சென்றனர். அங்கிருந்த ஹரிதாசர்கள் அனைவரும், பஜனைப் பாடல்களைப் பாடியவாறு, நர்த்தன சேவையிலும் ஈடுபட்டு, அங்கு படுத்திருந்த ஜகன்னாததாசரை மறந்தனர். ஜகன்னாததாசரோ பசியில் துடித்தவாறு, சிலர் இங்கு பாடியவாறு இருக்க, பலர் வேங்கடனின் தரிசனத்திற்காகச் சென்று, தன்னை மறந்தனரே, தம் நிலைமை இப்படியாகிவிட்டதே என்று துயரப்பட்டவாறு, ஸ்ரீபரமாத்மனை இடைவிடாமல் தியானம் செய்து, ஸ்தோத்திரம் செய்யலானார்.
அப்போது பரமாத்மன், பாகண்ணதாசராக வேடம் தரித்து, திவ்யமான பக்ஷ்ய போஜ்யங்களுடன் அன்னத்தைக் கொண்டு வந்து தாசரிடம் தந்தான். அதை உண்டவுடன், இவருக்கு இருந்த சோர்வு நீங்கி, மிக்க மகிழ்ச்சியுடன் பரமாத்மனை துதிக்கத் துவங்கினார். அங்கு வெகு நேரத்திற்குப் பிறகு பாகண்ணதாசருக்கு ஜகன்னாததாசரின் நினைவு வந்தது. உடனே அவர் ‘ஆஹா. நோய்வாய்ப்பட்ட நம் சிஷ்யனை அப்படியே மறந்துவிட்டேனே. பசியினால் எவ்வளவு கஷ்டப்படுகிறானோ’ என்று கவலைப்பட்டவாறு வேகவேகமாக வீட்டுக்கு வந்து பார்த்தால், அங்கு மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கும் சிஷ்யனைக் கண்டு ‘நான் உம்மை மறந்து பஜனையில் இருந்துவிட்டேன். பசியினால் நீ என்ன செய்கிறாரோ என்று கவலைப்பட்டு ஓடோடி வந்தேன். இதென்ன, இன்று நீ எதையும் சாப்பிடாமல் இருந்தாலும், இவ்வளவு தெம்பாக, மகிழ்ச்சியாக இருக்கிறாயே? எழுந்து அமரும் சக்தி உனக்கு எப்படி வந்தது?’ என்றார்.
அதற்கு ஜகன்னாததாசர் வியப்புடன், ‘இதென்ன இப்படி சொல்கிறீர்கள்? இப்போதுதானே நீங்கள் எனக்கு சுவையான உணவைக் கொண்டு வந்து கொடுத்தீர்கள்? அத்தகைய சுவையான உணவை நான் என்றும் உண்டதேயில்லை. அதன் மகிமையாலேயே எனக்கு எழுந்து அமரும் சக்தி வந்திருக்கிறது’ என்றார். இதைக் கேட்ட பாகண்ணதாசர், ’ஸ்ரீனிவாசனே வந்து உனக்கு உணவு கொடுத்திருக்கிறான். நான் உன்னை மறந்தேவிட்டேன். உன் பக்தியை மெச்சி பரமாத்மனே அருளியிருக்கிறான்’ என்று சொல்லி, இருவரும் பரமாத்மனின் ஸ்தோத்திரங்களை செய்தனர், என்பதை ஜகன்னாததாசரின் வாழ்க்கைச் சரிதத்தில் பார்க்கிறோம். இது தாசராயருக்கு ஏற்பட்ட ஸ்வானுபவம் (சொந்த அனுபவம்) ஆகும்.
கனகதாசர் உடுப்பி கிருஷ்ணனின் தரிசனத்திற்கு சென்றபோது, அவர் நான்காம் வர்ணத்தவர் என்று கூறி அவரை கோயிலுக்குள் அனுமதி மறுத்துவிட்டனர். அவர் கோயிலின் பின்புறத்தில் அமர்ந்து, பகவந்தனை புகழ்ந்து பாட, கோயிலின் மேற்குச் சுவர் உடைந்து ஸ்ரீகிருஷ்ணன் அவருக்கு தரிசனம் அளித்தான். இன்றும் அதே வழியில் ‘கனகன கிண்டி’ என்னும் சன்னலில் இருந்தே, நாமும் கிருஷ்ணனின் தரிசனத்தைப் பெறுகிறோம். இத்தகைய பல சம்பவங்கள் விட்டல பக்தர்களின் வாழ்வில் வந்திருப்பதை அறிகிறோம்.
ஆகையால் தாசராயர், தமது சொந்த அனுபவத்தினாலேயே ‘தன்னங்க்ரி சேவாரதரு மாடுதிஹ சம்ஸ்துதிகெ வஷனாகுவனு’ என்று சொல்லியிருப்பார். இதற்கு உதாரணமாக ‘ஸ்ருதிதேவ’ மற்றும் ‘பஹளாஸ்வராஜ’ என்னும் புராண கதைகளை சொல்லலாம். ஒருவேளை மக்களுக்கு புராண கதைகள் அசுவாரசியமாக இருந்தால், அக்பர் சக்ரவர்த்தியின் காலத்தில் நடந்த உதாரணங்களை மனதில் வைத்தே தாசராயர் இந்த வரிகளை இயற்றியிருப்பார். ‘இவன காருண்யகேனெம்பெ’ என்று மேலே சொன்னவற்றை வைத்து, பரமாத்மனின் கருணையை வியந்து போற்றியிருக்கிறார்.
***
No comments:
Post a Comment