#13 - மங்களாசரண சந்தி
ப1ரிமளவு சுமனகளொளக3னல
நரணியொளகி3ப்பந்தெ தா3மோ
த3ரனு பிரம்மாதி3கள மனத3லி தோரி தோரத3லெ |
இருதிஹ ஜகன்னாதவிட்டலன
கருண படெ3வ முமுக்ஷு ஜீவரு
பரமபா4க3வதரனு கொண்டாடுவுது ப்ரதிதி3னவு ||13
தாம = வயிறு
தாமோதரன் = யசோதையால் கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன்
பிரம்மாதிகள = பிரம்மதேவரே முதலான அனைத்து தேவதைகளின்
மனதலி = மனதில்
சுமனதொளகெ = புஷ்பத்தில்
பரிமளவு = வாசனையானது வருவதைப் போல
தோரி = காட்டி
அரணியொளகெ = நெருப்பு மறைந்திருப்பதைப் போல
தோரதலெ = கண்ணுக்குத் தெரியாமல்
இருதிஹவு = இருக்கின்றது.
இந்தஹ ஜகன்னாதவிட்டலன = ஜகன்னாததாசரின் பிம்பரூபியான ஜகன்னாதவிட்டலனான பரமாத்மனின்
கருணபடெவ = கருணையைப் பெறவேண்டும் என்னும் விருப்பமுள்ள
முமுக்ஷுஜீவரு = மோட்சத்திற்கு யோக்யரான ஜீவர்கள் அனைவரும்
ப்ரதிதினவு = தினந்தோறும்
பரமபாகவதரன = பிரம்ம வாயு ஆகியோரில் துவங்கி மனுஷ்யோத்தமர் வரை, தாரதம்யத்தின்படி, இந்த சந்தியில் சொல்லப்பட்டிருக்கும் பரம பகவத் பக்தர்களை
கொண்டாடுவுது = நமஸ்காராதிகளை செய்து ஸ்தோத்திரங்களால் கொண்டாட வேண்டும்.
பொருள்:
மல்லிகை போன்ற புஷ்பங்கள் மலர்ந்தவுடன், அதன் வாசனையானது எப்படி அனைத்திடங்களிலும் பரவி, அனைவருக்கும் அது சென்று சேர்கிறதோ, அப்படி பிரம்ம வாயுகளுக்கு, அபரோக்ஷத்தில் பரமாத்மன் எப்போதும் காட்சியளித்துக் கொண்டேயிருக்கிறான். யாகசாலையில் அக்னியை வளர்ப்பதற்கு ஒரு அரச காஷ்டத்தை வைத்திருப்பர். அதை இன்னொரு காஷ்டத்துடன் உரசினால் நெருப்பு வரும். எனில் காஷ்டத்தில் இருக்கும் நெருப்பு நம் கண்ணிற்குத் தெரிவதில்லை. அப்படியே, ருத்ராதி தேவதைகளில் பரமாத்மன் இருந்தாலும், எப்போதும் நம் கண்ணுக்குத் தெரியாமல், தியானம் செய்யும்போது மட்டும் அபரோக்ஷத்தில் தன்னை காண்பித்துக் கொள்வான். ஆகையால், முக்தியோக்யர்கள் அனைவரும், தாரதம்யத்தின்படி பரம பகவத்பக்தர்களான பிரம்மாதி அனைத்து தேவதைகளுக்கும், தம்மைவிட உத்தமர்களான மனுஷ்யோத்தமர் வரை அனைவருக்கும் நமஸ்காரங்களை செலுத்தி அவர்களின் அருளைப் பெற்றால், பகவத் பிரசாதம் கிடைக்கும் என்று அறியவேண்டும்.
***
No comments:
Post a Comment