#11 - கருணா சந்தி
இட்டிகல்லனு = செங்கல்லை
பகுதியிந்தலி = பக்தியுடன்
கொட்ட = நிற்பதற்காகக் கொடுத்த
பகுதகெ = புண்டலீகன் என்னும் பக்தனுக்கு
மெச்சி = தரிசனம் அளித்து
தன்னனெ = விட்டலன் என்னும் ஸ்வரூபத்தையே
கொட்ட = கொடுத்த
படபிராமணன = குசேலன் என்னும் ஏழை பிராமணன் கொடுத்த
ஒப்பிடி = ஒரு பிடி
அவலிகெ = அவலுக்கு
அகிளார்த்த = நான்குவித புருஷார்த்தங்களையும் கொடுத்தான்.
கெட்ட மாதுகளிந்த = தன் மனம் போல திட்டிய
சைத்யன = சிசுபாலனை
பொட்டெயொளு = தன் வயிற்றில்
இம்பிட்டு = சேர்த்துக்கொண்டான்
பாணதலிட்ட = பாணங்களால் துளைத்த
பீஷ்மன = பீஷ்மாசார்யரின்
அவகுணகள = தவறுகளை
எணிஸதலெ = தவறாக எண்ணாமல்
கருணாளு = கருணாபூர்ணன் ஆனவன்.
இட்டிகல்லனு ப4குதியிந்த3லி
கொட்ட ப4குதகெ3 மெச்சி தன்னனெ
கொட்ட ப3ட3பிராமணன ஒப்1பிடியவலி க3கி1லார்த்த |
கெட்ட மாதுகளந்த3 சைத்3யன
பொட்டெயொளகிம்பி3ட்ட பா3ணத3
லிட்ட பீஷ்மனவ கு3ணகளெணிஸிதனெ
கருணாளு ||11இட்டிகல்லனு = செங்கல்லை
பகுதியிந்தலி = பக்தியுடன்
கொட்ட = நிற்பதற்காகக் கொடுத்த
பகுதகெ = புண்டலீகன் என்னும் பக்தனுக்கு
மெச்சி = தரிசனம் அளித்து
தன்னனெ = விட்டலன் என்னும் ஸ்வரூபத்தையே
கொட்ட = கொடுத்த
படபிராமணன = குசேலன் என்னும் ஏழை பிராமணன் கொடுத்த
ஒப்பிடி = ஒரு பிடி
அவலிகெ = அவலுக்கு
அகிளார்த்த = நான்குவித புருஷார்த்தங்களையும் கொடுத்தான்.
கெட்ட மாதுகளிந்த = தன் மனம் போல திட்டிய
சைத்யன = சிசுபாலனை
பொட்டெயொளு = தன் வயிற்றில்
இம்பிட்டு = சேர்த்துக்கொண்டான்
பாணதலிட்ட = பாணங்களால் துளைத்த
பீஷ்மன = பீஷ்மாசார்யரின்
அவகுணகள = தவறுகளை
எணிஸதலெ = தவறாக எண்ணாமல்
கருணாளு = கருணாபூர்ணன் ஆனவன்.
பொருள்:
புண்டலீகன் என்னும் பக்தன், தான் நிற்பதற்காக பக்தியுடன் கொடுத்த செங்கல் மேல் நின்று, விட்டல ரூபத்தினால் அவனுக்கு தரிசனம் அளித்து, பண்டரிபுரத்தில் நின்றுவிட்டான். பரம ஏழையான குசேலன் என்னும் பிராமணன், பக்தியுடன் கொண்டு வந்திருந்த ஒரு பிடி அவலை ஏற்றுக்கொண்டு, அவனுக்கு சதுர்வித புருஷார்த்தங்களைக் கொடுத்தான். சிசுபாலன் அசுராவேஷத்தினால் ஸ்ரீகிருஷ்ணனை மனம் போல திட்டியும், அவனைக் கொன்று, தன் வயிற்றில் வைத்துக் கொண்டான்.
போர்க்களத்தில் அம்புகளால் தன்னை துளைத்த பீஷ்மாசார்யரை, அவரின் தவறுகளை மன்னித்தான். ஆகையால், இவனது கருணையை எவ்வளவு வர்ணித்தாலும் அது மிகக்குறைவே என்று பொருள்.
சிறப்புப் பொருள்:
செங்கலைக் கொண்டு வந்து கொடுத்த பக்தன் என்று தாசராயர் சொல்லும் புண்டலீகனின் கதையை அனைவரும் அறிந்திருப்பர். ஆனாலும், பக்தர்களின் கதையை எவ்வளவு முறை கேட்டாலும், அவை பாவங்களை போக்கவல்லவை என்பதால், சுருக்கமாக அந்த கதையை இங்கு சொல்கிறோம்.
முன்னர் பண்டரிபுரத்தில் புண்டலீகன் என்னும் பிராமணன் இருந்தான். பரம அயோக்யனாகவும், மாதா பித்ரு துரோகியாகவும் இருந்தான். சத்விஷயங்கள் அவனுக்கு கெட்டதாகவே தோன்றின. இப்படியிருக்கையில், அந்த ஊர் மக்கள் அனைவரும் காசி க்ஷேத்திரத்தின் மகிமையை அறியவேண்டும் என்று, ஒரு புராணிகரை அழைத்து, அவர் மூலமாக அந்தக் கதையை கேட்பதற்கு தயாராயினர். அப்போது புண்டலீகனின் மனைவியானவள், ஊர் மக்கள் அனைவரும் அங்கு போவதைக் கண்டு, தானும் அங்கு போய் கதையைக் கேட்க வேண்டும் என்று ஆவல் கொண்டாள். அப்படி அந்த கதையைக் கேட்டபிறகு, காசிக்குப் போகவேண்டும் என்றும் ஆசை கொண்டாள் அந்த பதிவிரதை. அதைக் கேட்ட புண்டலீகன் காசிக்குப் புறப்பட்டான். இதைக் கேட்ட புண்டலீகனின் வயதான பெற்றோர், தாம் அவனைவிட்டு பிரிந்திருக்க முடியாது என்று சொல்லி, தாமும் அவனுடன் காசிக்குப் புறப்படத் தயாராயினர். அவர்களை சமாதானப்படுத்திய புண்டலீகன், அவர்களை நிறுத்திவிட்டு, தன் மனைவியுடன் தான் மட்டுமே புறப்பட்டுவிட்டான். புத்ர பாசத்தால் அவனது பெற்றோரும் அவர்களின் பின்னாலேயே காசிக்குப் புறப்பட்டு, அவர்கள் போய்த் தங்கிய ஊர்களிலேயே தங்கி, கிடைத்த உணவை மட்டுமே உண்டு, மெதுவாக பயணத்தில் இருந்தனர்.
இப்படியாக பயணப்பட்ட புண்டலீகன், காசிக்கு சற்றுமுன் ஒரு கிராமத்தில் அன்றிரவு ஒரு சத்திரத்தில் தங்கினான். அங்கு வேறு பல யாத்ரிகர்களும் வந்திருந்தனர். அந்த ஊரின் குக்கட மகரிஷிகளின் கதைகளைச் சொல்லி அவர்கள் அவரை புகழ்வதைக் கேட்ட புண்டலீகன், அவரைப் பார்க்க எண்ணி, சத்திரத்தின் எதிரில் இருந்த ஆசிரமத்திலேயே அவர் இருக்கிறார் என்பதை அறிந்தான். எப்போது அடுத்த நாள் விடியும், எப்போது அந்த மகரிஷியைப் பார்க்கலாம் என்று எண்ணியவாறு ஆவலுடன் படுத்திருந்தான்.
அடுத்த நாள் விடியலிலேயே எழுந்து, சத்திரத்து வாசலில் அமர்ந்திருக்க. 6-7 கருப்பான, குரூபிகளான பெண்கள் அந்த குக்குட ஆசிரமத்தில் நுழைந்து, அங்கு பெருக்கி, துடைத்து, சுத்தம் செய்து, கோலங்களைப் போட்டு அலங்காரங்களை செய்தனர். சில மணியிலேயே அந்தப் பெண்கள் அழகிய சுந்தரிகளாயினர். இதனைக் கண்டு வியப்படைந்த புண்டலீகன், உடனடியாக அந்தப் பெண்களை விழுந்து வணங்கி, குக்குட மகரிஷி எங்கிருக்கிறார் என்று கேட்க, அவர்களும் அவர் இங்கேதான் இருக்கிறார் பார் என்றனர். இவனும் அங்கு தேடினால், அவர் கிடைக்கவேயில்லை. மறுபடி இவர்களிடம் ‘என்னம்மா, பொய் சொல்கிறீர்கள்? அவர் இங்கு இல்லவேயில்லையே?’ என, அவர்களோ, ’ஹே பாபி, அவர் உன் கண்களுக்குத் தெரியவில்லை. அவர் இங்கேதான் தன் பெற்றோரின் சேவையை செய்துகொண்டிருப்பார். நீ பரம பாபி, உன் வயதான பெற்றோர் உனக்காக அங்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க, நீ அவர்களை தவிக்க விட்டு, மிகப்பெரிய பாவத்தை செய்திருக்கிறாய். உன்கூட பேசினால்கூட எங்களுக்கு பாவம் வந்து சேரும். உன்னை நாங்கள் பார்க்கக்கூட விரும்பவில்லை’ என்றனர்.
அப்போது புண்டலீகன் ‘அம்மா! நீங்கள் யார்? தெய்வஸ்த்ரீகளைப் போல காட்சியளிக்கிறீர்களே? இந்த ஆசிரமத்தை சுத்தம் செய்யக் காரணம் என்ன? தயவு செய்து சொல்லுங்கள்’ என்றான். அப்போது அந்த பெண்கள் இவனுடன் பேச விருப்பமில்லை என்றாலும், இவனுக்கு அருளவேண்டும் என்னும் நோக்கத்தில் இப்படி சொல்லத் தொடங்கினர்.
‘ஹே பாபி! கேள். நாங்கள் கங்கா, கோதாவரி முதலான ஏழு நதிகள். நம்மிடம் பற்பல பாவிகள் ஸ்னானம் செய்து அவர்களின் பாவங்கள் அனைத்தையும் எங்களில் கரைத்து விடுகின்றனர். அத்தகைய பாவங்களை போக்கிக் கொள்வதற்காக, பெற்றோரின் சேவையில் சிறந்தவரான இந்த மஹானுபாவருக்கு சேவை செய்து, எங்கள் பாவத்திலிருந்து முக்தராகி, பின் புறப்பட்டுச் செல்கிறோம். பாவங்களுடன் இங்கு வரும்போது குரூர ரூபத்துடன் இருக்கும் நாங்கள், இங்கு செய்யும் சேவையினால், அந்த பாவங்களிலிருந்து முக்தராகி, வெளியே செல்லும்போது அழகான வடிவங்களைப் பெறுகிறோம். இந்த மகரிஷிக்கு, தன் பெற்றோரின் சேவையினாலேயே இந்த கீர்த்தியும், சக்தியும் வந்திருக்கிறது. நீ உன்னுடைய முக்கியமான தர்மத்தை விட்டு காசிக்குப் போனால் என்ன? வேறெங்கு போனாலும் என்ன? உன் பாவங்கள் தீராது’ என்றனர்.
இதைக் கேட்டு வருந்திய புண்டலீகன், உடனடியாக அவர்களை வணங்கி, அங்கிருந்து புறப்பட்டு தன் பெற்றோர்களிடம் வந்து, அவர்களை வணங்கி, நடந்ததையெல்லாம் தெரிவித்து, அன்றிலிருந்து தன் பெற்றோரின் சேவைக்கு முன் வேறெந்த சேவையும் இல்லை என்று உணர்ந்து தன் சேவையை செய்யத் தொடங்கினான். பெற்றோரைவிட வேறு தெய்வம் இல்லை என்று உணர்ந்து, அவர்களின் சேவையை செய்யத் துவங்கினான். அப்போது அவனுக்கு, பரமாத்மனிடம் திடமான பக்தியும் உண்டாகி, திவ்யமான ஞானோதயமாயிற்று. அந்த தாய்தந்தையரின் சேவையினாலேயே அவர்களின் அந்தர்யாமியான பரமாத்மன் மகிழ்வான் என்ற திடமான நம்பிக்கையினால், அவர்களை திரும்ப ஊருக்கு அழைத்து வந்து அவர்களின் சேவையினை தொடர்ந்து செய்து வந்தான்.
இப்படி இருக்கையில், ஒரு நாள், சந்திரபாகா நதியில் தன் பெற்றோரை ஸ்னானம் செய்வித்த புண்டலீகன், அவர்களுக்கு மாற்றுவதற்கு ஆடை கொடுத்துவிட்டு, அவர்களை உபசரித்தவாறு நின்றிருந்தபோது, ஸ்ரீபரமாத்மன், அவனது பக்தியை பரிசோதிப்பதற்காக, அவன் அங்கு சேவை செய்திருக்கும்போது வந்து அவன் பின்னால் நின்றான். பகவானின் காலடி சத்தத்திலேயே அவரை அடையாளம் கண்டு கொண்ட புண்டலீகன் ‘ஆஹா, ஸ்வாமி! வந்துவிட்டீர்களா, எனக்கு நிற்பதற்குக்கூட நேரமில்லை. அங்கங்கு குப்பைகள் இருக்கின்றன, சுத்தம் செய்யவேண்டும்’ என்றவாறு, அங்கிருந்த ஒரு செங்கல்லை எடுத்து வைத்தவாறு, ‘ஸ்வாமி, இதன் மேல் நில்லுங்கள். நான் என் பெற்றோரை வீட்டில் விட்டுவிட்டு விரைவில் திரும்பி வருகிறேன்’ என்றவாறு அவர்களை அழைத்து வீட்டில் விட்டு, அவர்களுக்கு உணவினைக் கொடுத்து, அவர்களின் உத்தரவை வாங்கியவாறு ஸ்ரீஹரி நின்றிருந்த இடத்திற்கு வந்தான்.
ஸ்ரீபரமாத்மன் புண்டலீகனின் வழியைப் பார்த்தவாறு நின்றிருந்தான். புண்டலீகன் அங்கு வந்து அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து - ‘ஸ்வாமி, உன்னை வெகு நேரம் காக்க வைத்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்’ என்று வேண்டினான். பரமாத்மனும் அவனது பக்திக்கு மெச்சி ‘உனக்கு வேண்டியதைக் கேள். வரம் அளிக்கிறேன்’ என்றார். ‘ஸ்வாமி, உனக்கு பல பக்தர்கள் சேவை செய்யவேண்டும். எனக்கு நீ எப்போதும் இதே நிலையில் தரிசனம் அளிக்கவேண்டும்’ என்றும் வேண்டினான். ஸ்வாமியும் விட்டலன் என்ற பெயரில், ருக்மிணியுடன், புண்டலீகனின் விருப்பப்படி அங்கேயே நின்றுவிட்டான். இதையே தாசராயர் ‘இட்டிகல்லனு பகுதியிந்தலி கொட்ட பகுதகெ மெச்சி தன்னனெ’ என்றிருக்கிறார்.
குசேலன் என்னும் ஏழை பிராமணன், பகவத் பக்தனாக தற்காலிக விஷயங்களில் ஈடுபாட்டினைத் துறந்து, சம்சார பிரச்னைகளை மனதில் வைத்துக்கொள்ளாமல், எப்போதும் ஹரிதியானத்தில் இருக்க, இவரது மனைவியானவர், பசியில் அழுதுகொண்டிருந்த குழந்தையின் வலியை தாங்காமல், ஸ்ரீகிருஷ்ணனின் தரிசனம் பெற்று வாருங்கள் என்று பல முறை கணவரிடம் சொல்லி வந்தார். பகவான் தரிசனம்தானே செய்யச் சொல்கிறாள், அதுவும் நல்லதுதானே என்றவாறு, தன் மனைவி எங்கிருந்தோ வாங்கி வந்திருந்த நான்கு பிடி அவலினை ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு, பரமாத்மனை பார்ப்பதற்கு வந்தான். ஸ்ரீகிருஷ்ணன் இவனது பக்திக்கு மெச்சி, 4 பிடி அவலில் ஒரு பிடி அவலை மட்டும் தான் எடுத்துக்கொண்டு அவனுக்கு பரம ஐஸ்வர்யத்தையும், தன் வீட்டைப் போலவே திவ்யமான வீட்டினையும் கொடுத்து, இறுதியில் முக்தியையும் கொடுத்தான். இதையே தாசராயர் ‘கொட்ட படபிராமணன ஒப்பிடி அவலிககிலார்த்த’ என்று பாடியிருக்கிறார்.
’கெட்ட மாதுகளிந்த சைத்யன பொட்டெயொளகிம்பிட்ட’. தர்மராஜன் ராஜசுய யாகத்தை செய்தபோது, அக்ரபூஜையை ஸ்ரீகிருஷ்ணனுக்கு செய்வதைக் கண்ட சிசுபாலன், ஸ்ரீகிருஷ்ணனை வெகுவாக தூஷிக்க, ஸ்ரீகிருஷ்ணன் அவனை தன் சக்ராயுதத்தால் கொன்றான். உடனடியாக அனைவரும் பார்த்திருக்க, சிசுபாலனின் தேகத்திலிருந்து ஒரு ஜ்யோதி புறப்பட்டு, ஸ்ரீகிருஷ்ணனின் பாத-அங்குஷ்டத்தில் வந்து சேர்ந்தது. சிசுபாலன் இரு ஜீவ-த்வய-ஆவேசம் உள்ளவனாக இருந்தான்.
பிரம்மபுத்ரனான ஆதிஹிரண்யன் என்னும் தைத்யனின் ஆவேசத்தினால் கூடி, விஷ்ணுவின் துவாரபாலகனாக ஜயன் என்னும் பெயரில் இருந்தவன் சிசுபாலனே. அசுர ஆவேசத்தின் பலனால் பரமாத்மனை த்வேஷித்து வந்திருந்தான். இதனை அறிந்த பரமாத்மன், தன் பக்தனான ஜயன், அசுர ஆவேசத்தில் செய்த தவறினை மன்னித்து அவனை தன்னில் சேர்த்துக்கொண்டான். இதுவே இந்த வாக்கியத்தின் அபிப்பிராயம் ஆகும்.
‘பாணதலிட்ட பீஷ்மனவ குணகளெனிஸிதனெ’. பீஷ்மாசார்யர் தனது இறுதிக் காலத்தில் பரமாத்மனை துதித்த - பாகவதத்தின் 9ம் அத்தியாயத்தின், இரு ஸ்லோகங்களால் பகவான் அவருக்கு தரிசனமளித்தான். அந்த ஸ்லோகங்களை இங்கு பார்ப்போம்.
ஸ்வனியமமபஹாய மத்ப்ரதிக்ஞாம்ருதமதிகர்துமவப்லுதோ ரதஸ்த: |
த்ருதரத சரணோப்ய யாத்பலாக்ரேஹரி ரிவஹந்துமிதம் கதோத்தரீய: ||
ஷித விஷிகஹ்தோ விஷீர்ணதம்ஸ: க்ஷதஜ பரிப்லுத ஆததாயினோமே |
ப்ரஸப மபிஸஸார மத்வதார்த்தம் ஸபவதுமெ பகவான்முதே முகுந்த: ||28
பாரதப் போரில் தான் ஆயுதம் ஏந்துவதில்லை என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியிருந்தான். ‘உன் கையில் ஆயுதம் ஏந்தவைப்பேன்’ என்று பீஷ்மாசார்யார் சபதம் செய்திருந்தார். இப்படியிருக்கையில், பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் பலத்த போர் நடைபெற்றது. மிகப்பலமான ஆயுதங்களால் பீஷ்மர், கிருஷ்ண அர்ஜுனர்களை துளைத்துக் கொண்டிருந்தார். வயதானவர், பிதாமகர் என்னும் அபிமானத்தால் அர்ஜுனன் மெதுவாக போரிட்டுக் கொண்டிருந்தான். ஸ்ரீகிருஷ்னன், அர்ஜுனனின் இந்த செயலால் கோபம் கொண்டு, சக்கரத்தை தன் கையில் ஏந்தி, வேகமாக ரதத்தில் குதித்து, உடனடியாக பீஷ்மரைக் கொல்வேன் என்று கூவியவாறு அவரை நோக்கிப் பாய்ந்தான். தன்னை மன்னிக்குமாறு வேண்டியவாறு அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணனை தடுத்து நிறுத்தினான். இப்படி பாரத யுத்தத்தில் நடந்த விஷயத்தை நினைத்துக்கொண்டு, தற்போது தன் எதிரில் அமர்ந்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணனை பீஷ்மாசார்யர் ஸ்தோத்திரம் செய்தார்.
’ஹே கிருஷ்ணா! நீ செய்த சபதத்தை துறந்து, உன் பக்தனான நான் செய்த சபதத்தை உண்மையாக்குவதற்காக, சக்கரத்தை ஏந்தி, ரதத்திலிருந்து குதித்து, யானைமேல் சிங்கம் குதிப்பதைப் போல, பார்ப்பவர்களுக்கு என்னைக் கொல்ல வருகிறாயோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியவாறு, உன் மெய் மேல் இருந்த பீதாம்பரம் கீழே விழுந்ததைக்கூட பொருட்படுத்தாமல், என் எதிரே ஓடி வந்தாய். மேலும் என் கூர்மையான அம்புகளால் துளைக்கப்பட்ட கவசங்களைக் கொண்டவனாக, ரத்தத்தில் குளித்ததைப் போல உடம்பு ரதத்தில் நனைந்திருக்க, என்னைக் கொல்ல வந்துகொண்டிருந்தாய். அப்போது அர்ஜுனன் உன்னைத் தடுத்து ‘பீஷ்மரைக் கொல்லவேண்டாம்’ என்று வேண்டியதையும் பொருட்படுத்தாமல் ஓடி வந்தாயே, அப்படிப்பட்ட நீ இப்போது இங்கு வந்தது எனக்கு முக்திக்கான வழியாயிற்று’ என்று பீஷ்மாசார்யர் கூறினார். ‘பாணதலிட்ட பீஷ்மனவ குணகளெனிஸிதனெ’ என்பதற்கு இதுவே பொருள்.
ஸ்ரீகிருஷ்ணன் ஆயுதம் ஏந்துவதில்லை என்று சபதம் செய்திருக்க, ஆயுதத்தை உன் கையில் பிடிக்கவைப்பேன் என்று பீஷ்மர் செய்த சபதம், மிகப்பெரிய துரோகம். மேலும், பரசுராம ருபியான பரமாத்மன், அம்பையை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பீஷ்மரை வேண்ட, அவர் அவனுடன் போர் புரிந்தார். பாரத தாத்பர்ய நிர்ணய 18ம் அத்தியாயத்தில் ’பீஷ்மஸ்து பார்கவம் ராமமவமேனேயுலோதச’ - போரில் பீஷ்மாசார்யர் பரசுராமனை அவமானம் செய்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
திரௌபதி வஸ்த்ர அபஹரண சமயத்தில், அவள் எவ்வளவு முறையிட்டாலும், நியாய தர்மங்களைக்கூட பொருட்படுத்தாமல், பீஷ்மாசார்யர் அமைதியாக இருந்தது, ஸ்ரீகிருஷ்ணனுக்கு சரியாகப் படவில்லை. இந்த விஷயத்திற்கு நிர்ணயம் 24ம் அத்தியாயத்தின் வாக்கியம் ஆதாரமாக இருக்கிறது. மேலும், ஸ்ரீகிருஷ்ணன் பாண்டவ கௌரவர்களுக்கு இடையே தூதுவனாக ஹஸ்தினாபுரம் வந்தபோது, துரியோதனன் கிருஷ்ணனை தன் வீட்டிற்கு சாப்பிட அழைத்தான். ‘எனக்கு பிரியமான பாண்டவர்களுக்கு துரோகம் இழைத்த உன் வீட்டில் நான் சாப்பிட மாட்டேன்’ என்று ஸ்ரீகிருஷ்ணன் கூறிவிட்டு, விதுரனின் வீட்டிற்குச் செல்ல, பீஷ்மர் ஆகியோரும் ஸ்ரீகிருஷ்ணனை தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தனர். அப்போது -
ஸபீஷ்மபூர்வைரபியாசிதோபி ஜகாம நைஷாம் க்ருஹமாதி தேவ: |
உபேக்ஷிதா திரௌபதீத்ய ப்ரமேயோ ஜகாமகேஹம் விதுரஸ்ய ஷீக்ரம் ||
’பீஷ்மர் போன்றோர் ஸ்ரீகிருஷ்ணனை தன் வீட்டிற்கு வரவேண்டும் என்று வேண்டிய போதிலும், திரௌபதிக்கு துன்பம் வந்தபோது அமைதியாக இருந்த உங்களின் வீட்டிற்கு நான் வருவதில்லை என்று சொல்லி, விதுரனின் வீட்டிற்கு புறப்பட்டான்’ என்று சொல்கிறது மேற்கண்ட ஸ்லோகம். இதிலிருந்து திரௌபதிக்கு இவர்கள் யாரும் உதவவில்லை என்னும் விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு வேதனையைத் தந்திருக்கிறது என்பதை அறியலாம். இதுமட்டுமல்லாமல், பாண்டவர்களுக்கு எதிராக போரிட்ட துரியோதனனின் அணியில் நின்று போரிட்டது இன்னொரு குற்றமாகும். இதுபோன்ற பல தவறுகள், பீஷ்மாசார்யரிடம் இருந்தாலும், அவற்றை பொருட்படுத்தாமல், அவருக்கு தரிசனம் அளித்து, அவரால் வணங்கப்பட்டு, முக்தியைக் கொடுத்தான். ஆகையாலேயே, தாசராயர் ‘கருணாளு’ என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறார். இந்த சம்பவத்தால், பரமாத்மன் மிகக் கருணாமயி என்பது நிரூபணமாகியிருக்கிறது என்பதே தாசராயரின் அபிப்பிராயம்.
***
No comments:
Post a Comment