#7 - மங்களாசரண சந்தி
வேதபீ1ட2 விரிஞ்சி ப4வ ஷ
க்ராதி3சுர விக்ஞானதா3யக
மோத3 சின்மயகா3த்ர லோக1பவித்ர சுசரித்ர |
ச்சேத3 பே4த3 விஷாத3 கு1டி1லா
ந்தாதி மத்ய விதூ3ர ஆதா3
நாதி3 காரண பாத3ராயண பாஹி சத்1ராண ||7பொருள்:
வேதபீட - வேதங்களை பீடமாகக் கொண்ட
விரிஞ்சிபவ ஷக்ராதிசுர = விரிஞ்சி = பிரம்மதேவர். பவ = ருத்ரர். ஷக்ர = இந்திரன். ஆதி = ஆகிய. சுர = தேவதைகளுக்கு
விக்ஞானதாயக = விக்ஞான = விசேஷ ஞானம். தாயக = கொடுப்பவர்
மோதசின்மயகாத்ர = மோத = ஆனந்தம். சின்மய = ஞானம். காத்ர = தேகத்தைக் கொண்ட.
லோக = மூன்று உலகங்களையும்
பவித்ர = பவித்ரமாக மாற்றும்
ஸுசரித்ர = உத்தமமான மகிமைகளைக் கொண்ட
சேதபேத விஷாத குடிலாந்தாதி மத்யவிதூர = சேத = கத்தி முதலான ஆயுதங்களால் சரீரத்தை சேதப்படுத்துதல். பேத = பாணங்களால் சரீரத்தை சேதப்படுத்துதல். விஷாத = துக்கமடைதல். குடில = நோய்களால் உடல் ஹீனமடைதல். இவற்றிலிருந்து, விதூர = இவை எவையும் பாதிக்காமல் தூரமாக இருப்பவன். (அதாவது மேற்சொன்ன தோஷங்கள் எதுவும் இல்லாதவன் என்று பொருள்).
ஆதானாதிகாரண = ஆதானாதி = பிரம்மாதிகளிடமிருந்து பூஜையை ஏற்றுக்கொள்ளல். காரண = காரணனான. சத்ராணா = ஸஜ்ஜனர்களை பாதுகாக்கும். பாதராயண = பதரி வ்ருக்ஷங்களால் சூழப்பட்ட. வனத்திற்கு பாதர என்று பெயர். அதையே தன் இருப்பிடமாகக் கொண்டிருப்பதால் இவருக்கு பாதராயண என்று பெயர். (அதாவது பதரிகாஸ்ரம-வாசி என்று பொருள்). அப்படிப்பட்ட வேதவியாச தேவரே,
பாஹி = உங்களுடைய சாஸ்திரங்களை சொல்வதற்கு புறப்பட்டுள்ள எனக்கு நற்புத்தியைக் கொடுத்து அருள்வீராக.
பொருள்:
'விதிஷக்ர பூர்வகீர்வாண விக்ஞானத மானதோஸ்மி’ என்னும் தந்திரசாரத்தின் வாக்கியத்திற்கேற்ப ‘விரிஞ்சிபவ ஷக்ராதி சுரவிக்ஞானதாயக’ ஆகிய சொற்களால் ‘வேதவியாஸர் ஒரு சாதாரண ரிஷி’ என்னும் பேச்சு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக வேதவியாசதேவரைப் பிரார்த்தித்து, தாரதம்யத்தின்படி முதலில் வாயுதேவரை வணங்கினாலும், த்வைத மதத்தை நிறுவியவரான, முக்திக்கு முக்கிய சாதனங்களான பஞ்சபேத தாரதம்யாதிகளை விளக்கிக் காட்டிய, வாயுதேவரின் அவதாரரான, சத்வைஷ்ணவர்களுக்கு முக்கிய குருகளான ஸ்ரீமத்வாசார்யரை இரண்டு பத்யங்களால் வணங்குகிறார் தாசராயர்.
***
No comments:
Post a Comment