ஆசாரியர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தம் இன்னலுக்கு தீர்வளித்த குருவின் கருணையை எண்ணி மகிழ்ந்தார். தம் குருவை வணங்கி குரு ஸ்தோத்ரத்தை கன்னடத்தில் இயற்றினார். அந்தப் பாடல் பின்வருமாறு:
தாசவர்யரே நிம்ம கருணகேனெம்பே
ஸ்ரீவாச தந்தேமுத்துமோகனவிட்டலாக்யா
பந்துகளு எனகில்லா பதுகினலி சுகவில்லா
நிந்து நொந்தெனோ பஹள பயதொளகே
தந்தே குருவர நிம்ம கருணதிந்தலி பவத
பந்த முக்திய பொந்தி சுகியாதே நானீக
அபரோக்ஷதல்லி தம்ம நிஜ ரூபவனெ தோரி
ஸ்வரோக்ஷதல்லி திவ்ய அங்கிதவ கொட்டு
சாபவாதத பாப சங்கவனு சுட்டென்ன
காபாடிதா மஹிமெ பொகளலென்னொசவே
தைத்யாரி ஸ்ரீ பத்பனாயவிட்டலன ரூப
நித்யாபரோக்ஷதல்லி நோடி சுகதி
மத்தெல்ல சிஷ்யனு தத்வபோதெயிந்த
நித்ய சலஹுவ திவ்ய தேவாம்ச சம்பூத
தன் குருவின் மகிமைகளைப் புகழ்ந்து கொண்டாடி பத்பனாபதாசர் சமஸ்கிருதத்திலும் குருஸ்தவனத்தை இயற்றியுள்ளார். அதற்கான பொருளுரையையும் அவரே வழங்கியுள்ளார். (ஆதாரம்: பரமார்த்த சந்திரோதய, எண்:4 இதழ்: 5, பிரமோதூத, சிராவண - 10.8.1930). அந்த ஸ்லோகங்கள் பின்வருமாறு உள்ளன.
தத்வஞானம் வஹந்தீம் சுஜன சுதயிதாம்
பூர்ணபோதார்ய சாஸ்திர க்ஷீராம்போதிம்
ப்ரவிஷ்டாம் சகல பத சுளாதி த்வைத ஹம்சாதி
யுக்தாம் | சுப்ரமண்யாக்ய சுரேஸ்ஸுமுக
கமலஜம் சர்வ பாபாப ஹந்தீம் | வந்தே
வாக்தேவதாக்யம் சகல பதித சங்கம்
பாவயந்திம் துய்யகங்காம் ||1||
பொருள்:
தத்வஞானம் வஹந்தீம் = தத்வஞான என்னும் கடலிலிருந்து
சுஜன சுதயிதாம் = சஜ்ஜனர்களுக்கு மிகவும் பிடித்தமான
பூர்ணபோதார்ய சாஸ்திர க்ஷீராம்போதிம் ப்ரவிஷ்டாம் = ஸ்ரீபூர்ணப்ரக்ஞாசார்யர் அவர்களின் சாஸ்திரம் என்னும் பாற்கடலில் சங்கமிக்கும்
சகல பத சுளாதி த்வைத ஹம்சாதி யுக்தாம் = சுளாதிகள் என்னும் ஹம்ச பட்சிகள்
சர்வ பாபாப ஹந்தீம் - வணங்கும் அனைவரின் பாவங்களையும் போக்கும்
சகல பதித சங்கம் பாவயந்தீம் - அனைத்து மக்களின் பாவங்களையும் போக்கும்
சுப்ரமண்யாக்ய சுரே: - சுப்பராயர் என்னும் ஞானியின்
சுமுககமலஜம் - இனிய மங்கலமான தாமரையைப் போன்ற முகமுள்ள
வாக்தேவதாக்யம் - வாக்தேவதா எனப்படும்
துய்யகங்காம் - ஆகாச கங்கையான
வந்தே - வணங்குகிறேன்.
உரை:
இந்த ஸ்லோகம், ஸ்ரீதாசரின் சரளமான வாக்கினை, கங்கையாக பாவித்து வணங்குகிறது. கங்கை என்று சொன்னால், இதன் உற்பத்தி எங்கு நடக்கிறது? எங்கு முடிகிறது? எப்படி பாய்கிறது? இந்த கங்கையினால் பயன்பெறுகிறவர்கள் யார்? இந்த கேள்விகளுக்கு இந்த ஸ்லோகத்தில் பதில் கிடைக்கிறது.
ஸ்ரீதாசரின் முக-கமலத்திலிருந்து பிறக்கும் சொற்களே கங்கையாகும். அவர் வழங்கும் தத்வஞானோபதேசமே கங்கை பாயும் வழியாகும். சஜ்ஜனர்களின் மனதை மகிழ்ச்சிப்படுத்துகிறது. ஸ்ரீமதாசார்யரின் சாஸ்திரங்கள் என்னும் பாற்கடலில் போய் சேருகிறது என்றால், இவரின் தாசகூட உபன்யாசங்கள் எல்லாம் ஸ்ரீமதாசார்யரின் சாஸ்திரங்களில் போய் சேருகிறது என்று பொருள். தாசரின் பாடல்களே, சூளாதிகளே ஹம்சாதி பறவையைப் போல, இவரது வாய் வழியே வந்து அலங்கரிக்கின்றது. கங்கையைப் போலவே இவரது உபன்யாசமும் நம் அனைவரின் பாவங்களையும் போக்கி, அனைவரையும் புனிதப்படுத்துகிறது. இத்தகைய கங்கையை வணங்குகிறேன். இதுவே இந்த ஸ்லோகத்தின் பொருள்.
யம்ஹி தாசார்ய வியாசார்ய ஜாதே
பார்யே குணான்விதே | அஸ்பர்தயாபி
சேவந்த்யௌ பதிமேகந்தமாஷ்ரயே ||2||
பொருள்:
யம் ஏகம் பதிம் - இந்த தாசரானவர்
தாசார்ய வியாசார்ய ஜாதே - தாசகூட மற்றும் வியாசகூட இரண்டிலும் சேர்ந்தவரான
குணான்விதே - நற்குணங்களைக் கொண்ட
பார்யே - பிரமேய ரூபங்களர்களான இரு பெண்கள்
அஸ்பர்தயாபி - கொஞ்சம்கூட யாரிடமும் த்வேஷம் பாராட்டாமல்
சேவந்த்யௌ - வணங்கிக் கொண்டிருப்பவர்
தம் - அத்தகைய தாசராயரை
ஆஷ்ரயே - வணங்குவேன்.
விளக்கம்:
தாசகூடத்தின் நோக்கத்தையே அறியாமல் அதாவது தாசராயரை பார்க்காமலேயே, உலகத்தில் பலர் அவரை ஏளனம் செய்கிறார்கள். போலவே, தாசகூடத்தை சேர்ந்த சிலரே, தாசத்வேஷிகளாக மாறி, தாசரின் பத-சூளாதிகளுக்கு சரியான பொருளை புரிந்துகொள்ளாமல், ஸ்ரீமதாசார்யரின் கிரந்தங்களுக்கும், டீகைக்கும் பொருந்தாத அர்த்தத்தை சொல்லிக்கொண்டு, ஸ்ரீமதாசார்யரின் துரோகத்திற்கு காரணமாகின்றனர். அபரோக்ஷ ஞானிகளான ஸ்ரீபாதராயர், சந்திரிகாவை இயற்றிய ஸ்ரீவியாசராஜர் ஆகியோர், தாசவியாசகூடம் என்று இரண்டிலும் அறிஞர்களாக விளங்கியிருந்ததை இவர்கள் மறந்தேவிட்டனர்.
நம் தாசராயர், தற்போதைய பல தாசர்களைப் போலல்லாமல், தாசரின் பத-சூளாதிகளுக்கு வேதாந்த சாஸ்திரங்களில் தேடி அவற்றிலிருந்து விளக்கங்களை சொல்கிறார். தற்போதைய தாசர்களில், ஒருவர் தாசகூடத்தை சேர்ந்தவர் என்றால், அவருக்கு வியாசகூடத்தவர் மேல் த்வேஷம் வந்துவிடுகிறது. ஆனால், நம் தாசர் இரண்டிலும் சிறந்தவர் ஆகையால், நான் அவரையே வணங்குகிறேன்.
சுப்பராயேதி விக்யாதம், சுப்ரமண்யாக்ய ஷண்முகம்
அஞ்ஞான சுரஹந்தாரம் ஞானசேனாபதீம் பஜே ||3||
சுப்பராயதாசரின் பெயருக்கு தக்க காரணத்தை விளக்குகிறது இந்த ஸ்லோகம்.
பொருள்:
அஞ்ஞான சுரஹந்தாரம் - அஞ்ஞானம் என்னும் தைத்யரை நாசம் செய்யும்
ஞானசேனாபதிம் - ஞானம் என்னும் சைன்யத்திற்கு அதிபதியான
சுப்பராயேதி விக்யாதம் - சுப்பராய தாசர் என்று உலகத்தில் புகழ்பெற்றிருக்கும்
சுப்ரமண்யாக்ய ஷண்முகம் - சுப்ரமண்யன் என்னும் ஷண்முகனை
பஜே - வணங்குகிறேன்.
விளக்கம்:
ஷண்முகனுக்கு சுப்ரமன்யன் என்றும் சுப்பராயன் என்றும் பெயர்கள் இருப்பது பொருத்தமே. சுப்பராய சஷ்டி, சுப்ரமண்ய சஷ்டி, ஸ்கந்த சஷ்டி என்று மக்கள் கொண்டாடுவதால், இதைப் பற்றி நாம் மேலும் விளக்கவேண்டியதில்லை. நம் தாசராயருக்கும், இதே பெயர் இருப்பதனால், இந்த பெயர் வெறும் ஒரு குறியீடு என்றில்லாமல், அவருக்கு காரணப்பெயராகவே அமைந்துவிட்டது. ஆகையால், இவரை ஷண்முகனின் அம்சம் என்று கூறினால் மிகையாகாது. இது ஈசனின் விருப்பம் என்றே அறியவேண்டும். எப்படியென்றால், ஒரு சேனாதிபதியாக இருந்து ஷண்முகன் எப்படி தைத்யர்களை அழிப்பது அவனின் கடமையாகிறதோ, அது போலவே நம் தாசராயரும் தத்வஞானம் என்னும் தேவதா சைன்யத்திற்கு தலைவராகி, அஞ்ஞானம் என்னும் தைத்ய சைன்யத்தை சின்னாபின்னமாக நாசப்படுத்துகிறார். ஆனால், ஷண்முகன் என்றால் ஆறு தலைகளைக் கொண்டவன் என்று பொருள். இவருக்கு ஆறு தலை எங்கே இருக்கிறது என்று கேட்டால், ஷண்முகனுக்கு ஆறு, ருத்ரருக்கு ஐந்து என்று தலைகள் இருந்தாலும், எப்போதும் அவற்றை அவர்கள் காட்டுவதில்லை. எப்போதும் அவர்கள் ஒரே தலையுடன் இருந்து, பக்தர்கள் யாருக்கேனும் சந்தேகம் வந்தால்மட்டுமே, ஐந்து அல்லது ஆறு தலைகளுடன் காட்சி தருவார்கள்.
இதைப்போலவே, நம் தாசராயருக்கும் நமக்குத் தெரியாது ஆறு முகங்கள் கண்டிப்பாக இருக்கும். அது அஞ்ஞானிகளுக்கு தெரிவதில்லை. அவை என்னவென்றால்: ஞான, பக்தி, வைராக்கியம், தர்ம, அர்த்த, காம என்னும் ஆறு முகங்களே ஆகும். இந்த முகங்கள் இருக்கும் வரிசை என்னவென்றால், முக்கிய முகங்கள் மூன்று, இதர முகங்கள் மூன்று. இதே வரிசையில் அவை உள்ளன: ஞான, பக்தி, வைராக்கியம், தர்ம, அர்த்த, காம. முக்கியமான ஞான, பக்தி, வைராக்கியங்களுக்கு, உதவியான தர்ம, அர்த்த, காம - என்றால் இதன் பொருள் என்ன?
ஞானத்திற்கு -> தர்மம். அதாவது, இவரிடத்தில், வர்ணாசிரமத்திற்குத் தக்க தர்மங்களே நிரம்பியிருக்கின்றன. அதாவது, பக்தர்களுக்கு பகவத் தத்வங்களை உபதேசம் செய்வது, மற்றவர்களுக்கு தம்மால் எவ்வித தொந்தரவுகளும் ஆகாமல், பாவ/புண்ணியம் முதலானவற்றை பொறுத்துக் கொள்ளும்படியான தர்மம் இவரிடத்தில் முக்கிய குணங்களாக இருக்கின்றபடியால், ஞானத்திற்கு பொருத்தமாக தர்மத்தைக் குறிப்பிடுகிறோம்.
பக்தி என்னும் தலைக்கு, அர்த்த என்னும் தலை பொருத்துகிறோம். இதன் பொருள் என்னவென்றால், அதிக செல்வங்களை சேர்த்து, மனைவி மக்களுக்கு அதிகப்படியான ஆபரணங்களை சேர்த்து வைக்கும் நோக்கம் இவருக்கு இல்லை. ஸ்ரீஹரியின் விசேஷமான பக்தியை செய்து, அதிலிருந்து கிடைக்கும் புருஷார்த்த ரூபமான அர்த்தமே இவரிடம் இருக்கிறது.
வைராக்கியம் என்னும் தலைக்கு, ஆறாவது தலையான காமத்தை பொருத்துகிறோம். காமம் என்றால் ஆசை. இவருக்கு தற்காலிகமான சுகங்களைப் பெறுவதில் ஆசையில்லை. வைராக்கியத்திற்கு சேர்ந்த காமம் என்றால், மகாபாரத்தில் பீமசேனர், காமத்திற்கு இணையானது வேறொம்றும் இல்லை என்று நிரூபித்திருப்பார். அது என்ன காமம் என்றால், முக்திக்கு முக்கிய காரணமான ஸ்ரீஹரியின் பரம பிரசாதத்தை விரும்புவது. அதன்படியே, இவருக்கு வாழ்க்கையில் வைராக்கியமும், ஸ்ரீஹரியின் பரம பிரசாதத்தின் மேல் விருப்பமும் இருப்பதால், வைராக்கியத்திற்கு பொருத்தமான தலையாக காமத்தைக் கூறுகிறோம்.
இப்படியாக ஆறு முகங்களைக் கொண்டிருப்பதால், இவரை ஷண்முகர் என்று சொல்வதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஸ்ரீஹரியின் விருப்பத்தினாலே இத்தகைய பொருளை நான் எழுதியிருப்பதால், இதை யாரும் ஒப்பிக் கொண்டாலும், ஒப்பிக் கொள்ளவில்லையென்றாலும், அதில் எனக்கு எவ்வித லாப நஷ்டங்களும் இல்லை. ‘சுப்ரமண்யாக்ய ஷண்முகம்’ என்று மூலத்தில் இருக்கும் சுப்ரமண்ய சொல்லின் பொருளை விளக்கியிருக்கிறேன். அதாவது, பிராமண என்னும் சொல்லிற்கு, யக்ஞோபவீத முதலான சின்னங்களே காரணம் இல்லை; ‘பிரம்ம அணதீதி பிராம்மண:’ என்று சாஸ்திரகாரர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். பரபிரம்மனை அடையும் சாதனை செய்பவனே பிராம்மணன். இத்தகையவரிடம் அன்பு செலுத்துகிறவன் பிரம்மண்யன் அல்லது மேலே கூறிய பிராமண லக்ஷணங்களை உடையவன். சுப்ரமண்யன் என்றால், பிரம்மனை அடைவதற்கு சிறப்பான சாதனைகளை செய்பவன் என்று பொருள்.
ஞான பக்தி வைராக்கியங்களினால், தர்மார்த்த காமங்களை பின்பற்றுபவன் என்றால்: ஸ்ரீஹரியை அடைவது ஒன்றே முக்கியமான செயலென்று தெரிவதால், சுப்ரமண்ய என்னும் சொல்லிற்கும், ஷண்முக என்னும் சொல்லிற்கும் ஒரே பொருள் என்று தெரிகிறது. ‘சுப்பராயேதி விக்யாதம்’ என்றால், மக்கள் இவரை சுப்பராய தாசர் என்று அழைக்கின்றனர் என்று பொருள்.
சு என்றால் சுகம். வாதி என்றால் நாசம் என்று பொருள். தற்காலிக சுகங்களை நாசம் செய்யும் அஞ்ஞானம் என்று பொருள். ‘சுவம்வாதீசுவ: பவயோரபேதரதேவசுப்ப:’ என்றால், சுகத்தை நாசம் செய்யும் அஞ்ஞானம். அத்தகைய அஞ்ஞானத்தை ஞானோபதேசத்தினால் பரிகாரம் செய்பவருக்கு சுப்ப என்று பெயர். சம்ஸ்கிருதத்தில் ‘ப’’வ’ இரண்டிக்கும் வேறுபாடு இல்லாததால், சுவ்வ என்னும் சொல்லே, சுப்ப என்றாயிற்று. ரா என்றால் செல்வம். மொத்தத்தில், அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுப்பவர் என்று சுப்பராயர் என்னும் சொல்லிற்கு பொருள் வந்தது. இத்தகைய மகானுபாவரான, ஷண்முக சொல்லினால் குறிப்பிடுபவரான சுப்பராய தாசரை வணங்குவேன் என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருள்.
சுப்ரமண்யாக்ய சூர்யந்தம் ஸ்வாந்த த்வாந்த
நிக்ருந்தகம் | தத்வஞான கரை: பூர்ணம்
குருவர்யம் அஹம் பஜே ||4||
விளக்கம்:
இந்த ஸ்லோகம், தாசராயரை சூரியன் என்று வர்ணிக்கிறது. சூரியன், புற இருட்டினை அழிப்பவன். இவரோ, ’ஸ்வாந்த த்வாந்த நிக்ருந்தகம்’ - அக அஞ்ஞானத்தை அழிப்பவர். தத்வஞான கரை: பூர்ணம் - தத்வஞானம் என்னும் கிரணங்களால். குருவர்யம் - சிறந்த குருவான. தம் - முன் சொன்ன மகிமைகளைக் கொண்டவரான. சுப்ரமண்யாக்ய சூர்யம் - சுப்ரமண்ய பெயரைக் கொண்டவரான சூரியனை, அஹம் - நான், பஜே - வணங்குகிறேன்.
சதுஸ்லோகாத்மகம் இதம் குரோ: சுகுண
சம்ஸ்தவம் | பத்மனாபாக்ய தாசேன
க்ருதம் ஸ்ரீ குருவனுக்ரஹாத் ||5||
விளக்கம்:
நான்கு ஸ்லோகங்களினால் குருவின் மகிமைகளைக் கொண்டாடும் இந்த கிருதி, அந்த குருவின் அருளாலேயே, அவரின் சிஷ்யன் என்று பெயர் பெற்றுள்ள பத்மனாப தாசனால் இயற்றப்பட்டு, குருவின் சரணகமலங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ குருவந்தர்கத ஸ்ரீ தந்தேமுத்துமோகனவிட்டல: ப்ரீயதாம் ||
இப்படியாக, மிகவும் அற்புதமான நடையில் இயற்றப்பட்டுள்ள அவரது குரு வணக்கம் மற்றும் அதன் பொருளில் பக்திரசம் ததும்பியது, பத்பனாப தாசரின் பாண்டித்யத்திற்கு மற்றும் அவரது குருபக்திக்கு சாட்சியாக இருக்கிறது.
அங்கித உபதேசமான பிறகு, குருவின் ஆணைக்கு கட்டுப்பட்டு, ஹரிகதாம்ருதசாரத்திற்கு மிகச்சிறந்த உரையை இயற்றினார். தம் உரையை குருகளின் சமர்ப்பித்த சில நாட்களிலேயே, பத்மனாப தாசர் இறைவனடி சேர்ந்தார்.
ஹரிகதாம்ருதசாரத்திற்கு பத்பனாபதாசர் இயற்றியுள்ள உரை மிகவும் அபூர்வமானது. பண்டித பாமரர்களால் கொண்டாடப்படுகிறது. மூல பாகவத ஸ்லோகங்கள் மற்றும் புராண வாக்கியங்களை உதாரணம் கொடுத்து ஹரிகதாம்ருதசாரத்தின் உட்பொருளை சரியாக விளக்கும் இந்த உரையானது தற்போதும் அனைவராலும் படிக்கப்படுகிறது. தந்தெமுத்துமோகனதாசரின் பேரன்பினால் இத்தகைய அபூர்வமான உரை ஹரிதாச உலகத்திற்கு கிடைத்துள்ளது.
ஸ்ரீதாசர், தமது உரையை ஸ்ரீபிரமோத நாம சம்வத்சரம் மாக பகுள ஏகாதசி வியாழக்கிழமையன்று (13-3-1931) முடித்து, தமது குருகளிடம் சமர்ப்பித்தார். சன்யாச ஆசிரமத்தை துறந்த சமயத்தில், ஸ்ரீஸ்ரீ சத்யத்யான தீர்த்தர் கூறியதை பின்பற்றாமல் கவலைப்பட்டு, அதன் பரிகாரமாக என்று சொல்வதைப் போல, ஸ்ரீ பத்பனாபதாசர், தம் குருகள் சொன்னதைப் போல, இந்த வேலையை செய்துமுடித்து, சில நாட்களிலேயே இறைவனடி சேர்ந்தார்.
ஆதாரங்கள்:
1. பரமார்த்த சந்திரோதயத்தில் வெளிவந்த கட்டுரைகள்.
2. ‘பரமப்ரிய சுப்பராய தாசர்’, குருக்ருபா கிரந்தமாலை, மைசூர்
3. தந்தெமுத்துமோகன தர்சன - பரிமள பிரகாஷன, பெங்களூரு. 50.
***
No comments:
Post a Comment