ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, April 30, 2020

#24 - விபூதி சந்தி

#24 - விபூதி சந்தி


ஈ ஷரீரவெ ரத21தா1ஸு
வாஸக3ளு புண்ட்ரக3ளு த்4வஜ ஸிம்
ஹானவெ சித்தவு சுபுத்தி4யெ கலஷ ன்மனவெ |
பாஷ கு3ண த3ண்டத்ரயக3ளு ஷு
பா4 ஷுப4த்வய கர்மசக்ர ம
ஹா சமர்த்தா4ஷ்வக3ளு த3ஷ கரணங்க3ளெனிஸுவுவு ||24


ஈ ஷரீரவெ ரத, சுவாஸகளு = நாம் தரித்திருக்கும் வஸ்திரங்களே
பதாக = த்வஜங்கள் (கொடிகள்)
புண்ட்ரகளு = 12 கோபிசந்தன நாமங்களே, த்வஜஸ்தம்பங்கள் (கருட முத்திரை என்றால் கருட த்வஜம் என்று அர்த்தம்)
சித்தஸுபுத்தியெ = பகவத் விஷயமான புத்தியே
கலஷ = ரதத்தின் கலச
ஸன்மனவெ = பகவத் பாதாரவிந்தங்களில் நிலைத்திருக்கும் மனமே
பாஷ = லகான் (குதிரைகளை பிடித்து இழுக்கும் கயிறு)
குண = சத்வ ரஜஸ் தமோ குணங்கள்
தண்டத்ரயகளு = குதிரைகளை அடிக்கும் குச்சிகள்
ஷுபாஷுபத்வயகர்ம = புண்ய பாப கர்மங்கள்
சக்ர = (இரண்டு) சக்கரங்கள்
தஷகரணங்களு = பத்து இந்திரியங்கள்
மஹாஸமர்த்தாஷ்வகளு = மிகவும் திறன் கொண்ட குதிரைகள்
எனிஸுவவு = என்று நினைத்து பூஜிக்க வேண்டும்

நம் தேகத்தை ரதம் என்றும், பரமாத்மன் அதில் அமர்ந்திருக்கிறான் என்றும் சிந்தித்து பூஜிப்பது ஒரு வகையான சாதனை என்று இரு பத்யங்களால் விளக்குகிறார் தாசராயர். 

தேஹோரதஸ்த்வம் த்ரியாஷ்வ: ஸம்வத்ஸர வயோகதி: |
மனோரஷ்மிர்புத்தி ஸுதோஹ்ருன்னீடோ த்வந்த்வ கூபர: ||
(பாகவத 4ம் ஸ்கந்தம் 29ம் அத்தியாயம் 18ம் ஸ்லோகம்)

இந்த வாக்கியத்தின் சாரத்தையே தாசராயர் இங்கு விளக்கியிருக்கிறார். இந்த சரீரமே ரதம். நாம் தரித்திருக்கும் ஆடைகளே ரதத்தின் கொடிகள். 12 கோபிசந்தன நாமங்களே கருட சின்னத்தால் கூடிய த்வஜம். நம் சித்தமே பரமாத்மன் அமரும் சிம்ஹாசனம். பகவத் விஷயத்தில் ஈடுபடும் புத்தியே ரதத்தின் மேல் இருக்கும் கலசம். பகவத் பாதாரவிந்தங்களில் இருக்கும் மனமே குதிரையின் லகான் கயிறுகள். ‘ஸன்மனவுபாஷ’ என்று சொல்கிறார். பாஷ என்றால் கயிறு. இதை லகான் கயிறு என்று ஏன் அர்த்தம் கொள்ளவேண்டும் என்றால், பாகவத வாக்கியத்தில் ‘மனோரஷ்மிபி:’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த ஆதாரத்தினாலும், ரதத்திற்கு வெறும் கயிறின் சம்பந்தம் இல்லாததாலும், மேற்சொன்ன அர்த்தத்தையே சொல்ல வேண்டியதாகிறது. ஸத்வரஜஸ்தமோ குணங்களே தண்டங்கள் (கொம்பு / குச்சிகள்). புண்ய பாவங்களே சக்கரங்கள். ஞானேந்திரிய கர்மேந்திரியங்கள் பத்து - இவையே மிகவும் புத்திசாலிகளான / திறன்களைக் கொண்ட குதிரைகள். 

***

Wednesday, April 29, 2020

#23 - விபூதி சந்தி

#23 - விபூதி சந்தி


மாரமண னரமனெகெ3 ஸுமஹா
த்4வார வெனிஸுவ வதனகொப்பு1
தோரண ஷ்மச்ருக3ளு கே1ஷக3ளெ ப1தாகெ13ளு |
ஊரி நடெ3வங்க்4ரிக3ளு ஜங்கெ43
ளூரு மத்4யோத3ர ஷிரக3ளா
கா3ரது3ப்ப1ரிகெ33ளு கோ1ஷக3ளைது3 கோணெக3ளு ||23


மாரமணன = லட்சுமிபதியின்
அரமனெகெ = அரண்மனை என்னும் இந்த சரீரத்திற்கு
சுமஹாத்வாரவெனிஸுவ = பெரிய வாயில்கள் எனப்படும்
வதனகெ = முகத்திற்கு
ஒப்புவ = அழகான
ஸ்மஸ்ருகளு = மீசைகள்
தோரண = தோரணங்கள்
கேஷகளே = கூந்தல்களே
பதாகிகளு = அலங்காரக் கொடிகள்
ஊரிநடெவ = நிலத்தில் ஊன்றி நடக்கும்
அங்க்ரிகளு = பாதங்கள்
ஜங்கெகளு = முழங்காலுக்குக் கீழ் பாகங்கள்
ஊரு = துடைகள்
மத்ய = நடுவே
உதர = வயிறு
ஷிரகளு = தலை, ஆகியவையே
ஆகாரத = வீட்டில் உப்பரிகைகள்
கோஷகளைது = அன்னமய, பிராணமய, மனோமய, விக்ஞானமய, ஆனந்தமய என்னும் ஐந்து கோஷங்களும்
கோணெகளு = கொட்டடிகள்

ஸ்ரீபதியின் அரண்மனை என்னும் இந்த தேகத்திற்கு மகாத்வாரம் போல இருக்கும் இந்த முகத்தில் இருக்கும் மீசைகளே தோரணங்கள். அதாவது ‘தோரணோsஸ்த்ரீ பஹிர்த்வாரம்’ என்னும் அமரகோச வாக்கியத்திற்கேற்ப, தோரணங்கள் என்றால், ஊருக்கு எல்லையில் இருக்கும் வாயில் என்று பொருள். கூந்தல் மயிர்களே த்வஜக் கொடிகள். பூமியில் ஊன்றி நடக்கும் பாதங்கள், அதற்கு மேல் முழங்காலுக்குக் கீழ் இருக்கும் பகுதிகள், துடைகள், வயிறு, தலை ஆகியவையே வீட்டின் உப்பரிகைகள். அன்ன, பிராண, மனஸ், விக்ஞான, ஆனந்த என்னும் ஐந்து கோஷங்களே ஐந்து கொட்டடிகள். இந்த விதமாக நம் தேகத்தையே பரமாத்மனின் அரண்மனை என்று சிந்தித்து பூஜை செய்வது ஒரு சாதனையாகும். 

***

#22 - விபூதி சந்தி

#22 - விபூதி சந்தி


உருபராக்ரம அரமனெகெ33
கரணக3ளு கன்னடி3ஸாலுக3
ளரவிதூ3ரன சத்3விஹாரக்கெ1 சித்த1 மண்டபவு |
மரளிபீ3சுவ ஷ்வாஸக3ளு சா
மர விலாஸினி பு3த்தி4 தா3மோ
3ரகெ சாஷ்டாங்க3 பிரணாமக3ளே ஸுஷயனக3ளு ||22


உருபராக்ரம = உரு = மிகச்சிறந்த பராக்ரமன = பராக்ரமசாலியான பரமாத்மனின் 
அரமனகெ = நம் இதயம் என்னும் அரண்மனைக்கு
தஷகரணகளு = ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5 என மொத்தம் 10 இந்திரியங்கள்
கன்னடிய சாலுகளு = வரிசையாக இருக்கும் கண்ணாடிகள்
அரவிதூரன = தோஷங்கள் இல்லாதவனான ஸ்ரீஹரியின்
ஸத்விஹாரகெ = நன்றாக நடவடிக்கை செய்வதற்கு
சித்த = நம் சித்தம்
மண்டபவு = மண்டபம்
மரளிபீசுவ ஷ்வாஸகளு = திரும்பத்திரும்ப வீசும் ஸ்வாசங்கள்
சாமர = சாமரங்கள்
புத்தி = புத்தியே
விலாஸினி = வேசிப்பெண்
சுஷயனகளு = நாம் படுத்திருப்பதே
தாமோதரகெ = தாமோதரனுக்கு
சாஷ்டாங்க பிரணாமகளு = சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதைப் போன்றதாகும். 

பஹு பராக்ரமசாலியான பரமாத்மனின் அரண்மனையப் போன்றதாகும், நம் இதயம். இதற்கு, ஞானேந்திரியம், கர்மேந்திரியம் என்னும் 10 இந்திரியங்கள் கண்ணாடியின் வரிசைகளைப் போன்று இருக்கின்றன. தோஷங்கள் அற்றவனான ஸ்ரீஹரி, நன்றாக நடவடிக்கைகளை செய்வதற்கு, நம் சித்தமே மண்டபமாக இருக்கிறது. திரும்பத்திரும்ப நாம் விடும் ஸ்வாசங்களே அவனுக்கான சாமரங்கள். புத்தியே வேசிப்பெண். நாம் படுப்பதே, தாமோதரனுக்கு நாம் செய்யும் சாஷ்டாங்க நமஸ்காரங்கள் என்று நினைக்க வேண்டும். 

***

Tuesday, April 28, 2020

#21 - விபூதி சந்தி

#21 - விபூதி சந்தி


இன ஷஷாங்காதிக3ளு லகுமி
வனிதெயரஸன த்வாரபாலக
ரெனிசுதிப்பரு மனத3வ்ருத்திக3ளெ பதா3தி13ளு |
அனுப4விப விஷயங்க3ளெ ப
ட்டணக்கெ ப3ப்ப பஸாதக3ளு ஜீ
வனு சுவர்த111ப்பக3ள கைகொம்ப3 ஹரி தானு ||21


இன ஷஷாங்காதிகளு = சந்திர சூர்யாதி தத்வாபிமானி தேவதைகள்
லகுமி வனிதெ = லட்சுமியென்னும் உத்தம ராணியின்
அரஸன = பதியான ஸ்ரீபரமாத்மனின்
த்வாரபாலகரு = த்வார பாலகர்கள்
எனிசுதிப்பரு = என்று அழைக்கப்படுகிறார்கள்
மனதவ்ருத்திகளெ = மனதில் தோன்றும் கோரிக்கைகளே
பதாதிகளு = காலாட்கள்
அனுபவிப = நாம் அனுபவிக்கும்
விஷயங்களெ = விஷய போகங்களே
பட்டணகெ = சரீரம் என்னும் இந்த பட்டணத்திற்கு
பப்ப = வரும்
பஸாரகளு = மிகப்பெரிய கடைகள்
ஜீவனு = ஜீவர்கள்
ஸுவர்த்தக = நல்ல வியாபாரி
கப்பகள = கப்பங்களை
ஹரி = ஸ்ரீஹரி, தான்
கைகொம்ப = ஏற்றுக்கொள்கிறான் 

லட்சுமிதேவியின் ரமணனான ஸ்ரீபரமாத்மனின் த்வார பாலகர்கள், கண்களுக்கு அபிமானி தேவதைகளான சந்திர, சூரியர்கள் என்று அறியவேண்டும். மனதில் அவ்வப்போது தோன்றும் கோரிக்கைகளே காலாட்கள். நாம் அனுபவிக்கும் விஷயபோகங்களே இந்த பட்டணத்திற்கு வரும் மிகப்பெரிய கடைகள். ஜீவனே அந்த பொருட்களை வாங்கும் நுகர்வோன். இதற்கான கப்பத்தை ஸ்ரீபரமாத்மன் ஏற்றுக்கொள்கிறான். 

***

#20 - விபூதி சந்தி

#20 - விபூதி சந்தி


தா4து13ளு ப்தாவரண உப
வீதி43ளெ நாடிக3ளு மத33ளு
யூத1பக3ளு சுஷும்ன நாடி3யெ ராஜபந்தா2|
ஈ தனூருஹக3ளெ வனங்க3ளு
மாதரிஷ்வனு ப1ஞ்சரூபதி3
பாத113ளெம்பரிக3ளனு ம்ஹரிப த1ளவார ||20


தாதுகளு = ரத்தம், மாமிசம், மஜ்ஜை என்னும் 7 பாகங்கள்
ஸப்தாவரணவு = 7 பிரகாரங்கள் 
நாடிகளு உபவீதிகளு = நாடிகளே குறுக்குத் தெருக்கள்
மதகளு = செல்வங்களால் வரும் கர்வம்
யூதபகளு = மத கஜங்கள்
சுஷும்னா நாடியே = தேகத்தின் நடுவில் இருக்கும் பிரம்ம நாடியே
ராஜபந்தான = ராஜ மார்க்கம் (ராஜவீதி)
ஈதனுருஹகளெ = முடிகளே வனங்கள்
மாதரிஷ்வனு = முக்யபிராண தேவர்
பஞ்சரூபதி = பிராண, அபான, வியான, உதான, சமான என்னும் ஐந்து ரூபங்களில்
பாதககளெம்ப = பாவங்கள் என்னும்
அரிகளன = எதிரிகளை
ஸம்ஹரிப = கொல்லும்
தளவார = ஆயுதங்கள்

த்வக், சர்ம, மாம்ஸ, ரக்த, மேதஸ், மஜ்ஜை, அஸ்தி என்னும் 7 பாகங்களே இந்த பட்டணத்தின் ஏழு பிரகாரங்கள். இளா பிங்களா ஆகிய நாடிகளே சிறிய குறுக்குத் தெருக்கள். கல்வி, செல்வங்களால் வரும் எட்டு துர்குணங்களே மதகஜங்கள். முக்யபிராணதேவர், பிராண, அபானாதி ஐந்து ரூபங்களால் காம, கிரோதாதி ஆறு எதிரிகளைக் கொல்லும் ஆயுதங்கள்.

***

Monday, April 27, 2020

#19 - விபூதி சந்தி

#19 - விபூதி சந்தி


மது4விரோதி4ய ப1ட்டணகெ பூ
ர்வத31வாடக3ளக்‌ஷி நாஸிக1
வத3ஷ்ரோத்ரக3ளெரடு த3க்‌ஷிண உத்த1ர த்3வார |
கு33 உபஸ்த23ளெரடு பஸ்சிம
131ளெனிபுவு ஷட்ரோஜவே
தன ஹ்ருத3யவெ மண்டப த்ரிகு3ணகளெ கலஷக3ளு ||19


மதுவிரோதிய = மது நாமக தைத்யனைக் கொன்ற ஸ்ரீபரமாத்மனின் 
பட்டணகெ = நம் இந்த சரீரமே அவன் பட்டணம். அத்தகைய பட்டணத்திற்கு
அக்‌ஷி = இரு கண்கள்
நாசிக = மூக்கு துவாரங்கள்
வதன = வாய் ஆகியவை
பூர்வத கவாடகளு = கிழக்கு வாசல்கள்
ஸ்ரோத்ரகளெரடு = காதுகள் இரண்டும்
தக்‌ஷிண உத்தர த்வார = வடக்கு தெற்கு வாசல்கள்
குத உபஸ்தகளெரடு = மல, ஜல த்வாரங்கள் இரண்டும்
பஸ்சிம கதகளெனிபுவு = மேற்கு வாசல்கள் எனப்படுகின்றன
ஷட்ஸரோஜவே = இதயத்தில் இருக்கும் ஆறு தள தாமரையே
ஸதன = பரமாத்மனின் வீடு
ஹ்ருதயவெ மண்டப = இதயமே மண்டபம்
த்ருகுணகளெ = சத்வ ரஜஸ் தமோ குணங்களே
கலஷ = மண்டபத்தின் கலசங்கள் என்று அறியவேண்டும். 

19ம் பத்யத்திலிருந்து 23ம் பத்யம் வரைக்கும், இந்த சரீரத்தை பரமாத்மனின் பட்டணமாக அறிந்து, பூஜிக்கும் விதங்களைப் பற்றி கூறுகிறார் தாசராயர். 

நம் சரீரமே, மதுசூதனனின் பட்டணம் என்று சிந்திக்க வேண்டும். பட்டணம் என்று சொன்ன பிறகு அதன் லட்சணங்கள் எவை என்று சொல்கிறார். அது என்ன என்றால்:

கண்கள், மூக்கு த்வாரங்கள், வாய் இவைகளே இந்த பட்டணத்திற்கு கிழக்கு வாசல்கள். வலது காது தெற்கு கதவு. இடது காது வடக்கு காது. மல ஜல த்வாரங்கள் மேற்கு வாசல்கள். இந்த விஷயத்தைப் பற்றி பாகவதம் 4ம் ஸ்கந்தம் 29ம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஆதார ஸ்லோகங்கள் இவையே. 

நவத்வாரம் த்விஹஸ்தாங்க்ரிம் புரம்மனுத ஸாத்விதி |
அக்‌ஷிணீ நாஸிகே அஸ்யமிதி பஞ்சபுரஸ்க்ருதா: ||
தக்‌ஷிணாதக்‌ஷிண: கர்ண: உத்தராசோத்தர: ஸ்ம்ருத: |
பஷ்சிமே இத்யதௌத்வாரௌ குதஷிஷ்னாவிஹோதிதே |

நம் இதயத்தில் இருக்கும் ஆறு தள தாமரையே பரமாத்மனின் வீடு. இதயமே மண்டபம். ஸத்வரஜஸ்தமோ குணங்களே கலசம்.

***

#18 - விபூதி சந்தி

#18 - விபூதி சந்தி


கோ3ளக1வெ கு1ண்ட3க்னி க1ரணவு
மேலொத3கி33ஹ விஷய மிதெ4யு
கா3ளி யத்னவு கா1ம தூ4மவு ன்னிதா3னார்ச்சி |
மேளனவெ ப்ரஜ்வாலெ கி1டிக3ளு
தூ1ளிதா3னந்த33ளு த1த்த1
த்கா1ல மாது13ளெல்ல மந்த்ராத்4யாத்1ம யக்ஞவிது3 ||18


கோளகவெ = சூக்‌ஷ்ம ஸ்தூல சரீரங்களே
குண்ட = அக்னிகுண்டம்
கரணவு = இந்திரியங்களே அக்னி
மேலொதகிபஹ விஷய = அவ்வப்போது கிடைக்கும் விஷயங்களே
சமிதெயு = காஷ்டங்கள் (குச்சிகள்)
யத்னவு = முயற்சியே, காற்று
காம = விஷயத்தைப் பற்றிய ஆசையே
தூமவு = புகை
ஸன்னிதான = விஷயேந்திரியங்களுக்கும், விஷய போக்ய வஸ்துகளுக்கும் அருகில்
அர்ச்சி = அக்னி ஜ்வாலை
மேளனவெ = விஷயேந்திரியங்களுக்கும் போக்ய வஸ்துகளுக்கும் இருக்கும் பரஸ்பர சம்பந்தம்
ப்ரஜ்வாலெ = விசேஷமான ஜ்வாலை
கிடிகளு = ஒளி
தூளிதானந்தகளு = போகத்தினால் வரும் மகிழ்ச்சியே 
தத்தத்காலமாதுகளெல்ல = அந்தந்த காலங்களில் பேசும் பேச்சுக்கள் அனைத்தும்
மந்த்ர = மந்திரங்கள்
இது = இப்படி, சிந்திப்பதே ஆத்யாத்ம யக்ஞம் ஆகும். 

தேஹேந்திரியங்களின் செயல்களையே ஆத்யாத்ம யக்ஞங்களாக சிந்திப்பது என்பது பரமாத்மனின் பூஜை என்று சொல்கிறார் தாசராயர். 

ஸ்தூல மற்றும் ஸூக்‌ஷ்ம சரீரங்களே அக்னி குண்டங்கள். கண், காது ஆகிய இந்திரியங்களே அக்னி. கண், காது ஆகியவற்றால் செய்யப்படும் விஷயங்களான பார்ப்பது, கேட்பது ஆகியவையே காஷ்டங்கள். பார்ப்பதற்கும், கேட்பதற்கும் முயற்சிப்பதே காற்று. அந்த விஷய போகங்களைப் பற்றிய விருப்பமே புகை. கண், காது முதலான இந்திரியங்களுக்கு பார்ப்பதற்கும், கேட்பதற்கும் உரிய பொருட்கள் அதாவது அழகான ரூபமுள்ள பொருள், அல்லது இனிமையான பாடல் ஆகியவற்றின் சமீபமே (அருகாமையே) ஜ்வாலை. இந்திரியங்களுக்கு யோக்ய வஸ்துகள் கிடைப்பதே விசேஷ ஜ்வாலை. 

அதிலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியே ஒளி. அந்தந்த காலத்திற்கேற்ப பேசும் பேச்சுக்களே மந்திரங்கள்.

இப்படி நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் பகவந்தனுக்கு சம்பந்தப்பட்ட விஷயத்தையே சிந்திப்பதற்கு ஆத்யாத்ம யக்ஞம் என்று பெயர். பிரத்யட்ச யாகங்களை செய்வதற்கு, அக்னியின் முன் அமர்ந்து கஷ்டமான யக்ஞ யாகங்களை செய்தாலும், இந்த ஆத்யாத்ம யாகத்திற்கு சமமான பலன் கிடைக்காது. இந்த வகையான ஆத்யாத்ம யக்ஞமானது பரமாத்மனின் விசேஷமான பூஜை என்று அறியவேண்டும். த்ரவ்ய யக்ஞாதிகள் கஷ்டமானவை, பலன் குறைவு, ஆனால், இந்த யக்ஞமானது அதிக பலன்களைக் கொடுக்கக்கூடியது. 

’ஷப்தாதீன்விஷயானன்யே இந்த்ரியாக்னிஷு ஜுஹ்வதி’ - சில ஞானிகள் தாம் அனுபவிக்கும் விஷய போகங்களை, தம் சொற்களால், இந்திரியாக்னிகளில் ஹோமம் செய்வர். என்னும் கீதா வாக்கியத்தின் சாரமே இங்கு விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. 

***