ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, September 5, 2020

நைவேத்திய சமர்ப்பண சந்தி

 

பாவபிரகாசிகை : சந்தி 31 : நைவேத்திய சமர்ப்பண சந்தி

 

ஹரிகதா2ம்ருதசார கு3ருக3

கருணதிந்தா3பநிது பே1ளுவே

பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

 

இந்த சந்தியில் ப்ரதிமை, சாலிகிராமம் முதலானவற்றில் நைவேத்தியம் செய்யும் கிரமத்தையும், எந்தெந்த பதார்த்தங்களில் எந்தெந்த தேவதைகளையும், பகவத் ரூபங்களையும் சிந்திக்க வேண்டும் என்பதையும் சொல்கிறார். முதலாம் பத்யத்திலிருந்து, 13ம் பத்யம் வரைக்கும் பரமாத்மனின் மகிமைகளை சொல்கிறார்.

 

லெக்கிதெ3 லகுமியனு பொ3ம்மன

பொக்குளிந்த3லி படெ33 பொபொ

ம்ப3க்கிதே3ரனு படெ33வயவக3ளிந்த3 தி3விஜரன |

மக்களந்த3தி3 பொரெவ ர்வத3

ரக்கஸாந்தக ரணதொளகெ3 நி

ர்து3க்க2 ஸு2மய காய்த3 பார்த்த2ஸூதனெந்தெ3னிஸி ||1

 

லகுமியனு = லட்சுமிதேவியரை

லெக்கிஸதெ = லட்சியம் செய்யாமல் (அவரது உதவி இல்லாமல்)

பொக்களிந்தலி = தன் நாபி கமலத்திலிருந்து

பொம்மன = பிரம்மதேவரை

படெத = ஸ்ருஷ்டித்தான்

பொம்பக்கிதேரனு = கருட வாகனனான ஸ்ரீஹரி

திவிஜரன = தேவதைகளை

அவயவகளிந்த = தன் அவயவங்களிலிருந்து

படெத = ஸ்ருஷ்டித்தான்

சர்வதா = எப்போதும்

மக்களந்ததி = தன் மக்களைப் போலவே

பொரெவ = காப்பாற்றுவான்

நிர்துக்க = துக்கம் இல்லாதவனான

சுகமய = ஆனந்த ஸ்வரூபனான

ரக்கஸாந்தக = அசுரர்களின் எதிரியான ஸ்ரீஹரி

ரணதொளகெ = போர்க்களத்தில்

ஸூதனெந்தெனிஸி = சாரதி என்று

பார்த்தன = அர்ஜுனனை

காய்த = காப்பாற்றினான்.

 

லட்சுமிதேவியரை லட்சியம் செய்யாமல், தன் நாபியிலிருந்து பிரம்மதேவரை படைத்தான். சக்‌ஷோ ஸூர்யோ அஜாயத: முகாதிந்த்ராஸ் சாக்னிஸ்சஎன்னும் புருஷ சூக்தத்தின்படி, கண்களால் சூரியனையும், முகத்தினால் இந்திர, அக்னிகளையும் என தன் அவயவங்களால் தேவதைகளையும் படைத்தான். அவர்கள் அனைவரையும் காப்பாற்றுகிறான். துக்க தோஷங்கள் இல்லாதவனான, ஆனந்த ஸ்வரூபனான, அசுரர்களைக் கொல்பவனான ஸ்ரீஹரி, கிருஷ்ணாவதாரத்தில் பார்த்தசாரதியாகி போர்க்களத்தில் அர்ஜுனனை காத்தான்.

 

தோ3ஷக3ந்த4விதூ3ர நானா

வேஷதா4ரி விசித்ரகர்ம ம

நீஷி மாயாரமண மத்4வாந்த: கரணரூட3 |

ஸேஸாயி ஷரண்ய கௌஸ்துப4

பூ4ஷணஸு2ந்த4தா3

ந்தோஷ ப3ஸௌந்த3ர்யஸாரன மஹிமெகே3னெம்பே3 ||2

 

தோஷகந்தவிதூர = தோஷம் என்னும் வாசனையே இல்லாதவன்

நானவேஷதாரி = அனேக விதமான வேஷதாரி; அதாவது, மத்ஸ்ய, கூர்ம முதலான ரூபங்களை தரித்தவன்

விசித்ரகர்ம = வியக்கத்தக்க கர்மங்களை செய்தவன்

விசித்ர மனீஷி = விசித்திரமான புத்தி உள்ளவன்

மாயாரமண = வாசுதேவ ரூபத்தினால் மாயா நாமகளான லட்சுமிதேவியை திருமணம் செய்தவன்

மத்வாந்த: கரணரூட = மத்வாசார்யரின் அந்தர்யாமியான; அதாவது அவரது மனதில் த்ருடமாக நின்றவன்.

சேஷசாயி = சேஷனே படுக்கையாகக் கொண்டவன்

ஷரண்ய = வணங்கத்தக்கவன்

கௌஸ்துப பூஷண = கௌஸ்துப மாணிக்கத்தால் அலங்கரிக்கப்பட்டவன்

சுகந்தர = அழகான கழுத்து உள்ளவன்

ஸதா சந்தோஷ பல = எப்போதும் மகிழ்ச்சி, பல இவற்றைக் கொண்டவன்

சௌந்தர்யஸாரன = இத்தகைய அழகானவனான ஸ்ரீஹரி

மஹிமெகேனெம்பே = மகிமையை என்னவென்று சொல்வேன்? (சொல்வதற்கு சாத்தியமில்லை என்று அர்த்தம்).

 

கொஞ்சம்கூட தோஷத்தின் சம்பந்தம் அற்றவன். அனேக அவதாரங்களை செய்தவன். வியக்கத்தக்க கர்ம, விசித்ர புத்திகளைக் கொண்டவன். மாயா நாமக லட்சுமிதேவியருக்கு கணவன் ஆனவன். மத்வாசார்யரின் மனதில் எப்போதும் நிலைத்திருப்பவன். சேஷனே படுக்கையாகக் கொண்டவன். முறையிடுவதற்கு / வணங்குவதற்கு ஏற்றவன். கௌஸ்துப மாணிக்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கழுத்து கொண்டவன். எப்போதும் ஆனந்த ஸ்வரூபன். பல (bala) பூர்ணன். இத்தகைய பகவந்தனின் மகிமைகளை என்னவென்று வர்ணிப்பேன்?

 

ஸாஷனானஷனெ அபி4

ம்பீ3 ஸ்ருதிப்ரதிபாத்3ய னெனிஸு

கேஷவன ரூபத்3வயவ சித்தே3ஹதொ3ளஹொரகெ3 |

பே3ரதெ3 த்ப4க்தியிந்த3

பானெய கை3யுத்த பு33ரு ஹு

தாஷனன வோலிப்பனெந்த3னவரத துதிஸுவரு ||3

 

ஸாஷன = ஆகாரம் செய்வதற்கு யோக்யமான ரூபம்

அனஷன = ஆகாரத்தை ஏற்றுக் கொள்ளாத ரூபம்

அபீயெம்ப = இந்த இரு ரூபங்களும் பரமாத்மனுடையது என்று சொல்லும்

ஈ ஸ்ருதி ப்ரதிபாத்ய நெனிஸுவ கேஷவன ரூபத்வயவ = இந்த வேத மந்திரத்தால் புகழப்படுபவனான கேசவனின் இரு ரூபங்களே

சித்தேஹதொளகெ = ஸ்வரூப தேகத்தில்

ஹொரகெ = ஸ்தூல தேகத்தில் இருக்கிறது என்று அறிந்து

பேசரதெ = சத் பக்தியினால்

உபாசனெய கையுத்த = உபாசனையை செய்தவாறு

புதரு = ஞானிகள்

ஹுதாஷனனவோல் = அக்னியைப் போல தேஜஸ் கொண்டு, பாபங்களின் சம்பந்தமே இல்லாமல்

இப்பரெந்து = இருக்கிறார் என்று

அனவரத = எப்போதும்

துதிஸுதிரு = ஞானிகளை கொண்டாடிக் கொண்டிரு.

 

பகவந்தனுக்கு ஸாஷன ரூபம் என்றும், அனஷன ரூபம் என்றும் இரு ரூபங்கள் உண்டு. ஸாஷன என்றால், தினமும் உணவு உண்ணும் மனிதர்களைப் போலவும், அனஷன என்றால், தேவதைகளைப் போலவும், இந்த இரண்டின் அந்தர்யாமி ரூபங்கள் உண்டு என்று அர்த்தம்.

 

ஸ்வரூப தேகத்தில் இருந்து கொண்டு, அங்கு அஷனாதிகள் இல்லாததால் அனஷன என்றும், ஸ்தூல தேகத்தில் இருந்து கொண்டு, போஜனாதிகளை செய்வதால் சாஷன என்றும், ஒரு பரமாத்மன் இரு ரூபங்களைக் கொண்டு ஸ்வரூப தேகத்திலும், ஸ்தூல தேகத்திலும் இருக்கிறான் என்று ஞானிகள் உபாசனை செய்தவாறு, தாம் செய்யும் போஜன, பானாதிகள் அனைத்தும் பகவத் வியாபாரங்களே என்று அறிந்து, அக்னியைப் போல இருப்பர். அதாவது,

 

தேஜஸ்வீ தபஸாதீப்தோ துர்தர்ஷோ தூரபாவன: ||

ஸர்வபக்‌ஷோபி யுக்தாத்மா நாதத்தே பாபமக்னிவத் ||

 

என்று பாகவத 11ம் ஸ்கந்தத்தில் சொல்லியதைப் போல, தவம் செய்து ஜொலித்தவாறு தேஜஸ்வியாகி ஆசை, த்வேஷங்களை விட்டவன், அக்னி எப்படி அனைத்தையும் உண்பவன் ஆனாலும், அவனுக்கு பாவம் இல்லையோ, அப்படியே இந்த தேஜஸ்வியும் எதை உண்டாலும் அவனுக்கு பாப சம்பந்தம் இல்லை என்பது கருத்து. இத்தகைய மகிமை பகவத் பக்தரில் இருக்க, பகவந்தனின் மகிமைகளைப் பற்றி சொல்வதற்கு என்ன உள்ளது என்று கூறுகிறார்.

 

கல த்கு3ணபூர்ண ஜன்மா

த்3யகி2ல தோ3ஷவிதூ3ர ப்ரகடா

ப்ரகட த்3வ்யாபாரி க3ம்ஸாரி கம்ஸாரி |

நகுல நானாரூப நிய்யா

மக நியம்ய நிராமய ரவி

ப்ரகரன்னிப3 ப்ரபு3 தா3 மாம்பாஹி பரமாப்த ||4

 

சகல சத்குணபூர்ண = அனைத்து நற்குணங்களாலும் நிரம்பியவன்

ஜன்மாத்யகில தோஷவிதூர = பிறப்பு முதலான எவ்வித தோஷங்களும் இல்லாதவன்

ப்ரகட = பிரம்மாதிகளுக்கு வியக்தனாக தரிசனம் அளிப்பவன்

அப்ரகட = சாதாரண மனுஷ்யாதிகளுக்கு

அவ்யக்தனு = தரிசனம் அளிக்காதவன்

இதனால், வ்யக்தாவ்யக்த ஸ்வரூபன் என்று சொல்லியாயிற்று

ஸத்வியாபாரி = உத்தமமான கர்மங்கள் உள்ளவன்;

அல்லது, சிலருக்கு தரிசனம் அளித்தும் சிலருக்கு தரிசனம் அளிக்காமலும் இருக்கும் உத்தமமான வியாபாரங்களைக் கொண்டவன்; அதாவது, அவன் மகிமைகளை பக்தாக்ரேசர்கள் (பக்தியில் சிறந்தவர்கள்) மட்டும் அவனின் அருளால் அறிவார்கள். மற்றவர்கள் அறியார் என்பது கருத்து.

கதஸம்ஸாரி = சம்சார சம்பந்தமான துக்கங்கள் இல்லாதவன்

கம்சாரி = கம்சனைக் கொன்றவன்

நகுல = குலம் இல்லாதவன்

நானாரூப = நானா ரூபங்களை தரித்தவன்

நியாமக = அனைத்து பிராணிகளையும் நிர்வகிப்பவன்

நியம்ய = அதைப் போலவே நடப்பவன்; ஒருவனில் இருந்து ஆணையிட்டு, இன்னொருவனில் இருந்து அதை பின்பற்றுபவன்; அரசனில் இருந்து அதிகாரம் செய்கிறான். சேவகனில் இருந்து அந்த ஆணையின்படி நடக்கிறான்.

நிராமய = எந்த விதமான வியாதியும் இல்லாதவன்

ரவிப்ரகார சன்னிப = சூர்ய சமூகங்களின் காந்தி உள்ளவன்

இத்தகைய ஹே ப்ரபோ,

பரமாப்த = ஆப்தனானவனே,

மாம்பாஹி = என்னை காப்பாற்று

 

பத்ய அர்த்தங்களே தெளிவாக உள்ளன.

 

சேதனாசேதன ஜக3த்தினொ

ளாததனு தானாகி3 லகுமி

நாத2 ர்வரொளிப்ப தத்தத்ரூபக3ள த4ரிஸி |

ஜாதிகா3ரன தெரதி3 எல்லர

மாதினொளகி3த்தகி2ல கர்மவ

தா திளிஸிகொள்ளத3லெ மாடி3ஸி நோடி3 நகு3திப்ப ||5

 

சேதனாசேதன ஜகத்தினொளு = ஸ்தாவர ஜங்கமங்கள் நிறைந்த இந்த பிரபஞ்சத்தில்

ஆததனு தானாகி = அனைத்து இடங்களிலும் தான் வியாப்தனாகி

லகுமி நாத = லட்சுமிபதி

தத்தத்ரூபகள தரிஸி = அந்தந்த பிராணிகளைப் போல ரூபங்களை தரித்து

ஸர்வரொளிப்ப = அனைத்து பிராணிகளிலும் இருக்கிறான்

ஜாதிகாரன தெரதி = நாடகத்தில் ராம கிருஷ்ணாதி வேடங்களை தரிக்கும் மனுஷ்யனைப் போல

எல்லர மாதிகொளகித்து = அனைவருடன் தான் இருந்து

அகிள கர்மவ தா திளிஸிகொள்ளதெ = தான் அந்த கர்மங்களை செய்ததாக சொல்லிக் கொள்ளாமல்

மாடிஸி = மக்கள் மூலமாக செய்வித்து

நோடி நகுதிப்ப = பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறான்.

 

ஜட சேதனாத்மகமான இந்த பிரபஞ்சத்தில் அனைத்து இடங்களிலும் வியாப்தனாக இருந்து, அந்தந்த பிராணிகளின் ரூபங்களால் அவரவர்களில் இருந்து, நாடக அரங்கத்தில் ராமகிருஷ்ணாதிகளைப் போல வேடங்களை தரித்து, தன் ஸ்வரூபத்தைக் காட்டிக் கொள்ளாமல் வேடத்திற்குத் தக்கவாறு எப்படி தானே ராமகிருஷ்ணன் என்று நடிக்கின்றனரோ, அதைப் போலவே பரமாத்மனும், அந்தந்த பிராணிகளைப் போலவே தான் அவர்களில் இருந்து, செயல்களை செய்வித்து தானே அவற்றை செய்ததாக சொல்லிக் கொள்ளாமல் அவரவர்களின் யோக்யதைக்கேற்ப செயல்களை செய்வித்து, அவரவர்களே அந்த செயல்களை செய்ததைப் போல காட்டி, தான் அதற்கு சம்பந்தப்படாமல் இருந்து, அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறான்.

 

வீதப4ய விக்ஞானதா3யக

பூ4த ப4வ்ய ப4வத்ப்ரபு33ளா

ராதி323வரவஹன கமலாகாந்த நிஸ்சிந்த |

மாதரிஷ்வப்ரிய புராதன

பூதனா ப்ராணாபஹாரி வி

தாத்3ருஜனக விபஸ்சித ஜனப்ரீய கவிகே3||6

 

வீதபய = எந்த காலத்திலும் எவ்விதமான பயமும் இல்லாதவன்

விக்ஞானதாயக = விசேஷமான ஞானத்தைக் கொண்டவன்

பூத பவ்ய பவத்ப்ரபு = கடந்த, நிகழ், எதிர்காலங்களுக்கு தலைவன்

களாராதி = துஷ்டர்களுக்கு / அயோக்யர்களுக்கு எதிரி எனப்படுபவன்

ககவரவஹன = பக்‌ஷி ஸ்ரேஷ்டனான கருட வாகனன்

கமலாகாந்த = லட்சுமிபதி

நிஸ்சிந்த = கவலை இல்லாதவன்

மாதரிஷ்வப்ரிய = முக்ய பிராணதேவருக்கு அன்பானவன்

புராதன = அனாதி காலத்திலிருந்து இருப்பவன்

பூதனா ப்ராணாபஹாரி = பூதனியின் உயிரை பறித்தவன்

விதாத்ரு ஜனக = பிரம்மதேவரின் தந்தை

விபஸ்சிதப்ரிய = ஞானிகளிடம் அன்பு கொண்டவன்

இத்தகைய நீ எம்மை காப்பாற்று.

 

பத்ய அர்த்தங்களே தெளிவாக உள்ளன.

 

துஷ்டஜன ம்ஹாரி ர்வோ

த்க்ருஷ்ட மஹிம மீரனுத

லேஷ்டதா3யக ஸ்வரத ஸு2மய மமகுலஸ்வாமி |

ஹ்ருஷ்ட புஷ்ட கனிஷ்ட ஸ்ருஷ்ட்யா

த்தஷ்டகர்த்ரு கரீந்த்3ரவரத3

தேஷ்டத3னு உன்னதஸு2ர்மா நமிபெனனவரத3 ||7

 

துஷ்டஜன ஸம்ஹாரி = துஷ்டர்களைக் கொல்பவன்

சர்வோத்க்ருஷ்ட மஹிம = அபாரமான மகிமைகளைக் கொண்டவன்

ஸமீரனுத = வாயுதேவரால் வணங்கப்படுபவன்

சகலேஷ்டதாயக = பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவன்

ஸ்வரத = ஸ்வ ரமணன்

சுகமய = ஆனந்த ஸ்வரூபன்

மமகுலஸ்வாமி = என் குல தெய்வம்

ஹ்ருஷ்ட = திருப்தி அடைந்தவன்

புஷ்ட = வலிமையானவன்

கனிஷ்ட = க்ருஷரான பிராணிகளில் இருந்து க்ருஷ எனப்படுகிறான். அணுர்ப்ருஹத் க்ருஷஸ்தூல:என்று விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வரும் அபிப்பிராயத்தையே இங்கும் அறியவேண்டும்.

ஸ்ருஷ்ட்யாத் அஷ்டகர்த்ரு = ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய, நியமன, ஞான, அஞ்ஞான, பந்த, மோக்‌ஷ என்னும் 8 விதமான கர்த்ருத்வ உள்ளவன்

கரீந்த்ரவரத = கஜேந்திரனுக்கு வரம் அளித்தவன்

யதெஷ்டதனு = யார் யாருக்கு எதெது இஷ்டமோ அதனைக் கொடுப்பவன்

உன்னத ஸுகர்மா = யாராலும் செய்யமுடியாத கஷ்டமான, சிறந்த செயல்களை செய்பவன்

இத்தகைய உனக்கு

அனவரத = அனைத்து காலங்களிலும்

நமிபெ = நமஸ்காரம் செய்வேன்.

 

பத்ய அர்த்தங்களே தெளிவாக உள்ளன.

 

பாகஷான பூஜ்யசரண பி

நாகின்னுத மஹிம ஸீதா

ஷோகனாஷன ஸுலப4 ஸுமுக2 ஸுவர்ண வர்ணநிப3 |

மாகலத்ர மனீஷி மது4ரிபு

ஏகமேவா த்விதி4யரூப ப்ர

தீக தே3வக3ணாந்தராத்மக பாலிஸுவுதெ3ம்ம ||8

 

பாகஷாஸன பூஜ்ய சரண = தேவேந்திரனால் வணங்கப்படும் பாத கமலங்களைக் கொண்டவன்

பினாகி ஸன்னுத மஹிம = ருத்ர தேவரால் வணங்கப்படும் மகிமை உள்ளவன்

ஸீதா ஷோக நாஷன = ராமாவதாரத்தில் சீதாதேவியின் சோகத்தைப் போக்கியவன்

சுலப = பக்தர்களுக்கு சுலபமானவன். அவர்களுக்கு எப்போதும் அருகிலேயே இருப்பவன்

சுவர்ண வர்ண நிப = தங்கத்தைப் போல ஒளிர்பவன்

மாகளத்ர மனீஷி = லட்சுமி தேவியர் என்னும் மனைவிக்கு புத்தி ஸ்தானீயன். அவளின் சித்தம் எப்போதும் பரமாத்மனிடமே இருக்கிறது என்பது கருத்து

மதுரிபு = மது என்னும் தைத்யனைக் கொன்றவர்

ஏகமேவா த்விதியரூப ப்ரதீக = யாரையும் ஒப்பிட முடியாதவன் என்பது கருத்து

தேவகணாதராத்மகனு = தேவ கணர்களில் அந்தர்யாமியாக இருப்பவன்

இத்தகைய நீ,

எம்ம = எங்களை

பாலிஸுவுது = காப்பாற்றுவாயாக.

 

பத்ய அர்த்தங்களே தெளிவாக உள்ளன.

 

அப்ரமேயானந்தரூப

தாப்ரன்னமுகா2ப்ஜ முக்தி ஸு

3ப்ரதா3யக ஸுமனஸாராதி4த பதா3ம்போ4|

ஸ்வப்ரகாஷ ஸ்வதந்த்ர ர்வக3

க்‌ஷிப்ர ப2லதா3யக க்‌ஷிதீஷ ய

து3ப்ரவீர விதர்க்4ய விஷ்வ ஸுதைஜஸ ப்ராக்3||9

 

அப்ரமேய = குண, கர்ம, பிறவிகளால் யாரோடும் ஒப்பிட முடியாத உத்தமமானவன்

அனந்தரூப = அனந்த ரூபங்களைக் கொண்டவன்

சதாப்ரசன்ன முகாப்ஜ = எப்போதும் மகிழ்ச்சியான / புன்னகையுடன் இருக்கும் முகத்தைக் கொண்டவன்

முக்தி சுகப்ரதாயக = முக்தியில் ஸ்வரூபானந்தத்தைக் கொடுப்பவன்

சுமனஸாராதித பதாம்போஜ = தேவதைகளால் பூஜிக்கப்படும் பாத கமலங்களைக் கொண்டவன்

ஸ்வப்ரகாஷ = ஸ்வயம் பிரகாஷன்

ஸ்வதந்த்ரன்,

ஸர்வக = அனைத்து இடங்களிலும் இருப்பவன்

க்‌ஷிப்ர பலதாயக = ஜீவர்களுக்கு மிக விரைவாக கர்ம பலன்களைக் கொடுப்பவன்

க்‌ஷிதீஷ = பூமிதேவியின் பதி

யதுப்ரவீர = யதுகுல ஸ்ரேஷ்டன் என்று கிருஷ்ணாவதாரத்தில் புகழ் பெற்றவன்

விதர்க்ய = தர்க்கத்தினால் அறியப்பட முடியாதவன்

விஷ்வ, தைஜஸ, ப்ராக்ஞ = இந்த மூன்று ரூபங்களையும் கொண்டவன்.

 

பத்ய அர்த்தங்களே தெளிவாக உள்ளன.

 

கா3ளினடெ3வந்த33லி நீலக4

நாளி வர்த்திஸுவந்தெ பி3ரம்ம த்ரி

ஷூலத4ர ஷக்ரார்க மொத3லாத3கி2ல தே3வக3|

கால கர்ம கு3ணாபி4மானி ம

ஹாலகுமி யனுரிஸி நடெ3ளு

மூல காரணமுக்தி தா3யக ஹரியெனிஸிகொம்ப3 ||10

 

காளி நடெவந்ததலி = காற்று அடிக்கும் திசையில்

நீலகனாளி = கார்மேகம்

வர்த்திசுவந்தெ = செல்வதைப் போல

பிரம்ம த்ரிஷூலதர = பிரம்ம, ருத்ர

ஷக்ர = இந்திரன்

அர்க்க = சூரியன்

மொதலாதகில தேவகண = இவர்களே முதலான தேவ கணத்தவர்களும்,

பரமாத்மனை அனுசரித்தே நடக்கின்றனர்.

கால, கர்ம, குணாபிமானி = இவற்றின் அபிமானி

மஹாலகுமி = ரமாதேவி

அனுசரிஸி = அனுசரித்து

நடெவளு = நடக்கிறார்

மூலகாரண = இவர்கள் அனைவருக்கும் மூல காரணன்

முக்திதாயக = முக்தியைக் கொடுப்பவன்

ஹரி எனிஸி கொம்ப = ஹரி, தானே இவற்றைக் கொடுக்கிறேன் என்கிறான்.

 

காற்று வீசும் திசையிலேயே மேகங்கள் செல்வதைப் போல, ரமா பிரம்மாதி அனைத்து தேவதைகளும், பரமாத்மன் செய்வதைப் போலவே செய்கிறார்களே தவிர, ஸ்வதந்த்ரத்துடன் செயல்களை செய்யும் சக்தி யாருக்கும் இல்லை. இங்கு மேகம் எப்படி காற்றுக்கு அதீனமோ, அப்படியே பிரம்மாதி சகலரும் பகவந்தனுக்கு அதீனர்கள் என்பது கருத்து.

 

மோட3 கைபீ3ணிகெயிந்த3லி

ஓடி2ஸுவெனெம்பு3வன யத்னவு

கூடு3வதெ3 கல்பாந்தகாத3ரு லகுமிவல்லப4னு

ஜோடு3கர்மவ ஜீவரொளு தா

மாடி3 மாடி3ஸி ப2லக3ளுணிஸு

ப்ரௌட3ராத3வரிவன ப4ஜிஸி ப4வாப்தி3 தா3டுவரு ||11

 

மோட = சூரிய ஒளியே கீழே வராதவாறு இருக்கும் மேகக் கூட்டம்

கைபீஸணிகெயிந்தலி = கையில் இருக்கும் விசிறியின் உதவியால்

ஓடிசுவெனெம்புவன யத்னவு = ஓட்டிவிடுவேன் என்று சொல்பவனின் முயற்சி

கல்பாந்தகாதரு = இந்த கல்பத்தின் முடிவே வந்துவிட்டாலும்

கூடுவதே? = கைகூடுமா?

லட்சுமி வல்லபனு = ஸ்ரீஹரி

ஜோடுகர்மவ = புண்ய பாவ என்னும் த்வந்த்வ கர்மங்களையும்

ஜீவரொளு = ஜீவர்களில் தான் இருந்து

தா மாடி மாடிஸி = தான் செய்து, அவர்களால் செய்வித்து

பலகள உணிசுவனு = பலன்களை அவர்களுக்குக் கொடுக்கிறான்.

ப்ரௌடராதவரு = ஞானிகள்

இவன பஜிஸி = இவனை வணங்கி

பவாப்தி = சம்சார சாகரத்தை

தாடுவரு = தாண்டுவார்கள்.

 

வானத்தில், சூரியனையே மூடியது போல இருக்கும் மேகக் கூட்டத்தை, தன் கையில் இருக்கும் விசிறியால் வீசி, ஓட்டிவிடுவேன் என்று சொல்பவனின் முயற்சி என்றாவது சாத்தியமாகுமா? என்றும் சாத்தியம் ஆகாது. அப்படியே அனைத்து பிரபஞ்சத்திலும் வியாபித்திருக்கும் பரமாத்மன் செய்யும் காரியங்களை பிறர் செய்ய முடியுமா? முடியாது.

 

இங்கு மேகத்தை போல அனைத்து ஜகத்தையும் வியாபித்துக் கொண்டிருப்பவை த்ரிவித ஜீவர்களின் ப்ராரப்த, ஆகாமி, சஞ்சித என்னும் கர்மங்கள். இவற்றை போக்கிக் கொள்ளும் சக்தி அஸ்வதந்த்ரனான ஜீவர்களுக்கு உண்டா? மஹா சமர்த்தனான பரமாத்மனிடமிருந்தே ஆகவேண்டும் என்பது கருத்து.

 

* மேகத்தைப் போல ஜீவனின் பிராரப்தாதி கர்மங்கள்.

* காற்றைப் போல பரமாத்மன்.

* கை விசிறியால் மேகத்தை ஓட்டுவேன் என்னும் முயற்சியைப் போல ஜீவனின் கர்த்ருத்வம்

-- என்று அறியவேண்டும்.

 

ஸ்ரீஹரி, ஜீவர்களில் இருந்து புண்ய பாபாதி கர்மங்களை செய்து செய்வித்து அவரவர்களின் யோக்யதைக்கேற்ப அவர்களுக்கு பலன்களைக் கொடுக்கிறான். இத்தகைய மஹானுபாவனை, ஞானிகள் வணங்கி, சம்சார சாகரத்திலிருந்து தப்பித்து, முக்தர்கள் ஆகின்றனர் என்பது கருத்து.

 

க்லேஷ மோஹாஞான தோ3ஷ வி

நாஷக விரிஞ்ச்யாண்ட3தொ3ளகா3

காஷதோ3பாதி3யலி தும்பி3ஹனெல்ல காலத3லி |

கா4ஸிகொ3ளிதெ3 தன்னவரனா

யா ம்ரக்‌ஷிஸுவ மஹ கரு

ணாமுத்3ர ப்ரன்ன வத3னாம்போ4ஜ வைராஜ ||12

 

க்லேஷ = துக்கம்

மோஹ = பேராசை

அஞ்ஞான,

இவை போன்ற

தோஷ வினாஷக = தோஷங்களை போக்குபவன்

விரிஞ்ச்யாண்டதொளு = பிரம்மாண்டத்தில்

ஆகாஷதோபாதியலி = ஆகாயம் எல்லா இடத்திலும் வியாபித்திருப்பதைப் போல

எல்ல காலதலி = அனைத்து காலங்களிலும் / இடங்களிலும்

தும்பிஹனு = நிலைத்திருக்கிறான்

மஹா கருணா சமுத்ரனு = கருணைக் கடலானவன்

ப்ரசன்ன வதனாம்போஜ = ப்ரசன்னனான முக கமலத்தைக் கொண்டவன்

வைராஜ = விராட் என்னும் பிரம்மாண்டமானது, பரமாத்மனுக்கு ப்ரதிமை போன்று இருப்பதால், வைராஜ என்று பெயர் பெற்றான்

இத்தகைய ஸ்ரீஹரி

தன்னவர = தன் பக்தர்களை

ஆயாசவில்லதெ = தாமதம் செய்யாமல் (உடனடியாக)

சம்ரக்‌ஷிசுவ = நன்றாக காக்கிறான்.

 

பத்ய அர்த்தங்களே தெளிவாக உள்ளன.

 

கன்னடி3ய கைபிடி3து நோள்பன

கண்ணுக3ளு கண்ட3ல்லி எரக3தெ3

தன்ன ப்ரதிபி3ம்ப3வனெ காம்பு3வ த3ர்ப்பணவ பி3ட்டு |

4ன்யரிளெயொளகெ3ல்ல கடெ3யலி

நின்ன ரூபவ நோடி3 ஸுகி2ஸு

ன்னுதிஸுதானந்த3 வாரிதி4யொளகெ3 முளுகி3ஹரு ||13

 

கன்னடிய = கண்ணாடியை

கைபிடிது = கையில் பிடித்து

நோள்பன = பார்ப்பவனின்

கண்ணுகளு = கண்கள்

கண்டல்லி எரகதெ = வேறு எங்கும் பார்க்காமல்

தன்ன பிரதிபிம்பவனெ = தன் உருவத்தையே

காம்புவ = காண்கிறான்

தன்யர் = புண்யாத்மர்

இளெயொளகெ = பூமியில்

தர்ப்பணவ பிட்டு = கண்ணாடியை விட்டு

எல்ல கடெயலி = அனைத்து இடங்களிலும்

நின்ன ரூபவ நோடி = உன் ரூபத்தையே பார்த்து

சுகிசுத = சுகப்பட்டு

சன்னுதிசுத = நன்றாக ஸ்தோத்திரம் செய்தவாறு

ஆனந்த வாரிதியொளகெ = மகிழ்ச்சிக் கடலில்

முளுகிஹரு = மூழ்குவார்கள்.

 

கையில் கண்ணாடியைப் பிடித்து பார்த்தால், நம் கண்கள் கண்ட இடத்தில் பாயாமல், அதில் தெரியும் நம் பிரதிபிம்பத்தை மட்டுமே பார்க்கும். இப்படி சாதாரண மக்களான நாம், கண்ணாடியில் தெரியும் நம் பிரதிபிம்பத்தை பார்த்து மகிழ்கிறோம்.

 

ஆனால், உன் ஏகாந்த பக்தர்கள், கண்ணாடி இல்லாமலேயே, அனைத்து இடங்களிலும் வியாப்தனான, பிம்ப ரூபியான உன் ரூபத்தை, எங்கு வேண்டுமோ அங்கு பார்த்து, மகிழ்ச்சி அடைந்தவாறு, ஸ்தோத்திரம் செய்தவாறு, மகிழ்ச்சிக் கடலில் மூழ்குகின்றனர். ஆஹா, அவர்கள் எத்தகைய தன்யர்கள்!!.

 

அன்னமானி ஷஷாங்கனொளு கா

ருண்யஸா3ர கேஷவனு பர

மன்னதொ3ளு பா4ரதியு நாராயணனு ப3க்‌ஷ்யதொ3ளு

ஸொன்னக3தி3ரனு மாத4வனு ஸ்ருதி

ன்னுதளு ஸ்ரீலக்‌ஷ்மி க்4ருததொ3ளு

மன்ய கோ3விந்தா3பி33னு இருதிப்பரெந்தெ3ந்து3 ||14

 

அன்னமானி = அன்னத்திற்கு அபிமானி

ஷஷாங்க = சந்திரன்

ஷஷாங்கனொளு = சந்திரனில்

காருண்யசாகர = கருணா சமுத்திரனான

கேஷவனு = கேசவ மூர்த்தியை சிந்திக்க வேண்டும்.

பரமான்னதொளு = பாயசத்தில்

பாரதியு = பாரதி தேவியும் அவரில்

நாராயணனு = நாராயணனை சிந்திக்க வேண்டும்

பக்‌ஷ்யதொளு = பக்‌ஷ்யத்தில்

சொன்னகதிரனு = ஹிரண்ய ரஷ்மி என்னும் சூரியனையும் அவனில்

மாதவனு = மாதவனை சிந்திக்க வேண்டும்

ஸ்ருதிசன்னுத = அம்ப்ரிணி சூக்த, ஸ்ரீசூக்த முதலான ஸ்ருதிகளால் புகழப்படும் ரமாதேவி

க்ருததொளு = நெய்யில்

அவரில், லோகமான்யரான

கோவிந்தாபிதனு = கோவிந்த நாமக ஸ்ரீபரமாத்மன்

இருதிப்பரெந்தெந்து = இருக்கிறான் என்று சிந்திக்க வேண்டும்.

 

* அன்னாபிமானி சந்திரன். அவனில் கேசவ மூர்த்தியை சிந்திக்க வேண்டும்.

* பாயசத்திற்கு அபிமானி பாரதிதேவி. அவரில் நாராயண மூர்த்தியை சிந்திக்க வேண்டும்.

* பக்‌ஷ்யாபிமானி சூரியன். அவனில் மாதவ மூர்த்தியை சிந்திக்க வேண்டும்.

* நெய்க்கு அபிமானி லட்சுமிதேவி. அவரில் கோவிந்த மூர்த்தியை சிந்திக்க வேண்டும்.

 

அன்னாபிமானி சந்த்ரஸ்து விசிந்த்யஸ்தத்ர கேஷவ:இத்யாதி சத்தத்வ ரத்ன மாலா என்னும் கிரந்தத்தின் ஆதாரம் இவற்றிற்கு மூலம் என்று அறியவேண்டும்.

 

க்‌ஷீரமானி ரஸ்வதி ஜக

த்ஸாரவிஷ்ணுவ சிந்திஸுவது3

ரோருஹாஸன மண்டிகெ3யொளிருதிப்ப மது4வைரி |

மாருதனு நவனீததொ3ளு

ம்ப்ரேரக த்ரிவிக்ரமனு த3தி4யொளு

வாரினிதி4 சந்த்3ரமரொளகெ3 இருதிப்ப வாமனனு ||15

 

* பால்க்கு அபிமானி சரஸ்வதி. அவரில் விஷ்ணு மூர்த்தியை சிந்திக்க வேண்டும்.

* மண்டிகைக்கு அபிமானி பிரம்மதேவர். அவரில் மதுசூதனனை சிந்திக்க வேண்டும்.

* வெண்ணைக்கு அபிமானி வாயுதேவர். அவரில் த்ரிவிக்ரமனை சிந்திக்க வேண்டும்.

* தயிருக்கு அபிமானி வருண, சந்திரன். அவர்களில் வாமனமூர்த்தியை சிந்திக்க வேண்டும்.

 

3ருட ஸூபகெமானி ஸ்ரீஸ்ரீ

4ரனு தே3வனு பத்ரஷாக2கெ

வரவெனிப மித்ராக்2ஸூர்ய ஹ்ருஷீகபனமூர்த்தி |

உரக3ராஜனு ப2ஸுஷாககெ

வரவெனிஸுவனு பது3மனாப4

ஸ்மரிஸி பு4ஞ்சிஸுதிஹரு ப3ல்லவரெல்ல காலத3லி ||16

 

சூபகெ = பருப்பிற்கு

மானி = அபிமானி

கருடன், அவனில் ஸ்ரீ ஸ்ரீதரனை சிந்திக்க வேண்டும்.

பத்ரஷாககெ = இலைகளைக் கொண்ட கீரை வகைகளுக்கு

மித்ராக்யசூர்ய = அபிமானி மித்ர நாமக சூரியன்

அவனில்,

ஹ்ருஷீகபனமூர்த்தி = ஹ்ருஷிகேச மூர்த்தியை சிந்திக்க வேண்டும்

பலசுஷாககெ = இலையில்லா காய்கறிகளுக்கு (வாழை)

உரகராஜனு = சேஷதேவர்

வரனெனிஸுவனு = அபிமானி என்கிறார்கள்

அவனில், பத்மனாப மூர்த்தியை சிந்திக்க வேண்டும்

ஸ்மரிஸி = சிந்தித்து

பல்லவரு = அனைத்தும் அறிந்த ஞானிகள்

எல்ல காலதலி = அனைத்து காலங்களிலும்

புஞ்சிஸுதிஹரு = உண்பார்கள்

 

* பருப்பிற்கு அபிமானி கருடன். அவனில் ஸ்ரீதர மூர்த்தியை சிந்திக்க வேண்டும்.

* கீரை வகைகளுக்கு அபிமானி மித்ர நாமக சூரியன். அவனில் ஹ்ருஷிகேசனை சிந்திக்க வேண்டும்.

* வாழைக்காய் முதலான காய்கறிக்கு சேஷதேவரே அபிமானி. அவனில் பத்மனாப மூர்த்தியை சிந்திக்க வேண்டும்.

 

இப்படியாக சிந்தித்தவாறு உண்ண வேண்டும் என்பது கருத்து.

 

கௌரி ர்வாம்ஸ்த2ளெனிபளு

ஷௌரி தா3மோத3ரன திளிவுது3

கௌரிப அனாம்லஸ்த ங்கருஷணன சிந்திபுது3 |

ஸார ஷர்க்கர கு33தொ3ளகெ3 வ்ரு

த்ராரி இருதிஹ வாஸுதே3வன

ஸூரிக3ளு தே4னிபரு பரமாத3ரதி3 ர்வத்ர ||17

 

கௌரி = பார்வதி தேவி

ஸர்வாம்யஸ்தளெனிபளு = புளிப்பு பதார்த்தங்களுக்கு அபிமானி எனப்படுகிறாள்

அவரில் ஷூர வம்சத்தில் பிறந்து, கிருஷ்ணன் என்னும் பெயரில், தாயான யசோதையால் இடுப்பில் கயிறால் கட்டப்பட்டதால், தாமோதரன் என்ற பெயர் பெற்ற மூர்த்தியை சிந்திக்க வேண்டும்.

கௌரிப = கௌரிபதியான ருத்ரதேவர்.

அன்னாம்லஸ்த = புளி இல்லாத பதார்த்தங்களுக்கு அபிமானி

அவரில் சங்கர்ஷணனை சிந்திக்க வேண்டும்.

ஸார ஷர்க்கர குடதொளகெ = சர்க்கரை முதலான இனிப்பு பதார்த்தங்களில்

வ்ருத்ராரி இருதிஹ = தேவேந்திரன் இருக்கிறான்

அவனில், வாசுதேவ மூர்த்தியை

ஸூரிகளு = ஞானிகள்

பரமாதரதி = மிகவும் பக்தியுடன்

சர்வத்ர = அனைத்து இடங்களிலும்

தேனிபரு = தியானம் செய்வார்கள்.

 

* பார்வதி தேவியர், புளிப்பு பதார்த்தங்களுக்கு அபிமானி எனப்படுகிறார். அவரில் தாமோதர மூர்த்தியை சிந்திக்க வேண்டும்.

* புளி இல்லாத பதார்த்தங்களுக்கு அபிமானி ருத்ரதேவர். அவரில் சங்கர்ஷண மூர்த்தியை சிந்திக்க வேண்டும்.

* சர்க்கரை, வெல்லம் முதலான இனிப்பு பதார்த்தங்களுக்கு அபிமானி தேவேந்திரன். அவனில் வாசுதேவ மூர்த்தியை சிந்திக்க வேண்டும்.

 

ஸ்மரிஸு வாசஸ்பதிய ஸோ

ஸ்கரதொ3ளகெ3 ப்ரத்4யும்னனிப்பனு

நிரயபதி யமத4ர்ம கடுத்3ரவ்யதொ3ள க3னிருத்த4 |

ரஷபதி ஸ்ரீராமடேலதி3

ஸ்மரன ஸ்ரீபுருஷோத்தமன க

ர்புரதி3 சிந்திஸி பூஜிஸுதலிரு பரமப4கு3தி1யலி ||18

 

வாசஸ்பதிய = பிருஹஸ்பத்யாசார்யரை

ஸோபஸ்கரதொளகெ = சமையலுக்குத் தேவையான பதார்த்தங்களில் சிந்திக்க வேண்டும்.

அவரில், பிரத்யும்னனை சிந்திக்க வேண்டும்.

கடுத்ரவ்யதொளகெ = கசப்புப் பொருட்களில்

நிரயபதி யமதர்ம = நரகத்திற்கு அதிபதியான யமதர்மனும், அவனில் அனிருத்த மூர்த்தியை சிந்திக்க வேண்டும்.

நரஷப = கடுகு

ஸ்ரீராமட = பெருங்காயம்

ஏளதி = ஏலக்காய்

கர்புரதி = கற்பூரம் இந்த நான்கிலும்

ஸ்மரன = மன்மதனையும், அவனில் புருஷோத்தமனையும் சிந்திக்க வேண்டும்.

பரமபகுதியலி = இவ்வாறு சிந்தனை செய்தவர்களை பரம பக்தியுடன்

பூஜிஸுதலிரு = பூஜித்துக் கொண்டிரு.

 

* சமையலுக்குத் தேவையான பதார்த்தங்களில் ப்ருஹஸ்பதியையும், அவரில் பிரத்யும்ன மூர்த்தியை சிந்திக்க வேண்டும்.

* கசப்புப் பொருட்களில் யமதர்மனையும் அவனில் அனிருத்த மூர்த்தியையும் சிந்திக்க வேண்டும்.

* கடுகு, பெருங்காயம், ஏலக்காய், கற்பூரம் இந்த நான்கிலும் மன்மதனையும், அவனில் புருஷோத்தம ரூபியையும் பரம பக்தியுடன் சிந்தித்து பூஜிக்க வேண்டும்.

 

நாலிகி3ந்தலி ஸ்வீகரிப ரஸ

பாலு மொத3லாது33ரொளகெ3 க்4ருத

தைலபக்வ பதார்த்த2தொ3ளகி3ஹ சந்த்ரனந்த3னன |

பாலிஸுவ தோ3க்‌ஷஜன சிந்திஸு

ஸ்தூ2ல கூஷ்மாண்ட தில மாஷஜ

ஈ லலிதப4க்‌ஷ்யதொ3ளு த3க்‌ஷனு லக்‌ஷ்மி நரசிம்ஹ ||19

 

நாலிகிந்தலி = நாக்கினால்

ஸ்வீகரிப = ஏற்றுக் கொள்ளும்

ரஸ பாலு மொதலாதுதரொளகெ = திரவங்கள், பால் முதலானவற்றில்

க்ருத = நெய்

தைல = எண்ணெய் இவற்றால்

பக்வ பதார்த்ததொளகெ = சமையல் செய்த பக்‌ஷங்களில்

இஹ = இருக்கிறான்

சந்திர நந்தனன = புதன். அவனை

பாலிஸுவ = அவனில் இருந்து காப்பாற்றுபவர் அதோக்‌ஷன்

சிந்திஸு = சிந்தித்திரு

ஸ்தூல கூஷ்மாண்ட = பூசணி

தில = எள்

மாஷஜ = உளுந்து இவற்றால் செய்யப்பட்ட

லலித பக்‌ஷதொளு = பதார்த்தங்களில்

தக்‌ஷனு = தக்‌ஷப்ரஜேஸ்வரனையும்

அவனில்

லட்சுமி நரசிம்ம ரூபத்தையும் சிந்திக்க வேண்டும்.

 

பற்களால் கடிக்காமல், நாக்கினால் சுவைத்து உட்கொள்ளும் / குடிக்கும் சாறு, பால் முதலானவற்றிற்கும், நெய், எண்ணெயினால் சமைத்த பதார்த்தங்களுக்கும் அபிமானி புதன். அவனில் அதோக்‌ஷஜ ரூபத்தை சிந்திக்க வேண்டும்.

 

பூசணி, எள், உப்பு, இவற்றால் சமைக்கப்பட்ட அப்பளம் முதலானவற்றிற்கு அபிமானி தக்‌ஷ ப்ரஜேஸ்வரன். இவனில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம மூர்த்தியை சிந்திக்க வேண்டும்.

 

மனுவ மாஷஸு4க்‌ஷ்யதொ3ளு சி

ந்தனெய மாட3ச்யுதன நிர்ருதி

மனெ எனிப லவணதொ3ளு மரெயதெ3 ஸ்ரீஜனார்த்த3னன |

நெனெயுதிரு ப2லர3ளொளு ப்ரா

ணன உபேந்த்3ரன வீள்யதெ3லெயொளு

த்3யுனதி3 ஹரிரூபவனெ கொண்டா3டு3தலி ஸுகி2ஸுதிரு ||20

 

மாஷசுபக்‌ஷதொளு = உளுத்தம் பருப்பினால் செய்யப்பட்ட பதார்த்தங்களில்

மனுவு = ஸ்வாயம்புவ மனுவையும்,

அவனில், அச்யுதனையும் சிந்திக்க வேண்டும்.

நிரருதி = நிரருதியின்

மனெயெனிப = வசிப்பிடமாக இருக்கும்

லவணதொளு = உப்பில்

ஸ்ரீஜனார்த்தன = ஜனார்தன மூர்த்தியை

மரெயரெ நெனெயுதிரு = மறக்காமல் நினைக்க வேண்டும்.

பலரஸகளொளு = பழச்சாறுகளில்

ப்ராணன = ப்ராணனை

அவனில், உபேந்திரனையும் சிந்திக்க வேண்டும்.

வீள்யதெலெயொளு = வெற்றிலையில்

த்யுனதி = கங்கையையும்

அவளில், ஹரிரூபத்தையும்

கொண்டாடுதலி = கொண்டாடி

சுகிசுதிரு = மகிழ்ந்திரு.

 

* வடை முதலான உளுந்து பக்‌ஷங்களில் ஸ்வாயம்புவ மனுவையும் அவனில் அச்யுத மூர்த்தியையும் சிந்திக்க வேண்டும்.

* உப்பில் நிரருதியையும் அவனில் ஜனார்த்தன மூர்த்தியையும் சிந்திக்க வேண்டும்.

* பழச்சாறுகளில் பஞ்சபிராணர்களில் ஒருவரான ப்ராணனையும் அவரில் உபேந்திரனையும் சிந்திக்க வேண்டும்.

* வெற்றிலையில் கங்கையையும் அவளில் ஹரியையும் சிந்திக்க வேண்டும்.

 

இப்படியாக சிந்தித்து, இவர்களை கொண்டாடி மகிழ்ந்திருக்க வேண்டும்.

 

வேத3வினுதகெ3 பு33னு ஸுஸ்வா

தோ33காதி4பனெனிஸி கொம்ப3னு

ஸ்ரீத4 க்ருஷ்ணன திளிது3 பூஜிஸுதிரு நிரந்தரதி3 |

ஸாது3கர்மவ புஷ்கரனு ஸுனி

வேதி3த பதா3ர்த்த23ள ஷுத்தி3

கை3து3கெ3ய்ஸுத ஹம்ஸ நாமகக3ர்ப்பிஸுதலிப்ப ||21

 

வேதவினுதகெ = வேதங்களால் புகழப்படும் ஸ்ரீஹரிக்கு

புதன்

சுஸ்வாதோதகா திபனெனிஸி = உத்தமமான சுவையான நீருக்கு அபிமானி எனப்படுகிறான். அவனில்,

ஸ்ரீத = ஐஸ்வர்யபிரதனான ஸ்ரீகிருஷ்ணனை சிந்தித்து

நிரந்தரதி பூஜிசுதிரு = நிரந்தரமாக பூஜிக்க வேண்டும்.

ஸாதுகர்மவ = புண்ய கர்மங்களுக்கு அபிமானியான

புஷ்கரனு,

சுனிவேதித பதார்த்தகள = நைவேத்தியத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் பதார்த்தங்களை

ஷுத்திய கெய்து = பரிசுத்தம் ஆக்கி

கைஸுத = மேலும் அதிக சுத்திக்காக

ஹம்ஸ நாமககர்ப்பிசுதலிப்ப = ஹம்ஸ நாமக பரமாத்மனுக்கு சமர்ப்பணம் செய்கிறான்.

 

தூய்மையான சுவையான நீருக்கு அபிமானி புதன். அங்கு ஸ்ரீகிருஷ்ணனை சிந்திக்க வேண்டும். கர்மாபிமானியான புஷ்கரன், நைவேத்தியத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் பதார்த்தங்களை பரமாத்மனுக்காக, சுத்தி செய்து, மேலும் அதிக சுத்திக்காக அவற்றை ஹம்ஸ நாமக பரமாத்மனுக்கு அர்ப்பிக்கிறான். அதாவது, மற்றவர்கள் சமைத்த சமையலை சுத்தம் செய்யும் செயல் புஷ்கரனுடையது. அங்கு ஹம்ஸ நாமக பரமாத்மன் இருக்கிறான் என்று கருத்து.

 

ரதி கலஸுஸ்வாது33

பதியெனிஸுவளு அல்லி விஷ்வனு

ஹுதவஹன சுல்லிக3ளொளகெ3 பா4ர்க்க3வன சிந்திபுது3 |

க்‌ஷிதிஜ கோ3மய ஜாதி4யொளு ம்

ஸ்தி2த வந்தன ருஷப4தே3வன

துதிஸுதிரு ந்தத தா3 த்ப4க்தி3பூர்வகதி3 ||22

 

ரதி = ரதி தேவி

சகல ஸுஸ்வாது ரசகள = அனைத்து சுவையான சாறுகளுக்கு

பதி எனிஸுவளு = அபிமானி எனப்படுகிறாள்

அல்லி = அங்கு

விஷ்வனு = விஷ்வமூர்த்தியை சிந்திக்க வேண்டும்

ஹுதவஹன = அக்னி

சூலியொளகெ = அடுப்புகளில்

அவனில்

பார்க்கவன = பரசுராமதேவரை சிந்திக்க வேண்டும்

க்‌ஷிதிஜ = பூமியில் பிறக்கும் மரங்கள் / செடிகள்

மற்றும்

கோமயஜாதியொளு = சாணத்திலிருந்து ஆகும் வறட்டிகள், இவையே முதலானவற்றில்

சம்ஸ்தித = இருக்கும்

வஸந்தன = வசந்தனை

அவனில்

ருஷபதேவன = ரிஷப தேவனை

சந்தத = இடைவிடாமல்

சதா = எப்போதும்

சத்பக்திபூர்வகதி = பக்தியுடன்

துதிஸுதிரு = ஸ்தோத்திரம் செய்து கொண்டிரு.

 

அனைத்து சுவையான சாறுகளுக்கு அபிமானி ரதிதேவி. அங்கு விஷ்வமூர்த்தியை சிந்திக்க வேண்டும். சமையல் செய்யும் அடுப்புகளின் அபிமானி அக்னி. அங்கு பரசுராம மூர்த்தியை சிந்திக்க வேண்டும். கட்டை, வறட்டி ஆகியவற்றின் அபிமானி வசந்தன். அங்கு ரிஷப தேவரை சிந்திக்க வேண்டும்.

 

பாககர்த்ருக3ளொளு சதுர்த3

லோகமாதெ மஹாலகுமி க3

ஷோக2 விஷ்வம்ப4ரன திளிவது3 எல்லகாலத3லி |

சௌ3ஸுத்த4 ஸுமண்ட3லதி3 பூ4

ஸூகராஹ்வய உபரிசைலப

ஏக33ந்த னத்குமாரன தே3னிபரு பு43ரு ||23

 

பாக கர்த்ருகளொளு = சமையல் செய்பவர்களில்

சதுர்தஷ லோகமாதெ = 14 உலகங்களுக்கு தாயான

மஹாலகுமி = மஹாலட்சுமி தேவியை

அவரில்

கதஷோக = சோகம் இல்லாதவனான

விஷ்வம்பரன = விஷ்வம்பர மூர்த்தியை

எல்லகாலதலி = அனைத்து காலங்களிலும்

சிந்திக்க வேண்டும்.

சௌகஷுத்தி சுமண்டலதி = (நைவேத்தியத்திற்காக பொருட்கள் வைக்கப்படும்) சதுர மண்டலத்தில்

பூ = பூமி தேவியை

அங்கு

ஸூகராஹ்வய = வராஹ தேவரையும் சிந்திக்க வேண்டும்

உபரிசைலப = நைவேத்தியத்திற்கு மேல் போர்த்தப்படும் வஸ்திரத்தில்

ஏகதந்த = விநாயகன்

அவனில்

ஸனத்குமாரன = பிரம்மதேவரின் மக்களான சனகாதிகள் அல்லாத, பரமாத்மனின் அவதாரமான சனத்குமார மூர்த்தியை

புதரு = ஞானிகள்

தேனிபுது = தியானம் செய்யவேண்டும்.

 

சமையல் செய்பவரில் ரமாதேவியையும், அவரில் விஷ்வம்பர மூர்த்தியையும் சிந்திக்க வேண்டும். நைவேத்தியத்தை வைப்பதற்காக போட்டிருக்கும் சதுர மண்டலத்தில் பூமிதேவியையும் அவளில் வராஹ மூர்த்தியையும் சிந்திக்க வேண்டும். நைவேத்திய பதார்த்தங்களின் மேல் மூடியிருக்கும் வஸ்திரத்தில் கணபதியையும், அவனில் சனத்குமார மூர்த்தியையும் அறியவேண்டும்.

 

சனத்குமாரர் பிரம்மதேவரின் மக்களான நால்வரில் சனத்குமாரர் வேறு, பாகவத 1ம் ஸ்கந்த 3ம் அத்தியாயத்தில்:

 

ஸ ஏவ ப்ரதமம் தேவ: கௌமாரம் ஸர்க்கமாஸ்தித: ||

சசார துஷ்சரம் பிரம்மா பிரம்மசர்ய மகண்டிதம் ||6

 

அதுவே பத்பனாப ரூபியான ஸ்ரீநாராயணனின் முதலாம் அவதாரம். சனத்குமாரர் என்று பிராமணனாக இருந்து அகண்டமான பிரம்மசர்யத்தை ஏற்றார் என்று சொல்லியிருக்கும் பகவத் அவதாரமான சனத்குமாரனை சிந்திக்க வேண்டும் என்பது கருத்து.

 

ஸ்ரீனிவான போ4க்யவஸ்து2

காணகொட33ந்த33லி விஷ்வ

க்ஸேன பரிகாரூபனாகி3ஹனல்லி புருஷாக்2|

தானெ பூஜக பூஜ்யனெனிஸி நி

ஜானுக3ந்தெயிப கு3ரு பவ

மானவந்தி3ர்வகாலக3ளல்லி ர்வேஷ ||24

 

ஸ்ரீனிவாசன = ஸ்ரீனிவாசன்

போக்யவஸ்துவ = உண்பதற்குத் தகுதியான பதார்த்தங்களை

காணகொடதந்ததலி = இன்னொருவருக்கு தெரியாதவாறு

விஷ்வக்சேன = வாயு புத்ரனான விஷ்வக்சேனன்

பரிகா ரூபனாகிஹனு = சுற்றிலும் பிரகாரமாக இருக்கிறான்

அல்லி = அவனிடம்

புருஷாக்யா = புருஷ நாமகனை சிந்திக்க வேண்டும்

குருபவமான வந்தித = நம் முக்கிய குருகளான வாயுதேவரால் நமஸ்காரம் பெற்றுக்கொண்ட

ஸர்வேஷ = அனைவருக்கும் ஈஸ்வரனான ஸ்ரீஹரி

ஸர்வ காலகளல்லி = அனைத்து காலங்களிலும்

தானே பூஜகனாகி = பூஜிப்பவனாகவும்

பூஜ்யனெனிஸி = பூஜிக்கப்படுபவனாகவும் இருக்கிறான் என்று சிந்தித்து வணங்கும்

நிஜானுகர = உண்மையான பக்தர்களை

ஸந்தெயிப = காக்கிறான்.

 

பரமாத்மனுக்கு நைவேத்தியத்திற்கு வைத்திருக்கும் பதார்த்தங்களை, வேறு யாரும் பார்க்காதவாறு, விஷ்வக்ஸேனர், நைவேத்தியத்தை சுற்றியும் பிராகாரத்தைப் போல இருக்கிறார். அவரில் புருஷ ரூபியை சிந்திக்க வேண்டும். இப்படியாக பரமாத்மன், ஒருவரில் இருந்து பூஜிப்பவராகவும், இன்னொருவரில் பூஜையை ஏற்றுக் கொள்பவராகவும் இருந்து, அனைத்து காலங்களிலும், தன் பக்தர்களை காக்கிறான்.

 

நூதன மீசீன ஸுஸோ

பேத ஹ்ருத்3ய பதார்த்த2தொ3ளு விதி4

மாதெ தத்தத் ர3ளொளு ரரூப தானாகி3 |

ப்ரீதிப3டி3ஸுத நித்யதி3 ஜக3

ந்னாத2விட2லன கூடி3 தா நி

ர்பீ4தளாகி3ஹளெந்த3ரிது3 நீ ப4ஜிஸி ஸுகி2ஸுதிரு ||25

 

நூதன = புதிதாகவும்

சமீசீன = யோக்யமானதாகவும்

ஸுரஸோபேத = உத்தமமான சுவையுடன் கூடிய

பதார்த்ததொளு = பதார்த்தங்களில்

விதிமாதெ = பிரம்மதேவரின் தாயான ரமாதேவி

தத்தத் ரஸகளொளு = அந்தந்த சுவைகளில், சுவையின் ரூபமாக

நித்யதி = தினந்தோறும்

ப்ரீதி படிசுத = தன் கணவனான பரமாத்மனை திருப்திப்படுத்துகிறாள்

ஸ்ரீஜகன்னாதவிட்டலன

கூடி = அவனுடனே இருந்து

தா = தான்

நிர்பீதளாகிஹளெந்து = பயப்படாமல் இருக்கிறாள் என்பதை

அரிது = அறிந்து

நீ பஜிஸி = வணங்கி

சுகிசுதிரு = மகிழ்ச்சி கொள்.

 

புதியதாகவும், உத்தமமாகவும், மிகச்சிறந்த சுவைகளால் நிரம்பியும் இருக்கும் பதார்த்தங்களில் ரமாதேவியர் அந்தந்த சுவைகளில் தானே சுவையின் ரூபமாக இருந்து, ஸ்ரீஹரியை திருப்திப்படுத்தியவாறு, பரமாத்மனுடன் பிரியாமல் சேர்ந்திருந்து, பயப்படாமல் இருக்கிறாள் என்று அறிந்து, ஸ்ரீஜகன்னாதவிட்டலனை வணங்கியவாறு மகிழ்ச்சியோடு இரு.

 

நைவேத்திய சமர்ப்பண சந்தி என்னும் 31ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் நிறைவுற்றது.

 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

 

***

No comments:

Post a Comment