ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, September 1, 2020

27 - அனுக்ரமணிகா தாரதம்ய சந்தி

 

பாவபிரகாசிகை : சந்தி 27 : அனுக்ரமணிகா தாரதம்ய சந்தி

 

ஹரிகதா2ம்ருதசார கு3ருக3

கருணதிந்தா3பநிது பே1ளுவே

பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

 

 

முன்னர், குணதாரதம்ய சந்தி, ப்ருஹத் தாரதம்ய சந்தி, ஆரோகண தாரதம்ய சந்தி என்று மூன்று தாரதம்ய சந்திகளையும் மற்றும் அவரோகண, அனுக்ரமணிகா தாரதம்ய சந்திகளையும் இயற்றியிருக்கிறார். மேலும் பின்னர் அணுதாரதம்ய சந்தி என்றும் 19ம் சந்தி வருகிறது. இப்படியாக ஒரே தாரதம்ய விஷயத்தை 6 சந்திகளில் சொல்லியிருப்பதால், புனருக்தி தோஷம் (சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுதல்) இருப்பதாக நினைக்கக்கூடாது.

 

புன:புன: கதாம்ப்ரூயு: அப்யாஸா துத்தமம் பலம்என்ற பாகவத வாக்கியத்திற்கேற்ப ஒன்றுக்கு நான்கு முறை சொன்னால் மனதில் நிலைத்திருக்கும், நன்றாக புரியும் என்பதே பொருள். மறுபடி மறுபடி சொல்வதால், நற்பலன்களும் அதிகம் கிடைக்கும் என்பது நோக்கம். குண தாரதம்யத்தில் யாரைவிட யார் எவ்வளவு குணங்கள் குறைவு என்று அவரோகணமாக கூறியிருக்கிறார். ஆரோகணம் என்றால் கீழிருந்து மேல் போவது. அவரோகணம் என்றால் மேலிருந்து கீழ் இறங்குவது.

 

பிறகு, ப்ருஹத் தாரதம்யத்தில், தாரதம்யத்தை மிகவும் விளக்கமாக அவரோகண முறையிலேயே சொல்லியிருக்கிறார். இந்த இரண்டும் அவரோகணமாக இருப்பதால், ஆரோகண வழியை தெரிவிப்பதற்காக இன்னொரு சந்தியை செய்தார். இவை

அனைத்தையும் படித்து, தாரதம்ய ஞானத்தை பெற்றாலும், தினந்தோறும் இவர்கள் அனைவரையும் தாரதம்யத்தின்படி வணங்கினால், கிரந்தமும் மனப்பாடமாகி நித்ய பாராயணம் செய்வதற்கும், ப்ருஹத் தாரதம்ய என்பது மிகப்பெரிய சந்தியாக இருப்பதால், லௌகிக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அதை தினமும் படிப்பதென்பது கஷ்டம் என்று நினைத்து, நித்ய பாராயணத்திற்காக, அவரோகண வழியில் சுருக்கமாக 7 பத்யங்களில் தாரதம்யத்தை சொல்லியிருக்கிறார்.

 

சந்தியின் நோக்கம்:

 

மானுஷோத்தம பிடி3து3 ஸங்கரு

ஷணன பரியந்தரதி3 பேளிரு

வனுக்ரமணிகெய பத்3யவனு கேளுவரு சஜ்ஜனரு ||

 

ஸ்ரீமதா3சார்யர மதா2னுக3

தீ4மதாம் வரரங்க்4ரி க1மலகெ

ஸோமபானார் ஹரிகெ3 தாத்விக தே3வதாக3ணகெ |

ஹைமவதி ஷ2ண்மஹிஷியர பத3

வ்யோம கேஷகெ3 வாணி வாயு

தா1ம ர4வ லகுமி நாராயணரி கா3னமிபெ ||1

 

ஸ்ரீமன் மத்வாசார்யரின் மதத்தை பின்பற்றுபவரான,

தீமதாம்வரரங்க்ரி கமலகெ = ஞானிகளான மானுஷோத்தமரிலிருந்து கர்மதேவதை வரை இருக்கும் அனைவரின் பாத கமலங்களுக்கு,

சோமபானார்ஹரிகெ = சோமபானம் குடிக்கத் தகுதியானவர்கள் 100 பேர். இதில் மேல் வகுப்பை சேர்ந்த இந்திராதி 15 பேர்களை விட்டு; உக்தசேஷ சதஸ்தர் என்று 85 பேர் உள்ளனர். அவர்களின் பாதங்களுக்கும்

தாத்விக தேவதாகணக்கெ = தத்வாபிமானி தேவதைகளுக்கு

பார்வதி முதலான மூவருக்கு, கிருஷ்ணனின் மஹிஷியர் ஜாம்பவதி முதலான 6 பேருக்கு,

வ்யோமகேஷகெ = ருத்ரதேவருக்கு

வாணி = சரஸ்வதி பாரதியருக்கு

வாயுதேவருக்கு,

தாமரசபவ = தாமரையில் பிறந்தவரான பிரம்ம தேவருக்கு

லட்சுமிதேவியருக்கு, நாராயண இவர்கள் அனைவரையும், மனதால், உடலால், செயலால் வணங்குவேன்.

 

ஸ்ரீமதாம்வர ஸ்ரீபதே1

த்காமித ப்ரத3 ஸௌம்ய த்ரிககு

த்தா4ம த்ரிசதுஷ்பாத3 பாவனசரித சார்வங்க3 |

கோ3மதீ ப்ரிய கௌ3ண கு3ருதம

ஸாமகா3யன லோல ர்வ

ஸ்வாமி மமகுல தெ3ய்வ ந்தெயிஸுவுது3 சஜ்ஜனர ||2

 

ஸ்ரீமதாம்வர = செல்வந்தரான, சத்யலோகாதிபதியான பிரம்மதேவர் முதலானவர் களைவிட சிறந்த செல்வந்தரான,

சத்காமிதப்ரத = சஜ்ஜனர்களின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றுபவரான

சௌம்ய = நல்ல பழக்கமுள்ள

த்ரிகக்குத்தாம = ஸ்வேதத்வீப, அனந்தாசன, வைகுண்ட என்னும் சிறந்த மூன்று இடங்களைக் கொண்ட

 

த்ரி = அக்னி அந்தர்யாமியாகி அக்னி ரூபத்தினால், ப்ராதஸ்ஸவன, மாத்யஸ்ஸவன, சாயம்சவன என்ற மூன்று ரூபங்களைக் கொண்ட, ‘சத்வாரி ஸ்ருங்காஸ் த்ரயோஸ்ய பாதா:என்னும் வேத மந்திரத்திலிருந்து, மூன்று பாதங்களைக் கொண்டவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

 

சதுஷ்பாத = இங்கு பாதம் என்றால் அம்சம் என்று பொருள். பாதோஸ்ய விஸ்வாபூதானி த்ரிபாதஸ்யா ம்ருதம்திவிஎன்று சொல்வதைப்போல, இந்த உலகத்தில் உள்ள அனைத்து பிராணிகளும் ஒரு பாதம் அதாவது பரமாத்மனின் பின்னாம்சம் என்று பொருள். மற்ற 3 பாதங்கள் பாதாஸ்த்ரயோ பஹிஸ்வார்ஸஎன்னும் பாகவத வசனத்தைப் போல, அனந்தாசன, வைகுண்ட, நாராயண என்னும் மூன்று பாதங்கள் பிரம்மாண்டத்திற்கு வெளியே இருக்கிறது. இங்கு பாதம் என்றால் ஸ்வரூப- அம்சம் என்று பொருள். ஆகையால், பரமாத்மனுக்கு சதுஷ்பாதம் என்று பொருள்.

 

பாவனசரித = பவித்ரமான கதைகளை உள்ளவன். அவனின் மகிமைகள், கேட்பவர்கள், படிப்பவர்களை பவித்ரராக மாற்றும் என்று பொருள்.

சார்வங்க = அழகான உடற்பாகங்களைக் கொண்டவர்.

கோமதிப்ரிய = கோமதி ஆற்றங்கரையில் ஸ்ரீகிருஷ்ணனின் கோயில் ஒன்று உள்ளது. அங்கு ஸ்ரீகிருஷ்ணனின் விசேஷ சன்னிதானம் இருந்து, அந்த ஆற்றில் குளிப்பவர்களுக்கு முக்தியை கொடுக்கிறது என்று புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பாகவத 1ம் ஸ்கந்தம், 1ம் அத்தியாயம், 4ம் ஸ்லோகம் இப்படி சொல்கிறது.

 

பிரம்மஞானேன வா முக்தி: ப்ரயாகமரணேனவா ||

அதவா ஸ்னான மாத்ரேண கோமத்யாம் கிருஷ்ண சன்னிதௌ ||

 

முக்தி வேண்டுமெனில் பிரம்மஞானம் பெற்றால் கிடைக்கும் அல்லது பிரயாகையில் கங்கா யமுனையின் சங்கமத்தில் தேகதியாகம் செய்தாலும் கிடைக்கும். அல்லது கிருஷ்னனின் சன்னிதானத்தில் கோமதி ஆற்றங்கரையில் குளித்தால் மட்டும் போதும் என்று, பிரயாக மரணத்திற்கு சமமாக கோமதி ஆற்றுக் குளியலின் நற்பலனை குறிப்பிடுகின்றார்.

 

அதற்கு கோமத்யாம் கிருஷ்ண சன்னிதௌஎன்று கிருஷ்ண சன்னிதானத்தின் மகிமையே காரணம் என்கிறார். இதிலிருந்து, கிருஷ்ணனுக்கு கோமதி ஆற்றின் மேல் அதிக அன்பு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே தாசார்யர், கோமதிப்ரிய என்று கூறியிருக்கிறார்.

 

அகௌண = மூன்று குணங்களாலும் கட்டுப்படாதவன் என்று பொருள். சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய ப்ராக்ருத குணங்கள் இல்லாதவன் என்று பொருள்.

ஜகத்குரு பிரம்மதேவர்,

குருதம = பிரம்மாதிகளுக்கும் குரு என்று பொருள். அல்லது த்ரிகுணாதீதரான முக்தர்களுக்கு அகௌணர் என்று பெயர். முக்தர் அனைவரைவிட குருதம என்றால் உத்தமன் என்று பொருள்.

 

சாமகாயனலோல = முக்தனானவர்கள் ஏகத்ஸாமகாயன்னாஸ்தே | ஹாஉஹா உஹாபோன்ற சாம வேத மந்திரங்களை உச்சரித்தவாறே, முக்தியில் ஸ்வரூப சுகத்தை அனுபவித்திருப்பர் என்று சொல்லும் தைத்திரிய உபநிஷத் வாக்கியத்திற்கேற்ப, சாமகாயன முக்தர் என்று தெரியவருகிறது. அவர்கள் பாடும் பாடல்களில் மகிழ்ந்திருப்பவன் என்று பொருள். அல்லது சாமகாயனர்கள் முக்தர்கள்.

அவர்களிடம் அன்பு கொண்டிருப்பவன் அல்லது வேதானாம் சாமவேதோஸ்மிஎன்னும் கீதை வாக்கியத்திற்கேற்ப வேதங்களில் சாமவேதத்தை பகவத் சன்னிதானமாக அறியவேண்டும் என்று சொல்லியிருப்பதால் சாமகானலோல என்று சொல்லலாம்.

 

சர்வஸ்வாமி = ரமா பிரம்மாதி அனைவருக்கும் தலைவனானவன்.

மமகுலதெய்வ = நம் குலதெய்வமான

ஸ்ரீபதே = லட்சுமிபதியான ஸ்ரீ நரசிம்மனே

சஜ்ஜனர சந்தெயிசுவனு = சஜ்ஜனர்களை காப்பாற்ற வேண்டுமென்று வேண்டுகிறேன்.

 

ராம ராக்‌ஷஸகுல ப4யங்கர

ஸாமஜேந்த்3ர ப்ரிய மனோவா

சாமகோ3சர சித்ஸு2ப்ரத சாருதரசரித |

பூ4ம பூ4 ஸ்வர்கா3பவர்க33

காமதே3னு ஸு2ல்பதரு சி

ந்தாமணியு எந்தெ3னிப நிஜப4க்தரிகெ3 ர்வத்ர ||3

 

ராம = லோகரமணன் ஆன காரணத்தால் ராமன் என்று பெயர்.

ராக்‌ஷஸகுல பயங்கர = ராக்‌ஷசர்கள், தைத்யர்கள் ஆகியோரின் குலத்திற்கு பயங்கரமானவன்.

சாமஜேந்திரப்ரிய = சாமஜ என்றால் யானைகள். அவற்றின் இந்திரன் என்றால் கஜேந்திரன். கஜேந்திரன் செய்த ஸ்தோத்திரத்திற்கு மெச்சி, அவனை முதலையிடமிருந்து காப்பாற்றி, திவ்யகதியை கொடுத்தவன் என்று பொருள்.

 

மனோவாசாமகோசர = மனதினால், வாக்கினால் அவனின் குணாதிசயங்களை, ஸ்தோத்திரங்களை செய்வதற்கு சாத்தியமில்லாதவன்.

அல்லது

* மனோபிமானி ருத்ரதேவர் மற்றும்

* வாக் அபிமானி சரஸ்வதி பாரதியர்.

* சித்தத்திற்கு அபிமானி பிரம்ம வாயுதேவர்.

மேலும், வாக் என்றால் வேதம் என்று பொருள். வேதாபிமானியும், வேத ஸ்வரூபமாகவும், ரமாதேவி துர்கா ரூபத்தில் இருக்கிறார். மனோவாசாமகோசர என்றால், ருத்ரர், பிரம்ம வாயு சரஸ்வதி பாரதி மற்றும் லட்சுமி தேவியர்களாலும் அறியப்பட முடியாதவன் என்று பொருள்.

 

சித்சுகப்ரத = முக்த ஜீவர்களுக்கு ஸ்வரூபானந்தத்தை வழங்குபவன்.

சாருதரசரித = எவ்வளவு கேட்டாலும் போதாது; மேலும் கேட்கவேண்டும் என்று நினைக்கக்கூடிய அருமையான சரிதத்தைக் கொண்டவன். பாகவத 1ம் ஸ்கந்தம் 18வது அத்தியாயத்தில் சௌனகாதிகளின் கேள்வி இது.

 

கோனாம த்ருப்யேத்ர சவித்கதாயாம் மஹத்தமைகாந்த பராயணஸ்ய ||

 

ரமா பிரம்மாதிகளைவிட உத்தமமான மகிமைகளை கொண்டவனான பரமாத்மனின் சரித்திரத்தைக் கேட்டு அதன் சாரத்தைக் கேட்டு யார்தான் திருப்தி அடைவார்கள்? நமக்கேனும் ஸ்ரீஹரியின் கதையைக் கேட்டது போதும் என்ற திருப்தி இதுவரை வரவில்லை என்றனர். ஆகையால், சாருதர சரிதன் என்றார் தாசார்யர்.

 

பூம = நிரந்தரமான செல்வங்களைக் கொண்டவன்.

பூ ஸ்வர்காபவர்கத = அவரவர்களின் தகுதிக்கேற்ப பூமியில் பிறப்பது. சாதனைகளுக்குப் பிறகு, காம்ய கர்மங்களில் பலனுக்கேற்ப ஸ்வர்க்கத்தை, கல்பத்தின் முடிவில் முக்தி யோக்யர்களுக்கு முக்தியையும், ராஜஸருக்கு சம்சாரத்தையும், தாமசர்களுக்கு தமஸ்ஸையும் கொடுப்பவன் என்று பொருள்.

 

சர்வத்ர = பக்தர்கள் எந்த உலகத்தில் இருந்தாலும் அவர்களுக்கு காமதேனு, கல்பவ்ருக்‌ஷ, சிந்தாமணி,

எந்தெனிப = இவை எப்படி மனோபீஷ்டங்களை நிறைவேற்றுகின்றனவோ அப்படியே அவர்களின் (பக்தர்களின்) மனோபீஷ்டங்களையும் நிறைவேற்றுகிறான் என்று பொருள்.

 

ஸ்வர்ணவர்ண ஸ்வதந்த்ர ர்வக3

கர்ணஹீன ஸுஷய்ய ஷாஷ்வத

வர்ண சதுராஸ்ரம விவர்ஜித சாருதர ஸ்வரத |

அர்ணம்ப்ரதிபாத்3ய வாயு ஸு

பர்ண வரவஹனப்ரதிம வட

பர்ணஷயனாஸ் சர்ய 1ச்சரித கு3ணப4ரித ||4

 

ஸ்வர்ணவர்ண = சுவர்ண வர்ணோ ஹேமாங்க:என்று விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வருகிறது. யதாபஷ்ய: பஷ்யதே ருக்மவர்ணம்என்னும் வேத மந்திரமே இதற்கு ஆதாரம். சுவர்ணமிவ வர்ணோ யஸ்யஸ: சுவர்ணவர்ண:என்று சஹஸ்ரநாம வியாக்யான வாக்கியங்களின் ஆதாரத்தால், அபரோக்‌ஷத்தில், மக்கள் பார்க்கும் சமயத்தில், தங்கத்தைப் போன்ற நிறத்தில் காட்டிக் கொள்பவன் ஆகையால், ஸ்ரீஹரிக்கு சுவர்ணவர்ண என்று பெயர்.

 

ஸ்வதந்த்ரன்.

சர்வக = எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவன்.

 

கர்ணஹீன சுஷய்ய = காது இல்லாதவனே படுக்கையாக இருக்கிறான். அதாவது, பாம்புகளுக்கு சக்‌ஷுஸ்ரவ என்று பெயர். காதுகள் இல்லாமல், கண்களே காதுகளாக இருந்து, அந்த கண்களினாலேயே கேட்பதால், சக்‌ஷுஸ்ரவ என்று பெயர். ஆகையால், கர்ணஹீன என்றால் சேஷதேவர் என்றூ பொருள். அவரே படுக்கையாக இருக்கிறார்.

 

சாஸ்வத = நிரந்தரமாக இருப்பவர்.

 

வர்ணசதுராஸ்ரம விவர்ஜித = இங்கிருக்கும் விவர்ஜித என்னும் சொல்லை இருமுறை சொல்ல வேண்டும். அதாவது,

வர்ண விவர்ஜித = அதாவது பிராமணன் முதலான எந்த வர்ணத்திலும் சேராதவன்.

சதுராஸ்ரம விவர்ஜித = பிரம்மசாரி முதலான நான்கு ஆசிரமத்திலும் இல்லாதவன்.

சாருதர = லட்சுமிதேவியின் மனதை கவர்ந்திருழுக்கும் சுந்தர வடிவம் உள்ளவன்.

ஸ்வரத = ஸ்வரமணன்.

அர்ணசம்ப்ரதிபாத்ய = அர்ண என்றால் மந்திராக்‌ஷரங்கள். அவற்றின் பிரதிபாத்யன்.

வாயுசுபர்ண வரவாஹன = வாயுவாகனன், சுபர்ண வாகனன் என்று வாஹன் என்னும் சொல்லை இரு முறை பயன்படுத்த வேண்டும்.

வாயுவாஹன: = வரதோ வாயுவாஹன:என்று சஹஸ்ரநாமத்தில் இருக்கும் வாயுவாஹன சொல்லுக்கு அதன் வியாக்யானத்தில் வாயும் முக்யப்ராணம் வஹதி = ப்ரேரயதீதி வாயு வாஹன:வாயுதேவரே முக்யபிராண தேவர். அவருக்கு ஆணையிடுபவனாகையால் (அவர் மேல் பயணிப்பதால்) வாயுவாகனன் என்று பொருள் கொள்ள வேண்டும்.

 

சுபர்ண வரவாஹன = கருடன் போன்ற மிகச்சிறந்த வாகனத்தை உடையவன்.

அப்ரதிம வடபர்ணசயன = ஈடு இணையற்ற வடபத்ர (ஆல) இலையில், பிரளய காலத்தில் படுத்திருந்தவன். அல்லது; அப்ரதிம - வடபத்ரசயனன் என்று சொல்லை பிரித்தும் படிக்கலாம்.

 

அப்ரதிம = ஈடு இணையற்றவன். வடபத்ரசயன = பிரளயகாலத்தில் மார்க்கண்டேயருக்கு ஆலையிலையில் படுத்திருக்கும் காட்சியை காட்டியவன். இதையே இங்கு குறிப்பால் உணர்த்துகிறார் தாசார்யர்.

 

ஆஸ்சர்யதமனு = உலகத்தில் உன்னைவிட பெரிய பொருள் வேறொன்றும் இல்லை. நீயே ஆச்சரிய புருஷன். நீயே தன்யன் என்று ராஜசபையில் நாரதர், ஸ்ரீகிருஷ்னனைப் பார்த்து கூறினார். அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் தக்‌ஷிணாபி: சாகம்என்று பதிலளித்தான். தக்‌ஷிணே என்பது லட்சுமிதேவிக்கு இருக்கும் இன்னொரு பெயர். அவருடன் சேர்ந்தே நான் ஆச்சரியன் என்று கூறினான் என்னும் ஹரிவம்ச கதையை நிர்ணயத்தில் காணலாம். அந்த கதை, ஸ்லோகத்துடன் இங்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் மறுபடி சொல்லவில்லை. ஆகையால், அவன் ஆஸ்சர்யதம.

 

குணபரித = ஆனந்தாதி குணங்களால் பூர்ணனான

ஸ்வசரித = உத்தமனான சரித்திரம் உள்ளவன் அல்லது ஆஸ்சர்யதமசரிதஎன்று ஒரே சொல்லாகவும் இதை படிக்கலாம். மிகவும் ஆச்சரியமான சரிதத்தை கொண்டவன் என்று பொருள்.

 

அக3ணித ஸுகு3ணதா4ம நிஸ்சல

ஸ்வக3தபே43 விஷூன்ய ஷாஸ்வத

ஜக3த ஜீவாத்1யந்த பி4ன்னாபன்ன பரிபால |

த்ரிகு3ணவர்ஜித த்ரிபு4வனேஸ்வர

ஹக3லிருளு ஸ்மரிஸுதலிஹர பி3

ட்டக3ல த்ரிஜக3ன்னாத2விட்ட2ல விஷ்வவ்யாபகனு ||5

 

அகணித சுகுணதாம = எண்ணுவதற்கு சாத்தியமில்லாத குணங்களைக் கொண்டவன்

நிஸ்சல = இத்தகைய குணங்கள் சலனமின்றி இருக்கின்றன. அதாவது, எண்ணிக்கையற்ற குணங்களை எக்காலமும் கொண்டிருப்பவன் என்று பொருள்.

ஸ்வகதபேத விஷூன்ய = தனக்கு சம்பந்தப்பட்ட பேதங்கள். அதாவது மூலரூபம், அவதார ரூபங்கள், அந்தர்யாமி ரூபங்கள், இப்படிப்பட்ட பகவத் ரூபங்களுக்கு பரஸ்பரம் பேதம் இல்லை என்று பொருள்.

சாஸ்வத = அனாதியிலிருந்து அனந்த காலம் வரைக்கும்

ஜகத = ஜடமான இந்த உலகத்திலிருந்தும்

ஜீவ = ஜீவர்களிலிருந்தும்

அத்யந்த பின்ன = மிகவும் வேறுபட்டு இருப்பவன்

ஆபன்ன பரிபால = சரணாகதி அடைந்தவர்களை காப்பாற்றுபவன்

த்ரிகுணவர்ஜித = சத்வரஜதமோ குணங்கள் இல்லாதவன்

 

த்ரிபுவனேஷ்வர = மூன்று உலகங்களுக்கும் தலைவனானவன். மூன்று உலகங்கள் என்றால், பூலோக, புவல்லோக ஸ்வர்க லோக என்று பொருள் அல்ல. இந்திரனுக்குக் கூட இவற்றை ஆளும் திறன் உண்டு. அப்படியெனில் வேறென்ன? பாகவத 2ம் ஸ்கந்தம் 5ஆம் அத்தியாயம் 39வது ஸ்லோகத்திலிருந்து 42வது ஸ்லோகம் வரை, பிரம்மாண்டத்தில் 14 உலகங்களை சொல்லி இதிலோகமய: புர்மா’. இப்படி ஸ்ரீஹரி லோகமயனாக இருப்பான் என்று விளக்கி மேலும்

 

பூர்லோக: கல்பித: பத்ப்யாம் புவர்லோகஸ்து நாபித: |

ஸ்வர்லோக: கல்பிதோமார்த்னி இதிவா. இதி வா லோககல்பனா ||

 

பாதத்திலிருந்து பூலோகம் என்றும், நாபியில் புவல்லோகம் என்றும், தலை வரை ஸ்வர்க்க லோகம் என்றும் - இப்படியும் மூன்று உலகங்களைப் பற்றி நினைக்கலாம் என்றும் கூறினர்.

 

இதன் வியாக்யானத்தில், பூலோகம் என்றால் அதல முதல் பாதாளத்தின் வரை உள்ள 7 லோகங்களும் பூமியுடன் சேர்ந்தவை (பூமிக்குள் இருப்பவை) என்றும்; ஜனலோகம் முதல் சத்ய லோகம் வரை, ஸ்வர்க்கத்துடன் சேர்ந்தவை என்றும் இந்த 14 லோகங்களுக்கும் இவற்றில் சேர்ந்தவை என்றும் கூறினர்.

 

அப்படி செய்தால் பாதாளமேதஸ்யஹி பாதமூலம்என்னும் விராடரூப சிந்தனையை சொல்லும்போது, பாதத்திலிருந்து இடுப்பு வரை அதலம் முதலான 7 உலகங்களை சொல்லி, ‘மஹீதலந்தஜ்ஜகனம் மஹீபதேஎன்று பூலோகமானது நாபிக்கு கீழ் இருக்கும் கீழ் வயிற்றில் இருக்கிறது என்றும் கூறியிருக்கின்றனர்.

 

இங்கு பாதம் முதல் என்று கூறியிருப்பதால், பாதாளாதிகள் அதில் சேர்ந்தவை என்று தெளிவாக சொன்னதாக எடுத்துக் கொள்ளலாம்.

 

சத்யந்து சீர்ஷாணி சஹஸ்ர சீர்ஷ்ண:சத்யலோகமானது பரமாத்மனின் தலையில் இருக்கிறது என்று அங்கு  சொல்லியிருக்கின்றனர். இங்கு தலை வரைக்கும் ஸ்வர்க்க லோகம் என்று சொல்லியிருக்கின்றனர். ஆகையால், ஸ்வர்க்கத்தில், சத்யலோகம் வரையிலான அனைத்து லோகங்களும் சேர்ந்தே இருக்கின்றன என்று பொருள்.

 

இங்கு சொல்லியிருக்கும் த்ரிபுவனேஸ்வர்ய என்பதற்கு 14 லோகங்களுக்கும் ஈஸ்வரன் (தலைவன்) என்று பொருள். அல்லது, ஸ்வேதத்வீப, அனந்தாசன, வைகுண்ட என்னும் மூன்று லோகங்களின் தலைவன் என்று பொருள். அனைத்து இடங்களிலும் வியாபித்திருப்பவனான இத்தகைய ஜகன்னாதவிட்டலனை

 

ஹகலிரளு = இரவும் பகலும்

ஸ்மரிசுதலிஹர = நினைப்பவர்களை

பிட்டகல = ஒரு கணமும் விடாமல் எப்போதும் கூடவே இருந்து காப்பாற்றுவான் என்று பொருள்.

 

அனுக்ரமணிகா தாரதம்ய சந்தி என்னும் 27ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் முடிவுற்றது.

ஸ்ரீகிருஷ்ணார்பணமஸ்து.

 

***

No comments:

Post a Comment