ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, September 4, 2020

30 - தைத்ய தாரதம்ய சந்தி

 

பாவபிரகாசிகை : சந்தி 30 : தைத்ய தாரதம்ய சந்தி

 

ஹரிகதா2ம்ருதசார கு3ருக3

கருணதிந்தா3பநிது பே1ளுவே

பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

 

ஸந்தி ஸூசனை:

ஸ்ரீஷமுக்தாமுக்த ஸுரவர

வாஸுதே3வகெ34க்தியலி கம

லாஸனனு பேளித3னு தை3த்ய ஸ்வபா3வ கு3ணக3ளனு ||

 

ஸ்ரீஷ = லட்சுமிபதியான

முக்தாமுக்தஸுரவர = முக்தர்கள், அமுக்தர்கள் இந்த இரு வித தேவதைகளைவிட

வாஸுதேவகெ = வசுதேவ புத்ரனான ஸ்ரீகிருஷ்ணாவதாரம் செய்த பரமாத்மனுக்கு

பக்தியலி = பரம பக்தியுடன் ஸ்தோத்திரம் செய்த சந்தர்ப்பத்தில்

கமலாஸனனு = பிரம்மதேவரு

தைத்ய ஸ்வபாவ குணக்ளனு = தைத்யர்களின் ஸ்வபாவத்தை, அவர்களின் யோக்யதை, குணங்களை

பேளிதனு = கேட்டார்.

 

கருட புராண பிரம்ம காண்டத்தில் பிரம்மதேவர் பரமாத்மனை ஸ்தோத்திரம் செய்த சந்தர்ப்பத்தில், தைத்ய தாரதம்யத்தை விளக்கியிருக்கிறார். அதே அர்த்தத்தையே இந்த சந்தியில் சொல்கிறோம்.

 

எனகெ3 நின்னலி ப4கு3தி1 ஞானக3

ளெனிதிஹவோ ப்ராணனலு திளியதெ3

ஹனுமதா3த்3யவதாரக3ள பே433ள பேளுவவ |

3னுஜ கோ4ராந்த4ந்தமஸிக்3 யோ

க்3யனு நம்ஷய நின்ன பை3வர

கொனெய நாலிகெ3 பிடி3து3 சே2திபேனெந்த3னப்ஜப4||1

 

எனகெ = எனக்கு

நின்னல்லி = உன்னிடம்

பக்தி ஞானகளு = பக்தி ஞானம் ஆகியவை

எனிதிஹவோ = எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு பக்தி ஞானங்களை

ப்ராணனலி = முக்ய பிராணதேவரிடம்

திளியதெ = அறியாமல்

ஹனுமதாத்யவதாரகள = ஹனும பீம மத்வ அவதாரங்களை

பேதகள பேளுவவ = ஒன்றுக்கொன்று வேறு என்று பேதம் சொல்பவன்

கோராந்தந்தமஸ்ஸிகெ = கோரமான அந்தம்தமஸ்ஸிற்கு

யோக்யனு = தகுதியானவன்

தனுஜனு = தைத்யன்

நஸம்ஷய = இந்த விஷயத்தில் சந்தேகமே இல்லை

நின்ன = உன்னை

பைவர = த்வேஷத்தினால் தூஷிப்பவர்களை

கொனெய நாலிகெ பிடிது = அவனின் நாக்கினை இழுத்துப் பிடித்து

சேதிபேனு = கத்தரிக்கிறேன்

எந்தனப்ஜபவ = என்று பிரம்மதேவர் கூறுகிறார்.

 

பரமாத்மனிடம் பிரம்மதேவரின் வேண்டுகோள்:

ஹே ஈசனே, எனக்கு உன்னிடம் எவ்வளவு பக்தி ஞானங்கள் இருக்கிறதோ, அவ்வளவு வாயுதேவரிடமும் இருக்கிறது. அதனை அறியாமல் எனக்கும் வாயுதேவருக்கும் பக்தி ஞானத்தில் தாரதம்யத்தை சொல்பவன் மஹா தைத்யன். மற்றும், பளித்தாதி சூக்தத்தால் புகழப்படுபவரான வாயுதேவரின் மூலரூபத்திற்கும் அவதார ரூபங்களுக்கும் பரஸ்பரம் பேதங்கள் உண்டு என்று சொல்பவர்களும் தைத்யர்களே.

 

யுகபேதங்களால், சக்தி பேதங்களை சொல்வதற்காக சௌக்ந்திகா ஹரண காலத்தில் ஹனுமந்த தேவரின் வாலை, பீமசேன தேவரால் தூக்க முடியவில்லை என்று பாரதத்தில் சொல்லியிருக்கின்றனர். இது அசுரர்களை மயக்குவதற்காகவும், யுகத்திற்கேற்ப சக்தி பேதம் ஆகிறது என்று சொல்வதற்காகவும் இருக்கிறதே தவிர, உண்மையானது இல்லை என்பது கருத்து.

 

இதனை அறியாமல் உண்மையாகவே, பீமசேனதேவருக்கும், ஹனுமந்த தேவருக்கும் வேறுபாட்டினை சொல்பவர்கள் மஹா தைத்யர்கள். இத்தகையவர்களுக்கு கோரமான அந்தம்தமஸ்ஸே கிடைக்கிறது. இந்த விஷயத்தில் சந்தேகமே இல்லை. இதற்கு ஆதாரம், கருட புராணத்தின் வாக்கியம்:

 

வாயோர் மயாந்தரம் நாஸ்தி ஹரிதத்வஸ்ய நிர்ணயே ||

அவதாரேஷு வாயோஸ்து ஹ்யந்தரம் யேவிது: ப்ரபோ ||

தேந்தந்தம: ப்ரவிஷ்யந்தி தைத்யாஸ்து நசதேஸுரா: ||

 

இந்த ஸ்லோகத்தின் அர்த்தமே பத்யார்த்தம்.

 

மேலும் பிரம்மதேவர் சொல்வது என்னவெனில்: யார் உன்னை திட்டுகிறார்களோ அவனின் உள் நாக்கினை நான் கத்தரிக்கிறேன்’. இந்த விஷயத்தில் கருட புராணம் சொல்வது:

 

நிந்தாம் குர்வந்தி யே விஷ்ணோர் ஜிஹ்வா சேதம் கரோம்யஹம் ||

 

இந்த ஸ்லோக அர்த்தத்தையே தாசார்யர் இந்த பத்யத்தில் சொல்லியிருக்கிறார்.

 

ஞானப4ஸு2 பூர்ண வ்யாப்தகெ3

ஹீன கு3ணவெம்பு3வனு ஈஷ்வர

நானெ எம்பு3ச்சிதா3னந்தா3த்ம கு3த்பத்தி |

ஸ்ரீனிதம்பி3னிகீ3ஷகெ3 வியோ

கா3னுசிந்தனெ சே23 பே43 வி

ஹீன தே3ஹகெ ஷஸ்த்ரக3ள ப3ய பேளுவவ தை3த்ய ||2

 

ஞானபல சுகபூர்ண வியாப்தகெ = ஞான, பல, சுக இவற்றால் பூர்ணனான, அனைத்து இடங்களிலும் வியாப்தனான பரமாத்மனுக்கு

ஹீன குணவெம்புவனு = குணங்கள் இல்லை (நிர்குணன்) என்பவன்

நானே ஈஷ்வர எம்புவ = நானே ஈஸ்வரன் என்பவன்

சச்சிதானந்தாத்மகெ = ஸ்ரீபரமாத்மனுக்கு

உத்பத்தி = சச்சிதானந்த ஸ்வரூபனான ஸ்ரீபரமாத்மனுக்கு பிறப்பு உண்டு என்று சொல்பவன்

ஸ்ரீனிதம்பினிகெ = லட்சுமிதேவியருக்கும்

ஈஷகெ = பரமாத்மனுக்கும்

வியோகானுசிந்தனெ = பிரிவு இருக்கிறது என்று நினைப்பவன்

சேத பேத விஹீன தேஹகெ = அழிக்க முடியாத தேகம் கொண்டவன். அவனுக்கும் அவனின் உடல் பாகங்களுக்கும் பேதம் இல்லாதவன்; இப்படிப்பட்ட தேகத்தைக் கொண்ட பரமாத்மனுக்கு

ஷஸ்த்ரகள பய பேளுவவ = பரமாத்மனுக்கு ஆயுதங்களால் பயம் உண்டு என்று சொல்பவன்

தைத்ய = தைத்யன் ஆவான்.

 

* பூர்ண ஞான, பூர்ண பல, பூர்ணானந்த ஸ்வரூபனான ஸ்ரீபரமாத்மன் நிர்குணன் என்று உபாசனை செய்பவன் தைத்யன்.

* நானே ஈஸ்வரன் என்பவனும் தைத்யன்.

* சச்சிதானந்த ஸ்வரூபனான பரமாத்மனுக்கு, பிறப்பு இறப்பு ஆகியவை உண்டு என்று சிந்திப்பவன் தைத்யன்.

* ரமாதேவியருக்கும் பரமாத்மனுக்கும் ராமாவதாரம் முதலான அவதாரங்களிலோ, மூலரூபங்களிலோ பிரிவு இருக்கிறது என்று சொல்பவன் ; அதாவது, ராமாவதாரத்தில்,

*** சீதாதேவி ராவணனின் இடத்தில் இருந்தபோதோ,

*** ராவணனின் சம்ஹாரம் ஆனபிறகு, ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஆனபிறகு, ஊர் மக்களின் பேச்சுக்கு பயந்து, கர்ப்பிணியான சீதையை, வால்மிகி ஆசிரமத்தில் விட்டு வந்தபிறகோ,

ராமனுக்கும், சீதைக்கும் பிரிவு இருந்தது என்று ராமாயணத்தில் தெளிவாக சொல்லியிருப்பார்கள். ஆனால், அது உண்மையன்று.

 

அசுர மக்களின் மோகனத்திற்காக அப்படி சொல்லியிருக்கிறார்களே தவிர, நித்ய வியோகினியான சீதா ராமர்களின் வியோகம் என்றைக்கும் ஆவதில்லை. எங்கு ராமனோ, அங்கு சீதை இருக்கிறாள். எங்கு சீதையோ அங்கு ராமன் இருந்தே இருக்கிறான். இவர்கள் இருவருக்கும் இடையே பிரிவினை சிந்திப்பவன் தைத்யன்.

 

மணிமஞ்சரியில்:

ஸுராணகான்ஸ்தமோனேதும் தத்வாஜீவ ஸஜானகீம் ||

வ்யாப்தத்வான் நிரவத்யத்வாத் தஸ்யாஸ்தாக: கதம்பவேத் ||

 

பரமாத்மனுக்கும் லட்சுமிதேவியருக்கும் என்றைக்கும் பிரிவு என்பது இல்லை. ஆனாலும், சுராணக என்னும் தைத்யன் பிரம்மதேவரைக் குறித்து தவம் செய்து தான் என்ன பாவத்தை செய்தாலும், அது தன்னுடைய முக்திக்கு எவ்வித தடைகளையும் செய்யக்கூடாது என்று வேண்டினான். அதற்கு பிரம்மதேவர் நீங்கள் லட்சுமி நாராயணர்களுக்கு இடையே பரஸ்பரம் பிரிவு இருக்கிறது என்று சிந்திப்பதைத் தவிர வேறு எந்த பாவம் செய்தாலும், அது உங்களின் முக்திக்கு தடையாக இருப்பதில்லை. அது ஒன்று மட்டுமே உங்கள் முக்திக்கு தடையாக இருக்கும்என்று வரம் அளித்தார்.

 

அவனும் பிரம்மதேவரின் வர பலத்தால், பற்பல பாவங்களை செய்து, பூமியில் பிறந்து, சீதாராமரே லட்சுமி நாராயணர் என்பதை அறியாமல், ராம சீதையை தூஷித்தான். அதாவது, ராமன் ஒரு ஆண்டு காலம் ராவணனின் வீட்டில் இருந்த சீதையை ஏற்றுக்கொண்டான் என்று தூஷித்தான். இவருக்கு தமஸ் ஆகவேண்டும் எனில், சீதையை ராமன் தியாகம் செய்ய வேண்டும்.

 

பிரம்மதேவரின் சாபத்தை உண்மை ஆக்குவதைப் போல, ஸ்ரீராமன் சீதையை தியாகம் செய்ததைப் போல நாடகம் ஆடினான். உண்மையில் சீதையும் ராமனும் அப்படி இருக்கவில்லை. எப்படியெனில், ரமாதேவியர் சர்வத்ர வியாப்தர். தோஷங்கள் அற்றவர். பரமாத்மனும் சர்வத்ர வியாப்தனே. தோஷங்கள் அற்றவன். இப்படி இருக்கையில், இவர்களுக்கிடையே பிரிவு எப்படி ஆகும்?

 

அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த ரூபமானது மறைந்து, வால்மிகி ஆசிரமத்தில் வசித்து வந்தாள். ராமன் அஸ்வமேத யாகம் செய்யும் காலத்தில், அனைவரின் எதிரிலும் சீதை பூ (பூமி) பிரவேசம் செய்ததும் வேறு ரூபத்தினாலேயே. இன்னொரு ரூபத்தினால், ஸ்ரீராமனுக்கு மட்டும் தெரிந்தவாறு, வேறு யாரின் கண்ணிற்கும் தெரியாதவாறு இருந்தாள்.

 

மகாபாரத தாத்பர்ய நிர்ணய 9ம் அத்தியாயத்தில்:

 

ராமஸ்யத்ருஷ்யா த்வன்யேஷாமத்ருஷ்யா ஜனகாத்மஜா ||

பூமிப்ரவேஷாதூர்த்வம் ஸா ரெமே ஸப்தஷதம் ஸமா: ||49

 

சீதாதேவி பூமி பிரவேசம் செய்த பிறகு, வேறு யாரின் கண்ணிற்கும் தெரியாமல், ஸ்ரீராமனின் கண்ணிற்கு மட்டும் தெரிந்தவாறு 700 ஆண்டுகள் வரை, ஸ்ரீராமனுடன் இருந்து சுகங்களை அனுபவித்திருந்தாள் என்று சொல்கிறார்.

 

இதைப் போலவே 33ம் ஸ்லோகத்தில்: நித்யமேவ ஸஹிதோபி ஸீதயா ஸோக்னி ஸாக்‌ஷிகமபூத் வியுக்தவத்’. ஸ்ரீராமன் எப்போதும் சீதையை பார்த்தவாறு, தன் சமீபத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாலும், அக்னி சாட்சியாக அவளை இழந்தது போல காட்டிக் கொண்டான் என்று சொல்கிறார்.

 

மற்றும் 5ம் அத்தியாயம் 40ம் ஸ்லோகத்தில்

 

ராமோபிதத் து வினிஹத்ய ஸுதுஷ்டதக்‌ஷ:

ப்ராப்யாஸ்ரமம் ஸ்வதயிதாம் ந ஹி பஷ்யதீவ ||40

 

தன் அருகில் வைத்து கொண்டிருந்தாலும், அக்னி சாட்சியாக சீதையை இழந்ததுபோல காட்டினான். துஷ்டனான மாயமான் ரூபியான மாரிசன் என்னும் அசுரனைக் கொன்று, தன் ஆசிரமத்திற்கு வந்த ஸ்ரீராமன், தன் மனைவியைக் காணாததுபோல நடித்தான். அன்வேஷமாண இவசீதையை தேடுவதைப் போல செய்தான் என்று சொல்கிறார். இந்த வாக்கியத்தாலும், ஸ்ரீராமன் உண்மையாகவே சீதையை இழக்கவில்லை என்பது புரிகிறது.

 

மேலும் மணிமஞ்சரியில்:

நித்யம் பஷ்யன்னிஜாம் தேவீம் பூர்ண சந்தோஷ சம்ப்ருத: ||

ராமேன த்ருஷ்யதே ஸீதேத்ய பூத்ஸங்கடவானிவ ||

 

எப்போதும் தன் அருகிலேயே வசித்து வந்த சீதையை பார்த்தவாறு ஸ்ரீராமன், பூர்ணமான சந்தோஷத்தைக் கொண்டிருந்தாலும், அவளை தொலைத்துவிட்டு கஷ்டப்படுபவனைப் போல தன்னை காட்டிக் கொண்டான். இதன் காரணம் என்னவெனில்: ராவணின் சம்ஹாரம் சீதையின் காரணமாகவே ஆகவேண்டியிருக்கிறது என்று பார்ப்பவர்களுக்கு தெரிய வேண்டும் என்பது கருத்து.

 

ராவணன் அபஹாரம் செய்தது, மாயா சீதையை. அதாவது, சீதையைப் போல உருவம் கொண்ட, அக்னியிலிருந்து வந்த பிரதிமை. சீதையின் ஆவேசம் மட்டுமே அங்கிருந்தது என்பது ராமாயண வாக்கியத்தாலும், நிர்ணய வாக்கியத்தாலும் தெளிவாகிறது.

 

வேறுபாடு இன்றியும், குறைகள் இன்றியும் இருக்கும் பரமாத்மனின் தேகத்திற்கு, ஆயுதங்களால் சேத பேதங்கள் ஆகின்றன என்பவர்கள் தைத்யர்களே. இந்த பத்யத்தில் சொல்லியவாறு நினைப்பவர்கள் தைத்யர்கள் என்னும் விஷயத்தில் தாத்பர்ய நிர்ணய 1ம் அத்தியாயத்தில்:

 

அவதாரேஷு யத்கிஞ்சி தர்ஷயேன் நரவத்தரி: |

தஜ்ஜாஸுராணாம் மோஹாய தோஷா விஷ்ணோர் நஹிக்வசித் ||37

அஞ்ஞத்வம் பாரவஷ்யம் வா வேத பேதாதிகம் ததா |

ததா ப்ராக்ருத தேஹத்வம் தேஹத்யாகாதிகம் ததா ||38

அனீஷத்வம் ச துக்கித்வம் ஸாம்ய மன்யைஸ்ச ஹீனதாம் ||

ப்ரதர்ஷயதி மோஹாய தைத்யாதீனாம் ஹரி: ஸ்வயம் ||39

 

ஸ்ரீபரமாத்மன், தன் அவதார ரூபங்களில் சாமான்ய மனிதனைப் போல சில இடங்களில் காட்டிக் கொண்டிருப்பான். அது அசுர மக்களின் மோகனத்திற்காகவே தவிர, உண்மையாக பரமாத்மனிடம் அத்தகைய தோஷங்கள் எதுவும் இல்லை. ராமகிருஷ்ணாதி ரூபங்களில் சில இடங்களில், தனக்கு தெரியாததால் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான் என்று பாகவதாதிகளில் வருகிறது. தான் அஸ்வதந்த்ரனாக பிறரின் வசத்தில் இருந்தான் என்றும் வருகிறது. ஆயுதங்களால் தேகத்தில் காயங்கள் ஏற்பட்டது போலவும் தோன்றும்.

 

தான் துக்கப்பட்டதைப் போல காட்டிக் கொண்டான். மற்ற மக்களுக்கு சமமானவனைப் போல காட்டிக் கொண்டான். இவை அனைத்தும், தைத்யர்களை மயக்குவதற்காகவே செய்தான் என்று அறியவேண்டும். பூர்ண குணவந்தனான ஸ்வாமிக்கு இத்தகைய தோஷங்கள் எதுவும் இல்லை என்று சொல்கிறார்.

 

இந்த அபிப்பிராயத்தையே இந்த பத்யத்தில் சொல்லியிருக்கிறார். இப்படி அறிந்து கொள்ளாமல், இந்த பத்யத்தில் சொல்லிய தோஷங்களை பரமாத்மனிடம் சொல்பவன் தமோயோக்யன் என்கிறார்.

 

லேஷப4யஷோகா2தி3 ஷூன்யகெ3

ல்லஷக3ள பேளுவவ ராம

வ்யாஸ ரூபங்க3ளிகெ3 ருஷி விப்ரத்வ பேளுவவ |

தா3ஷரதி2 க்ருஷ்ணாதி3 ரூபகெ3

கேஷக2ண்ட3னெ பேள்வ மக்களி

கோ3ஸு3 ஷிவார்ச்சனெய மாடி33னெம்பு3வனெ தை3த்ய ||3

 

லேஷபய = சிறிது பயமோ

ஷோகாதி = சோகமோ

ஷூன்யகெ = இவை எதுவும் இல்லாதவனான ஸ்ரீபரமாத்மனுக்கு

க்லேஷகள பேளுவவ = பய துக்காதிகள் இருக்கின்றன என்று சொல்பவன்

ராம வியாஸ ரூபங்களிகெ ருஷி விப்ரத்வ பேளுவவ = பரசுராம ரூபத்தை சாதாரண பிராமண ரூபம் என்றும், வேதவியாஸ ரூபத்தை சாதாரண ரிஷி என்றும் சொல்பவன்

தாஷரதி கிருஷ்னாதி ரூபக்கெ = தசரத ராமன் மற்றும் கிருஷ்ண ரூபங்களுக்கு

கேஷகண்டன பேளுவவ = முடி வெட்டும் பழக்கம் உண்டு என்று சொல்பவன்

மக்களிகோசுக = கிருஷ்ணாவதாரத்தில் வாரிசு வேண்டும் என்னும் விருப்பத்தில்

ஷிவார்ச்சனெய மாடிதனெம்புவனு = ருத்ரதேவரைக் குறித்து தவம் செய்தான் என்று சொல்பவன்

தைத்ய = தைத்யனே ஆவான்.

 

ராமாவதாரத்தில் வாலியின் எதிரில் நின்று போரிடுவதற்கு பயந்தே, ஸ்ரீராமன் மறைந்திருந்து அவனைக் கொன்றான் என்று சொல்பவன் தைத்யன் என்று அறியவேண்டும். அது ஏனென்றால், ஸ்ரீராமன் பயத்தால் வாலியின் எதிரில் வராமல் இல்லை. மறைந்திருந்து பாணம் விட்டதற்கான காரணத்தை, நிர்ணயத்தில் ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருக்கிறார்.

 

ஸ்ரீபரமாத்மனுக்கு சுக்ரீவன் நண்பன் என்றும், வாலி த்வேஷி என்பதும் அல்ல. எல்லா அவதாரங்களிலும், சேவையை சமமாக பெற்றுக் கொள்வதில்லை. சில தேவதைகளிடமிருந்து ராமாவதாரத்திலும், சிலரிடமிருந்து கிருஷ்ணாவதாரத்திலும் சேவையை பெற்றுக் கொள்கிறான். வாயுதேவரின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ, அவருக்கே தன் ஆதரவும் என்ற சங்கல்பத்தை செய்தவன் ஸ்ரீபரமாத்மன்.

 

வாயு அவதாரரான ஹனுமந்தனை சுக்ரீவன் ஆதரித்ததால், ஸ்ரீராமன், சுக்ரீவனுக்கு அபயம் அளித்து வாலியை கொல்ல வேண்டியதாயிற்று. ஆனால் அவனை மறைந்து நின்று கொல்ல வேண்டிய காரணம் என்னவென்றால்:

 

நிர்ணய 6ம் அத்தியாயம்:

பக்தோ மமைஷயதி மாமபிபஷ்யதீஹ பாதௌ

த்ருவம் மம ஸமேஷ்யதி நிர்விஜார: |

யோக்யோவதோ நஹி ஜனஸ்ய பதானதஸ்ய

ராஜ்யார்த்தினா ரவிசுதேன வதோர்த்திதஸ்ச ||19

 

கார்யம் ஹ்யபீஷ்டமபி தத்ப்ரணதஸ்ய பூர்வம்

ஷஸ்தோ வதோ ந பதயோ: ப்ரணதஸ்ய சைவ ||

தஸ்மாதத்ருஷ்ய தனுரேவ நிஹன்மி

ஷக்ரபுத்ரந்திதிஸ்ம தமத்ருஷ்யதயா ஜகான ||20

 

வாலியின் சம்ஹார காலத்தில் ஸ்ரீராமன் சிந்தித்தது என்னவெனில்: இந்திரனின் அவதாரமான வாலி எனக்கு மிகவும் பிடித்தமானவன். இவன் என்னை பார்த்த உடனேயே, என் கால்களை பிடித்துக் கொள்ளப் போகிறான். பாதங்களில் விழுந்தவர்களைக் கொல்வது சரியல்ல. சூரியனின் அவதாரமான சுக்ரீவனுக்கு, இவனைக் கொன்று ராஜ்யத்தை அளிக்கிறேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறேன். அவனும் காலில் விழுந்து கேட்டுக் கொண்டிருப்பதால், அவன் வேண்டுகோளினை நிறைவேற்ற வேண்டும்.

 

வாலியின் எதிரில் நின்று அவனிடமிருந்து நமஸ்காரத்தை ஏற்றுக்கொண்டால், அவனைக் கொல்ல முடியாது. ஆகையால், வாலியின் கண்ணில் படாமல் நின்றே, அவன் மேல் பாணம் விடவேண்டும் என்று நிச்சயித்து, அப்படியே நின்று வாலியைக் கொன்றான். என்று சொல்லியிருக்கிறார்.

 

ஆகையால், வாலியிடம் இருந்த பயத்தால் எதிரில் நின்று அவனைக் கொல்லவில்லை என்று சொல்பவன் தைத்யன் என்பது கருத்து.

 

அதைப்போலவே, கிருஷ்ணாவதாரத்தில், ஜராசந்தாதி ராஜர்களுக்கு பயந்ததைப் போல நடித்ததும், அசுர மக்களின் மோகனத்திற்காகவும், சில தேவதா கார்ய சாதனைக்காகவுமே தவிர, உண்மையில் பரமாத்மனுக்கு பயம் இருக்கிறது என்று அறியக்கூடாது.

 

இதைப்போல, சீதையை இழந்து சோகத்தில் இருந்ததைப் போல் நடித்ததற்கான காரணத்தை ஏற்கனவே பார்த்தோம். ஆகையால், பரமாத்மனுக்கு சோகம் இருக்கிறதென்றும் அறியக்கூடாது. அப்படி அறிபவன் தைத்யனே ஆவான்.

 

பரசுராமதேவரை சாட்சாத் பரமாத்மனின் அவதாரம் என்று அறியாமல், அவர் வெறும் பிராமணர், ஜமதக்னி முனிவரின் மகன் என்று அறிவது; ‘வ்யாஸோ கஷ்சன ரிஷி:வேதவியாசதேவர் வசிஷ்டாதி ரிஷிகளைப் போல ஒரு ரிஷி என்று அறிபவன் தைத்யன். ராமகிருஷ்ணாதி ரூபங்களில் சச்சிதானந்த ஸ்வரூபத்தை அறியாமல், சாதாரண மனிதனைப் போல முடி வெட்டுவது போன்ற செயல்களை அறிபவன் தைத்யன்.

 

பாகவத 10ம் ஸ்கந்தத்தில், மதுராபுரியில், ஸ்ரீகிருஷ்ணன் தன் தலைமுடியை வெட்டிக் கொண்டான் என்று கதை வருகிறது. ஆனாலும், அதன் காரணத்தை அங்கேயே சொல்லியிருக்கின்றனர். நிர்ணய 13ம் அத்தியாயத்தில்:

 

க்ராஹ்யாபஹேயரஹிதை கசிதாத்மஸாந்த்ர

ஸ்வானந்தபூர்ண வபுரப்யய சோஷஹீன: ||

லோகான் விடம்ப்ய நரவத்ஸமலக்த காத்யைர்

வப்த்ரா விபூஷித இவாபவதப்ரமேய: ||99

 

ஏதாவது பூஷணங்களை (அலங்காரங்களை) தரித்து, அதனால் அவன் ஒளிர்ந்தான் என்றோ, தன்னில் இருக்கும் சிலவற்றை விட்டதால், அதாவது நகம், தலைமுடி ஆகியவற்றை வெட்டிக் கொண்டதால் அலங்காரம் செய்துகொண்டான் என்பது பரமாத்மனுக்கு இல்லை. கூந்தல் புதிதாக வளர்பவனும் இல்லை. அது போவதும் இல்லை. அவன் அப்ராக்ருதமான சிதானந்தாத்மக சரீரம் கொண்டவன். பரமாத்மனின் அவயவங்களுக்கும், நக, முடி முதலானவற்றிற்கும் பரஸ்பரம் பேதம் இல்லை. நாம் நம் அனைத்து அவயவங்களால் சேர்ந்து எந்தவொரு வேலையை செய்து முடிக்கிறோமோ, அவற்றை பரமாத்மன், தன் ஒரு நகத்தாலோ, முடியாலோ செய்து முடிக்கத் தக்கவன். முடியும் பரமாத்மனின் ஸ்வரூபமே ஆனபிறகு, அதை வெட்டுவது என்பது எப்படி?

 

மனித அவதாரம் செய்தபிறகு, மனிதன் என்று காட்டிக் கொள்வதற்காக, அவர்களைப் போல முடி வளர்வதைப் போலவும், முடிவெட்டிக் கொள்வதைப் போலவும் சொல்லிக் கொண்டான். ஆகையால், நம்மைப் போல பரமாத்மனுக்கும் முடிவெட்டிக் கொள்வது உண்டு என்று அறிபவன் தைத்யன் என்பது கருத்து.

 

ஆராத்ய தேவதேவேஷம் ஷங்கரம் லோக ஷங்கரம் |

தபஸா தோஷயித்வா கைலாஸ கிரிவாஸினம் ||

ருக்மிண்யாம் தனயம்லேபே தக்தகாமம் புனர்ஹரி: ||

வீரம் ப்ரத்யும்ன நாமானம் ரூபௌதார்ய குணான்விதம் ||

 

தனக்கு வாரிசு வேண்டுமென்ற நோக்கத்தில், ருக்மிணியால் சொல்லப்பட்டு, ஸ்ரீகிருஷ்ணன் ருத்ரதேவரைக் குறித்து தவம் செய்து வரம் பெற்றான் என்று பாகவதம் 10ம் ஸ்கந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

தேவதேவேஷனான ருத்ரதேவரைக் குறித்து, ஸ்ரீகிருஷ்ணன் தவம் செய்து, முன்பு ருத்ரரால் எரித்துக் கொல்லப்பட்ட மன்மதனை, மறுபடி பிரத்யும்ன ரூபத்தில் மகனாகப் பெற்றான் என்று சொல்லியிருக்கிறார். இங்கு வாரிசுக்காக ஷிவார்ச்சனை செய்தான் என்பவன் தைத்யன் என்றால், பாகவதத்தில் சொல்லப்பட்டதற்கு என்ன அர்த்தம்?

 

இதன் சமாதானத்தை நிர்ணய 22ம் அத்தியாயத்தில் சொல்கிறார்.

த்வாமாராத்ய ததா ஷம்போ க்ரஹீஷ்யாமிவரம் ஸதா ||

த்வாபராதௌ யுகே பூத்வா கலயா மானுஷாதிஷு ||153

ஸ்வாகம்யை: கல்பிதைஸ்வஞ்ச ஜனாம் மத்வி முகான்குரு ||

 

நான் த்வாபராதி யுகங்களில் பூமியில் ஒரு அம்சத்தினால், மனுஷ்யாதி ரூபங்களால் அவதரித்து, உன்னை ஆராதனை செய்து வரம் கேட்பேன். நீ கொடுக்கும் வரத்தை பெறுவேன்.

 

அஹம் த்வாம் பூஜயிஷ்யாமி லோக ஸம்மோஹனோத்ஸுக: ||

தமோsஸுரா நான்யதாஹி யாந்தேத்யே தன்மதம் மம ||160

இத்யுக்தம் வசனம் பூர்வம் கேஷவேன ஷிவாய யத் ||

தத்ஸத்யம் கர்துமாயாந்தம் கிருஷ்ணம் பதரிகாஸ்ரமம் ||

ஸர்வக்ஞா முனய: ஸர்வே பூஜயாம் சக்ரிரேப்ரபும் ||161

 

உலகத்தை மயக்குவதற்காக நான் உன்னை பூஜிக்கிறேன். அப்படி செய்யவில்லையெனில், தைத்யர்கள் அந்தம்தமஸ்ஸினை அடைவதற்கு வழி இல்லை. இது என் அபிப்பிராயம், என்று முன்னர் ஸ்ரீபரமாத்மன், ருத்ர தேவரிடம் சொல்லியிருந்தான். அந்த வாக்கியத்தை உண்மையாக்குவதற்காக ஸ்ரீகிருஷ்ணன், தன் வாரிசுக்காக ருத்ரதேவரைக் குறித்து தவம் செய்வதற்காக பதரிகாசிரமத்திற்கு வருகிறான் என்பதை அறிந்த, அங்கிருந்த சர்வக்ஞர்களான ரிஷிகள் அனைவரும் அறிந்து ஸ்ரீகிருஷ்ணனை பூஜித்தனர்.

 

யயௌ கைலாஸமத்ரீஷம் சகாரேவ தபோsத்ரச ||166

ஸ்வீயானேவகுணான் விஷ்ணுர் புஞ்சன்னித்யேன ஷோசிஷா ||

ஷார்வம் தப: கரோதீவ மோஹயாமாஸ துர்ஜனாம் ||167

 

அங்கு ரிஷிகளால் பூஜிக்கப்பட்டு, ருத்ரதேவரைக் குறித்து தவம் செய்வதற்காக, கைலாயத்தை நோக்கிப் புறப்பட்டான். அங்கு நித்யமான ஞானத்தினால், ஸ்வ-ஸ்வரூபத்தையே தியானித்தவாறு, ஸ்வரூபனந்தத்தை அனுபவித்திருந்தாலும், ருத்ரரைக் குறித்து தவம் செய்வதாகக் காட்டிக்கொண்டு துர்ஜனர்களை ஏமாற்றினான். என்று இதற்கு சமாதானம் கூறியிருக்கிறார்.

 

ஆகையால், இதனை அறியாமல், ஸ்ரீகிருஷ்ணன் ஷிவனைக் குறித்து தவம் செய்து, வாரிசினைப் பெற்றான் என்று அறிபவன் தைத்யன் என்பது கருத்து.

 

பாப பரிஹாராத்த2 ராமனு

மாபதிய நிர்மிஸித343

த் ரூபரூபகெ பே43சிந்தனெ மாள்ய மானவனு |

ஆபக3ளு த்தீர்த்த2 கு3ரு மா

தாபித்ரு ப்ரபு3 ப்ரதிமெ பூ4தத3

யா பரரகண்ட3வரெ தே3வரு எம்பு3வனெ தை3த்ய ||4

 

பாப பரிஹார்த்த = ராவணனைக் கொன்ற பாவம் பரிகாரம் ஆவதற்காக

ராம = ஸ்ரீராமன்

உமாபதிய = ஈஸ்வரனை

நிர்மிஸித = ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை நிறுவி பூஜித்தான் என்று சொல்பவன் தைத்யன்.

பகவத்ரூபரூபகெ = பரமாத்மனின் ராமகிருஷ்ணாதி ரூபங்களுக்கு

பேதசிந்தனெ மாள்ப மானவனு = வேறுபாடு உண்டு என்று சொல்லும் மனிதன் தைத்யன்

ஆபகளு = புண்யதீர்த்தங்கள் என்று புராணங்களில் சொல்லப்பட்ட கங்கை முதலான நதிகளில் இருக்கும் நீரே

சத்தீர்த்த = புண்ய தீர்த்தம், நம்மை பவித்ரமாக மாற்றும் தீர்த்தம் என்று சொல்பவன்

குரு மாதா பித்ரு பிரபு = குரு, தாய், தந்தை, முதலாளி

ப்ரதிமெ = பஞ்சலோக அல்லது ஷிலா பிரதிமைகள்

பூததயாபரரு = பிராணிகளில் தயை உள்ளவன்

கண்டவரெ = மேலே சொன்னவற்றில் நம் கண்ணிற்கு தெரிபவரே கடவுள் என்பவன் தைத்யன்.

 

ஸ்ரீராமன், ராவணனின் சம்ஹாரம் முடிந்தவுடன், அந்த பாவத்தைப் போக்குவதற்காக, ராமேஸ்வரத்தில் ராமலிங்கத்தை ப்ரதிஷ்டை செய்தார் என்று சொல்பவன் தைத்யன். ஸ்ரீராமதேவர் லிங்கத்தை பிரதிஷ்டை செய்தது தமது பாவத்தைப் போக்குவதற்காக அல்ல. இதை நிர்ணய 22ம் அத்தியாயம் 160ம் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் அஹம்த்வாம் பூஜயிஷ்யாமிஎன்பதிலிருந்து அறியலாம்.

 

இது லோக மோஹனத்திற்காக செய்ததே தவிர, பாப பரிகாரத்திற்காக அல்ல. ராமகிருஷ்ணாதி ரூபங்களுக்கு வேறுபாட்டினை அறிபவன் தைத்யன். ராமகிருஷ்ணாதி ரூபேஷு ததா பேத விசிந்தனம்என்னும் கருட புராண வாக்கியத்தால் இதை புரிந்து கொள்ளலாம்.

 

கங்கை முதலான நீரினைப் பார்த்து, அதை மட்டுமே தீர்த்தம் என்று அறியக்கூடாது. ஸ ஏவ த்ரவரூபேண கங்காம்போ நாத்ர ஸம்ஷய:ஸ்ரீபரமாத்மனே கங்கோதகத்தில், உதக ரூபத்தில் இருந்து நம்மை பவித்ரனாக மாற்றுகிறான் என்று அறியவேண்டும். அப்படியில்லாமல், தண்ணீரே நம்மை பவித்ரமாக மாற்றுகிறது என்று அறிபவன் தைத்யன்.

 

குரு, தாய், தந்தை, கண்ணிற்கு தெரியும் தாமிராதி பிரதிமைகள், தேவாலயங்களில் காணப்படும் சிலைகள், பிராணிகளில் தயை உள்ளவர்கள் - இத்தகையவர்களில் பரமாத்மன் தத்ரூபமாக அந்தந்த பெயர்களில் அங்கங்கு இருப்பதை அறியாமல், நம் கண்ணிற்குத் தெரியும் சராசர பிராணிகளே தேவர்கள் என்று சொல்பவன் தைத்யன்.

 

மாதா பித்ரும் த்வீஜாதீனாம் ஹரி ரூபத்வ சிந்தனம் ||

பஞ்சதாது யயீமூர்த்தௌ ஹரி ரூபத்வ சிந்தனம் ||

 

இத்யாதி கருட புராண வாக்கியம் மேற்சொன்ன பத்யத்தின் ஆதாரம் ஆகும்.

 

ஸுந்த3ர ஸ்வயம் வ்யக்தவெ சிதா3

நந்த3 ரூபக3ளெம்பு3வனு நர

நிந்த3 நிர்மித ஈஷ்வரகெ3 அபி3னமிஸுதிஹ நரனு |

கந்து3கொ3ரள தி3வாகரனு ஹரி

யொந்தெ3 ஸூர்யஸுரோத்தம ஜக3

த் வந்த்3யனெம்பு3வ விஷ்ணுதூ3ஷணெ மாடு3வவ தை3த்ய ||5

 

ஸுந்தர ஸ்வயம் வ்யக்தவு = அழகான ஸ்வயம் வ்யக்த என்று சொல்லப்படும் பிரதிமைகள்

சிதானந்த ரூபகளெம்புவனு = பரமாத்மனிடமிருந்து வேறுபடாத (அபின்னமான) சிதானந்த பகவத்ரூபமே இவை என்று சொல்பவன்

நரனிந்த நிர்மித = மனிதர்கள் பிரதிஷ்டை செய்த

ஈஷ்வரகெ = சிவலிங்கத்திற்கு

அபினமிஸுதிஹ நரனு = நமஸ்காரம் செய்யும் மனிதன்

கந்துகொரள = நீலகண்டரான ருத்ரதேவர்

திவாகரனு ஹரியொந்தே = சூரியனும், ஹரியும் ஒன்றே, இவர்கள் மூவரும் வெவ்வேறு அல்ல என்று சொல்பவன்

சூர்ய சுரோத்தம = சூரிய சர்வோத்தம

ஜகத்வந்த்யனு = அனைத்து உலகங்களிலும் பிரம்மாதி சர்வ தேவதைகளாலும் வணங்கப்படுபவன்

எம்புவ = என்று சொல்பவன்

விஷ்ணு தூஷணே மாடுவவனு = விஷ்ணுவை நிந்திப்பவன்

தைத்ய = இவர்கள் அனைவரும் தைத்யர்களே.

 

திருப்பதி முதலான புண்ணிய க்‌ஷேத்திரங்களில் இருக்கும் ஸ்ரீனிவாசாதி ஸ்வயம் வியக்த பிரதிமைகளிலும், அந்த பிரதிமையே பரமாத்மன் அல்ல. அந்த பிரதிமைகளில் பரமாத்மனின் சன்னிதானத்தை அறியவேண்டுமே தவிர, பிரதிமைகளுக்கும் பரமாத்மனுக்கும் வேறுபாடு இல்லை என்று சொல்லக்கூடாது. அப்படி சொல்பவன் தைத்யன்.

 

ஸ்வயம் வியக்த இடங்களில் இருக்கும் சிவலிங்கங்களில் இருக்கும் ஈஸ்வரனை மட்டுமே வணங்கவேண்டும். மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்களுக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது. கருட புராணத்தில்:

 

அஸ்வம்யவ்யக்த லிங்கேஷு நமனம் விப்ரகுர்வதி |

தே ஸர்வே அசுராக்ஞேயா நாத்ர கார்யா விசாரணா ||

 

ஸ்வயம் வியக்தம் அல்லாத லிங்கங்களுக்கு நமஸ்காரம் செய்பவர்கள் அனைவரும் தைத்யர்கள் என்று சொல்ல வேண்டும். இந்த விஷயத்தில் யோசிக்கவே தேவையில்லை என்கிறார். அதே அர்த்தத்தையே இங்கு சொல்கிறார்.

 

ஈஸ்வரனும், சூரியனும், பரமாத்மனும் ஒன்றே. இவர்களில் பரஸ்பரம் பேதம் இல்லை என்று சொல்பவனும் தைத்யன். இந்த விஷயத்தில் கருட புராண வாக்கியம்.

 

அஸ்வதந்த்ரேண ருத்ரேண ஹரேரைக்ய விசிந்தனம் ||

விஷ்ணோ: சூர்யேண சாகஞ்ச அபேதாதி விசிந்தனம் ||

 

அஸ்வதந்த்ரரான ருத்ர தேவருக்கும் பரமாத்மனுக்கும் ஐக்ய சிந்தனை செய்பவர், விஷ்ணுவிற்கும், சூரியனுக்கும், வேறுபாடு இல்லை என்று சொல்பவர், தைத்யர்கள் என்று சொல்கிறார்.

 

சூரியன் சர்வோத்தமன், பிரம்மாதி வந்த்யன் என்று சொல்பவனும், விஷ்ணு தூஷணை செய்பவனும் தைத்யன். கருட புராணத்தில்:

 

ஸர்வோத்தம: சூர்ய ஏவ விஷ்வாத்யாஸ் தஸ்ய கிங்கரா: ||

இத்யாதி சிந்தனம் பாபம் ஹரி நிந்தேதி சோச்யதி ||

 

சூரியனே சர்வோத்தமன், விஷ்ணு முதலானவர்கள் அவனின் சேவகர்கள் என்று உபாசனை செய்பவர்கள் விஷ்ணு நிந்தகர்கள் எனப்படுபவார்கள். ஆகையால், இப்படி உபாசனை செய்பவர்கள் தைத்யர்கள் என்று சொல்கிறார். அதே அபிப்பிராயத்தையே இங்கும் அறியவேண்டும்.

 

நேமதி3ந்த3ஷ்வத்த2 துலசீ

ஸோமத4ரனலி விமலஷால

க்3ராமக3ள நிவ்வபி4னமிப நர முக்தியோக்3ஸதா3 |

பூ4மியொளு த3ர்மார்த்த2 முக்தி ஸு

காமபேக்‌ஷெக3ளிந்த3 ஷால

க்3ராமக3னிட்டு வ்யதிரிக்த வந்தி3ஸெ து3க்க2வைது3வனு ||6

 

நேமதிந்த = நியமத்துடன்

அஷ்வத்த துலசி = அரச, துலசி

சோமதர = சிவலிங்க, இவற்றில்

விமலஷால க்ராமகளனிட்டு = உத்தமமான சாலிகிராமத்தை வைத்து

அபினமிப = நமஸ்காரம் செய்யும்

நர = மனிதன்

சதா = அனைத்து காலங்களிலும்

முக்தியோக்யனு = முக்தி யோக்யன் ஆகிறான்

பூமியொளு = பூமியில்

தர்ம அர்த்த, முக்தி,

சுகாம = உத்தம பலன்களைக் கொடுக்கும் காம இவற்றின்

அபேக்‌ஷெகளிந்த = விருப்பத்தால்

சாலக்ராமகள வியதிரிக்த = சாலிகிராமம் இல்லாமல்

வந்திஸெ = வணங்கினால்

துக்கவைதுவனு = துக்கத்தை அடைகிறான்.

 

அரச மரத்திற்கும், துளசிக்கும், ஸ்வயம் வ்யக்தமான சிவலிங்கத்திற்கும் நமஸ்காரம் செய்யும்போது, அங்கங்கு சாலிகிராமத்தை வைத்து நமஸ்காரம் செய்பவன் முக்தி யோக்யன். வெறும் தர்மார்த்த காம மோட்ச என்னும் புருஷார்த்தங்களின் விருப்பத்தால் அரச மரத்திற்கோ, துளசிக்கோ, லிங்கங்களுக்கோ அருகில் சாலிகிராமத்தை வைக்காமல், வணங்குபவனுக்கு துக்கமே கிடைக்கும். இந்த விஷயத்தில் கருட புராண வாக்கியம்:

 

ஸ்வயம்வ்யக்தேஷு லிங்கேஷு அஷ்வத்த துலசீஷுச ||

ஸாலிக்ராமம் விஹாயைவ நமனம்யே ப்ரகுர்வதி ||

தே ஸர்வே ஹரினிந்தாயா மதிகாரிண ஏவஹி ||

 

ஸ்வயம்வ்யக்த லிங்கத்திற்கும் அஷ்வத்த துளசிக்கும் நமஸ்காரம் செய்யும்போது, சாலிகிராமத்தை வைக்காமல் யார் நமஸ்காரம் செய்கிறார்களோ, அவர்கள் அனைவரும் பரமாத்மனின் நிந்தனை செய்தவர்கள் ஆகிறார்கள். அதாவது தைத்யர்கள் என்றே அறியவேண்டும் என்று சொல்கிறார். அதே அபிப்பிராயத்தையே இங்கும் தாசார்யர் சொல்கிறார்.

 

விததமஹிமன பி3ட்டு ஸுரரிகெ3

ப்ருதகுவந்த3னெ மாள்ப மானவ

தி3திஜனெ ரி ஹரியு தா ம்ஸ்தி2தனெனினல்லி |

சதுரமுக2 மொத3லாத3கி2ல தே3

வதெக3ளொள கி3ஹனெந்து3 லக்‌ஷ்மீ

பதிகெ3 வந்தி3ஸெ ஒந்த3ரெக்‌ஷண பி3ட்டக3லனவர ||7

 

விததமஹிமன = அனைத்து இடங்களிலும் வியாப்தியாக இருக்கும் பரமாத்மனை

பிட்டு = விட்டு

சுரரிகெ = பிரம்மாதி தேவதைகளுக்கு

ப்ருதகுவந்தனெ = தனியாக நமஸ்காரத்தை

மாள்ப = செய்யும்

மானவ = மனிதன்

திதிஜனெ சரி = தைத்யனே சரி

அல்லி = பரமாத்மனை விட்டு பிரம்மாதிகளுக்கு தனியான நமஸ்காரம் செய்யும் இடங்களில்,

ஹரியு தா சம்ஸ்திதனெனிஸனு = ஹரி, தான் அங்கு இருக்கிறேன் என்று நினைக்கமாட்டான்.

சதுரமுக மொதலாத = பிரம்மதேவரே முதலான

அகிளதேவதெகளொளு = அனைத்து தேவதைகளிலும்

இஹனெந்து = ஸ்ரீஹரி இருக்கிறான் என்று அறிந்து

லக்‌ஷ்மிபதிகெ வந்திஸெ = ஸ்ரீமன் நாராயண தேவருக்கு நமஸ்காரம் செய்ய

அவர = அத்தகையவர்களை

ஒந்தரெக்‌ஷண பிட்டகல = ஒரு நொடிகூட விட்டு விலகாமல் இருப்பான்.

 

பிரம்மாதி எந்த தேவதைகளுக்கு நமஸ்காரம் செய்ய வேண்டுமென்றாலும், பிரம்ம அந்தர்யாமி ருத்ராந்தர்கத என்று அந்தர்கதனான பரமாத்மனுக்கு நமஸ்காரம் செய்தால் மட்டுமே பரமாத்மன் அந்த தேவதைகளில் இருந்து அந்த பூஜாதிகளை ஏற்றுக்கொண்டு உத்தம பலன்களைக் கொடுக்கிறான். அப்படிப்பட்ட மக்களை ஒரு நொடிகூட விடாமல் கூடவே இருப்பான்.

 

அப்படி இல்லாமல், வெறும் பிரம்மாதி தேவதைகளுக்கு மட்டும் தனியாக நமஸ்காரங்களை செய்தால், அதை ஸ்ரீஹரி ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி செய்பவர்கள் தைத்யர்கள் என்று அறியவேண்டும்.

 

அத: பார்த்திக்யனமனம் யே குர்வந்தி ச ஸர்வதா ||

தே ஸர்வே அசுராக்ஞேயா: ந தத்ர ஹரிஸம்ஸ்தித: ||

 

என்னும் கருட புராண பிரம்மகாண்டத்தின் வசனம் இதற்கு ஆதாரமாக இருக்கிறது.

 

ஷைவ ஷூத்3ர கரார்ச்சித மஹா

தே3வ வாயு ஹரிப்ரதிமெ வ்ரு

ந்தா3வனதி3 மாத்3வயதொ3ளிஹ துலசி அப்ர

கோ விவாஹ விவர்ஜிதாஷ்வ

த்தா2விட3பிக3ள ப4க்திபூர்வக

ஸேவிஸுவ நர தை3த்ய ஷாஷ்வத து3க்க2வைது3வனு ||8

 

ஷைவ = சிவனே சர்வோத்தமன் என்று சொல்பவர்கள்

ஷூத்ர,

கரார்ச்சித = இவர்களால் பூஜை செய்யப்படும்

மஹாதேவ = சிவலிங்கங்கள்

வாயு, ஹரி பிரதிமெ = ஹனுமந்த, ராம கிருஷ்ணாதி பிரதிமைகள் இவற்றை

வ்ருந்தாவனதி = துளசி விருந்தாவனத்தில் இருக்கும்

மாஸத்வயதொளிஹ துளசி = துளசி செடியை நட்டு இரு மாதங்கள் ஆகாதிருக்கும் துளசியை

அப்ரஸவகோ = கன்று இடாத பசு

விவாஹ வர்ஜித = திருமணம் ஆகாத

அஷ்வத்த விடபிகள = அஷ்வத்த கிளைகளை

பக்திபூர்வக சேவிசுவ = பக்தியுடன் வணங்கும்

நர = மனிதன்

தைத்ய = தைத்யன்

ஷாஷ்வத துக்கவைதுவனு = நிரந்தரமான துக்கத்தை அனுபவிப்பான்.

 

சிவனை வழிபடுவோர், நான்காம் வர்ணத்தவர்கள் இவர்கள் கையால் பூஜிக்கப்படும் லிங்கங்கள், ஹனுமந்த முதலான வாயு ப்ரதிமைகள், ராமகிருஷ்ணாதி ஹரி பிரதிமைகள் இவற்றை வணங்கக்கூடாது.

 

துளசி விருந்தாவனத்தில் துளசி செடியை வைத்து இரு மாதங்கள் ஆகாத வரைக்கும் அந்த துளசியை பூஜிக்கக்கூடாது. கன்று ஈனாத பசுவை வணங்கக்கூடாது. திருமணம் செய்யாத அஷ்வத்தத்தை பூஜிக்கக்கூடாது. இந்த விதிகளை அறியாமல் இதற்கு எதிராக பூஜையை செய்பவன் தைத்யன். அவன் நிரந்தரமான துக்கத்தை அனுபவிக்கிறான்.

 

கருட புராண பிரம்ம காண்டத்தில்:

ஷைவஷூத்ரார்ச்சிதம் சேஷம் வாயும் து ஹரிமேவச ||

த்விமாஸஹீனாம் துலஸீம் அப்ரஸூதாஞ்ச காம் ஸதீம் ||

விவாஹஷூன்யமஷ்வத்தம் நமனம் மே ப்ரகுர்வதி ||

தேஸர்வே அசுராஞ்ஞேயா நாத்ர கார்யா விசாரணா ||

 

என்னும் வாக்கியங்கள் இந்த பத்யத்திற்கு அர்த்தமாகும். பத்யார்த்தமும் ஸ்லோக அர்த்தமும் ஒன்றேயானதால், தனியாக இதனை மறுபடி விளக்கவில்லை.

 

1மலம்ப4வ முக்2ய மனுஜோ

த்தமர பரியந்தரதி3 முக்தர

ம ஷதாயுஷ்யுள்ளவனு கலி பி3ரம்மனோபாதி3 |

க்ரமதி3 நீசரு தை3த்யரு நரா

4மர பிடி3து3 குலக்‌ஷ்மி கலி அனு

பமரெனிஸுவரு அஸுரரொளு த்3வேஷாதி3 கு3ணதி3ந்த3 ||9

 

கமலசம்பவமுக = பிரம்மதேவரில் துவங்கி

மனுஜோத்தமர பர்யந்தரதி = மனுஷ்யோத்தமர் வரைக்கும்

முக்தரு = முக்தி யோக்யர் எனப்படுகிறார்கள்

கலி,

பிரம்மனோபாதி = பிரம்மதேவரைப் போல

ஸம ஷதாயுஷ்யுள்ளவனு = அவருக்கு சமமான என்றால் பிரம்மமானத்தின்படி 100 ஆண்டு ஆயுள் உள்ளவன்

நராதமரவிடிது = மனுஷ்ய அதமரில் துவங்கி

குலக்‌ஷ்மி = கலியின் மனைவியான அலக்‌ஷ்மி வரைக்கும்

தைத்யர்,

க்ரமதி = கிரமமாக (வரிசையாக) நீசர்கள்

அசுரரொளு = தைத்யரில்

த்வேஷாதி குணதிந்த = த்வேஷம் முதலான குணங்களால், மேற்கூறிய தைத்யர்கள்

கலியனுபம ரெனிஸுவரு = கலிக்கு சமானர் என்று சொல்லப்படுகிறார்கள்.

கலிக்கு சமானர் என எந்த தைத்யரையும் சொல்லமுடியாது என்று அர்த்தம்.

 

பிரம்மதேவரில் துவங்கி, மனுஷ்யோத்தமர் வரை, முக்தியோக்யர் என்றும், மனுஷ்யாதமரில் துவங்கி, கலி வரை, தமோயோக்யர் என்றும் அறியவேண்டும். தைத்யர்களில் கலி ஒருவன் மட்டும், பிரம்மதேவருக்கு சமமான 100 ஆண்டு ஆயுள் உள்ளவன். தைத்யரில் அலக்‌ஷ்மி வரைக்கும், தாரதம்யத்தின்படி கிரமமாக நீசர்கள்.

 

த்வேஷாதிகளில் கலிக்கு சமமான பாபி வேறு யாரும் இல்லை. கருட புராணத்தில்:

 

தல்யாத்யா மானுஷாந்தாஸ்சதே ப்யேவம் பிரம்மவத்கணா: ||

ஸம: ஷதாயு: பர்யந்தமேக ஏவகலி: ஸ்ம்ருத: ||

கலி: ஸமானனாமான: கலேரன்யே ச ஸந்திஹி ||

ஸர்வேஷாமுத்தமோக்ஞேய: கலிரேவ ந சம்ஷய: ||

தூஷணே விஷ்ணு பக்தானாம் தத்ஸமோ நாஸ்தி சர்வதா ||

 

இதன் அர்த்தம்:

கலியில் துவங்கி மனுஷ்யாதமர்கள் வரை, பிரம்மாதி தேவ கணத்தைப் போல, இந்த தைத்ய கணமும் இருக்கிறது. இதில் கலி ஒருவனே பிரம்ம தேவருக்கு சமமான 100 ஆண்டு ஆயுள் உள்ளவன். கலி என்னும் பெயருள்ள தைத்யர்கள் வேறு சிலர் உண்டு.

ஆனால் அவர்கள் மஹாகலிக்கு சமமானவர்கள் அல்ல. கலி ஒருவனே விஷ்ணு த்வேஷத்திலும் அவனின் பக்தர்களின் த்வேஷத்திலும் உத்தமோத்தமன். ஹரி த்வேஷத்தில் அவனுக்கு சமம் வேறு யாரும் இல்லை.

 

இதே அபிப்பிராயத்தையே தாசார்யரும் இங்கு சொல்கிறார்.

 

வனஜம்ப4வ நப்தஷத ஒ

ப்ப3னெ மஹாகலி ஷப்3தவாச்யனு

தி3னதி3னக3ளலி பீ3ள்வரந்த3ந்தமதி3 கலிமார்க்க3

3னுஜரெல்ல ப்ரதீக்‌ஷிஸுத பி3

ம்மன ஷதாப்3தாந்தத3லி லிங்க3வு

அனிலன க3தா3ப்ரஹரதி3ந்த3லி ப4ங்க3வைது3ரு ||10

 

வனஜஸம்பவ = பிரம்மதேவரின் காலமானத்தின்படி

அப்தஷத = 100 ஆண்டுகள்

ஒப்பனெ மஹாகலி ஷப்தவாச்யனு = கலி என்னும் பெயருள்ள தைத்யர்கள் வேறு சிலர் இருந்தாலும், மஹாகலி என்னும் பெயருள்ள தைத்யன் ஒருவனே இருக்கிறான்.

தினதினகளலி = பிரம்மதேவரின் ஒவ்வொரு நாளிலும்

அந்தம்தமதி = அந்தம்தமஸ்ஸில் வீழ்கிறான்

ப்ரதீக்‌ஷிசுத = கலியின் வருகையை எதிர்பார்த்து,

பிரம்ம ஷதாப்தாந்ததலி = பிரம்மதேவரின் 100 ஆண்டுகள் ஆனபிறகு

அனிலன = வாயுதேவரின்

கதாப்ரஹரதிந்தலி = அவரின் கதையால் அடிக்கப்பட்டு

லிங்கவ = லிங்க தேகத்தை

பங்கவைதுவரு = பங்கத்தை அடைகிறார்கள்.

 

கலி என்னும் பெயருள்ளவர்கள் வேறு சிலரும் இருந்தாலும், பிரம்ம கல்பம் முழுக்கவும் இருப்பவன் மஹாகலி ஒருவனே. மற்ற தைத்யர்கள், பிரம்மதேவரின் ஒவ்வொரு நாளிலும், தத்தம் சாதனைகளை முடித்துக்கொண்டு, அன்றன்றே அந்தந்தமஸ்ஸில் விழுந்து, கலியின் வருகையை எதிர்பார்த்தவாறு, அவன் வந்தபிறகு, அவனுடன் சேர்ந்து வாயுதேவரின் கதையால் அடிக்கப்பட்டு, லிங்க தேகம் பங்கத்தை அடைகின்றனர்.

 

கருட புராண பிரம்ம காண்டத்தில்:

ஏகஸ்மின் பிரம்மதிவஸே தே கச்சந்தி தமோந்தகம் ||

தத்ரஸ்தித்வா கலிர்மார்க்கம் ப்ரதீக்‌ஷந்தே ந ஸம்ஷய: ||

ஸாதனை: பரிபூர்ணாஸ்தே வாயுஷஸ்த்ரை: ப்ரபீடிதா: ||

ஷதவர்ஷா நந்தரந்து ஸர்வேஷாம் கலினா ஸஹ ||

வாயோர்கதா ப்ரஹாரேண லிங்கபங்கோ பவிஷ்யதி ||

 

என்னும் ஸ்லோகங்களின் அர்த்தத்தையே தாசார்யரும் இங்கு சொல்லியிருக்கிறார்.

 

மாருதன க3தெயிந்த3 லிங்க3

ரீர போதா3னந்தர தமோ

த்3வாரவைதி3 ஸ்வரூப து3க்க23ளனு ப3விலிஹரு |

வைர ஹரிப4க்தரலி ஹரியலி

தாரதம்யத3 லிருதிஹுது3 ம்

ஸாரத3ல்லி தமஸ்ஸினல்லய்யதி4க கலியல்லி ||11

 

மாருதன = வாயுதேவரின்

கதெயிந்த = கதையினால்

லிங்கஷரீர போதானந்தர = லிங்க சரீரம் பங்கம் ஆனபிறகு

தமோத்வாரதி = நிரந்தரமான அந்தந்தமஸ்ஸை அடைந்து

ஸ்வரூப துக்ககளனு பவிஸலிஹரு = ஸ்வரூப துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்

ஹரிபக்தரலி = ஹரி பக்தர்களிடம்

ஹரியலி = ஹரியிடம்

வைர = த்வேஷம்

தாரதம்யதலி = தாரதம்யத்திற்கேற்ப

ஸம்ஸாரதல்லி = நித்ய சம்சாரத்தில் இருந்து

தமஸ்ஸினலி = அந்தந்தமஸ்ஸில் இருந்து

கலியல்லி = கலியிடம்

அத்யதிக = மிகவும் அதிகமாக

இருதிஹது = ஸ்வரூப துக்க அனுபவம் இருக்கிறது.

 

வாயுதேவரின் கதா பிரயோகத்தினால் லிங்கதேகம் பங்கமாகிய தைத்யர்கள், ஹரியிடமும், ஹரி பக்தர்களிடமும் செய்யும் த்வேஷங்களை அனுசரித்து, தாரதம்யத்தின்படி அதாவது, அதிக த்வேஷம் செய்தவர்களுக்கு ஸ்வரூப துக்கமும் அதிகமாகின்றன. குறைவான த்வேஷம் செய்தவர்களுக்கு ஸ்வருப துக்கம் குறைவாகிறது.

 

இப்படியாக,

* மனுஷ்யாதமருக்கு தாரதம்யத்திற்கேற்ப, தமஸ்ஸில் நித்ய சம்சாரத்திலேயே துக்கமும்,

* மற்ற ராஜர்களுக்கு தாரதம்யத்திற்கேற்ப ஸ்வரூப துக்கத்திலேயே துக்க அனுபவமும்

* கலிக்கு மட்டும் அனைவரைவிடவும் மிகவும் அதிகமான துக்க அனுபவம் ஆகிறது.

 

ததோந்தம் ப்ரவிஷந்த்யேதே தாரதம்யேன ஸர்வஷ: ||

தமஸ்யந்தேபி ஸம்ஸாரே நாத்ர கார்யா விசாரணா ||

 

என்னும் கருட புராண வாக்கியமே இதற்கு ஆதாரமாகும்.

 

ஞானவெம்புது3 மித்2ய அமீ

சீன து3க்க2தரங்க3வெ மீ

சீன பு3த்தி4 நிரந்தரதி3 கலிகி3ஹுது3 தை3த்யரொளு |

ஹீனளெனிபளு ஷதகு3ணதி3 கலி

மானினிகெ3 ஷத விப்ரசித்திகெ3

ஊன ஷதகு3ண காலனேமியெ கம்னெனிஸி3னு ||12

 

ஞானவெம்புது = ஞானம் என்பது

மித்ய = கண்ணிற்கு தெரியும் பதார்த்தங்கள் அனைத்தும் மித்ய என்பதே கலியின் ஞானம்

அஸமீசீன = அது நல்ல ஞானம் அல்ல

துக்கதரங்கவெ = அது துக்கங்களின் அலைகளே

சமீசீன புத்தி = அதுவே நல்ல ஞானம் என்று நினைக்கின்றனர்

தைத்யரொளு = தைத்யர்களில்

இந்தஹ புத்தி = இந்த ஞானமே

கலிகிஹது = கலிக்கு இருக்கிறது

கலி மானினிகெ = கலியின் மனைவி

ஷதகுணதி = கலி செய்யும் த்வேஷங்களைவிட 100 குணங்களால்

ஹீனளெனிபளு = குறைவு எனப்படுகிறாள்.

 

தேவதா தாரதம்யத்தில் எப்படி பிரம்மதேவரைவிட 100 குணங்களால் பக்தி ஞானாதிகளில் ருத்ர தேவர் குறைவு; அவரைவிட இந்திராதிகள் குறைவு என்று சொல்லியிருக்கின்றனரோ, அதுபோலவே ஹரி த்வேஷர்களிலும் கலியே உத்தமோத்தமன் ஆகையால், அடுத்து பார்க்கப்போகும் தாரதம்யம் அனைத்தும் பரமாத்மனின் த்வேஷாதிகளை செய்வதில், ஒருவருக்கு ஒருவர் அதமர் என்றால், அவரைவிட குறைவான த்வேஷத்தை செய்கிறார்கள் என்று அர்த்தம். இப்படி கலியை விட அவனின் மனைவி, அவளைவிட மற்றொருவர் குறைவு என்னும் அர்த்தத்தை அறியவேண்டும்.

 

கலிமானினிகெ = கலியின் மனைவியைவிட

விப்ரசித்தியு ஷத = விப்ரசித்தி, 100 குணங்களால் த்வேஷாதிகளை குறைவாக செய்கிறான்.

விப்ரசித்திகெ காலனேமியு ஷதகுண ஊன = 100 குணங்களால் காலநேமி குறைவு.

இந்த காலநேமியே

கம்சனெனிஸிதனு = கம்சனாக பிறந்தான்.

 

மித்யா ஞானே ஞானபுத்திர் துக்கேச சுகபுத்திமான் || என்னும் கருட புராண வாக்கியத்திற்கேற்ப, மித்யா ஞானத்தையே ஞானமாகவும், துக்கத்தையே சுகமாகவும் அறிந்திருக்கும் ஸ்வபாவம் உள்ளவன் கலி. இவனின் மனைவியான அலக்‌ஷ்மி இவனின் சமளான பாபி அல்ல. ஹரி த்வேஷாதிகளை செய்யும் விஷயத்தில் இவனைவிட 100 அம்சங்கள் குறைவாக இருப்பவள். ஸ்வரூப துக்கங்களிலும் கலிக்கு எவ்வளவு துக்கமோ அவ்வளவு துக்கம் இவளுக்கு இல்லை. அவனைவிட 100 அம்சம் குறைவான துக்கத்தை அனுபவிக்கிறாள்.

 

இவளைவிட த்வேஷாதிகளில் 100 அம்சங்கள் குறைவு - விப்ரசித்தி. விப்ரசித்தியைவிட 100 குணங்களால் குறைவு காலநேமி. இவனே கம்சன் என்று அறியவேண்டும்.

 

காலனேமிகெ3 பஞ்சகு3ணதி3ம்

கீ3ளு மது4கைடபரு ஜன்மவ

தாளி இளெயொளு ஹம்ஸ டி3பி3காஹ்வயதி3 கரெஸி3ரு |

ஐள நாமக விப்ரசித்தி

மாளுவெனிப ஹிரண்யகஷ்யபு

ஷூலபாணிய ப4க்த நரககெ3 ஷத கு3ணாத4மனு ||13

 

காலனேமிகெ = காலநேமியைவிட

மதுகைடபரு = மது கைடப தைத்யர்கள்

பஞ்சகுணதிம் = 5 குணங்களால்

கீளு = நீசர்கள்

இந்த மது கைடபர்களைவிட

இளெயொளு = பூமியில்

ஜன்மவதாளி = பிறவியைப் பெற்று

ஹம்ஸ டிபிகாஹ்வயதி = ஹம்ஸ டிபிகர் என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்கள்

ஐள நாமக = ஐளியின் (பூமியின்) மகனான நரகாசுரன்

விப்ரசித்தி ஸமாளு எனிப = விப்ரசித்திக்கு சமம் என்று சொல்லப்படுகிறான்.

ஷூலபாணிய = ருத்ரதேவரின்

பக்தனரககெ = நரகாசுரனுக்கு

ஹிரண்யகஷ்யபு = ஹிரண்யகஷ்யபனில் நிலைத்திருக்கும் ஹிரண்ய என்னும் தைத்யன்

ஷதகுணாதமனு = 100 குணங்கள் குறைவானவன்.

 

காலநேமியைவிட மதுகைடபர்கள் 100 குணங்கள் குறைவானவர்கள். அவர்களே ஹம்ஸ டிபிகர் என்னும் சால்வ தேசாதிபதியாக பிறந்தனர். பூமியின் மகனான நரகாசுரன், விப்ரசித்திக்கு சமம். விப்ரசித்தியே ஜராசந்தன். நரகாசுரனைவிட ஹிரண்யகசிபுவில் இருக்கும் ஆதி ஹிரண்யன் 100 குணங்களால் அதமன்.

 

தஸ்மாத் பஞ்சகுணைர் ஹீஸௌமதுகைடப ஸம்ஞகௌ ||

தாவேவஹம்ஸடிபிகௌ விப்ரசித்தி ஸமோக்ஞேயே பௌமே வை பூதலே ஸ்ம்ருத: ||

தஸ்மாஸ்மத குணைர்ஹீனோ ஹிரண்ய கஷிபு: ஸ்ம்ருத: ||

 

என்னும் கருட புராண வாக்கியமே இதற்கு ஆதாரமாகும்.

 

கு3ணக3ளத்ரய நீசனெனிஸு

கனககஷிபுகெ3 ஹாடகாம்ப3

கெ3ணெ எனிப மணிமந்தகி3ந்தலி கிஞ்சித்தூ3ன ப43 |

3னுஜவரதா3ரகனு விம்ஷதி

கு3ணதி3 நீசனு லோககண்ட2

நெனிப ஷம்ப3ர தாரகாஸுரக34ம ஷட்கு3ணதி3 ||14

 

கனககஷிபுகெ = ஹிரண்யகசிபுவிற்கு

குணகளத்ரய = 3 குணங்களால்

ஹாடகாம்பக = ஹிரண்யாக்‌ஷன்

நீசனெனிஸுவ = அதமன் எனப்படுகிறான்

ஹாடகாம்பகெ = ஹிரண்யாக்‌ஷனுக்கு

மணிமந்தன்,

எணெயெனிப = சமம் எனப்படுகிறான்

மணிமந்தகிந்தலி = மணிமந்தனைவிட

பக = பகாசுரன்

கிஞ்சிதூன = சிறிது அதமன்

பகனகிந்தலு = பகனை விட

தனுஜவர = தைத்ய ஸ்ரேஷ்டனான

தாரகனு = தாரகாசுரன்

விம்ஷதிகுணதி = 20 குணங்களால்

நீசன்.

தாரகாசுரனுக்கு,

லோகண்டகனெனிப = சஜ்ஜனர்களுக்கு பிரச்னை செய்பவன்

ஷம்பர = ஷம்பராசுரன்

ஷட்குணதி = 6 குணங்களால் அதமன்

 

ஹிரண்யகசிபுவைவிட ஹிரண்யாக்‌ஷன் 3 குணங்களால் நீசன். மணிமந்தன் அவனுக்கு சமமானவன். அவனே சங்கரன். அவனைவிட சிறிது குறைவு பகாசுரன். அவனைவிட 20 குணங்களால் தாரகாசுரன் நீசன். அவனைவிட சஜ்ஜனர்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடிய ஷம்பராசுரன் 6 குணங்களால் அதமன்.

 

கருட புராணம்:

தஸ்மாத்துத்ரிகுணைர் ஹினோ ஹிரண்யாக்‌ஷோ மஹாஸுர: |

மணியான் தத்ஸமோ க்ஞேயோ கிஞ்சிதூனோபக: ஸ்ம்ருத: ||

தஸ்மாத்விம்ஷத் குணைர் ஹீனோ தாரகாக்யோ மஹாஸுர: ||

தஸ்மாத் ஷட்குணிதோ ஹீனோ ஷம்பரோ லோககண்டக: ||

 

இந்த ஸ்லோகங்களே இந்த பத்யத்தின் ஆதாரமாகும்.

 

ரியெனிஸுவனு ஸால்வனிகெ3

ங்கரனு அத4மனு த3ஷ கு3ணதி3

ம்ப3ரகெ3 ஷட்கு3ண நீசரெனிப ஹிடி3ம்ப3கா பா3ணா

ஸுரனு த்3வாபர கீசகனு நா

ல்வரு மரு த்3வாபரனெ ஷகுனியு

கரெஸி3னு கௌரவகெ3 ஸோ3ரமாவ னஹுதெ3ந்து3 ||15

 

சால்வனிகெ = சால்வனுக்கு

சரியெனிசுவனு = மேலே சொன்ன ஷம்பராசுரனைத் தவிர த்வாபரயுகத்தின் இன்னொரு ஷம்பராசுரனும் சமம் எனப்படுகிறான்

இந்த ஷம்பரன்

சங்கரகெ = சங்கர என்று பூமியில் அவதரித்த மணிமந்தனுக்கு

தஷகுணதி = 10 குணத்தால் அதமன்

ஷம்பரகெ = இந்த ஷம்பராசுரனுக்கு

ஹிடிம்பிகா = ஹிடிம்பாசுரன்

ஷட்குணதி = 6 குணங்களால் நீசன்

ஹிடிம்பாசுரன், பாணாசுரன், த்வாபர, கீசகன் ,

நால்வரு சமரு = இந்த நால்வரும் சமமானவர்கள்.

த்வாபரனே ஷகுனியு = த்வாபரனே சகுனி

கௌரவகெ = துரியோதனனுக்கு

சோதரமாவனஹுதெந்து = தாய் மாமனாகப் பிறந்தவன்.

 

ஷம்பராசுரன் சால்வனுக்கு சமம் எனப்படுகிறான். இந்த ஷம்பரன், சங்கர என்று பூமியில் பிறந்த மணிமந்தனுக்கு 10 குணங்களால் அதமன். இந்த ஷம்பரனுக்கு, ஹிடிம்பாசுரன், பாணாசுரன், த்வாபர, கீசகன் என்னும் நால்வரும் 6 குணங்களால் நீசர்கள். தமக்குள் இந்த நால்வரும் சமமானவர்கள். த்வாபரனே ஷகுனி என்று, துரியோதனின் தாய் மாமனாக பிறந்தான். பாணாசுரனே கீசகன்.

 

முந்தைய பத்யத்தில்:

* மணிமந்தனைவிட பகாசுரன் சிறிது குறைவானவன் என்றும்,

* அவனைவிட தாரகாசுரன் 20 குணங்கள் நீசன் என்றும்

* அவனைவிட ஷம்பராசுரன் 3 குணங்கள் நீசன் என்றும் கூறினர்.

 

அந்த பத்யத்திலிருந்து, மணிமந்தனைவிட 26 குணங்களால் ஷம்பராசுரன் குறைவானவன் என்பது தெரிகிறது. இந்த பத்யத்தில் சங்கரனுக்கு 10 குணங்களால் ஷம்பரன் அதமன் என்று சொல்கின்றனர். கருட புராணத்திலும்:

 

ஷம்பரஸ்ய ஸமோ ஞேயோ ஸால்வோ தைத்யேஷு சாதம: |

ஸங்கராஸ்சதஷகுணை: ஷம்பரோ ந்யூன உச்யதே ||

ஷம்பராஸ்ச குணை: ஷட்பிர் ஹிடிம்போ ந்யூன உச்யதே ||

பாணஸ்து தத்ஸமோஞேயோ ஸகீசக இதிஸ்ம்ருத: ||

 

ஆகிய வாக்கியங்களிலிருந்து மேற்கண்ட அர்த்தமே வருகிறது. இந்த இரு இடங்களிலிருந்தும் ஒரு இடத்தில் 26 குணங்களாலும் என்றும்; இன்னொரு இடத்தில் 10 குணங்கள் குறைவு என்றும் ஷம்பரனின் விஷயத்தில் சொல்லியிருப்பதால், ஒன்றுக்கொன்று வேறுபாடு வருகிறது.

 

மணிமந்தனே சங்கரன் என்று அனேக கிரந்தங்களால் தெரியவருகிறது. இப்படி இருக்கையில், இந்த வேறுபாட்டினை எப்படி குறைப்பது என்றால், ஷம்பராசுரன் இருவர் என்று சொல்வது. இதற்கு ஆதாரம், த்ரேதா யுகத்தில் தசரத ராஜனுக்கும், ஷம்பரனுக்கும் போர் நடந்த காலத்தில் ஷம்பரனின் மாயையால், தசரதன், மூர்ச்சையாகி விழுந்தபோது, கைகேயி தசரதனை காப்பாற்றி, அதற்காக அவனிடமிருந்து இரு வரங்களைப் பெற்றாள் என்றும், அவள் அந்த வரங்களை அப்போதே கேட்காமல், அடுத்து, ராமனின் பட்டாபிஷேக காலத்தில், ராமனுக்கு வனவாசமும், பரதனுக்கு பட்டாபிஷேகம் என்றும் கேட்டாள். அந்த வாக்கியத்தால், தசரத ராஜனால் கொல்லப்பட்ட ஷம்பராசுரன் ஒருவன் என்று தெரிகிறது.

 

மற்றும், தாரகாமய யுத்தத்தில் தேவேந்திரனால் கொல்லப்பட்ட ஷம்பரன் ஒருவன் இருக்கிறான். இந்த அர்த்தம் நிர்ணய 11ம் அத்தியாயத்தில்:

 

அதாத்மஸேனா மவம்ருத்யமானாம் வீக்‌ஷ்யாஸுர: ஷம்பரனாமதேய: || என்னும் 185ம் ஸ்லோகத்திலிருந்து துவங்கி,

 

வஜ்ரேண வஜ்ரேனி ஜகான ஷம்பரம்என்னும் 188ம்

ஸ்லோகத்தின் வரைக்கும் சொல்லப்பட்டிருக்கிறது.

 

இது மட்டுமல்லாமல், ரதிதேவியை அபகரித்து, ப்ரத்யும்னனால் கொல்லப்பட்ட ஷம்பரன் த்வாபர யுகத்தின் இறுதியில் ஒருவன் இருந்தான். இந்த அர்த்தம் நிர்ணய 18ம் அத்தியாயத்தில்: புரைவ ம்ருத்யவே வதத்தமேவ ஷம்பரஸ்யஹஎன்னும் 183ம் ஸ்லோகத்திலிருந்து நிஹத்யதம் ஹரே: ஸுத:என்னும் 199ம் ஸ்லோகத்தின் வரை, இந்த கதையை சொல்லியிருக்கிறார்.

 

இதில் தசரத ராஜனால் த்ரேதாயுகத்தில் கொல்லப்பட்ட ஷம்பரனே மறுபடி பிறந்து, தேவேந்திரனால் கொல்லப்பட்டிருக்கலாம். ஆக, இந்திரனால் கொல்லப்பட்ட ஷம்பராசுரன் வேறு. ப்ரத்யும்னனால் கொல்லப்பட்ட ஷம்பராசுரன் வேறு என்பதால், மணிமந்தனைவிட 26 குணங்களால் குறைவான ஷம்பரன், இந்திரனால் கொல்லப்பட்ட ஷம்பராசுரன் என்றும், ப்ரத்யும்னனால் கொல்லப்பட்ட ஷம்பரன், சங்கர அவதாரம் எடுத்த மணிமந்தனே என்றும் தெளிவாக தெரிவதால், மணிமந்தனுக்கும், சங்கரனுக்கும் பேதம் இருக்கிறது என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லை.

 

ஒரு வியாக்யானகாரர், மணிமந்தனைவிட ஷம்பரன் 26 குணங்கள் குறைவு என்றும், சங்கரனைவிட ஷம்பரன் 10 குணங்கள் குறைவு என்றும் எழுதியிருக்கிறார். இது யோசிக்க வேண்டிய விஷயம்.

 

காலநேமியே கம்ஸன் என்னும் விஷயத்தில் ஆதாரம், நிர்ணய 11ம் அத்தியாயம்:

 

ய உக்ரஸேன: ஸுரகாயக: ஸஜாதோயதுஷ்டேவ ததாபிதேய: ||

தவைவஸேவார்த்தமமுஷ்ய புத்ரோ ஜாதோ ஸுர: காலநேமி: ஸ ஈஷ || 197

கந்தர்வஜீனத்ருமிலேன நாம்னா கம்ஸோ ஜிதோ ஏன வராச்சதீபதி || 201

 

முன்னர், உக்ரசேன என்னும் பெயரில் தேவகந்தர்வனாக இருந்தவனே, மறுபடி உக்ரசேன என்னும் பெயரில் யதுகுலத்தில் உனக்கு சேவை செய்யவேண்டி பிறந்தான். அவனுக்கு மகனாக காலநேமி என்னும் தைத்யன் கம்ஸன் என்னும் பெயரில் பிறந்தான். ருத்ரதேவரின் வரபலத்தால் கம்சன் இந்திரனை வென்றான்’.

 

ஜராசந்தனே விப்ரசித்தி என்னும் விஷயத்தில் ஆதாரம் ஸவிப்ரசித்திஸ்ச ஜராஸுதோ பூத்என்று நிர்ணய 11ம் அத்தியாய ஸ்லோகம்.

 

மது கைடபர்களே ஹம்ஸ டிபிகர் என்னும் விஷயத்தில் ஹதௌபுராயௌ மது கைடபாக்யௌ த்வயைவ ஹம்ஸோ டிபிகஸ்ச ஜாதௌ’. நீ முன்னர் எந்த மது கைடபரை சம்ஹாரம் செய்தாயோ, அவர்களே இப்போது ஹம்ஸ டிபிகர் என்று பூமியில் பிறந்திருக்கின்றனர்.

 

பாணாசுரனே கீசகன் என்னும் விஷயத்தில் ஆதாரம், நிர்ணய 11ம் அத்தியாயத்தில் 'யோ பாணமாவிஷ்ய மஹாஸுரோபூத் ஸ்தித: ஸனாம்னா ப்ரதிதோபிபாண: ||

ஸகீசகோ நாம பபூவ ருத்ரவராதவத்ய: ஸதம: ப்ரவேஷ்ய ||216

 

பலிசக்ரவர்த்தியின் மகனான பாணாசுரனிடம், எந்த பாண என்னும் தைத்யன் இருந்தானோ, அவனே இப்போது கீசகன் என்று பிறந்து, ருத்ரதேவரின் வரத்தினால் யாராலும் வெல்லப்பட முடியாதவனாக இருந்தான். அவனை தமஸ்ஸிற்கு அனுப்ப வேண்டியதாகிறது.

 

பிரகலாதனின் பேரனான பலிசக்ரவர்த்தியிடம் நிலைத்திருந்த பலி என்னும் மஹா தைத்யன், இப்போது சால்வன் என்னும் பெயரில் சால்வ தேசாதிபதியாக பிரம்மதத்தனின் மகனாக பிறந்தான்.

 

நிர்ணய 11ம் அத்தியாயத்தில்:

ஆவிஷ்ய யோ பலிமஞ்சஸ்சகார ப்ரதீபமஸ்யாஸு ததாத்வயீஷ ||

ஸஜாஸுரோ பலினாமைவபூமௌ ஸால்வோ நாம்னா பிரம்மதத்தஸ்ய ஜாத: ||211

 

என்னும் வாக்கியத்தால் முந்தைய அர்த்தம் தெளிவாகிறது.

 

சகுனியே த்வாபர என்னும் விஷயத்தில்: ஷகுனிர் நாம யஸ்த்வாஸீத் ராஜாலோகே மஹாரத: || த்வாபரம் வித்திதம் ராஜன்என்னும் பாரதத்தின் ஆதிபர்வ வாக்கியம் ஆதாரமாக இருக்கிறது.

 

முசி இல்வல பாக நாமக

மரு பா3ணாத்3யரிகெ33ஷ கு3

நமுசி நீசனு மூரு கு3ணதி3ந்த34ம வாதாபி |

குமதிதே4னுக3 நூரு கு3ணதி3

ந்த3மரரிபு வாதாபிக34மனு

வமனதே4னுக3னிந்த3 அர்த்த4 கு3ணாத4மனு கேஷி ||16

 

நமுசி, இல்வல, பாக நாமக = இவர்கள் மூவரும் சமம்.

பாணாத்யரிகெ = பாணாசுர முதலானவர்களுக்கு

நமிசி = நமிசி முதலானவர்கள்

தஷகுண = 10 குணங்களால்

நீசனு = நீசர்கள்

நமிசிகிந்தலு = நமிசியைவிட

வாதாபி = வாதாபி என்னும் தைத்யன்

மூரு குணதிந்ததம = 3 குணங்களால் அதமன்

அமரரிபு = தேவஷத்ருவான வாதாபிக்கு

குமதி = கெட்ட புத்தியைக் கொண்ட

தேனுக = தேனும நாமகனு

நூரு குணதிந்த அதமனு = 100 குணங்களால் அதமன்

வமன = பரம நீசனான தேனுகனைவிட

கேஷீ = கேஷி என்னும் தைத்யன்

அர்த்த குணாதமன் = பாதி குணத்தால் நீசன்.

 

* நமிசி, இல்வல, பாக என்னும் மூவரும் சமர். முன்பு கூறிய பாணாசுரன் முதலானவர்களுக்கு 10 குணங்களால் நமிசி முதலானவர்கள் நீசர்கள்.

* அவர்களைவிட வாதாபி 3 குணங்களால் அதமன்.

* அவனைவிட தேனுகாசுரன் 100 குணங்களால் அதமன். வமனன் என்றால் பரம நீசன் என்று அர்த்தம். வமனம் செய்த (வாந்தி எடுத்த) பதார்த்தங்கள் எவ்வளவு நீசமோ அப்படி, தேனுகாசுரனும் பரம நீசன் எனப்படுகிறான்.

 

இங்கு வமனன் என்றால் ஒரு அசுரன் என்று சொல்லி, ஒரு வியாக்யானகாரர் அர்த்தம் சொல்லி, தாரதம்யத்தை எழுதியிருக்கிறார். அதற்கு தாரதம்யத்திலோ, கருட புராணத்திலோ எங்கும் ஆதாரம் இல்லை.

 

கருட புராண வாக்கியம்:

தஸ்மாத்தஷகுணைர் ஹீனோ நமுசிர்தைத்ய ஸத்தம: ||

நமுசீஸ்து ஸம ஞேயௌ பாக இல்வல இத்யுபௌ ||

தஸ்மாச்சத்ரி குணைர் ஹீனோ வாதாபி தானவாதம: ||

தேனுகோ நாம தைத்யஸ்ச தஸ்மாச்சத குணாதம: ||

தஸ்மாத் அர்த்த குணைர்ஹீனோ கேஷீ தைத்யஸ்து விஸ்ருத: ||

 

இந்த ஆதாரத்தினால்,

* வாதாபியைவிட தேனுகாசுரன் 100 குணங்கள் அதமன் என்றும்,

* அவனைவிட கேஷி அசுரன் அர்த்த குணம் அதமன் என்று தெளிவாகிறது.

 

பிரம்மதேவர், பரமாத்மனிடம் கூறிய தைத்ய தாரதம்யத்தையே, கருட புராண பிரம்ம காண்டத்தில் சொல்லியிருப்பதால், இது வரை கூறிய வாக்கியங்கள் அனைத்தும் கருட புராண வாக்கியத்திற்கு சரியாக பொருந்துகிறது என்றும், இந்த ஒரு வாக்கியம் மட்டும் கருட புராண வாக்கியத்திற்கு எதிராக சொல்வது என்பது தாசார்யரின் நோக்கம் அல்ல என்பதை அறிந்து, வமன என்றால் பரம நீசன் என்றே அர்த்தம் சொல்லப்பட வேண்டும் என்பது கருத்து.

 

மத்தெ கேஷீ நாமக த்ருணா

வர்த்த ம லவணாஸுரனு ஒ

ம்ப3த்து நீசாரிஷ்ட நாமக பஞ்ச கு3ணதி3ந்த3 |

தை3த்ய த்தமஹம்ஸ டி3பி3க ப்ர

மத்தவேனனு பௌண்ட்3ரகனு ஒ

ம்ப4த்து கு3ணதி3ந்த34ம மூவரு லவண நாமககெ3 ||17

 

மத்தெ = அடுத்து

கேஷி நாமக = கேஷி என்னும் தைத்யன்

த்ருணாவர்த்த = த்ருணாவர்த்த என்னும் தைத்யனும்

சம = சமமானவர்கள்

இவர்களைவிட, லவணாசுரன்,

ஒந்தத்து நீச = 10 குணங்கள் குறைவானவன்

அவனைவிட,

பஞ்சகுணதிந்த = 5 குணங்களால்

அரிஷ்ட நாமக = அரிஷ்ட என்னும் தைத்யன் நீசன்

தைத்யஸத்தம = தைத்யர்களில் ஸ்ரேஷ்டனான

ஹம்ஸ, டிபிக,

ப்ரமத்த = கர்வம் கொண்ட

வேனனு = வேனாத்மகனான

பௌண்ட்ரக வாசுதேவன்

இவரு மூவரு லவண நாமககெ = இவர்கள் மூவரும் லவணாசுரனுக்கு

ஒம்பத்து குணதிந்ததம = 9 குணங்களால் அதமர்கள்.

 

* கேஷி, த்ருணாவர்த்த இவர்கள் இருவரும் சமம்.

* இவர்களைவிட லவணாசுரன் 10 குணங்களால் அதமன்.

* அவனைவிட அரிஷ்டாசுரன் 5 குணங்களால் அதமன்.

* இவனைவிட ஹம்ஸ, டிபிக, வேனனின் அவதாரமான பௌண்ட்ரக வாசுதேவன்

இவர்கள் மூவரும் 9 குணங்களால் அதமர்கள். இவர்கள் தமக்குள் சமம்.

 

பாபோவேன: பௌண்ட்ரகோ வாசுதேவ:என்னும் நிர்ணய வாக்கியம் வேனாசுரனே பௌண்ட்ரக வாசுதேவன் என்னும் விஷயத்தில் ஆதாரமாக இருக்கிறது. கலி முதலான பெயர்களில் வேறு சில தைத்யர்களும் இருக்கின்றனர் என்று முன்பு பார்த்தோம். அதைப்போலவே இந்த பத்யத்தில் சொல்லியிருக்கும் ஹம்ஸ, டிபிக என்பவர்கள் மது கைடபர்களுடன் சேர்ந்திருந்தவர்கள் அல்லாது, வேறு இருவர் என அறியவேண்டும்.

 

மது கைடபர்களை 13ம் பத்யத்தில் காலநேமிக்கு 5 குணங்களால் அதமர் என்று பார்த்தோம். அவர்களே ஹம்ஸ டிபிகர் என்று அதே பத்யத்தில் பார்த்ததால், தாரதம்யத்தில் மது கைடபர்களுக்கும் ஹம்ஸ டிபிகர்களுக்கும் வேறுபாடு சொல்வது சாத்தியமில்லை.

 

இந்த பத்யத்தில் அரிஷ்டாசுரனை விட ஹம்ஸ டிபிகர் நீசர்கள் என்று சொல்லியிருப்பதால், இவர்கள் வேறு அவர்கள் வேறு என்பது நிச்சயமாகிறது.

 

கேஷீதைத்ய ஸமோஞ்ஞேயோ த்ருணாவர்த்தோ மஹாஸுர: ||

தஸ்மாத்தஷகுணைர்ஹினோ லவணோ தைத்யஸத்தம: ||

தஸ்மாத் பஞ்சகுணைர் ஹினோsரிஷ்டோ நாம மஹாஸுர: ||

தஸ்மான் நவகுணைர் ஹினோ ஹம்ஸோ நாம மஹாஸுர: ||

டிபிகஸ்து ஸமோ ஞ்ஞேயோ தத்ஸம: பௌண்ட்ரகஸ்ம்ருத: ||

 

என்னும் கருட புராணத்து ஸ்லோக அர்த்தமே இந்த பத்ய அர்த்தமாக இருக்கிறது.

 

குறிப்பு:

இந்த பத்யத்தில், வேறு சில புத்தகங்களில் பாட பேதம் காணப்படுகிறது. லவணாஸுரன ஒம்பத்துஎன்றும் பௌண்ட்ரகனு எம்பத்துஎன்று இருக்கிறது. ஒந்தத்து என்றும் ஒம்பத்து என்றும் கமலாபதி தாசரின் வியாக்யான புத்தகத்தில் பாடம் இருக்கிறது. இந்த பாடம், கருட புராண வாக்கியங்களுக்கு சரியாகப் பொருந்துவதால், இந்த பாடமே சரியென்று தோன்றுகிறது. இந்த கருட புராண ஸ்லோகங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த ஆதாரத்தினாலேயே இதை சொல்லியிருக்கிறோம்.

 

ஈஷனெ நானெம்ப32ளது3

ஷ்ஷானா வ்ருஷஸேன தை3த்யா

க்3ரே ஜராந்த4 ம பாபிக3ளொளத்3யதி4|

கம் கூபவிகர்ண ரி ரு

க்3மி ஷதாத4ம ருக்மிகி3ந்த ம

ஹாஸுரனு ஷதத4ன்வகிர்மீரரு ஷதாத4மரு ||18

 

ஈஷனெ நானெம்ப = பரமாத்மனே நான் என்று சொல்லும்

கள = பாபியான

துஷ்ஷாசன = துச்சாதனன்

வ்ருஷஸேன,

தைத்யாக்ரேஸர = தைத்யர்களில் சிறந்தவனான

ஜராசந்த சம = இவர்கள் மூவரும் சமம்.

பாபிகளொளத்யதிக = பாபிகளில் மஹா பாபிகள் எனப்படுகிறார்கள்

கம்ஸ, கூபவிகர்ண = இவர்கள்

சரி = சமமானவர்கள்

இவர்களைவிட

ருக்மி ஷதாதம = 100 குணங்களால் ருக்மி அதமன்

ருக்மிகிந்த = ருக்மியைவிட

மஹாஸுரனு = மஹா தைத்யனான

ஷததன்வி, கிர்மீ = இவர்கள்

ஷதாதமரு = 100 குணங்களால் குறைவானவர்கள்.

 

* பாபியான துச்சாதனன், வ்ருஷஸேனன், ஜராசந்தன், இவர்கள் மூவரும் சமமானவர்கள்.

* கம்சன், கூபகர்ணன் இவர்கள் சமமானவர்கள்.

* இவர்களைவிட ருக்மி, 100 குணங்கள் குறைவானவன்.

* அவனைவிட ஷததன்வி, கிர்மி இருவரும் 100 குணங்களால் குறைவானவர்கள்.

 

மதி3ரபானீ தை3த்யக3ணதொ3

34மரெனிபரு காலிகேயரு

அதி4கரிகெ3 மரஹரு தே3வாவேஷ ப3லதி3ந்த3 |

வத3ன பாணி பாத3 ஸ்ரோத்ரிய

குத3 உபஸ்த2 க்3ராண த்வக்ர

கதி4பதை3த்யரு நீசரெனிபரு காலிகேயரிகெ3 ||19

 

மதிரபானி தைத்யகணதொளு = மத்யபானம் செய்யும் தைத்ய கணத்தில்

காலிகேயரு,

அதமரெனிபரு = அதமர் எனப்படுகிறார்கள்.

தேவாவேஷ பலதிந்த = இவர்களில் தேவதா ஆவேசம் அதிகம் இருந்த காரணத்தால்

அதிகரிகெ சமரஹரு = தம்மைவிட உத்தம கக்‌ஷையில் இருந்தவர்களுக்கு சமம் எனப்படுகின்றனர்.

வதன = வாக்கிற்கு அபிமானி

பாணி = கைகள்,

பாத = கால்கள்

ஸ்ரோத்ரிய = காதுகள்

குத உபஸ்த = மல மூத்ர இந்திரியங்கள்

க்ராண = மூக்கு

த்வக் = சர்மம்

ரஸன = நாக்கு, இவற்றிற்கு

அதிப = அபிமானிகளான தைத்யர்

காலிகேயரிகெ = காலிகேயர் என்னும் தைத்யனுக்கு

நீசரெனிபரு = ஒவ்வொருவரும் 100-100 குணங்களால் அதமர் எனப்படுகின்றனர்.

 

வதனாபணி என்னும் பத்யத்தால் தாசார்யர் சொல்லியிருக்கும் இந்திரியாபிமானிகளின் தாரதம்யத்தை இந்த பத்யத்தில் சொல்லிய கிரமத்தில் - முகம், கை, பாதம் என எடுத்துக் கொண்டால், கருட புராண வாக்கியத்திற்கும், தாரதம்ய சிந்தாமணி என்னும் கிரந்தத்திற்கும் வேறுபாடு வருகிறது.

 

தாசார்யரின் பத்யத்தில் சந்தி உட்கார்வதற்காக வதனவாணி என பெயர்களை சொல்லி, முக்ய இந்திரியாபிமானி தைத்யர்கள், காலிகேயனுக்கு நீசன் என்று சொல்கிறார். இதற்கான அர்த்தத்தை கருட புராண வாக்கியத்திற்கேற்ப, இந்த பதங்களை புரிந்து கொள்ளவேண்டும். எப்படியெனில், கருட புராண வாக்கியம்:

 

தஸ்மாச்சத குணைர்ஹினோ சித்தமான்யஸுரோ மஹான் ||

ஷரீரஸ்யாபிமானீது தஸ்மாச்சத குணாதம: ||

தஸ்மாச்சதகுணைர் ஹினோ ஹஸ்தமான்யஸுரோ மஹான் ||

தஸ்மாச்சதகுணைர்னோ பாதமான்ய ஸுரோமஹான் ||

ஸ்ரோத்ரேந்த்ரியாபிமானீது தஸ்மாச்சத குணாதம: ||

சக்‌ஷுரிந்திரியமானீது தஸ்மாச்சத குணாதம: ||

தஸ்மாச்சத குணைர்ன்யூனோ ஸ்பர்ஷமான்யஸுரோ மஹான் ||

தஸ்மாச்சத குணைர் ந்யூனோ க்ராணமான்ய ஸுரோ மஹான் ||

தஸ்மாச்சதகுணைர் ந்யூனோ வாங்மனீஹ்யஸுரோ மஹான் ||

தஸ்மாச்சதகுணைர் ந்யூனோ ஷிஷ்னமான்யஸுரோ மஹான் ||

 

* காலகேயரைவிட சித்தாபிமானியான தைத்யர்கள் 100 குணங்கள் குறைவு.

* அவனைவிட தேஹாபிமானி தைத்யர்கள் 100 குணங்கள் குறைவு

* அவனைவிட ஹஸ்தமானி தைத்யர்கள் 100 குணங்கள் குறைவு

* அவனைவிட பாதமானி தைத்யர்கள் 100 குணங்கள் குறைவு

* அவனைவிட ஸ்ரோத்ரேந்த்ரியாபிமானி தைத்யர்கள் 100 குணங்கள் குறைவு

* அவனைவிட சக்‌ஷுரபிமானி தைத்யர்கள் 100 குணங்கள் குறைவு

* அவனைவிட ஸ்பர்ஷமானி தைத்யர்கள் 100 குணங்கள் குறைவு

* அவனைவிட க்ராணமானி தைத்யர்கள் 100 குணங்கள் குறைவு

* அவனைவிட வாக்யாபிமானி தைத்யர்கள் 100 குணங்கள் குறைவு

* அவனைவிட ஷிஷ்னாபிமானி தைத்யர்கள் 100 குணங்கள் குறைவு

 

பத்யத்தில் இருக்கும் சொற்களை இப்படியாக பொருந்திக் கொள்ளவேண்டும் என்பது கருத்து. சில தைத்யர்களின் தாரதம்யத்தை சில இடங்களில் மேலும் கீழுமாக மாற்றி சொல்லியிருக்கலாம். அதன் காரணம் என்னவெனில்:

 

அதமானாந்து தைத்யானாம் உத்தமேஸ்தாம்யமுச்யதே ||

தத்ராவேஷாச்சவிஞ்ஞேயம் தேவானாம் நாத்ரஸம்ஷய: ||

 

அதமர்களான தைத்யர்களை சில இடங்களில் உத்தம கணத்தில் சேர்த்திருப்பர். அங்கு தேவதா ஆவேச பலத்தினால் அப்படி சொல்லியிருக்கிறார்கள் என்று அறியவேண்டும், என்னும் கருட புராண வாக்கியத்தால், மேல் கீழ் என சொல்லியிருக்கும் வேறுபாட்டினை பரிகாரம் செய்யவேண்டும்.

 

ஞான கர்மேந்தி3ரியக3ளிகெ3 அபி4

மானி கல்யாத்3யகி2ல தி3திஜரு

ஹீனகர்மவ மாடி3 மாடி3ஸுதிஹரு ர்வரொளு |

வாணி பா4ரதி க1மலப4வ பவ

மானரிவரச்சி2ன்ன ப4க்தரு

ப்ராண அஸுராவேஷரஹிதரு ஆக2ணாஷ்ம||20

 

ஞான கர்மேந்திரியகளிகெ = கண் முதலான ஞானேந்திரியங்கள், வாக் முதலான கர்மேந்திரியங்கள் இவற்றிற்கு

அபிமானி = அபிமானிகளான

கல்யாதி = கலி முதலான

அகிள திதிஜரு = அனைத்து தைத்யர்களும்

ஹீனகர்மவ மாடி மாடிசுத = பாப கர்மங்களை செய்து, ஜீவர்களிடமிருந்தும் செய்வித்து,

இருதிஹரு சர்வரொளு = அனைவரிலும் இருக்கின்றனர்.

வாணி = சரஸ்வதிதேவி

பாரதி = பாரதிதேவி

கமலபவ = பிரம்மதேவர்

பவமானரு = வாயுதேவர், இவர்கள் அனைவரும்

அச்சின்ன பக்தரு = எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் பக்தர்கள்

ப்ராண = பிராணதேவர் முதலான நால்வரும்

அசுராவேஷரஹிதரு = அசுர ஆவேசம் இல்லாதவர்கள்

ஆகணாஷ்மசம = தங்கத்தின் சிறப்பைக் காட்ட உரைகல் இருப்பதைப்போல, பகவந்தனின் குணங்களை வெளிப்படுத்தும் விஷயத்தில், வாயுதேவர் உரைகல்லைப் போல இருக்கிறார்.

 

ஞானேந்திரிய, கர்மேந்திரியங்களுக்கு அபிமானிகளான தைத்யர்கள் அனைவரிலும் இருந்து, பாப கர்மங்களை செய்து செய்விக்கின்றனர். தத்வாபிமானி தேவதைகள் தேகத்தில் இருக்கையில், இவர்கள் (தைத்யர்கள்) பாவ கர்மங்களை செய்விக்கின்றனர்.

அது எப்படியெனில், ருத்ரதேவர் முதலான தேவதைகள் அனைவரும் கலி முதலானவர்களால் வழிநடத்தப்பட்டு, அவர்களும் பாப கர்மங்களை அனுமதிக்கின்றனர்.

 

கருட புராண வாக்கியம்:

கல்யாத்யை: ப்ரேரிதா: ஸர்வே ருத்ராத்யாப் யதிகாரிண: ||

கதாசித்ஸுவிருத்தஞ்ச குர்வந்தி தவஸத்தம ||

 

கலி முதலானவர்களால் வழிநடத்தப்பட்டு, ருத்ராதிகள் சில காலங்களுக்கு உனக்கு எதிரான செயல்களை செய்வதுண்டு என்று சொல்கின்றனர். சரஸ்வதி, பாரதி, பிரம்மதேவர், வாயுதேவர் இவர்களுக்கு மட்டும் அசுர ஆவேசம் இல்லை.

 

ப்ராணஸ்ய நாசுராவேஷோ ஆகணாஷ்மஸமோஹிஸ: ||

 

ப்ராணதேவருக்கு அசுர ஆவேசம் இல்லை. அவர் பகவத் ஸ்வரூபத்தை காட்டுவதில் உரைகல்லாக இருக்கிறார். என்னும் பாகவத 11ம் ஸ்கந்த தாத்பர்ய வாக்கியத்திலிருந்து மேற்கண்ட அர்த்தம் வருகிறது.

 

ஹுதவஹாக்‌ஷாத்3 யமரரெல்லரு

யுதரு கல்யாவேஷ விதி4 மா

ருத ரஸ்வதி பா4ரதியர வதாரதொ3ளகி3ல்ல |

க்ருத புடாஞ்லியிந்த3 தன்னய

பிதன ம்முக23ல்லி நில்லுத

நுதிஸி பி3ன்னயிஸி3னு தன்னொளு க்ருபெய மாடெ3ந்து3 ||21

 

ஹுதவஹாக்‌ஷாதி = அக்னி நேத்ரரான ருத்ரதேவரே முதலான

அமரரெல்லரு = தேவதைகள் அனைவரும்

கல்யாவேஷயுதரு = கலியின் ஆவேசம் உள்ளவர்கள்

விதி = பிரம்மதேவர்

மாருதி = வாயுதேவரின் அவதாரமான ஹனுமத் பீம மத்வாதிகள்

சரஸ்வதி பாரதியர அவதாரதொளகெ = பாரதியரின் அவதாரமான திரௌபதி முதலானவர்களிலும்

இல்லா = கலி பிரவேசம் இல்லை

க்ருதபுடாஞ்சலியிந்த = பிரம்ம தேவர் கை குவித்து

தன்னய பிதன = தன் தந்தையின்

சம்முகதல்லி நில்லுத = எதிரில் நின்று

தன்னொளு = தனக்கு

க்ருபெய மாடெந்து = கருணையைக் காட்டு என்று

நுதிஸி பின்னயிஸிதனு = போற்றி வணங்கி கேட்டுக் கொண்டார்

 

ருத்ராதி அனைத்து தேவதைகளிலும் கலியின் ஆவேசம் உள்ளது. வாயுதேவர், சரஸ்வதி, பாரதி இவர்களுக்கு மூலரூபத்திலும், அவதாரங்களிலும் கலி பிரவேசம் இல்லை. இந்த விஷயங்கள் அனைத்தையும், பிரம்மதேவர் பரமாத்மனை வணங்கும்போது, தைத்யர்களின் தாரதம்யத்தை சொல்லியவாறு, பின்னர் கைகுவித்து வணங்கி நின்று, ‘அச்சின்ன பக்தனான என்னிடம் கருணை காட்டுஎன்று வேண்டிக் கொண்டார். இவை அனைத்தும் பின்வரும் கருட புராண வாக்கியத்தால் புரிகிறது.

 

த்வயிஹ்யச்சின்ன பக்தாய தயாம்குரு மஹாப்ரபோ ||

இதி ஸ்துத்வா ஹரிம் பிரம்மா ப்ராஞ்சலி: ஸ்தித அக்ரத: ||

 

ருத்ராதி தேவதைகளுக்கு கலி பிரவேசம் உண்டு என்றும், வாயு முதலான நால்வருக்கு மட்டும் அது இல்லை என்னும் விஷயத்தின் ஆதாரத்தைப் பற்றி சொல்ல வேண்டியதாகிறது. நிர்ணய 18ம் அத்தியாயத்தில்:

 

ஷுத்தே பாகவதே தர்மே நிரதோ யத்வ்ருகோதர: |

என்னும் 4ம் ஸ்லோகத்தில் துவங்கி,

 

தஸ்மாதேகோ வாயுரேவ தர்மே பாகவதே ஸ்தித: ||

லட்சுமி: சரஸ்வதிச்சேதி பரஷுக்ல த்ரயம் ஸ்ம்ருதம் ||

 

என்னும் 27ம் ஸ்லோகத்தின் வரைக்கும், இந்த விஷயத்தை சொல்லியிருக்கிறார்.

கிரந்தம் பெரிதாகிவிடும் என்னும் பயத்தால், அந்த ஸ்லோகங்களை எழுதாமல், அவற்றின் அர்த்தத்தை மட்டும் இங்கே கொடுக்கிறோம்.

 

சுத்தமான பாகவத தர்மத்தை பின்பற்றுபவர் பீமசேனதேவர் மட்டுமே. ஆகையால், அவர் எந்த காலத்திலும் காம்ய கர்மங்களை பின்பற்றியவரில்லை. எந்த விதத்திலும், தேவதைகளிடமோ, மனுஷ்யர்களிடமோ அவர் எதையும் யாசித்ததில்லை. எந்தவொரு பலனை எதிர்பார்த்தும், ஸ்ரீஹரியை அவர் எந்த காலத்திலும் வணங்கியதில்லை.

ஏகசக்ர நகரத்தில் இருந்து யாசகம் செய்த காலத்திலும், வணிகர்களிடமிருந்து அரசர்கள் கப்பம் பெறுவதைப் போல, அவரும் ஹுங்காரம் செய்து பிக்‌ஷை பெற்றுக் கொண்டிருந்தார். அன்ய தேவதைகளை அவர் என்றைக்கும் நமஸ்காரம் செய்தவரில்லை. கிருஷ்ணனைத் தவிர வேறு யாரையும் அவர் பூஜித்ததில்லை.

பரமாத்மனுக்கு எதிரான செயல்களை அவர் என்றும் செய்தவரில்லை. போர்க்களத்தில், நிராயுதபாணிகள் மேல் யுத்தம் செய்தவரில்லை.அவைஷ்ணவனான துரியோதனன் இறந்த பிறகு, அவனின் குடும்பத்திற்காக என, திருதராஷ்டிரன் சிறிது செல்வத்தைக் கேட்டபோது, ஒரு காசுகூட பீமசேனதேவர் கொடுக்கவில்லை. இறுதிச் சடங்குகளை செய்வதற்கும் அனுமதி கொடுக்கவில்லை.

துரியோதனாதிகளுக்கு அன்பு காட்டவில்லை. அவைஷ்ணவருடன் என்றும் நட்பு பாராட்டியதில்லை. கிருஷ்ணன் எதிரில் இல்லாதபோதும், யாராவது பரமாத்மனை தூஷித்தால், அவரின் நாக்கினை அறுத்து வந்தார். தர்ம ஞான விஷயத்தில் அவருக்கு என்றும் சந்தேகமே இருந்ததில்லை.

 

தன் வித்யையை வைத்து அவர் பிழைக்கும் வழியை மேற்கொள்ளவில்லை. ஆகையால், நஹுஷ ராஜன் பாம்பாக வந்து பீமசேனரை விழுங்குவதற்கு வந்தபோதும், யமதர்மன், யக்‌ஷ ரூபத்தில் வந்தபோதும், தம் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறவில்லை. அஸ்திராபிமானி தேவதைகளின் பிரார்த்தனை ரூபமான அஸ்திர யுத்தத்தை செய்யவில்லை. கிருஷ்ணனின் ஆணைக்கேற்ப,  அஸ்வத்தாமாசார்யர் ஏவிய அஸ்திரங்களுக்கு பதில் அஸ்திரங்களை ஏவி, அவரின் அஸ்திரங்களை அமைதிப்படுத்தினார்.

 

அலம்ப என்னும் அசுரன் மறைந்திருந்து போர் புரிந்தபோது, கிருஷ்ணனின் ஆணைக்கேற்ப அஸ்திர யுத்தத்தில் அவனை வென்றார். இஷ்டம் இல்லாத பீமசேனதேவரின் கையால், கிருஷ்ணன் அஸ்திர யுத்தத்தை ஏன் செய்வித்தான் என்றால், அஸ்வத்தாமாசார்யருக்கு சமமாக அஸ்திர யுத்தத்தை செய்ய வேண்டுமெனில், அர்ஜுனனைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற சொல் இருந்தது. பீமசேனதேவர் அஸ்திர யுத்தத்தில் தேர்ந்தவர் அல்ல என்றும் பேச்சு இருந்தது. அவர், சர்வக்ஞர் என்று மக்களுக்கு காட்டுவதற்காக, அஸ்வத்தாம மற்றும் அலம்ப இவர்கள் இருவருடன் அஸ்திர யுத்தம் செய்யுமாறு ஸ்ரீகிருஷ்ணன் ஆணையிட்டான்.

 

அப்போதும், அஸ்திராபிமானி தேவதைகளுக்கு ஆணையைக் கொடுத்து போர் புரிந்தாரே தவிர, அஸ்திராபிமானிகளை அவர் வேண்டவில்லை. தேவதைகள் பிரத்யட்சமாக வந்தபோதும், ஸ்ரீகிருஷ்ணன் அவர்களை வணங்கு என்று சொன்னபோதும், அவர் அந்தர்யாமியான விஷ்ணுவிற்கு நமஸ்காரம் செய்தார்.

 

இந்த பீமசேனதேவரை அனுசரித்து பாரதிதேவியர் மட்டுமே இருந்தார். தன் நலனுக்காக, திருதராஷ்டிரனிடமிருந்தும் அவர் வரம் பெறவில்லை. மஹா ஆபத்து காலங்களிலும் துரியோதனாதிகளை சபிக்கவில்லை. எந்த காலத்திலும் மனஸா, வாசா, ஸ்ரீபரமாத்மனுக்கு விரோதமான காரியங்களை அவர் செய்யவில்லை.

 

மற்ற அனைவரும் சின்ன பக்தர்கள் எனப்படுகின்றனர். அதாவது, நடுவில் பக்திக்கு களங்கம் வருமாறு இருந்தனர். அது எப்படியெனில்:

 

ஸ்யமந்தக மாணிக்கத்தின் விஷயத்தில், கிருஷ்ணன் தன்னிடம் இல்லை என்று பொய் சொன்னதாக நினைத்து, பலராமன் கிருஷணனை எதிர்த்தான். பிராமணனின் குழந்தையை காப்பாற்றிய காலத்தில் அர்ஜுனன், ஸ்ரீகிருஷ்ணனை புறக்கணித்தான்.

பிரத்யும்ன, உத்தவ, ஸாம்ப, அனிருத்த முதலானவர்கள் அனைவரும் சுபத்திரையை அர்ஜுனனுக்கு கொடுக்கும் விஷயத்தில், ஸ்ரீகிருஷ்ணனுக்கு சம்மதம் என்று அறிந்தாலும், அந்த விஷயம் பிடிக்காமல் அர்ஜுனனுடன் போரிட்டு அவனை தடுத்தனர்.

 

ஒரு சமயம் சாத்யகி, அர்ஜுனன் கிருஷ்ணனுக்கு சமம் என்று அறிந்தான். தர்மராஜன் கிருஷ்ணனை சாதாரண மனிதன் என்று நினைத்து, ஜராசந்தனின் விஷயத்தில் பீமசேனாதிகளை அனுப்ப பயந்தான். கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு தூதனாக துரியோதனின் சபைக்குப் போகும்போது, துரியோதனன் கிருஷ்ணனை கட்டிப் போடுவான் என்னும் சந்தேகத்துடன் விதுரன், கிருஷ்ணனை அந்த சபைக்குப் போக வேண்டாம் என்றான்.

 

கப்பத்தைக் கொடு என்று நகுலன் கிருஷ்ணனுக்கு சொல்லி அனுப்பினான். குரு (kuru) குலம் அழிந்ததற்கு கிருஷ்ணனே காரணம் என்று சகதேவன் நினைத்தான். தேவகி வசுதேவர் கிருஷ்ணனை மனிதன் என்று நினைத்தனர். பீஷ்மாசார்யர் பரசுராமதேவரை தூஷித்தார். அவருடன் போர் புரிந்தார். த்ரோணாசார்யர், கர்ண, அஸ்வத்தாமாசார்யர், க்ருபாசார்யர், இவர்கள் அனைவரும் கிருஷ்ணனைக் கொல்ல வேண்டும் என்று நினைத்தனர்.

 

ருத்ர முதலான தேவதைகளும், சில நேரங்களில், ஸ்ரீபரமாத்மனுடன் விரோதம் செய்தனர். இப்படி இருக்கையில், ரிஷிகள், மனுஷ்யர், கந்தர்வர்களின் விஷயத்தில் இவர்கள் அனைவரும் சின்ன பக்தர்கள் என்று சொல்வதில் என்ன பிரச்னை? ஜென்ம ஜென்மாந்தர அஞ்ஞானத்தால் பரமாத்மனை அவ்வப்போது புறக்கணித்து வந்தனர்.

 

ஆகையால், வாயுதேவர் ஒருவரே சுத்த பாகவத தர்மத்தை பின்பற்றுபவர் என்று அறியவேண்டும். மற்றும் லட்சுமிதேவியர், சரஸ்வதி தேவியர் இவர்கள் மூவரும் பரசுக்ல த்ரயர்கள் என்று பெயர் பெற்றனர். அதாவது, அசுர ஆவேசம் இல்லாத சுத்த தர்மம் உள்ளவர்கள். அவிச்சின்ன பக்தர்கள் என்று அறியவேண்டும். வாயுதேவரை சொன்ன பிறகு, பிரம்மதேவரையும் சொன்னதாக ஆயிற்று. சரஸ்வதி தேவியரை சொன்னதால், பாரதிதேவியரையும் சொன்னதாக ஆயிற்று. என்னும் நிர்ணய வாக்கியங்களால் பிரம்ம வாயு சரஸ்வதி பாரதி ஆகியோர் அவிச்சின்ன பக்தர்கள் என்றும், இவர்களில் கலி ஆவேசம் இல்லை என்றும், ருத்ராதி மற்ற அனைவரிலும் கலி பிரவேசம் உண்டு என்றும் தெளிவாக புரிகிறது.

 

த்3வேஷிதை3த்யர தாரதம்யத3

தூ3ஷணெயு பூ4ஷணக3ளென்னதெ3

தோ3ஷவெம்பு3வ த்3வேஷி நிஸ்சய இவர நோட3ல்கெ |

க்லேஷக3ளனைது3வனு ப4ஹுவித3

ம்ஷயவு ப33ல்ல வேத3

வ்யாஸ க3ருட3புராணத3லி பேளித3ரு ருஷிக3ளிகெ3 ||22

 

த்வேஷி = பகவத் த்வேஷியரான

தைத்யர தாரதம்யத = தைத்யர்களின் தாரதம்யத்தை

தூஷணெயு = தூஷணை என்பது

பூஷணகளென்னதெ = தாரதம்யத்தின்படி தைத்யர்களை தூஷிக்க வேண்டும் என்பதை அறியாமல்

தோஷவெம்புவ = தைத்யர்களை தூஷிப்பது தோஷம் என்று சொல்பவன்

இவர நோடல்கெ = இந்த தைத்யர்களை பார்ப்பதற்கு; அதாவது, அவர்கள் எப்படி பகவத் த்வேஷிகளோ அப்படியே தைத்யர்களை தூஷிப்பது பாவம் என்று சொல்பவனும்கூட பகவத் த்வேஷியே என்பது நிச்சயம்.

கருட புராணதலி = கருட புராணத்தில்

வேதவியாஸ = வேதவியாசதேவர்

ரிஷிகளிகெ = ரிஷிகளுக்கு

பேளிதரு = கூறினார்.

 

தேவதைகளை ஸ்தோத்திரம் செய்வது எப்படி புண்ய சாதனையோ, அப்படியே பகவத் த்வேஷிகளான தைத்யர்களை தூஷித்தால் பாவம் என்று யார் சொல்கிறானோ அவனும் ஒரு தைத்யனைப் போல, பகவத் த்வேஷியே என்று சந்தேகமில்லாமல் அறியவேண்டும். இவனுக்கும், தைத்யர்களுக்கு கிடைக்கும் கஷ்டங்களே கிடைக்கின்றன.

 

தைத்யனிந்தா ந குர்வந்தி தேபிதத்பல பாகின: -- என்னும் கருட புராண வாக்கியமே இதற்கு ஆதாரம். இந்த விஷயங்களை கருட புராணத்தில் வேதவியாச தேவர் சொல்லியிருக்கிறார். ஸௌனகாதிகளுக்கு வியாச சிஷ்யரான சுதர் இவற்றை உபதேசித்தார். அதையே தாசார்யர் இங்கு சொல்லியிருக்கிறார் என்பது கருத்து.

 

ஜாலி நெக்கி3லு க்‌ஷுத்3ரஷிலெ ப3ரி

கா3லபுருஷன பா3தி4பவு

ம்மோளகெ3ய மெட்டித3வகு3ண்டெ கண்டகக3ள ப4|

சேளு ர்ப்பவ கொ3ந்த3வார்த்தெய

கே1ளி மோதி3பகி3ல்ல அக4 யம

நாளுக3ள ப4யவில்ல தை3த்யர நிந்தி3ஸுவ நரகெ3 ||23

 

ஜாலி = முட்கள் / புற்கள்

நெக்கிலு = கூரான முட்கள்

க்‌ஷுத்ரஷிலெ = சிறிய கற்கள் இவைகள்

பரிகால புருஷன = வெறும் காலில் நடப்பவனை

பாதிபவு = பாதிக்கின்றன (குத்துகின்றன)

சம்மோளகெய = காலணிகளை

மெட்டிதவகுண்டே = அணிந்து நடப்பவனுக்கு

கண்டககள பய = மேற்கூறிய கல், முள் ஆகியவற்றைப் பற்றி பயம் உண்டா?

சேளு ஸர்ப்பவ கொந்த வார்த்தெய கேளி = தேள், பாம்பு ஆகியவற்றைக் கொன்ற விஷயத்தை கேள்விப்பட்டு

மோதிபகெ = மகிழ்ச்சி அடைபவனுக்கு

அகவில்ல = பாவம் இல்லை

அதைப்போல

தைத்யர நிந்திஸுவ நரகெ = தைத்யர்களை நிந்திக்கும் மனிதனுக்கு

யமனாளுகள பயவில்ல = யமதூதர் வந்து தன்னை இழுத்துப் போவர் என்னும் பயம் என்றும் இல்லை.

 

முட்கள், புற்கள், கூரான முட்கள், சிறிய கற்கள் ஆகியவை, வெறும் காலில் நடப்பவனை மிகவும் துன்புறுத்துகின்றன. ஆனால், காலணிகளை அணிந்து நடப்பவனுக்கு இவற்றைப் பற்றிய பயம் எதுவும் இல்லை.

 

அதைப்போலவே, பரமாத்மனின் மகிழ்ச்சிக்காக அவனின் த்வேஷிகளை தூஷிப்பதும் நம்மை பாதிக்காது. ஒருவரைத் திட்டுவதால் வரும் பாவம், கல், முள்ளுக்கு சமமானது. காலணிகளால் முட்களை மிதிப்பது போல, பகவத் த்வேஷிகளான தைத்யர்களின் தாரதம்ய ஞானம் என்னும் காலணி அணிந்துகொண்டு மிதித்தால், தூஷணை சம்பந்தமான பாவத்தைப் போலிருக்கும் முட்கள் பாதிப்பதில்லை என்று கருத்து.

 

தைத்யரின் தாரதம்ய ஞானம், காலணிக்கு உதாரணம். அவரின் த்வேஷ ரூபமான பாவம் பிரச்னை போன்றது. தாரதம்யத்தை அறிந்து, அதன்படி அவர்களை தூஷிப்பது பாப கர்மம் அல்ல என்பது கருத்து.

 

பாம்பு, தேள் ஆகியவற்றைக் கொன்ற விஷயத்தைக் கேட்டால், எத்தகைய சாதுவானாலும், மகிழ்வர். அதனால் பாவம் இல்லை. பாகவத 7ம் ஸ்கந்தத்தில் பிரகலாதனின் ஸ்தோத்திரத்தில்: மோதேதஸாதுரபி வ்ருஸ்சிக ஸர்ப்ப ஹத்யா’ -- ‘நம் தந்தையான ஹிரண்யகசிபுவைக் கொன்ற விஷயத்தில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகையால், நானும்கூட மகிழ்கிறேன். தந்தை இறந்ததற்கு மகன் மகிழ்வானா என்றால், சாதாரணமான பாம்பு, தேள் ஆகியவற்றைக் கொன்றால், துஷ்ட பிராணி போயிற்று என்று மகிழ்வோம். அப்படியிருக்கையில், நம் தந்தையானவர், சாதாரண பாம்பு, தேள் அல்ல. உலகத்தையே அழிப்பவனாக இருந்தார். அவர் மரணமடைந்ததால், மக்கள் மகிழ்வர். ஆகையால், நானும் மகிழ்வேன்என்கிறார்.

 

ஆகவே, பாபிகளான தைத்யரின் த்வேஷம் செய்பவனுக்கு நரக பயம் இல்லை என்பது கருத்து.

 

புண்யகர்மவ புஷ்கராதி3 ஹி

ரண்யக3ர்பாந்தர்க3த பி3

மண்ய தே3வனிக3ர்ப்பிஸுதலிரு பாபகர்மக3|

ஜன்யது3க்க2வ கலிமுகா2த்3யரி

கு3ண்ணலீவனு கலலோக ஷ

ரண்ய ஷாஷ்வத மிஸ்ரஜனரிகெ3 மிஸ்ரப2லவீவ ||24

 

புண்ய = புண்ய கர்மங்களை

கர்மவ = பாவ கர்மங்களை

புஷ்கராதி = புஷ்கரனில் துவங்கி

ஹிரண்யகர்ப்பாந்தர்கத = பிரம்மதேவரின் வரை தாரதம்யத்தின்படி, தேவதைகளை ஸ்மரணை செய்து இவர்களின் அந்தர்யாமியான

பிரம்மண்ய தேவனிகெ = பிராமணரில் விஸ்வாசம் உள்ளவர் பிரம்மண்யர். இவர்களுக்கு தலைவனான ஸ்ரீஹரிக்கு

அர்ப்பிசுதலிரு = அர்ப்பித்துக் கொண்டிரு

புண்ய பலன்களை இரு மடங்காக்கி உனக்கு சுகத்தைத் தருவான்.

பாபகர்மகள = பாப கர்மங்களிலிருந்து

ஜன்ய = வந்த துக்கங்களை

கலிமுக்யாத்யரிகெ = கலி முதலானவர்களுக்கு

உண்ணலு = அனுபவிக்க

ஈவனு = கொடுக்கிறான்

ஸகலலோக ஷரண்ய = அனைத்து பிராணிகளாலும் வணங்கப்படுபவனான

ஷாஷ்வத = நிரந்தரமானவனான ஸ்ரீஹரி

மிச்ரஜனரிகெ = மத்யம மனுஷ்ய ஜீவர்களுக்கு

மிஸ்ரபலவீவ = சுக துக்க மிஸ்ரமான பலன்களைக் கொடுக்கிறான்.

 

மக்கள் செய்த புண்ய பாப கர்மங்களை தினந்தோறும் புஷ்கர முதல் பிரம்மதேவர் வரைக்கும் தாரதம்யத்தின்படி தேவதைகளை சிந்தித்து, அவர்களின் அந்தர்யாமியான ஸ்ரீ பரமாத்மனை ஐக்ய சிந்தனை செய்து, அவனுக்கு சமர்ப்பணம் செய்யவேண்டும்.

புண்யங்களை பரமாத்மன் ஏற்றுக்கொண்டு, தத்வாபிமானிகளுக்குக் கொடுத்து, ஜீவர்களுக்கும் இரு மடங்காக்கி பலன்களைக் கொடுக்கிறான். பாபங்களின் பலன்களை, கலி முதலானவர்கள் அனுபவிப்பதற்காக கொடுக்கிறான். மத்யமர்களுக்கு சுக துக்க மிஸ்ரமான பலன்களைக் கொடுக்கிறான்.

 

த்ரிவித4 கு3ணக3ளமானி ஸ்ரீபா4

ர்க்க3விரமண கு3ணி கு3ணக3ளொளக3

ரவர யோக்3யதெ கர்மக3ளனனுரிஸி கர்மப2|

ஸ்வவஷராத3 மராஸுரர க3

கவதி4 இல்லதெ3 கொடு3வ தே3

ப்ரவர த்ரிஜக3ன்னாத2விட்ட2ல விஷ்வவ்யாபகனு ||25

 

த்ரிவித குணகளமானி = ஸத்வ ரஜஸ் தமோ குணங்களின் அபிமானியான ஸ்ரீ பூ துர்காத்மகனான

ஸ்ரீபார்க்கவிரமண = ப்ருகு ரிஷிகளில் புத்ரியாக அவதரித்தால் பார்க்கவி என்ற பெயருள்ள ஸ்ரீ லட்சுமிதேவியருக்கு பதியான ஸ்ரீபரமாத்மன்

குணி = சத்வரஜஸ் தமோ குணாத்மகரான; அதாவது, சாத்விகர், ராஜஸர், தாமஸர் என்னும் மூன்று வித பிராணிகளிலும்

குணகளொளு = மூன்று குணங்களிலும் இருந்து

அவரவர யோக்யதெ கர்மகளனனுசரிஸி = அவரவர்களின் யோக்யதை, கர்மங்களை அனுசரித்து

ஸ்வவஷராத = தன் அதீனத்தில் இருக்கும்

அமராசுர கணகெ = தேவ மனுஷ்ய தைத்ய கணங்களுக்கு

அவதி இல்லதெ = தாமதமாக இல்லாமல் (அதாவது உடனடியாக)

கர்மபல = கர்ம பலன்களை

விஷ்வ வியாபகனு = பிரபஞ்சத்தில் அனைத்து இடங்களிலும் வியாப்தனான

தேவப்ரவர = தேவஸ்ரேஷ்டரான பிரம்மாதிகளுக்கு

வர = ஸ்ரேஷ்டனான

ஜகன்னாதவிட்டலன்,

கொடுவனு = கொடுக்கிறான்.

 

சத்வ ரஜஸ் தமோ குணங்களுக்கு அபிமானியான ஸ்ரீபூ துர்காத்மிகரான ஸ்ரீ பார்க்கவி தேவி என்று லட்சுமிதேவிக்குப் பெயர். இந்தப் பெயர் ரமாதேவியருக்கு வந்ததற்கு காரணம் என்னவெனில்: பாகவத 4ம் ஸ்கந்த 3ம் அத்தியாயம் 43ம் ஸ்லோகம் :

 

ப்ருகு: க்யாத்யாம் மஹாபாக: பத்ன்யாம் புத்ரானஜீ ஜனத் ||

தாதாரம் சவிதாதாரம் ஸ்ரீயஞ்ச பகவஸ்ப்ரியாம் ||

 

ப்ருகு ரிஷிகள், க்யாதி என்னும் மனைவியில் தாத, விதாத என்னும் இரு ஆண் வாரிசுகளையும், பரமாத்மனின் மனைவியான சாட்சாத் லட்சுமிதேவியையே மூன்றாவது மகளாகவும், இப்படி மூன்று மக்களைப் பெற்றார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ப்ருகு ரிஷிகளின் மகள் ஆனதால், அவருக்கு பார்க்கவி என்று பெயர்.

 

இத்தகைய பார்க்கவி தேவிக்கு பதியான ஸ்ரீஹரி, த்ரிவித ஜீவராசிகளிலும் மூன்று குணங்களிலும் இருந்து அவரவர்களின் யோக்யதைக்கேற்ப கர்மங்களை செய்வித்து கர்ம பலன்களைக் கொடுக்கிறான்.

 

தைத்ய தாரதம்ய சந்தி என்னும் 30ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் நிறைவுற்றது.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

 

***

No comments:

Post a Comment