ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, September 3, 2020

29 - தேவ தைத்யர தாரதம்ய சந்தி

 

பாவபிரகாசிகை : சந்தி 29 : தேவ தைத்யர தாரதம்ய சந்தி

/ அணு தாரதம்ய சந்தி

 

ஹரிகதா2ம்ருதசார கு3ருக3

கருணதிந்தா3பநிது பே1ளுவே

பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

 

இதற்கு முன்னர் 3-4 சந்திகளில் தாரதம்யத்தை மிகவும் விளக்கமாக கூறியிருந்தாலும், தாரதம்ய ஞானமானது முக்திக்கு மிகவும் முக்கியமான சாதனையான காரணத்தால், தினமும் சுலபமாக வாயில் சொல்லி, அதன்படி அனைவரையும் வணங்கவேண்டும் என்ற காரணத்தால், பரமாத்மனை முதலில் சொல்லி, பரம நீசனான கலி வரைக்குமான இருக்கும் தாரதம்யத்தை சொல்வதற்காக, அணுதாரதம்யம் என்னும் இந்த சந்தியை இயற்றியிருக்கிறார் ஸ்ரீதாசராயர்.

 

விஷ்ணு ர்வோத்தமனு ப்ரக்ருதி க

நிஷ்டளெனிபள நந்தகு3ண பர

மேஷ்டி பவனரு கடி3மெ வாணி பா4ரதிக3ளத4|

விஷ்ணு வஹன ப2ணீந்த்3ர ம்ருட3ரிகெ3

க்ருஷ்ண மஹிஷி யரத4ம ரிவரொளு

ஸ்ரேஷ்டளெனிபளு ஜாம்ப3வதி யாவேஷ ப3லதி3ந்த3 ||1

 

விஷ்ணு சர்வோத்தமன்,

ப்ரக்ருதி = லட்சுமிதேவியர்,

பரமாத்மனைவிட அனந்த குணங்கள்;

கனிஷ்டளெனிபளு = குறைவானவள்;

பரமேஷ்டிபவனரு = பிரம்ம வாயுகள்;

கடிமெ = லட்சுமிதேவியைவிட குறைவானவர்கள்; அவர்களைவிட;

வாணி= சரஸ்வதி; பாரதியர் குறைவானவர்கள்; அவர்களைவிட,

விஷ்ணுவாஹ = கருட, பணீந்த்ர = சேஷதேவர்;

ம்ருடரு = ருத்ரதேவர் குறைவானவர்.

இவரிகெ = இவர்களைவிட,

கிருஷ்ணமஹிஷியரு = ஜாம்பவதி முதலான ஆறு பேர் கிருஷ்ணனின் மனைவியர் குறைவானவர்கள்.

இவரொளு = இந்த 6 பேரில், ஜாம்பவதி,

ஆவேஷபலதிந்த = ரமாதேவியின் ஆவேச பலத்தினால், சிறந்தவள்.

 

ப்லவக3 பன்னக3ப அஹிபூ4ஷண

யுவதியரு ம தம்மொளகெ3 ஜா

ம்3வதி3கி3ந்தலி கடி3மெ இவரிந்தி3ந்த்3ர காமரிகெ3

அவர ப்ராணனு கடி3மெ காமன

குவர ஷசி ரதி த3க்‌ஷ கு3ரு மனு

ப்ரவஹமாருத கொரதெ எனிஸுவனாரு ஜனரிந்த3 ||2

 

ப்லவக = பறந்து போவதால் கருடனுக்கு ப்லவக என்று பெயர்.

பன்னகனு = சர்வஸ்ரேஷ்டரான சேஷதேவர்;

அஹிபூஷண = சர்ப்பத்தை தரித்தவரான ருத்ரதேவர்; இந்த மூவரின் மனைவியர், சௌபர்ணி, வாருணி, பார்வதியர் ஒருவருக்கொருவர் சமம். ஜாம்பவதி முதலான ஷண்மஹிஷியரைவிட குறைவானவர்கள்.

இவரிந்த = இவர்களைவிட

இந்த்ரகாமனு = இந்திர மன்மத இவர்கள் இருவரும் குறைவானவர்கள். இவர்களைவிட

ப்ராண = அஹங்காரிக பிராணன்,

அவர = குறைவானவன்.

இவனிகிந்தலு = இவரைவிட,

காமனகுவர = மன்மதனின் மகன் அனிருத்தன்,

ஷசி = இந்திரனின் மனைவி,

ரதி = மன்மதனின் மனைவி;

தக்‌ஷ = தக்‌ஷ பிரஜாபதி;

குரு = ப்ருஹஸ்பத்யாசார்யர்;

மனு = ஸ்வாயம்புவ மனு; இவர்கள் ஆறு பேரும் அதமர்கள். இந்த ஆறு பேரைவிட,

ப்ரவஹமாருத = ப்ரவஹ வாயு,

கொரதெ எனிசுவனு = குறைந்தவன் ஆகிறான்.

 

ஜாம்பவதி முதலான ஆறு கிருஷ்ணனின் மனைவியரைவிட, கருட, சேஷ, ருத்ரர்களின் மனைவியரான சௌபர்ணி, வாருணி, பார்வதி இவர்கள் மூவரும் குறைவானவர்கள். இவர்களைவிட, இந்திர மன்மதன் குறைவு. இவர்கள் இருவரைவிட அஹங்காரிக பிராணன் அதமன். இவனைவிட, ப்ரத்யும்னனின் மகனான அனிருத்தன், ரதி, சசி, ஸ்வாயம்புவமனு, ப்ருஹஸ்பத்யாசார்யர், தக்‌ஷ பிரஜாபதி ஆகியோர் குறைவானவர்கள். இந்த ஆறு பேரை விட ப்ரவஹ வாயு அதமன்.

 

யம தி3வாகர சந்த்3ர மானவி

மரு கோ3ணப ப்ரவஹக34மரு

த்3யுமணிகி3ந்தலி வருணனீசனு நாரதா34மனு |

ஸுமனஸாஸ்ய ப்ரஸூதி ப்4ருகு3முனி

மரு நாரத334மரத்ரி

ப்ரமுக2 விஷ்வாமித்ர வைவஸ்தரனல க33||3

 

யமன்,

திவாகர = சூரியன்,

சந்திரன்.

மானவீ = ஸ்வாயம்புவ மனுவின் மனைவியான ஷதரூபாதேவி இவர்கள் நால்வரும் சமமானவர்கள்.

கோணப்ரவஹகெ = வாயு திசைக்கு அபிமானியான ப்ரவஹ வாயுவைவிட,

அதமரு = குறைவானவர்கள்.

த்யுமணிகிந்தலி = சூரியன் முதலான நால்வரைவிட வருணன் குறைவானவன். அவரைவிட, நாரதர் அதமர்.

சுமனசாஸ்ய = தேவதைகளுக்கு முகத்தைப் போன்று இருந்து ஆஹுதியை பெறும் அக்னி.

ப்ரசூதி = தக்‌ஷ பிரஜாபதியின் மனைவி. ப்ருகுமுனி, இவர்கள் மூவரும் சமமானவர்கள்.

நாரதகெ அதம = இவர்கள் நாரதரைவிட அதமர்கள்.

அத்ரிப்ரமுக = அத்ரி, அங்கிர, புலஸ்த்ய, புலஹ, மரீசி, க்ரது, வசிஷ்ட இவர்கள் ஏழு பேரும் பிரம்மனின் மக்கள்.

விஸ்வாமித்ரர்,

வைவஸ்வதர் = வைவஸ்வத மனு - இவர்கள்

அனலகெ = அக்னி முதலானவர்களைவிட

அதம = குறைவானவர்கள்.

 

* ப்ரவஹ வாயுவிட யம, சூர்ய, சந்திர, ஷதரூபா தேவி (ஸ்வாயம்புவ மனுவின் மனைவி) இவர்கள் நால்வரும் அதமர்கள். அவர்களுக்குள் சமர்.

* இவர்களைவிட வருணன் அதமன்.

* வருணனைவிட நாரதர் அதமர்.

* அக்னி, ப்ரஸூதி (தக்‌ஷ பிரஜாபதியின் மனைவி), ப்ருகு ரிஷிகள் - இவர்கள் மூவரும் சமர். நாரதரைவிட அதமர்.

* பிரம்மதேவரின் மக்களான மரீசி, அத்ரி, அங்கிர, புலஸ்த்ய, புலஹ, க்ரது, வசிஷ்ட என்னும் ஏழு பேரும் ரிஷிகள்.

* விஸ்வாமித்ர, வைவஸ்வத மனு, இவர்கள் அனைவரும் சமர். அக்னி முதலானவர்களைவிட அதமர்.

 

அணுதாரதம்ய வாக்கியம் -

சௌபர்ணி வாருணீச பர்வதபதிதனயா சேந்த்ரகாமா

வதார்ஸ்மா ப்ராணோதோ யோனிருத்தோ

ரதி மமகுரவோ தக்‌ஷஷச்யௌச பாந்து |

த்ராயந்தான்ன: சத்வைதே ப்ரவஹ உதயமௌமானவீ

சந்த்ர சூர்யௌ சாபோதோ நாரதோதோ ப்ருகுரனல

குலேந்த்ர ப்ரசூதிஸ்ச நித்யம் ||

விஸ்வாமித்ரோ மரீசி ப்ரமுக விதி சுதா: சப்த வைவஸ்வதாக்ய:

 

-- இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தையே தாசார்யர் மேலே மூன்று பத்யங்களில் சொல்லியிருக்கிறார்.

 

மித்ர தாரா நிர்ருதி ப்ரவஹ

பத்னிப்ராவஹி மரு விஷ்வா

மித்ரகி3ந்தலி கொரதெ விஷ்வக்ஸேன க3ணநாத2

வித்தபதி அஸ்வினிக3ளத4மரு

மித்ரமொத3லாத3வரி கி3ந்தலி

வித்தரிபெனு ஷதஸ்த2 தி3விஜர வ்யூஹ நாமக3||4

 

மித்ர = மித்ரன் என்னும் சூரியன்

தாரா = பிருஹஸ்பத்யாசார்யரின் மனைவி

நிரருதி

ப்ரவஹபத்னி ப்ராவஹி = ப்ரவஹ வாயுவின் மனைவி ப்ராவஹி

இவர்கள் நால்வரும் சமம்.

விஷ்வாமித்ரகிந்தலி = விஷ்வாமித்ர முதலானவர்களைவிட

கொரதெ = அதமர்

விஷ்வக்சேன = ப்ரதான வாயு குமாரன்

கணநாத,

வித்தபதி = குபேரன்

அஷ்வினிகளு = அஸ்வினி தேவதைகள்

இவர்கள் சமமானவர்கள்.

மித்ர மொதலாதவரிகிந்தலி = மித்ர நாமக சூரியனுடன் இருப்பவர்களைவிட

அதமர்

ஷதஸ்த திவிஜர = ஒன்பது கோடி தேவதைகளில் 100 தேவதைகள் சோமபானத்தைக் குடிக்கத் தகுதியானவர்கள். அவர்களில், மேற்கூறிய தேவதைகளை விட்டு, மற்ற சேஷ ஷதஸ்தர்களை சொல்வதற்காக, அந்த 100 தேவதைகளின் வ்யூஹ நாமங்களை

வித்தரிபேனு = அடுத்த பத்யத்தில் விளக்குவேன்.

 

சைவம் வைமித்ர தாரேவர நிரருதி நாமப்ராவஹீச ப்ரஸன்னா: |

விஷ்வக்ஸேனோஸ்வினௌ தௌ கணபதிதனபா உக்தசேஷா: ஷதஸ்தா: ||

(அணுதாரதம்ய ஸ்தோத்திரம்)

 

இது வரைக்கும் சொன்ன தாரதம்யத்தை இந்த பத்யத்தில் சொல்கிறார்.

 

* மித்ர என்னும் சூரியன், ப்ருஹஸ்பதியின் மனைவி தாரை, திக்பாலகனான நிரருதி, ப்ரவஹ வாயுவின் மனைவி ப்ராவஹி, இந்த நால்வரும் சமம். விஷ்வமித்ராதிகளை விட குறைந்தவர்கள்.

* விஷ்வக்சேன, விக்னேஷ, குபேரன், அஸ்வினி தேவதைகள் இவர்கள் சமம். மித்ர முதலானவர்களைவிட அதமர்.

* இன்னும் அடுத்த பத்யத்தில் உக்த சேஷ ஷதஸ்தர்களை சொல்வதற்காக 100 தேவதைகளின் சமூகத்தின் பெயர்களை சொல்வேன்.

 

மருத ரொம்ப3த்ததி4க நால்வ

த்தெரடு3 அஸ்வினி விஸ்வேதே3வரு

எரட3யிது3 ஹன்னொந்து3 ருத்3ரரு த்3வாத3ஷாதி3த்ய |

கு3ரு பித்ருத்ரயரஷ்ட வஸு3ளு

4ரத த்3யாவா ப்ருத்2வி ருபு3வெ

ந்த3ரிவுதி3வரனு ஸோமர பானார்ஹ ரஹுதெ3ந்து3 ||5

 

மாருதரு = மருத் கணத்தை சேர்ந்தவர்

ஒம்பத்ததிக நால்வத்து = 49 பேர்

அஸ்வினி எரடு = அஸ்வினி தேவதைகள் இருவர்

குரு = ப்ருஹஸ்பத்யாசார்யர் 1

பித்ருத்ரய = பித்ரு கணத்தவர் மூவர்

அஷ்ட வசுகளு = வசுக்கள் 8 பேர்

பரத = ப்ரதான வாயுதேவர்

பாரதி = த்யுலோக அபிமானியான பாரதி தேவி 1

ப்ருத்வி 1

ருஜுகண 1

எந்து = இப்படியாக 100 தேவதைகள்

இவரன்னு = இந்த 100 தேவதைகளை

ஸோமரச பானார்ஹ ரஹுதெந்து = யாகங்களில் சோமபானம் செய்யும் யோக்யர்கள் என்று (அதாவது, யாகங்களில், இந்திராய ஸ்வாஹா, ஸூர்யாய ஸ்வாஹா என்னும் மந்திரங்களால் அஹுதிகளை ஸ்வீகரிக்கும் யோக்யதை உள்ளவர்கள் என்று அர்த்தம்)

அரிவது = அறிய வேண்டும்.

 

மருத் கணர்கள்

49

அஸ்வினி தேவதைகள்

2

விஸ்வே தேவதைகள்

10

ருத்ரர்கள்

11

சூரியர்கள்

12

ப்ருஹஸ்பதி

1

பித்ருகண

3

வசுகள்

8

முக்ய ப்ராணதேவர்

1

த்யுலோக அபிமானி, வாயுதேவரின் மனைவி,

பாரதிதேவி

1

பூமி

1

ருபுகண

1

மொத்தம்:

100

 

இந்த 100 பேர் சோமபானத்தைக் குடிப்பதற்கு தகுதியானவர்கள் என்று அறியவேண்டும். தாரதம்ய சங்க்ரஹத்தில்:

 

ப்ரதான வாயுர்வஸுவோ ருத்ராதித்ய மருத்கணா: ||

ப்ருஹஸ்பதி ருபுர்த்யாவா ப்ருதிவ்யாவஸ்வினௌ ததா ||

விஷ்வேதேவாஸ்ச பிதர: ஷதஸ்தா தேவதா மதா: ||

 

என்னும் வாக்கியம் இந்த பத்யார்த்தத்திற்கு ஆதாரம் ஆகும்.

 

11 ருத்ரர், 12 சூரியர்கள் ஆகியோரின் பெயர்கள், ப்ருஹத் தாரதம்ய சந்தியில் கொடுக்கப்பட்டுள்ளதால், இங்கு மறுபடி கொடுக்கப்படவில்லை.

 

ஈ தி3வௌக ரொளகெ3க்தரு

ஐத3தி4கத3ஷ உளித3 எம்ப4

த்தைது3 ஸேஷரிகெ3 ணெயனிஸுவரு த4னப விக்4னேஷ |

ஸாது3வைவஸ்வத ஸ்வயம்பு4

ஸ்ரீத4தாபருளித3 மனு ஏ

காத3ஷரு விக்4னேஷகி3ந்தலி நீசரெனிஸுவரு ||6

 

ஈ திவௌகஸரொளகெ = இந்த 100 தேவதைகளில்

ஐததிகதஷ = 15 தேவதைகள்

உக்தரு = முந்தைய கக்‌ஷ தாரதம்யத்தில் உத்தமர்கள் என்று சொல்லப்பட்டவர்கள்

உளித எம்பத்தைது = 100ல் 15 தவிர மற்ற 85 பேர்

உக்த சேஷ ஷதர் எனப்படுகிறார்கள்

சேஷரிகெ = இந்த 85 தேவதைகளுக்கு

தனப = குபேரன்

விக்னேஷ,

எணெயெனிஸுவரு = சமம் எனப்படுகின்றனர்

ஸாது = புகழப்படும் குணங்களைக் கொண்ட

வைவஸ்வத = வைவஸ்வத மனு 1

ஸ்வாயம்புவ = பிரம்மதேவரின் மகனான ஸ்வாயம்புவ மனு 1

ஸ்ரீத = ஐஸ்வர்யத்தைக் கொடுக்கக்கூடிய

தாபஸ = பரமாத்மனின் அவதாரமான தாபஸ மனு 1

உளிது = இந்த மூவரைத் தவிர

மனுவேகாதஷரு = மற்ற 11 மனுகள்

விக்னேஷகிந்தலி = விக்னேஸ்வரனைக் காட்டிலும்

நீசரெனிஸுவரு = நீசர்கள் எனப்படுகிறார்கள்.

 

தேவாஸ்சோக்தேதராயே ததவரமனவ: -- என்னும் அணு தாரதம்ய வாக்கிய அர்த்தத்தை இந்த பத்யத்தில் சொல்கிறார். முந்தைய பத்யத்தில் கூறிய 100 தேவதைகளில், 15 தேவதைகளை, முந்தைய கக்‌ஷத்தில் சேர்த்திருக்கிறார். அவர்கள் யார் என்றால்:

 

பிரதான வாயுதேவர்

1

அஷ்ட வசுக்களில் பிரதானாக்னி

1

11 ருத்ரர்களில், பவ நாமகரான பார்வதிபதி ருத்ர தேவர்

1

12 சூர்யர்களில் உருக்ரம நாமகனான பகவத் அவதார சூரியன்

1

விவஸ்வான் என்னும் சூரியன்

1

மித்ர என்னும் சூரியன்

1

வருண

1

இந்திர

1

கங்கைக்கு சம்மான பர்ஜன்ய

1

49 மருத்கணர்களில் அஹங்காரிக ப்ராண

1

ப்ரவஹ வாயு

1

ப்ருஹஸ்பதி

1

த்யுலோக அபிமானியான பாரதிதேவி

1

பித்ருகளில் யம, சந்திர

2

மொத்தம்

15

 

இந்த 15 பேரை மேற்சொன்ன தாரதம்யத்தில் சேர்த்திருக்கிறார். மற்றவர்கள் 85 பேர் உக்த சேஷ ஷதஸ்தர்கள் எனப்படுகிறார்கள். இவர்கள் குபேர, கணபதி முதலானவர்களுக்கு சமம் எனப்படுகிறார்கள். 14 மனுகளில் மேற்கூறிய ஸ்வாயம்புவ மனு 1, வைவஸ்வத மனு 1, பகவத் அவதாரமான தாபஸ மனு 1. இந்த மூவரைத் தவிர மற்ற 11 மனுகள் சமம் மற்றும் விக்னேஷ்வர முதலானவர்களைவிட நீசர்கள் எனப்படுகிறார்கள்.

 

ச்யவன னந்த3ன கவி ப்3ருஹஸ்ப

த்யவரஜ உசத்யமுனி பாவக

த்3ருவ நஹுஷ ஷஷபி3ந்து3 ப்ரீயவ்ரதனு ப்ரஹ்லாத3 |

குவலயபருக்தேரிந்த3லி

அவர ரோஹிணி ஷாமலா ஜா

ந்ஹவி விராட்பர்ஜன்ய சஞ்ஞாதே3வியரு அத4||7

 

சவனனந்தன = சவனர மக்களான

கவி = சுக்ராசார்யர்

ப்ருஹஸ்பதி = ப்ருஹஸ்பத்யாசார்யர்

அவரஜனு = தம்பியான

உசித்யமுனி,

பாவக = ப்ரதானாக்னியின் மகனான பாவகன்

த்ருவ, நஹுஷ, ஷஷிபிந்து, ப்ரியவ்ரதனு, ப்ரஹ்லாத, குவலயபரு = இந்த அரசர்கள் அனைவரும்

உக்தேதரிந்தலி = உக்தசேஷ ஷதர்களைவிட

அவரரு = குறைவு எனப்படுகிறார்கள்

ரோஹிணி = சந்திரனின் மனைவி

ஷாமலா = யமதேவரின் மனைவி

ஜான்ஹவி = கங்கை

விராட் = அனிருத்தனின் மனைவி உஷாதேவி

பர்ஜன்ய = இந்த பெயருள்ள சூரியன்

சஞ்ஞாதேவியரு = விவஸ்வான் என்னும் சூரியனின் மனைவி

இவர்கள் அனைவரும் தமக்குள் சமம்.

முன்பு சொன்ன அரசர்களைவிட அதமர்கள்.

 

* உசித்யமுனி, பாவக, த்ருவ, நஹுஷ முதலான அரசர்கள் இவர்கள் அனைவரும் சமமானவர்கள். முந்தைய பத்யத்தில் கூறிய உக்தர் என்னும் 85 தேவதைகளைவிட இவர்கள் குறைவானவர்கள்.

* ரோஹிணி, ஷாமளா, கங்கை, உஷை, பர்ஜன்ய என்னும் சூரியன், சஞ்ஞா என்னும் இவர்கள் அனைவரும் சமம். மேற்கூறிய பூபாலர்களைவிட அதமர் எனப்படுகிறார்கள்.

 

த்3யுனதி3கி3ந்தலி நீசரெனிபரு

அனபி4மானி திவௌகரு கே

சன முனிக3ளிகெ3 கடி3மெ ஸ்வாஹாதே3வி க33ம பு34 |

எனிஸுவளுஷாதே3வி நீசளு

ஷனி கடி3மெ கர்மாதி4பதி

த் வினுத புஷ்கர நீசனெனிஸுஸூர்னந்த3னகெ3 ||8

 

அனபிமானி திவௌகஸரு = தத்வாபிமானிகள் இல்லாமல் மேற்கூறிய 100 தேவதைகளைத் தவிர, புகழ் பெறாத தேவதைகள் சிலர். இவர்கள்,

த்யுனதிகிந்தலி நீசரெனிபரு = கங்கை முதலானவர்களைவிட நீசர்கள்

அவர்களைவிட, நாரதர் முதல் உசித்யரின் வரை மேற்கூறிய ரிஷிகளைத் தவிர, மற்ற ரிஷிகளில் சில ரிஷிகள் குறைவானவர்கள்.

கேசன முனிகளிகெ = அந்த சில ரிஷிகளுக்கு

ஸ்வாஹாதேவி = அக்னிதேவரின் மனைவியான ஸ்வாஹாதேவி குறைவு எனப்படுகிறாள்.

ஸ்வாஹாதேவிகெ = ஸ்வாஹாதேவிக்கு

புத = புதன் அதமன்

அவனிகிந்தலு = அவனைவிட

உஷாதேவி = அஸ்வினி மனைவியான உஷாதேவி

நீசரெனிஸுவளு = அதமள் எனப்படுகிறாள்

அவளைவிட

ஷனி = சனீஸ்வரன்

கடிமெ எனிஸுவனு = குறைவானவன்

சூர்யனந்தனகெ = விவஸ்வான் என்னும் சூரியனின் மகனான சனீஸ்வரனுக்கு

சத்வினுத = சஜ்ஜனர்களால் வணங்கப்படுபவனான

கர்மாதிபதியாத புஷ்கர = புஷ்கரன்

நீசனெனிசுவ = நீசன் எனப்படுகிறான்.

 

கங்கை முதலானவர்களைவிட, எந்தவிதமான அதிகாரங்களும் இல்லாத, புகழ் பெறாத தேவதைகளில் சிலர் நீசர் எனப்படுகிறார்கள். அவர்களைவிட விஸ்வாமித்ரன், பிரம்மதேவரின் மக்களான மரீரி முதலானவர்கள் உசித்யர் வரைக்கும் சொல்லப்பட்டிருக்கும் ரிஷிகளைவிட்டு, மற்ற ரிஷிகளில் சிலர் மட்டும் இந்த கக்‌ஷையில் சேர்ந்தவர்கள். மற்றவர்களை இன்னும் குறைவான கக்‌ஷையில் சேர்த்து அடுத்த பத்யத்தில் சொல்லியிருக்கிறார்.

 

ஆகையால், இந்த பத்யத்தில் கேசன ரிஷிகள் என்றிருக்கிறார்.

* அவர்களைவிட அக்னி மனைவியான ஸ்வாஹாதேவி நீசள்.

* அவளைவிட, ஜலாபிமானியான புதன் நீசன்.

* புதனைவிட, அஸ்வினி தேவதைகளின் மனைவியான உஷாதேவி நீசள்.

* அவளைவிட, சனீஸ்வரன் நீசன்

* சனியைவிட, கர்மாபியான புஷ்கரன் நீசன்

 

தாசார்யர், இந்த புஷ்கரனுக்கு சத்வினுத அதாவது, சஜ்ஜனர்களால் வணங்கப்படுபவன் என்று சொல்லியிருக்கிறார். அதன் காரணம் என்னவெனில், குரு சிம்ம ராசியில் இருந்தால், இவன் கோதாவரியில் பிரவேசம் செய்கிறான். அதாவது, இவனின் சன்னிதானம் கோதாவரியில் இருக்கிறது. அப்போது, அங்கு, ஸ்னானாதிகளை செய்தால், சிறந்த பலன்கள் கிடைக்கின்றன.

 

இதைப்போல, இன்னும் சில காலங்களில் மற்றும் சில நதிகளில் புஷ்கர பிரவேசம் இருக்கிறது என்று தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு, பஞ்சாங்கங்களில் எழுதியிருக்கிறார்கள். இப்படி நதிகளில் இருந்து மஹா பலன்களைக் கொடுப்பதால், சத்வினுத என்று கூறுகிறார். தாரதம்ய ஸ்தோத்திர வாக்கியம்:

 

வித்யோன்யே ஜாக்னிஜாயா சஜலமய புதஸ்சாபி

நாமாத்மிகோஷா சைவம் பூமோததாத்மா

ஷனிரபிகதித: புஷ்கர: கர்மபோபி ||

 

இதே அர்த்தத்தையே தாசார்யரும் இந்த பத்யத்தில் சொல்லியிருக்கிறார்.

 

கொரதெ எனிபரு ஸேஷரிஷி பு

ஷ்கரகெ3 ஊர்வஷிமுக்2ய ஷதவ

ப்ரரு தும்பு3ரமுக2ரு ஆஜானஜரெனிஸுதிஹரு |

கரெஸுவது3 அனலக3ண நால்வ

த்தரெ சதுரத3ஷ த்வயஷ்ட ஸாவிர

ஹரிமட3தி3யரு மரெனிஸுவரு பிந்தெ பேள்த3ரிகெ3 ||9

 

புஷ்கரகெ = புஷ்கரனைவிட

அஷீதிரிஷி = 80 ரிஷிகள்

கொரதெ எனிபரு = குறைவு எனப்படுகிறார்கள்

ஊர்வஷிமுக்ய = ஊர்வசியே முதலான

ஷதவப்ஸரரு = 100 அப்ஸர ஸ்த்ரியர்கள்

தும்பரமுகரு = தும்பரு முதலான 100 கந்தர்வர்கள்

அஜானஜரெனிஸுதிஹரு = இவர்கள் அனைவரும் அஜானஜ தேவதைகள் எனப்படுகிறார்கள்.

அனலகண = அக்னி கணத்தில் சேர்ந்த, அக்னிதேவரின் மகனான

நால்வத்தரெ சதுர்தஷ = 40+20+40 = 100

த்வயஷ்ட ஸாவிர = 2*8 = 16,000 ; மொத்தம் 16,100

ஹரிமடதியரு = ஸ்ரீகிருஷ்ணனின் மனைவியர்கள்

பிந்தெ பேள்தரிகெ = முன்னர் சொன்ன அஜானஜர்களுக்கு சமம் எனப்படுகிறார்கள்

கரெஸுவுது = இந்த அக்னிகணத்தில் சேர்ந்த 16,100 பேர், முன்னர் புருஷர்களாக இருந்து தவம் செய்து கிருஷ்ண பத்னி ஆகும் நோக்கத்தில் ஸ்த்ரீத்வம் பெற்றனர். இவர்கள் அனைவரும் அஜானஜ தேவதைகள் என்று அழைக்கப்படுகின்றனர் என்று அர்த்தம்.

 

நாரதரில் துவங்கி, உசித்யர் வரை சொல்லப்பட்டிருக்கும் ரிஷிகளை, 8ம் பத்யத்தில் சொன்ன சில ரிஷிகளைத் தவிர மற்ற 80 ரிஷிகள், ஊர்வசி முதலான 100 அப்சரர்கள், தும்பரு முதலான 100 கந்தர்வர்கள் இவர்கள் அனைவரும் அஜானஜ தேவதைகள் எனப்படுகிறார்கள். அஜானஜர் என்றால்:

 

ஆனாக்யாதா தேவதாஸ்து ஜாதா தேவகுலேஷசயா: ||

கந்தர்வாஸ்தும்பரமுகா: ஷதமப்ஸரஸாம்ஷதம் ||

நாரதாதீன்ன் உசித்யந்தான் வினோக்தா ருஷயோகிலா: ||

ஆஜானஜா தேவதாஸ்தே அக்னிஜா: பாவகம்வினா ||

ஷதோத்தரா க்ருஷ்ணபார்யாத்வ்யஷ்ட ஸாஹஸ்ர ஸங்க்யகா: ||

 

என்று தாரதம்ய சங்க்ரஹ என்னும் கிரந்தத்தின் வாக்கியத்தினாலும், தைத்தரீய பாஷ்யத்தின் வாக்கியத்தினாலும், கிடைக்கும் அர்த்தம் என்னவெனில், தேவதைகளின் குலத்தில் பிறந்து, இந்திராதிகளைப் போல புகழ் பெறாத தேவதைகள் சிலர், தும்பர முதலான கந்தர்வர்கள் 100 பேர், ஊர்வசி முதலான அப்ஸர ஸ்த்ரியர் 100 பேர், நாரத முதல் உசித்ய வரை சொல்லப்பட்டிருக்கும் ரிஷிகளைத் தவிர மற்ற ரிஷிகள் இவர்கள் அனைவரும் அஜானஜர் என்று அழைக்கப்படுகின்றனர் என்னும் இந்த அர்த்தம் அதில் வருகிறது.

 

அக்னியின் மக்களில் பாவக என்னும் ஒருவனைத் தவிர, மற்ற 16,100 பேர் தவம் செய்து, ஸ்த்ரீத்வம் பெற்று ஸ்ரீகிருஷ்ணனின் மனைவியாயினர். அவர்களும்கூட சேஷ ஷதஸ்தர் எனப்படுகிறார்கள்.

 

தத3வரரனாக்2யாத அப்ஸர

ஸு3தியரு க்ருஷ்ணாங்க3 ங்கி33

ளத3ர தருவாயத3லி சிரபிதருக3ளு இவரிந்த3 |

த்ரித3ஷ க3ந்த3ர்வக3ண இவரி

ந்த34ம நரக3ந்த4ர்வரிவரி

ந்து33தி4 மேக2லபதிக3ளத4மரு நூரு கு3ணதி3ந்த3 ||10

 

க்ருஷ்ணாங்க சங்கிகளு = கோபியர்களாகப் பிறந்து, ஸ்ரீகிருஷ்ணனின் அங்க சங்கத்தைப் பெற்று,

அனாக்யாத = அனாக்யாத (புகழ் பெறாத)

அப்ஸர சுததியரு = ஊர்வசி முதலான புகழ் பெறாத அப்ஸர ஸ்த்ரியர்கள்

ததவரரு = மேற்கூறிய கிருஷ்ண மனைவியரான 16,100 பேர், அக்னி புத்ரர்களைவிட குறைவானவர்கள்

அதரதருவாயதலி = அதன் பிறகு

சிரபிதருகளு = கிருஷ்ணாங்க சங்கிகளான கோபிகா ஸ்த்ரியர்களைவிட அதமர்கள்.

இவரிந்த = இவர்களைவிட

நர கந்தர்வரு = மனுஷ்ய கந்தர்வர்கள் அதமர்கள்

இவரிந்த = இவர்களைவிட

உததி மேகலபதிகளு = சமுத்திரமே அரணாக்கயிறாகக் கொண்ட பூமிக்கு பதிகள் என்றால், ராஜர்கள்

நூரு குணதிந்த = 100 குணத்தால் அதமர்கள்.

 

* 16,100 பேர் கிருஷ்ணனின் மனைவியரைவிட, கோபியராகப் பிறந்து, கிருஷ்ணனின் அங்கசங்கத்தைப் பெற்ற அப்ஸரஸ்கள் அதமர்கள்.

* அவர்களைவிட சிரபித்ருகள் அதமர்.

* அவர்களைவிட தேவகந்தர்வர்கள் நீசர்கள்.

* அவர்களைவிட, மனுஷ்ய கந்தர்வர்கள் அதமர்கள்.

* அவர்களைவிட மேற்கூறிய த்ருவ, நஹுஷ முதலான சக்ரவர்த்திகளைத் தவிர மற்ற , புராணங்களில் சொல்லப்பட்ட ராஜர்கள் 100 குணங்களால் அதமர்கள்.

 

ப்ருத்2விபதிக3ளிகி3ந்த3 ஷத மனு

ஜோத்தமரு கடி3மெனிபரி வரி

ந்து3த்தரோத்தர நூரு கு3ணதி3ந்த3தி4கராத3வர |

நித்யத3லி சிந்திஸுத நமிஸு

ப்4ருத்யனா னஹுதெ3ம்ப ப4க்தர

சித்தத3லி நெலெகொண்டு3 கருணிபரகி2ஸௌக்2யக3||11

 

ப்ருத்விபதிகளிகிந்த = மேற்கூறிய ராஜர்களைவிட

மனுஜோத்தமரு = மனுஷ்யோத்தமர்கள்

ஷத = நூறு குணங்களால்

கடிமெ எனிபரு = அதமர் எனப்படுகிறார்கள்

இவரிந்த = இந்த மனுஷ்யோத்தமர்களிலிருந்து துவங்கி

உத்தரோத்தர = மேலே மேலே ஆரோஹண கிரமத்தில்

நூரு குணதிந்ததிக ராதவர = 100 குணங்களால் அதமர் ஆனவர்களை

நித்யதலி = தினந்தோறும்

சிந்திஸுத = நினைத்தவாறு

நமிஸுத = வணங்கியவாறு

ப்ருத்யனு நானு = உங்கள் சேவகன் நான்

எம்ப பக்தர = என்று சொல்லும் பக்தர்களின்

சித்ததலி = சித்தத்தில்

நெலெகொண்டு = நிலைத்திருந்து

அகில ஸௌக்யகள = அனைத்து நலன்களையும்

கருணிபரு = அருள்கின்றனர்.

 

ராஜர்களைவிட மனுஷ்யோத்தமர்கள் 100 குணங்கள் அதமர்கள். இப்படி மனுஷ்யோத்தமர் முதல், ஸ்ரீபரமாத்மனின் வரை இருக்கும் பகவத் பக்தர்கள் ஒருவரைவிட ஒருவர் 100 குணங்களால் உத்தமர் என்று அறிந்து, சிந்திக்க வேண்டும். 100 குணங்களால் உத்தமர் என்று கூறிய குண எண்ணிக்கையானது ஒரு குறியீடு என்று நினைக்க வேண்டும். சிலர் 2 குணங்களால் உத்தமர் எனப்படுகின்றனர். கணவன் மனைவியரில் சிலருக்கு 10 குணங்களால் உத்தமத்வத்தை சொல்லியிருக்கின்றனர். ஆகையால், பொதுவாக 100 குணங்கள் என்று அறியவேண்டும்.

 

குணதாரதம்ய சந்தியில் சொல்லியிருப்பதைப் போல, குணங்களின் தாரதம்யத்தை அறியவேண்டும். இப்படி ஆரோகண கிரமத்தில் பக்தர்களை உபாசனை செய்து வணங்கியவாறு, நான் அவர்களுக்கு தாசன் என்று அறிந்து வணங்கினால், அவர்கள் கருணையுடன் இந்த பக்தர்களின் மனதில் வசித்திருந்து, இவர்களுக்குத் தேவையான நலன்களைக் கொடுக்கிறார்கள்.

 

த்4ரும லதா த்ருண கு3ல்மஜீவரு

க்ரமதி3 நீசரு இவரிகி3ந்தா

4 மரெனிஸுவரு நித்யப3த்தரிகி3ந்த அக்ஞானி |

தமஸிக்யோக்3யர ப்3ருத்யரத4மரு

அமருஷாத் யபி4மானி தை3த்யரு

நமுசி மொத3லாத3வரி கி3ந்தலி விப்ரசிதி நீச ||12

 

த்ரும = மரம் போன்ற ஜீவர்கள்

மனுஷ்யோத்தமர்களைவிட நீசர்கள்

இவரகிந்தலு லதா = கொடி அதமர்

அவரைவிட

த்ருண = புல் அதமர்

குல்ம = விதை அதமர்

ஹீகெ க்ரமதி = இப்படியே கிரமத்தில்

இவரிகிந்த = இவர்களைவிட

நித்யபத்தராத மனுஷ்ய ஜீவர்கள் அதமர் = மனுஷ்ய ஜீவர்கள் அதமர்கள்

அஞ்ஞானிஜீவரு = இவர்களைவிட அஞ்ஞானிகள் அதமர்

தமோயோக்யர ப்ருத்யரதமரு = இவர்களைவிட தமோயோக்யர்கள் அதமர்

இவரிகிந்தலு அமருஷாத்யபிமானி = கோபம் முதலானவற்றிற்கு அபிமானியான

தைத்யரு = நமுசி முதலான தைத்யர்கள் அதமர்கள்

நமுசி முதலான தைத்யர்களைவிட,

விப்ரசித்தி நீச = விப்ரசித்தி என்னும் தைத்யன், அதமன்.

 

* மனுஷ்யோத்தமர்களைவிட த்ரும ஜீவர்கள் அதமர்

* அவரைவிட கொடி அதமர்

* அவரைவிட புல் அதமர்

* அவரைவிட விதை அதமர்

* அவர்களைவிட நித்யபத்தரான மனுஷ்யர்கள் அதமர்

* அவர்களைவிட அஞ்ஞானி ஜீவர்கள் அதமர்

* அவர்களைவிட தமோயோக்யர்களின் சேவகர்கள் அதமர்

* அவர்களைவிட கோபம் முதலானவற்றிற்கு அபிமானிகளான நமுசி முதலானவர்கள் அதமர்

* இவர்களைவிட விப்ரசித்தி நீசன்.

 

அலகுமியு தா நீசளெனிபளு

கலி பரம நீசத1மனிவனி

ந்து3ளித3 பாபிக3ளில்ல நோட3லு ஈ ஜக3த்ரயதி3 |

மலவிர்ஜன காலத3லி க

த்தலெ யொளகெ3 கஷ்மல குமார்க்க3

ஸ்த2லக3ளலி சிந்தனெய மாள்பரு ப3ல்லவரு நித்ய ||13

 

அலகுமியு = பாற்கடல் கடையும்போது, லட்சுமிதேவிக்கு முன்னர் பிறந்து, அலக்‌ஷ்மி என்று அழைத்துக் கொண்டு, கலிக்கு மனைவியான ஜ்யேஷ்டாதேவி,

தா = தான்

நீசளெனிபளு = விப்ரசித்தியைவிட நீசள்

அவளைவிட

கலியு பரம நீசதமனு = கலி பரம நீசன் எனப்படுகிறான்

அவனிகிந்துளித = அவனைத் தவிர

ஈ ஜகத்ரயதி = இந்த மூன்று உலகத்திலும்

நோடலு பாபிகளில்ல = இத்தகைய பாபி வேறு யாரும் இல்லை

மல விசர்ஜன காலதலி = மல விசர்ஜனம் செய்யும்போது

கத்தலெ யொள்கெ = இருட்டில்

கஷ்மல குமார்க்க ஸ்தலகளலி = நடக்கத் தகுதியற்ற வழிகளில் (சாலைகளில்) நடக்கும்போது

பல்லவரு = ஞானிகள்

நித்ய = எப்போதும்

சிந்தனெய மாள்பரு = இந்த பாபியான கலியை சிந்திப்பார்கள்

 

விப்ரசித்தியைவிட அலக்‌ஷ்மி என்னும் கலிபத்னி நீசள். அவளைவிட பரம நீச அதமன் கலி. இவனைப் போன்ற பாபி இந்த மூன்று உலகத்திலும் வேறு யாரும் இல்லை. அதாவது பாதாளாதி சத்யலோகத்தின் வரை இருக்கும் 14 உலகங்களிலும் என்று அர்த்தம். முக்கியமாக உலகத்தில் இல்லவே இல்லை. இவனை நினைக்க வேண்டுமெனில், மல விசர்ஜன காலம், இருட்டில் நடக்கும்போது, மலங்களால் நிறைந்த நடக்கத் தகுதியற்ற மார்க்கத்தில் நடக்கும்போது, இந்த பாபியை நினைக்க வேண்டுமே தவிர, சுகமாக இருக்கும்போது நினைக்கக்கூடாது.

 

த்வ ஜீவரமானி பி3ரம்மனு

நித்யப3த்த3 ரொளகெ3 புரஞ்சன

தை3த்ய முதா3யாதி3பதி கலி எனிப பவமான

நித்யத3லி அவரொளகெ3 கர்மப்ர

வர்தகனு தானாகி3 ஸ்ரீபுரு

ஷோத்தமன ம்ப்ரீதிகோ3ஸு3 மாடி3 மாடி3ஸு||14

 

சத்வ ஜீவரமானி = சாத்விக தேவதைகளான ஜீவர்களுக்கு அபிமானி

பிரம்மனு = பிரம்மதேவர்

நித்ய பத்தரொளகெ = நித்ய சம்சாரிகளான மனுஷ்ய ஜீவர்களுக்கு அபிமானி

புரஞ்சன = புரஞ்சன என்னும் ராஜன்

தைத்ய ஸமுதாயாதிபதி = தைத்யர்களின் ஜீவ சங்கத்திற்கு அதிபதி

கலியெனிப = கலி எனப்படுகிறான்

பவமான = வாயுதேவர்

புருஷோத்தமன சம்ப்ரீதிகோசுக = பரமாத்மனின் ப்ரீதிக்காக

நித்யதலி அவரொளகெ = புரஞ்சன ராஜனுக்குள், கலி முதலான தைத்யர்களுக்குள் இருந்து,

கர்மப்ரவர்த்தகனு தானாகி = அவரவர்கள் செய்யவேண்டிய கர்மங்களுக்கு ப்ரேரகனாக தான் இருந்து

மாடி மாடிசுவ = அவரவர்கள் செய்யவேண்டிய கர்மங்களை செய்து செய்விக்கிறான்.

 

தேவஜீவாபிமானீது பிரம்மைவது சதுர்முக: |

மானுஷாணாந்து ஜீவனாம் அபிமானி புரஞ்சன: |

ஸதுராஜாஹரே: புத்ரஸ்த்வ ஸூராணாம் கலி: ஸ்வயம் ||

 

* தேவதா ஜீவர்களுக்கு அபிமானி, சதுர்முக பிரம்மதேவர்.

* மத்யமரான மனுஷ்ய ஜீவர்களுக்கு அபிமானி புரஞ்சனன். இவன், பரமாத்மனின் புத்ரன் மற்றும் அரசன்.

* தைத்ய ஜீவர்களுக்கு அபிமானி கலி. என்று பாகவத 4ம் ஸ்கந்தத்தில் புரஞ்சனோபாக்யான சந்தர்ப்பத்தில் தாத்பர்யத்தில் சொல்லியிருக்கின்றனர்.

 

அதே அபிப்பிராயத்தையே தாசார்யர் இங்கு சொல்கிறார்.

 

சத்வஜீவர்கள் என்றால் தேவதைகள் என்று அர்த்தம். அவர்களுக்கு அபிமானி பிரம்மதேவர். நித்யபத்தர் என்றால் நித்ய சம்சாரிகள் மனுஷ்யர்கள் என்று அர்த்தம். இவர்களுக்கு அபிமானி புரஞ்சன என்னும் ராஜன். தைத்ய ஜீவ சமுதாயாதிபதி கலி. பகவந்தனின் ஆணைப்படி, பகவத் ப்ரீதிக்காகவே வாயுதேவர் புரஞ்சன, கலி முதலானவர்களில் இருந்து, அவர்கள், ஜீவர்களிடமிருந்து செய்யவேண்டிய காரியங்களை தான் செய்து அவர்களிடமிருந்தும் செய்விக்கிறார்.

 

ப்ராண தே3வனு த்ரிவித3ரொளகெ3 ப்ர

வீண தானெந்தெ3னிஸி அதி4கா

ரானுஸாரதி3 கர்மக3ள தா மாடி3 மாடி3ஸு|

ஞான ப4க்தி ஸுரரிகெ3 மிஸ்ர

ஞான மத்4யம ஜீவரிகெ3

க்ஞான மோஹ த்4வேஷக3ள தை3த்யரிகெ3 கொடு3திப்ப ||15

 

ப்ராண தேவனு = முக்யப்ராண தேவர்

த்ரிவிதரொளகெ = தேவ மானவ தானவ என்னும் மூன்று வித ஜீவர்களில்

ப்ரவீண தானெந்தெனிஸி = மஹா சமர்த்தன் என்று சொல்லிக் கொண்டு

அதிகாரானுசாரதி = அவரவர யோக்யதைக்கேற்ப

கர்மகள தாமாடி = அவர்களில் இருந்து தான் செய்து

மாடிசுவ = அவர்களிடமிருந்தும் செய்வித்து

சுரரிகெ = தேவதா ஜீவர்களுக்கு

ஞானபக்தி = ஞான பக்திகளை

மத்யமஜீவரிகெ = மனுஷ்ய ஜீவர்களுக்கு

மிஸ்ரஞான = புண்ய பாப மிஸ்ரமான கர்மங்களை செய்து, சுகதுக்க மிஸ்ரமான நித்ய சம்சாரத்திற்கு சாதனையான மிஸ்ர ஞானத்தையும்

தைத்யரிகெ = தைத்யர்களுக்கு

அஞ்ஞான, மோஹ, த்வேஷகள = இவற்றை

கொடுதிப்ப = கொடுக்கிறான்.

 

முக்யபிராணதேவர், தேவ மானவ தானவ என்னும் மூன்று வித ஜீவர்களில் இருந்து, மஹா சாமர்த்தியம் உள்ளவராக அவரவர்களின் யோக்யதைக்கேற்ப கர்மங்களை செய்து, செய்வித்து, தேவதைகளுக்கு ஞான பக்திகளையும், மனுஷ்யருக்கு மிஸ்ர ஞானத்தையும், தைத்யர்களுக்கு அஞ்ஞானம், மோகம், த்வேஷங்களையும் கொடுக்கிறார்.

 

தே3வ தை3த்யர தாரதம்யவ

நீவித4தி3 திளிதெ3ல்லரொளு லட்சு

மிவரனெ ர்வோத்தமனு எந்த3ரிது3 நித்யத3லி |

ஸேவிஸுவ ப4க்தரி கொ3லிது3 ஸு2

வீவ ர்வத்ரத3லி ஸு2மய

ஸ்ரீவிரிஞ்ச்யாதி3 வினுத ஜக3ன்னாத2விட்ட2லனு ||16

 

தேவதைத்யர = தேவ தைத்யர்களின்

தாரதம்யவ = தாரதம்யத்தினை

ஈ விததி திளிது = இங்கு சொல்லிய விதமாக அறிந்து

லக்‌ஷ்மீவரனெ = லட்சுமிபதியான ஸ்ரீமன் நாராயணனே

சர்வோத்தமனு = சர்வோத்தமன்

எல்லரொளு = அனைத்து பிராணிகளிலும் வியாப்தனாக இருக்கிறான்

எந்தரிது = என்று அறிந்து

நித்யதலி = எப்போதும்

ஸேவிசுவ பக்தரிகெ = வணங்கும் பக்தர்களுக்கு

ஒலிது = மகிழ்ந்து

சுகமய = ஆனந்த ஸ்வரூபனான

ஸ்ரீவிரிஞ்ச்யாத்யமரனுத = ரமாதேவி, பிரம்மாதி தேவதைகளால் வணங்கப்படுபவனான

ஜகன்னாதவிட்டலன்,

ஸர்வத்ரதலி = இஹ பரங்களில்

சுகவீவ = சுகங்களைக் கொடுக்கிறான்.

 

இந்த சந்தியில் சொல்லிய விதமாக, தேவ தைத்யரின் தாரதம்யத்தை அறிந்து, ஸ்ரீபரமாத்மனே சர்வோத்தமன். அனைத்து இடங்களிலும் வியாப்தன் என்று அறிந்து, தினந்தோறும் பக்தியுடன் அவனை உபாசனை செய்யும் பக்தர்களுக்கு, ஆனந்த ஸ்வரூபனான, ரமாபிரம்மாதிகளால் வணங்கப்படுபவனான லட்சுமிபதியான ஸ்ரீஜகன்னாத விட்டலன் இஹபரங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்கிறான்.

 

அணுதாரதம்ய சந்தி என்னும் 29ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் முடிந்தது.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

 

***

 

No comments:

Post a Comment