ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, September 2, 2020

28 - விக்னேஸ்வர ஸ்தோத்திர சந்தி

 

பாவபிரகாசிகை : சந்தி 28 : விக்னேஸ்வர ஸ்தோத்திர சந்தி

 

ஹரிகதா2ம்ருதசார கு3ருக3

கருணதிந்தா3பநிது பே1ளுவே

பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

 

முக்தி சாதனைகளுக்காக செய்ய வேண்டிய சத்கர்மங்களுக்கு வரும் விக்னங்கள் மிகவும் அதிகமானதால், அவை அனைத்தும் நிர்விக்னமாக நடக்க வேண்டி, விக்னேஷ்வரனின் பிரார்த்தனை அவசியம் என்று கணபதி ஸ்தோத்திர சந்தியை இயற்றியிருக்கிறார் தாசராயர்.

 

ஸ்ரீஷனங்க்4ரி ரோஜப்3ருங்க3

ஹேஷ ம்ப4வ மன்மனதொ3ளு ப்ர

காஷினுதி3ன ப்ரார்த்தி2ஸுவெ ப்ரேமாதிஷயதி3ந்த3 |

நீ லஹு ஜ்ஜனர வேத3

வியா கருணாபாத்ர மஹதா3

காஷபதி1 கருணாளு கைபிடி3தெ3ம்மனுத்த4ரிஸு ||1

 

ஸ்ரீஷனங்க்ரி சரோஜப்ருங்க = லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மனின்

அங்க்ரி = பாதங்கள் என்னும்

ஸரோஜ = கமலங்களில்

ப்ரேமாதிஷயதிந்த = மிகவும் பக்தி, மரியாதையுடன்

ப்ரார்த்திஸுவெ = வேண்டுகிறேன்

(அனுதினதி என்னும் சொல்லை இரு முறை சொல்லிக் கொள்ள வேண்டும்)

மன்மதனொளு = என் மனதில்

ப்ரகாஷிஸு = ஒளிர்ந்து கொண்டிரு

வேதவியாஸ கருணாபாத்ர = வேதவியாஸ தேவரின் கருணைக்குப் பாத்திரமான

மஹதாகாஷபதி = பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாசத்திற்கு அபிமானியான

கருணாளு = கருணாளுவான ஹே கணபதியே

நீ,

சஜ்ஜனர ஸலஹு = சஜ்ஜனர்களை காப்பாயாக

என்ன = என்னை

கைபிடிது = கை பிடித்து

உத்தரிஸு = காப்பாற்று

 

ஸ்ரீகணபதியை வேண்டுகிறார். ஹே கணபதியே. நீ சாட்சாத் லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மனின் பாதங்கள் என்னும் கமலங்களில் ஒரு தேனியைப் போல சுற்றிக் கொண்டிருக்கிறாய். அதாவது, தேனீக்கள் மகரந்தத்திற்காக எப்படி பூக்களையே சுற்றிக் கொண்டிருக்குமோ அப்படியே, உன் மனமும் திடமாக பரமாத்மனின் பாதங்களில் நிலைத்திருக்கிறது என்பது கருத்து.

 

ஹே ருத்ர தேவரிடம் பிறந்தவனே. பார்வதிதேவி தம் தேகத்தின் அழுக்கிலிருந்து கணபதியை ஸ்ருஷ்டித்தார் என்று கணபதியின் வரலாறிலிருந்து அறிகிறோம். ஆகவே, பார்வதி தேவியின் மகனானதால், ருத்ரரின் மகன் என்றும் அறிகிறோம். ஆனால் மஹேஷஸம்பவஎன்று தாசார்யர் கூறுகிறார். ஸம்பவ என்றால் பிறந்தவன் என்று அர்த்தம். ருத்ரதேவர் மூலமாக கணபதி பிறக்கவில்லை. இப்படி இருக்கையில் ருத்ரஸம்பவ என்று ஏன் கூறினார் என்றால்:

 

அதே கணேசனின் கதையில் வரும் சம்பவம் ஒன்று. பார்வதி தேவியர் கணேசனை ஸ்ருஷ்டித்து, தம் வீட்டு வாயிலில் த்வாரபாலகனாக வைத்து, தாம் ஸ்னானம் செய்யப் போகிறேன் என்றும், யாரையும் உள்ளே விடவேண்டாம் என்றும் கணேசனிடம் சொல்லிவிட்டுப் போகிறார். அந்த சமயம் வெளியே சென்றிருந்த ருத்ரதேவர், உள்ளே போக முயல, உள்ளே போகக்கூடாது என்று கணேசன் அவரைத் தடுத்தான்.

 

கடும் கோபம் கொண்ட ருத்ரர், அவனின் தலையை கத்தரித்துக் கொன்றார். தன் மகன் இறந்தான் என்ற செய்தியை அறிந்த பார்வதி, கதறி அழ, ருத்ரர் அவரை சமாதானம் செய்து, தன் சேவகர்களை அழைத்து, அருகில் யார் வடக்கு திசை நோக்கி தலை வைத்து படுத்திருக்கிறானோ, அவன் தலையை அறுத்து எடுத்து வாருங்கள் என்று ஆணையிட்டார்.

 

ருத்ரரின் சேவகர்களும் அப்படியே தேட, அங்கு ஒரு யானையைத் தவிர அப்படி யாரும் படுத்திருக்கவில்லை. ஆகையால், அதே யானையின் தலையை வெட்டிக் கொண்டு வந்தனர். ருத்ரரும் அந்த தலையை, மரணமடைந்த தன் மகனின் உடலில் வைத்துப் பொருத்தி உயிர்பித்து, அவனை தன் பூதகணத்தின் தலைவனாக ஆக்கி, வரம் அளித்தார். ஆகையால், கணபதி பூஜையை செய்ய வேண்டும் என்று கூறினார்.

 

இந்த கதையின்படி பார்த்தால், ஸ்ருஷ்டியை பார்வதிதேவி செய்திருந்தாலும், அவன் இறந்தபிறகு, மறுபடி ருத்ரதேவரே உயிர்ப்பித்ததால், மஹேஷஸம்பவ என்று சொல்வது சரியாகவே இருக்கிறது. உன்னை தினந்தோறும் பிரார்த்திக்கிறேன். என் மனதில் நீ ஒளிர்ந்தவாறு, நான் செய்யும் காரியங்கள் நிர்விக்னமாக நடக்குமாறு செய். சஜ்ஜனர்களுக்கு அருள்வாயாக.

 

ஹே வேதவியாஸ கருணாபாத்ரனே என்றார்:

பகவந்தனின் அவதாரங்கள் அனேகம் இருக்கையில், மூலரூபம் இருக்கையில், வேதவியாஸ க்ருபாபாத்ர என்று ஏன் சொல்ல வேண்டும் என்றால், வேதவியாசதேவர் மகாபாரதத்தை இயற்றுகையில், இந்தப் பெரிய கிரந்தத்தை எழுதுபவர் யார் என்று சிந்தித்து, கணபதியை ஸ்மரணை செய்ய, கணபதி அங்கு வந்து வேதவியாசரின் ஆணையின்படி அந்த கிரந்தத்தை எழுதி முடித்தான். இதுவே இவனுக்கு பரமானுக்கிரம் கிடைக்க காரணமாயிற்று. அதை மனதில் வைத்தே, தாசார்யர் வேதவியாச கருணாபாத்ரா என்றார்.

 

மஹதாகாஷபதி என்றார்:

24 தத்வங்களில், 5 பஞ்சமஹாபூதங்களில் ஒன்றான ஆகாஷ தத்வத்திற்கு கணபதியே அதிபதி என்று தத்வன்யாச மந்திரத்தில் ஓம்பராய ஆகாஷாத்மனே மஹா கணபதயே நம:என்று சொல்லியிருக்கிறார். இதற்கு ஆதாரம், ஸ்ரீமன் மத்வாசார்யர் இயற்றிய தந்திரசார என்னும் கிரந்தம்.

 

ஹே கருணாளு, என்னை கைபிடித்து காப்பாற்று என்று பிரார்த்தனை செய்கிறார் தாசார்யர்.

 

ஏகத3ந்த இபே4ந்த்3ரமுக2 சா

மீகரக்ருத பூ4ஷணாங்க3 க்ரு

பாகடாக்‌ஷதி3 நோடு3 விக்3ஞாபிஸுவெ நினிதெந்து3 |

நோகனீயன துதிஸுதிப்ப வி

வேகிக3ஹவாஸ ஸு23

நீ கருணிஸுவுதெ3மகெ3 ந்தத பரமகருணாளு ||2

 

ஏகதந்த = ஒரு தந்தம் கொண்டவனே

இபேந்த்ரமுக = கஜ முகம் கொண்டவனே

சாமீகரக்ருத = தங்கத்தால் செய்யப்பட்ட

பூஷணாங்க = ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சரீரம் கொண்டவன்

இத்தகைய விக்னராஜனே,

க்ருபாகடாக்‌ஷதி நோடு = உன் கருணைப் பார்வையால் என்னைப் பார்

இனிதெந்து விக்ஞாபிஸுவெ = இப்படியாக வேண்டிக் கொள்கிறேன்

நோகனீயன = பிரம்மாதிகளைவிட உத்தமன் ஆகையால்; இவனைவிட எப்போதும் யாரும் உத்தமர்கள் இல்லை என்பதால், பரமாத்மனுக்கு நோகனீயன என்று பெயர்.

துதிஸுதிப்ப = வணங்கிக் கொண்டிருக்கும்

விவேகிகள = அறிஞர்களின்

சஹவாஸ சுககள = நட்பினை

நீ,

கருணிசுவுதெமகெ = எனக்கு அருள்வாயாக

சந்தத = எப்போதும்

பரமகருணாளு = கருணைக் கடலாக இருப்பவனே

 

ஹே ஏகதந்தனே. இபேந்திரமுக என்றால் யானை முகத்தைக் கொண்டவன் என்று அர்த்தம். விக்னராஜனுக்கு யானை முகம் வந்ததற்கான காரணத்தை நாம் முந்தைய பத்யத்தில் பார்த்தோம். ஹே கஜமுகனே, தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அங்கங்களைக் கொண்டவனே. என்னை உன் கருணைப் பார்வையால் பார்.

 

கனீய என்றால் சிறியவன் என்று அர்த்தம். நோகனீய என்றால், அதற்கு எதிர்ப்பதம் - பெரியவன் என்று அர்த்தம். பிரம்மதேவருக்கும் தந்தையானதால், தாரதம்யத்தில் ஆகட்டும் எந்த விஷயங்களிலும் ஆகட்டும் பரமாத்மனைவிட உத்தமர் யார்? (யாரும் இல்லை). ஆகையால் நகர்மணாவர்த்ததே நோகனீயான்என்னும் ஸ்ருதியால், கர்மாதிகளால் வளர்ச்சி அடைபவன் அல்ல, எப்போதுமே பெரியவனாகவே இருக்கிறவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே அபிப்பிராயத்தையே தாசார்யர் இங்கு சொல்கிறார்.

 

இத்தகைய பரமாத்மனை எப்போதும் வணங்கிக் கொண்டிருக்கும் அறிஞர்களின் நட்பே பேரானந்தம். அத்தகைய ஆனந்தத்தை எனக்கு எப்போதும் கிடைக்குமாறு நீ கருணையுடன் அருள்வாயாக என்று உன்னிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன் என்று தாசார்யர் பிரார்த்திக்கிறார்.

 

விக்4னராஜனெ து3ர்விஷயதொ3ளு

மக்4னவாகி3ஹ மனவு மஹதோ3

ஷக்4னனங்க்4ரி ரோஜயுக3ளதி34க்திபூர்கவதி3

லக்3னவாக3லி நித்ய, நரக 4

யக்3னிக3ளிகானஞ்சே கு3ருவர

4க்3னகை3ஸென்ன அவகு3ணக3ளனு ப்ரதிதி3வஸத3ல்லி ||3

 

விக்னராஜனே,

துர்விஷயதொளு = தற்காலிகத்தில் விஷயங்களனது சுகங்களைக் கொடுத்தாலும், பிறகு அவற்றின் மூலம் துக்கங்களே வருகின்றன. ஆகையால், அவை துர்விஷயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய துர்விஷயங்களில்,

மக்னவாகிஹ = மூழ்கியிருக்கும்

மனவு = மனஸ்

மஹதோஷக்னன = ஸ்மரணை செய்வதாலேயே தோஷங்களைப் பரிகரிப்பவனான ஸ்ரீபரமாத்மனின்

அங்க்ரி சரோஜ யுகளதி = பாத கமலங்களில் (இரு பாத கமலங்களில்)

பக்திபூர்வகதி = பக்தியுடன்

லக்னவாகலி = சேரட்டும்

அனு = நான்

நித்ய = எப்போதும்

நரகபய = நரகம் வரும் என்னும் பயத்தால் ஆகட்டும்

அக்னிகளிகெ = அக்னி என்னை சுடும் என்றோ, இத்தகைய நரகம் என்னும் பயத்தாலோ

அஞ்செ = பயப்பட மாட்டேன்.

ஹே குருவரனே,

ப்ரதி திவஸதல்லி = தினந்தோறும்

என்னவகுணகளனு = என் துர்குணங்களை

பக்னகெய்ஸு = பரிகரிப்பாயாக (நாசம் செய்)

 

விஷய சுககளு என்றால் பத்து இந்திரியங்களுக்கு, மனஸ் சம்பந்தத்தினால் அனுபவிக்கும் சுக துக்கங்கள். அதாவது, கண்களால் பார்ப்பது, காதால் கேட்பது ஆகியவை ஞானேந்திரிய செயல்கள். கைகளால் செயல்களை செய்வது. கால்களால் நடப்பது. குஹ்யேந்திரியங்களால் ஸ்த்ரீயாதி போகங்களை அனுபவிப்பது ஆகியவை கர்மேந்திரியங்களில் செயல்கள். இந்த இந்திரியங்களை, பகவந்தனின் ப்ரீதிக்காகவே பயன்படுத்தினால் சத்விஷய என்றும், தன் தேகத்தின் சௌக்கியங்களுக்காக பயன்படுத்தினால் துர்விஷய என்றும், பெயர் வருகிறது.

 

பாகவதம் 7ம் ஸ்கந்தம் 9ம் அத்தியாயம் பிரகலாத ஸ்துதியில்:

யஸ்ம்யைதுனாதி க்ருஹமேதி சுகம்ஹி துச்சம்

கண்டூயனேகரயோரிவ துக்க துக்கம் |

த்ருப்யந்தி தேஹக்ருபணா பஹுதுக்க பாஜ:

கண்டூதிவன்மனஸிஜம் விஷஹேததீர: ||45

 

கிருஹஸ்தாஸ்ரமத்தில் இருந்து ஸ்த்ரீயாதி போகங்களால் வரும் சுகத்தை கிருஹஸ்தர்கள் சுகம் என்று அனுபவிப்பர். ஆனால், அது நிஜமான சுகம் அல்ல. துக்கத்திலும் பரம துக்கம் என்று சொல்ல வேண்டியதாகிறது. ஏனெனில், கைகளில் புண் வந்து, பின் அதில் அரிப்பு ஏற்பட்டால், எந்தப் பொருள் கிடைத்தாலும், கையானது அதை வைத்து சொறிந்து கொள்ளத் துவங்கிவிடுகிறது. அதனால், சிறிது காலத்திற்கு சுகம் உண்டாகிறது. பிறகு, அதிலிருந்து கெட்ட நீர் (சீழ்) வடியத் துவங்குகிறது. பரம துக்கம் உண்டாகிறது.

 

இதைப்போலவே, விஷய போகங்களும் தற்காலிக ஆனந்தத்தைக் கொடுப்பவை. அதன்பிறகு, துக்க பிராப்தியே ஆகிறது. புண் வந்தவன், சிறிது காலம் அதைப் பொறுத்துக்கொண்டு, அதில் கை வைக்காமல் இருந்தால், சொறிந்து கொள்ளும் காலத்தில் கிடைக்கும் அல்ப சுகம் அவனுக்குக் கிடைக்காது. அதன்பிறகு அவனுக்குக் கிடைக்கும் பெரிய துக்கமும் அவனுக்குக் கிடைக்காது.

 

அதைப்போலவே, காமத்தில் விழுந்து, ஸ்த்ரீயாதி போகங்களில் இருக்கும் அல்ப சுகத்திற்காக ஆசைப்பட்டு, பிறகு அதனால் விளையும் அபார துக்கத்தை அனுபவிப்பதைவிட, அந்த காமத்தை தடுத்து அதில் ஈடுபடாதிருந்தால், அதில் கிடைக்கும் அல்ப சுகமும், பின்னால் வரும் அபாரமான துக்கமும் வராது. தீரனானவன், இந்திரிய நிக்ரஹங்களை செய்யவேண்டும் என்று பிரகலாதர் கூறுகிறார்.

 

ஆகையால், தாசார்யர் துர்விஷயங்களில் என் மனஸ் மூழ்காமல், அதனை பரமாத்மனின் பாதாரவிந்தங்களில் நிலைத்திருக்குமாறு செய் என்று பிரார்த்திக்கிறார். இந்த இந்திரிய நிக்ரஹம் என்பது சாதாரண விஷயமல்ல. மிகவும் கஷ்டமானது. ஆகையால், அது தேவதா பிரசாதத்தினாலேயே ஆகவேண்டும் என்று விக்னேஷ்வரனை வேண்டிக் கொள்கிறார் என்பது கருத்து.

 

இது மட்டுமல்லாமல், ஞானிகள் சம்சாரத்தைக் கண்டு பயப்படுவதைப் போல நரகமோ, அக்னி முதலான எந்த விதமான துன்பங்கள் வந்தாலும்கூட அவைகளுக்கு அவர்கள் பயப்படுவதில்லை. தங்களுக்கு கஷ்டங்களே வரட்டும் என்று வேண்டுவர். சுகம் வந்தால், அந்த சமயத்தில் பரமாத்மனை மறந்து விடுவர். கஷ்டம் வந்தபோது, யோக்யர்கள் பகவந்தனை விடாமல் ஸ்மரித்துக் கொண்டிருப்பர்.

 

பாகவத 1ம் ஸ்கந்தத்தில், குந்திதேவி ஸ்ரீகிருஷ்ணனை ஸ்தோத்திரம் செய்யும் சந்தர்ப்பத்தில்:

விபதஸ்ஸந்துன: ஷஷ்வத்தத்ர பவதோ தர்ஷனம் யத்ஸ்யாதபுனர் பவதர்ஷனம் ||

 

ஹே ஜகத்பதியே, நமக்கு இப்போதைப் போலவே, எப்போதும் துன்பங்களே வந்து கொண்டிருக்கட்டும். இதுவே என் கோரிக்கை. ஏனெனில், துன்பம் வந்தால் உன் ஸ்மரணை வருகிறது. உன் ஸ்மரணையால் உன் தரிசனம் கிடைக்கிறது. உன் தரிசனத்தால், எந்த உலகத்திற்குச் சென்றால் மறுபிறவி இல்லையோ, அத்தகைய முக்தி கிடைக்கிறது -- என்று கஷ்டத்தையே வேண்டுகிறாள்.

 

சம்சாரத்தில் விழுந்து கஷ்டப்படும் விஷயத்தில் பகவத் பக்தர்கள் எவ்வளவு பயப்படுகிறார்களோ, அவ்வளவு பயம் வேறு எந்த விஷயத்திலும் அவர்களுக்கு ஏற்படுவதில்லை. பிரகலாதனின் ஸ்தோத்திரத்தில், பயங்கரமான உக்ர நரசிம்மன் ரூபம், இந்திராதி தேவதைகள் அனைவரும் பயப்படுமாறு பயங்கரமாக இருந்தபோது, பிரகலாதன் கூறிய விஷயம் என்னவெனில்:

 

நாஹம் பிபேம்யஜிததேsதி பயானகஸ்ய

ஜிஹ்வாக்னி நேத்ர ப்ருகுடீர பஸோக்ரதம்ஷ்ட்ராத் ||

அந்த்ரஸ்ரஜ: க்‌ஷதஜகேஸர ஷங்கு கர்ணான்

னிர்ஹ்ராத பீததிகிபாதரிபின்ன காக்ராத் ||

த்ரஸ்தோஸ்த்யஹம் க்ருபணவத்ஸல துஸ்ஸத்ரோக

ஸம்சார சக்ரகதனாத்க்ருஷதாம் ப்ரணீத: ||15

(6ம் அத்தியாயம்)

 

ஹே அஜிதா! உன் பயங்கரமான இந்த ரூபத்தின் இந்த நாக்கு, நெருப்பைப் போல ஒளிரும் உன் கண்கள், புருவங்கள், உக்ரமான கோரப் பற்கள், இந்த குடல் மாலை, நம் தந்தையைக் கிழித்து அதிலிருந்து வந்த ரத்தத்தில் தோய்ந்த தாடி, தலைமேல் வளர்ந்த காதுகள், யானைகளை பயப்பட வைக்கும் உன் சிம்ஹத்வனி, எதிரியை கிழித்த உன் நகங்கள் - இவற்றைப் பார்த்து நான் பயப்படுவதில்லை.

 

நான் எதற்கு பயப்படுகிறேன் என்றால், துக்ககரமான, ருத்ரதேவரைக் கூட முழுங்கி விடுமாறு இருக்கும் உக்ரமான சம்சார சக்கரத்தில் எங்கு விழவேண்டியிருக்குமோ எனும் பயம் என்னை நடுங்க வைக்கிறது -- என்று பிரகலாதன் நரசிம்மரிடம் வேண்டுகிறான்.

 

அதைப்போலவே, தாசார்யரும், நரகம், அக்னி முதலானவைகளுக்கு நான் பயப்படுவதில்லை. துர்விஷயத்தில் மனம் எங்கு விழுந்துவிடுமோ என்று பயப்படுகிறேன். அதன் பரிகாரத்தையே வேண்டுகிறேன் என்பது கருத்து. துர்விஷயத்தின் ரூபமே சம்சாரம் என்று சொல்கிறார்.

 

ஹே விக்னேஷ்வரனே, என்னிடம் என்ன அவகுணங்கள் இருந்தாலும், அவற்றைப் பரிகரித்து எனக்கு அருள்வாயாக. குருவரஎன்று கணபதியை அழைக்கிறார். பிரம்மதேவரில் தொடங்கி மனுஷ்யோத்தமர் வரை, தாரதம்யத்தின்படி அனைவரும் குருகளே ஆனதால், கணபதியும் அதே தாரதம்யத்தின்படி குருஸ்ரேஷ்டன் என்பது கருத்து.

 

4னப விஷ்வக்ஸேன வைத்3யா

ஸ்வினிக3ளிகெ3 ரி எனிப ஷண்முக2

நனுஜ ஸேஷஷதஸ்த2 தே3வோத்தம வியத்க3ங்கா3

வினுத விஷ்வோபாஸகனெ

ந்மனதி3 விக்3ஞாபிஸுவெ லகுமி

வனிதெயரன ப4க்தி ஞானவ கொட்டு லஹுவது3 ||4

 

தனப = குபேரன்

விஷ்வக்சேனன் = பிரதான வாயுபுத்ரன்

வைத்ய = தேவதா வைத்யனான

அஸ்வினிகளிகெ = அஸ்வினி தேவதைகள், இவர்களுக்கு

ஸரிஎனிப = தாரதம்யத்தில் சமானர் என்று அழைக்கப்படுகிறார்

ஷண்முகனனுஜ = ஷண்முகனுக்கு தம்பியானவன்

சேஷஷதஸ்த தேவோத்தம = உக்த சேஷஷதர் என்னும் 85 பேரில் உத்தமன்

வியத்கங்கா வினுத = ஆகாய கங்கையால் வணங்கப்பட்டவன்

விஷ்வோபாஸகனெ = பிம்பமூர்த்தியான விஷ்வம்பரனை உபாசனை செய்து கொண்டிருக்கும் ஹே விக்னராஜனே

லகுமீ வனிதெயரஸன = லட்சுமி தேவி என்னும் வனிதைக்கு பதியான ஸ்ரீபராமத்மனிடம்

பக்தி ஞானவ கொட்டு = பக்தி ஞானத்தைக் கொடுத்து

ஸலஹுவுது = எனக்கு அருள்வாயாக

சன்மனதி = உத்தமமான மனதால்

விக்ஞாபிஸுவெ = வேண்டுகோள் வைக்கிறேன்.

 

ஸ்ரீவிக்னேஷ்வரன், குபேரன், விஷ்வக்சேனன், வைத்யர்களான அஸ்வினி தேவதைகள் இவர்கள் தாரதம்யத்தில் சமம் என்று சொல்லப்படுகின்றனர். உக்த சேஷ ஷதர் என்னும் 85 தேவதைகளைவிட உத்தமர்கள் இவர்கள். கங்கா தேவியால் வணங்கப்பட்டவன் என்றபின் அவளைவிட பரமோத்தமன் என்று சொல்வதாயிற்று. விக்னேஷ்வரன் தன் அந்தர்யாமியான விஷ்வம்பர மூர்த்தியை உபாசனை செய்கிறான். இத்தகைய குணங்களைக் கொண்ட ஹே கஜபதியே, லட்சுமிபதியான பரமாத்மனிடம் த்ருடமான பக்தி, ஞானத்தைக் கொடுத்து என்னைக் காப்பாற்று என்று ஒருமனதுடன் உன்னிடம் வேண்டிக் கொள்கிறேன்.

 

சாருதே3ஷ்ணாஹ்வய னெனிஸி அவ

தார மாடி3தெ3 ருக்மிணீயலி

கௌ3ரியரனவரதி3 உத்34டராத3 ராக்‌ஷ|

ஷௌரியாக்3ஞதி3 ம்ஹரிஸி பூ4

பா4ர இளுஹித3 கருணி த்வத்பா

தா3ரவிந்த3கெ3 நமிபெ கருணிபுதெ3மகெ3 ன்மதிய ||5

 

ருக்மிணீயலி = கிருஷ்ணன் மூலமாக ருக்மிணி தேவியிடம்

சாருதேஷ்ணாஹ்வயனெனிஸி = சாருதேஷ்ண என்னும் பெயரால் புகழ்பெற்று, அவதாரம் செய்தாய். அந்த அவதாரத்தினால்

கௌரியரஸன = ருத்ர தேவரின்

வரதி = வரத்தினால்

உத்தடராத = கர்வத்தினால் மதம் பிடித்த

ராக்‌ஷஸர = அசுரர்களை

ஷௌரியாக்ஞதி = ஸ்ரீகிருஷ்ணனின் ஆணைப்படி

சம்ஹரிஸி = கொன்று

பூபார இளுஹித = பூமியின் பாரத்தைக் குறைத்த

கருணி = கருணாளுவான ஹே விக்னராஜனே

தத்பாதாரவிந்தகெ = உன் பாதாரவிந்தங்களை

நமிபெ = வணங்குகிறேன்

எமகெ = எங்களுக்கு

ஸன்மதிய = உத்தமமான பகவத் சம்பந்தமான புத்தியை

கருணிபுது = கொடுப்பாயாக.

 

ருக்மிணியிடம் சாருதேஷ்ணா என்னும் பெயரில் கணபதி அவதரித்த விஷயமானது, ப்ருஹத் தாரதம்ய சந்தியில் 21ம் பத்யம் அல்லது அம்ஷாவதரண சந்தியில் 24ம் பத்யத்தின் தாரதம்யத்தில் நிர்ணயாதிகளுடன், ஆதாரங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது.

 

சாருதேஷ்ணா கிருஷ்ண ஸுதோ ஸது பூர்வம் வினாயக: ||

 

என்னும் அம்ஷாவதரணத்தின் வாக்கியமும் இதற்கு ஆதாரமாகும். சாருதேஷ்ணனாக இருந்த காலத்தில் ருத்ரதேவரின் வரத்தினால் சாகாவரம் பெற்று, கிருஷ்ணனின் எதிரிகளான ராஜர்களை, கிருஷ்ணனின் ஆணையைப் பெற்று, அவர்களைக் கொன்று, பூபாரத்தைக் குறைத்தாய். ஹே கருணைக்கடலே. உன் பாதாரவிந்தங்களுக்கு நான் நமஸ்காரம் செய்கிறேன். நமக்கு பகவத் விஷயத்தில் மனம் நிலைக்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

 

ஸூர்ப்பகர்ண விராஜிதேந்து3

ந்த3ர்ப்பர உதி3தார்க்க ன்னிப4

ர்ப்பவரகடிஸூத்ர வைக்ருதகா3த்ர ஸுசரித்ர |

ஸ்வர்ப்பிதாங்குஷ பாஷகர க2

3ர்ப்பப4ஞ்ன கர்மஸாக்‌ஷிக3

தர்ப்பகனு நீனாகி3 த்ருப்திய ப3டி3ஸு சஜ்ஜனர ||6

 

ஷூர்ப்பகர்ண = முறம் போன்ற காதுகள்

விராஜித = இருக்கும்

இந்துவ தர்ப்பஹர = சந்திரனின் கர்வத்தைப் போக்கிய

உதிதார்க்க ஸன்னிப = உதயசூரியனைப் போல ஒளி பொருந்திய

ஸர்ப்பவர கடிஸூத்ர = பாம்புகளில் சிறந்தவனை தன் இடுப்பில் கட்டிக் கொண்டவனே

வைக்ருதகாத்ர = உடல் மனிதனைப் போலவும், தலை மட்டும் யானையின் தலையாக இருப்பதால், வைக்ருத ஷரீரம் என்றார்.

சுசரித்ர = இப்படி வைக்ருத சரீரமாக இருப்பதால், பார்ப்பவர்களை பயமுறுத்தும்படியாக இருக்கிறானோ என்னும் சந்தேகத்தைப் போக்குவதற்காக, சுசரித்ர என்றார். அனைவராலும் வணங்கப்படும் சரித்திரம் உள்ளவன் என்பது கருத்து.

ஸ்வர்ப்பித = நன்றாக பிடிக்கப்பட்ட

அங்குஷ பாஷகர = அங்குசம், பாஷம் இந்த இரு ஆயுதங்களைக் கொண்ட கைகளைக் கொண்டவன்

களதர்ப்ப பஞ்சன = பாண்டவ த்வேஷ, யாதவ த்வேஷ, பகவத் த்வேஷ இவற்றை செய்யும் அயோக்யர்களான ராஜர்களின் கர்வத்தை அடக்கி மஹாஷூரன் என்று அழைத்துக் கொள்கிறான்

கர்மஸாக்‌ஷிக = அனைத்து கர்மங்களையும் ஒரு சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கும்

ஹே மஹா கணபதியே!

தர்ப்பகனு நீனாகி = சாதுகளின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றுபவனே

சஜ்ஜனர த்ருப்தி படுஸு = சஜ்ஜனர்களை திருப்திப்படுத்து.

 

முறத்தைப் போன்ற காதுகளை உடையவன். அப்படியெனில், பார்ப்பவர்களுக்கு விகாரமாக தெரிகிறானோ என்றால் விராஜிதஎன்னும் சொல்லினால், யானையின் முகம் ஆனதால், அதற்கேற்ப காதுகள் இல்லையெனில் சரியாக இருக்காது. ஆகையால், அந்த முகத்திற்கேற்ப, முறங்களே இரு காதுகளாக இருந்து, அழகாகவும் இருக்கின்றன என்பது கருத்து.

 

பாத்ரபத சுத்த சதுர்த்தியன்று, ருத்ரதேவரின் வரத்தினால் அனைத்து வீடுகளிலும் பூஜையை ஏற்றுக்கொண்டு, மோதகங்களை உண்டு, அவற்றை கைகளிலும் ஏந்தி, மாலையில் வரும்போது வாகனமான மூஞ்சுறு, அங்கிருந்த பாம்பினைக் கண்டு பயந்து தள்ளாட, அதன் மேல் அமர்ந்திருந்த கணபதி கீழே விழ, அதைக் கண்ட சந்திரன் சிரித்து கேலி செய்தான்.

 

அதனால் கோபம் கொண்ட கணபதி, தன் ஒரு தந்தத்தைப் பிய்த்து, அவன் மேல் எறிந்தார். இந்த நாளில் இனி யாரும் சந்திர தரிசனத்தை செய்யக்கூடாது. அப்படி செய்துவிட்டால், அவர்கள் மேல் திருட்டுப் பட்டமோ, பெண்களை மயக்குபவன் என்னும் ஜார பட்டமோ வரும் என்று சாபத்தைக் கொடுத்தார். இந்த கதையை கணேசனின் வரலாறில் பார்த்திருப்போம். அதை மனதில் வைத்துக்கொண்டு சந்திர தர்ப்பஹர என்றார்.

 

இந்தக் கதையை, கணேச பூஜையன்று, பூஜைக்கான கதை படிக்கும்போது பலரும் கேட்டிருக்கலாம். ஆனால் இந்த கதையானது, தற்போது வரும் புதிய புத்தகப் பதிப்புகளில் வருவதில்லை. ஆகவே, அனைவரும் அறியவேண்டும் என்பதற்காக சிறிது விளக்கினோம்.

 

ஒரு காலத்தில், அகஸ்த்ய ரிஷிகள், பரமாத்மனைக் குறித்து தவம் செய்து, தினந்தோறும் தான் வசித்து வந்த விந்த்யா பர்வதத்தின் தெற்கு பாகத்திலிருந்து, காசிக்குச் சென்று, கங்கையில் குளித்து, கங்கோதகத்தை எடுத்து, ராமேஸ்வரத்திற்குச் சென்று, ராமலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, மறுபடி விரைவில் தம் இடத்திற்கு வரவேண்டும். இப்படி தினமும் செய்ய வேண்டும் என்னும் ஆசை தமக்கு இருக்கிறது. இதற்கான வரம் வேண்டும் என்று வேண்டினார்.

 

பரமாத்மன் அவரின் தவத்திற்கு மெச்சி, ஒரு குடத்தைக் கொடுத்து, ‘நீ விரும்பியதைப் போலவே தினமும் காசிக்கு, பின் ராமேஸ்வரத்திற்குச் செல்லும் சக்தியை உனக்கு கொடுத்துள்ளேன். ஆனால், எந்தவொரு நாளும் நீ இந்த குடத்தை நடுவில் கீழே வைக்கக்கூடாது. அப்படி வைத்துவிட்டால், குடம் உடைந்து விடும். அன்றிலிருந்து இந்த சக்தி உனக்கு இருக்காதுஎன்று வரம் கொடுத்து மறைந்தார்.

 

அகஸ்த்யரும் பகவந்தனின் வரத்தின்படி, தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ஒரு நாள், தெய்வ சங்கல்பத்தின்படி, காசியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, மலமூத்திர விசர்ஜனம் செய்ய வேண்டிவந்தது. இந்த நிலையில், குடத்தைக் கொண்டு சென்று அபிஷேகம் செய்தால், அது சரியல்ல. ஆனால் குடத்தை கீழே வைத்தால், அது உடைந்துவிடும். ஆக, என்ன செய்வது என்று யோசித்தார்.

 

அன்று பாத்ரபத சுத்த சதுர்த்தி. வீடுவீடுகளுக்குச் சென்று பூஜையை ஏற்றுக்கொண்டு, மூஷிக வாகனனாக கணபதி வருவதைக் கண்டு, அவரிடம் ஹே விக்னேஸ்வரனே, இந்தக் குடத்தை சிறிது நேரம் கையில் பிடித்துக்கொள். இதை கீழே வைத்தால், குடம் உடைந்துவிடும். அடுத்து நான் செய்யவிருக்கும் மஹாகாரியம் நின்று போய்விடும். நான் ஓரிரு நிமிடங்களில் வந்துவிடுகிறேன். அதுவரை இதனை வைத்துக்கொள்என்றார்.

 

அதற்கு கணபதி அகஸ்தியரே, எனக்கு அவசரமான வேலை இருக்கிறது. ஆனாலும், உங்களுக்காக இந்தக் குடத்தை சிறிது நேரம் வைத்துக் கொள்கிறேன். ஆனால், நான் உங்களை மூன்று முறை கூப்பிடுவேன். அதற்குள் நீங்கள் வரவில்லையெனில், இதனை கீழே வைத்துவிட்டுப் போய்விடுவேன்என்றான்.

 

அகஸ்தியரோ, இவன் சும்மா நகைச்சுவைக்காக சொல்கிறான், குடத்தை கீழே வைக்க மாட்டான் என்று நம்பி, சரி என்று சொல்லிவிட்டு, குடத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அகஸ்தியர் நான்கு அடிகளை வைத்துச் சென்றதுமே, ‘அகஸ்தியரே வாரும்என்றான். இன்னொரு நான்கு அடிகளை வைத்ததுமே மறுபடி கூப்பிட்டான். அகஸ்தியர், கழிப்பிடத்தை சேர்வதற்குள்ளேயே, அகஸ்தியரே வாரும் என்று மூன்றாம் முறையும் சொல்லிவிட்டு, குடத்தை கீழே வைத்துவிட்டான். குடம் உடைந்து போனது. கணபதியும் பயந்து, அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.

 

அகஸ்தியர் தம் வேலையை முடித்து, ஆசமனம் செய்து, வந்து, குடம் உடைந்து கிடப்பதை பார்த்தார். தம் வேலை விக்னமானதால் மிகவும் சோகம் கொண்டு, அபாரமான கோபமும் வந்தது. இந்தக் குடம் எப்படி உடைந்ததோ, அதுபோலவே, இன்று உன் வயிறும் உடைந்து போகும் என்று கணபதிக்கு சாபம் கொடுத்தார். அதனாலேயே, அன்று கணபதி, மூஷிக வாகனத்திலிருந்து விழுந்து வயிறு உடைந்தது. அதற்கு சந்திரன் சிரித்ததற்காக, கணபதி சந்திரனுக்கு சாபம் கொடுத்து, அவன் கர்வத்தை அடக்கினார் என்று கதையில் படிக்கிறோம்.

 

உதயசூரியனைப் போல அழகாக ஒளிர்பவன். பாம்பினை தன் இடுப்பில் கட்டியிருப்பவன். கணபதியின் வயிறு உடைந்தபோது, பாம்பினால் அதனை இறுக்கக் கட்டினார் என்பது காரணம். யானைத் தலை, மனித சரீரம், வயிற்றில் கட்டப்பட்ட பாம்பு, இவற்றைக் கேட்டால், அவன் விகாரன் என்று நினைக்கலாம். ஆகையால், வைக்ருத காத்ரன் என்றார்.

 

ஆனால், அவன் விகாரனல்ல. பார்ப்பவர்கள் புகழும்படியான ரூபத்தையே காண்கின்றனர். இவனின் கதை அனைவரும் கொண்டாடும் விதமாக உலகப் புகழ் பெற்றதாக இருக்கிறது. பாஷ, அங்குஷங்களை இரு கைகளில் பிடித்திருக்கிறான். அயோக்யர்களான பகவத் த்வேஷிகளின் கர்வத்தை அடக்கினான். அனைத்து ஜீவர்களும் செய்யும் கர்மங்களுக்கு, ஆகாஷ அபிமானியாக இருந்து, சாக்‌ஷியாக இருக்கிறான். மக்களால் பூஜிக்கப்பட்டு அவரவர்களின் மனோபீஷ்டங்களை சீக்கிரத்தில் நிறைவேற்றும் ஸ்வபாவம் உள்ளவன். ஆகையால், சஜ்ஜனர்களின் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றி, த்ருப்திப்படுத்துகிறான்.

 

கே2ஷ பரம ஸு4க்தி பூர்வக

வ்யாக்ருத க்3ரந்தக3ளனரிது ப்ர

யாவில்லதெ33ரெது3 விஸ்தரிஸிதெ3யோ லோகதொ3ளு |

பாஷபாணியெ ப்ரார்த்திஸுவெ உப

தே3ஷிஸெனகெ3 அத3ரர்த்த23ள கரு

ணாமுத்3ர க்ருபாகடாக்‌ஷதி3 நோடு3 ப்ரதிதி3னதி3 ||7

 

கேஷ = ஆகாஷாதிபதியான விக்னேஷ்வரனே

பரமசுபக்தி பூர்வக = மிகுந்த பக்தியுடன்

வியாசக்ருத கிரந்தகளனு = வேதவியாஸ தேவர் இயற்றிய பாரதத்தின் 1.25 லட்ச ஸ்லோகங்களின் அர்த்தங்களை

அரிது = அறிந்து

ப்ரயாஸவில்லதெ பரெது = எவ்வித சோர்வுமின்று எழுதி

லோகதொளு = இந்த உலகத்தில்

விஸ்தரிஸிதெயோ = பரப்பினாய்

பாஷபாணியே = பாஷத்தை கையில் பிடித்த கணாத்யக்‌ஷனே

பிரார்த்திஸுவே = உன்னை வணங்குவேன்

அதரர்த்தகள = பாரதத்தின் முழுமையான அர்த்தங்களை

உபதேஷிசெனகெ = எனக்கு உபதேசிப்பாயாக

கருணாசமுத்ர = கருணைக்கடலே

பிரதிதினதி = தினந்தோறும்

க்ருபாகடாக்‌ஷதி நோடு = என்னை உன் கருணைக் கண்களால் பார்.

 

கம் என்றால் ஆகாயம். அதற்கு ஈஷ என்றால் ஆகாஷாத்ம என்று அர்த்தம். வேதவியாஸ தேவர், பாரதத்தை இயற்றி, இந்த கிரந்தத்தை எழுதவேண்டும் என்று கணபதிக்கு சொல்ல, அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு, தன் எழுத்தாணி நடுவில் நிற்காதவாறு, தொடர்ந்து சொல்லிக் கொண்டே வரவேண்டும் என்று கூறினார். அப்படி நடுவில் என் எழுத்தாணி நின்றுவிட்டால், நான் தொடர்ந்து எழுதமாட்டேன் என்றார்.

 

அதற்கு வேதவியாசதேவரும், அப்படியே ஆகட்டும், ஆனால், நான் சொல்லும் ஸ்லோகங்களை, நீ அர்த்தம் புரிந்துகொண்டே எழுதவேண்டும். அப்படியே இருவரும் ஒப்புக்கொண்டு, கிரந்தத்தை எழுதத் துவங்க, வேதவியாசதேவர் தாம் எழுதிய வரை கணபதிக்கு சொல்லிவிட்டார். அடுத்து, கிரந்தம் இயற்றப்பட வேண்டும். எழுத்தாணி நின்றுவிட்டால், கணபதி மேற்கொண்டு எழுதுவதில்லை.

 

இதற்கு என்ன உபாயம் என்று சிந்தித்து, சில ஸ்லோகங்களை அடுத்து மிகவும் கடினமான சொற்களால் இயற்றிக் கொடுத்தார். அதன் அர்த்தத்தை கணபதி யோசிக்கும் நேரத்தில், இவர் வேகமாக கிரந்தத்தை முன்னெடுத்துச் சென்றார். இப்படியே நடுநடுவே கடின ஸ்லோகங்களைக் கொடுக்க, கணபதியும், சர்வக்ஞனானாலும், அதன் அர்த்தத்தை யோசித்தே எழுதவேண்டியிருந்தது. இப்படியே முழு கிரந்தத்தையும் எழுதி முடித்தார்.

 

இப்படியாக 90 லட்ச ஸ்லோகங்களால் வேதவியாசதேவர் பாரதத்தை இயற்றினார். அவற்றில் 30 லட்ச ஸ்லோகங்கள், தேவ லோகத்தையும், 15 லட்சம் ரிஷி லோகத்தையும், 14 லட்ச ஸ்லோகங்கள் பித்ரு லோகத்தையும் சேர்ந்தன. ஒரு லட்ச ஸ்லோகங்கள் மட்டுமே பூமியைச் சேர்ந்தன. இது மட்டுமல்லாமல், ராமோபாக்யான முதலான உபாக்யானங்கள் 25,000 ஸ்லோகங்கள் என, ஹரிவம்சமும் பாரதமும் சேர்ந்து 1.25 லட்ச ஸ்லோகங்கள் என பூமியில் இருந்தன.

 

கணபதியை யோசிக்க வைக்க வேதவியாச தேவர் நடுநடுவே கூறிய கடின சொற்களைக் கொண்ட ஸ்லோகங்கள் மொத்தம் 8,800.

 

அஷ்டௌ ஸ்லோக சஹஸ்ராணி அஷ்டௌஸ்லோக ஷதானிச |

அஹம் வேத்தி ஷுகோ வேத்தி சஞ்சயோ வேத்தி வானவா ||

 

8,800 ஸ்லோகங்களை கடினமானதாக இயற்றி, வேதவியாசதேவர் கூறிய வாக்கியம் என்னவென்றால்: இந்த 8,800 ஸ்லோகங்களின் அர்த்தங்களை நான் அறிவேன். இந்த ஸ்லோகங்களின் அர்த்தங்கள் கணபதியின் மனதிற்கு வந்தனவோ இல்லையோ என்கிற சந்தேகத்திற்கு இடமே இல்லை. ஏனெனில், முதலிலேயே இருவரும் ஒப்புக் கொண்டபடி, அர்த்தம் புரியாமல் எழுதக்கூடாது என்று சொல்லியிருந்ததால், இந்த கிரந்தத்தை கணபதி எழுதியிருப்பதாலேயே, அவன் இதன் அர்த்தத்தை அறிந்திருக்கிறான் என்று தெரிகிறது.

 

இதையே தாசார்யர் இங்கு சொல்லியிருக்கிறார். வேதவியாஸ தேவர் செய்த கிரந்தங்களின் அர்த்தங்களை அறிந்து, சோர்வில்லாமல் எழுதி, உலகத்தில் பரப்பினாய். பாரத, ஆதிபர்வத்தின் துவக்கத்தில் இந்த கதையை விவரமாக எழுதியிருப்பார். தாசார்யர் இவ்வாறு பிரார்த்திக்கிறார்.

 

ஹே பாஷபாணியே, பாரத அர்த்தத்தை நீ நன்றாக அறிந்திருக்கும்படியால், அதன் அர்த்தத்தை எனக்கு புரியவை. நீ உன் க்ருபா கடாக்‌ஷத்தினால் என்னைப் பார். கிருபாகடாக்‌ஷத்தினால் என்னைப் பார்த்தால், பாரதாதி கிரந்தங்களுக்கு அர்த்தம் சுலபமாகப் புரியும் என்பது கருத்து. 

 

ஸ்ரீஷனதி1 நிர்மலஸுனாபி4

தே3ஸ்தி2த ரக்த 3ந்தா4

திஸுஷோபி4தகா3த்ர லோகபவித்ர ஸுரமித்ர |

மூஷி2கா ரவஹன ப்ராணா

வேஷயுத ப்ரக்2யாத ப்ரபு4 பூ

ரயிஸு ப4க்தரு பே3டி33 இஷ்டார்த்த23ள ப்ரதிதி3னதி3 ||8

 

ஸ்ரீஷன = ஸ்ரீலட்சுமிபதியான பரமாத்மனின்

அதி நிர்மல = மிகவும் தூய்மையான

நாபிதேஷ வஸ்தித = நாபி பிரதேசத்தில் வசிக்கிறாய்

ரக்தகந்தா சுஷோபீதகாத்ர = சிகப்பு வர்ண சந்தனத்தை பூசிக்கொண்டு, அதனால் அழகாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் தேகத்தைக் கொண்டவனே

லோகபவித்ர = சஜ்ஜனர்களின் தடைகளைப் போக்கி, அவர்களை உலகத்தில் பவித்ர கர்மங்களை செய்ய வைக்கிறாய்

சுரமித்ர = தேவதைகளின் நண்பன்

மூஷிக சுவரவஹன = உத்தமமான மூஷிக வாகனனாகி இருப்பவனே

ப்ராணாவேஷயுத ப்ரக்யாத ப்ரபு = பிராண தேவரின் ஆவேசத்தைக் கொண்டு, உலகப் புகழ்பெற்று பிரபு என்று அழைக்கப்படுபவனே

இத்தகைய நற்குணங்களைக் கொண்டவனே, ஹே விக்னேஷ்வரனே,

ப்ரதிதினதி = தினந்தோறும்

பக்தரு பேடித = பக்தர்கள் வேண்டும்

இஷ்டார்த்தகள = இஷ்டார்த்தங்களை

பூரயிஸு = நீ நிறைவேற்று.

 

ஸ்ரீபரமாத்மனின் நாபி பிரதேசத்தில் இருக்கும் ஆகாஷத்தில் வசிப்பவனே. ஹே கணபதியே. ரக்தாம்பகோ ரக்ததனு: ரக்தமால்யானு லேபன:என்று தந்த்ரசார சங்க்ரஹத்தில், கணபதி மந்திரத்தின் தியான ஸ்லோகத்தில் ஸ்ரீமன் மத்வாசார்யர் சொல்லியிருக்கும் வாக்கியம் இது. அப்படியே, சிகப்பு வர்ண மிகவும் அழகான சரீரம் உள்ளவனே. உலகத்தையே பவித்ரமாக மாற்றுபவனே. நீ தேவதைகளின் நண்பன். மூஷிகனை வாகனனாகக் கொண்டவன். பிராணதேவரின் ஆவேசத்தைப் பெற்று உலகப் புகழ் பெற்றவன். ஹே பிரபோ, தினந்தோறும் பக்தர்கள் வேண்டும் இஷ்டார்த்தங்களை நிறைவேற்று.

 

ஷங்கராத்மஜ தை3த்யரிக3தி ப4

யங்கர க3திக3ளீயலோஸு3

ங்கடசதுர்த்தி23னெனிஸி அஹிதார்த்த23ள கொட்டு |

மங்குக3ள மோஹிஸுவெ சக்ரத3

ரங்கி3தனெ தி3னதி3னதி3 த்வத்பத3

பங்கஜகெரகி3 பி3ன்னயிஸுவெனு பாலிபுது3 எம்ம ||9

 

ஷங்கராத்மஜ = ஹே ருத்ர குமாரனே

தைத்யர்களுக்கு அதி பயங்கர கதிகள = தைத்யர்களுக்கு அவர்களுக்கு தக்க கதிகளை

ஈயலோசுக = கொடுப்பதற்காக

சங்கடசதுர்த்திகனெனிஸி = ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பட்ச சதுர்த்தியன்று, சங்கஷ்ட சதுர்த்தி கணபதி விரத என்று பஞ்சாங்களில் போட்டிருப்பர். அந்த நாளில், அந்த விரதத்தில் நிலைத்திருந்து,

அஹிதார்த்தகள கொட்டு = அவர்களுக்கு ஹிதமாகாத. அதாவது, நரகத்திற்கு சாதனையாகும் விஷய சுகத்தைக் கொடுத்து

மங்குகள = மூர்க்க ஜனர்களை மயக்குவாய்

சக்ரதராங்கிதன = சக்ர, சங்கு இவற்றை தரித்திருக்கும் ஸ்ரீபரமாத்மனின்

தோரு = காட்டு

த்வத்பத பங்கஜகெரகி = உன் பாத கமலங்களுக்கு

அனுதினதி = தினந்தோறும்

எரகி = நமஸ்கரித்து

பின்னயிஸுவேனு = வணங்குவேன்

எம்ம = எங்களுக்கு

பாலிபுது = அருள்வாயாக

 

ஹே ருத்ரதேவரின் குமாரனே. உன்னை வேண்டி, பலர் ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்‌ஷ சதுர்த்தியன்று சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொள்கின்றனர். அங்கு, அந்த இடத்தில் நீ நிலைத்திருந்து, அவர்களின் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றியதாக காட்டி, அந்த மூர்க்க மக்களை மயக்கி, இறுதியில் அவர்களுக்கு அனர்த்தமான கதியையே கொடுக்கிறாய். தைத்யர்கள் மற்றும் அவரின் ஆவேசம் உள்ளவர்களே இந்த விரதத்தை செய்வார்கள். அவர்களுக்கு, அதோகதியைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே, அந்த நாளில் அவர்கள் செய்யும் பூஜையை ஏற்றுக் கொள்கிறாய்.

 

இப்படியாக தாசார்யர், சங்கடஹர சதுர்த்தியை தூஷிக்கிறார். இதன் காரணம் என்னவென்றால், சங்கடஹர சதுர்த்தி விரதத்தை செய்பவர்கள், மாலை வரை உபவாசம் இருந்து அந்த விரதத்தை செய்கின்றனர். அந்த விரதத்தில், கணபதியே சர்வோத்தமன் என்றும், ஸ்ருஷ்ட்யாதி கர்தன் என்றும் சொல்லி, கணபதி உபநிஷத் மற்றும், நிஷுஸீத கணபதி முதலான ரிக்குகளில் இருக்கும் உண்மையான அர்த்தத்தை அறியாமல், ஹரி ஹராதிகளைவிட கணபதியே உத்தமன் என்று அறிந்து பூஜிப்பார்கள்.

 

கணபதி உபநிஷத்தின் வாக்கியங்கள், தத்வாபிமானி தேவதைகளின் பதி ஆனதால், பரமாத்மனுக்கு கணபதி என்று பெயர். அதில் பரமாத்மனின் மகிமையையே சொல்கின்றனர். ஆனால், அதனை விக்னேஸ்வரைக் குறித்து சொல்வதாக நினைத்து கணபதி சர்வோத்தமன் என்று சொல்லி பூஜிக்கின்றனர். ஆகையாலேயே, அதன் பலனாக அவர்களுக்கு நரகமே கிடைக்கின்றது.

 

அவர்களுக்கு அனர்த்தத்தைக் கொடுக்கும் உத்தேசத்தினாலேயே, அந்த நாளில் கணபதி, அவர்களிடமிருந்து அந்த பூஜையை ஏற்றுக் கொள்கிறான் என்பது கருத்து

 

தினந்தோறும் உன் பாதாரவிந்தங்களில் விழுந்து வணங்குகிறேன். சக்ர மற்றும் சங்கு தாரியான பரமாத்மனை காட்டி நம்மை அருள்வாயாக.

 

சித்34வித்3யா த4ரக3மா

ராத்4ய சரணரோஜ ர்வஸு

ஸித்தி3தா3யக ஷீக்4ரதி3ம் பாலிபுது3 பி3ன்னபவ |

பு3த்தி வித்3யா ஞான ப3ல பரி

ஸுத்தப4க்தி விரக்தி நிருதன

வத்3யன ஸ்ம்ருதிலீலெக3ஸுஸ்தவன வத3னத3லி ||10

 

ஸித்த = ஸித்தர்கள்

வித்யாதரகண = வித்யாதரர்கள், இவர்களிடமிருந்து

ஸமாராத்ய சரணசரோஜ= நன்றாக ஆராதிக்கப்பட்டுள்ள பாத கமலங்களைக் கொண்டவனே

சர்வ சுசித்தி தாயக = பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் கொடுப்பவனே

புத்தி = நிஸ்சய ஞானம்

வித்யா = பகவத் சம்பந்தமான மீமாம்ஸ முதலான சாஸ்திரங்களில் ஈடுபட்டிருப்பது

ஞான பல = ஹரிசர்வோத்தமாதி ஞானம். இத்தகைய ஞானமே பல.

பரிசுத்தபக்தி = த்வேஷம் ஆகியவற்றின் சம்பந்தமில்லாத பக்தி

விரக்தி = சம்சாரத்தில் விரக்தி

ஆகியவற்றை

நிரத = தினந்தோறும்

அனவத்யன = தோஷங்கள் அற்ற ஸ்ரீ பரமாத்மனின்

ஸ்ம்ருதி = மனதில் எப்போதும் அவனின் ஸ்மரணை இருக்குமாறும்

வதனதலி = வாயில்

லீலெகள = பரமாத்மனின் அவதாராதி லீலைகள்

ஸுஸ்தவன = நன்றாக ஸ்தோத்திரம் செய்து கொண்டிருக்கும்படியும்

இந்த,

பின்னபவ = வேண்டுகோளை

ஷீக்ரதிம் பாலிபுது = சீக்கிரமாக நினைவேற்றுவாயாக.

 

ஸித்தர்கள், வித்யாதரர்கள் இவர்களால் நன்றாக வணங்கப்படும் பாத கமலங்களைக் கொண்டவன். பக்தர்களின் அனைத்து அபீஷ்டங்களையும் நிறைவேற்றுபவன். ஹே விக்னராஜனே. நான் உன்னிடம் வேண்டுவது என்னவென்றால், எனக்கு எப்போதும், புத்தி, வித்யை, ஞான பல, பரிசுத்தபக்தி, விரக்தி - என இந்த அனைத்திலும் எனக்கு ஈடுபாடு வருமாறு செய்து, மற்றும் தோஷங்கள் அற்றவனான ஸ்ரீபரமாத்மனின் ஸ்மரணை இருக்குமாறும், அவனின் லீலைகள் என் வாயிலிருந்து எப்போதும் வெளிவருமாறும் செய்து செய்யவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

 

ரக்தவாத்3வய விபூ4ஷண

உக்தி லாலிஸு பரம ப43

த் ப4க்தவர ப4வ்யாத்ம பா43வதாதி ஷாஸ்த்ரத3லி

க்தவாக3லி மனவு விஷய வி

ரக்தி பாலிஸு வித்3வதா3த்3ய வி

முக்தனெந் தெ3னிஸென்ன ப4வப4யதி3ந்த3 அனுதி3னதி3 ||11

 

ரக்தவாஸத்வய விபூஷண = சிவப்பு வண்ண இரு ஆடைகள். ஒன்றை உடுத்தி இன்னொன்றை மேல் வஸ்திரமாக போர்த்தி, அதனால் அலங்கரிக்கப்பட்டவனே

பரம பகவத் பக்தவர = பரம பாகவதோத்தமனே

பவ்யாத்ம = பரம மங்களகரமான சரீரம் உள்ளவனே

உக்தி லாலிஸு = என் பேச்சை தயவு செய்து கேள். அல்லது, மக்களின் பேச்சை தந்தை தாய்கள் கேட்பதைப் போல கேள்

பாகவதாதி சாஸ்திரதலி = பாகவதாதி புராண சாஸ்திரங்களில்

மனவு = என் மனம் நிலைத்திருக்கட்டும்

விஷய விரக்தி பாலிஸு = விஷய போகாதிகளில் விரக்தி பிறக்குமாறு அருள்வாயாக

வித்வதாத்ய = வித்யாவந்தர்களில் உத்தமமானவனே

அனுதினதி = எப்போதும்

பவபயதிந்த = சம்சாரத்தைப் பற்றிய பயத்தால்

என்ன = என்னை

விமுக்தனெந்தெனிஸு = முக்தர்களின் நடுவே முக்தனாக இருக்கும்படி செய்

 

கணபதி உடுத்தியிருக்கும் ஆடையின் நிறம் சிகப்பு என்று தந்த்ரசாரத்தில் கணபதி மந்திரத்தின் தியான ஸ்லோகத்தில் ரக்தாம்பரோ ரக்ததனூ ரக்தமால்யானுலேபன:என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே அர்த்தத்தையே இங்கு தாசார்யர் சொல்கிறார். பரம பகவத்பக்தர்களில் உத்தமன். அதாவது, பிரம்மாதிகள் பரம பாகவதர்கள். அவர்களைவிட கணபதி உத்தமன் என்று அர்த்தமல்ல. தாரதம்யத்தின்படி இவரைவிட உத்தமர்களான பிரம்மாதேவர் முதல் நிரருதி, ப்ராவஹி வரைக்கும் சொல்லப்பட்டிருக்கும் உத்தம பகவத் பக்தர்களை விட்டு, மற்ற உக்த சேஷஷதஸ்தர் எனப்படும் 85 தேவதைகள், கங்கை, பர்ஜன்ய ஆகியோர்களைவிட பக்தியில் சிறந்தவன் என்று அர்த்தம். இதைவிட்டு, பிரம்மாதிகளைவிட என்று அனைவரையும் சேர்த்து சொல்லக்கூடாது.

 

என் மனம், எப்போதும் பாகவதாதி நற்சாஸ்திரங்களில் நிலைத்திருக்குமாறு செய் என்று வேண்டுகிறார். இந்த என் பேச்சினை, குழந்தையின் பேச்சினை தாய் தந்தையர் எப்படி நிறைவேற்றுவரோ அப்படியே நிறைவேற்று. விஷய போகங்களில் எனக்கு எப்போதும் விரக்தி இருக்கட்டும். ஹே வித்வதார்யனே, என்னை சம்சார முக்தன் என்று பெயர் வருமாறு செய்.

 

ஸுக்ரசிஷ்யர ம்ஹரிபுத3கெ

ஷக்ர நின்னனு பூஜிஸி3னு உ

ருக்ரம ஸ்ரீராமசந்த்ரனு ஸேதுமுக23ல்லி |

சக்ரவர்த்தி த4ர்மராஜனு

சக்ரபாணிய நுடி3கெ34ஜிஸித3

வக்ரதுண்ட3னெ நின்னொளெந்து3டோ ஈஷனுக்3ரஹவு ||12

 

சுக்ரசிஷ்யர = சுக்ராசார்யரின் சிஷ்யரான தைத்யர்களை

சம்ஹரிபுதகெ = கொல்வதற்காக

ஷக்ர = தேவேந்திரன்

நின்னனு பூஜிஸிதனு = உன்னை வணங்கினான்

உருக்ரம = பஹு பராக்ரமசாலியான

ஸ்ரீராமசந்திரன்

சேதுமுகதல்லி = சேது பந்தனத்தை துவக்கும்போது உன்னை பூஜித்தான்

சக்ரபாணிய நுடிகெ = சக்ரபாணியான ஸ்ரீகிருஷ்ணனின் உபதேசத்தைக் கேட்டு

சக்ரவர்த்தி தர்மராஜன்,

பஜிஸித = உன்னை வணங்கினான்

வக்ரதுண்டனெ = தும்பிக்கை உள்ள முகத்தைக் கொண்டவனே

ஈஷனுக்ரஹவு = பகவத் அருள்

நின்னல்லி = உன்னிடம்

எந்துடோ = எவ்வளவு இருக்கிறதோ? (பகவத் அனுக்கிரகம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்).

 

தேவேந்திரன் வ்ருத்ராசுரனைக் கொல்வதற்காக போகும்போது கணபதியின் பூஜையை செய்து, பின் சென்று போரிட்டு, வ்ருத்ராசுரன் மற்றும் அவனின் சேனைகளை தோற்கடித்து, வென்றான். ஸ்ரீராமசந்திரன், சீதையை மீட்கும் நோக்கத்தில், சேதுவைக் கட்டும்போது, விக்னராஜனின் பூஜையை செய்து, நிர்விக்னமாக சேதுபந்தனத்தைக் கட்டினான். என்னும் கதைகளை ஸ்ரீகிருஷ்ணன், தர்மராஜனுக்கு சொல்லி, தர்மராஜன் மூலமாக கணபதி பூஜையை செய்வித்தான்.

 

ஸ்காந்த புராணத்தில் கணேசனின் கதையில்:

ஸன்னத்தயோ: புரவிப்ரா: குருபாண்டவ ஸேனயோ: |

ப்ருஷ்டவான் தேவகீபுத்ரம் தர்மபுத்ரோயுதீஷ்டர: |

நிர்விக்னேன ஜயோஒ மஹம் வத தேவகி நந்தன ||

காம் தேவதாம் நமஸ்க்ருத்ய ஸம்யக்ராஜ்யம் லபேமஹி ||

 

ஸ்ரீகிருஷ்ண உவாச ||

பூஜயஸ்வ கணாத்யக்‌ஷம் ஸமுத்பவம் |

தஸ்மின் ஸம்பூஜிதேவீரே ஸம்யக்ராஜ்ய மவாப்யஸி ||

ஷக்ரேணபூஜித: பூர்வம் ததாவ்ருத்ரவதே ந்ருப ||

ராமசந்த்ரேண மஹதா ஞானக்யான்வேஷணே ததா ||

தஸ்மாத் ஸர்வப்ரயத்னேன பூஜனீயோ கணாதிப: ||

ஏவமுக்தஸ்து க்ருணேன ஸானுஜ: பாண்டுனந்தன: ||

பூஜயாமாஸ தேவேஷம் புத்ரம் த்ரிபுர காதின: ||

தத்ப்ரஸாதான் னிஹத்யாஷு ஷத்ரு ஸங்கானசேஷத: ||

ஸஸ்யைனிகான் மஹா பாக: ப்ராப்தவான் ராஜ்யமோஜனா: ||

 

குரு பாண்டவர்கள் அரசிற்காக போருக்குத் தயாராக நின்றபோது, தர்மராஜன், தேவகி புத்ரனான ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்து, ‘ஹே கிருஷ்ணா, போரில் நமக்கு நிர்விக்னமாக எப்படி வெற்றி கிடைக்கும்? எந்த தேவதையை பூஜித்தால், சந்தேகமின்றி நமக்கு ராஜ்யப்ராப்தி ஆகும்? அதனை எனக்குச் சொல்என்று கேட்க, ஸ்ரீகிருஷ்ணன்:

 

பார்வதி தேவியின் சரீர சம்பந்தமான அழுக்கினால் உருவான கணாத்யக்‌ஷனை பூஜிப்பாயாக. அதனால் உனக்கு போரில் வெற்றி கிடைத்து, ராஜ்யமும் கிடைக்கும். முன்னர் தேவேந்திரன் வ்ருத்ராசுரனையும் அவன் சைன்யத்தையும் வெல்வதற்காக கணபதியை பூஜித்து, எதிரிகளை வென்று இந்திராதிபத்யத்தை மறுபடி பெற்றான். ஸ்ரீராமசந்திரன் தன் மனைவியான சீதாதேவி லங்கையில் இருக்கிறாள் என்று தெரிந்தபிறகு, கடலில் சேது பந்தனம் செய்து, லங்கைக்கு செல்லும் நோக்கத்தில், கணபதியை பூஜித்து சேது பந்தனத்தை செய்து, லங்கையில் ராவணாதி அசுரர்களை சம்ஹரித்து, சீதையுடன் சேர்ந்து, மறுபடி ராஜ்யத்தை அடைந்தான்என்றான்.

 

ஸ்ரீகிருஷ்ணனின் வாக்கியத்திற்கேற்ப, தர்மராஜனும் கணபதி பூஜையை செய்து, கௌரவர்களை வென்று அரசைப் பெற்றான் என்று கணேஷ கல்பகதையில் வருகிறது. இங்கு உமா மல ஸமுத்பவம்என்று பார்வதி தேவியின் உடம்பின் அழுக்கிலிருந்து கணபதியை ஸ்ருஷ்டித்தாள் என்றால், தேவோத்தமளான பார்வதி தேவி தேகத்தில் அழுக்கு இருக்குமா? சாமான்ய தேவதைகளுக்கே, தேகத்தில் வியர்வை, அழுக்கு இருப்பதில்லை. அவர்கள் அணிந்த புஷ்பங்கள் வாடுவதில்லை என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.

 

இப்படி இருக்கையில், பார்வதி தேவியின் தேகத்தில் அழுக்கு இருந்ததா என்று சந்தேகப்படக்கூடாது. பார்வதி தேவியை, கணபதியை ஸ்ருஷ்டிப்பதற்காக, தம் விருப்பத்தில் தம் தேகத்தில் அழுக்கினை ஸ்ருஷ்டித்து, அதிலிருந்து கணபதியை ஸ்ருஷ்டித்தார் என்று அறியவேண்டும்.

 

ஸ்ரீராமதேவர், இந்திராதி தேவதைகள் அனைவரும் கணபதியை பூஜித்தனர் என்றால், இந்திரனைவிட தாரதம்யத்தில் குறைவானவன். அதாவது 10 கக்‌ஷைகள் கீழ் இருக்கும் கணபதியை. மேல் கக்‌ஷையினர் பூஜிக்கலாமா? ஸ்ரீபரமாத்மனே ராம ரூபத்தினால் கணபதியை பூஜித்ததாக கதையில் படிக்கிறோம். இதன் உண்மையான அர்த்தம் என்ன என்று கேட்டால்:

 

பார்வதிதேவி ஸ்னானம் செய்வதற்காக, கணபதியை ஸ்ருஷ்டித்து, பின் ருத்ரர் அவரை சம்ஹரித்து, பிறகு ஒரு யானையின் தலையை வைத்து கணபதியை பிழைக்க வைத்தார் என்பதை முன்பு பார்த்தோம். அந்த சந்தர்ப்பத்தில், பார்வதி தேவியை மகிழ்விப்பதற்காக, இன்று முதல் யார் எந்த வேலையைத் துவக்கினாலும், முதலில் கணபதி பூஜையை செய்துவிட்டு, பின் தங்களின் இஷ்டமான செயல்களை செய்ய வேண்டும். அப்படி செய்வதால், அந்த காரியமானது நிர்விக்னமாக நடைபெறும். அப்படி செய்யாமல், தங்கள் வேலையை செய்தால், அந்த வேலை விக்னமாகி, தடை பெறும் என்று கணபதிக்கு வரம் அளித்தார் ருத்ரர்.

 

அந்த வரத்தை சத்யமாக்குவதற்காக த்ரிபுரம் ஹந்துகாமேன ஷிவேனாராதித: புரா’ - த்ரிபுராசுரர்களின் சம்ஹார காலத்தில் ருத்ரதேவர் தாமே கணபதி பூஜையை செய்தார். இந்திராதிகள், ருத்ரதேவரின் வர கௌரவத்தினாலேயே பூஜித்தனர். ஸ்ரீராமதேவர், அசுர மக்களை மயக்குவதற்காக, ருத்ரதேவரின் வரத்திற்கு கௌரவத்தைக் கொடுப்பதற்காக, தாமும் கணபதியை பூஜித்தார் என்பது கருத்து.

 

ஆனாலும், இவர்கள் அனைவரும் கணபதியின் அந்தர்யாமியான பகவந்தனின் பூஜையென்றே நினைத்து பூஜித்தனர். விஸ்வம்பர நாமக பரமாத்மனே கணபதிக்குள் இருந்து பூஜையை ஏற்றுக் கொள்கிறான். ஆகையால், தாசார்யர் ஈஷனுக்ரஹவு நின்னல்லி எஷ்டுண்டோஎன்று பாடுகிறார்.

 

கௌரவேந்த்3ரனு நின்ன ப4ஜிஸத3

காரணதி3 நிஜகுலஹித ம்

ஹாரவைதி33 கு3ருவர வ்ருகோத3ரன க3தெ3யிந்த3 |

தாரகாந்தகனனுஜ என்ன ஷ

ரீரதொ3ளு நீனிந்து த4ர்ம

ப்ரேரகனு நீனாகி3 ந்தெயிஸென்ன கருணத3லி ||13

 

கௌரவேந்த்ரனு = துரியோதனன்

நின்ன பஜிஸத காரணதி = உன்னை வணங்காததால்

நிஜகுலஸஹித = தன் தம்பியர் 99 பேர்; தன் உறவினர் அனைவரும் இறந்தது மட்டுமல்லாமல், தானும்கூட

குருவர = ஜகத்குருகளான வாயுதேவரின் அவதாரபூதரான

வ்ருகோதரன = பீமசேனதேவரின்

கதையிந்த = கதா ஆயுதத்தால்

சம்ஹாரவைதித = கொல்லப்பட்டான்

தாரகாந்தனனுஜ = தாரக என்னும் தைத்யனை கொன்றவன் ஷண்முகன். அவனின் தம்பி என்று அர்த்தம். ஹே தாரகாந்தனனுஜனே,

என்ன ஷரீரதொளு நீனிந்து = என் சரீரத்தில் நீ நிலைத்திருந்து

கருணதலி = கருணையுடன்

தர்ம ப்ரேரகனு நீனாகி = என்னை தர்மத்தின் வழியில் நடக்கச் செய்பவனாக

என்ன = என்னை

ஸந்தெயிஸு = காப்பாயாக

 

மேலே பார்த்தவாறு, அனைவரும் தங்கள் வேலையை செய்வதற்கு முன்னர், கணபதி பூஜையை செய்து, தங்கள் வேலையை நிர்விக்னமாக நிறைவேற்றிக் கொண்டனர். பாவியான துரியோதனன், போரின் துவக்கத்தில், கணபதி பூஜையை செய்யாததால், தன் உற்றார் உறவினர்களுடன், தானும் பீமசேனதேவரின் கதா பிரயோகத்தால் அடிபட்டு இறந்தான்.

 

இதே விஷயத்தை பாகவத 8ம் ஸ்கந்தத்தில், தேவதைகள் பாற்கடலைக் கடையும் வேளையில், விநாயகனின் பூஜையை செய்யாமல் துவக்கியதால், மலையானது நீரில் மூழ்கிப் போனது என்றும், பரமாத்மன் கூர்ம அவதாரம் எடுத்து, அதை மறுபடி மேலே எடுத்து வந்தான் என்று, ‘விலோக்ய விக்னேஷகதிம் ததீஷ்வரோ துரந்தவீர்யோ விததாபிஸந்தி:என்னும் ஸ்லோகத்தில் சொல்கின்றனர்.

 

அதன்பிறகு, தேவ தைத்யர்கள் அனைவரும் கூடி, ‘அம்ருதோத் பாதனார்த்தாய ததா தேவாஸுரைரபிஎன்னும் கணேஷ கதையின் வாக்கியத்தின்படி, கணபதி பூஜையை செய்து அமிர்தத்தை அடைந்தனர் என்னும் அர்த்தம் தெரிகிறது. ஆகையால், செயல்களின் துவக்கத்தில் கணபதியை பூஜித்தே ஆகவேண்டும் என்பது தாத்பர்யம்.

 

ஹே ஷண்முக அனுஜனே, நீ எனக்குள் நின்று கருணையுடன் என் மனதை தர்ம விஷயத்தில் நடக்குமாறு அருள் புரிவாயாக.

 

ஏகவிம்ஷதி மோத3கப்ரிய

மூகரனு வாங்க்மிக3ள மாள்பெ க்ரு

பாகரேஷ க்ருதக்ஞ காமத3 காயோ கைபிடி3து3 |

லேக2காக்3ரணி மன்மத3 து3

ர்வ்யாகுலவ பரிஹரிஸு த3யதி3 பி

நாகி பா4ர்யாதனுஜ ம்ருத்ப4வ ப்ரார்த்திஸுவெ நின்ன ||14

 

ஏகவிம்ஷதி மோதகப்ரிய = 21 மோதகங்களை செய்ய வேண்டும் என்று கல்பத்தில் சொல்லப்பட்டிருப்பதால், 21 மோதக ப்ரியனே என்று தாசார்யர் சொல்கிறார்.

மூகரனு வாக்மிகள மாள்பெ = ஊமைகளை பேசுபவர்களாக ஆக்குகிறாய்

க்ருபாகரனே,

ஈஷ,

க்ருதக்ஞ = சேவை செய்தவர்களை மறக்காமல் காப்பவர்கள் க்ருதக்ஞர்கள் எனப்படுகிறார்கள்.

காமத = இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுபவன்

கைபிடிது = என்னை கை பிடித்து காப்பாயாக

லேககாக்ரணி = எழுதுபவர்களில் முதல்வனே

தயதி = தயவு செய்து

மன்மத = என் மனதில் இருப்பதை

துர்வ்யாகுலவ = துக்ககரமான விஷய சம்பந்தங்களை

பரிஹரிஸு = பரிகரிப்பாயாக

பினாகி = பினாகி என்னும் தனுஸ்ஸினை தரிப்பதால், ருத்ரதேவருக்கு பினாகி என்று பெயர்.

பார்யா = மனைவியான பார்வதி தேவியின்

ம்ருத்பவ தனுஜ = தேக அழுக்கில் பிறந்தவனே

நினகெ = உன்னை

பிரார்த்திசுவெ = வணங்குகிறேன்.

 

அதைகவிம்ஷதிம் க்ருஹ்யமோதகான் க்ருதபாசிதான் |

ஸ்தாபியித்வா கணாத்யக்‌ஷ ஸமீபே குருனந்தன ||

 

என்று சொல்கிறார்.

 

அதே அபிப்பிராயத்தை மனதில் வைத்துக்கொண்டு ஏகவிம்ஷதி மோதகப்ரியஎன்றார். கணேசனின் மகிழ்ச்சிக்காக 21 மோதகங்களை செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதே இதற்கு காரணம். ஊமைகளை பேசுபவர்களாகச் செய்யும் சக்தி கொண்டவனே. கருணாமூர்த்தியே, ஹே பிரபோ, க்ருதக்ஞனே, உன்னை ஒரு முறை பூஜித்தால், அவர்களை என்றும் மறக்காதவனே. பக்தர்களின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றுபவனே. என் கைபிடித்து என்னை காப்பாற்று. எழுதுகோல் பிடித்து எழுதுபவர்களில் முதன்மையானவனே. என் மனதில் இருக்கும் விஷய சம்பந்தமான துக்கங்களை பரிகரிப்பாயாக. பார்வதி தேவியின் தேக அழுக்கிலிருந்து பிறந்து, பார்வதியின் மகன் என்று அழைக்கப்பட்டாய். உன்னை வணங்குகிறேன்.

 

நித்யமங்கலசரித ஜக3து3

த்பத்தி ஸ்தி2தி லய நியமன ஞா

னத்ரயப்ரத33ந்த4மோசக ஸுமனஸாஸுரர

சித்தவ்ருத்திக3ளந்தெ நடெ3வ ப்ர

மத்தனல்ல ஸுஹ்ருஜ்ஜனாப்த3

நித்யத3லி நெனெனெனெது3 ஸுகி2ஸுவ பா4க்3ய கருணிபுது3 ||15

 

நித்யமங்கலசரித = நித்யமான வேதங்களால் புகழப்படும் மங்களகரமான சரித்திரத்தைக் கொண்ட

ஜகத் = உலகத்தின்

உத்பத்தி ஸ்திதி லய = படைத்தல், காத்தல், அழித்தல்

நியமன = வழிநடத்துதல்

ஞானத்ரய = ஞான, அஞ்ஞான, சுக்ஞான என்ற மூன்றினையும்

ப்ரத = கொடுப்பவனான

பந்த = சம்சாரத்தில் மூழ்கடிப்பவன்

மோசக = விடுதலை அளிப்பவன் (முக்தியைக் கொடுப்பவன்)

ஆன,

சுமனஸாஸுரர = தேவதைகள், தைத்யர்கள் இவர்களின்

சித்தவ்ருத்திகளந்தெ = அவரவர்களின் தகுதிக்கேற்ப அவரவர்களின் சித்தம் இருக்கிறது. அதைப்போல நடப்பவனான

ப்ரமத்தனல்ல = என்றென்றும் விவேகமில்லா காரியத்தை செய்பவனான

ஸுஹ்ருக்ஞன = அவனின் பக்தர்களே அவனின் ஸுஹ்ருத்து எனப்படுகிறார்கள். அத்தகைய பக்தர்களுக்கு

ஆப்தன = ஆப்தனான ஸ்ரீபரமாத்மனின்

நித்யதலி = தினந்தோறும்

நெனெனெனெது சுகிசுவ = நினித்து ஆனந்தப்படும்

பாக்ய கருணிஸு = பாக்கியத்தை எனக்குக் கொடுப்பாயாக.

 

ஸ்ரீபரமாத்மனை எப்போதும் நினைத்து நினைத்து மகிழ்ச்சி அடைவதே மஹா பாக்கியம். அத்தகைய பாக்கியம் எனக்கு எப்போதும் இருக்குமாறு அருள் செய்வாயாக என்று இந்த பதத்தில் வேண்டுகிறார். அந்த பரமாத்மன் எத்தகையவன் என்றால், வேதங்களால் புகழப்படுபவன், மங்களகரமான சரித்திரத்தைக் கொண்டவன் மற்றும்:

 

உத்பத்தி ஸ்திதி ஸம்ஹாரானியதிர் ஞானமாம்ருதி: |

பந்தமோக்‌ஷௌச புருஷாத்யஸ்மாத் ஸஹரிரேகராட் ||

 

என்னும் பிரம்மசூத்ர பாஷ்யத்தின் வாக்கியத்தைப் போல, ஸ்ருஷ்ட்யாதி அஷ்ட கர்த்ருத்வம் கொண்டவன். தேவ தைத்யர்களின் யோக்யதையை அறிந்து புத்தி: கர்மாணி ஸாரிணீஎன்றபடி, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப, பகவந்தனால் கொடுக்கப்பட்ட ஸ்வாதந்த்ர்ய அஸ்வாதந்த்ர்யத்தினால், அந்தந்த காலங்களில் வரும் பகவத் ப்ரேரணையால், அவரவர்களின் சித்த வ்ருத்திகள் மாறிக் கொண்டே இருப்பதைப் போல, பரமாத்மனும் அவரவர்களின் உள்ளே இருந்து, அந்த சித்த வ்ருத்திகளை அனுசரித்தே காரியங்களை செய்து செய்வித்து, தேவதைகளுக்கு முக்தி, தைத்யர்களுக்கு தமஸ் கொடுக்கிறான் என்று கருத்து.

 

* கர்மங்களுக்கேற்ப புத்தியைக் கொடுக்கும் விஷயங்கள் ஆகட்டும்,

* அவரவர்களின் யோக்யதைக்கேற்ப கர்மங்களை செய்விக்கும் விஷயங்களாகட்டும்,

* பலன்களைக் கொடுக்கும் விஷயத்தில் ஆகட்டும்,

 

அவன் ப்ரமத்தன் அல்ல; அதாவது, மிகவும் கவனமாக இருக்கிறான் என்பது கருத்து. பக்தர்களுக்கு பரமாத்மன் என்று அழைக்கப்படுகிறான். இத்தகைய பரமாத்மனின் ஸ்மரணையால், மகிழ்ச்சி அடையுமாறு செய் என்று அர்த்தம்.

 

பஞ்சபே43 ஞானவருபு வி

ரிஞ்சிஜனகன தோரு மனத3லி

வாஞ்சிதப்ரத3 ஒலுமெயிந்த3லி தா3ஸனெந்த3ரிது3 |

பஞ்சவக்த்ரன தனய ப4வதொ3ளு

வஞ்சிதெ3 ந்தெயிஸு  விஷயதி3

ஞ்சரி3ந்த33லி மாடு3 மனாதி3 கரணக3||16

 

பஞ்சபேத ஞானவருபு = ஜீவ ஜீவ பேத, ஜீவ ஜட பேத, ஜீவ பரமாத்ம பேத, ஜட ஜட பேத, ஜட பரமாத்ம பேத - இதுவே பஞ்சபேதம் ஆகும். இந்த ஞானத்தை எனக்கு எப்போதும் கொடு.

விரிஞ்சிஜனகன = பிரம்மதேவரின் தந்தையான ஸ்ரீஹரியை

மனதலி தோரு = என் மனதில் பார்க்குமாறு செய்

வாஞ்சிதப்ரதனே = இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுபவனே

வலிமெயிந்தலி = அபிமானத்துடன்

தாசனெந்தரிது = இவன் ஹரிதாசன் என்று அறிந்து, உனக்கும் தாசன் என்று அறிந்து

பவதொளு = சம்சாரத்தில்

வஞ்சிஸதெ சந்தெயிஸு = என்னை ஈடுபடுத்தாமல், காப்பாற்று

பஞ்சவக்த்ரன தனய = ஐந்து தலைகள் உள்ள ருத்ரதேவரின் மகனே

மன ஆதிகரணகள = மனம் முதலான இந்திரியங்களை

விஷயதி = விஷய போகாதிகளில் சஞ்சரிக்காமல் இருக்குமாறு செய்.

 

பத்ய அர்த்தத்தில் சொல்லியவாறு பஞ்சபேத ஞானத்தை நமக்கு நினைவில் இருக்குமாறு செய். ஸ்ரீபரமாத்மனை அபரோக்‌ஷத்தில் பார்க்குமாறு செய். ஹே வாஞ்சிதப்ரதனே, இவன் ஹரிதாசன் என்றும், உனக்கும் தாசன் என்றும் அறிந்து, அபிமான பூர்வகமாக சம்சாரத்தில் மூழ்கடித்து என்னை ஏமாற்றாமல் காப்பாற்று. ஹே ருத்ர குமாரனே, மனஸ் முதலான இந்திரியங்கள், விஷய போகங்களில் பிரவேசிக்காதவாறு இருக்கச் செய்.

 

ஏனுபே3டு3வுதி3ல்ல நின்ன கு

யோனிக3ளு ப3ரலஞ்செ லகுமீ

ப்ராணபதி தத்வேஷரிந் தொ33கூடி3 கு3ணகார்ய |

தானெ மாடு3வனெம்ப ஈ ஸு

க்3ஞானவனெ கருணிஸுவுதெ3னகெ3

ஹானுபா4வ முஹுர்முஹு: ப்ரார்த்திஸுவெனினிதெந்து3 ||17

 

நின்ன = உன்னை

ஏனுபேடுவுதில்ல = ஐஹிகமான விஷய சம்பந்தமான சுகமாகட்டும், ஸ்வர்க்காதி போகங்களாகட்டும் கொடு என்று நான் வேண்டுவதில்லை

குயோனிகளு = நாய், நரி முதலான பிறவிகள்

பரலஞ்செ = எனக்கு வந்தாலும், அதனால் நான் பயப்படுவதில்லை

மஹானுபாவ = ஹே மஹானுபவனே

லகுமீப்ராணபதி = லட்சுமிதேவியருக்கும், ஸ்ரீமுக்யபிராணதேவருக்கும் தலைவன் என்று அழைக்கப்படும் ஸ்ரீபரமத்மன்

தத்வேஷரிந்தொடகூடி = 24 தத்வாபிமானி தேவதைகளுடன் சேர்ந்து

குணகார்ய = சத்வ ரஜஸ் தமோ குண சம்பந்தமான அனைத்து காரியங்களையும்

தானே மாடுவனு = நமக்குள் இருந்து தானே செய்கிறான் என்று

ஈ சுக்ஞானவெ = இந்த உத்தமமான ஞானமே

எமகெ = நமக்கு

கருணிஸுவது = தயவு செய்து கொடுக்கவும்

இனிதெந்து = இப்படியாக

முஹுர்முஹு = திரும்பத் திரும்ப வேண்டுகிறேன்.

 

சம்சார விஷய போகங்களில் சுகங்களைக் கொடு என்றோ, ஸ்வர்க்க போகங்களை கொடு என்றோ - நான் உன்னிடம் வேண்டுவதில்லை. தஷாவராணாம் தேஹானாம் காரணானி கரோத்யஸௌஇத்யாதி ஆதாரங்களால், தினந்தோறும் 10 நீச பிறவிகளை அடைவதற்குத் தேவையான கர்மங்களை ஒவ்வொரு ஜீவனும் செய்கிறான் என்னும் விதியால், எனக்கு அவ்வளவு நீச பிறவிகள் வந்தாலும் நான் பயப்படுவதில்லை.

 

ஆனால், நாம் செய்யும் புண்ய பாபாதி அனைத்து கர்மங்களையும், பரமாத்மனே தத்வாபிமானி தேவதைகளுடன் சேர்ந்து நமக்குள் இருந்து செய்கிறான். என்னும் இந்த உத்தம ஞானத்தை மட்டும் நமக்குக் கொடுக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொள்கிறேன். இதிலிருந்து, காம்யத்தை என்றும் விரும்பக்கூடாது என்று விதி இருந்தாலும், ‘காமந்துதாஸ்யே நது காமகாம்யயாஎன்னும் பாகவத வாக்கியத்திற்கேற்ப, பகவந்தனின் தாசன் ஆகவேண்டும் என்று வேண்டுவது தவறு அல்ல. காம்யமான விஷய போகாதிகளை மட்டும் வேண்டக்கூடாது என்று அறியவேண்டும்.

 

நமோ நமோ கு3ருவர்ய விபு3தோ4

த்தம விவர்ஜிதனித்ர கல்ப

த்3ருமனெனிபெ ப4ஜகரிகெ33ஹுகு3ணப4ரித ஷுபசரித |

உமேயனந்த3ன பரிஹரி

ம்மமதெ பு3த்யாதி3ந்த்3ரியக3ளா

க்ரமிஸி த3ணிஸுதலிஹவு ப4வதொ3ளகா3வ காலத3லி ||18

 

குருவர்ய = குருகளில் உத்தமனே

விவர்ஜிதனித்ர = தூக்கம் இல்லாதவனே

பஜகரிகெ = தன்னை வணங்குபவர்களுக்கு

கல்பத்ருமனெனிபெ = கல்பவ்ருக்‌ஷத்தைப் போல இருக்கிறாய்

விபுதோத்தம = தேவதைகளில் சிறந்தவனே

பஹுகுணபரித = வெகு குணங்களில் பூர்ணனே

ஷுபசரித = மங்களகரமான சரித்திரத்தைக் கொண்டவனே

நமோ நமோ = உனக்கு என் நமஸ்காரங்கள்

உமெயனந்தன = ஹே பார்வதி புத்திரனே

பவதொளகெ = சம்சாரத்தில்

ஆவகாலதல்லி = அனைத்து காலங்களிலும்

அஹம்மமதெ = நான், எனது என்னும் கர்வம்

புத்யாதிந்திரியகள = புத்தி முதலான இந்திரியங்களை

ஆக்ரமிஸி = ஆக்ரமித்து

தணிஸுதலிஹவு = சோர்வு அடையச் செய்கின்றன

பரிஹரிஸு = அத்தகைய கர்வத்தை பரிகரிப்பாயாக.

 

பக்தர்களுக்கு கல்பவ்ருக்‌ஷத்தைப் போல, அவரவர்களின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றும், ஹே தேவோத்தமனே, உனக்கு வணக்கம். நீ எப்போதும் தூக்கமே இல்லாமல், பக்தர்களுக்கு அருள்வாய். கங்கா, பர்ஜன்ய, உக்த சேஷ ஷதஸ்தர் இவர்களைவிட உத்தமனான குரு எனப்படுகிறாய். பஹுகுணங்கள் நிரம்பியவன். மங்களகரமான சரித்திரத்தைக் கொண்டவன்.

 

ஹே பார்வதி புத்திரனே, இந்த சம்சாரத்தில் நான் எனது என்னும் கர்வம், மனது, ஞானேந்திரிய, கர்மேந்திரியங்களை ஆக்ரமித்து, சோர்வினைக் கொடுக்கின்றன. ஆகையால், நான் எனது என்னும் இந்த கர்வத்தை பரிகரிப்பாயாக.

 

ஜயஜயது விக்4னேஷ தாப

த்ரய வினாஷன விஷ்வமங்க3

ஜயஜயது வித்4யப்ரதா3யக வீதப4யஷோக |

ஜயஜயது சார்வங்க3 கருணா

நயனதி3ந்த3லி நோடி3 ஜனுமா

மய ம்ருதிக3ளனு பரிஹரிஸு ப4க்தரிகெ34வதொ3ளகெ3 ||19

 

ஹே விக்னேஷனே,

தாபத்ரய வினாஷன = ஆத்யாத்மிக, ஆதிதெய்விக, ஆதிபௌதிக என்னும் மூன்றுவித கஷ்டங்களை போக்குபவனே

ஜய = உனக்கு வெற்றி

ஜயது = கிடைக்கட்டும்

விஷ்வமங்கள = உலகத்திற்கு மங்களத்தைக் கொடுப்பவனே

ஜயஜயது = உன் வெற்றி உலகத்தில் புகழ் பெறட்டும்

வித்யப்ரதாயக = பக்தர்களுக்கு கல்வியைக் கொடுப்பவனே

வீதபயஷோக = என்றும் பயம், சோகம் இல்லாதவன்

ஜயஜயது சார்வாங்க = ஹே மனோஹரமான அங்கங்கள் கொண்டவனே

கருணா நயனதிந்தலி = கருணைப் பார்வையால் பார்த்து

பவதொளகெ = சம்சாரத்தில்

பக்தரிகெ ஜனும = பக்தர்களுக்கு பிறவி

ஆமய = நோய்களை

ம்ருதிகளனு = மரணம் ஆகியவற்றை பரிகரிப்பாயாக.

 

ஹே விக்னேஸ்வரனே, உன் வெற்றியை உலகத்தில் பரவச் செய். ஜயஷீலனான விக்னேஸ்வரனே, உனக்கு மங்களம் உண்டாகட்டும், மங்களம் உண்டாகட்டும் என்று நாம் சொல்வதால் என்ன ஆகும்?

 

பாகவத ஸ்ருதிகீதை முதல் ஸ்லோகத்தில் ஜயஜய ஜஹ்யஜாம்என்பதில் நித்ய ஜயஷீலனான பரமாத்மனை, ‘உனக்கு மங்களம் உண்டாகட்டும்என்று தேவதைகள்  ஆசிர்வாதம்செய்யவில்லை. மாறாக, உன் மங்களத்தை உலகத்தில் பரவச் செய் என்று பிரார்த்தித்தனர் என்று வியாக்யானத்தில் சொல்லியிருப்பார்கள். அதே அர்த்தத்தையே இங்கும் சொல்லவேண்டும். ஆகையால், ஜய = உன் வெற்றி, ஜயது = கிடைக்கட்டும் என்றால், உலகத்தில் பரவட்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது.

 

தாபத்ரய என்றால்,

1. மனோவியாதி

2. தெய்வ சம்பந்தமான தாபங்கள். காலா காலங்களில் மழை இல்லாமல் வறட்சி உண்டாதல். இவை போன்ற தெய்வ சங்கல்பத்தினால் உண்டாகும் துக்கங்கள்.

3. பாஞ்சபௌதிகமான இந்த சரீரத்தில் கண் தெரியாமல் போவது, காது கேட்காமல் இருப்பது - போன்ற தேக சம்பந்தமான துக்கங்கள்

 

இந்த மூன்று விதமான துக்கங்களுக்கு தாபத்ரய என்று பெயர். இவற்றை பரிகரிப்பவன். பிரபஞ்சத்திற்கு மங்களத்தை உண்டு பண்ணுபவன். அனைவருக்கும் கல்வியைக் கொடுப்பவன். அதாவது, வித்யாரம்பத்தில், கணபதி பூஜையை செய்து, வித்யா பிராரம்ப செய்தால், அந்த கல்விக்கு, நடுவில் எவ்வித இடர்களும் வராமல், முழுமை அடைகிறது என்பது கருத்து.

 

வீதபய என்றால், எந்த காலத்திலும் தன்னைவிட உத்தமர் ஆனவர்களை விட்டு, மற்றவர்களிடம் கணபதிக்கு எவ்வித பயமும் இல்லை என்று அர்த்தம். பரமாத்மனின் பயம் பிரம்மாதிகளுக்கும் இருக்கும்போது, கணபதிக்கு இல்லாமல் போவதில்லை. பயம் இல்லை என்றால், நாம் நம்மைவிட குறைவான புலி, பாம்பு ஆகியவற்றிடம் எப்படி பயப்படுகிறோமோ அப்படி கணபதியைவிட குறைந்தவர்களிடம் அவருக்கு எவ்வித பயமும் இல்லை என்று பொருள்.

 

விஷய சம்பந்தமான எவ்வித சோகமும் இல்லாதவன். லம்போதரன் என்றும், கஜமுகன் என்றும், அவனின் அங்கங்கள் சார்வாங்க என்றும், மனோஹரமாகவே காணப்படுபவன். ஆகையால், சார்வாங்க என்றார். இத்தகைய உன் வெற்றி, உலகப்புகழ் பெற்று எப்போதும் இருக்கட்டும். அதாவது, உலகிற்கு வெற்றியைக் கொடு என்று பிரார்த்தனை செய்கிறார் என்று பொருள்.

 

நீ கருணைப்பார்வையால் பார்த்து, உன் பக்தர்களுக்கு சம்சாரத்தில் உண்டாகும், பிறப்பு, இறப்பு, நோய்களை அனுபவிப்பது ஆகியவற்றை பரிகரிப்பாயாக. அதாவது, முக்தியைக் கொடுக்கும் யோக்யதை கணபதிக்கு இல்லை என்றாலும், பரமாத்மனிடம் பக்தியைக் கொடுத்து, முக்தி சாதனத்தை செய்து, அருள்வாயாக என்பது கருத்து.

 

கடு3கருணி நீனெந்த3ரிது ஹே

ரொட3ல நமிஸுவெ நின்னடி3கெ3 பெ3

ம்பி33தெ3 பாலிஸு பரமகருணாஸிந்து3 எந்தெ3ந்து3 |

நடுனடுவெ ப3ருதிப்ப விக்4னவ

தடெது343வன்னாம கீர்த்தனெ

நுடி3து3 நுடி3ஸென்னிந்த3 ப்ரதிதி33லி மரெயத3லெ ||20

 

ஹேரொடல = ஹே லம்போதரனே

கடுகருணி = அத்யந்த தயாளு

நீனெந்தரிது = நீயே என்று அறிந்து

நின்னடிகெ = உன் பாதங்களில்

நமிஸுவெ = நான் வணங்குவேன்

பரமகருணாசிந்து = ஹே பரம கருணைக்கடலே

எந்தெந்து = என்றென்றும்

பெம்பிடதெ பாலிஸு = என்னை கைவிட்டுவிடாமல், என்னுடனே இருந்து காப்பாற்று

நடுனடுவெ = சத்காரியங்களை செய்யும்போது நடுநடுவே வரும்

விக்னவ தடெது = விக்னங்களை தடுத்து

மரெயதலெ = மறக்காமல்

பகவன்னாம கீர்த்தனெ = பகவன் நாம கீர்த்தனங்களை

நுடிது நுடிசென்னிந்த = என்னிடமிருந்து சொல்லி, சொல்ல வை.

 

ஹே லம்போதரனே, நீ பரம தயாளு என்று அறிந்து, உன் பாத கமலங்களை நான் வணங்குகிறேன். பரம கருணாசமுத்திரனான நீ, என்னை ஒரு கணமும் விடாமல் இருந்து காப்பாற்று. நான் செய்யும் சத்கர்மங்களுக்கு வரும் விக்னங்களை பரிகரிப்பாயாக. தினந்தோறும் மறக்காமல், எனக்குள் இருந்து பகவன் நாம சங்கீர்த்தனங்களை நான் செய்யுமாறு செய்.

 

ஏகவிம்ஷதி பத33ளெனிஸு

கோகனத3 நவமாலிகெய மை

நாகி தனயாந்தர்க3த ஸ்ரீப்ராணபதி எனிப |

ஸ்ரீகர ஜகன்னாத2விட்ட2

ஸ்வீகரிஸி ஸ்வர்கா3பவர்க3தி3

தா கொடு3ஸௌக்2யக3ள ப4க்தரிகா3வ காலத3லி ||21

 

ஏகவிம்ஷதி பதகளெனிஸுவ = 21 பத்யங்கள் என்னும்

கோகனத நவமாலிகெய = சிவப்பு வர்ண புது மாலையை

மைனாகி தனயாந்தர்கத = மேனகியின் மகளான பார்வதிக்கு மைனாகி என்று பெயர். அவளின் மகனான கணபதியின் அந்தர்கதனான

ஸ்ரீப்ராணபதி எனிப = ஸ்ரீலட்சுமிதேவி, முக்யபிராணதேவர் இவர்களுக்கு ஸ்வாமி எனப்படும்

ஸ்ரீஜகன்னாதவிட்டல,

ஸ்வீகரிஸி = இதனை ஏற்றுக்கொண்டு

பக்தரிகெ = பக்தர்களுக்கு

ஆவகாலதலி = எல்லா காலங்களிலும்

ஸ்வர்க்காபவர்கதி = ஸ்வர்க்கத்திலும் முக்தியிலும்

தா = தான்

சௌக்யகள = நலன்களை

கொடுவனு = கொடுக்கிறான்.

 

கணபதி ஸ்தோத்திர சந்தி என்னும் 28ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் முடிந்தது.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

 

***

No comments:

Post a Comment