ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, September 6, 2020

32 - கக்‌ஷ தாரதம்ய சந்தி

 

பாவபிரகாசிகை : சந்தி 32 : கக்ஷ தாரதம்ய சந்தி

/ தேவதா தாரதம்ய் சந்தி

 

ஹரிகதா2ம்ருதசார கு3ருக3

கருணதிந்தா3பநிது பே1ளுவே

பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

 

ஸ்ரீரமண ர்வேஷ ர்வக3

ஸாரபோ4க்த ஸ்வதந்த்ர தோ3ஷவி

தூ3ர ஞானானந்த33லவைஷ்வர்ய கு3ணபூர்ண |

மூரு கு3ணவர்ஜித கு3ஸா

கார விஷ்வ ஸ்தி2தி லயோத3

காரண க்ருபாஸாந்த்3ர நரஹரி லஹோ சஜ்ஜனர ||1

 

ஸ்ரீரமண = லட்சுமிபதி

சர்வேஷ = அனைவருக்கும் தலைவன்

சர்வக = அனைத்து இடங்களிலும் நிலைத்திருப்பவன்

சாரபோக்த = அனைத்து சாரங்களையும் (ரசங்களையும்) உண்பவன்

ஸ்வதந்த்ரன் = எதற்கும் யாரையும் எதிர்பார்க்காதவன்

தோஷவிதூர = தோஷங்கள் அற்றவன்

ஞானானந்த பலவைஷ்வர்ய குணபூர்ண = ஞான, ஆனந்த, பல, ஐஸ்வர்ய முதலான குணங்களால் நிரம்பியவன்

மூரு குணவர்ஜித = ப்ராக்ருதமான சத்வ, ரஜஸ், தமோ குணங்கள் இல்லாதவன்

சகுண = ஆனந்தகுணபூர்ணன்

ஸாகார = அப்ராக்ருதமான ஸ்வரூபம் கொண்டவன்

விஷ்வ = பிரபஞ்சத்தின்

ஸ்திதி லயோதய காரண = படைத்தல், காத்தல், அழித்தலுக்குக் காரணமானவன்

க்ருபாஸாந்த்ர = கருணாபூர்ணன்

இத்தகைய குணங்களைக் கொண்ட,

நரஹரி = ஸ்ரீ நரஹரியே

ஸலஹோ சஜ்ஜனர = சஜ்ஜனர்களை காப்பாற்று.

 

லட்சுமிபதியும், சர்வோத்தமனும், அனைத்து இடங்களில் வியாப்தனும், அனைத்து சாரங்களையும் உண்பவனும், ஸ்வதந்த்ரனும், தோஷங்கள் அற்றவனும், ஞானானந்த பல ஐஸ்வர்ய குணங்களைக் கொண்டவனும், மூன்று குணங்களின் சம்பந்தம் இல்லாதவனும், ஆனந்தாதி குண பூர்ணனும், அப்ராக்ருதமான சரீரம் கொண்டவனும், உலகத்தின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய ஆகியவற்றிற்கு காரணனும், கருணா பூர்ணனுமான ஸ்ரீநரசிம்மனே, சஜ்ஜனர்களை காப்பாற்று.

 

நித்யமுக்தளெ நிர்விகாரளெ

நித்யஸு2ம்பூர்ணே நித்யா

நித்ய ஜக3தா3தா3ரெ முக்தாமுக்த க3ணவினுதெ |

சித்தயிஸு பி3ன்னபவ ஸ்ரீபுரு

ஷோத்தமன வக்‌ஷோனிவாஸினி

ப்4ருத்யவத்ஸலே காயெ த்ரிஜக3ன்மாதெ விக்2யாதெ ||2

 

நித்யமுக்தளே

நிர்விகாரளே = விகாரம் இல்லாதவளே

நித்யசுக சம்பூர்ணே = நித்யானந்த பூர்ணளே

நித்யானித்ய ஜகதாதாரே = நித்யர்களான ஜீவர்கள், அனித்யர்களான சரீரங்களைக் கொண்டவர்களான ஜீவர்கள் இவர்கள் இருக்கும் ஜகத்திற்கு ஆதாரமாக இருப்பவளே

முக்தாமுக்தகணவினுதே = முக்த ஜீவர்களாலும், அமுக்த ஜீவர்களாலும் வணங்கப்படுபவளே.

பின்னபவ சித்தயிஸு = என் விருப்பங்களை கேள்

ஸ்ரீபுருஷோத்தமன = ஸ்ரீபுருஷோத்தமனின்

வக்‌ஷோனிவாசினி = வக்‌ஷ ஸ்தலத்தில் வசிப்பவளே

ப்ருத்யவத்ஸலே = பகவந்தனின் தாசர்களிடம் அன்பாக இருப்பவளே

த்ரிஜகன்மாதே = மூன்று உலகங்களுக்கும் தாயே

விக்யாதே = உலகத்தில் புகழ் பெற்றவளே

காயே = நம்மை காப்பாற்று.

 

பத அர்த்தத்திலேயே விளக்கம் தெளிவாக உள்ளது.

 

ரோமகூபக3ளொளு ப்ருதக்ப்ருத

கா மஹாபுருஷன ஸ்வமூர்த்திய

தாமரஜாண்ட33ளு தத்க3த விஷ்வரூபக3ளு |

ஸ்ரீமஹிளெ ஈ ரூப கு3ணக3

ஸீமெகா3ணதெ3 யோசிஸுத மம

ஸ்வாமி மஹிமெயதெந்து டெ3ந்தடி33டி3கெ3 பெ3ரகா33 ||3

 

ரோமகூபகளொளு = பரமாத்மனின் தேகத்தில் இருக்கும் ரோமக் கால்களில்

ப்ருதக் ப்ருதக் = ஒவ்வொரு ரோமக் கால்களிலும், தனித்தனியாக

ஆ மஹாபுருஷன = அந்த மஹாபுருஷனின்

ஸ்வமூர்த்திய = திவ்ய மூர்த்திகளின்

தாமரஸ ஜாண்டகள = பிரம்மாண்டங்களையும்

தத்கத = அவற்றில் இருக்கும்

விஷ்வரூபகளு = அந்த பரமாத்மனுக்கு இருக்கும் மிகச்சிறந்த ரூப குணங்களையும்

யோசிஸுத = பார்த்து சிந்தித்தவாறு

ஸ்ரீமஹிளெ = ஸ்ரீரமாதேவி

ஸீமெகாணதெ = அதற்கான எல்லைகளையே காணாமல்

மம = என் ஸ்வாமியின் மகிமை

அதெந்துடெந்து = அது எவ்வளவு இருக்குமோ என்று

அடிகடிகெ = ஒவ்வொரு நொடியும்

பெரகாத = எந்த லட்சுமியர் வியப்படைகிறாரோ

அத்தகைய ஜகன்மாதையான ரமாதேவி, நம்மை காக்கட்டும்.

 

ஸ்ரீரமாதேவியர் தம் பதியான ஸ்ரீபரமாத்மனின் தேகத்தில் இருக்கும் ரோமக் கால்களில் ஒவ்வொரு ரோமக் கால்களிலும் பகவன் மூர்த்தியையும், அதில் அனேக பிரம்மாண்டங்களையும், அந்த பிரம்மாண்டங்களில் விஷ்வரூபத்தையும், அவனின் ரூபங்களையும், குணங்களையும் பார்த்து சிந்தித்தவாறு, அவற்றின் எல்லைகளைக் காணாமல், ஆஹா, என் ஸ்வாமியின் மகிமை எவ்வளவு இருக்குமோ என்று ஒவ்வொரு நொடியும் வியப்படைந்து கொண்டிருக்கிறார்.

 

அத்தகைய ரமாதேவி நம்மை காக்கட்டும்.

 

ஒந்த3ஜாண்ட3தொ3ளொந்து3 ரூபதொ3

ளொந்த3வயவ தொ3ளொந்து3 நக2தொ3

கொ3ந்து3 கு3ணக3ள பாருகா3ணதெ3 க்ருதபுடாஞ்லியிம் |

மந்த3ஜான புலக புலகா

நந்த3பா3ஷ்ப தொத3லுனுடி33ளி

ந்தி3ந்தி3ரா வல்லப4ன மஹிமெ க3பீ4ரதமவெந்த ||4

 

அனேக பிரம்மாண்டங்களில்

ஒந்தஜாண்டதொளு = ஒரு பிரம்மாண்டத்தில் இருக்கும்

ஒந்து ரூபதொளு = அனேக ரூபங்களில் ஒரு ரூபத்தில்

ஒந்து அவயவதொளு = அனேக அவயவங்களில் ஒரு அவயவத்தில்

ஒந்து நகதொளு = அனேக நகங்களில் ஒரு நகத்தில் இருக்கும்

ஒரு குணகள = ஒரு பாகத்தில் இருக்கும் குணங்களைப் பார்த்து, சிந்தித்து, அதன் எல்லைகளைக் காணாமல்

மந்தஜாஸன = கமலாஸனனான பிரம்மதேவர்

க்ருதபுடாஞ்சலியிம் = கை கூப்பியவாறு

புலக புலகானந்தபாஷ்ப = புளகாங்கிதம் அடைந்து மெய்சிலிர்த்து ஆனந்தக்கண்ணீர் சொரிந்தவாறு தொண்டை கமறி வார்த்தை வெளிவராதவாறு

இந்திரா வல்லபன = லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மனின்

மஹிமெ கபீரதமவெந்த = மகிமைகளின் ஆழத்தைக் காண்பதற்கு சாத்தியமில்லை என்றான்.

 

அனேக பிரம்மாண்டங்களில் ஒரு பிரம்மாண்டத்தில் இருக்கும், அனேக பகவத் ரூபங்களில் ஒரு பகவத் ரூபத்தில், அனேக அங்கங்களில் ஒரு அங்கமான பாதத்தில் இருக்கும் பல நகங்களில் ஒரு நகத்தில் இருக்கும் அனேக பாகங்களில் ஒரு பாகத்தில் இருக்கும் பகவந்தனின் குணங்களை சிந்தித்து, அதன் எல்லைகளைக் காணாமல் பிரம்மதேவர், தன் கைகளை குவித்து வணங்கியவாறு, புளகாங்கிதம் அடைந்து மெய்சிலிர்த்து ஆனந்தக்கண்ணீர் சொரிந்தவாறு தொண்டை கமறி வார்த்தை வெளிவராதவாறு:

 

ஆஹா, அந்த லட்சுமிவல்லபனின் குணங்களின் மூலம் எங்கு இருக்கிறது என்று எவ்வளவு தேடினாலும் அதன் ஆழம் தெரிவதேயில்லை. இத்தகைய மகா மகிமையுள்ளவன் பரமாத்மன்என்றார்.

 

இந்த 4 ஸ்லோகங்களினாலும், ஸ்ரீஹரி, லட்சுமி, பிரம்ம இவர்களின் தாரதம்யத்தையும் சொல்லியிருந்தாலும், பகவத் மகிமையையே விஷயமாக காட்டியிருக்கிறார்.

 

ஏனு த4ன்யரோ பி3ரம்ம கு3ரு பவ

மானரீர்வரு ஈ பரியலி ர

மானிவான விமல லாவண்யாதிஷயக3ளனு |

ஸானுராக3தி நோடி3 ஸுகி2ப ம

ஹானுபா3வர பா4க்யவெந்தோ ப4

வானித4வனிக3 ஸாத்3யவெனிலு நரரபாடே3னு ||5

 

பிரம்ம = பிரம்மதேவர்

குரு = குருகளான

பவமான = வாயுதேவர்

இவரீர்வரு = இந்த இருவரும்

ஏனு தன்யரோ = எவ்வளவு பாக்யசாலிகளோ?

ஈ பரியலி = மேற்கூறிய விதமாக

ரமா நிவாஸன = ஸ்ரீனிவாசனின்

விமல = நிர்மலமான

லாவண்யாதிஷயகளனு = சௌந்தர்ய விசேஷங்களை

ஸானுராகதி = மிகவும் அன்புடன் பார்த்து

சுகிப = சுகத்தை அனுபவிக்கும்

மஹானுபாவர = மஹானுபாவரான பிரம்ம வாயுகளுக்கு

பாக்யவெந்தோ = எத்தகைய பாக்கியமோ?

பவானிதவனிகெ = பார்வதி பதியான ருத்ரதேவருக்கு

அசாத்யவெனிஸலு = அவருக்கே அசாத்தியம் என்கிறபோது

நரர பாடேனு? = சாதாரண மக்களின் கதி என்ன?

 

முந்தைய பத்யத்தில், பிரம்மதேவர் பகவந்தனைப் பார்த்து மகிழ்ச்சியடைவதை சொல்லி, தற்போது பிரம்மதேவருக்கு சமம் வாயுதேவர் என்பதால், அவரும் பிரம்மதேவரைப் போலவே பகவத் ரூபங்களைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறார் என்று சொல்வதற்காக, ஒரே பத்யத்தில் இருவரையும் துதிக்கிறார்.

 

இந்த பிரம்ம வாயுகள் எத்தகைய பாக்யசாலிகளோ? பரமாத்மனின் ரூப சௌந்தர்ய விசேஷத்தை முந்தைய பத்யத்தில் சொன்னதைப் போலவே பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். இந்த மஹானுபாவர்களின் பாக்கியத்தை என்னவென்று வர்ணிப்பேன்? இத்தகைய பாக்கியம் ருத்ரதேவருக்கும் இல்லை. அப்படி இருக்கையில் மற்ற சாதாரண மனிதரின் கதிதான் என்ன?

 

ஆ பிதாமஹ நூரு கல்ப ர

மாபதிய கு3ண ஜபிஸி ஒலிஸி ம

ஹாபராக்ரம ஹனும பீ4மானந்த3 முனியெனிஸி |

ஆ பரப்3ரம்மன ஸுனாபி4

கூபம்ப4வ நாமத3லி மெரெ

வாபயோஜாமீரரிக3பி4னமிபெ நித்ய ||6

 

ஆ பிதாமஹ = அந்த பிரம்மதேவர்

பிரம்ம பதவியைப் பெறுவதற்கு முன்னர்

நூருகல்ப = பிரம்மனின் 100 கல்பங்களில்

ரமாபதிய = ரமாபதியின்

குணஜபிஸி = குணங்களை உபாசனை செய்து

ஒலிஸி = பரமாத்மனின் அன்பைப் பெற்று

மஹா பராக்ரம = மஹா பராக்ரமசாலியான

ஹனும பீமானந்த முனியெனிஸி = 99ம் கல்பத்தில் வாயு பதவியைப் பெற்று ஹனும, பீம, மத்வ என்னும் மூன்று அவதாரங்களை எடுத்து, அந்த மூன்று அவதாரங்களிலும் பகவத் சேவையை செய்து, 100ம் கல்பத்தில் அந்த பரபிரம்மனின்,

ஸுனாபிகூப சம்பவ நாமதலி மெரெவ = நாபிக் கமலத்திலிருந்து பிறந்து கமலசம்பவ என்ற பெயரைப் பெற்றிருக்கும்

ஆபயோஜாஸன ஸமீரரிகெ = பிரம்ம வாயுகளை

ஸதத = அனைத்து காலங்களிலும்

அபினமிபெ நான் வணங்குவேன்.

 

ருஜு கணஸ்தராக இருந்தபோது (பிரம்ம பதவியைப் பெறுவதற்கு முன்னர்) 100 பிரம்ம கல்பங்களின் சாதனை செய்து, 99ம் கல்பத்தில் வாயு பதவியைப் பெற்று ஹனும, பீம, மத்வ என்னும் மூன்று அவதாரங்களால் ராம, கிருஷ்ண, வேதவியாஸர்களின் சேவையை செய்து, 100ம் கல்பத்தில் பிரம்ம பதவியைப் பெறுவதற்காக பரமாத்மனின் நாபி கமலத்திலிருந்து பிறந்து, கமலசம்பவ என்னும் பெயரைப் பெற்ற, பிரம்ம வாயுகளை அனைத்து காலங்களிலும் நான் நமஸ்காரம் செய்கிறேன்.

 

வாஸுதே3வனமூர்த்தி ஹ்ருத3யா

காஷமண்ட3ல மத்4யத3லி தா

ரேஷனந்த3தி3 காணுத அதிஸந்தோஷத3லி துதிப |

ரஸ்வதி பா4ரதியரிகெ3

நா தத வந்தி3ஸுவெ பரமோ

ல்லா3லி ஸுக்3ஞான ப4கு3தியு லிலெனகெ3ந்து3 ||7

 

வாசுதேவனமூர்த்தி,

ஹ்ருதயாகாஷமண்டல மத்யதலி = இதயக் கமலத்தில் இருக்கும் மண்டலத்தின் நடுவில்

தாரேஷனந்ததி = சந்திரனைப் போல

காணுத = தெரிந்தவாறு

அதி சந்தோஷதலி = மிகவும் மகிழ்ச்சியுடன்

துதிப = ஸ்தோத்திரம் செய்து கொண்டிருக்கும்

ஆ சரஸ்வதி பாரதியரிகெ = சரஸ்வதி, பாரதி தேவியர்களை

எமகெ = நமக்கு

சுக்ஞான = தூய்மையான ஞானத்தையும்

பகுதியு = பக்தியையும்

ஸலிஸலி = கொடுக்கட்டும்

எந்து = என்று

நா = நான்

பரமோல்லாஸதலி = மிகவும் மகிழ்ச்சியுடன்

ஸதத = எப்போதும்

வந்திஸுவெ = நமஸ்கரிக்கிறேன்.

 

எந்த சரஸ்வதி பாரதியர், தம் ஹ்ருதயாகாஷத்தில் இருக்கும் மண்டலத்தின் நடுவில் சந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீவாசுதேவ மூர்த்தியைப் பார்த்து மகிழ்ச்சியுடன் ஸ்தோத்திரம் செய்து கொண்டிருக்கிறார்களோ, அத்தகைய சரஸ்வதி பாரதியர்களை, நமக்கு சுக்ஞானத்தையும், திடமான பக்தியையும் கொடுக்குமாறு, மிகவும் மகிழ்ச்சியுடன் (ஆர்வத்துடன்) வணங்கிக் கேட்கிறேன்.

 

ஜக3து33ரன ஸுரோத்தமன நிஜ

பெக3லொளாந்து3 கராப்ஜதொ3ளு பத3

யுக34ரிஸி ந22பங்க்தியொளு ரமணீயதரவாத3 |

நக33ரன ப்ரதிபி3ம்ப3 காணுத

மிகெ3ஹருஷதி3ம் பொக3ளி ஹிக்கு3

23குலாதி3ப கொட3லி மங்க3ஸகஸுஜனரிகெ3 ||8

 

ஜகதுதரன = ஜகத்தை தன் உதரத்தில் தரித்த

சுரோத்தமன = தேவோத்தமனான ஸ்ரீபரமாத்மனை

நிஜ = தன்

பெகலொளு = முதுகில்

ஆந்து = தாங்கிக் கொண்டு

கராப்ஜதொளு = தன் கரகமலங்களில்

பதயுகதரிஸி = பரமாத்மனின் இரு பாதங்களையும் தரித்து

நகபங்க்தியொளு = பாதங்களின் நகங்களின் ஒளியில்

ரமணீயதரவாத = மிகவும் அற்புதமான (அழகான)

நகதரன = கோவர்த்தனோத்தாரியான ஸ்ரீஹரியின்

ப்ரதிபிம்ப = பிரதிபிம்பத்தைப் பார்த்தவாறு

மிகெஹருஷதிம் = மிகவும் மகிழ்ச்சியுடன்

பொகளி ஹிக்குவ = அவனைப் புகழ்ந்தவாறு, மகிழும்

கககுலாதிப = பக்‌ஷி குலத்தின் அதிபதியான கருடன்

சகலசுஜனரிகெ = அனைத்து சஜ்ஜனர்களுக்கும்

கொடலி மங்கலவ = மங்கலத்தைக் கொடுக்கட்டும்.

 

யோகி33ள ஹ்ருதயகெ நிலுக நிக3

மாக3மைக வினுதன பரமனு

ராக3தலி த்3விஹஸ்ர ஜிஹ்வெக3ளிந்த3 வர்ணிஸு}

பூ433ன பாதாளவ்யாப்தன

யோக3 நித்3ராஸ்பத3னெனிப கு3ரு

நாக3ராஜன பத3கெ நமிஸுவெ மனதொ3ளனவரத ||9

 

யோகிகள ஹ்ருதயகெ = சமாதி நிலையில் இருந்து, ஹ்ருதயாகாஷத்தில் பகவத் ஸ்வரூபத்தைக் காணும் யோகிகளின் மனதிற்கும் கூட

நிலக = முழுவதுமாக காணக் கிடைக்காத

நிகமாக மைகவினுதன = வேதங்கள், பாஞ்சராத்ர ஆகமங்கள் முதலானவற்றால் புகழப்படுபவனான ஸ்ரீபரமாத்மனை

பரமானுராகதலி = மிகுந்த பக்தியுடன்

த்விஸஹஸ்ர ஜிஹ்வெகளிந்த = 2000 நாக்கினால்

வர்ணிஸுவ = வர்ணிக்கும்

பூ ககன பாதாள வியாப்தன = பூமி, அந்தரிக்‌ஷ, பாதாள முதலான அனைத்து இடங்களிலும் வியாப்தனான ஸ்ரீஹரிக்கு

யோக நித்ராஸ்பதனெனிப = யோக நித்திரைக்கு உதவுபவன் என்று

குரு = தாரதம்யத்தின்படி குரு பரம்பரையில் வந்த

நாகராஜன = சேஷதேவரின்

பதக்கெ = பாத கமலங்களில்

அனவரத = எப்போதும் திடமாக

மனதொளகெ நமிசுவெ = மனப்பூர்வகமாக நமஸ்கரிக்கிறேன்.

 

எந்த பரமாத்மன், யோகிகளின் மனதிற்கும், முழுவதுமாக புலப்படாதவனாக இருக்கிறானோ, அத்தகைய வேதங்களால் புகழப்படுபவனான பரமாத்மனை, 2,000 நாக்குகளால் வர்ணித்தவாறு, அனைத்து இடங்களிலும் வியாப்தனான பரமாத்மனுக்கு, யோக நித்திரைக்கு உதவுபவன் என்றால், யோக நித்திரையில் செல்லும் காலத்தில், சேஷன் என்னும் படுக்கையில் படுத்திருக்கிறான் என்று அர்த்தம். பரமாத்மனுக்கு படுக்கையாக இருந்து ஒளிரும் இத்தகைய சர்ப்ப ராஜனான சேஷனின் பாத கமலங்களை நான் எப்போதும் மனப்பூர்வகமாக நமஸ்காரம் செய்கிறேன்.

 

நந்தி3வாஹன நலினித4ர மௌ

ளிந்து3ஷேக2ர ஷிவ த்ரியம்ப3

அந்த4காஸுரமத2ன க3ஜ ஷார்த்தூ3 சர்மத4|

மந்த3ஜானதனய த்ரிஜக3

த்வந்த்4ய ஷுத்த4 ஸ்படிக ன்னிப4

வந்தி3ஸுவெனனவரத பாலிஸோ பார்வதி ரமண ||10

 

நந்திவாஹன = நந்தியை வாகனமாகக் கொண்டவன்

நளினிதர மௌளி = கங்கையை தலையில் தரித்தவன்

இந்துஷேகர = சந்திரசேகரன்

ஷிவ = மங்களத்தைக் கொடுப்பவன்

த்ரியம்பக = முக்கண்ணன்

அந்தகாசுர மதன = அந்தகாசுரனைக் கொன்றவன்

கஜஷார்தூல சர்மதர = யானை மற்றும் புலியின் தோலை உடுத்தியவன்

மந்தஜாசனதனய = பிரம்மதேவரின் மகன்

த்ரிஜகத்வந்த்ய = வாயுதேவருக்கு அடுத்து, மூன்று உலகத்தவர்களாலும் வணங்கப்படுபவன்

ஷுத்தஸ்படிக சன்னிப = வெண்மையான ஸ்படிக சிலையைப் போல ஒளியுள்ள

இத்தகைய நற்குணங்களைக் கொண்ட ஹே,

பார்வதிரமணா,

அனவரத = எப்போதும் இடைவிடாமல்

வந்திசுவேனு = உன்னை வணங்குவேன்

பாலிஸு = என்னைக் காத்தருள்வாயாக.

 

பத்ய அர்த்தம் தெளிவாக உள்ளது.

 

4ணிப4ணாஞ்சித முகுடரஞ்சித

க்கணிதடமரு த்ரிஷூல ஷிகி2 தி3

மணி நிஷாகரநேத்ர பரமபவித்ர ஸுசரித்ர |

ப்ரணதகாமத3 ப்ரமத2 ஸுரமுனி

3ஸுபூஜித சரணயுக3 ரா

வணமத3 விப4ஞ்தத மாம்பாஹி மஹதே3||11

 

பணி = பாம்பின்

பணாஞ்சித = பாம்பினால் அலங்கரிக்கப்பட்ட

முகுட = கிரீடம்

ரஞ்சித = ஒளிர்ந்து கொண்டிருக்கும்

க்வணிதடமரு = சப்தத்தைக் கொடுக்கும் டமரு என்னும் வாத்தியத்தைக் கொண்டவன்

த்ரிஷூல = த்ரிஷூலத்தை தரித்தவன்

ஷிகி = அக்னி

தினமணி = சூரியன்

நிஷாகர = சந்திரன்

நேத்ர = இவர்கள் மூவரையும் மூன்று கண்களாகக் கொண்டவன்

பரமபவித்ர = பரம பவித்ரன்

சுசரித்ர = உத்தமமான மகிமைகளைக் கொண்டவன்

ப்ரணதகாமத = தன்னை வணங்குபவர்களின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றுபவன்

ப்ரமத = பூதகணம்

சுர = தேவதைகள்

முனி = ரிஷிகள்

கணஸுபூஜித = இந்த கணங்களால் வணங்கப்படுபவன்

சரணயுக = இத்தகைய கணங்களால் நன்றாக வணங்கப்படுவதான பாதங்களைக் கொண்டவன்

ராவண மதவிபஞ்சன = ராவணனின் கர்வத்தை முறித்தவன்

இத்தகைய நற்குணங்களைக் கொண்ட

மகாதேவா,

ஸதத = எப்போதும்

மாம்பாஹி = என்னை காத்தருள்வாயாக.

 

பத்ய அர்த்தம் தெளிவாக உள்ளது.

 

3க்‌ஷயக்3ஞ விப4ஞ்சன விரூ

பாக்‌ஷ வைராக்4யாதி4பதி ம்

ரக்‌ஷிஸெம்மனு ர்வகாலதி3 ன்முத3வனித்து |

யக்‌ஷபதி2 யஜபரிகெ3 ஸு

வ்ருக்‌ஷ வ்ருகத4னுஜாரி லோகா

த்4யக்‌ஷ ஷுக து3ர்வாஸ ஜைகீஷவ்ய ந்தெயிஸு ||12

 

தக்‌ஷயக்ஞ விபஞ்சன = தக்‌ஷப்ரஜேஷ்வரனின் யாகத்தை அழித்தவன்

விருபாக்‌ஷ = மூன்றாவது கண் உள்ளவன்

வைராக்யாதிபதி = வைராக்யத்திற்கு அபிமானி

ஸர்வகாலதி = அனைத்து காலங்களிலும்

ஸன்முதவனித்து = உத்தம ஆனந்தத்தை அளித்து

எம்மனு = எங்களை

சம்ரக்‌ஷிஸு = அருள்வாயாக

யக்‌ஷபதிசக =

குபேரனின் நண்பன்

யஜபரிகெ = வணங்குபவர்களுக்கு

சுரவ்ருக்‌ஷ = கல்பவ்ருக்‌ஷத்தைப் போல இருக்கும்

வ்ருகதனுஜாரி = வ்ருகாசுரன் என்னும் தைத்யனின் எதிரி

லோகாத்யக்‌ஷ = மனோ நியாமகன்

ஷுக, துர்வாஸ ஜைகீஷவ்ய = ஷுக, துர்வாஸ, ஜைகீஷவ்ய என்னும் மூன்று அவதாரங்களைக் கொண்ட

இத்தகைய நற்குணங்களைக் கொண்டவனான ஹே மகாதேவனே,

சந்தெயிஸு = எங்களைக் காப்பாற்று.

 

ருத்ரதேவரின் மாமனாரான தக்‌ஷப்ரஜேஸ்வரன், தான் செய்து கொண்டிருந்த யாகத்திற்கு வருகையில், அங்கு முன்னராக வந்து அமர்ந்திருந்த தன் மாப்பிள்ளையான ருத்ரர் தனக்கு மரியாதை தரவில்லை என்னும் கோபத்தினால், அவரை பலவிதங்களில் தூஷித்தான். அவரை அவமானம் செய்வதற்காக, தான் ஒரு யாகம் செய்யத் துவங்கி, தன் மகள் மற்றும் மாப்பிள்ளையை அந்த யாகத்திற்கு அழைக்கவே இல்லை.

 

ஆனாலும், அவரின் மகளான சதிதேவி, தன் தந்தை என்னும் அபிமானத்தால் யாகசாலைக்கு வர, அவளை வரவேற்காமல், ஆஹுதி கொடுக்கும் காலத்தில், ருத்ர தேவருக்கு ஆஹுதியைக் கொடுக்காமல் அவமானம் செய்தான். இதனால் கோபம் கொண்ட சதிதேவி, தன் தந்தையை பலமாகத் திட்டி, உன்னைப் போன்ற பாவியின் மூலம் பிறந்த இந்த தேகத்தை விடுகிறேன் என்று சொல்லி உயிர்த் தியாகம் செய்தாள்.

 

இந்த தகவலை அறிந்த ருத்ரதேவர், கோபத்துடன் அங்கு வந்து, யாகத்தை த்வம்சம் செய்து தக்‌ஷனைக் கொன்று, பின் பிரம்மதேவரின் ஆணைப்படி, ஒரு ஆட்டின் தலையை வைத்து அவனை மறுபடி பிழைக்க வைத்தார் என்று பாகவத 4ம் ஸ்கந்தத்தின் கதை இருக்கிறது. தக்‌ஷயக்ஞ விபஞ்சனஎன்னும் பதம் இதையே குறிக்கிறது.

 

வ்ருகதனுஜாரி’ - வ்ருகாசுரனையே உலகத்தில் பஸ்மாசுரன் என்கிறார்கள். அவன் நான் யார் தலை மேல் கை வைக்கிறேனோ, அவன் மரணமடைய வேண்டும்என்று ருத்ரரிடமிருந்து வரத்தைப் பெற்று, அதனை சோதனை செய்ய, ருத்ரதேவரின் தலை மேலேயே கை வைக்கப் பாய்ந்தான். அப்போது, ஸ்ரீஹரி தந்திரத்துடன் வ்ருகாசுரனை அவன் கையை அவன் தலையிலேயே வைக்குமாறு செய்து, அவனைக் கொன்றார். ருத்ர தேவர் கொடுத்த வரமே, அவனின் சம்ஹாரத்திற்கு காரணம் ஆனதால், வ்ருகதனுஜாரி என்றார்.

 

ருத்ர தேவரின் அவதார த்ரயத்தின் பிரமாணங்களை 21ம் பிருஹத் தாரதம்ய சந்தியின் வியாக்யானத்தில் கொடுத்திருக்கிறோம்.

 

ஹத்து கல்பதி3 லவணஜலதி4யொ

ளுத்தமஸ்லோகன ஒலிஸி க்ருத

க்ருத்யனாகி3 ஜக3த்பதிய நேமதி3 குஷாஸ்த்ரக3|

பி3த்தரிஸி மோஹிஸி து3ராத்மர

நித்யநிரய நிவாரெனிஸி3

க்ருத்திவாகெ3 நமிபெ ஸேஷபதா3ர்ஹனஹுதெ3ந்து3 ||13

 

ஹத்து கல்பதி = பிரம்ம கல்பத்தில் 10 கல்பங்களில்

லவணஜலதியொளு = உப்பு நிறைந்த கடலில் தவம் செய்து

உத்தம ஸ்லோகன = புண்ய கீர்த்தியுள்ள ஸ்ரீபரமாத்மனை

ஒலிஸி = வணங்கி

க்ருதக்ருத்யனாகி = தவம் செய்து, அந்த தவத்தினால் தக்க பலன்களைப் பெற்று

ஜகத்பதிய = ஸ்ரீபரமாத்மனின்

நேமதி = ஆணையின் பேரில்

குஷாஸ்திரகள = சைவ, பாஸுபதாதி மோஹ சாஸ்திரங்களை

பித்தரிஸி = விளக்கி

துராத்மர = தமோ யோக்யர்களான தைத்யர்களை மயக்கி

நித்ய நிரயனிவாஸரு = நித்யமான தமஸ்ஸிற்கு யோக்யர் என்று சொல்லும்படியாக செய்த

க்ருத்திவாஸனெ = சர்மத்தை வஸ்திரமாகக் கொண்ட ருத்ரதேவருக்கு

சேஷபதார்ஹனஹுதெந்து = இவரே சேஷ பதவியைப் பெறுவதற்கு தகுதி உள்ளவர் என்று

நமிபெ = வணங்குவேன்.

 

பிரம்ம கல்பத்தின்படி 10 கல்பங்களில் உப்புக் கடலில் உக்ரமான தவத்தினை செய்து பரமாத்மனின் அருளுக்கு பாத்திரராகி, பகவந்தனின் ஆணையின்படி த்வஞ்ச ருத்ர மஹாபாஹோ மோஹ ஷாஸ்திராணி காரய’ -- நீ உன் மகிமையை வெளிப்படுத்தும் மோஹ சாஸ்திரங்களை உருவாக்கு - என்ற பகவந்தனின் சொல்லின்படி, மோக சாஸ்திரங்களை செய்து, தைத்யர்களை மயக்கி, அவரை அந்தம் தமஸ்ஸிற்கு யோக்யர்களாக செய்து, அடுத்த கல்பத்தில் சேஷ பதவியைப் பெறப்போகும் ருத்ரதேவருக்கு நான் நமஸ்காரம் செய்வேன்.

 

கம்பு3பாணிய பரமப்ரேமனி

தம்பி3னியரெந்தெ3னிப லக்‌ஷணெ

ஜாம்ப3வதி காளிந்தி3 நீலா ப4த்ர 2விந்த3 |

எம்ப3 ஷண்மஹிஷியர திவ்யப

3ம்பு4ஜக3ளிகெ3 நமிபெ மமஹ்ருத3

யம்ப3ரதி3 நெலெலி பி33தெ3 தம்மரனொட3கூ3டி3 ||14

 

கம்புபாணிய = சங்கினை தரித்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணனின்

பரமப்ரேம நிதம்பினியரெனிப = அன்புடைய மனைவிகள் எனப்படும்

லக்‌ஷணெ, ஜாம்பவதி, காளிந்தி, நீலா, பத்ரா, சகவிந்தா (மித்ரவிந்தா),

எம்ப = ஆகிய

ஷண்மஹிஷியர = 6 மஹிஷியர்களின்

திவ்யபதாம்புஜகளிகெ = திவ்ய பாத கமலங்களுக்கு

நமிபெ = வணங்குவேன்

மம = என்

ஹ்ருதயம்பரதி = இதயாகாஷத்தில்

தம்மரஸனொடகூடி = தம் பதியுடன் சேர்ந்து

பிடதெ = எப்போதும்

நெலெஸலி = நிலைத்திருக்கட்டும்.

 

ஸ்ரீகிருஷ்ணனின் ஷண்மஹிஷியரான லக்‌ஷணா, ஜாம்பவதி, காளிந்தி, நீலா, பத்ரா, மித்ரவிந்தா என்னும் ஷண்மஹிஷியரின் பாத கமலங்களுக்கு நான் வணங்குகிறேன். தம் பதியுடன் சேர்ந்து அவர்கள் நம் ஹ்ருதயாகாஷத்தில் எப்போதும் வசித்திருக்கட்டும்.

 

ஆ பரந்தரப நொலுமெயிந்த3

தாபரோக்‌ஷிக3ளெனிஸி ப43

த்3ரூப கு3ணக3ள மஹிமெ ஸ்வபதிக3ளானனதி3 திளிவ |

ஸௌபரணி வாருணி நகா3த்மஜெ

ராபனிது ப3ண்ணிஸுவெ என்ன ம

ஹாபராத43ளெணி தீ3யலி பரமமங்க3லவ ||15

 

ஆ பரந்தபன = முன்னர் கூறிய, பரஞ்சோதி ஸ்வரூபனான ஸ்ரீபரமாத்மனின்

ஒலிமெயிந்த = பிரசாதத்தினால்

ஸதா அபரோக்‌ஷிகளெனிஸி = எப்போதும் அபரோக்‌ஷ ஞானிகள் என்று சொல்லி

பகவத்ரூப குணகள மஹிமெ = பகவந்தனின் ரூப, குண, மகிமைகளை

ஸ்வபதிகள = தத்தம் பதிகளான கருட, சேஷ, ருத்ராதிகளின்

ஆனனதி = முகத்தினால்

திளித = அறிந்துகொண்ட

ஸௌபர்ணி = கருடனின் மனைவி

வாருணி = சேஷனின் மனைவி

நகாத்மஜர = பார்வதி தேவியர்; இவர்கள் மூவரையும்

ஆபனிது = பக்தியுடன்

பண்ணிஸுவெ = வணங்குவேன்

என்ன மஹாபராதகளெனிஸதெ = என் தவறுகளை எண்ணாமல்

பரம மங்களவ = மங்களங்களை

ஈயலி = கொடுக்கட்டும்.

 

பகவந்தனின் அருளால் எப்போதும் அபரோக்‌ஷிகள் என்று அழைக்கப்பட்டு, பரமாத்மனின் ரூப, குண, இவற்றின் மகிமைகளை தத்தம் பதிகளின் முகத்திலிருந்து அவரவர்கள் கேட்டு, நன்றாக அறிந்து மனனம் செய்து கொண்டிருக்கும் சௌபர்ணி, வாருணி, பார்வதி என்னும் இந்த மூவரையும், என் புத்திற்கு தெரிந்த மட்டில் வணங்குவேன். என் அபராதங்களை கவனத்தில் கொள்ளாமல், அவர்கள் எனக்கு மங்களத்தைக் கொடுக்கட்டும்.

 

த்ரிதி3வதரு மணி தே3னுக3ளிகா3

ஸ்பத3வெனிப த்ரித3ஷாலயாப்4தி3கெ3

பதரனந்த33லொப்புதிப்ப உபேந்த்3ர சந்த்3ரமன |

ம்ருது3மது3ஸுஸ்தவனதி3ந்த3லி

மதுமய பிகனந்தெ பாடு3

முதி3ரவாஹனனங்க்3ரியுக்3மங்க3ளிகெ3 நமிஸுவெனு ||16

 

த்ரிதிவதரு = கல்பவ்ருக்‌ஷ

மணி = சிந்தாமணி

தேனுகளிகெ = காமதேனு இவற்றிற்கு

ஆஸ்பதவெனிப = இருப்பிடமான

த்ரிதஷாலய = தேவதைகள் வசிப்பதற்கு தகுதியான ஸ்வர்க்கம் என்னும்

அப்திகெ = கடலுக்கு

பதரனந்ததலி = சந்திரனைப் போல

ஒப்புதிப்ப = இருக்கும்

உபேந்திர சந்திரமன = உபேந்திர என்னும் வாமன ரூபியான ஸ்ரீபரமாத்மன் என்னும் சந்திரன்

மதுசமய பிகனந்தெ = வசந்த காலத்தின் குயிலைப் போல, அழகாக

பாடுவ = பாடும்

மதுரவாஹனன = மேக வாகன எனப்படும் தேவேந்திரனின்

அங்க்ரியுக்மங்களிகெ = பாத கமலங்களை

நமிஸுவெனு = வணங்குவேன்.

 

கல்பவ்ருக்‌ஷ, காமதேனு, சிந்தாமணி என்னும் மூன்று உத்தம வஸ்துகளின் இருப்பிடமான ஸ்வர்க்க என்னும் கடலுக்கு, சந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டிருக்கும் உபேந்திரன் என்னும் சந்திரனை, வசந்த காலத்தின் குயிலைப் போல மிகவும் அழகான குரலில், ஸ்தோத்திரம் செய்து கொண்டிருக்கும் தேவேந்திரனின் பாதகமலங்களுக்கு நான் நமஸ்காரம் செய்கிறேன். அதாவது, தேவேந்திரனின் தலைமையில் உபாஸ்ய மூர்த்தி உபேந்திரன் என்னும் வாமன ரூபியான பரமாத்மன் என்பது கருத்து.

 

க்ருதிரமண ப்ரத்3யும்ன தே3வன

அதுல ப3ல லாவண்யகு3

ந்தத உபான கேதுமாலாக2ண்டத3லி ரசிப |

ரதிமனோஹரனங்க்4ரி கமலகெ3

நுதிஸுவெனு ப4கு3தியலி மம து3

ர்மதி களெது3 ன்மதியனீவு த3ஜஸ்ரவெமகொ3லிது3 ||17

 

க்ருதிரமண = க்ருதி ஸ்வரூபரான ரமாதேவியின் பதியான

ப்ரத்யும்னதேவன = பிரத்யும்ன மூர்த்தியின்

அதுல = ஒப்புமை இல்லாதவனான

பல = வலிமை

லாவண்ய = சௌந்தர்ய

குண = குணங்கள், இவற்றை

ஸந்தத = எப்போதும்

கேது மாலாகண்டனொளு = கேது மாலா என்னும் பெயருள்ள பூகண்டத்தில்

உபாசனெ = உபாசனையை

ரசிப = செய்து கொண்டிருக்கும்

ரதிமனோஹரன = ரதி பதியான மன்மதனின்

அங்க்ரி கமலகெ = பாத கமலங்களை

பகுதியலி = மிகுந்த பக்தியுடன்

நுதிசுவெனு = வணங்குவேன்

அஜஸ்ர = அனைத்து காலங்களிலும்

எமகெ = எமக்கு

ஒலிது = மகிழ்ந்து

மம = என்

துர்மதி களெது = துர்மதியைக் களைந்து

சன்மதியனீவு = நற்புத்தியைக் கொடு

 

கேதுமாலா கண்டத்தில் வசித்தவாறு, க்ருதிபதியான பிரத்யும்ன நாமக பரமாத்மனின் அபாரமான பல, லாவண்ய குணங்களை எப்போதும் உபாசனை செய்து கொண்டிருக்கும் மன்மதனின் பாத கமலங்களை பக்தியுடன் வணங்குவேன். எப்போதும் நமக்கு அருளி, நம் துர்மதியைப் போக்கி, நற்புத்தியைக் கொடு என்று வேண்டுவேன்.

 

சாருதர நவவித34கு3தி க3      

ம்பீ4ர வாராஷியொளு பரமோ

தா3ரமஹிமன ஹ்ருதயப2ணிபதி பீட23லி ப3ஜிப |

பூ3ரிகர்மாகரரெனிஸுவ ஷ

ரீரமானி ப்ராணபதிபத3

வாரிருஹகானமிபெ மத்கு3ருராயரஹுதெ3ந்து3 ||18

 

சாருதர = மனோகரமான

நவவிதபகுதி = 9 விதமான பக்தி என்னும்

கம்பீர = மிகவும் ஆழமான

வாராஷியொளு = கடலில்

பரமோதாரமஹிமன = வணங்குபவர்களுக்கு சர்வாபீஷ்டங்களையும் கொடுப்பவன் ஆகையால் பகவந்தனுக்கு, பரமோதார என்று பெயர். இத்தகைய மகிமைகளைக் கொண்ட ஸ்ரீஹரியை

ஹ்ருதயபணிபதி பீடதலி = ஹ்ருதயாகாஷத்தில், சர்வ ஸ்ரேஷ்டனான சேஷ தேவனையே பீடமாகக் கொண்டு அவர் மேல் அமர்ந்திருக்கும் பகவத் ரூபத்தை வணங்கிக் கொண்டிருக்கும்,

பூரிகர்மாகரரெனிஸுவ = தேகத்தில் இருந்து அனேக வித கர்மங்களை செய்வதால் பூரிகர்மாகர என்று பெயர் பெற்ற

ஷரீரமானி = தேஹாபிமானியான

ப்ராணபதி = 49 மருத்கணர்களில் சிறந்தவனான

ப்ராணன = அஹங்காரிக பிராணனின்

பதவாரிருஹகெ = பாத கமலங்களுக்கு

மத்குருராய நஹுதெந்து = நம் குரு ஸ்ரேஷ்டர் இவர் என்று

ஆனமிபெ = வணங்குவேன்.

 

9 விதமான பக்தி என்பதே கடல். அந்த கடலின் வசிப்பிடம் இதயம். அந்த இதயத்தின் நடுவில் சேஷ பீடத்தின் மேல் இருக்கும் பரமாத்மனை எப்போதும் சிந்தித்தவாறு, தேஹாபிமானி என்று அழைக்கப்பட்டு, பிராணிகளின் தேகத்தில் இருந்து, அனைத்து வித கர்மங்களை செய்து கொண்டிருக்கும் மருத்களில் சிறந்தவனான பிராண நாமகனின் பாத கமலங்களை வணங்குகிறேன். இவன் 9ம் கக்‌ஷையைச் சேர்ந்த குரு என்று அறியவேண்டும்.

 

விததமஹிமன விஷ்வதோமுக2

நதுல பு3ஜப4ல கல்பதருவா

ஸ்ரீத4ரெனிஸி கலேஷ்ட படெ33னுதி3னதி3 மோதி3ஸு|

ரதி ஸ்வயம்பு4வ த3க்‌ஷ வாச

ஸ்பதி பி3டௌ3ஜன மடதி3ஷசி ம

ந்மத2 குமார அனிருத்34ரமகீ3யலி ஸுமங்க3லவ ||19

 

விதத = விசேஷமாக அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கும்

மஹிமன = மகிமையுள்ள

விஷ்வதோமுகன = பிரபஞ்சமே முகமாக உள்ள; அல்லது, பிரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும் முகம் உள்ள

அதுள புஜ பல கல்பதருவ = ஒப்புமை இல்லாத புஜபலம் உள்ள ஸ்ரீபரமாத்மனின்

ஆஸ்ரீதரெனிஸி = ஆதரவைப் பெற்றவர்கள் என்று சொல்லி

ஸகலேஷ்ட படெது = விரும்பியதைப் பெற்று

அனுதினதி = தினந்தோறும்

மோதிஸுவ = மகிழ்ச்சியடையும்

ரதி = மன்மதனின் மனைவி

ஸ்வயம்புவ = ஸ்வாயம்புவ மனு

தக்‌ஷ = தக்‌ஷ ப்ரஜேஷ்வர

வாசஸ்பதி = ப்ருஹஸ்பத்யாசார்யர்

பிடௌஜன மடதி = தேவேந்திரனின் மனைவியான சசிதேவி

மன்மத குமார = மன்மதனின் மகன் அனிருத்தன்

இந்த ஆறு பேரும்

எமகெ = நமக்கு

சுமங்களவ = நலன்களை

ஈயலி = கொடுக்கட்டும்

 

அனைத்து இடங்களிலும் வியாப்தமான மகிமைகளைக் கொண்ட விஷ்வதோமுகனான, அபாரமான பலசாலியான, பக்தர்களுக்கு கல்பவ்ருக்‌ஷத்தைப் போல அவர்களின் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றும் ஸ்ரீஹரியின் ஆதரவுடன் அனைத்து இஷ்டார்த்தங்களையும் பெற்று எப்போதும் மகிழ்ந்திருக்கும் ரதி, மனு, குரு, தக்‌ஷ, சசி, அனிருத்த என்னும் 6 பேர் நமக்கு மங்களத்தைக் கொடுக்கட்டும்.

 

4வவனதி2 நவபோத புண்ய

ஸ்ரவண கீர்த்தன பாத3வனருஹ

பு4வனனாவிக3னாகி33ஜகர தாரிஸுவ பி33தெ3 |

ப்ரவஹ மாருததே3வ பரமோ

த்ஸவ விஸேஷ நிரந்தர மஹா

ப்ரவஹத3ந்த3தி3 கொட3லி ப43வத்34க்த ந்ததிகெ3 ||20

 

பவவனதி = சம்சாரம் என்னும் கடலில்

நவ = புதியதான

போத = படகு போலிருக்கும் ஸ்ரீபரமாத்மனின்

புண்ய ஸ்ரவண கீர்த்தன = மகிமைகளை கேட்பதாலும், பாடுவதாலும் மஹா பலன்களைக் கொடுக்கும்

பாதவனருஹ = பாத கமலத்தையே

பவன = வீடாக ஆக்கிக் கொண்டு,

நாவிகனாகி = ஸ்ரீஹரியின் பாத கமல என்னும் படகிற்கு படகோட்டியாக

(மக்களை ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு படகின் மூலமாக தாண்ட வைப்பவன்)

பஜகர = பரமாத்மனை வணங்கும் பக்தர்களை விடாமல்

தாரிசுவ = சம்சாரம் என்னும் கடலிலிருந்து கரையேற்றும்

ப்ரவஹ மாருததேவ = ப்ரவஹ என்னும் வாயுதேவர்

நிரந்தர = நித்யமான

மஹாப்ரவஹதந்ததி = மஹா பிரவஹத்தைப் போல

பகவத் பக்தஸ்ந்ததிகெ = பகவத் பக்தரின் வம்சத்தவர்க்கு

பரமோத்ஸவ விசேஷ = பகவத் தரிசன ரூபமான விசேஷத்தைக் கொடுக்கட்டும்.

 

படகினை ஒரு கரையிலிருந்து மறு கரைக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனில், அதை ஓட்டுபவன் ஒருவன் இருந்தாலும், காற்றின் உதவியும் வேண்டும். அப்படியே, சம்சாரம் என்னும் கடலைத் தாண்டுவதற்கு பரமாத்மனின் பாத கமலங்களே படகாக இருக்கின்றன. அதற்கு பகவன் மகிமையை உபதேசம் செய்பவரான குருவே உதவி செய்யவேண்டும்.

 

ப்ரவஹ மாருதன் 11ம் கக்‌ஷையை சேர்ந்த குருவாக இருப்பதால், ஸ்வயம் காற்றாக இருப்பதால், தானே காற்று & தானே படகோட்டியாக இருப்பதால், கடலைத் தாண்டுவது கஷ்டமான செயலா? (இல்லை). ஆகையால், ஹரியின் பாத கமலத்தையே வீடாக ஆக்கிக்கொண்டு, அங்கேயே வசிக்கும் பகவத் பக்தர்களை, சம்சாரக் கடலிலிருந்து கரையேற்றும், ப்ரவஹ வாயுதேவன், மஹா ப்ரவஹத்தைப் போல நித்யமான, பகவத் தர்ஷன ரூபமான பரமோத்ஸவ விசேஷத்தை அவருக்குக் கொடுக்கட்டும்.

 

ஜனரனுத்த4ரிஸுவேனெனுத நிஜ

ஜனகனனுமதத3லி ஸ்வயம்பு4

மனுவினிந்த3லி படெ3தெ3 ஸுகுமாரரனு ஒலுமெயலி |

ஜனனிஷதரூபா நிதம்பி3னி

மன வசன காயத3லி பி333னு

தி3ன நமிஸுவேனு கொடு3 எமகெ3 ன்மங்க3லவனொலிது3 ||21

 

நிஜஜனகன = தன் தந்தையான பிரம்மதேவரின்

அனுமததல்லி = அனுமதியுடன் (ஆணையினால்) மக்களை

உத்தரிசுவெனெனுத = சந்தானத்தை வளர்ப்பேன் என்று சபதம் செய்து

ஸ்வயம்புவ மனுவினிந்தலி = ஸ்வாயம்புவ மனுவின்

ஒலுமெயலி = அவன் அன்பினால்

குமாரகர = ப்ரியவ்ரத, உத்தனபாதர் என்னும் மக்களைப் பெற்ற

ஷதரூபா நிதம்பினி = மனு பத்னியான ஷதரூபா என்னும்

ஜனனி = தாயே!

மன வசன காயதலி = மனதாலும் வாக்கினாலும் உடலாலும்

பிடதெ = விடாமல்

அனுதின = தினந்தோறும்

நமிஸுவெனு = நமஸ்காரம் செய்கிறேன்

எமகெ = நமக்கு

ஒலிது = தரிசனம் அளித்து

சன்மங்கலவ கொடு = மங்களத்தைக் கொடுப்பாயாக.

 

பிரம்மதேவர் முதலில் சனகாதிகள், ருத்ர தேவர், வசிஷ்டாதி ரிஷி முதலானவர்களை படைத்து, அவர்களால் வம்சம் வளரவில்லை என்பதை சிந்தித்து, தம் இடது பாகத்திலிருந்து ஒரு ஸ்த்ரீயையும், வலது பாகத்திலிருந்து ஒரு புருஷனையும் படைத்தார். அந்த புருஷனே ஸ்வாயம்புவ மனு. அந்த ஸ்த்ரி ஷதரூபா தேவி.

 

பிரம்மர் மனுவிடம் நீ இந்த ஷதரூபையை மணம் புரிந்து வாரிசு உருவாக்க வேண்டும்என்று சொல்லி, அதையே ஷதரூபாதேவியிடமும் கூறினார். இந்த கதை பாகவத 3ம் ஸ்கந்தம், 13ம் அத்தியாயம் 51-54ம் ஸ்லோகங்களில் வருகிறது.

 

அந்த அபிப்பிராயத்தினாலேயே தாசார்யர் ஜனரனுத்தரிஸுவேனெனுத நிஜ ஜனகனனுமததிஎன்றார். இப்படி ஷதரூபாதேவி தன் தந்தையான பிரம்மனின் ஆணையைப்போல, வாரிசு உருவாக்குவதற்காக ஸ்வாயம்புவ மனுவிற்கு சதியாகி, ப்ரியதம, உத்தானபாத என்னும் இரு ஆண் மக்களையும், அகூதி, தேவஹூதி, ப்ரஸூதி என்னும் மூன்று பெண் மக்களையும் பெற்றாள். இத்தகைய ஹே தாயே! மனதாலும் உடலாலும் வாக்கினாலும் நான் உன்னை வணங்குகிறேன். எங்களுக்கு சன் மங்களங்களைக் கொடு.

 

நரன நாராயணன ஹரி க்ரு

ஷ்ணர படெ3தெ3 புருஷார்த்த தெரத3லி

தரணி ஷஷி ஷதரூபரிகெ சமனெனிஸி பாபிக3

நிரயதொ3ளு நெலெகொ3ளிஸி சஜ்ஜன

நெரவியனு பாலிஸுவ ஔது3

ம்ப3லஹு லஹெம்ம பி333லெ பரமகருணத3லி ||22

 

ஔதும்பர = ஹே யமதேவனே,

புருஷார்த்த தெரதலி = தர்ம, அர்த்த, காம, மோட்ச என்னும் 4 புருஷார்த்தங்களைப் போல

நரன = பரமாத்மனின் அம்சத்தினால் ஆன சேஷதேவரின் ரூபமானது, இத்தகைய நர நாமகனையும்

நாராயணன = நாராயண என்னும் பகவந்த அவதாரம் கொண்டவரையும்

இவர்கள் இருவரும் நர நாராயண ரிஷிகள் என்று புகழ்பெற்றவர்கள்.

மற்றும் ஹரி என்னும் ரூபம் 1

கிருஷ்ண = தேவகி மகன் இல்லாத இந்த ரூபம் வேறு

இத்தகைய 4 பகவந்த அவதாரங்களான மக்களைப் (நர, நாராயணன், ஹரி, கிருஷ்ண) பெற்றாய். நீ

தரணி = சூரியன்

சஷி = சந்திரன்

ஷதரூபெ = ஷதரூபா, இவர்களுக்கு சமம் என்று சொல்லி

பாபிகள = பாபிகளை

நிரயதொளு = நரகத்தில்

நெலெகொளிஸி = வசிக்கச் செய்து

சஜ்ஜன நெரவியனு = சஜ்ஜனர்களின் சகவாசத்தை

பாலிஸுவவனு = கொடுக்கிறாய்

இத்தகைய நீ,

எம்ம = நம்மை

பிடதலெ = விடாமல்

சலஹு = அருள்வாயாக.

 

ஹே யமதர்மனே. நீ சாட்சாத் பரமாத்மனின் அவதார ரூபங்களான நர, நாராயண, ஹரி, கிருஷ்ண என்னும் இந்த நான்கு மக்களைப் பெற்றாய். இவர்களின் நர அவதாரம் மட்டும் பகவந்தனின் பின்னாம்சத்தைக் கொண்ட சேஷ அம்சம். மற்ற மூன்றும் பரமாத்மனின் சாட்சாத் அவதாரங்கள் என்று அறியவேண்டும்.

 

பாகவத 2ம் ஸ்கந்தம் 7ம் அத்தியாயம் 6ம் ஸ்லோகத்தில் : தர்மஸ்ய தக்‌ஷ துஹிதுர்யஜனி ஸ்வமூர்த்யா நாராயணோ நர இதி ஸ்வதப: ப்ரபாவ:தர்மனிடம் தக்‌ஷ ப்ரஜேஷ்வரனின் மகளான மூர்த்தியில் நர நாராயண என்று அவதரித்தான் -- என்னும் வாக்கியத்திலிருந்து யமதர்மனுக்கு நர நாராயணர் மக்கள் என்று தெரிகிறது.

 

உதபாதி தர்மதனயோ ஹ்யயம்ஹரி: ஸ்வயமேவ யஸ்ய ஸஹஜோ வ்யஜாயத || இதே பரமாத்மன் யமதர்மனிடம் ஹரி என்னும் பெயரில் அவதரித்தான். மறுபடி தானே தனது சகோதரனாக அவதரித்தான் என்று மத்வ விஜய 8ம் சர்க்க வாக்கியத்தால் ஹரி, கிருஷ்ண என்னும் 2 அவதாரங்கள் யமதர்மனிடம் அவதரித்தன என்பதும் புரிகிறது.

 

கிருஷ்ணாவதாரம் என்றால் வசுதேவ தேவகியரிடம் அவதரித்த கிருஷ்ணன் இல்லை. தர்மனின் மகன் கிருஷ்ணன் என்று அறியவேண்டும். கிருஷ்ணன் என்னும் பெயருள்ள அவதாரங்கள் இரண்டு என்னும் விஷயத்தில், நிர்ணய 2ம் அத்தியாயத்தில்:

 

மத்ஸ்ய கூர்ம வராஹஸ்ச ஸிம்ஹ வாமன பார்க்கவா: ||

ராகவ: கிருஷ்ண புத்தௌச கிருஷ்ணத்வைபாயன ஸ்ததா ||26

நாராயணோ ஹரி: கிருஷ்ண ஸ்தாபஸோ மனுரேவச ||

 

பரமாத்மனின் சாட்சாத் அவதாரங்கள் எவை என்றால்: மத்ஸ்ய, கூர்ம, வராஹ, நரசிம்ஹ, வாமன, பரசுராம, ராகவ, கிருஷ்ண, புத்த, வேதவியாஸ, நாராயண, ஹரி, கிருஷ்ண, தாபஸ என்கிற மனு இத்யாதி அவதாரங்கள் சாட்சாத் அவதாரங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

 

இதில் ராம, கிருஷ்ண, புத்த ஆகிய தசாவதாரங்களில் ஒரு கிருஷ்ணாவதாரத்தை சொல்லி, மறுபடி நாராயண, ஹரி, கிருஷ்ண என்று இரண்டாவது முறை கிருஷ்ண ரூபத்தை சொல்கிறார். இப்படி கிருஷ்ண அவதாரத்தை இரு முறை சொன்னதால், கிருஷ்ண அவதாரம் இரண்டு என்று அறியவேண்டும்.

 

இப்படியாக, ஹே யமதர்மனே, தர்ம, அர்த்த, காம, மோட்ச என்னும் 4 புருஷார்த்தங்களைப் போல 4 மக்களைப் பெற்றிருக்கிறாய். சூரிய, சந்திர, ஷதரூபா இந்த மூவருக்கும் நீ சமமானவன் எனப்படுகிறாய். பாபிகளை நரகத்தில் தள்ளி, சஜ்ஜனர்களின் சகவாசத்தைப் பெற்றவர்களை காக்கிறாய். ஹே ஔதும்பர நாமகனே. கருணையுடன் நம்மையும் காத்தருள்வாயாக.

 

மது4விரோதி4மனோஜ க்‌ஷீரோ

3தி4 மத2மயதி3 உதி3ஸி நெரெ

குத4ரஜா வல்லப4ன மஸ்தகமந்தி3ரதி3 மெரெவ |

விது4 தவாங்க்4ரி பயோஜ யுக3ளகெ

மது4ந்த3தி4 எரகி3 என்மன

3தி4ப வந்திபெனனு தினந்தஸ்தாப பரிஹரிஸு ||23

 

மதுவிரோதி = மது என்னும் தைத்யனைக் கொன்ற மதுசூதனனின்

மனோஜ = மனதில் உதித்த

விது = ஹே சந்திரனே

க்‌ஷீரோததி மதன சமயதி = அமிர்தத்திற்காக பாற்கடலைக் கடைந்த சமயத்தில்

உதிஸி = பிறந்து

குதரஜா வல்லபன =

கு = பூமியை

தர = தரித்திருப்பதால், பர்வதங்களுக்கு பூதர என்று பெயர்.

குதரஜா = ஹிமபர்வதனின் மகளான பார்வதியின்

வல்லபன = பதியான ருத்ரதேவரின்

மஸ்தக மந்திரதி = தலை என்னும் வீட்டில்

நெரெ = வசித்தவாறு

மெரெவ = இருக்கும்

தவ = உன்

அங்க்ரி பயோஜ யுககளிகெ = பாத கமலங்களுக்கு

மதுபவந்ததி = தேனீயைப் போல

என்மன = என் மனமானது

எரகலி = உன்னிடம் சேரட்டும்

மனததிப = ஹே மனோபிமானியான சந்திரனே

அனுதின = தினந்தோறும்

வந்திபெ = நமஸ்காரம் செய்வேன்

அந்தஸ்தாபவ பரிஹரிஸு = மன தாபத்தை பரிகரிப்பாயாக.

 

பரமாத்மனின் மனதிலிருந்து சூக்‌ஷ்ம ரூபியாக பிறந்து, பின் பாற்கடல் கடையும் நேரத்தில் மறுபடி பிறந்த ஹே சந்திரனே, ‘சந்த்ரமா மனஸோ ஜாத:என்று புருஷ சூக்தத்தில் இருக்கிறது. ருத்ர தேவர் விஷத்தைக் குடித்து, அதன் கடுமையைத் தாங்க முடியாமல் தவித்து, உன்னை தலையில் தரித்து, அந்த தாபத்தைக் குறைத்தார். இப்படி ருத்ர தேவரின் தலையில் நிலைத்திருக்கிறாய். உன் பாத கமலங்களை நான் வணங்குகிறேன். மனோபிமானியான சந்திரனே. பரம கருணையுடன் நம் மன தாபத்தை (கஷ்டங்களை) பரிகரிப்பாயாக. நம் மனம் எப்போதும் உன் பாத கமலங்களில் ஒரு தேனீயைப் போல வசிக்குமாறு செய்.

 

ஸ்ரீவனருஹாம்ப3கன நேத்ரக3

ளேவெ மனெயெனிஸி ஸுஜனரிகெ3

ராவலம்ப3னவீவ தெரதி3 மயூக2 விஸ்தரிப |

ஆ விவஸ்வான் னெனிசிகொம்ப3 வி

பா4ஸு அக3ர்னிஷிக3ளலி கொட3

லீ வஸுந்த4ரெயொளு விபஸ்சிதரொட3னெ ஸுக்3ஞான ||24

 

ஸ்ரீவனருஹாம்பகன = தாமரைக் கண்ணனான ஸ்ரீபரமாத்மனின்

நேத்ரகளே = கண்களையே

மனெயெனிஸி = இருப்பிடமாகக் கொண்டு

சுஜனரிகெ = சஜ்ஜனர்களின்

கராவலம்பனவீவ தெரதி = கைகளைப் பிடித்து, அவர்களை சம்சார சாகரத்தைக் கடக்க உதவுவதைப் போல

மயூக = கிரணங்களை

விஸ்தரிப = உலகில் பரவச் செய்யும்

ஆ விவஸ்வான் = விவஸ்வான் என்னும்

எனிஸுவ = பெயரால் அழைக்கப்படும்

விபாவசுவு = சூரியன்

அஹர்னிஷிகளலி = இரவும் பகலுமாக

ஈ வசுந்தரெயொளு = பூமியில்

விபஸ்சிதரொடனெ = ஞானிகளுடன் நம்மைச் சேர்த்து

சுக்ஞான = உத்தம ஞானத்தைக் கொடுக்கட்டும்.

 

தாமரைக் கண்ணனான ஸ்ரீஹரியின் கண்ணிலிருந்து பிறந்து, அந்த கண்களையே இருப்பிடமாகக் கொண்டிருக்கும் சஜ்ஜனர்களின் கை பிடித்து அவர்களை கஷ்டங்களிலிருந்து விடுவிப்பதைப் போல, தன் கிரணங்களை பூமியில் அனைத்து இடங்களிலும் பரவச் செய்யும் விவஸ்வான் என்னும் சூரியன், இந்த பூமியில் நம்மை ஞானிகளின் சகவாசத்தில் இருத்தி, பகல் இரவுகளில் திவ்ய ஞானத்தைக் கொடுக்கட்டும்.

 

லோகமாதெயபடெ3து3 நீ ஜக3

தே3க பாத்ரனிகி3த்த காரண

ஸ்ரீகுமாரிமேத நெலெஸி3 நின்ன மந்தி3ரதி3 |

ஆ கமலப4வமுகரு பி33தெ3

ராகெ3னுத நிந்தி3ஹரோ கு3ணர

த்னாகரனெ ப3ண்ணிலளவெ கொடு3 எமகெ3 ன்மனவ ||25

 

குணரத்னாகரனே = குணங்கள் என்னும் ரத்னங்களை கொண்டிருப்பவனே

ஹே சமுத்ர ராஜனே (வருணனே)

நீ = நீ

லோகமாதெயபடெது = உலகத்திற்கே தாயான ஸ்ரீ லட்சுமி தேவியரைப் பெற்று

ஜகதேவ பாத்ரனிகெ = உலகத்திற்கு முக்கிய பாத்திரன் எனப்படும் ஸ்ரீபரமாத்மனுக்கு

இத்த காரண = (திருமணம் செய்து) கொடுத்த காரணத்தால்

ஸ்ரீகுமார ஸமேத = ஸ்ரீஹரி, லட்சுமி சமேதராக

நின்னமந்திரதி = உன் வீட்டில்

நெலஸித = வசிக்கிறான்

ஆ கமலபவ முகரு = பிரம்மதேவரே முதலான

பிடதெ = விடாமல் (தொடர்ந்து)

பராகெனுத நிந்திஹரோ = போற்றியவாறு நின்றிருக்கிறார்களோ?

பண்ணிஸலளவெ = உன்னை வர்ணிப்பது சாத்தியமா?

எமகெ சன்மனவ = எங்களுக்கு நற்புத்தியை

கொடு = கொடு.

 

பத்ய அர்த்தங்களே தெளிவாக உள்ளன.

 

பணெயலொப்புவதிலக துலசி

மணிக3ணாஞ்சித கண்ட2 கரத3லி

க்க3ணிதவீணா ஸுஸ்வரதி33ஹுதாள க3திக3ளலி |

ப்ரணவ ப்ரதி3பாத்4யன கு3ணங்க3

குணிகுணிது அதிம்ப்4ரமதி3 கா3

யனவ மாடு3வ தே3வரிஷி நாரத3ரிக3பி4மனமிபெ ||26

 

பணெயலி = நெற்றியில்

ஒப்புவ திலக = திலகத்தால் ஒளிர்ந்தவாறு

துளசி மணிகணாஞ்சித கண்ட = துளசி மணிகளால் கட்டப்பட்ட மாலையை அணிந்து ஒளிரும் கழுத்து உள்ள

கரதலி = கையில்

க்வணித = நற்சப்தத்தைக் கொண்ட

வீணாஸுஸ்வரதி = வீணையின் நற் ஸ்வ்ரத்தினால்

பஹுதாள கதிகளலி = லயத்துடன் கூடிய தாள கதிகளுடன்

ப்ரணவ ப்ரதிபாத்யன = ஓம்கார பிரதிபாத்யனான ஸ்ரீஹரியின்

குணங்கள = நற்குணங்களை

குணிகுணிது = நர்த்தனம் செய்தவாறு

அதிசம்ப்ரமதி = மிகவும் விமரிசையுடன்

காயனவ மாடுவ = பாடும்

தேவரிஷி நாரதரிகெ = நாரதரை

அபிமனிபெ = வணங்குகிறேன்.

 

நெற்றியில் திலகம், கழுத்தில் துளசிமாலை, இவற்றால் அலங்கரிக்கப்பட்டு கையில் வீணையைப் பிடித்து, பரமாத்மனின் குணங்களை வீணையால் நுடித்தவாறு, நற்ஸ்வரத்துடன் கானம் செய்தவாறு, நடனம் ஆடியவாறு ஆனந்த சமுத்திரத்தில் மூழ்கியிருக்கும் நாரதரை நான் வணங்குகிறேன்.

 

ரஸ்வதி தீரத3லி பி3

ந்னைலாமுனிக3ள நுடிகெ3 ஜட3

ஜான மஹேஷாச்யுதர லோகங்க3ளிகெ3 போகி3 |

தா கலகு3ணக3ள விசாரிஸி

கேஷவனெ பரதெ3ய்வவெந்து3

தே3ஷிஸி3 ப்4ருகு3முனிப கொட3லெமக3கி2ல புருஷார்த்த2 ||27

 

ஆ சரஸ்வத தீரதலி = சரஸ்வதி நதிக்கரையில்

பின்னயிஸலு = நிகழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருந்த

முனிகள = ரிஷிகளின்

நுடிகெ = பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரரில் யார் உத்தமர் என்று அறிந்து வரவேண்டும் என்று கேட்டதற்கு

ஜடஜாஸன = பிரம்மதேவர்

மஹேஷ = ருத்ரதேவர்

அச்யுதர = பரமாத்மன் இவர்களின்

லோகங்களிகெ போகி = உலகங்களுக்குச் சென்று

தா = தான்

சகலகுணகள = அனைத்து நற்குணங்களை

விசாரிஸெ = இந்த மூவரில் இருக்கும் குணங்களை சோதித்துப் பார்க்க

கேஷவனே பரதெய்வவெந்து = ஸ்ரீ ஹரியே சர்வோத்தமன் என்று

உபதேஷிஸித = உபதேசம் செய்த

ப்ருகுமுனிப = ப்ருகு ரிஷிகள்

எமகெ = எமக்கு

அகிள புருஷார்த்த = அனைத்து புருஷார்த்தங்களையும்

கொடலி = கொடுக்கட்டும்.

 

ரிஷிகள் அனைவரும் ஒரு யாகத்தை செய்து கொண்டிருக்க, பிரம்மா ருத்ர விஷ்ணு இவர்களில் யார் உத்தமர் என்ற அவர்களுக்குள் ஒரு விவாதம் வந்து, இந்த விஷயத்தை சோதித்துப் பார்க்க வேண்டும் என்று ப்ருகு முனிவரை வேண்ட, அவரும் அதற்கேற்ப, பிரம்ம லோகத்திற்கு வந்து பிரம்மதேவரை சோதிப்பதற்காக அவரை வணங்காதிருக்க, பிரம்மனுக்கு அபாரமான கோபம் வந்தது. ஆனாலும், தன் ஞானபலத்தினால் அதை கட்டுப்படுத்திக் கொண்டார்.

இவரில் சிறிது அபிமானம் இருக்கிறது என்று ப்ருகு ரிஷிகள் அறிந்தார்.

 

அடுத்து ருத்ரதேவரை பரிசோதிப்பதற்காக கைலாயம் வந்தார். ருத்ரரும் இவரைப் பார்த்து, அபிமானத்துடன் இவருக்கு ஆசனம் அளித்து, ஆலிங்கனம் செய்வதற்கு வர, உன் அமங்களமான ஸ்வரூபம் கொண்டவன். என்னைத் தொடாதே என்று ரிஷி கூற, ருத்ரர் கோபம் கொண்டு, சூலாயுதத்துடன் ப்ருகு ரிஷிகளைக் கொல்வதற்கு வந்தார். அந்த சமயத்தில், பார்வதி தேவி ருத்ரரை வணங்கி, பிராமணர்களை கொல்லக்கூடாது என்று வேண்டிக் கொண்டதால், ப்ருகு ரிஷிகள் உயிர் பிழைத்தார்.

 

அங்கிருந்து வைகுண்டத்திற்கு வந்து, லட்சுமி சமேதராக சயனித்திருந்த பரமாத்மனை காலால் எட்டி உதைக்க, பரமாத்மன் எழுந்து ரிஷிகளை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டான். அப்போது ப்ருகு ரிஷிகள் நினைத்தது என்னவென்றால்:

 

பிரம்ம தேவருக்கு தன்னை வணங்கவில்லை என்னும் கோபம் வந்தாலும், அதை அடக்கிக் கொண்டார். ருத்ர தேவரை ஆலிங்கனம் செய்ய வேண்டாம் என்று சொன்னதற்கு அவருக்கு வந்த கோபத்தை பார்வதி தேவி குறைத்தாள். பரமாத்மனை காலில் எட்டி உதைத்தாலும் அவர் கோபம் கொள்ளாமல், என்னிடமே மன்னிப்பு கேட்டார். ஆகையால், பரமாத்மனே சர்வோத்தமன். பிரம்மதேவர் மத்யமர். ருத்ரர் இவர்கள் இருவரைவிட குறைவானவர் என்று நிர்ணயித்து, அந்த ரிஷிகளிடம் சொல்லி, உலகத்தில் இந்த விஷயத்தை பரவச் செய்தார்.

 

இதற்கு மூலம், பாகவத 10ம் ஸ்கந்த 93ம் அத்தியாயத்தில்:

ஸரஸ்வத் யாஸ்தடே ராஜன் ருஷய: ஸத்ரமாஸத ||

விதர்க்கஸ்ஸம பூத்தேஷாம் த்ரிஷ்டதீஷேஷு கோ மஹான் ||1

 

என்னும் ஸ்லோகத்திலிருந்து,

 

முனிர்ஜகாம வைகுண்டம் யத்ரதேவோ ஜனார்த்தன: |

ஷயானம் ஸ்ரிய உத்ஸங்க பதா வக்‌ஷஸ்யதாடயத் ||8

தத உத்தாய பகவான் ஸஹ லக்‌ஷ்ம்ய ஸதாங்கதி: ||

ஸ்வதல்பாதவருஹ்யாஷு நனாமஷிரஸா முனிம் ||9

 

என்னும் 9ம் ஸ்லோகத்து வரை, இந்த மேலே கூறிய அர்த்தத்தை சொல்லியிருக்கிறார். மேலும் இந்த அத்தியாயம் முழுவதுமே இதே விஷயத்தையே சொல்லியிருக்கிறார். கிரந்தம் பெரிதாகிவிடும் என்கிற பயத்தால் அந்த ஸ்லோகங்களை இங்கு கொடுக்கவில்லை. இத்தகைய குணங்கள் நிரம்பிய ப்ருகு ரிஷிகள், நமக்கு அனைத்து புருஷார்த்தங்களையும் கொடுக்கட்டும்.

 

பி3ருஹாம்ப3க நாக்3யேயலி ஸு

முக2னு தானெனிஸி நானா

3ளுள்ள ஹவிஸ்ஸுக3ள நவரவரிகொ3ய்தீ3|

ஸுகுலாதி4ப யக்ஞபுருஷன

ம ப3ல ரூபங்க3ளிகெ3

ந்தி3ஸுவெ ஞான யஷஸ்ஸு வித்3யெ ஸுபு3த்தி4 கொட3லெமகெ3 ||28

 

பிஸருஹாம்பக = தாமரைக் கண்ணனான ஸ்ரீஹரியின்

ஆக்யெயலி = ஆணைப்படி

சுமனஸ முகனு தானெனிஸி = தேவதைகளுக்கு முகம் என்று தன்னை நினைத்துக் கொண்டு

நானா ரசகளுள்ள = பற்பல சுவைகளைக் கொண்ட

ஹவிஸ்ஸுகள = அக்னியில் ஆஹுதி கொடுக்கத் தகுதியான வஸ்துகளை

அவரவரிகொய்தீவ = இந்திராய ஸ்வாஹா என்னும் மந்திரங்களால் எந்தெந்த தேவதைகளின் பெயர்களால் அக்னியில் ஆஹுதி கொடுக்கின்றனரோ, அந்த ஹவிஸ்ஸினை

அவரவரிகொய்தீவ = அவரவர்களிடம் சென்று சேர்க்கிறான்

வசுகுலாதிப = 8 வசுக்களில் சிறந்தவனான

யக்ஞ புருஷன = அக்னி தேவனின்

அஸம பல ரூபங்களிகெ = இவனைவிட தாரதம்யத்தில் உத்தமர்களை விட்டு, மற்ற தேவதைகளில் இவனுக்கு சமமான பலரூப குணங்களைக் கொண்டவர்கள் இல்லை என்று அர்த்தம்.

இத்தகைய அக்னி தேவனை,

வந்திஸுவெ = நான் வணங்குவேன்

எமகெ = எங்களுக்கு

ஞான யஷஸ் = ஞானம், புகழ்

வித்யா சுபுத்தி = கல்வி, நல்லறிவு ஆகியவற்றை

கொடலி = கொடுக்கட்டும்.

 

ஸ்ரீபகவந்தனின் ஆணைப்படி, தேவதைகளுக்கு முக ஸ்தானீயராக இருந்து என்றால், எந்த தேவதைகளுக்கு ஆஹுதி கொடுக்க வேண்டுமென்றாலும், ‘விஷ்ணவே ஸ்வாஹா, ப்ரம்மணே ஸ்வாஹாஎன்று அக்னி முகத்தினாலேயே ஆஹுதி கொடுப்பதால், தேவமுக என்று அழைக்கப்படுகிறார். இவனின் மூலமே அனைத்து தேவதைகளுக்கும் ஆஹுதி சென்று சேர்கிறது.

 

வசு குலத்தில் சிறந்தவனான இத்தகைய அக்னிதேவரை நான் வணங்குகிறேன். இவர் எங்களுக்கு புகழ், கல்வி, நற்புத்தி, ஞானம் ஆகியவற்றைக் கொடுக்கட்டும்.

 

ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் மேதாம் யஷ: ப்ரக்ஞாம் வித்யாம் புத்திம் ஸ்ரியம் பலம்

ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்யவாஹன ||

என்னும் அக்னிதேவரின் பிரார்த்தனை மந்திரத்தால், மேற்கூறிய வரத்தைக் கொடுக்கும் அதிகாரம் அக்னிதேவருக்கு இருக்கிறது என்று தெரிகிறது.

 

அந்த மந்திர அர்த்தத்தையே தாசார்யர் இங்கு சொல்லியிருக்கிறார் என்று அறியவேண்டும்.

 

தாதனப்பணெயிந்த3 நீ ப்ர

க்2யாதியுள்ளரவத்து மக்கள

ப்ரீதியிந்த3லி படெத3வரவரிகி3த்து மன்னிஸிதெ3 |

வீதிஹோத்ரன மளெனிஸுவ ப்ர

ஸூதிஜனனி த்வத3ங்க்4ரி கமலகெ

நா துதிஸி தலெபாக்3வெனெம்ம குடும்ப3 லஹுவுது3 ||29

 

தாதனப்பணெயிந்த = தாத்தாவான பிரம்மதேவரின் ஆணைப்படி

நீ = நீ

ப்ரக்யாதியுள்ள = பெயர் பெற்ற

அரவத்து மக்கள = 60 பெண் மக்களை

ப்ரீதியிந்தலி படெது = அன்புடன் நீ பெற்று

அவரவரிகித்து = தர்ம, கஷ்யப முதலானவர்களுக்குக் கொடுத்து

மன்னிஸிதெ = மரியாதையை செய்தாய்

வீதிஹோத்ரன = அக்னிதேவருக்கு

ஸமளெனிஸுவ = சமம் எனப்படும்

ப்ரஸூதிஜனனி = ப்ரஸூதி என்னும் தாயே!

த்வதங்க்ரி கமலகெ = உன் பாத கமலங்களை

நா = நான்

துதிஸி = உன்னை வணங்கி

தலெ பாகுவெ = நமஸ்காரம் செய்கிறேன்

எம்ம = எங்கள்

குடும்ப ஸலஹுவுது = குடும்பத்தை அருள்வாயாக.

 

ப்ரஸூதி தேவியின் தாத்தாவின் ஆணைப்படி, 60 மக்களைப் பெற்றாள் என்று தாசார்யரின் வாக்கியம் இருக்கிறது.

 

ப்ரஸூதிம் மானவீம் தக்‌ஷ உப யேமேஹ்யஜாத்மஜ: ||

தஸ்யாம்ஸ ஸர்ஜதுஹித்யை: ஷோடஷாமல லோசனா: ||47

த்ரயோதஷாத்தர்மாய ததை காமக்ன யே விபு: ||

பித்ருப்ய ஏகாம் யுக்தேப்யோ பவாயைகாம் பவச்சிதே ||48

 

என்னும் பாகவத 4ம் ஸ்கந்தம் 1ம் அத்தியாயத்தால், தக்‌ஷன், ஸ்வாயம்புவ மனுவின் மகளான ப்ரஸூதியை திருமணம் செய்து 16 பெண் குழந்தைகளைப் பெற்றாள். அதில் 13 பெண் மக்களை யமதர்மனுக்கும், ஒருத்தியை பித்ருகளுக்கும், ஒருத்தியை அக்னிக்கும், ஒருத்தியை ருத்ரதேவருக்கும் கொடுத்தாள் என்று தெரிகிறது.

 

ஆனால் இதிலிருந்து பரஸ்பர விரோதம் வருகிறது.

 

ப்ராசீன பர்ஹிஸ் என்னும் ராஜனின் மக்கள் 10 பேர் ப்ரசேஸர் எனப்படுகின்றனர். தவம் செய்து பரமாத்மனிடம் வரம் பெற்று வார்க்‌ஷி என்னும் கன்னிகையை திருமணம் செய்து கொண்டனர் என்றும், அவளிடமிருந்து தக்‌ஷன், முன்னர் ருத்ரதேவருக்கு அவமானம் செய்த பாவத்திற்காக, இந்த ப்ரசீதஸனுக்கு மகனாகப் பிறந்து, பரமாத்மனைக் குறித்து தவம் செய்து, பகவந்தனின் ஆணைப்படியே பஞ்சஜன என்னும் ப்ரசேஷ்வரனின் மகளான பாஞ்ச ஜனி அல்லது அஸ்வினி என்பவளை திருமணம் செய்து, அவளில் முதலில் ஹர்யஸ்சர் என்னும் 10,000 மக்களைப் பெற்று, மேலும் வாரிசு வேண்டுமென்று தவம் செய்ய அனுப்ப, அவர்கள் அனைவரும் நாரதரின் உபதேசத்தைப் பெற்று சன்யாசிகள் ஆயினர்.

 

இந்த செய்தியைக் கேட்ட தக்‌ஷன் மிகவும் வருத்தமடைந்து, பிரம்மதேவரிடம் வேண்டி, அவர் செய்த சமாதானத்தால் திருப்தி அடைந்து, மறுபடி 1000 மக்களைப் பெற்றார். அவர்களும் நாரதரின் பேச்சைக் கேட்டு சன்யாசிகள் ஆகிவிட, தக்‌ஷன் நாரதரின் மேல் வெகு கோபம் கொண்டு, ‘உனக்கு ஒரு இருப்பிடம் என இல்லாமல், எப்போதும் அலைந்து கொண்டே இருக்கவேண்டும்என்று நாரதருக்கு சாபம் கொடுத்தார். பின் தக்‌ஷன் மறுபடி பிரம்மனிடம் வந்து நடந்த விஷயங்களை சொல்லி வருத்தப்பட்டார்.

 

பிரம்மன் தக்‌ஷனை சமாதானப்படுத்தி, இனி பெண் குழந்தைகளைப் பெறு என்றார். அதைப் போலவே, தக்‌ஷன்:

 

தத: ப்ராஜேதஸோஸிக்ன்யா மனுனீத: ஸ்வயம்புவா ||

ஷஷ்டிம் ஸஞ்சனயாமாஸ துஹித்ரு: பித்ருவத்ஸலா: ||1

ததௌஸ தஷதர்மாய கஷ்யபாய த்ரயோதஷ ||

காலஸ்ய நயனே யுக்தா: ஸப்த விம்ஷதி மிந்தவே ||2

பூதாங்கிர: க்ருஷாஷ்வேப்யோ த்வேத்வேதார்க்‌ஷ்யார்ய சாபரா: ||

 

என்னும் பாகவத 6ம் ஸ்கந்தம் 6ம் அத்தியாயத்தின் வாக்கியங்களால், அந்த ப்ரசேதஸரின் மகனான தக்‌ஷன், பிரம்மதேவரின் அனுமதியைப் பெற்று, தன் மனைவியான அஸிக்னியில் 60 பெண் குழந்தைகளைப் பெற்றான். அதில்

 

* 10 பேரை யமதர்மனுக்கும்,

* 13 பேரை கஷ்யபருக்கும்,

* சந்திரனுக்கு காலத்தைக் குறிப்பதான அஸ்வின்யாதி 27 பேரையும்,

* பூத, அங்கிர, க்ருஷாஸ்வ என்னும் மூவருக்கு இரண்டிரண்டு பேரையும்,

* மற்ற நால்வரை மறுபடி கஷ்யபருக்கே கொடுத்தான் என்று அறிகிறோம்.

 

ப்ராசேதஸனே தக்‌ஷன் என்னும் விஷயத்தில், 4ம் அத்தியாயம் 17ம் ஸ்லோகம்: தேப்யஸ் தஸ்யா மபூத்ராஜன் தக்‌ஷ: ப்ராசேதஸ: கிலஎன்னும் வாக்கியமே ஆதாரம். ஆனால், இங்கு அஸிக்னீ என்பவள் 60 பெண் குழந்தைகளை பெற்றாள் என்றிருக்கிறார்.  ப்ரஸூதி என்பதற்கு ஆதாரம் என்னவெனில்: தேவதைகள் அனைவரும் சாம்ஷர்கள், மற்றும் நியத பதிபத்னி ஆனவர்கள் ஆகையால், இந்த தேவதைகள் அனைவரும் மூலரூபத்தினால் தமக்கு யார் சதியரோ, அவதாரங்களிலும் அவரையே அடைவதற்காக பிறக்கின்றனர் என்று சொல்லியிருப்பதால், தக்‌ஷனின் மனைவியான ப்ரஸூதியே, பஞ்சஜனனின் மகளாக அஸிக்னி என்னும் பெயரில் பிறந்தாள் என்று அறிய வேண்டும்.

 

இந்திரன் வாலியாக இருந்தபோது, சசி தாரையாக பிறந்தாள் என்னும் இது போன்ற ஆதாரங்களே இதற்கும் ஆதாரம் என்று அறியவேண்டும். பிரம்மதேவரின் ஆணையினாலேயே 60 பெண் குழந்தைகளை பெற்றதால், தாதனப்பணெயிந்த என்று தாசார்யர் கூறுகிறார். தாரதம்யத்தில் ப்ரஸூதி, ப்ருகுரிஷி, அக்னி, இவர்களுக்கு சமமானவள். இத்தகைய ப்ரஸூதி தேவியை வணங்குகிறேன், நம் குடும்பங்களை ரக்‌ஷிக்கட்டும் என்கிறார்.

 

ஷதத்3ருதிய ஸுதரீர்வருளித3

ப்ரதிம ஸுதபோனிதி43ளபரா

ஜிதன ஸுஸமாதி4யொளொலிஸி மூர்லோகதொ3ளு மெரெவ |

வ்ரதிவரமரீசி அத்ரி புலஹா

க்ரது வஸிஷ்ட புலஸ்த்ய வைவ

ஸ்வதனு விஷ்வாமித்ர ரங்க்3ரிரங்க்3ரிகெ3ரகு3வெனு ||30

 

ஷதத்ருதிய = பிரம்மதேவரின் மக்களான 9 பேரில்

ஈர்வருளிது = நாரதர், ப்ருகு ரிஷிகள் இவர்கள் இருவரையும் முந்தைய கக்‌ஷையில் சேர்த்து விட்டதால், இவர்களைத் தவிர

மிக்க அப்ரதிம = ஒப்புமையில்லாத

ஸுதபோநிதிகள = உத்தமமான தவமே நிதியாக உள்ள

அபராஜிதன = என்றும் யாராலும் வெல்ல முடியாதவனான ஸ்ரீபரமாத்மனை

ஸுஸமாதியொளு ஒலிஸி = சமாதி நிலையில் இருந்து தவம் செய்து, அவனை மகிழ்வித்து

மூர்லோகதொளு மெரெவ = 3 லோகங்களிலும் வீற்றிருக்கிறான்.

ப்ரதிவர = விஷ்ணு தீக்‌ஷை என்னும் வ்ரத உள்ளவர்களில் சிறந்தவர்களான, மரீசி, அத்ரி, புலஹ, க்ரது, வசிஷ்ட, புலஸ்த, வைவஸ்தமனு, விஷ்வாமித்ர, அங்கீரஸ ஆகியோரின்

அங்க்ரிகெரகுவேனு = பாதங்களை நான் வணங்குகிறேன்.

 

பிரம்மதேவரின் மக்களில் நாரதர் 14ம் கக்‌ஷையிலும், ப்ருகு ரிஷிகள் 15ம் கக்‌ஷையிலும் சேர்ந்தவர்கள். மற்ற மரீசி, அத்ரி, அங்கிர, புலஸ்த, புலஹ, க்ரது, வசிஷ்ட என இவர்கள் ஏழு பேர்களும், விஷ்வாமித்ரர், வைவஸ்வத மனு இவர்களின் பாத பத்மங்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். மரீச்யாதிகள் 16ம் கக்‌ஷயை சேர்ந்தவர் ஆவார்.

 

த்வாத3ஷாதி3த்யரொளு மொத3லிக

நாத3 மித்ர ப்ரவஹமானினி

யாத3 ப்ராவஹி நிர்ருதி நிர்ஜர கு3ருமஹிளெதாரா |

ஈ தி3வௌகரனுதி3னாதி4

வ்யாதி4 உபடளவளிது3 விபு33ரி

காத3ரதி3 பாலிலி மங்கலவாவகாலத3லி ||31

 

த்வாதஷாதியரொளு = 12 ஆதித்யர்களில்

மொதலிகனாத = உருக்ரம என்னும் சாட்சாத் பரமாத்மனின் அவதாரனான சூர்யன் ஒருவன், 12ம் கக்‌ஷைக்கு சேர்ந்த விவஸ்வான் என்னும் சூரியன் ஒருவன் என இவர்கள் இருவரைத் தவிர மற்ற சூரியர்களைவிட சிறந்தவனான

மித்ர = மித்ர நாமக சூரியன்

ப்ரவஹமானினியாத = ப்ரவஹ வாயுவின் மனைவியான ப்ராவஹி

நிரருதி,

நிர்ஜரகுரு மஹிளெ = தேவ குருவான ப்ருஹஸ்பத்யாசார்யரின் மனைவியான தாரா,

ஈதிவௌகஸரு = இந்த தேவதைகள்

அனுதின = தினந்தோறும்

ஆதி = மனோவியாதி

வ்யாதி = சரீர சம்பந்தமான நோய்கள்

ருபடள = ஆபத்துகள்

இவுகளன்னுளிது = பரிகரித்து

விபுதரிகெ = ஞானிகளுக்கு

ஆவகாலதலி = அனைத்து காலங்களிலும்

ஆதரதி = மரியாதை பக்தியுடன்

அகிள மங்களவ = அனைத்து மங்களங்களையும்

கொடலி = கொடுக்கட்டும்.

 

மித்ர என்னும் சூரியன், ப்ரவஹனின் மனைவி ப்ராவஹி, நிரருதி, குரு பத்னி தாரை -- இந்த தேவதைகள், ஞானிகளுக்கு ஆதியையும், வியாதியையும் மற்றும் அவ்வப்போது வரும் ஆபத்துகளையும் பரிகரித்து, எப்போதும் மங்களங்களையும் கொடுக்கட்டும்.

 

மானனிதி43ளெனிஸுவ விஷ்வ

க்ஸேன த4னப க3ஜானனரிகெ3

மானரெம்ப4த்தைது3 ஸேஷஷதஸ்த2 தே3வக3

கானமிஸுவேனு பி33தெ3 மித்2யா

ஞான களெது3 ஸுபோ3தவித்து

தா3னுராக3தி3 எமகெ3 பரிபாலிலி ம்பத3||32

 

மானனிதிகளெனிஸுவ = மான என்றால், மரியாதை கொடுக்கத் தகுதியான  நற்சாஸ்திரங்கள். அல்லது, பகவத் விஷயமான ஞானம், உலகப் புகழ் பெற்றது. இவையே நிதியாகக் கொண்டவர். இத்தகைய

விஷ்வக்சேன = ப்ராதன வாயு குமாரன்,

தனபா = குபேரன்

ஆத்யரிகெ = ஆதி என்னும் சொல்லால், அஸ்வினி தேவதைகளையும், கணபதியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அனிமிஷரிகெ = தேவதைகளுக்கு

ஸமானரு = சமமானவர்கள்

ஷதஸ்த தேவகண = ஸோமபானத்தைக் குடிக்கத் தகுதியானவர்களான 100 தேவதைகளில், மேற்கூறிய 15 பேர்களை விட்டு

சேஷ = மற்ற

எம்பத்தைது = 85 தேவதைகள், இவர்களை

பிடதெ ஆநமிஸுவேனு = விடாமல் வணங்குவேன்

மித்யாஞானவ களெது = ஏதேனும் தெய்வ சங்கல்பத்தினால் மித்யா ஞானம் வந்தால், அதனை பரிகரித்து

ஸுபோதவித்து = உத்தம ஞானத்தைக் கொடுத்து

ஸதானுராகதலி = எப்போதும்

எம்ம = எம்மை

ஸம்பதவ = பகவத்பக்தி ரூபமான சம்பத்துகளை

பரிபாலிஸலி = அருளட்டும்.

 

விக்வக்ஸேன, குபேர, கணபதி, அஸ்வினி தேவதைகள், இவர்களுக்கு சமானமான, ஸோமபானத்தை குடிப்பதற்கு தகுதியான 100 தேவதைகளில், மேற்கூறிய உத்தம தேவதைகளை விட்டு 85 பேர் இவர்கள் அனைவரும், எனக்கு என் வினைப்பயனால் மித்யா ஞானம் வந்தாலும், அதனை பரிகரித்து, உத்தம ஞானத்தைக் கொடுத்து அருளட்டும்.

 

பூ4தமாருத வாந்தரபி4மா

நி தபஸ்வி மரீசிமுனி புரு

ஹூதனந்த3ன பாத3மானி ஜயந்தரெமகொ3லிது3 |

காதரவ புட்டிதெ3 விஷயதி3

வீதப4யன பதாப்3ஜத3லி விப

ரீத பு3த்தி4யனீயதெ3 தா3 பாலிலி எம்ம ||33

 

பூதமாருத வாந்தரபிமானி = பூத வாயுவின் அந்தராபிமானியான

தபஸ்வி மரீசிமுனி = பிரதான வாயுபுத்ரனான மரீசி

புருஹூதனந்தன = இந்திர குமாரனான

பாதமானி = பாதத்திற்கு அபிமானியான

ஜயந்தரு = ஜயந்த ; இவர்கள் இருவரும்

எமகொலிது = எமக்கு தரிசனம் அளித்து

விஷயதி = அல்ப சுகங்களில்

காதரபுட்டிஸதெ = அபிமானம் வராமல்

வீதபயன = என்றும் பயம் இல்லாதவனான பரமாத்மனின்

பதாப்ஜதலி = பாத கமலங்களில்

விபரீத புத்தியன்னீயதெ = அன்யதா ஞானத்தைக் கொடுக்காமல் (நானே அவன் என்னும் ஞானத்தைக் கொடுக்காமல்)

எம்ம = நம்மை

ஸதா = எப்போதும்

பாலிஸலி = அருள் பாலிக்கட்டும்.

 

பூத வாயு என்னும் பஞ்ச பூதத்திற்கு சேர்ந்த ஜடமான காற்றுக்கு அபிமானி ப்ரவஹ வாயு. அவர் அந்தர்யாமி மரீசி. மரீசி என்றால் பிரம்மதேவரின் மக்களான மரீசி, அத்ரி முதலான 7 பேரில் ஒருவரான மரீசி அல்ல. அவர் 17ம் கக்‌ஷையில் வருபவர். இவர் யாரென்றால்:

 

மரீசி ஷப்தேன ப்ரதான வாயுபுத்ரோவிவக்‌ஷித: ||

ப்ரதானவாயு ஜோ பூத வாயுர் நாம்னா மரீசக: ||

இதிகீதா தாத்பர்யோக்தே: மரீசிர்மருதாமஸ்மீதி கீதாயாஞ்ச ||

 

என்னும் தாரதம்ய சங்க்ரஹ வாக்கியத்தாலும் கீதா, தாத்பர்ய, வாக்கியங்களாலும், மரீசி என்றால் இங்கு பிரதான வாயுவின் மகனை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஆதாரம், கீதா தாத்பர்யத்தில் பிரதான வாயுவின் மகன் மரீசி என்னும் பூத வாயுவின் அபிமானி என்று சொன்ன வாக்கியத்தாலும், கீதையின் விபூதி அத்தியாயத்தில் மரீசிர் மருதாமஸ்மிவாயுகளில் என்னை மரீசியாக அறி என்று சொல்லியிருக்கும் வாக்கியத்தாலும், இந்த மரீசி வாயு மகனான மரீசி என்று அறிய வேண்டும். இந்த மரீசி, ஜயந்தன் இருவரும் நமக்கு, விஷய சுகங்களில் ஆசையை உண்டாக்காமல், பரமாத்மனில் அன்யதா ஞானத்தைக் கொடுக்காமல், நம்மை எப்போதும் காக்கட்டும்.

 

3லிமொத3லு ப்தேந்த்ரரிவரிகெ3

கலிதகர்மஜ தி3விஜரெம்ப3ரு

உளித3 ஏகாத3ஷ மனுக3ளு உசத்ய ச்யவனமுக2 |

குலரிஷி3ளெம்ப3த்து யதி ஹைஹய

இளெய கம்பனகெ3ய்த3 ப்ருது ம

ங்க3ல பரீக்‌ஷித நஹுஷ நாபி4 யயாதி ஷஷபிந்து3 ||34

 

பலிமொதலு சப்தேந்த்ரரிவரிகெ = 8ம் மன்வந்திரத்திற்கு இந்திரனான பலி முதற்கொண்டு, அதற்கு அடுத்து வரும் இந்திரர்கள் மொத்தம் 7 பேர்.

இவரிகெ = இவர், மற்றும் அடுத்த 3 பத்யங்களால் விளக்கப்படும் சக்ரவர்த்தி ஆகியோர்

கலித கர்மஜ திவிஜ ரெம்பரு = ஞானபூர்வகமாக கர்மங்களை செய்து, தேவத்வம் பெற்றனர் ஆகையால், கர்ம தேவதைகள் எனப்பட்டனர். அவர்கள் யார்யார் என்றால்:

உளித ஏகாதஷ மனுகளு = 14 மனுகளில் மேற்கூறிய பரமாத்மனின் அவதாரமான தாபஸ மனு, ஸ்வாயம்புவ மனு, வைவஸ்வத மனு இந்த மூவரையும் விட்டு, மற்ற 11 மனுகள்

உசத்ய ச்யவனமுக = சுக்ராசார்யர் முதலான,

குலரிஷிகளெம்பத்து = ரிஷி குலத்தவர்கள் 80 பேர் என்று தாசார்யர் சொல்லியிருக்கிறார். ரிஷீணாம் ஷதமேவச’ 100 ரிஷிகள் என்று பிரமாணம் இருக்கிறது. மற்றும் இதே சந்தியில் 49ம் பத்யத்தில், 100 கோடியில் 100 பேர் குறைவு என்று தாசார்யரே சொல்லியிருக்கிறார். இந்த வாக்கியங்களுக்கு பரஸ்பரம் விரோதம் வருகிறது. இதன் பொருள்:

 

மொத்தம் ரிஷிகள் 100 கோடி பேர். இதில் 100 ரிஷிகள் ப்ரதான தேவதைகளில் சேர்ந்தவர்கள். 100 கோடிக்கு 100 பேர் தாரதம்யத்தில் குறைவானவர்கள் என்று கருத்து. தாசார்யர் இங்கு, குலரிஷிகள் 80 பேர் என்று சொல்லியிருப்பதால், ப்ருகு குல, காஷ்யப, கௌஷிக என்னும் புகழ் பெற்ற குலத்தவர்கள் 80 ரிஷிகள் என்றும், குல பிரஸித்தி இல்லாத கோத்ரங்களை துவக்காத ரிஷிகள் 20 பேர், ஆக மொத்தம் 100 ரிஷிகள், கர்ம தேவதைகள் என ஆகிறது. குல ரிஷிகளை மட்டும் சொல்லி, சாதாரணமான 20 ரிஷிகளை மட்டும் அங்கு சொல்லவில்லை என்று அறியவேண்டும்.

 

49ம் பத்யத்தில், 100 என்று சொல்லியிருப்பதால், அங்கு 20ம் சேர்த்து சொல்லியிருக்கிறார் என்று அறியவேண்டும்.

 

ஹைஹய = ஹைஹய தேசத்து அரசனான கார்த்தவீர்யார்ஜுன

இளெயகம்பனகெய்த = பூமியை வதம் செய்வதற்காக அவளை பயத்தில் நடுநடுங்கச் செய்த

ப்ருது = ப்ருது சக்ரவர்த்தி

மங்கள = பூ புத்ரனான அங்காரகன்

பரீக்‌ஷித், நஹுஷ, நாபிராஜன், யயாதி, ஷஷிபிந்து.

 

ஓதி3ஸுவ கு3ருக3ளனெ ஜரிது3

ஹோத3ரரிகு3ப தே3ஷிஸிதி3 மஹ

தா3தி3காரண ர்வகு3ம்பூர்ண ஹரியெந்து3

வாதி3ஸுவி த்வத்பதிய தோரெ

ந்தா33னுஜ பெகொளலு ஸ்த2ம்பதி3

ஸ்ரீத3னாக்‌ஷண தோரிஸி3 ப்ரஹ்லாத3 லஹெம்ம ||35

 

ஓதிஸுவ குருகளனு = தனக்கு வித்யா குருகளான ஷண்டாமர்கரரை

ஜரிது = புறக்கணித்து

ஸஹோதரரிகெ = தன் நண்பர்களுக்கு

மஹதாதிகாரண = மஹத் தத்வாபிமானியான பிரம்மாதி தேவதைகளுக்கு மூல காரணன்

ஸர்வகுண ஸம்பூர்ணன் = அனைத்து நற்குணங்களையும் முழுமையாகப் பெற்றவன்

ஹரியெந்து = ஸ்ரீஹரி என்று

உபதேஷிஸி = உபதேசம் செய்தான்

வாதிஸுவ = ஹரியே சர்வோத்தமன் என்று தன் தந்தையிடம் வாதிட்ட பிரகலாதனைக் குறித்து

தத்பதிய தோரெந்து = ஹரியே சர்வோத்தமன் என்று சொல்கிறாயே? உன் ஸ்வாமி எங்கு இருக்கிறான்? காட்டு என்று,

ஆ தனுஜ = ஹிரண்யகசிபு

பெஸகொளலு = கோபப்பட்டு கேட்க

ஸ்தம்பதி = கம்பத்தில்

ஸ்ரீதன = மோட்சம் என்னும் ஐஸ்வர்யத்தைக் கொடுக்க வல்ல ஸ்ரீ நரசிம்ம ரூபியான ஸ்ரீஹரியை

ஆக்‌ஷண தோரிஸித = அதே நொடியில் காண்பித்த

பிரஹ்லாத = பிரகலாதனே

ஸலஹெம்ம = எம்மைக் காப்பாற்று

 

தைத்ய குருபுத்ரரான ஷண்டாமர்கர், ஜீவ பிரம்மருக்கு ஐக்ய லட்சணங்கள் இருக்கின்றன என்று உபதேசம் செய்ய, அதனை நிராகரித்து,

 

* ஹரியே சர்வோத்தமன்,

* பிரம்மாதிகள் அனைவரும் அவன் அதீனத்தில் இருப்பவர்கள்,

* நாம் அனைவரும் அவனின் தாசர்கள் என்று அறிந்து அவனை வணங்கினால் முக்தி ஆகிறது

 

என்றும், பிரகலாதன் தன் நண்பர்களுக்கு உபதேசம் செய்தான்.

 

பிரகலாதனின் தந்தையான ஹிரண்யகசிபு என்னை விட தெய்வம் வேறு யாரும் இல்லை. அப்படியிருந்தால், உன்னை காப்பாற்றட்டும். நான் உன்னை இப்போது கொல்கிறேன்என்று ஆயுதபாணியாக வர, அந்த பிரகலாதனின் வாக்கியத்தை உண்மையாக்குவதற்காக ஸ்ரீஹரி, நரசிம்ம ரூபத்தால், கம்பத்திலிருந்து வந்து, ஹிரண்யகசிபுவைக் கொன்றான். இப்படி தன் தந்தைக்கு பரமாத்மனைக் காட்டிய பிரகலாதன், நம்மை காப்பாற்றட்டும்.

 

ஷதகெ ங்கேதுள்ள ப்ரீய

வ்ரத ப4ரத மாந்தா4த புண்யா

ஸ்ரிதரு ஜய விஜயாதி33ளு க3ந்த4ர்வரெண்டு ஜன |

ஹுதவஹஜ பாவக னாதன

பித்ருக3ளேள்வரு சித்ரகு3ப்தரு

ப்ரதிதி3 பாலிலி தம்மவனெந்து3 எனகொ3லிது3 ||36

 

ஷதகெ சங்கேதுள்ள = 100 எண்ணிக்கையில் சேர்ந்த

ப்ரியவ்ரத,

பரத = துஷ்யந்த பரத

மாந்தாத = இவர்களே முதலான

புண்யாஸ்ரிதரு = புண்யத்தையே பெற்றிருக்கும் சக்ரவர்த்திகள்

ஜயவிஜயாதிகளு = ஜயவிஜயர்கள்

கந்தர்வரெண்டு ஜன = 8 கந்தர்வர்கள்

ஹுதவஹஜ = ப்ரதான அக்னியின் மகனான பாவக

ஸனாதன = எப்போதும் குமாரனாக இருக்கும் பிரம்மதேவரின் மக்களான ஸனகாதி நால்வரில் காமனின் அம்சத்தைக் கொண்ட சனத்குமாரரைத் தவிர மற்ற சனக, சனந்தன, சனாதன என்னும் மூவர்

பித்ருகளு ஏள்வரு = 7 பேர் பித்ருகள்

சித்ரகுப்தரு,

இவர்கள் அனைவரும் தேவ குலத்தில் பிறந்து எந்த விதமான அதிபத்யமும் இல்லாமல், கர்மத்தையே முக்கியம் என்று அறிந்து செய்து கொண்டிருக்கும் கர்ம தேவதைகள். இவர்கள்

எமகொலிது = நமக்கு தரிசனம் அளித்து

தம்மவனெந்து = தம்மை சேர்ந்தவர்கள் என்று அறிந்து

ப்ரதிதிவச பாலிசலி = தினந்தோறும் நம்மை காப்பாற்றட்டும்.

 

வாவாலய ஷில்பி விமலஜ

லாஷயக3ளொளு ரமிப ஔஷதி4

பே4ஷ ரவிக3ள ரிபுக3ளெனிஸுவ ராஹுகேதுக3ளு |

ஸ்ரீஷபத3பந்தா2ன தூ3மா

ர்ச்சீர தி3விஜரு கர்மஜரிகெ3

தா3 மான தி3வௌகரு கொட3லெமகெ3 மங்க3லவ ||37

 

வாஸவாலய = இந்திர லோகத்தின்

ஷில்பி = சிற்பியான விஷ்வகர்ம

விமல ஜலாஷயகளொளு = மந்தாகினி (ஆகாஷகங்கை) முதலான தூய்மையான நீரில்

ரமிப = ஜலக்ரீடைகளை செய்து கொண்டிருக்கும் ஊர்வசி முதலான அப்ஸர ஸ்த்ரீயர்கள்

பேஷரவிகள = சந்திர சூரியர்களின்

ரிபுகளெனிஸுவ = எதிரிகள் எனப்படும்

ராஹு கேதுகளு = ராகு கேது ஆகியோர்

ஸ்ரேஷ = லட்சுமிபதி

பத = வசிப்பிடமான வைகுண்டத்திற்கு

பந்தான = மார்க்கங்களான

தூமார்ச்சீர = தூம (புகை) மார்க்கம், அர்ச்சிர மார்க்கm என்னும் இரு மார்க்கங்கங்களுக்கு அபிமானிகளான

திவிஜரு = தேவதைகள்

கர்மஜரிகெ = கர்ம தேவதைகளுக்கு

ஸதா = எப்போதும்

ஸமானரு = சமம் எனப்படுகிறார்கள்

திவௌக்ஸரு = இத்தகைய தேவதைகள்

எமகெ மங்களவ கொடலி = எமக்கு மங்களத்தைக் கொடுக்கட்டும்.

 

த்3யுனதி3 ஷாமல ங்க்யெ ரோஹிணி

4னப பர்ஜன்ய நனிருத்த4

வனிதெ பிரஹ்மாண்டா3பி4மானி விராடதே3வியர |

நெனெவெனானலவிந்த3 தே3வா

நன மஹிளெ ஸ்வாஹாக்2யராலோ

சனெ கொட3லி நிர்விக்4னதி3ம் ப4கவத்3 கு3ணங்க3ளலி ||38

 

த்யுனதி = கங்கை

ஷாமல = யமதேவரின் மனைவி

சஞ்ஞா = சூரியனின் மனைவி

ரோஹிணி = சந்திரனின் மனைவி

கனப = மேகாபிமானியான

பர்ஜன்ய = பர்ஜன்ய என்னும் சூரியன்

அனிருத்தன வனிதெ = அனிருத்தனின் மனைவியான

பிரம்மாண்டாபிமானி = பிரம்மாண்டாபிமானியான

விராட் தேவியர = விராட் என்னும் பெயருள்ள தேவி

இவர்களை, இவர்களைவிட குறைவான கக்‌ஷையை சேர்ந்த

தேவனன மஹிளெ = தேவதைகளுக்கு முகமான அக்னியின் மனைவியான

ஸ்வாஹாக்யரு = ஸ்வாஹா தேவியர். இவரை நான்

நலவிந்த = மிகவும் மகிழ்ச்சியுடன்

நெனெவெ = நினைக்கிறேன்

பகவத் குணங்களலி = பகவத் குணங்களில்

நிர்விக்னதிம் = நிர்விக்னத்தால் (எவ்வித தடைகளும் இன்றி)

ஆலோசனெ = சிந்திக்கும் சக்தியை எனக்குக் கொடுக்கட்டும்.

 

விதி2பிதன பாதா3ம்பு3ஜக3ளிகெ3

மது2பனந்தெ விராஜிப அமல

உத3கக3ளிகெ3 தா3பி4மானியு எந்தெ3னிஸிகொம்ப3 |

பு34கெ நா வந்திஸுவெ ன்மோ

3தி3 நிரந்தர ஒலிது3 எமக3

ப்4யுத3ய பாலிலெந்து3 பரமோத்ஹதி3 அனுதி3னதி3 ||39

 

விதிபிதன = பிரம்மதேவரின் தந்தையான பரமாத்மனின்

பாதாம்புஜகளிகெ = பாத கமலங்களில்

மதுபனந்தெ = தேனீயைப் போல

விராஜிப = வீற்றிருக்கும்

அமல = நிர்மலமான

உதககளிகெ = தண்ணீருக்கு

ஸதா = எப்போதும்

அபிமானி எந்தெனிஸிகொம்ப = அபிமானி என்று சொல்லிக் கொள்ளும்

புதகெ = புதனுக்கு

எமகெ = நமக்கு

நிந்தர ஒலிது = நித்யத்திலும் ப்ரீதனாகி

அப்யுதய = பக்தி வ்ருத்தி ஆகியவற்றை

பாலிஸலெந்து = கொடுக்கட்டும் என்று

அனுதினதி = தினந்தோறும்

பரமோத்ஸஹதி = மிகவும் உற்சாகத்துடன்

ஸம்மோததி = மகிழ்ச்சியுடன்

நா வந்திஸுவெ = நான் வணங்குகிறேன்.

 

தேனீக்கள் எப்படி மலர்களிலேயே இருக்கின்றனவோ, அப்படி, பரமாத்மனின் பாத கமலங்களில் நிலைத்திருந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும், புதனுக்கு நமஸ்காரம் செய்கிறேன். அவன் தினந்தோறும் நமக்கு தரிசனம் அளித்து, ஞான பக்தி ஆகியவை வளருமாறு செய்யட்டும்.

 

ஸ்ரீவிரிஞ்சாத்யமர மனகெ3 நிலு

காவகாலகு ஜனனரஹிதன

தா ஒலிஸி மக3னெந்து3 முத்தி3ஸி லீலெக3ள நோள்ப |

தே3வகிகெ3 வந்தி3பெ யஷோதா3

தே3விகா3னமிஸுவெனு பி33தெ3 க்ரு

பாவலோகனதி3ந்த3 லஹுவுதெ3ம்ம ந்ததிய ||40

 

ஸ்ரீ = ரமாதேவி

விரிஞ்சாத்யமர = பிரம்மதேவர் முதலான தேவதைகளின்

மனகெ = மனதிற்கு

நிலக = புரியாதவாறு வெகு தூரத்தில் உள்ள

ஆவகாலகெ = எந்த காலத்திலும்

ஜனனரஹித = பிறப்பு இல்லாதவனான ஸ்ரீஹரியை

தாவலிஸி = தன்னை மெச்சுமாறு ஆக்கிக்கொண்டு

மகனெந்து முத்திஸி = மகன் என்று உச்சி மோந்து

லேலெகள = பால லீலைகளை

நோள்ப = பார்க்கும்

தேவகிகெ = தேவகியை

வந்திபெ = வணங்குகிறேன்

யஷோதா தேவிகெ = யசோதா தேவிக்கு

ஆனமிஸுவேனு = நன்றாக வணங்குவேன்

எம்ம சந்ததிய = நம் வம்சத்தை

க்ருபாவலோகனதிந்த = கருணைப் பார்வையால் பார்த்து

பிடதெ சலஹுவுது = கைவிட்டு விடாமல் காப்பாற்றட்டும்.

 

ஸ்ரீபரமாத்மன், ரமா பிரம்மாதிகளின் மனதிற்கும்கூட புலப்படாதவன். என்றைக்கும் பிறப்பு இல்லாதவன். அப்படிப்பட்டவனை, தன் மகனாகப் பெற்று, அவனைக் கொஞ்சி, அவன் பால லீலைகளைக் கண்டு மகிழ்ச்சியடையும் தேவகியையும், யசோதையையும், நான் வணங்குகிறேன். அவர்கள் நம் சந்ததியை எப்போதும் கருணைக் கண்களால் பார்த்து எம்மை காப்பாற்றட்டும்.

 

பாமரரனு பவித்ரகெ3ய்ஸு

ஸ்ரீமுகுந்த3ன விமலமங்க3

நாமக3ளிக3பி4 மானியாத3 உஷாக்2யதே3வியரு |

பூ4மியொளகு3ள்ளகி2ல சஜ்ஜன

ராமயாதி33ளளிது3 லஹலி

ஆ மருத்தன மனெய வைத்3யர ரமணி ப்ரதிதி3னதி3 ||41

 

பாமரர பவித்ரகெய்ஸுவ = பாமர மக்களை பவித்ரமாக ஆக்கும்

ஸ்ரீமுகுந்தன = ஸ்ரீமுகுந்தனின்

விமல மங்கள நாமகளிகெ அபிமானியாத = பவித்ரமான மங்களகரமான பெயருக்கு அபிமானியான

ஆ மருத்தனமனெய = தேவேந்திரனின் இருப்பிடமான ஸ்வர்க்கத்தின்

வைத்யர = வைத்தியரான அஸ்வினி தேவதைகளின்

ரமணி = மனைவியான

உஷாக்யதேவியரு = உஷாதேவி

பூமியொளகுள்ள = பூமியில் உள்ள

அகிள சஜ்ஜனர = அனைத்து சஜ்ஜனர்களையும்

ஆமயாதிகள = அனைத்து விதமான நோய்களையும்

அளிது = பரிகரித்து

ஸலஹலி = அருளட்டும்.

 

குதர்க்கமாக சிந்திப்பவர்களையும் பவித்ரராக மாற்றும் பரம மங்களகரமான ராம கிருஷ்ணாதி பகவத் நாமங்களுக்கு அபிமானியான, தேவ வைத்தியரான அஸ்வினி தேவதைகளின் மனைவியான உஷாதேவியர், அனைத்து சஜ்ஜனர்களின் நோய்களை பரிகரித்து எமக்கு அருளட்டும்.

 

புருடலோசன நின்ன கத்தோ3யி

தி3ரலு ப்ரார்த்திஸெ தே3வதெக3ளு

த்தரவலாலிஸி தந்த3 வரஹாரூப தானாகி3 |

4ரணி ஜனனியெ த்வத்பதா3ப்3ஜகெ

எரகி3 பி3ன்னயிஸுவெனு பாத3

ஸ்பருஷ மொத3லாத3கி2ல தோ3ஷக3ளெணிஸதி3ரு எந்து3 ||42

 

தரணி ஜனனி = ஹே பூமிதேவியே,

புருடலோசன = ஹிரண்யாக்‌ஷன்

நின்ன = உன்னை

கத்தோயிதிரலு = திருடிக் கொண்டு கடலுக்குள் போக

தேவதெகளு பிரார்த்திஸெ = தேவதைகள் வேண்ட

உத்தரவலாலிஸி = அவர்களின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து

தானு = ஸ்ரீஹரி

வராஹ ரூபதானாகி = வராக ரூபம் எடுத்து

தந்த = பூமியை மறுபடி மேலெடுத்து வந்தான்

த்வத்பதாப்ஜகெ = இத்தகைய உன் பாத கமலங்களுக்கு

எரகி = வணங்கி

பாதஸ்பர்ஷ = பாத ஸ்பரிசம் முதலான

அகிள தோஷகள = அனைத்து தோஷங்களையும்

எணிஸதிரு = எண்ணாமல், என்னை மன்னித்து விடுமாறு

பின்னயிஸுவேனு = வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.

 

ஹே பூமிதாயே, ஹிரண்யாக்‌ஷன் உன்னை அபகரித்து கடலில் எடுத்துப் போக, பிரம்மாதிகளால் வணங்கப்பட்டு ஸ்ரீஹரி, வராக ரூபத்தினால் ஹிரண்யாக்‌ஷகனை சம்ஹரித்து, உன்னை மறுபடி மேலெடுத்து நிறுத்தினான். இத்தகைய உன் பாத கமலங்களை நான் வணங்குவேன். என் பாத ஸ்பர்ஷாதி தோஷங்களை மன்னித்து அருள்வாயாக என்று வேண்டிக் கொள்கிறேன்.

 

ஸமுத்ரவஸனேதேவி பர்வதஸ்தன மண்டிதெ |

விஷ்ணுபத்னி நமஸ்துப்யம் பாதஸ்பர்ஷம் க்‌ஷமஸ்வமே ||

 

என்னும் ஸ்லோக அர்த்தத்தையே தாசார்யர் இங்கு சொல்லியிருக்கிறார்.

 

வனதி3னெ வராத்3ரி நிசய

ஸ்த2ன விராஜிதெ சேதனா சே

தனவிதா4ரகெ33ந்த3 ரஸ ரூபாதி3 கு3ணவபுஷெ |

முனிகுலோத்தம கஷ்யபன நிஜ

தனுஜெ நினகா3னமிபெ என்னவ

கு3ணக3ளெணிதெ3 பாலிபுது3 பரமாத்மனர்த்4தாங்கி3 ||43

 

வனதிவஸனெ = சமுத்திரமே வஸ்திரமாக உள்ள

வராத்ரி நிசயஸ்தன விராஜிதெ = சிறந்த பர்வதங்களின் சமூகத்தையே ஸ்தனமாகக் கொண்டிருக்கும்

சேதனாசேதன விதாரகெ = ஜட சேதனங்களை தரித்திருப்பவளே

கந்த ரஸ ரூபாதி = வாசனை, சுவை, ரூபாதி

குணவபுஷெ = குண ஸ்வரூபளே

முனிகுலோத்தம = ரிஷிகுல ஸ்ரேஷ்டரான

கஷ்யபன = கஷ்ய ரிஷிகளின்

நிஜதனுஜெ = மகளே

பரமாத்மன = வராக ரூபியான ஸ்ரீபரமாத்மனின்

அர்த்தாங்கி = மனைவியே

நினகானமிபெ = உன்னை நான் வணங்குகிறேன்

என்னவகுணகளெணிஸதெ = என் துர்குணங்களை எண்ணாமல் (மன்னித்து)

பாலிபுது = என்னை காப்பாற்று.

 

கடலையே வஸ்திரமாக் கொண்ட, மலைகளை ஸ்தனமாகக் கொண்டு ஒளிர்பவள். ஜட சேதனாத்மக அனைத்து பிராணிகளையும் தரித்திருப்பவள். ப்ருத்வியின் குணம் கந்த. இதைத்தவிர உள்ள மற்ற ரஸ ரூபாதி குணங்கள் முக்கியமில்லாதவை. இத்தகைய குணத்தைக் கொண்டவள். கஷ்யபரின் குமாரி.

 

க்‌ஷோணிர்ஜ்யா காஷ்யபீக்‌ஷிதி: -- என்னும் அமர வாக்கியத்தால் கஷ்யபரின் மகள் பூதேவி என்று அறிகிறோம். ஸ்ரீதேவி, பூதேவி, துர்கா தேவியர் சாட்சாத் ரமாரூபமே. இவளே காஷ்யபி என்று கஷ்யபரின் மகளாகப் பிறந்து, தரா, தரித்ரி இத்யாதி பெயர்களால் இந்த பாஞ்சபௌதிக சம்பந்தமான, ஜடமான இந்த பூமிக்கு அபிமானி.

 

அவாந்தரத்திற்கு அபிமானி சனீஸ்வரன். ஆகையால், தத்வ நியாஸத்தில் பராய ப்ருதிவயாத்மனே ஷனைஸ்சர தராயை நம:என்று சொல்லியிருக்கிறார். இந்த தராதேவியே அங்காரகனுக்கும், நரகாசுரனுக்கும் தாயான வராஹ தேவரின் மனைவி. லட்சுமி ஸ்வரூபமான பூதேவியரின் சன்னிதானம் மட்டும் இவளில் உண்டு என்பது கருத்து.

 

ஹே பூமித்தாயே, உன்னை நான் வணங்குகிறேன். என் துர்குணங்களை எண்ணாமல் என்னை மன்னித்து காப்பாற்று.

 

ஹரி கு3ருக3ளர்ச்சி3 பாபா

த்மரனு ஸிக்‌ஷிஸலோஸு3 ஷனை

ஸ்சரனெனிஸி து3ஷ்ப2லக3ளீவெ நிரந்தரதி3 பி3டதெ3 |

தரணினந்த3ன நின்ன பாதா3

ம்பு3ருஹக3ளிகா3னமிபெ பஹுது3

ஸ்தர ப4வார்ணதி3 மக்4னனாதெ3ன்னு4த்தரிபே3கு ||44

 

ஹரிகுருகள = ஹரி குருகளை (தாரதம்யத்தின்படி)

அர்ச்சிஸத = பூஜிக்காத

பாபாத்மரன = பாப ஜீவிகளை

ஷிக்‌ஷிஸலோஸுக = தண்டிப்பதற்காக

ஷனைஸ்சரனெனிஸி = சனீஸ்வரனாக

துஷ்பலகளீவே = பாப கர்மத்தின் பலனான கஷ்டங்களை கொடுக்கும்

தரணி நந்தன = ஹே சூர்ய புத்திரனே

நிரந்தரதி = எப்போதும்

பிடதே = விடாமல்

நின்ன = உன்

பாதாம்புருஹகளிகெ = உன் பாத கமலங்களை

ஆனமிபெ = நான் வணங்குவேன்

பஹுதுஸ்தர = தாண்டுவதற்கு சாத்தியம் இல்லாத

பவார்ணவ = சம்சார சாகரத்தில்

மன்கனாத = மூழ்கியிருக்கும்

என்ன = என்னை

உத்தரிஸபேகு = காப்பாற்ற வேண்டும்.

 

ஹரி குருகளை பூஜிக்காத பாபிகளை தண்டிப்பதற்காக சனீஸ்வரன் என்னும் பெயரால், சூர்ய புத்ரனாக பிறந்து பாபிகளை பீடித்திருக்கும் ஹே சூர்ய நந்தனனே! உன் பாத கமலங்களை நான் வணங்குகிறேன். தாண்டுவதற்கு சாத்தியமில்லாத இந்த சம்சார சாகரத்தில் மூழ்கியிருக்கும் என்னை காப்பாற்ற வேண்டும்.

 

நிரதிஷய ஸுக்3ஞானபூர்வக

விரசிஸுவ நிஷ்காம கர்மக3

ளரிது தத்தத்காலத3லி தஜ்ஜன்ய ப2லர|

ஹரிய நேமதி3 உணிஸி ப3ஹு ஜீ

வரிகெ3 கர்மபனெனிப கு3ருபு

ஷ்கரனு த்கர்மங்க3ளலி நிர்விக்4னதெய கொட3லி ||45

 

நிரதிஷய = சாதாரண ஜீவர்களுக்கு மிகவும் அதிசயமான

சுக்ஞானபூர்வக = உத்தமமான ஞானத்துடன்

விரசிஸுவ = செய்யும்

நிஷ்காம கர்மகள = பலன்களின் விருப்பம் இல்லாமல் செய்யும் காரியங்களை

அரிது = அறிந்து

தத்தத்காலதலி = அந்தந்த காலங்களில்

தஜ்ஜன்ய பலரஸவ = அந்த நிஷ்காம கர்மங்களின் பலன்களின் சுவை முதலான சுகங்களை

பஹுஜீவரிகெ = ஜீவர்களுக்கு

ஹரிய நேமதலி = ஸ்ரீஹரியின் சங்கல்பத்தினால் அவனின் ஆணையின்படி

உணிஸி = அனுபவத்திற்குக் கொடுத்து

கர்மபனெனிப = கர்மாபிமானி எனப்படும்

குரு = தாரதம்யத்தின்படி குரு எனப்படும்

புஷ்கரனு,

ஸத்க்ரியங்களலி = பகவத் விஷயமான கர்மங்களை செய்யும் சந்தர்ப்பங்களில்

நிர்விக்னதெய கொடலி = நிர்விக்னத்தைக் கொடுக்கட்டும்.

 

ஞானத்துடன் செய்யப்படும் கர்மங்கள் அனைத்தும் பகவத் ப்ரீதிக்காகவே செய்கிறோம் என்று அறிந்து, அவற்றை செய்து, அவற்றிலிருந்து தான் எந்த விதமான பலன்களையும் விரும்பாமல் இருந்தால், அத்தகைய கர்மங்கள் நிஷ்காம கர்மங்கள் எனப்படுகின்றன.

 

அப்படி செய்யும் ஜீவர்களின் கர்மங்களுக்கு சாட்சியாக இருந்து எந்தெந்த காலங்களில் எந்த கர்மங்களை செய்கிறார்களோ, அதற்குத் தக்கவாறு, ரஸ ரூபமான சுகத்தை பகவந்தனின் ஆணைப்படி, அனேக ஜீவர்களுக்குக் கொடுக்கும் கர்மப எனப்படும் புஷ்கரன், நாம் செய்யும் நற்காரியங்களுக்கு நிர்விக்னத்தைக் கொடுக்கட்டும்.

 

ஸ்ரீனிவான பரம காரு

ண்யானிவா ஸ்தா2னரெனிப க்ரு

ஷானுஜரு ஸாஹஸ்ர ஷோடஷஷதரு ஸ்ரீகிருஷ்ண

மானினியரெப்பத்து யக்‌ஷரு

தா3னவரு மூவத்து சாரண

ஜானஜாமரரப்ரரு க3ந்த3ர்வர்வரிகெ3 நமிபெ ||46

 

ஸ்ரீனிவாசன = ஸ்ரீனிவாசனின்

பரமகாருண்யானிவாச ஸ்தானரெனிப = பரம காருண்யத்திற்கு பாத்திரரான

க்ருஷானுஜரு = அக்னிதேவரின் மக்களான

சஹஸ்ர ஷோடஷஷதரு = 16,000 பேர்

ஸ்ரீகிருஷ்ண மானினியரு = ஸ்ரீகிருஷ்ணனின் மனைவியர்

எப்பத்து யக்‌ஷரு = 80 பேர் யக்‌ஷர்கள்

தானவரு மூவத்து = 30 பேர் தானவர்கள்

சாரணரு = 30 பேர் சாரணர்கள்

அப்ஸரரு = அப்ஸர ஸ்த்ரீயர்கள்

கந்தர்கரு = கந்தர்வர்கள்

இவரிகெ = இவர்கள் அனைவரையும்

நமிபெ = வணங்குகிறேன்

 

இவர்கள் அனைவரும் அஜானஜருக்கு சமம் எனப்படுகின்றனர்.

 

அஜானஜர் என்றால்:

அனாக்யாதா தேவதாஸ்து ஜாதா தேவ குலேசயா:என்னும் தைத்திரிய பாஷ்யத்தின் வாக்கியத்தின்படி, தேவதா குலத்தில் பிறந்து, புகழ் பெறாதவர்களாக இருக்கிறவர்கள் என்று அர்த்தம்.

 

ஆ யமுனெயொளு ஸா3ரதி3 கா

த்யாயினீவ்ரத த4ரிஸி கெலரு த3

ராயுத4னெ பதியெனிஸி கெலவரு ஜாரதனத3ல்லி |

வாயுபிதனொலிஸித3ரு ஈர்ப3கெ3

தோயர பாத3கமலகெ

நாயெரகு3வெ மனோரத2ங்க3ள பாலிலி நித்ய ||47

 

யமுனெயொளு = யமுனா நதியில்

சாதரதி = பக்தி மரியாதையுடன்

காத்யாயினீவ்ரத தரிஸி = காத்யாயனி விரத்தை அனுசரித்து

கெலரு = சில கோபிகா ஸ்த்ரியர்கள் (திருமணம் ஆகாதவர்கள்)

தராயுதனெ = ஷங்கபாணியான

பதியெனிஸி = ஸ்ரீகிருஷ்ணனையே பதியாக ஆக்கிக் கொண்டனர்

கெலவரு = சிலர்

ஜாரதனதல்லி = (தங்களுக்கு திருமணம் ஆகியிருந்தாலும்) அவனையே அடைய வேண்டும் என்று விரும்பி,

வாயுபிதன = வாயுதேவரின் தந்தையான ஸ்ரீபரமாத்மனை

ஒலிஸிதரு = அடைந்தனர்

ஈர்பகெ = இந்த இரு வகையான ஸ்த்ரியர்களையும்

தோயஸரஸர = அவனின் மனைவிகளின்

பாதகமலகெ = பாத கமலங்களை

அனுதினவு = தினந்தோறும்

நாயெரகுவெ = நான் வணங்குவேன்

மனோரதங்கள = நம் இஷ்டார்த்தங்களை

ஸலிஸலி = நிறைவேற்றட்டும்.

 

கின்னரரு கு3ஹ்யகரு ராக்‌ஷ

பன்னக3ரு பித்ருக3ளு சித்தரு

ன்னுதா3ஜானஜரு மரிவர மரயோனிஜரு |

இன்னிவர க3ணவெந்து33ண்ணி

லென்னளவெ கருணத3லி பரமா

பன்னஜனரிகெ3 கொட3லி ன்முத3 ஸுப்ரதாபவனு ||48

 

கின்னரரு, குஹ்யகரு, ராக்‌ஷஸரு, பன்னகரு, பித்ருகள், சித்தர்கள் = இவர்கள் அனைவரும்

ஸன்னுத = நன்றாக

அஜானஜரு = அஜானஜ என்னும் அமரயோனிஜர்கள்

இவர ஸமரு = இவர்கள் அனைவரும் சமம் எனப்படுகிறார்கள்

அதாவது, இவர்களும் அஜானஜரை சேர்ந்தவர்கள் என்று அர்த்தம்.

இன்னிவர = இவர்களின்

கணவெந்து = கணத்தை

எந்து பண்ணிஸலி = நான் என்னவென்று வர்ணிப்பேன்?

என்னளவெ = அப்படி வர்ணிப்பது என்னால் சாத்தியமா? (அஸாத்தியம் என்பது கருத்து)

இவர்கள் அனைவரும்,

பரமாபன்னஜனரிகெ = சிறந்த பக்தர்களுக்கு

ஸம்முத = உத்தம ஆனந்தத்தை

ஸுப்ரதாபவனு = நல்ல புகழைக் கொடுக்கட்டும்

 

நூரு முனிக3ளனுளிது3 மேலண

நூருகோடி தபோத4னர பா

தா3ரவிந்த3கெ முகி3வெ கரக3ளனுத்த4ரிசலெந்து3 |

ஈ ரிஷிக3ளானந்தரதலிஹ

மூரு ப்தாஹ்வர தொரெத3 ஷத

பூ3ரிபிதரரு கொட3லி நமகெ3 தா3 ஸுமங்க3லவ ||49

 

மேலண = கர்ம தேவதைகளின் கக்‌ஷையை சேர்ந்த

நூறு முனிகளனுளிது = 100 ரிஷிகளைத் தவிர

நூறு கோடி தபோதனர = 100 கோடிக்கு 100 குறைவான, தவம் செய்வதையே செல்வமாகக் கொண்ட ரிஷிகளின்

பாதாரவிந்தகெ = பாதாரவிந்தங்களில்

உத்தரிஸலெந்து = நம்மை காக்கவேண்டும் என்று

கரகளனு முகிவெ = கைகூப்பி வணங்குவேன்

மூரு ஸப்தாஹ்வயர = 3+7=10

தொரெது = 100 ரிஷிகளில் 10பேரைத் விட்டு (மிச்ச 90 பேர்களை மட்டும் இங்கு வணங்குகிறார்).

 

*100 கோடி ரிஷிகள் தவத்தையே செல்வமாகக் கொண்டவர்கள்

* இவற்றில் 100 பேர் உத்தம கக்‌ஷையை சேர்ந்தவர்கள்

* இந்த 100ல், 10 பேர் வெவ்வேறு கக்‌ஷியை சேர்ந்தவர்கள்

*** பிரம்மதேவரின் மக்களான மரீசி முதலான 7 ரிஷிகள்

***  ப்ருகு, நாரதர், விஸ்வாமித்ரர் என 3 பேர்

*** ஆக இந்த 10 பேர்.

* 100 ரிஷிகளில் இந்த 10 பேரை விட்டு, மற்ற 90 பேர்.

 

இந்த ரிஷிகள் அஜானஜர்களைவிட குறைவானவர்கள். அவர்களைவிட பூரி பித்ருகணத்தவர்கள் குறைவு எனப்படுகிறார்கள் என்பது கருத்து. இவர்களை நான் வணங்குகிறேன். அவர்கள் எங்களுக்கு மங்களத்தைக் கொடுக்கட்டும்.

 

பாவனகெ பாவனனெனிஸுவ ர

மா வினோத3ன கு3ணக3ணங்க3

ஸாவதா4னதி3 ஏகமானராகி3 ஸுஸ்வரதி3 |

ஆ விபுத4பதி பெ3யொளகெ3 நா

நா விலாதி3 பாடி3 ஸுகி2ஸு

தே3வக3ந்தர்வரு கொட3லி எமக3கி2ல புருஷார்த்த2 ||50

 

பாவனகெ பாவனனெனிஸுவ = பவித்ர வஸ்துகளை பவித்ரமாக மாற்றுபவன்

ரமா வினோதன = ரமாபதியான

குணகணங்கள = நற்குணங்களை

ஸாவதானதி = அர்த்தானுசந்தான பூர்வகமாக

ஏகமானஸராகி = ஏகாக்ர சித்தத்தால்

ஸுஸ்வ்ரதி = ராக, தாள, ஸ்ருதியுடன்

ஆ = அந்த

விபுதபதி = தேவேந்திரனின் சபையில்

நானா விலாஸதி = நானா விதமான பாவங்களுடன்

பாடி ஸுகிஸுவ = பாடி மகிழும்

தேவகந்தர்வரு = தேவ கந்தர்வர்கள்

எமகெ = எமக்கு

அகிள புருஷார்த்த கொடலு = எமக்கு அனைத்து புருஷார்த்தங்களையும் கொடுக்கட்டும்.

 

இந்திர சபையில், பரமாத்மனின் குண கணங்களை, அர்த்த ஞானத்துடன், ஒரு மனத்துடன், ராக தாள ஸ்வரத்துடன், நானா விதமான பாவங்களுடன் பாடி மகிழும் தேவ கந்தர்வர்கள் நமக்கு அனைத்து புருஷார்த்தங்களையும் கொடுக்கட்டும்.

 

பு4வனபாவனனெனிப லகுமி

4வன மங்க3லதி3வ்ய நாம

ஸ்தவனகெ3ய்வ மனுஷ்யக3ந்த4ர்வரிகெ3 வந்தி3ஸுவெ |

ப்ரவரபூ4பு4ஜருளிது3 மத்யம

குவலயபரெந்தெ3னிஸி கொம்ப3

திவதி3ங்க3ளலி நெனெவெனு கரணஷுத்தி4யலி ||51

 

புவனபாவனனெனிப = உலகத்தை பவித்ரமாக்குபவன் என்று புகழ்பெற்ற

லகுமிதவன = லட்சுமி பதியின்

மங்கள = மங்களகரமான

திவ்யநாம = தேவதைகள் நினைப்பதற்கு தகுதியான பகவன் நாமங்களை நினைத்தவாறு

ஸ்தவனகெய்வ = ஸ்தோத்திரம் செய்யும்

மனுஷ்யகந்தர்வரிகெ = மனுஷ்ய கந்தர்வர்களை

வந்திஸுவெ = வணங்குகிறேன்

ப்ரவர பூபுஜருளிது = ப்ருது பகீரத முதலான முன்னர் கூறிய பிரதான ராஜர்களை விட்டு, மற்ற

மத்யம = மத்யமரான

குவலயபரெந்தெனிஸி கொம்பர = பூமி பாலகர்கள் என்று சொல்லப்படும் அரசர்களை

திவஸ திவஸங்களல்லி = தினந்தோறும்

கரண ஷுத்தியலி = அந்த:கரண சுத்தியுடன்

நெனெவேனு = நினைக்கிறேன்.

 

உலகத்திற்கு மங்களத்தைக் கொடுப்பவனான ஸ்ரீரமாதியின் மங்களகரமான திவ்ய நாமஸ்மரணை, அவனின் ஸ்தோத்திரம் இவற்றை எப்போதும் செய்து கொண்டிருக்கும் மனுஷ்ய கந்தர்வர்களை நான் வணங்குகிறேன். முன்னர் கூறிய கர்ம தேவதைகளின் கக்‌ஷையைச் சேர்ந்த ப்ருது, பகீரத முதலான பிரதான ராஜர்களை விட்டு மற்ற மத்யம ராஜர்களை எப்போதும் நினைக்கிறேன்.

 

ஸ்ரீமுகுந்த3ன மூர்த்திலெ ஸௌ

தா3மினியவோல் ஹ்ருத3யவாரிஜ

வ்யோம மண்ட3லமத்4யத3லி காணுதலி மோதி3ஸு|

ஆ மனுஷ்யோத்தமர பத3யுக3

தாமர3ளிகெ3ரகு3வெ தா3

காமிதார்த்த23ளித்து லஹலி ப்ரணதஜனததிய ||52

 

ஸ்ரீமுகுந்தன = மோட்சத்தைக் கொடுப்பவனான, ஸ்ரீஹரி

மூர்த்திகள = ராமகிருஷ்ணாதி மூர்த்திகளை

ஸௌதாமினியவோல் = மின்னலைப் போல

ஹ்ருதய வாரிஜ வ்யோம மண்டல மத்யதலி = இதயக் கமலத்தின் ஆகாஷ மண்டலத்தின் நடுவில்

காணுதலி = பார்த்து

மோதிஸுவ = மகிழ்ந்திருக்கும்

ஆமனுஷ்யோத்தமர = அந்த மனுஷ்யோத்தமர்களின்

பதயுக தாமரஸகளிகெ = பாத கமலங்களுக்கு

ஸதா = எப்போதும்

எரகுவெ = வணங்குவேன்

ப்ரணதஜனததிய = வணங்கும் மக்களின் காமிதார்த்தங்களை

சலஹலி = கொடுத்து அருளட்டும்.

 

ஹ்ருதயாகாஷத்தின் மண்டலத்தின் நடுவில், மின்னலைப் போல ஒளிரும் பகவந்தனின் மூர்த்தியை பார்த்தவாறு மகிழ்ந்து கொண்டிருக்கும் மனுஷ்யோத்தமரின் பாத கமலங்களை நான் வணங்குகிறேன். அவர் எப்போதும் காமிதார்த்தங்களை கொடுத்து அருளட்டும்.

 

ஈ மஹிமண்ட3லதொ3ளிஹ கு3ரு

ஸ்ரீமதா3சார்யர மதானுக3

ராமஹா வைஷ்ணவர விஷ்ணுபதா3ப்ஜ மது2கரர |

ஸ்தோமகா நமிஸுவெனவரவர

நாமக3ளனேன் பேள்வெ ப3ஹுவித4

யாமயாமங்க3ளலி போ3திலெனகெ3 ன்மதிய ||53

 

ஈ மஹிமண்டலதொளு = இந்த பூமண்டலத்தில்

இஹ = இருக்கும்

குரு = ஜகத்குருகளான

ஸ்ரீமதாசார்யர = ஸ்ரீமன் மத்வாசார்யரின்

மதானுக = மதத்தைப் பின்பற்றுபவரான

விஷ்ணுபதாப்ஜ மதுகரர = பரமாத்மனின் பாத கமலங்களில் தேனீயைப் போல இருக்கும்

ஆ மஹா வைஷ்ணவர = அந்த வைஷ்ணவரின்

ஸ்தோமகெ = சமூகத்தை

ஆனமிஸுவெனு = நான் வணங்குவேன்

அவரவர = அவரவர்களின்

நாமகளனு = நாமங்களை

பேளலளவெ = சொல்வதற்கு சாத்தியமா?

பஹுவித = அனேக விதமாக இருக்கிறாரகள்

யாமயாமங்களலி = எல்லா காலங்களிலும் என்று அர்த்தம்

எனகெ = எனக்கு

சன்மதிய் = நற்புத்தியை

போதிஸலி = கொடுக்கட்டும்.

 

இந்த பூமியில் இருக்கும் ஸ்ரீமன் மத்வ மதத்தைப் பின்பற்றுபவர்களான, பரமாத்மனின் பாத கமலங்களில் தேனீயைப் போல இருக்கும், மஹா வைஷ்ணவர்கள் பலபேர் இருக்கிறார்கள். அவரவர்களின் பெயர்களை சொல்வது யாருக்கும் சாத்தியமா? அனைத்து சத்வைஷ்ணவர்களையும் வணங்குகிறேன். அவர் ஒவ்வொரு யாமத்திலும் (எல்லா காலங்களிலும்) எனக்கு நற்புத்தியைக் கொடுக்கட்டும்.

 

மாரனய்யன கருணபாரா

வாரமுக்2ஸுபாத்ரரெனிப

ரோருஹான வாணி ருத்ரேந்தா3தி3 ஸுரனிகர |

தாரதம்யாத்மக ஸுபத்3யக3

ளாரு படி2ஸுவராஜனரிகெ3

மாரமண பூரயிலீப்சித ர்வகாலத3லி ||54

 

மாரனய்யன = மன்மதனின் தந்தையான ஸ்ரீஹரியின்

கருண = தயை என்னும்

பாராவார = கடலுக்கு

முக்யஸுபாத்ரரெனிப = முக்கியமான உத்தம பாத்ரர் எனப்படும்

ஸரோருஹாஸன = பிரம்மதேவரின்

வாணி = சரஸ்வதி தேவியர்

ருத்ர,

இந்திராதி = இந்திரனே முதலான

ஸுரனிகர = தேவதா சமூகங்களின்

தாரதம்யாத்மக = தாரதம்ய ஸ்வரூபமான

ஸுபத்யகள = இந்த உத்தம பத்யங்களை

ஆரு படிஸுவர = யார் படிக்கிறார்களோ

அ ஜனரிகெ = அந்த ஜனர்களுக்கு

ரமாரமண = ரமாபதியான ஸ்ரீஹரி

ஸர்வகாலதலி = அனைத்து காலங்களிலும்

ஈப்ஸித = மனோபீஷ்டங்களை

பூரயிஸலி = நிறைவேற்றட்டும்

 

இந்த சந்தியில், பரமாத்மனின் கருணைப் பார்வையில் முக்கிய பாத்திரர்களான பிரம்ம ருத்ராதி தேவதைகளின் தாரதம்யத்தை சொல்கிறார்கள். இத்தகைய சந்தியை யார் கேட்பது, படிப்பது ஆகியவற்றை செய்கிறார்களோ அவர்களின் மனோரதங்களை ஸ்ரீஹரி எப்போதும் நிறைவேற்றுகிறான்.

 

மூரு காலக3ளலி துதிஸெ ஷ

ரீர வாங்மன ஷுத்திமாள்புது3

தூர3கெ3ய்ஸுவுத3கி2ல பாபமூஹ ப்ரதிதி3னவு |

சோரப4ய ராஜப4ய நக்ர ச

மூர ஷஸ்த்ர ஜலாக்3னி பூ4த ம

ஹோரக3 ஜ்வர நரகப4ம்ப4விதெ3ந்தெ3ந்து3 ||55

 

மூரு காலகளல்லி = காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளில்

ஸ்துதிஸெ = ஸ்தோத்திரம் செய்வதற்கு

ஷரீரவாங்மன ஷுத்தி மாள்புது = தேகத்தையும், மனதையும் சுத்தி செய்கிறார்கள்

அகிள பாப ஸமூஹ = அனைத்து பாவ சமூகங்களையும்

ப்ரதிதினவு = தினந்தோறும்

தூரகெய்ஸுவுது = தூர விலக்குவர்

சோரபய = திருடர்களால் வரும் பயம்

ராஜபய = அரசர்களால் வரும் பயம்

நக்ர = முதலை முதலானவற்றால் வரும் பயம்

சமூ என்றால், பொதுவாக சைன்யங்களுக்கு பெயர். இங்கு சமூ என்பதற்கு முதலை மற்றும் அதைப் போல நீரில் வசிக்கும் மீன், திமிங்கிலம் ஆகியவற்றின் சமூகம் என்பது கருத்து. அவற்றின் பயமோ,

ஜலாக்னி பூத = ஜல, அக்னி, பூத - இவற்றினால் வரும் பயமோ

மஹோரக = பெரிய பாம்புகள்

ஜ்வரபய = ஜுரம், நோய்களால் வரும் பயம்

நரகபய = நரகத்தை நினைத்து வரும் பயம் - என எந்தவிதமான பயங்களும்

சம்பவிசதெந்தெந்து = என்றைக்கும் சம்பவிக்காது.

 

ஜயஜயது த்ரிஜக3த் விலக்‌ஷண

ஜயஜயது ஜகதே3ககாரண

ஜயஜயது ஜானகிரமண நிர்க3த ஜராமரண |

ஜயஜயது ஜான்ஹவிஜனக ஜய

ஜயது தை3த்யகுலாந்தக ப4வா

மயஹர ஜக3ன்னாத2விட்ட2ல பாஹிமாம் தத ||56

 

த்ரிஜகத் விலக்‌ஷண = மூன்று உலகங்களில் இருக்கும் பிராணிகளிலிருந்து வேறுபட்டவன். பேத உள்ளவன் என்று அர்த்தம். இத்தகைய ஸ்வாமி,

 

ஜயஜயது = ஜயஷீலன் ஆகட்டும். அதாவது, தன் ஜயத்தை (மங்களத்தை) உலகத்தில் வெளிப்படுத்தட்டும் என்று அர்த்தம். அப்படியில்லை எனில், நித்யஜயஷீலனான பரமாத்மனுக்கு மங்களம் உண்டாகட்டும் என்று ஆசி வழங்குவதைப் போல இல்லை. ஜயத்தை வெளிப்படுத்து என்று பிரார்த்தனை செய்வது போல என்று அறிய வேண்டும்.

 

ஜகதேககாரண = உலகிற்கு முக்கிய காரணன்

ஜானகிரமண = சீதா காந்தனே, ஜய ஜய

நிர்கத ஜராமரண = பிறப்பு இறப்பு இல்லாதவன்

ஜான்ஹவி ஜனக = கங்கையின் தந்தைக்கு மங்களம் உண்டாகட்டும்.

 

தைத்யகுலாந்தக = தைத்ய குலத்திற்கு ம்ருத்யுவாக இருப்பவனே, உனக்கு ஜயம் உண்டாகட்டும்.

 

பவாமயஹர = சம்சாரம் என்னும் நோயை பரிகரிப்பவனே

ஹே ஜகன்னாதவிட்டலனே,

ஸதத = அனைத்து காலங்களிலும்

மாம்பாஹி = எனக்கு அருள்வாயாக.

 

தேவதா தாரதம்ய ஸ்தோத்திர சந்தி என்னும் 32ம் ஸந்தியின் தாத்பர்யம் இத்துடன் நிறைவுற்றது.

 

ஸ்ரீஜகன்னாததாசராயர் இயற்றிய ஹரிகதாம்ருதசாரம் முடிவுற்றது.

 

யஸ்ஸர்வ குணஸம்பூர்ண ஸர்வதோஷ விவர்ஜித: |

ப்ரியதாம் ப்ரீத ஏவாலம் விஷ்ணுர் மே பரம: ஸுஹ்ருத் |

 

ப்ரமோதாப்தே மாககிருஷ்ண: மாதவஸ்ய தினே ஷுபே |

பாவப்ரகாஷிகாசீயம் லிகிதா பூர்ணதாமகாத் ||

பத்மனாபேன தாஸேன ரசிதாஹர்யனுக்ரஹாத் ||

குரோரனுக்ரஹாச்சைவ ப்ரீயதாம் கமலாபதி: ||

 

இதி ஸ்ரீ ஜகன்னாததாசார்ய க்ருத ஹரிகதாம்ருதசாரஸ்ய

ஸ்ரீ சுப்பராயதாசார்ய சிஷ்யேண பத்மனாபதாஸேன

ரசிதா பாவப்ரகாஷிகா ஸமாப்தா

 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

 

***

 

No comments:

Post a Comment