ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Showing posts with label வியாப்தி சந்தி. Show all posts
Showing posts with label வியாப்தி சந்தி. Show all posts

Friday, April 3, 2020

#32 - வியாப்தி சந்தி

#32 - வியாப்தி சந்தி


எல்லரொளு தானிப்ப தன்னொள
கெ3ல்லரனு த3ரிசிஹனு அப்ரதி1
மல்ல மன்மதஜனக ஜக3தா3த்யந்த3 மத்3யகள |
3ல்ல, 4ஹுகு3ணப3ரித தா3னவ
தல்லண ஜகன்னாதவிட்டல
சொல்லனாலிஸி ஸ்தம்பதிந்தலி பந்த பகு1தனிகெ3 ||32

அப்ரதிமல்ல = ஒப்புமையில்லாத வீரனான
மன்மதஜனக = மன்மதனின் தந்தையான
தானவதல்லண = தானவர்களைக் கொல்பவனான
ஜகன்னாதவிட்டல = ஜகன்னாத தாசராயரின் இதய கமலத்தில் இருக்கும் பிம்பரூபியான ஸ்ரீஜகன்னாத விட்டலன்
எல்லரொளு = அனைத்து பிராணிகளிலும்
தானிப்ப = தான் இருக்கிறான்
தன்னொளகெ எல்லரனு தரிசிதனு = தன்னில் அனைத்தையும் / அனைவரையும் அடக்கியிருக்கிறான்
ஜகதாத்யந்த மத்யகள = உலகத்தின் ஆதி, அந்த்ய, மத்யங்கள் என எல்லா பாகங்களையும்
பல்ல = அறிந்தவன்
பஹுகுணபரித = அனந்தகுண பரிபூர்ணன்
பகுதனிகெ = பக்தனுக்கு அருள்வதற்காக
சொல்லலாலிஸி = பிரகலாதன் தன் தந்தைக்கு, இந்தத் தூணிலும் பகவந்தன் இருக்கிறான் என்று சொல்லியதைக் கேட்டு
கம்பதிந்த பந்த = அந்தத் தூணிலிருந்து நரசிம்ம ரூபத்தில் வந்தான்
(அத்தகைய நரசிம்ம ரூபி பரமாத்மனை நான் வணங்குகிறேன்).

எல்லரொளு தானிப்ப தன்னொளகெல்லரனு தரிசிஹனுஎன்று இந்த சந்தியின் கடைசி பத்யத்தில் சொல்லியிருக்கிறார் தாசராயர். பரமாத்மனை உபாசனை செய்து வருபவர்கள், இறுதிக்காலத்திலும் இப்படியே உபாசனை செய்து, சத்கதியை அடைவார்கள் என்று சொல்வதற்காக இந்த பத்யத்தில் இப்படி சொல்லியிருக்கிறார்.

பாகவத மூன்றாம் ஸ்கந்தத்தில், கர்தமன் தன் இறுதிக்காலத்தில் செய்த தியானத்தை விளக்கும்போது:

ஆத்மானம் சர்வபூதேஷு பகவந்தமவஸ்திதம் |
அபஷ்யத்சர்வ பூதானி பகவத்யபிஜாத்மனி ||
வாசுதேவே பகவதி சர்வக்ஞே ப்ரத்யகாத்மனி பரேண பக்திபாவேனலப்யாத்மா முக்தபந்தன: |
இச்சாத்வேஷ விஹீனேன சர்வத்ர சமசேதஸா |
பகவத்பக்தி யோகேன ப்ராப்தே பாகவதீம் கதிம் ||

அனைத்து பிராணிகளிலும் அந்த பகவந்தன் இருப்பதையும், அந்த பகவந்தனில் அனைத்து பிராணிகளும் இருக்கின்றன என்பதையும், அந்த பரமாத்மன் தம்முள் இருக்கிறான் என்பதையும் தியான யோகத்தின் மூலமாக அறிந்தார். இப்படி, சர்வக்ஞனான, தமக்குள் பின்னனாக இருக்கும் வாசுதேவ நாமக ஸ்ரீபரமாத்மனிடம் பக்தி கொண்டு, அந்த பகவத் ஸ்வரூபத்தை அறிந்து, பந்தங்களிலிருந்து முக்தராகி, ஆசை த்வேஷம் ஆகியவற்றை விட்டு, அனைத்து இடங்களிலும் நிலைத்திருக்கும் பகவந்தனின் ரூபங்களில் அறிவை வைத்து, இதன் மூலம் பரமாத்மனின் லோகத்தை அடைந்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால், பரமாத்மனை அனைவரிடமும், அனைவரிடத்தில் பரமாத்மனையும், அதே பரமாத்மனை தனக்குள்ளும் இருக்கிறார் என்பதை அறியவேண்டும் என்று இந்த பதத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

தனக்கு சமம் என்று யாருமே இல்லாத, மன்மதனின் தந்தையான, இந்த உலகத்தில் ஆதி, அந்தம், மத்யம் என அனைத்து காலங்களிலும் இருக்கக்கூடிய, அந்த அனைத்து காலங்களையும் நன்கு அறிந்தவனான, மற்றும்
என்னபஷ்யந்தி பஷ்யந்தம் சக்‌ஷுர்யஸ்யனரிஷ்யதி |
தம்பூத நிலயம் தேவம் சுபர்ணமுபதாவத ||

என்னும் பாகவத வசனத்திற்கேற்ப, அனேக சூரியர்களை ஒரே நேரத்தில் பார்த்தாலும், பரமாத்மனின் கண்களுக்கு கூச்சம் ஏற்படாது. பிறர் ஒரே ஒரு சூரியனைக்கூட நேராக பார்க்கமுடியாதவர்களாக இருக்கின்றனர். சூரியன் பரமாத்மனை பார்க்க வேண்டுமென்றாலும், கூச்சத்தில் தன் கண்களை மூடிக்கொள்கிறான். பரமாத்மன் அனேக கோடி சூர்யர்களின் ஒளியைக் கொண்டிருக்கிறான் என்பது பொருள். மேலும் அனந்த குணங்களைக் கொண்டவன். தானவர்களைக் கொல்பவன்.

தாசராயரின் உபாஸ்ய மூர்த்தி, நரசிம்ம தேவர் ஆனதால், சந்தியின் இறுதி பத்யத்தில் நரசிம்மனையே போற்றுகிறார். தன் பிம்பமூர்த்தியான ஜகன்னாதவிட்டலன், தன் பக்தனான பிரகலாதன், தன்னுடைய தந்தைக்குக் கூறிய வசனம்: க்வாஸௌ யதி சர்வத்ர கஸ்மாத் ஸ்தம்பேன த்ருஷ்யதே’.

ஹிரண்யகசிபு: உன்னுடைய கடவுள் எங்கும் இருக்கிறான் என்று சொல்கிறாயே, அவன் எங்கு இருக்கிறான்?.

பிரகலாதன், அவன் அனைத்து இடங்களிலும் இருக்கிறான்.

ஹிரண்யகசிபு: எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்றால் இந்தத் தூணில் ஏன் இல்லை?

பிரகலாதன்: ஹே ஸ்தம்பனே! (என்றால் ஜடப்பொருளின் அரசனே என்று பொருள்). எல்லா இடங்களிலும் பகவந்தன் இருக்கிறான் என்றபிறகு, ஜடமான கம்பத்திலும் இருந்தே இருக்கிறான் என்பதால், அதை நிரூபிப்பதற்காக ஹே ஸ்தம்பனேஎன்று அழைக்கிறான்.

ஹிரண்யகசிபு: இப்போதே நான் உன்னை இந்த கதையால் அடிக்கிறேன். உன் ஸ்ரீஹரி இருப்பது உண்மையானால், வந்து உன்னை காப்பாற்றட்டும்.

என்று ஹிரண்யகசிபு பிரகலாதனை அடிக்க வரும்போது சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்உண்மையான பக்தனான பிரகலாதனின் வாக்கியத்தை உண்மையாக்குவதற்கு அந்த கம்பத்திலிருந்தே ஸ்ரீஹரி, நரசிம்ம ரூபத்தினால் வெளிவந்தான் -- என்னும் பாகவத வாக்கியத்தை தாசராயர் இங்கு குறிப்பிடுகிறார்.

இத்தகைய கருணைக்கடலான ஸ்ரீபரமாத்மனை நான் வணங்குகிறேன் என்று பொருள். இந்த சந்தி முழுக்க, பரமாத்மனின் வியாப்தியையே வர்ணித்திருப்பதால், இந்த கடைசி பத்யத்திலும் அந்த வியாப்தியையே சொல்லி, பகவன் மகிமையைக் கொண்டாடி, சந்தியை முடிக்கிறார் தாசராயர்.

வியாப்தி சந்தி இங்கு முடிவுற்றது.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து. ***

Thursday, April 2, 2020

#31 - வியாப்தி சந்தி

#31 - வியாப்தி சந்தி

ஒந்து கு3ணதொளனந்த கு3ணகளு
ஒந்து ரூப1தொ3ளிஹவு லோக13
ளொந்து ரூப1தி த4ரிஸி த1த்த1த்தர்த்த3 தொளஹொரகெ |
பா3ந்த3ளத3 வோலித்து13ஹு பெச
ரிந்த க1ரெசுத1 பூர்ணஞானா
நந்தமய பரிபரி விஹாரவ மாடி3 மாடி3சுவ ||31

ஒந்து குணதொளு = பரமாத்மனுக்கு இருக்கும் அனேக குணங்களில் ஒரு குணத்தில்
ஒந்து ரூபதொளு = பரமாத்மனுக்கு இருக்கும் அனேக ரூபங்களில் ஒரு ரூபத்தில்
லோககளு = அனந்த லோகங்கள்
இஹவு = இருக்கிறது. அந்த லோகங்களை
ஒந்து ரூபதி தரிஸி = ஒரு ரூபத்தால் தாரணை செய்து
தத்கத பதார்த்ததொளஹொரகெ = அனைத்து பிராணிகளின் உள்ளே மற்றும் வெளியே
பாந்தளதவோலித்து = ஆகாயத்தைப் போல வியாப்தனாக இருந்து
பஹுபெசரிந்த = அனந்தானந்த நாமங்களால்
கரெசுத = அழைத்துக் கொள்ளப்படும்
பூர்ணா ஞானானந்தமய = பூர்ண ஞானானந்த ஸ்வரூபனான ஸ்ரீபரமாத்மன்
பரிபரிய விஹாரவமாடி = பற்பல விதங்களில் சஞ்சரித்து
மாடிசுவ = அனைவரின் உள்ளேயும் இருந்து செயல்களை செய்கிறான்.

ஸ்ரீபரமாத்மனிடம் இருக்கும் அனந்தானந்த குணங்களில் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தால், அந்த ஒரு குணத்தில் அனந்தானந்த குணரூபங்கள் அடங்கியிருக்கின்றன. அதில் இருக்கும் ஒரு ரூபத்தை எடுத்துக்கொண்டு பார்த்தால், அந்த ரூபத்தில் அனந்தானந்த லோகங்கள் காணப்படுகின்றன. அந்த லோகங்களை ஒரு ரூபத்தால் தரித்து, அ லோகங்களில் இருகும் அனைத்து பதார்த்தங்களின் உள்ளேயும் வெளியேயும் அனைத்து இடங்களிலும் ஆகாயம் வியாபித்திருப்பதைப் போல, நிர்லிப்தனாக, ஸ்வயம் பூர்ணானந்த ஞானமயனாக இருந்தாலும், அனைத்து பதார்த்தங்களின் நாமத்தினால் பற்பல விதங்களாக வடிவெடுத்து செயல்களை செய்விக்கிறான்.


அதாவது, மனிதர்களில் மனிதனின் வடிவத்தில் இருந்து, மனித நாமத்தை தரித்து, யானை குதிரைகளில், யானை குதிரைகளின் வடிவில் இருந்து, நாமத்தைப் பெற்று, மனிதர்களுக்கு வாகனங்களாக இருக்கிறான். மனிதர்களாக அமர்கிறான். யானை குதிரைகளில் இருந்து அவர்களை தூக்கிக் கொள்கிறான். மனிதர்களை யானை குதிரைகளின் மேல் அமரச் செய்கிறான். இப்படி பற்பல வித காரியங்களை, பிராணிகளில் இருந்து தானும் செய்து அவர்களாலும் செய்விக்கிறான்.

***


#30 - வியாப்தி சந்தி

#30 - வியாப்தி சந்தி


அத4ம மானவனோர்வ மந்த்ரௌ
ஷத33ளனு தா1னரிது3 பா1வக1
உத313ள சம்பந்தவில்லதெ இப்பனதரொளகெ |
பது3மஜாண்டோதரனு சர்வர
ஹ்ருத3யதொளகி3ரெ கா1ல கு3ண க
ர்மத க1லுஷ சம்பந்தவாகுவதே நிரஞ்சனகெ3 ||30


அதம மானவனோர்வ = அதமனான மனிதன் ஒருவன்.
மந்த்ரௌஷகளனு = மந்திர, மாத்திரைகளை
தானரிது = தான் அறிந்து
பாவக உதககள = நெருப்பு, தண்ணீரின்
சம்பந்தவில்லதெ = சம்பந்தம் இல்லாமல்
அதரொளகெ = அந்த நெருப்பு மற்றும் தண்ணீரில் இருக்கிறான்.
பதுமஜாண்டோதரனு = பிரம்மாண்டத்தையே வயிற்றில் வைத்துக் கொண்டிருக்கும் பரமாத்மன்
சர்வர ஹ்ருதயதொளகிரெ = அனைவரின் இதயத்தில் இருக்கிறான்
காலகுணகர்மத = கிருத த்ரேதாதி யுககாலங்களில், சத்வாதி குணங்களில், புண்ய பாபாதி கர்மங்களில்
அல்லது
கால = வசந்த க்ரீஷ்மாதி காலங்களில், அதற்கேற்ப குணங்கள் என்றால் வெயில், மழை ஆகியவை, கர்மம் என்றால் வெயிலுக்கு

குடை பிடிப்பது. விசிறியால் விசிறிக் கொள்வது ஆகியவை.
கலுஷ = அந்தந்த காலத்திற்கேற்ப செய்யும் செயல்களால் வரும் கஷ்டங்கள்
நிரஞ்சனகெ = தோஷங்கள் அற்றவனான ஸ்ரீஹரிக்கு இவை சம்பந்தம் ஆகுமோ? ஆகாது என்று பொருள்.

அதமனான ஒரு மனிதன், மந்திர தந்திரங்களை அறிந்து, அதனால், நெருப்புக்கு நடுவில் போய் நிற்பது, நெருப்பை கையில் பிடிப்பது, நீரில் நிற்பது, அதன் மேல் நடப்பது ஆகியவற்றை மக்களுக்குக் காட்டி, நெருப்பின் சம்பந்தத்தால் ஆகும் சுடுதன்மை, நீரின் சம்பந்தத்தினால் ஆகும் மூழ்கும்தன்மை ஆகியவை இல்லாதிருப்பான். பிரம்மாண்டத்தையே தன் வயிற்றில் வைத்துக் கொண்டிருக்கும், தோஷங்கள் அற்ற ஸ்ரீபரமாத்மன், அனைத்து ஜீவர்களின் இதயத்தில் இருந்து, சிறியதான பரமாணு முதல் மிகப்பெரிய பதார்த்தங்கள் வரை இருக்கும் காலத்தை படைத்து, பிறந்து, வாழ்ந்து, முதுமையை அடைந்து, இறந்து, இருக்கும்வரை அரசாண்டு, யாகங்களை செய்து, போரில் மூர்ச்சையாகி, தோற்று, வெயிலால் வாடி, தாகத்தால் தவித்து - என அனைத்து கால குண கர்மங்கள், அதனால் வரும் கஷ்டங்கள் இவை அந்த பரமாத்மனுக்கு சம்பந்தம் ஆகுமோ? என்றும் ஆகாது.

***

Wednesday, April 1, 2020

#29 - வியாப்தி சந்தி

#29 - வியாப்தி சந்தி


வேஷ பா4ஷெக3ளிந்த3 ஜனர சு
தோ1ஷகை3சுவ நட1புருஷனோ
ல் தோ3ஷதூ3ரனு லோக1தொ3ளு ப4ஹுரூப மாதி1னலி |
தோ3ஷிசுவனவரவர மனதபி4
லாஷெக3ள பூரயிஸுத1னுதி3
போ1ஷிசுவ பூ1தா1த்ம பூர்ணானந்த3 ஞானமய ||29


வேஷபாஷெகளிந்த = நாடகங்களில் ராம, கிருஷ்ண வேடங்களைப் போட்டு, தன் நடிப்பினாலும், வசனங்களாலும்
ஜனர = பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின்
ப்ரமோஷகைசுவ = மனதை ஈர்க்கும்
நடபுருஷனோல் = வேடம் போடும் மனிதர்களுக்கு
தோஷதூரனு = தோஷங்கள் இல்லாதவனான
பூதாத்ம = பவித்ரமான ஆத்மனைக் கொண்ட
பூர்ணானந்த ஞானமய = பூர்ணானந்தஞான ஸ்வரூபியான ஸ்ரீபரமாத்மன்
லோகதொளு = இந்த உலகத்தில்
பஹுரூப = பற்பல ரூபங்களை தரித்து. அதாவது ராம கிருஷ்ணாதி பல ரூபங்களை தரித்து, நடிப்பவர்களிலும்,

ரிஷிமுனிவர்களிலும் அந்தர்யாமியாக இருந்து பிம்பக்ரியைகளை நடத்தி.
மாதினலி = அந்தந்த ஜீவர்களின் தகுதிக்கேற்ப அவரவர்களில் நடவடிக்கைகளை செய்து
தோஷிசுவனு = மகிழ்விக்கிறான்.
அவரவர = அந்தந்த மக்களின்
மனதபிலாஷெகள = மனதில் இருக்கும் விருப்பங்களை
பூரைசுவ போஷிசுவ = நிறைவேற்றி அருள்வான்

நாடகங்களில் ராம கிருஷ்ணாதி வேடங்களை தரித்து, நாடகங்களில் நடிக்கும்போது, பார்ப்பவர்களுக்கு அவர்கள் ராம கிருஷ்ணர்களைப் போலவே தோன்றுவதைப் போல, அவர்களின் மனதை ஈர்த்துவிடுவதைப்போல, தோஷங்கள் அற்றவனும், மங்களாத்மகனும், பூர்ணானந்த ஞானஸ்வரூபனும் ஆன ஸ்ரீபரமாத்மன், ராமகிருஷ்ணாதி ப்ராக்ருத ரூபங்களை தரித்து, கௌஸல்யா முதலானவர்களுக்கு இவன் என் மகன் என்று தோன்றுவதைப்போல, தன் பேச்சு நடவடிக்கைகளால் அவர்களை மகிழ்விப்பதைப்போல, பிம்பரூபத்தினால் அனைத்து பிராணிகளின் அந்தர்யாமியாக இருந்து, ஜீவ-ஜீவர்களுக்கு பரஸ்பரம் சம்பந்தம் இல்லாதிருந்தாலும், தேக சம்பந்தத்தினால் இவள் என் மனைவி, இவன் என் கணவன், இவன் என் மகன் என்று பலவித அபிமானங்களைத் தோற்றுவித்து, ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல செய்கிறான். ராமகிருஷ்ணாதி ரூபங்களால், தன்னை பஜிப்பவர்களின் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுகிறான். கணவன் மனைவி இவர்களில் இருந்து, பரஸ்பரம் அவர்களின் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுகிறான். அனைத்து ஜீவர்களிலும் இருந்து, அவர்களை காப்பாற்றுகிறான். 

***


#28 - வியாப்தி சந்தி

#28 - வியாப்தி சந்தி


மளல மனெகளமாடி3 மக்களு
கெலவு காலதொ3ளாடி3 மோத3தி3
து1ளிது3 கெ1டிசுவ தெ1ரதி3 லகு1மீரமண லோககள |
ஹலவு பகெயலி நிர்மிசுவ, நி
ஸ்சலனு தானாகி3த்து3 சலஹுவ
எலருணிய வோல் னுங்குவவகெல்லிஹுதோ3 சுக2து3க்க ||28


மளல = மண் அல்லது மண்ணினால்
மனெகள மாடி = வீடுகளை செய்து
மக்கள் = குழந்தைகள்
கெலவுகாலதலாடி = சிறிது நேரம் விளையாடிவிட்டு
மோததி = மகிழ்ச்சியுடன்
துளிது கெடிசுவ தெரதி = அதை எட்டி உதைத்து உடைத்து விடுவதைப் போல
லகுமிரமண = ஸ்ரீபரமாத்மன்
லோககள = உலகங்களை
ஹலவுபகெயலி = பற்பல விதங்களில்
நிர்மிசுவ = ஸ்ருஷ்டித்து
நிஷ்சலனு தானாகி = அ-ஸ்திரமான ஜடங்களில் ஸ்திரமாக தான் இருந்து
சலஹுவ = அனைத்தையும் காப்பாற்றுவான்
எலருணியவோல் = காற்றை உண்ணும் பாம்பு, தன் முட்டைகளை தானே உண்ணுவதைப் போல
நுங்குவவகெ = உண்ணும் பரமாத்மனுக்கு
சுகதுக்க = தேகங்களில் இருக்கும் சுக துக்கங்கள்
எல்லிஹதோ = எங்கு இருக்கும்? (இருக்கவே இருக்காது என்று பொருள்).

குழந்தைகள் விளையாடுவதற்காக மணலில் வீடு கட்டி சிறிது நேரம் மகிழ்ச்சியுடன் அதனுடன் விளையாடிவிட்டு, பிறகு தங்கள் கால்களிலேயே அதை எட்டி உதைத்து, அந்த மணல் வீட்டை இடித்துவிடுவார்கள். அந்தக் குழந்தைகளுக்கு அந்த வீடு கட்டும்போதும் மகிழ்ச்சியே, விளையாடும்போதும் மகிழ்ச்சியே, அதை இடிக்கும்போதும் மகிழ்ச்சியே. அதை கட்டும்போது, கட்டவேண்டுமே என்கிற ஆயாசம் இல்லை. அதை இடிக்கும்போது துக்கமும் இல்லை. அதுபோல, பரமாத்மனும் தன் லீலைகளால் கஜ துரகாதி 84 லட்ச யோனிகளில் அபரிமித ஜீவராசிகளை ஸ்ருஷ்டிக்கிறான். அதாவது, யானை குதிரை மனுஷ்யாதி ஸ்தூல சரீரங்களை ஜீவர்களின் லிங்க சரீரங்களின் மேல், ஒரு உறையாக ஸ்ருஷ்டிக்கிறான். அந்த தேகங்களில் அவர்களைப் போல இருந்து, கர்மங்களை செய்து, செய்வித்து, விளையாட்டினைப் போலவே அனைவரையும் காப்பாற்றுகிறான். 

கட்டிய வீட்டினை குழந்தைகள் இடிப்பதைப்போல, விளையாட்டினைப் போல அந்த சரீரங்களை தானே அழிக்கிறான். பூர்ணானந்த ஸ்வரூபனான ஸ்ரீபரமாத்மனுக்கு ஸ்ருஷ்டிப்பதால் மகிழ்ச்சியோ, நாசம் செய்வதால் வருத்தமோ இருப்பதில்லை. இதற்கு தாசராயர் இன்னொரு உவமையையும் கொடுக்கிறார். பாம்பு, தான் இடும் தன் முட்டைகளை, தானே தின்றுவிடுவதைப் போல, அப்போது அதற்கு சுக துக்கங்கள் எப்படி இல்லையோ, அதுபோல, ஸ்ரீபரமாத்மன் ஸ்ருஷ்டிக்கும்போதும், அழிக்கும்போதும், தான் அதற்கு சம்பந்தப்படாமல், அதாவது சுக துக்கங்களால் பாதிக்கப்படாமல் இருக்கிறான்.

***


Tuesday, March 31, 2020

#27 - வியாப்தி சந்தி

#27 - வியாப்தி சந்தி


கா131ப்பிண ஹிடி3து33டி3யலு
வேத3னெயு லோஹக3ளிக3ல்லதெ3
ஆதுதே1னை அனலகா3வ்யதெ ஏனமாடித3ரு |
ஆதிதே3வனு சர்வஜீவர
கா1து கொண்டிஹனொளஹொரகெ3 து:
க்கா2திக3ளு சம்பந்தவாகுவவேனு சின்மயகெ3 ||27


காதகப்பிண = நெருப்பில் நன்றாக காய்ச்சிய இரும்பினை
ஹிடிது படியலு = பிடித்து அடித்தால்
வேதனெயு = அந்த அடியின் வலி, அந்த இரும்புக்கு மட்டுமே வலிக்கும்
ஏனு மாடிதரு = என்ன செய்தாலும்
அனலகெ = நெருப்புக்கு
ஆதுதேனை = என்ன ஆகப்போகிறது? (ஒன்றும் ஆகாது என்று பொருள்).
ஆதிதேவன் = அனாதி காலத்திலிருந்தும் இருக்கும் ஸ்ரீபரமாத்மன்
சர்வஜீவர = அனைத்து ஜீவர்களின் உள்ளே வெளியே
காதுகொண்டிஹ = காத்துக் கொண்டிருக்கிறான்
சின்மயகெ = சிதானந்த ஸ்வரூபனான ஸ்ரீபரமாத்மனுக்கு
துக்காதிகள சம்பந்தவு = தேக சம்பந்தமான துக்கங்களின் சம்பந்தம்
ஆகுவுதேனை = என்றைக்கும் ஆகாது (வராது).

இரும்பை நீளமாக்க வேண்டுமெனில், அதனை நன்கு காய்ச்சி அடிப்பர். அப்போது அந்த அடியானது, அந்த இரும்பிற்கு வலிக்குமே தவிர, அதற்குள் இருக்கும் அந்த நெருப்பிற்கு ஒன்றும் / எதுவும் ஆகாது. அதுபோலவே, பரமாத்மனும் அனைத்து ஜீவர்களின் உள்ளே வெளியே வியாப்தனாக இருந்தாலும், அவர்களுக்கு சம்பந்தப்படாமல், ஜீவர்களின் தேகங்களுக்கு ஆகும் துக்காதிகள், அந்த தேகத்தில் இருக்கும் பரமாத்மனுக்கு சம்பந்தப்படுவதில்லை.

***


#26 - வியாப்தி சந்தி

#26 - வியாப்தி சந்தி


பொ1ந்தி3கொ1ண்டி3ஹ சர்வரொளு ச
ம்ப3ந்த வாக3தெ சக1லக1ர்மவ
ரந்த33லி தா1 மாடி மாடிஸி தத்ப2லக3ளுணதெ3 |
கு1ந்த3தெ3 அணு மஹத்தெ1னிப க31
மந்தி3ரதி3 சர்வத்ர து1ம்பி3
பா3ந்த3ளத3 தெ1ரனந்தெ1 இருதிப்பனு ரமாரமண ||26


ரமாரமண = லட்சுமிபதியான பரமாத்மன்
சர்வரொளு = அனைத்து பிராணிகளிலும்
சம்பந்தவாகதெ = ஸ்தூலதேக சம்பந்தம் இல்லாமல்
சகல கர்மவ = அனைத்து கர்மங்களையும்
அவரந்ததலி = அந்த பிராணி செய்வதைப் போல தானும் செய்து, செய்வித்து
தத்பலகள = அந்த கர்மங்களின் பலன்களை
உணதே = தான் அனுபவிக்காமல்
அணுமஹத்தெனிப = சிறியதும், பெரியதுமான
கடமந்திரதி = குடம், பாத்திரம் ஆகியவற்றின் உள்ளே வெளியேயும்
சர்வத்ர = அனைத்து இடங்களிலும்
தும்பிஹ = நிலைத்திருக்கும்
பாந்தளத தெரனந்தெ = ஆகாயத்தைப் போல
இருதிப்பனு = இருக்கிறான்

ஸ்ரீபரமாத்மன், அனைத்து பிராணிகளிலும், அவர்களின் தேக இந்திரியங்களின் சம்பந்தம் இல்லாமல், ஜீவர்களிலும்  இந்திரியங்களிலும், அவர்களின் ஸ்தூல தேகத்தில் வியாப்தனாக இருந்து, அவரவர்கள் செய்யும் கர்மங்களை அவர்களைப் போல தானே செய்து, அவர்களிடமிருந்து செய்வித்து, அந்த பலன்களை தான் உண்ணாமல், அவர்களுக்கே கொடுப்பான். சிறிய குடமோ, பெரிய குடமோ, அவற்றின் உள்ளே முழுவதுமாக ஆகாயம் எப்படி நிரம்பியிருக்கிறதோ அப்படியே ஸ்ரீபரமாத்மன் சூக்‌ஷ்மரான (சிறியவர்) ஜீவர்களிலும், பெரியவர்களின் ஜீவர்களிலும், தனக்கும் அதற்கும் சம்பந்தப்படாமல் (நிர்லிப்தனாக) வியாபித்திருக்கிறார்.

***


Monday, March 30, 2020

#25 - வியாப்தி சந்தி

#25 - வியாப்தி சந்தி


ஜலவ னப1ஹரிசுவ க3ளிகெ33
ட்ட1லனுளிது3 ஜைக4ண்டெ கை1பி1டி3
தெ3ளெது3 ஹொடெவந்த33லி சந்த111ர்த்ரு தா1னாகி3 |
ஹலத4ரானுஜ புண்ய பாபத
2லக3ளனு தேவாசுரர க3
தொளு விபா43வ மாடி உணிசுத சாக்‌ஷியாகிப்ப ||25


ஜலவனபஹரிசுவ = நீர் பிடிக்கும்
களிகெ பட்டலு = நாழிகையைக் குறிக்கும் கிண்ணம் (பாத்திரம்)
உளிது = விட்டு
ஜைகண்டெ = ஜாங்கட வாத்தியத்தை
கைபிடிதெளெது = கை பிடித்து தன்னிடம் இழுக்கும்
ஹொடெவந்ததி = அடிப்பதைப் போல
ஸந்தத = எப்போதும்
தானு = ஸ்ரீபரமாத்மன்
கர்த்ரு = செய்பவனாக
ஹலதரானுஜ = பலராமனின் தம்பியான ஸ்ரீபரமாத்மன்
புண்யபாபத பலகளனு = அவரவர்களின் புண்ணிய பாவங்களின் பலன்களை
தேவாசுரர கணதொளு = தேவதைத்யர்களின் குழுவில்
விபாகவமாடி = பிரித்து
உணிசுத = கொடுப்பான்
சாக்‌ஷியாகிப்ப = அதற்கு தானே சாட்சியாகவும் இருப்பான்.

கடிகாரம் இல்லாத அந்த காலத்தில், காலத்தைக் கண்டுபிடிப்பதற்காக 4 அங்குல அகலம், 4 அங்குல ஆழமும், அடியில் ஒரு சிறிய துளை கொண்ட ஒரு பாத்திரத்தை (அதன் பெயரே ‘களிகெ பட்டலு’ - நாழிகையை சொல்லும் பாத்திரம்) வேறொரு பெரிய நீருள்ள பாத்திரத்தில் மூழ்குமாறு செய்வர். அந்த துளையுள்ள பாத்திரம் எப்போது முழுமையாக நீரில் மூழ்குகிறதோ, அப்போது ஒரு நாழிகை ஆகிவிட்டது என்று பொருள். 

இந்த பாத்திரத்தை செய்யும் விதத்தை பாகவதத்தில் இப்படி சொல்லியிருக்கின்றனர்.

த்வாதஷார்த்த பலோன்யானஞ் சதுர்பிச்ஷ துரங்குலை: ||
ஸ்வர்ணமாப்யை: க்ருதச்சித்ரம் யாவத் ப்ருஸ்தம் ஜலம்பிபேத் ||

ஆருபலகாளு என்றால் 18 தோலா (1 தோலா = 11.66கிராம்) அரிசி பிடிக்கும் ஒரு பித்தளை அல்லது தாமிர பாத்திரம். அதன் நடுவில் 4 அங்குல நீளத்திற்கு ஒரு துளையைப் போட்டு அந்த பாத்திரத்தை மேலிருந்து பிடிப்பதற்கு ஒரு கயிறு கட்டவேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் இந்த பாத்திரத்தை விட்டால், நடுவில் இருக்கும் துவாரத்தின் மூலமாக இதில் நீர் நிரம்பும். துளையுள்ள பாத்திரம் முழுதாக முழுகிவிட்டால், ஒரு நாழிகை ஆகிவிட்டது என்று பொருள். இப்படி ஒரு நாழிகை முடிந்தவுடன், பக்கத்தில் இருக்கும் நேரம் காப்பாளர், 1,2,3 என்று நாழிகைகளுக்கேற்ப ஜாங்கடையில் சத்தம் செய்து நேரத்தை தெரிவிப்பார். இப்படி நீர் நிரம்புகிறது என்பதை அந்த காப்பாளருக்குத் தெரியுமே தவிர, அந்த பாத்திரத்திற்கு தெரிவதில்லை. அப்படியே அந்த பாத்திரம் முழுகியபிறகு, மறுபடி அதை வெளியில் எடுத்து, நீரைக் கொட்டிவிட்டு, மறுபடி அந்த பெரிய பாத்திரத்தில் வைப்பார்.

ஜீவர்களின் விஷயத்தில் பரமாத்மனும் இந்த நேரம் காப்பாளரைப் போல இருப்பான். பெரிய பாத்திரத்தில் இருக்கும் நீரே, புண்ணிய பாவங்கள். ஜீவர்களின் ஸ்வபாவத்தை அறிந்து, அவர்களின் ஸ்தூல தேகத்தை ஸ்ருஷ்டித்து, பாத்திரத்து நடுவில் துளை போட்டு, அதில் நீர் நிரம்புவதைப்போல, பரமாத்மனும் ஜீவர்களின் ஸ்தூல தேகத்தில் அவர்களுக்கு சிறிது ஸ்வாதந்த்ர்யம் என்னும் துளையைக் கொடுத்திருக்கிறார். அதனால், சிறிது ஆசை மட்டும் தோன்றுகிறது. 

பாத்திரம் தானாகவே நீரை நிரப்பினாலும், பாதுகாப்பாளர் அதன் அருகில் அமர்ந்து அது எவ்வளவு நீர் கொண்டிருக்கிறது என்பதை அறிவானோ, அது போல, ஜீவனும் அஸ்வதந்த்ரனாக பரமாத்மனால் அருளப்பட்டு, தேகத்தில் அவன் அளித்த அல்ப ஸ்வாதந்த்ர்யத்தால், தன் கர்மபலன்களுக்கு ஏற்ப,  புண்ணிய பாவங்களை ஏற்றுக்கொள்கிறான். பாத்திரம் நிரம்பிவிட்டது என்பதை அறியும் காப்பாளர், ஜாங்கடவை அடிப்பது போல, பரமாத்மன், ஜீவர்களின் சாதனை முடிந்துவிட்டது என்பதை அறிந்து, அவர்களின் தகுதிக்கேற்ப பலன்களைக் கொடுக்கிறார். 

ஜாங்கடையில் எவ்வளவு முறை சத்தம் வருகிறது என்பதை வைத்து நேரத்தை மனிதர்கள் அறிவதைப் போல, ஜீவர்கள் தத்தம் புண்ணிய பாவ கர்ம பலன்களை அனுபவிக்கின்றனர். இப்படி நேரத்தை தெரிவிக்கும் காப்பாளர், அதற்கு எப்படி சாட்சியாக இருக்கிறாரோ, அதுபோலவே பரமாத்மனும், பலன்களை தேவ தைத்யர்களுக்கு பிரித்துக்கொடுத்து, தான் அதற்கு சாட்சியாக இருக்கிறார். 

***