ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Showing posts with label விபூதி சந்தி. Show all posts
Showing posts with label விபூதி சந்தி. Show all posts

Friday, May 8, 2020

#40 - விபூதி சந்தி

#40 - விபூதி சந்தி


1ரி இடா3 வத்ஸரனு சம்வ
த்ஸர தொ3ளனிருத்தா3தி3 ரூப1
4ரிஸி பார்ஹஸ்ப1த்1ஸௌரப4 சாந்த்3ரமனு எனிஸி |
இருதி1ஹ ஜகன்னாத2விட்டல
ஸ்மரிஸுப3வரனு ந்தயிசுவனு
உருபராக்ரமனுசித சாத4னெ யோக்3யதெயனரிது1 ||40


பரி இடா வத்ஸரனு சம்வத்ஸரதொளு = பரிவத்ஸர, இடாவத்ஸர, வத்ஸர, அனுவத்ஸர, ஸம்வத்ஸர என்று இருக்கும் ஐந்து விதமான சம்வத்ஸரங்களில், 
அனிருத்தாதி ரூபவ = அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ, நாராயண என்னும் ஐந்து ரூபங்களை தரித்து
பார்ஹஸ்பத்ய = பார்ஹஸ்பத்ய-மான என்று
ஸௌர = ஸௌர-மான என்று
ப = நட்சத்திர-மான என்று
சாந்த்ரமனு = சாந்திர-மான என்று (மொத்தம் 5 விதமாக)
எனிஸி = என்று பெயரைக் கொண்டு
இருதிஹ = இருக்கிறான்
உருபராக்ரம = பஹு பராக்ரமசாலியான
ஜகன்னாதவிட்டல = ஜகன்னாத விட்டலனு
ஸ்மரிசுவரன = நினைப்பவர்களை
உசித சாதனெ யோக்யதெயனரிது = அவரவர்களின் தகுதிக்கேற்ப சாதனையை அறிந்து
எந்தூ = எப்போதும்
ஸந்தயிப = காப்பாற்றுவான்

சந்தியை முடிக்கும் இந்த ஸ்லோகத்தில், காலரூபியான பரமாத்மனின் விபூதியை விவரிக்கிறார் தாசராயர். பாகவதம் 3ம் ஸ்கந்தம் 12ம் அத்தியாயம் ஸ்லோகம் 14ல் : 

ஸம்வத்ஸரம் பரிவத்ஸர இடாவத்ஸர ஏவச |
அனுவத்ஸரோ வத்ஸரஷ்ச விதுரைவம்ப்ரபாஷ்யதே |

இங்கு 5 வித வத்ஸரங்களின் பெயர் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஸ்லோகத்தின் பாகவத தாத்பர்ய வாக்கியம் :

இடாவத்ஸர நாமாஸௌ நக்‌ஷத்ர த்வாதசேஸ்தித: |
திதீனாந்த்வாதசாவர்த்தேயோ ஹரி: ஸோனுவத்ஸர: ||
வத்ஸரோய: ஸ்திதஸ்தன் ஹாம்ஷஷ்ட்யுத்தர ஷதத்ரயே |
குர்வாவர்த்தத்வாதஷாம்ஷோய: ஸ்தித: பரிவத்ஸர: ||
ஸௌரத்வாதஷமாசேஷு ய:ஸ்தித: ஸம்வத்ஸரோ ஹரி: |
ஏவம் ஸ கால நாமாபிகாலஸ்த: பரமேஷ்வர இதி ||

அஸ்வினி முதலான நட்சத்திரங்களில், அஸ்வினியோ வேறு எந்த நட்சத்திரமோ, 12 முறை வந்தால், அது ஒரு ஆண்டு ஆகிறது. இதற்கு இடா வத்ஸரம் என்று பெயர். 

12 அமாவாசைகள் முடிந்தால் ஒரு ஆண்டு ஆகிறது. இந்த ஆண்டின் நியாமகனான பரமாத்மனுக்கு அனுவத்ஸர என்று பெயர்.

360 நாட்கள் முடிந்தால் ஆகும் ஆண்டின் நியாமகனான பரமாத்மனுக்கு வத்ஸர என்று பெயர். 

(குரு) பிருஹஸ்பதி ஒரு ராசியை விட்டு இன்னொரு ராசிக்கு செல்லும் காலமான ஒரு ஆண்டின் நியாமகனான பரமாத்மனுக்கு பரிவத்ஸர என்று பெயர். 

சூரியன் 12 ராசிகளில் சஞ்சரிக்கும் காலமான ஒரு ஆண்டின் நியாமகனான பரமாத்மனுக்கு சம்வத்ஸர என்று பெயர். 

இப்படி, கால நியாமகனான பரமாத்மனுக்கு காலன் என்று பெயர். இப்படியாக சொன்ன விதத்தில், பார்ஹஸ்பத்ய, ஸௌர, அனுஸௌர, நட்சத்திர, சாந்திரமான என்னும் ஐந்து விதமாக கணிக்கும் பரிவத்ஸராதி ஐந்து பெயர்களைக் கொண்டிருக்கிறான். இந்த 5 ரூபங்களில் அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ, நாராயண என்னும் ஐந்து ரூபங்களால் வசிக்கிறான். இதில் அனுஸௌர என்றால் 360 பகல்களைக் கொண்ட ஆண்டிற்கு பெயர். இப்படிப்பட்ட சிறந்த பராக்ரமியான அஸ்மத் அந்தர்யாமியான பிம்பரூபி ஸ்ரீமத் ஜகன்னாதவிட்டலனை நினைப்பவர்களின் தகுதிக்கேற்ப அவர்களால் சாதனையை செய்வித்து, அவர்களுக்கு சுகங்களைக் கொடுத்து அருள்வான்.

விபூதி சந்தி என்னும் 5ம் சந்தி முடிவுற்றது.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

Thursday, May 7, 2020

#39 - விபூதி சந்தி

#39 - விபூதி சந்தி


பூ1ர்வ த3க்‌ஷிண பஸ்சிமோத்தர
பார்வதீ1பதி1 அக்3னி வாயு சு
ஷார்வரீசர திக்3வலயதொ3ளு ஹம்ஸ நாமக1னு |
ஸார்வகா1லதி3 சர்வரொளு சுர
ஸார்வபௌமனு ஸ்வேச்செயலி ம
த்தோ1ர்வரிகெ3 கோ3சரித வ்யக்தாத்ம நெந்தெ3னிப ||39


பூர்வதக்‌ஷிண பஸ்சிமோத்தர = கிழக்கு தெற்கு வடக்கு மேற்கு திசைகளில்
பார்வதிபதி = ருத்ரர் வசிக்கும் ஈசான்யம்
அக்னி, வாயு,
சுஷார்வரீசர = நள்ளிரவில் சஞ்சரிக்கும் அசுரனான நிரருதியின் திசை
திக்வலயதொளு = திக்கு, திசைகளில்
ஹம்ஸ நாமகனு = ஹம்ஸ நாமக பரமாத்மன் (இருக்கிறான்)
சுரசார்வபௌமனு = தேவதா சக்ரவர்த்தியான ஸ்ரீபரமாத்மன்
சர்வகாலதி = அனைத்து காலங்களிலும் (எப்போதும்)
சர்வரொளு = எல்லா பிராணிகளிலும்
ஸ்வேச்செயலி = தன் விருப்பத்தின்படியே
மத்தோர்வரிகெ = வேறொருவருக்கு
கோசரிஸதெ = யார் கண்ணுக்கும் புலப்படாமல்
அவ்யக்தாத்மனு = ஸ்வரூபத்தைக் காட்டாமல் இருப்பவன்
எந்தெனிஸி = என்று இருப்பான்.

கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, ஈசான்ய, அக்னி, வாயு, நிரருதி - என அனைத்து திக்கு விதிக்குகளில் ஹம்ஸ நாமக பரமாத்மன் நியாமகனாக இருக்கிறான். இப்படியாக, தேவதா சார்வபௌமனான ஸ்ரீஹரி, எல்லா காலங்களிலும், அனைத்து பிராணிகளிலும், தன் விருப்பப்படியே இருந்தவாறு, வேறு யாரின் கண்களுக்கும் புலப்படாமல் ‘அவ்யக்தாத்ம’ என்னும் பெயரைப் பெறுகிறான். 

‘இந்த்ரோ நலோ தண்டதரஸ்ச ரக்‌ஷோ பாஷாயுதோ வாயு தனேஷ ருத்ர:’ என்னும் ஸ்லோகத்தில் நிரருதிக்கு அசுரன் என்று சொல்லியிருக்கும் ஆதாரத்தின்படியே தாசராயரும் சொல்லியிருக்கிறார். 

***

#38 - விபூதி சந்தி

#38 - விபூதி சந்தி


ஏனு மாடு3வ க1ர்மக3ள லகு1
மி நிவாஸனி க3ர்ப்பி னு
ந்தா3ன பூர்வக1தி3ந்த3 ந்தே3ஹிஸதெ3 தி3னதி3னதி3 |
மானநிதி4 கை1கொ1ண்டு3 சுக2வி
த்தா3னத3ந்தெய்ப த்1ருணஜல
தே4னு தானுண்ட3னவரத1 பால்க3ரெவ தெ1ரனந்தெ1 ||38


ஏனுமாடுவ = எப்படியாவது செய்யும்
கர்மகளு = புண்யபாவ கர்மங்களை
லகுமி நிவாஸனிகெ = ஸ்ரீனிவாசனுக்கு
அனுசந்தான பூர்வகதிந்த = கர்மங்களை பரமாத்மனே செய்விக்கிறான் என்னும் சிந்தனையுடன்
ஸந்தேஹிஸதெ = எவ்வித சந்தேகமும் படாமல்
தினதினதி = தினந்தோறும்
அர்ப்பிஸெ = அர்ப்பித்தால்
மானநிதி = மானமே நிதியாக உள்ள ஸ்ரீஹரி
கைகொண்டு = ஏற்றுக்கொண்டு
சுகவித்து = சுகங்களைக் கொடுத்து
ஆனதர = பக்தனை
தேனு = பசு
த்ருணஜலதானுண்டு = புல்லைத் தின்று, நீரைக் குடித்து
அனவரத = எப்போதும் நிலைத்திருப்பவன்
பால்கரெவ = பாலைக் கொடுக்கும்
தெரதந்தெ = இதே போல
ஸந்தெயிப = மகிழ்ச்சியைக் கொடுக்கிறான். 

பாவ புண்ணிய காரியங்களை சந்தேகமில்லாமல் பரமாத்மனுக்கு அர்ப்பிக்க வேண்டும் என்கிறார் தாசராயர். நாம் தினந்தோறும் எந்த புண்ணிய, பாவ செயல்களை செய்தாலும், ‘நாஹம் கர்த்தா ஹரி:கர்த்தா’ என்ற சிந்தனையுடன், இந்த செயல்களை செய்தது நான் அல்ல, பரமாத்மன் செய்வித்திருக்கிறான் அதையே நான் செய்தேன் என்று நினைத்து, பாவங்களை நாம் பகவந்தனுக்கு சமர்ப்பித்தால் நமக்கு பாவம் வந்துவிடுமோ என்கிற சந்தேகம் இல்லாமல் அனைத்தையும் அவனுக்கு அர்ப்பித்தால், ஸ்ரீபரமாத்மன் அவற்றை ஏற்றுக்கொண்டு, பாவங்களை சுட்டு, பசு எப்படி புல்லைத் தின்று, நீரைக் குடித்து, பாலைக் கொடுக்கிறதோ, அப்படியே புண்யகர்மங்களின் பலன்களை அதிகப்படுத்தி, சுகங்களைக் கொடுத்து, நமக்கு அருள்வான். 

***

Wednesday, May 6, 2020

#37 - விபூதி சந்தி

#37 - விபூதி சந்தி


அரியதி3த்3ரு எம்மொளித்த3
வரத1 விஷயக3ளும்ப3 ஞானோ
த்தரதி தனக3ர்ப்பிஸலு சித்சுக2வித்து ந்தெய்ப |
ரிது1 கா1ல ப்ரவஹக3ளு
ண்ட3ரெயு ரி காணதி3ரெ ப1ரிவுவு
மரளி மஜ்ஜன பான கர்மக3ளிந்தெ3 சுக2வஹவு ||37


அரியதிர்தரு = நமக்கு தெரியவில்லை என்றாலும்
எம்மொளித்து = நமக்குள் இருந்து
அனவரத = எப்போதும் இருப்பவன்
விஷயகளும்ப = விஷயசுகங்களின் சாரத்தை ஏற்றுக்கொள்பவன்
ஞானோத்தரதி = ஞானோதயம் வந்தபிறகு (நமக்கு விவரம் தெரிந்தபிறகு)
தனகெ = பரமாத்மனுக்கு
அர்ப்பிஸலு = சமர்ப்பணம் செய்தால்
சித்சுகவித்து = நிரந்தரமான சுகத்தைக் கொடுத்து (முக்தியைக் கொடுத்து)
ஸந்தெயிப = சமாதானம் செய்வான் (அருள்வான்)
ஸரிது கால = மழைக்காலத்தில்
ப்ரவஹகளு = வரும் வெள்ளங்கள்
கண்டரெயு ஸரி = ஒருவர் பார்த்தாலும் சரியே
காணதிரெ = காணவில்லையென்றாலும் சரியே
பரிவவு = பாய்ந்து கொண்டே இருக்கும்
மரளி = வெள்ளம் வருகிறது என்பதை மக்கள் அறிந்தபிறகு
மஜ்ஜனபான கர்மகளிந்த = ஸ்னான பானாதி கர்மங்களை செய்தால்
சுகவஹவு = அவர்களுக்கு சுகங்களைக் கொடுப்பான். 

அஞ்ஞானத்தால், நாம் செய்த காரியங்களை, சில காலங்களுக்கு, பரமாத்மனுக்கு அர்ப்பணம் செய்யாது இருந்தாலும், விஷயம் தெரிந்தபிறகு சமர்ப்பணம் செய்தாலும், அதனை ஸ்வீகரித்து, முக்தியைக் கொடுக்கிறான் என்று சொல்கிறார் தாசராயர். 

ஆற்று வெள்ளமானது, எப்படி யாரும் பார்க்கிறார்களோ, இல்லையோ, அது தன் பாட்டிற்கு பாய்ந்துகொண்டு போகிறதோ, அப்படி வெள்ளம் வந்திருக்கிறது என்று மக்களுக்கு தெரிந்தபிறகு, அது தணிந்தபின் ஆற்றில் செய்யப்படும் ஸ்னான பானங்களை செய்தால், எப்படி சுகங்களைக் கொடுக்கிறதோ, அப்படியே பரமாத்மன் நமக்குள் இருந்து, கர்மங்களை செய்விக்கிறான், விஷயசுகங்களை அனுபவிக்கிறான் என்று நமக்கு தெரியாவிட்டாலும், அவன் அந்த விஷய சுகங்களை ஏற்காமல் விடமாட்டான். அப்படி அவன் ஏற்கிறான் என்ற விஷயம் நமக்குத் தெரிந்தபிறகு, நாம் செய்த செயல்களை பரமாத்மனுக்கு சமர்ப்பித்தால், நிரந்தர சுகமயமான முக்தியைக் கொடுத்து அருள்வான். ஆகையால், நாம் செய்த அனைத்து கர்மங்களையும் பரமாத்மனே செய்து, செய்விக்கிறான் என்று அறிந்து, அதனை அவனுக்கு அர்ப்பிக்க வேண்டும் என்பது கருத்து. 

***

#36 - விபூதி சந்தி

#36 - விபூதி சந்தி


நதி3ய ஜல நதி3கெ3ரெவ தெ1ரத3
ந்த33லி ப4கவத்3தத்த த4ர்மக3
ளுத3தி4 ஷயனனிக3ர்ப்பிசுத1 வ்யாவ்ருத்த1 நீனாகி3 |
விதி4 நிஷேதா4தி33ளிகொளகா3
33லெ மாடு313ர்வியந்த3தி3
பது3மனாப4ன சகலகர்மக3ளல்லி நெனெயுதிரு ||36


நதிய ஜல = ஆற்று நீரை
நதிகெ எரெவந்ததலி = ஆற்றிலேயே (அர்க்யத்தை) கொடுப்பதைப் போல
பகவத்தத்த = பரமாத்மன் கொடுத்த
தர்மகளு = தர்மங்களை (பதார்த்தங்களை)
உததிஷயனனிகெ = பாற்கடலில் படுத்திருக்கும் ஸ்ரீஹரிக்கு
அர்ப்பிஸுத = அர்ப்பித்தவாறு
நீ = நீ
வ்யாவர்த்தனாகி = நானே செய்தேன் என்னும் சிந்தனையை விட்டு, அதாவது ஸ்வதந்த்ர கர்த்ருத்வ அபிமானத்தை விட்டு
விதி நிஷேதாதிகளிகொளகாகதலெ = செய்ய வேண்டியதை, செய்யக்கூடாதவற்றை, நானே செய்தேன், நானே விட்டேன் என்ற புத்திக்கு (அஹங்காரத்தை) ஆளாகாமல் 
மாடுத = அ-ஸ்வதந்த்ரனான நான், பரமாத்மன் செய்வதைப்போல செய்வேன் என்னும் சிந்தனையுடன் கர்மங்களை செய்தவாறு
தர்வியந்ததி = கரண்டிகளைப் போல என்றால், சாம்பார், ரசம் என அனைத்து பாத்திரங்களிலும் கரண்டி எப்படி மூழ்குகிறதோ அது போல. அதாவது. அஸ்வதந்த்ரமான கரண்டி, தன்னை யார் பிடித்திருக்கிறார்களோ, அவர்கள் செய்வதற்கேற்ப வெவ்வேறு பாத்திரங்களில் மூழ்கி எழுகிறது என்ற உதாரணம் இங்கு சொல்லப்படுகிறது. சிலர் ஜீவருக்கு கர்த்ருத்வமே இல்லை என்னும் விஷயத்தில் கரண்டி உவமையை சொல்கின்றனர். அப்படி சொன்னால், சித்தாந்தத்திற்கும், லௌகிக உவமைக்கும் விரோதம் ஏற்படுகிறது. ரசம், சாம்பார் பாத்திரங்களில் மூழ்கும் கரண்டிக்கு எப்படி காரம், இனிப்பு ஆகிய துக்கங்கள் இல்லையோ, அப்படியே, ஜீவனுக்கும் நரக, ஸ்வர்க்காதிகளால் ஆகும் துக்க சுகங்கள் இல்லை என்று ஆகிறது. ’ஜீவோபிகர்த்தா’ ஆகிய வாக்கியங்கள் பயனில்லை என்று ஆகிறது. ஆகையால், கரண்டி உவமையை அ-ஸ்வதந்த்ர கர்த்ருத்வ விஷயத்தில் மட்டும் உவமை என்று நினைக்கவேண்டும். 
சகலகர்மகளல்லி = நாம் செய்யும் அனைத்து கர்மங்களையும்
பதுமனாபன = ஸ்ரீபத்பனாபனே ஸ்வதந்த்ரனாக செய்கிறான் என்று
நெனவுதிரு = நினைத்திரு.

***

Tuesday, May 5, 2020

#35 - விபூதி சந்தி

#35 - விபூதி சந்தி


பி3ம்ப3ரெனிபரு ஸ்வோத்தமரு ப்ரதி
பி3ம்ப3ரெனிபரு ஸ்வாவரரு ப்ரதி
பி3ம்ப பிம்பக3ளொளகெ3 கேவல பி3ம்ப3 ஹரியெந்து3 |
ம்ப்4ரமதி3 பா1டுத1லி நோடு3
உம்பு3டுவுதி3டுவுது3 கொ1டு3வுதெ3
ல் லம்பு3ஜாம்ப31னங்க்4ரி பூஜெக3ளெந்து3 நலிதா3டு3 ||35


ஸ்வோத்தமரு = தன்னைவிட உத்தமர்
பிம்பரெனிபரு = பிம்பர் என்று சொல்லிக் கொள்வர்
ஸ்வாவரரு = தன்னைவிட குண, ஞானங்களை குறைவாகக் கொண்டவர்
பிரதிபிம்ப = பிரதிபிம்பர் என்று அறியவேண்டும்
பிரதிபிம்ப பிம்பரொளகெ = பிரதிபிம்ப ஜீவர், பிம்பரின் உள்ளே
கேவல பிம்ப = பிம்பரூபி
ஹரியெந்து = ஸ்ரீபரமாத்மனே என்று
ஸம்ப்ரமதி = மகிழ்ச்சியுடன்
பாடுதலி = பாடும்போது
நோடுத = பார்க்கும்போது
உம்புடுவது = உண்வது மற்றும் வஸ்திராதிகளை உடுத்துவது
இடுவுது = ஆபராணாதிகளை அணிவது
கொடுவுது = மற்றவர்களுக்கு தானம் கொடுப்பது
எல்ல = இந்த அனைத்து செயல்களையும்
அம்புஜாம்பகன = தாமரைக் கண்ணனான ஸ்ரீபரமாத்மனின்
அங்க்ரிபூஜெகளெந்து = பாதபூஜை என்று 
நலிதாடு = குதித்துக் கொண்டாடு.

எங்கெங்கு, பிம்பபிரதிபிம்ப ரூபங்களை சிந்திக்க வேண்டும் என்பதை சொல்கிறார். மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தில், 1ம் அத்தியாயத்தில்:

ஆபாஸ கோஸ்யபவன: பவனஸ்ய ருத்ர: ஷேஷாத்மகோ கருட ஏவச ஷக்ரகாமௌ |
வீந்த்ரேஷயோஸ் ததபரேத்வனயோஷ்ச தேஷாம்ருஷ்யாதய: க்ரமஷ ஊனகுணா: ஷதாம்ஷாத் ||

பரமாத்மனின் நேரடி பிரதிபிம்பர் - வாயுதேவர். வாயுதேவரின் பிரதிபிம்பர் ருத்ரதேவர். அந்த ருத்ரதேவரே அடுத்து சேஷ பதவிக்கு வருபவர். கருடனும் வாயுதேவரின் பிரதிபிம்பரே. கருடசேஷாதிகளின் பிரதிபிம்பர் இந்திர மன்மதர்கள். இவர்களின் அடுத்தவர்கள் இவர்களுக்கு பிரதிபிம்பர் என்று இப்படியே 100 குணங்கள் குறைவாக இருப்பவர்கள், ரிஷிமுனிகள். இவர்கள் அனைவரும் ஸோத்தமரின் பிரதிபிம்பர்கள் என்று சொல்கிறார். இதே விஷயத்தையே தாசராயர் இங்கு சொல்கிறார். 

நம்மைவிட உத்தமர்களை (சிறந்தவர்களை) நமக்கு பிம்பரூபி என்றும், நம்மைவிட குணத்தில் சிறந்தவர்களை நமக்கு பிரதிபிம்பர் என்றும், நாம் ஸோத்தமருக்கு பிரதிபிம்பர், ஸ்வாவரருக்கு பிம்பரூபி என்றும் சொல்கிறார். இந்த பிம்பஜீவிகளுக்கும், பிரதிபிம்ப ஜீவிகளுக்கும், முக்கியமான பிம்பரூபி பரமாத்மன் என்று அறிந்து, நாம் உண்பதை, உடுத்துவதை, வாங்குவதை, கொடுப்பதை - அதாவது செய்யும் அனைத்தையும் நம் அந்தர்யாமியான பிம்பரூபியான தாமரைக் கண்ணனின் பூஜை என்று நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதே பொருள். 

***

#34 - விபூதி சந்தி

#34 - விபூதி சந்தி


1ன்னடி3ய கைபி1டி3து3 நோட3லு
1ன்னிரவு வ்யா பவ்யதி3
கண்ணிகொ3ப்புவ தெரதி3 அனிருத்த3னிகெ3 ஈ ஜக3வு |
பி4ன்னபி4ன்னவெ தோ1ருதி1ப்புது3
ஜன்யவாது33ரிந்த3 ப்ரதி பி3
ம்ப3ன்ன மயகா3னெந்தரிது3 பூஜிலு கைகொம்ப3 ||34


கன்னடிய கைபிடிது = கண்ணாடியை கையில் பிடித்துக்கொண்டு
நோடலு = பார்த்தால்
தன்னிரவு = தன் உருவம்
ஸவ்யாபஸவ்யதி = இடது வலமாக
கண்ணிகெ = கண்ணிற்கு
ஒப்புவ = தெரிவது போல
அனிருத்தனிகெ, ஈ ஜகவு = அனிருத்தனுக்கு, இந்த உலகம்
பின்னபின்னவெ = வெவ்வேறாக
தோருதிப்பது = தோன்றுகிறது
ஜன்யவாதுதரிந்த = பிம்பரூபத்திலிருந்து தோன்றியதால்
ப்ரதிபிம்ப = தான் பிரதிபிம்பன்
அன்னமய = அன்னமயன்
எந்தரிது = என்று அறிந்து
பூஜிஸலு = பூஜித்தால்
கைகொம்ப = ஏற்றுக்கொள்வான். 

அனிருத்த நாமக பரமாத்மனுக்கு, இந்த உலகம் பிரதிபிம்ப ரூபமானது என்று சொல்லி, முந்தைய பத்யங்களில் கூறிய வியாப்தோபாசனையால் தெரியும் ஜீவ பரமாத்மனின் அபேத சந்தேகத்தை இங்கு பரிகரிக்கிறார். அது எப்படியெனில், தேகமே ரதம், பரமாத்மனே அதில் அமர்ந்திருப்பவன். ஆகிய பத்யங்களால் பரமாத்மன் வேறு (தனியான) ஜீவன் வேறு இல்லையோ என்னவோ என்னும் சந்தேகம் வந்தால் அதனை இந்த ‘கன்னடிய கைபிடிது’ என்னும் பத்யத்தில் தீர்த்து வைக்கிறார். 

கண்ணாடியை தன் கையில் பிடித்து தன் முகத்தைப் பார்த்தால், முகம் இடது வலமாக மாறித் தெரிவதுபோல, ஸ்ரீ அனிருத்த நாமக ஸ்ரீபரமாத்மனுக்கு, இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து பிராணிகளும், கண்ணாடியில் தெரியும் பிரதிபிம்பத்தைப் போலவே வெவ்வேறு பிரதிபிம்பங்களாக தெரிகிறது. இதனால் பிம்பரூபியான மனிதர்களுக்கும், கண்ணாடியில் தெரியும் பிரதிபிம்பங்களுக்கும் எப்படி வேறுபாடு இருக்கிறதோ, அப்படியே, பரமாத்மனுக்கும், பிரதிபிம்பரூபிகளான ஜீவர்களுக்கும் வேறுபாடு உண்டு என்று சொல்வது போல் ஆயிற்று. 

பிம்பரூபியான அனிருத்த தேவரால் இந்த உலகம் ஸ்ருஷ்டிக்கப்பட்டிருப்பதால், ஜீவர்களை பிரதிபிம்பர் என்று சொல்ல வேண்டியதாயிற்று. மேலும், அன்னமயனான பரமாத்மன், அனைவருக்கும் உள்ளே இருந்து, அன்னாதிகளை ஏற்றுக்கொண்டு, ஜீவர்களை திருப்திப்படுத்துவதால், அன்னமயன் என்று அறிந்து ‘பிம்போஸி பிரதிபிம்போஸ்மி’ - நீங்கள் பிம்பன். நான் பிரதிபிம்பன் - என்று அறிந்து பக்தியுடன் பரமாத்மனை பூஜித்தால், பரமாத்மன் அதனை ஏற்றுக்கொண்டு நமக்கு அருள்வான். 

***

Monday, May 4, 2020

#33 - விபூதி சந்தி

#33 - விபூதி சந்தி


நித4ன த4னத3 விதா41 விக3தா1
ப்யதி4மவர்த்தி ஸாமக3
த்ரித3ஷக3ம்பூஜ்ய த்ரிககு3த்தா3ம ஷுப4நாம |
மது4மத2ன ப்4ருகு3ராம கோ41
வத3ர்வ பதா3ர்த்த2தொ3ளு து1தி3
மொத3லு தும்பி3ஹனெந்து3 சிந்தி1ஸு பி3ம்ப3ரூபத3லி ||33


நிதன = பிரளயகாரகனாகையால், பரமாத்மனுக்கு நிதன என்று பெயர்
தனத = ஐஸ்வர்யத்தைக் கொடுப்பவன் ஆகையால், தனத என்று பெயர்
விதாத = ஸ்ருஷ்டி கர்த்தன்
விகதாப்யதிகஸம = தன்னைவிட உத்தமரோ, சமரோ இல்லாதவன்
சமவர்த்தி = அனைவரிலும் சமமாக நிலைத்திருப்பவன்
சாமக = சாமவேதத்தால் புகழப்படுபவன்
த்ரிதஷகண சம்பூஜ்ய = 5 .. கணங்களால் பூஜிக்கப்படுபவன்
த்ரிககுப்தாம = ஸ்வேதத்வீப, அனந்தாஸன, வைகுண்ட என்னும் மூன்று இடங்களில் இருப்பவன்
மதுமதன = மது என்னும் தைத்யனைக் கொன்றவன்
ப்ருகுராம = பரசுராமன்
கோடகவதன = ஹயக்ரீவன்
ஷுபநாம = இப்படிப்பட்ட மங்களகரமான நாமங்களைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன்
ஸர்வபதார்த்ததொளு = அனைத்து பதார்த்தங்களிலும்
துதிமொதலு = ஆதி முதல் அந்தம் வரைக்கும்
தும்பிஹனெந்து = வியாப்தனாக இருக்கிறான் என்று
பிம்பரூபதலி = உன் பிம்பரூபனாக இருக்கிறான் என்று
சிந்திஸு = நினைத்துப் பார்.

அனைத்து இடங்களிலும் இருப்பவனான ஸ்ரீபரமாத்மனை, தேகத்தில் பிம்பரூபனாக ஐக்ய சிந்தனை செய்யவேண்டும். எந்த பரமாத்மன், நிதன நாமகனாக பிரளயத்தை ஏற்படுத்துகிறானோ, அனைவரும் செல்வத்தைக் கொடுப்பவனாகையால் தனத என்று பெயரைக் கொண்டானோ, யார் ஸ்ருஷ்டியை செய்கிறானோ, எந்த பரமாத்மனுக்கு சமமோ, உத்தமரோ இல்லையோ, யார் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கிறானோ, அதாவது, பரமாத்மனுக்கு ஒருவரிடம் நட்பு, இன்னொருவரில் த்வேஷம் இல்லை என்று பொருள், அவரவர்கள் செய்த புண்ணிய பாவங்களுக்கேற்ப அவரவர்களுக்கு பலன்களைக் கொடுப்பதால், சமவர்த்தி என்று பெயருள்ளவன் என்று பொருள். சாமகானப்ரியன், பிரம்மாதி தேவதாகணங்களால் பூஜ்யன், ஸ்வேதத்வீப, அனந்தாஸன, வைகுண்ட என்னும் மூன்று உலகங்களில் வசிப்பவன். 

இத்தகைய மங்கள நாமங்களைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன், மதுசூதனன், பரசுராமன், ஹயக்ரீவ என்னும் அவதார ரூபங்களால் அனைத்து பதார்த்தங்களின் ஆதி முதல் அந்தம் வரைக்கும் வியாப்தனாக இருக்கிறான். இத்தகைய ஸ்ரீஹரியே, அதே ரூபத்தினால் என் பிம்பரூபியாக இருக்கிறான் என்று நினைக்க வேண்டும். 

***

#32 - விபூதி சந்தி

#32 - விபூதி சந்தி
வீதப4ய நாராயண சது
ஷ்பாது தானெந்தெ3னிஸி தத்த
ஜ்ஜாதி த4ர்ம சுக2ர்மகள தா மாடி3 மாடி3ஸு|
சேதனர ஒளஹொரகெ3 ஓத
ப்ரோத னாகித்தெ3ல்லரிகெ3
ம் ப்ரீதியலி த4ர்மார்த்த காமாதி33ள கொடு3திஹனு ||32

வீதபய = பயம் அற்றவனான 
நாராயண = நாராயண மூர்த்தி
சதுஷ்பாத = நான்கு பாதங்களைப் போல இருக்கும் நான் இந்த ஜாதி என்று சொல்லிக்கொண்டு
தத்தத் ஜாதி தர்மசுகர்மங்கள = பிராமண க்‌ஷத்ரியாதி தர்மங்களை அந்தந்த ஜாதிகளுக்கான செயல்களை 
தா மாடி மாடிஸுத = தான் செய்து, செய்விக்கிறான்
சேதனரொளகெ = அனைத்து சேதனர்களுக்குள்ளும்
ஓதப்ரோதனாகி = குறுக்கும் நெடுக்குமாக
எல்லரிகெ = அனைத்து ஜாதி மக்களுக்கும்
ஸம்ப்ரீதியலி = மிகவும் அன்புடன்
தர்மார்த்த காமகள = தர்மாதி புருஷார்த்தங்களைக் 
கொடுதிஹனு = கொடுக்கிறான். 

பயம் முதலான தோஷங்கள் அற்றவனான ஸ்ரீநாராயண மூர்த்தி, நான்கு பாதங்களைப் போல இருக்கும், பிராமணாதி ஜாதியரில், வாசுதேவாதி 4 ரூபங்களில் இருந்து, அந்தந்த ஜாதியருக்கேற்ற கர்மங்களை அனுசரித்து அந்தந்த செயல்களை செய்து, செய்வித்து, அனைத்து பிராணிகளின் உள்ளேயும் வெளியேயும் இருந்துகொண்டு, துணியில் நூல்கள் குறுக்கும் நெடுக்குமாக இருப்பதைப் போல அனைத்து இடங்களிலும் வியாபித்தவாறு, அன்புடன் தர்மார்த்தாதி புருஷார்த்தங்களை வழங்குகிறான். 

***

Sunday, May 3, 2020

#31 - விபூதி சந்தி

#31 - விபூதி சந்தி


இருதிஹரு நாத்ய த3ஸ்ரரு
நிருருதியு யமத4ர்ம யமகி
ங்கரரு மேதி3னி காலம்ருத்யு ஷனைஸ்சராதிக3ளு |
கரெஸிகொம்ப3ரு ஷூத்4ரரெந்தன
வரத ஷூத்4ரரொளிப்ப ரிவரொள
3ரவிதூ3ர னிருத்தனிகனெந்தரிது மன்னிபு1து3 ||31


நாஸத்யதஸ்ரரு = அஸ்வினி தேவதைகள் 
நிரருதியு = திக்பாலகனான நிரருதி
யமதர்மன்,
யமகிங்கரர்கள்,
மேதினி = பூமி
காலம்ருத்யு,
ஷனைஸ்சராதிகளு = சனீஸ்வரன் முதலான தேவதைகள்
ஷூத்ரரொளு = நான்காம் வர்ணத்தவர்களில்
இருதிஹரு = இருக்கிறார்கள்
இவரொளகெ = இந்த தேவதைகளில்
அரவிதூர = தோஷங்கள் அற்றவனான அனிருத்தன்
மன்னிபுது = மரியாதை செய்யவேண்டும்.

நாஸத்யதஸ்ரர் என்னும் இருவர் அஸ்வினி தேவதைகள், சனீஸ்வராதி தேவதைகள், யமதர்மன், யமதூதர்கள், பூமி, காலம்ருத்யு, நிரருதி, இவர்கள் அனைவரும் ஜாதியில் நான்காம் வர்ணத்தவர் என்று நினைத்து, அந்த ஜாதிக்கு அபிமானி தேவதைகளாக, அவர்களில் இருக்கின்றனர். இவர்களில் தோஷங்கள் அற்றவனான அனிருத்தரூபி ஸ்ரீபரமாத்மன் இருக்கிறான் என்று மரியாதையுடன் நினைக்கவேண்டும். 

***

#30 - விபூதி சந்தி

#30 - விபூதி சந்தி

மீனகே1தன த1னய ப்ராணா
பான வ்யானோதான முக்2யை
கோ1ன பஞ்சாஷன் மருத்க3ண ருத்3ர வசுக23ணரு |
மேனகா1த்மஜெ கு1வர விஷ்வ
க்சேன த4னபாத்3யனி மேஷரனு
தா3னுராக3தி3 தே4னிபு1து3 வைஷ்யரொளு ப்ரத்4யும்ன ||30

மீனகேதன = மன்மதனின்
தனய = மகனான அனிருத்தன்
ப்ராணாபான வ்யானோதானமுக்ய = பிராண, அபான, வ்யான, உதான முதலான
ஏகோனபஞ்சாஷத் மருத்கண = 49 மருத்கணர்கள்
ருத்ரவசுகணரு = ருத்ரகண, வசுகணர்கள்
மேனகாத்மஜெ குவர = பார்வதியின் மகனான கணபதி
விஷ்வக்சேன,
தனபாதி = குபேராதி
அனிமிஷரனு = தேவதைகளை
வைஷ்யரொளு = வைஷ்ய ஜாதியின் அபிமானிகளாக, வைஷ்யர்களின் இருப்பவர்கள் என்று
ப்ரத்யும்ன = ப்ரத்யும்ன நாமக ஸ்ரீபரமாத்மன் வசிக்கிறான் என்றும்
ஸதா = எந்நேரமும் / எப்போதும் 
அனுராகதி = நினைக்க வேண்டும். 


மன்மதனின் அவதாரமான ப்ரத்யும்னனின் மகனான அனிருத்தன், பிராண, அபான, வியான, உதான முதலான 49 மருத்கணங்கள், 11 ருத்ரர்கள், பார்வதியின் மகனான கணபதி, விஷ்வக்சேன, குபேராதி தேவதைகள் ஆகியோர் வைஷ்யாபிமானிகள், வைஷ்யர்களில் இருப்பவர்கள். இந்த தேவதைகளில் இருப்பவர், பிரத்யும்ன நாமக பகவந்தன் என்று அன்புடன் எப்போதும் நினைக்க வேண்டும். 

***

Saturday, May 2, 2020

#29 - விபூதி சந்தி

#29 - விபூதி சந்தி


பூ4ஸுரரொளிப்ப1ப்ஜ ப4வனொளு
வாஸுதே3வனு வாயு க23
தா3 ஷிவஹிபே1ந்த்ரனு விவஸ்வான் நாமக சூர்ய |
பே4ஷ காமமராஸ்ய வருணா
தீ3 சுரரு க்‌ஷத்ரியரொளிப்பரு
வாஸவாகி3ஹ சங்கருஷ்ணன நோடி3 மோதி3பரு ||29


பூசுரரொளிப்ப = பிராமணர்களின் உள்ளிருக்கும்
அப்ஜ பவனொளு = பிரம்ம தேவருக்குள்
வாசுதேவனு = வாசுதேவ நாமக பரமாத்மன்
வாயு = வாயுதேவர்
ககப = பறவைகளில் சிறந்தவனான கருடன்
ஸதாசிவ = ருத்ரதேவர்
அஹிப = சேஷதேவர்
இந்திரன்,
விவஸ்வன் நாமக சூர்ய = விவஸ்வன் நாமகனான சூரியன்
பேஷ = நட்சத்திரங்களின் தலைவனான சந்திரன்
காம = மன்மதன்
அமராஸ்ய = அக்னி
வருணாதி = வருணன் முதலான தேவதைகள்
க்‌ஷத்ரியரொளிப்பரு = க்‌ஷத்ரிய அபிமானியாக இருப்பவர்கள்
தம்மொளகெ வாஸவாகிஹ = வசிக்கும்
ஸங்கருஷணன = சங்கர்ஷண நாமக பரமாத்மனை
நோடி மோதிபரு = பார்த்து மகிழ்வர்.

பிராம்மணாதி வர்ணாபிமானி தேவதைகளையும், அந்த ஜாதியின் நியாமகனான வாசுதேவ ரூபங்களையும், ‘பூசுரரொளிப்ப’ என்னும் பத்யத்தில் தொடங்கி அடுத்த 31ம் பத்யம் வரைக்கும் விளக்குகிறார் தாசராயர். 

பிராமண ஜாதியினருக்கு அபிமானி பிரம்மதேவர். இவர் பிராமணர்களில் இருப்பவர். அவரில் வாசுதேவ மூர்த்தியை சிந்திக்க வேண்டும். வாயுதேவர், கருட, ருத்ர, சேஷ, இந்திர, விவஸ்வான் என்னும் சூரியன், சந்திரன், மன்மதன், அக்னி, வருணாதி தேவதைகள் ஆகியோர் க்‌ஷத்ரிய ஜாதியின் அபிமானிகள்,  இவர்கள் க்‌ஷத்ரியர்களில் இருப்பார்கள். இவர்களில் சங்கர்ஷணரூபி ஸ்ரீபரமாத்மன் இருக்கிறான் என்று சிந்திக்க வேண்டும். 

***

#28 - விபூதி சந்தி

#28 - விபூதி சந்தி


வாரிஜ ப4வாண்ட3வெ ஸுமண்ட1
மேருகி3ரி ஸிம்ஹானவு பா4
கீ3ரதி4யெ மஜ்ஜனவு திக்3வஸ்த்ரக3ளு நுடி மந்த்ர |
பூ4ருஹஜ ப2ல பு1ஷ்ப க3ந்த4
மீர சஷிரவி தீ31 பூ4ஷண
தாரகெக3 ளெந்த3ர்ப்பிலு கைகொண்டு3 மன்னிஸு||28


வாரிஜ பவாண்டவெ = இந்த பிரம்மாண்டமே
சுமண்டப = சிறந்த மண்டபம்
மேருகிரி = மேரு பர்வதம்
சிம்ஹாசனவு = சிம்மாசனம்
பாகீரதியெ = கங்கையின் தண்ணீரே
மஜ்ஜன = அபிஷேகம்
திக்வஸ்த்ரகளு = திசைகளே வஸ்திரங்கள்
நுடி = பேச்சுக்களே மந்திரங்கள்
பூருஹஜ = தானாக வளர்ந்த மரங்களில் இருக்கும் பூ, பழங்களே
ஸமீர = காற்று
கந்த = சுகந்தம்
ஷரீரவெ = சந்திர சூர்யர்களே தீபங்கள்
தாரககளே = நட்சத்திரங்களே
பூஷண = ஆபரணங்கள்
எந்தர்ப்பிஸலு = என்று சமர்ப்பிக்க
கைகொண்டு = ஸ்வீகரித்து
மன்னிஸுவ = நம் அபராதங்களை மன்னிப்பான்

பிரம்மாண்டமே ஸ்ரீபரமாத்மனின் மண்டபம். மேரு மலையே சிம்ஹாசனம். கங்கை நதியே ஸ்னானத்திற்காக நீர். திசைகளே வஸ்திரங்கள். பேச்சுக்களே மந்திரங்கள். மரங்களில் வளரும் பூ, பழங்களே தேவருக்கு பூ, புஷ்பங்கள். வீசும் காற்றே சுகந்தம். சந்திர சூரியரே தீபங்கள். நட்சத்திரங்களே ஆபரணங்கள் என்று நினைத்து பரமாத்மனை மானஸ பூஜை செய்து சமர்ப்பித்தால், பரமாத்மன் அவற்றை ஏற்றுக்கொண்டு நம் அபராதங்களை மன்னித்து நமக்கு அருள்கிறான். 

***

Friday, May 1, 2020

#27 - விபூதி சந்தி

#27 - விபூதி சந்தி


ஆப1ணாலயக3த பதா3ர்த்த2வு
ஸ்த்ரீ புருஷருக3 ளிந்திரியக3ளலி
தீ3ப பா1வக1தொ3ளிருதிஹ தை1லாதி3 த்3ரவ்யக3ளு |
ஆ பரமக3வதா3னவெந்து3
தே3தே3 மரெயத3லெ ஸ்மரிஸு
பூ41னந்த3தி3 சஞ்சரிஸு நிர்ப4யதி3 சர்வத்ர ||27


ஆபணாலயகத = ஆபண = கடைக்குள். ஆலய = வீட்டில். கத = இருக்கும்
பதார்த்த = அரிசி, பருப்பு ஆகிய பதார்த்தங்கள்
ஸ்த்ரீ புருஷர் = ஆண் பெண்கள்
இந்திரியகளலி = காது, மூக்கு, கை, கால்கள் ஆகிய இந்திரியங்களில் அணியும் ஆபரணங்களில்
தீப பாவகரொளு = தீபம், நெருப்பு ஆகியவற்றில்
இருதிஹ = இருக்கும்
தைலாதி த்ரவ்யகளு = எண்ணெய் போன்ற த்ரவ்யங்கள் இவை அனைத்தும்
ஆ பரமகெ = பரமாத்மனுக்கு
அவதானவெந்து = ஆஹுதி என்று 
பதேபதே = திரும்பத்திரும்ப
மரெயதலெ ஸ்மரிஸுத = மறக்காமல்; நினைத்தவாறு
பூபனந்ததி = அரசனைப் போல
சஞ்சரிஸு = ஓடியாடு
நிர்பயதி = பயம் இல்லாமல்
சர்வத்ர = எல்லா இடங்களிலும்

ஆமயோsயஞ்ச பூதானாம் ஜாயதேயேனஸுவ்ரத |
ததேவஹ்யாமயத்ரவ்யம் தத்புனாதிசிகித்ஸிதம் |
ஏவன்ன்ருணாங்க்ரியாயோக: ஸர்வே சம்ஸ்க்ருதி ஹேதவ: |
த யோவாத்மவினாஷாய கல்பந்தே கலிபிதா:பரே ||
(பாகவத முதல் ஸ்கந்தம்)

நோய்க்கு காரணமான பதார்த்தங்களை தின்றால், அது அந்த மனிதனையே கொன்றுவிடும். ஆனால், அந்த பதார்த்தங்களையே மருத்துவர்கள் சுத்தம் செய்து, நோயாளிக்குக் கொடுத்தால், அது மருந்தாகிவிடுகிறது. அதுபோல, நாம் செய்யும், ஸ்னான, அலங்கார, போஜனாதிகளை, நம் நலனுக்காக என்னும் சிந்தனையுடன் தின்றால் அதுவே நம் சம்சாரத்திற்குக் காரணமாகி விடுகிறது. ஆனால், பரமாத்மனின் வீடான இந்த சரீரத்தை, பரமாத்மனின் ப்ரீதிக்காக கழுவுகிறேன், அலங்கரிக்கிறேன், பாதுகாக்கிறேன் என்று அனைத்தையும் பரமாத்மனின் பூஜை என்று நினைத்தால், அதுவே முக்திக்கான சாதனை என்று (மேற்கண்ட ஸ்லோகத்தில்) சொல்லியிருப்பர். அதையே இங்கு தாசராயரும் கூறுகிறார். 

கடையில் இருக்கும் பதார்த்தங்கள், வீட்டில் இருக்கும் அரிசி, பருப்பு முதலான பதார்த்தங்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் ஆபரணங்கள், தீபத்திற்கு விடும் எண்ணெய், நெருப்பில் போடும் கட்டைகள், ஆகிய அனைத்தும் பரமாத்மனின் பூஜாத்மக யாகத்தில் விடும் ஆஹுதி என்று நினைத்து, ஒவ்வொரு கணமும் இந்த சிந்தனையை விடாமல், எப்போதும் நினைத்தவாறு, மகாராஜாவானவன் எப்படி யாருக்கும் பயப்படாமல் சஞ்சரிக்கிறாரோ அதுபோல, நீயும் யாருக்கும் பயப்படாமல் சஞ்சரிப்பாயாக. 

***

#26 - விபூதி சந்தி

#26 - விபூதி சந்தி


4வவெனிப1 வனதி3யொளு கர்ம
ப்1ரவஹதொ3ளு சஞ்சரிஸுதிஹ தே3
ஹவ ஸுனாவெய மாடி3 தன்னவரிந்த3 ஒடகூ3டி3 |
தி3வஸ தி3வஸக3ளல்லி லகுமி
4வனு க்ரீடி3பனெந்து3 சிந்திஸி
1வனனய்ய ப4வாப்தி4 தா3டி1ஸி பரமசுக2வீவ ||26


பவவெனிப = சம்சாரம் என்னும்
வனதியொளு = கடலில்
கர்ம = புண்ய பாப கர்மங்கள் என்னும்
ப்ரவஹதொளு = ஆற்றில்
சஞ்சரிசுதிஹ = பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் வந்து போய்க்கொண்டிருக்கும்
தேஹவெ = தேகத்தையே
ஸுனாவெய = உத்தமமான படகாக ஆக்கி
தம்மவரிந்தலி = தம் பக்தர்களான தத்வாபிமானி தேவதைகளுடன்
திவஸ திவஸகளல்லி = தினந்தோறும் (எப்போதும்)
லகுமீதவனு = லட்சுமிபதி
க்ரீடிபனெந்து = விளையாடுகிறான் என்று
சிந்திஸி = சிந்தித்து
பவனனய்ய = வாயுதேவரின் தந்தையான ஸ்ரீபரமாத்மன்
பவாப்தி = பிறவிக்கடலை
தாடிஸி = தாண்டச் செய்து
சுகவீவ = சுகத்தைத் தருகிறான். 

சம்சாரம் என்னும் கடலில், புண்ய பாபாதி கர்மங்கள் என்னும் ஆற்றில், பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் வந்து போய்க்கொண்டிருக்கும் இந்த தேகத்தை, ஸ்ரீபரமாத்மன் தன் படகாக ஆக்கிக்கொண்டு, தன் பக்தர்களான தத்வாபிமானி தேவதைகளுடன் சேர்ந்து, தினந்தோறும் (எப்போதும்) அந்தப் படகில் அமர்ந்து விளையாடுகிறான் (தன் நடவடிக்கைகளை செய்கிறான்), என்று நாம் இந்த தேகத்தை பரமாத்மன் வசிக்கும் இடமாக நினைத்து, இது நமது என்னும் அபிமானத்தை விட்டால், பிராணபதியான ஸ்ரீபரமாத்மன் நம்மை சம்சார சாகரத்தை தாண்டச் செய்து, பரமானந்தத்தைக் கொடுக்கிறான். 

***

Thursday, April 30, 2020

#25 - விபூதி சந்தி

#25 - விபூதி சந்தி


மாதரிஷ்வனு தே3ஹரத2தொ3ளு
ஸுதனாகி3ஹ சர்வகாலதி3
ஸ்ரீதருணி வல்லப ரதிகனெந்தரிது3 நித்யதலி |
ப்ரீதியிந்த3லி போ1ஷிஸுத வா
தாதபாதி33ளிந்த3 அவிரத1
ஈ த1னுவினொளு மமதெ1 பி3ட்டிஹனவனெ மஹயோகி3 ||25


மாதரிஷ்வனு = வாயுதேவர்
தேஹரததொளு = தேகம் என்னும் இந்த ரதத்தில்
சர்வகாலதி = அனைத்து காலங்களிலும்
ஸூதனு = சாரதி
ஆகிஹ = ஆகியிருக்கிறான். 
ஸ்ரீதருணி வல்லபனு = ஸ்ரீதேவி என்னும் தருணியின் பதியான ஸ்ரீபரமாத்மன்
ரதிகனெந்தரிது = ரதத்தில் அமர்ந்திருக்கிறான் என்று அறிந்து 
நித்யதலி = தினந்தோறும் (எப்போதும்)
ப்ரீதியிந்தலி = பக்தி விஸ்வாசங்களால்
வாதாத பாதிகளிந்தலி = காற்று வீசுவது முதலான செயல்களால்
அவிரத = திடமாக (இடைவிடாமல்)
போஷிஸு = நன்றாக கவனி
ஈதனுவினொளு = இந்த தேகத்தில்
மமதெ = அபிமானத்தை (ப்ரியத்தை)
பிட்டிஹனு = விட்டவன் (யார் விடுகிறார்களோ)
அவனே
மஹாயோகி = மஹா யோகி ஆகிறான். 

தேகம் என்னும் ரதத்தில் சாரதியாக இருப்பவர் வாயுதேவர். பாகவதத்தில் ‘மனோரஷ்மிபுத்திஸுதோ’ ‘புத்திந்து ஸாரதிம்வித்தி’ புத்தியை சாரதியாக சொல்லியிருப்பர். மேலும் ‘மூலவாயு ரக்‌ஷஸக்ஞஷ்சக்ரே த்வேஷபுண்யதுஷ்க்ருதி’ என்னும் ஆத்யாத்ம யோக வாக்கியத்திற்கேற்ப சக்கரத்தில் இருக்கும் அச்சாணியே வாயுதேவர் என்றும் சொல்லியிருப்பர். ஆனால், தாசராயரோ வாயுதேவரையே சாரதி என்கிறார். இதில் பரஸ்பரம் கருத்து வேறுபாடு வருகிறதே என்றால், அது அப்படியில்லை. 

புத்தியை சாரதியாகி சொல்லியிருப்பது, வெறும் புத்தியை மட்டும் குறிப்பதல்ல. அபிமானி தேவதைகளையும் சொல்கின்றனர் என்று கருத வேண்டும். அப்படியானாலும், புத்திக்கு அபிமானி, உமா, ப்ருஹஸ்பதி ஆகியோர்களே தவிர, வாயுதேவர் இல்லையே என்றால், அதற்கு விளக்கம் இதுவே. புத்தியில் சித்த, புத்தி, அஹங்கார, மனஸ் என்று 4 பகுதிகள் உண்டு. சஞ்சலம் பிறக்கும் இடம் மனஸ். நான், எனது என்று சொல்வது அஹங்காரம். இது இப்படிப்பட்டது என்று தீர்மானம் செய்வது புத்தி. பகவத் பாதாரவிந்தங்களில் திடமாக நிற்கும் புத்தியே சித்தம் எனப்படுகிறது. புத்தியில் சுபுத்தி, துர்புத்தி என்று இரு பாகங்கள் உண்டு. புண்ய கர்மங்களில் நம்மை ஈடுபடுத்துவது சுபுத்தி. பாவ கர்மங்களில் நம்மை ஈடுபடுத்துவது துர்புத்தி. இந்த இரண்டும் அல்லாமல், வெறும் பகவந்தனை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் புத்தியே சித்த. 

இப்படியாக சித்தத்திற்கும் புத்திக்கும் சிறிது வேறுபாடு இருந்தாலும், குருபாண்டவ நியாயத்தைப் போன்றது என்று சொல்லலாம். அது என்னவெனில், கௌரவர்கள், பாண்டவர்கள் இருவரும் குரு வம்சத்தில் பிறந்ததால் ‘கௌரவர்கள்’ என்னும் சொல், பாண்டவர்களுக்கும்கூட பொருந்தும். ஆனாலும் கௌரவர் என்னும் சொல் துரியோதனாதிகளை மட்டுமே குறிப்பதோடு நின்றுவிட்டது. ஆனால், பாண்டவ என்னும் சொல், கௌரவர்களைக் குறிப்பதில்லை. பாண்டுராஜனின் மக்கள் மட்டுமே பாண்டவர்கள் என்று குறிக்கிறது. இந்த பெயர் துரியோதனாதிகளுக்கு பொருந்தாது. 

ஆகையால், புத்தியின் இன்னொரு பாகமே சித்தம் ஆனாலும், வெறும் பகவந்தனைப் பற்றி சிந்திக்கும் புத்திக்கு மட்டுமே சித்தத்வம் இருப்பதால், சித்த என்னும் சொல், புத்திக்கு சேர்வதில்லை. புத்தி என்னும் சொல் சித்தத்தையும் குறிக்கும். புத்தியை பகவந்தனிடம் ஈடுபடுத்தினால் அதுவே சித்தம் ஆவதால், அதனை சுபுத்தி எனலாம். இப்படியாக, பகவந்தனில் ஈடுபட்டிருக்கும் புத்தியிலிருந்து வேறுபட்டிருக்கும் சித்தத்திற்கு வாயுதேவரே அபிமானி. ஆகையால், இங்கு புத்தி என்பது சித்தத்தையும் மற்றும் சித்த என்னும் சொல், அபிமானியையும் குறிக்கும். இப்படியாக சிந்தித்தால், சித்தாபிமானியான வாயுதேவரே, சாரதி என ஆகிறது. ஆகையால், தாசராயரின் வாக்கியத்திற்கும், பாகவதாதிகளில் இருக்கும் வாக்கியத்திற்கும் வேறுபாடு இல்லை என்று அறியவேண்டும். 

அச்சாணியை வாயுதேவர் என்று சொல்லும் ஆத்யாத்ம யோகத்தின் வாக்கியத்தின்படி, அச்சாணி ரூபமாகவும், சாரதியாகவும் வாயுதேவரே இருக்கிறார் என்று சொன்னால் அதில் தவறு எதுவும் இல்லை. 

ஸ்ரீபரமாத்மனே இந்த தேக ரதத்தில் அமர்ந்திருக்கிறார் என்று அறிந்து தினந்தோறும் அன்ன, பானாதிகளால் தினந்தோறும் இந்த தேகத்தைப் பார்த்துக்கொள். இந்த தேகம் என்னுடையது என்று நினைத்து, இந்திரிய அபிமானத்திற்காக மட்டும் சரீரத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டாம் என்கிறார். இந்த தேகம் பரமாத்மன் அமரும் ரதம். ஆகையால் இதை கழுவுகிறேன், ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கிறேன் என்று ரதம் கெடாமல் இருப்பதற்காக அன்ன, பானாதிகளால் நன்றாக பாதுகாப்பேன் என்று சிந்தித்து பார்த்துக் கொள். எனக்கு வெயில் ஆகாது, மழை பிடிக்காது என்று இந்திரிய அபிமானத்திற்காக தேக அபிமானத்தை செய்யாமல், பகவத்ப்ரீதிக்காக மட்டும் சரீர போஷணம் செய்தவாறு, வெயில், குளிர் ஆகியவற்றை சகித்துக்கொண்டு, நான் எனது என்னும் அபிமானத்தை விட்டு இருப்பவன் யாரோ, அவனே மஹாயோகி. 

***