ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Showing posts with label போஜனரசவிபாக சந்தி. Show all posts
Showing posts with label போஜனரசவிபாக சந்தி. Show all posts

Saturday, April 18, 2020

#30 - போஜனரசவிபாக சந்தி

#30 - போஜனரசவிபாக சந்தி

ஐதுலக்‌ஷெம்பத்த1 ரொம்ப3
த்தாத சாவிரனேளுனூர்மே
லைது3 ரூப1வ த4ரிஸி போக்த்ருக3 போ4ஜ்ய னெந்தெனிஸி |
ஸ்ரீத4ரா துர்கா3ரமண பா1
தா3தி3 ஷிரப1ரியந்த வியாபி1ஸி
கா1து3கொண்டிஹ சந்தத ஜகன்னாத2விட்டலனு ||30

ஐதுலக்‌ஷெம்பத்த ரொம்ப த்தாத சாவிரனேளுனூர்மே லைது ரூபவ = 589705
ரூபவ தரிஸி = ரூபங்களை தரித்து
போக்த்ருக போஜ்ய நெந்தெனிஸி = உணவை உண்பவன் என்றும், அந்த உணவின் அன்னமயன் என்றும்
எனிஸி = பெயர் பெற்று
ஸ்ரீதரா துர்காரமண = ஸ்ரீதேவி, பூதேவி, துர்காதேவியரின் பதியான
ஜகன்னாதவிட்டலனு = தாசராயரின் பிம்பரூபியான ஜகன்னாதவிட்டலன்
பாதாதி ஷிரபர்யந்த = கால் முதல் தலை வரை
வியாபிஸி = மனிதனின் சரீரத்தில் வியாபித்து
காதுகொண்டிஹ = நம்மை காப்பாற்றுகிறான். 

ஸ்ரீ பூ துர்கா ரமணனான, நம் தாசராயரின் பிம்பரூபியான ஸ்ரீஜகன்னாதவிட்டலன், அன்னமயாதி கண்டரூபங்கள் 585400, அன்னாதி கண்ட ரூபங்கள் 4305 (ஆக மொத்தம் 589705) என உணவை உண்பவரில் அதாவது அவரின் பஞ்சபிராணர்களிலும், அந்த தத்வாபிமானி தேவதைகளிலும், ஜீவரிலும், அனைத்து இந்திரியங்களிலும், வியாப்தனாக இருக்கிறான். இது மட்டுமல்லாமல், போஜ்ய பதார்த்தங்களில் மொத்தம் 589705 ரூபங்களை தரித்து, பிராணிகளின் கால் முதல் தலை வரையிலும் நிலைத்திருந்து, எப்போதும் அவர்களை காத்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக பரமாத்மனை தியானித்தால், நாம் நிர்லிப்தராக பரமாத்மனை அடையமுடியும் என்று பொருள்.

இங்கு போஜனரசவிபாக சந்தி முடிவுற்றது.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

Friday, April 17, 2020

#29 - போஜனரசவிபாக சந்தி

#29 - போஜனரசவிபாக சந்தி


ஈபரியொளச்யுதன தத்த
த்ரூப தன்னாமக3ள ஸலெ நா
நா பதார்த்த2தி நெனெனெனெது பு4ஞ்சிசுத1லிரு விஷய |
ப்ராபக ஸ்தாபக நியாமக
வ்யாபகனு யெந்த3ரிது நீ நி
ர்லேபனாகி3ரு புண்யபாப3ளர்ப்பி ஸவனடிகெ3 ||29


ஈ பரியலி = மேலே சொன்ன விதமாக
அச்யுதன = அழிவில்லாத ஸ்ரீபரமாத்மனின்
தத்தத்ரூப = அனிருத்த, பிரத்யும்னாதி ரூபங்களை
தன்னாமகள = அன்னாதிகளில் இருக்கும் அன்னமயாதி ரூபங்களை
ஸலெ = ஒன்றாக சேர்த்து
நானா பதார்த்ததி = பக்‌ஷ்ய போஜ்யாதி பல வகையான பதார்த்தங்களில்
நெனெனெனெது = அந்தந்த பதார்த்தங்களில் அந்தந்த ரூபங்களை நினைத்து
புஞ்சிசுதலிரு = உணவினை உண்டு வாருங்கள்
விஷய = விஷய சுகங்களை
ப்ராபக = ஜீவர்களுக்கு சம்பந்தப்படுத்துபவன்
ஸ்தாபக = ஜீவர்களில் நிலைநிறுத்துபவன்
நியாமக = அனைத்தையும் நடத்துபவன்
வ்யாபகனு = அனைத்திலும் வல்லவன்
எந்தரிது = ஸ்ரீபரமாத்மனே என்று அறிந்து
அவனடிகெ = பரமாத்மனின் பாத கமலங்களுக்கு
புண்ய பாபகள = நீ செய்த புண்ய பாவங்களை
அர்ப்பிஸி = சமர்ப்பணம் செய்து
நீ = நீ
நிர்லேபனாகிரு = அந்த செயலுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவாறு விலகி இரு.

மேலே பார்த்த விதங்களில், ஸ்ரீபரமாத்மன், நம் தேகத்தில் அன்னமயனாக கண்ட ரூபியாக இருந்து, அன்னனாக அகண்ட ரூபத்தில் இருந்து, இதைப்போல பிராணமயனாதி ரூபங்களால் அந்தந்த நாமங்களால், அந்தந்த பதார்த்தங்களில் பரமாத்மன் அனிருத்தன் இருக்கிறான் என்று அறிந்து உணவினை உண்ண வேண்டும். ஹே அதிகாரியே (செயல்களை செய்பவனே), விஷயாதி ஆசைகளைக் கொடுப்பவனும், அதை நிலை நிறுத்துபவனும், அனைத்தையும் நடத்துபவனும், அனைத்திலும் வல்லவனும் பரமாத்மனே என்று அறிந்து, நீ செய்த புண்ய பாபாதி அனைத்து கர்மங்களையும் பரமாத்மனுக்கு அர்ப்பித்துவிடு. பரமாத்மன் உன் பாவ கர்மங்களைப் பொசுக்கி, புண்யத்திற்கு தக்க பலன்களைக் கொடுப்பான். அனைத்தும் பரமாத்மனின் செயல்களே என்று சிந்தித்து, உனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று அறி. அப்போது, உனக்கு கர்மங்கள் வீணாகாது (தக்க பலன்களைக் கொடுக்கும்) என்கிறார் தாசராயர். 

***

#28 - போஜனரசவிபாக சந்தி

#28 - போஜனரசவிபாக சந்தி


பேளலேனு சமீரதேவனு
காலகூடவனுண்டு லோகவ
பா1லிஸித தத்தா3சனோர்வனு அம்ருதனெனிஸித3 |
ஸ்ரீலகுமிவல்ல4 ஷுபாஷுப4
ஜாலக1ர்மக3ளும் பனுபசய
தே3ளிகெ13ளவகி3ல்ல வெந்திகு3 ஸ்வரஸக3ள பி3ட்டு1 ||28


சமீரதேவனு = வாயுதேவர்
காலகூடவனு = காலகூட என்னும் விஷத்தை
உண்டு = குடித்து
லோக = உலகங்களை
பாலிஸிதனு = காப்பாற்றினான்
தத்தாஸனோர்வனு = இப்படி பகவத் தாசர்களில் ஒருவரான வாயுதேவர் விஷத்தைக் குடித்து
அம்ருதனெனிஸித = அமிர்த என்னும் பெயரினைப் பெற்றான்
பேளலேனு = இப்படியிருக்கையில், பரமாத்மனின் விஷயத்தில் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
ஸ்ரீலகுமிவல்லப = ஸ்ரீலட்சுமிபதி
ஷுபாஷுப ஜாலகர்மகள = மக்கள் செய்யும் பாவ புண்ணிய கர்மங்களை
உம்பனு = அவர்களுக்கு பலன்களைக் கொடுப்பதற்காக ஏற்றுக் கொள்கிறான்
அவகெ = அந்த பரமாத்மனுக்கு
உபசய = தேகமானது வளர்வதோ
ஏளகெ = தேகமானது குறைவதோ, என்றும் இல்லை
ஸ்வரஸகள பிட்டு = ஸ்வரூப சம்பந்தமான ஆனந்தரூபமான சுவைகளை விட்டு வேறெந்த பதார்த்தங்களையும், தான் வளர்வதற்கோ, குறைவதற்கோ, அவன் ஏற்றுக்கொள்வதில்லை. 
பரமாத்மனை பூஜித்து, அவனுக்காக சமர்ப்பிக்கப்படும் பதார்த்தங்களை அந்த பரமாத்மன் ஏற்றுக்கொள்வது, பக்தர்களின் நலனுக்காகவே தவிர அதனால் அவனுடைய தேகம் வளர்வதோ, குறைவதோ ஆவதில்லை என்கிறார். 

தேவதைத்யர்கள் சேர்ந்து, அமிர்தத்திற்காக பாற்கடலை 
கடைந்தபோது, காலகூட என்னும் விஷம் வெளிவந்து, உலகத்தையே தன் சக்தியால் எரித்துக் கொண்டிருக்க, தேவதைகள் பயந்து ருத்ரதேவரை வணங்கி, அந்த விஷத்தை அவரே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வேண்டினர். ருத்ரரும் அந்த விஷத்தைக் குடிக்க வந்து கொண்டிருந்தார். ஸ்ரீபரமாத்மன், பாற்கடலைக் கடையும் விஷயத்தில் உதவுவதற்காக அங்கேயே இருந்தாலும், அவர் ஏன் அதைக் குடிக்கவில்லை என்றால், பாகவத 8ம் ஸ்கந்த தாத்பர்யத்தில்:

ருத்ரஸ்யயஷஸோர்த்தாய ஸ்வயம் விஷ்ணுர்விஷம்விபு: |
நஸஞ்சஹ்ரே சமர்த்தோபிவாயும் சோசி ப்ரஷாந்தயே ||

ஸ்ரீபரமாத்மனுக்கு விஷத்தை முறியடிக்கும் சக்தி இருந்தாலும், ருத்ரருக்கு நீலகண்டன் என்னும் பெயரைக் கொடுப்பதற்காகவும், ருத்ரருக்கும், வாயுதேவருக்கும் இருக்கும் தாரதம்யத்தைக் காட்டுவதற்காகவும் தான் விஷத்தைக் குடிக்கவில்லை. 

இதே விஷயத்தில், பாரத தாத்பர்ய நிர்ணய 10ம் அத்தியாயம் 14ம் ஸ்லோகம்:

கலே:ஸ்வரூபந்தததீவது: ஸஹம்வராத்விதாது: ஸகலைஸ்ச துஸ்ப்ருஷம் |
கரேவிதுத்யாஸ்தபலம் விதாயததௌஸ கிஞ்சித்கரிஷாயவாயு: ||
ஹரே:கரஸ்பர்ஷ பலாத்ஸ சஞ்ஞாமவாப நீலோஸ்யகலஸ்ததாஸீத் ||

அமிர்த மதன காலத்தில் வெளிவந்த விஷம் எப்படிப்பட்டது என்று தெரிவிக்கிறார். 

அது கலியின் ஸ்வரூபத்தைக் கொண்டிருக்கிறது. யாராலும் தடுக்க முடியாததாக இருந்தது. பிரம்மதேவரின் வரம் இருந்தாலும்கூட அதை தொடக்கூட முடியாததாக இருந்தது. இத்தகைய விஷத்தை வாயுதேவர், மிகச்சிறிதளவு தன் கையில் போட்டுக்கொண்டு, நன்றாக உறிஞ்சி, அதன் வேகத்தைக் (வீர்யத்தைக்) குறைத்து பின், ருத்ரதேவரின் கையில் கொடுத்தார். ருத்ரதேவர் அதைக் குடித்த உடனேயே, அது அவர் கழுத்திலேயே தங்கி, அவர் மூர்ச்சையாகி விட்டார். ஸ்ரீபரமாத்மன், ருத்ரரை தன் கையால் தடவிக்கொடுக்க, அவர் சுயநினைவை அடைந்தார். அந்த விஷத்தால் அவர் கழுத்து கருப்பாகிவிட, நீலகண்டன் என்ற பெயர் வரக் காரணமானது. 

அத த்வதாக்ஞாம் புரதோ நிதாய நிதாயபாத்ரே தபனீயரூபே |
ஸ்வயம்தவனிர்மத்ய பலோபபன்னம் பபௌஸவாயுஸ்ததுதாஸ்ய ஜீர்ணம் ||

பிறகு, ஸ்ரீபரமாத்மனின் ஆணைப்படி, அந்த விஷம் முழுவதையும் ஒரு தங்கப் பாத்திரத்தில் போட்டுக் கொண்டு, அப்படியே குடித்து விட்டார். அது அவருக்கு ஜீர்ணம் ஆனது. மிகச்சிறிய அளவிலான விஷத்திற்காக ஸ்ரீபரமாத்மன் ருத்ரரை காப்பாற்ற வேண்டியிருந்தது. மிச்சமிருந்த அனைத்து விஷத்தையும் குடித்த வாயுதேவர், எந்த பிரச்னைக்கும் ஆளாகாமல், அமிர்த என்னும் பெயரைப் பெற்றார். 

இதே விஷயத்தையே, தாசராயர், இங்கு உதாரணம் கொடுத்திருக்கிறார். இப்படியாக, வாயுதேவர் காலகூட என்னும் விஷத்தை உண்டு, உலகத்தைக் காப்பாற்றினார். பரமாத்மனின் தாசர்களில் ஒருவரான வாயுதேவரே விஷத்தை குடித்ததால் ‘அமிர்த’ என்னும் பெயரைப் பெற்றபிறகு, லட்சுமிவல்லபனான ஸ்ரீபரமாத்மனின் விஷயத்தில் சொல்வதற்கு என்ன இருக்கிறது? 

மக்களின் பாவ புண்ணியாதி கர்மங்களை தான் ஏற்றுக்கொண்டு, த்வேஷிகளுக்கு த்வேஷ பலன்களைக் கொடுத்து, பக்தர்களுக்கு புண்ய பலன்களைக் கொடுக்கிறார். ‘ஷுபம் பவத்யஸௌ நித்யம் னாஷுபம் ஸஹரி: பிபேத்’ என்னும் பிரம்மசூத்ர பாஷ்யத்தின் வாக்கியத்திற்கேற்ப பாபிகளின் பாப கர்மங்களுக்கேற்ப அவர்களுக்கு பலன்களைக் கொடுக்கிறார். பக்தர்கள் செய்யும் பாப கர்மங்களை பஸ்மம் ஆக்குகிறார். புண்ய பலன்களை தான் உண்டு, அவர்களுக்கும் கொடுக்கிறார். ஆனால், நிஜ பக்தர்கள் பூஜைகளை செய்து, அறுசுவைகளுடன் அன்ன, பக்‌ஷ்ய, பழங்களைக் கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அவை தனது இந்திரிய ப்ரீதிக்காக அல்ல. 

‘யதா தரோர்மூல நிஷேசனேன த்ருப்யந்தி தத்ஸ்கந்த புஜோப ஷாகா:’ என்னும் பாகவத 14ம் ஸ்கந்த வாக்கியத்தின்படி, மரத்தின் வேரில் நீர் ஊற்றினால் எப்படி கிளைகள் வலிமை பெறுகிறதோ, அப்படியே நமக்கு ஆதாரனான பரமாத்மன், நம் தேகத்தில் இருந்து உணவினை உட்கொண்டால் மட்டுமே நமக்கு திருப்தி ஆகிறது. ஆகையால், நம் நலனுக்காகவே பரமாத்மன் உணவினை ஏற்றுக்கொள்கிறான். அவனே ஸ்வயம் அன்னமயன். அன்னத்தின் ரூபத்தில் தானே இருந்து, அதே அன்னத்தினால் தானே திருப்தியாகும் பரமாத்மனுக்கு நம் அன்னத்தினால் ஆவதுதான் என்ன? 

பாகவத 1ம் ஸ்கந்த 10ம் அத்தியாயத்தில்:
ப்ரத்யுத்யயு: ப்ரஜாஸ்ஸர்வா: பத்ருதர்ஷன லாலஸா: ||40
நதோப நீதபலயோரவேர்தீப மிவாத்ருதா: ||
ஆத்மாராமம் பூர்ணகாமம் நிஜலாபேன நித்யதா ||41

ஸ்ரீகிருஷ்ணன், ஹஸ்தினாபுரத்திலிருந்து புறப்பட்டு, தன் தேசமான ஆனர்த்த தேசத்திற்கு வந்து சங்க நாதத்தை செய்தான் என்னும் கதையின் விவரம்). ஸ்ரீகிருஷ்ணனின் வருகையை அறிந்த மக்கள் அனைவரும், தம் ஸ்வாமியைப் பார்க்கவேண்டும் என்னும் ஆசையினால், தேவையான பக்‌ஷ்ய போஜ்யாதிகளுடன், பூ பழங்களுடன் புறப்பட்டு, ஸ்ரீகிருஷ்ணன் இருக்கும் இடத்திற்கு வந்து அவனை வணங்கினர். அனைத்தையும் அவனுக்கு சமர்ப்பித்தனர். ஸ்ரீபரமாத்மன் ஸ்வரமணன். பூர்ணகாமன். தனக்கு எது வேண்டுமோ, அந்த வஸ்துவாக அவனே ஆகிறான். இப்படி, தன்னாலேயே தான் சுகம் அடையக்கூடிய பரமாத்மனுக்கு, இவர்கள் கொடுத்த பதார்த்தங்களால் ஆகும் பிரயோஜனம் என்னவென்று கேட்கவேண்டும். 

அதாவது, ‘ரவேர்தீபமிவ’ - சூர்ய நமஸ்காரம் செய்பவர்கள், ஜகத்பிரகாசனான சூரியனுக்கு ஒரு தீபத்தை ஏற்றுகின்றனர். அந்த தீபத்தால் சூரியனுக்கு எவ்வளவு பிரயோஜமோ, அவ்வளவே பலன், இவர்கள் கொடுத்த பதார்த்தங்களால் பரமாத்மனுக்கு ஆகிறது என்று சொல்கிறார். ஆகையால், ஸ்ரீபரமாத்மன், தன் பக்தர்கள் மகிழ்வதற்காகவே, எப்படி பெற்றோர் தன் குழந்தையின் கையில் வெற்றிலை பாக்கினைக் கொடுத்து, அதை தன் வாயில் போடுமாறு சொல்லி, அதன்மூலம் குழந்தையை மகிழ்விப்பரோ அது போல, நாம் கொடுத்ததை தான் ஸ்வீகரித்து, நம்மை மகிழ்விக்கிறான் என்று அறியவேண்டும். 

***

Thursday, April 16, 2020

#27 - போஜனரசவிபாக சந்தி

#27 - போஜனரசவிபாக சந்தி


கலுஷ ஜிஹ்வெகெ3 ஸுஷ்டு போ4ஜன
ஜலமொத3லு விஷ தோ1ருவுது3 நி
ஷ் கலுஷ ஜிஹ்வெகெ3 சுரஸ தோருவுதெ3ல்ல காலத3லி |
சுலலிதாங்க3கெ சகலரஸ ம
ங்கல வெனிசுதிஹுத ன்னமய கை
கொ1ளதெ3 பி3டு3வனெ பூதனிய விஷமொலெய னுண்ட3வனு ||27


கலுஷ ஜிஹ்வெகெ = நோய் நொடி வந்தால் மரத்துவிடும் நாக்கிற்கு
சுஷ்டு போஜன = நல்ல சுவையான உணவும்
ஜலமொதலு = தண்ணீர்கூட
விஷதோருவுது = கசப்பாகத் தெரியும்
நிஷ்கலுஷ ஜிஹ்வெகெ = எந்த பிரச்னையும் இல்லாத நாக்கிற்கு
சருசதோருவுது = அனைத்தும் அருமையாகத் தெரியும் (சுவைக்கும்)
எல்ல காலதலி = எப்போதும்
சுலலிதாங்ககெ = மிகச்சிறந்த அழகான ஸ்வரூபமுள்ள பரமாத்மனுக்கு
சகலரஸ = அனைத்து ரசங்களும் (சுவைகளும்)
மங்கல வெனிசுதிஹுது = மங்கலமாகியே இருக்கிறது
பூதனிய = பூதனி என்னும் அரக்கியின்
விஷமொலெய = விஷம் நிரம்பிய பாலினைக் கொடுக்க வந்த
உண்டவனு = குடித்தவன்
அன்னமய = அன்னமய என்னும் பெயருள்ள பரமாத்மன்
கைகொள்ளதெ = நாம் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளாமல்
பிடுவனெ = நிராகரித்து விடுவானோ? 

பகவந்தனுக்கு நாம் சமர்ப்பிக்கும் பதார்த்தங்கள், சுவையற்றதாகவே இருந்தாலும், அவனுக்கு அவை சுவையானதாகவே தோன்றும். அது பகவந்தனின் மகிமையே தவிர வேறில்லை என்று சொல்கிறார். ஜுரம் வந்தவனுக்கு, நல்ல சுவையான உணவு, நீர் எது கொடுத்தாலும், அது விஷத்தைப் போல கசக்கும். அதுவே, நோய் நொடிகள் இல்லாதவனுக்கு நன்றாக ருசி தெரியும். ஒரே பதார்த்தமானது, சிலருக்கு சுவையாகவும், சிலருக்கு கசப்பாகவும் தோன்றுவதற்கு நாக்கு மட்டுமே காரணம். அந்த பதார்த்தம் இல்லை. 

‘யோதோஷா இதரத்ராபிதே குணா: பரமேமதா:’ அனைவருக்கும் எது தோஷங்களாக தெரிகிறதோ, அதுவே பரமாத்மனுக்கு குணங்களாக தெரிகிறது என்பது இந்த பிரம்ம சூத்திர வாக்கியத்தின் பொருள். நமக்கு சுவையானதாக இருக்கும் பதார்த்தங்கள், பரமாத்மனுக்கு ருசிகரமாகவே இருக்கின்றது. பகவத்பக்தனான ஒரு பிராமணன், தன் வீட்டில் ஸ்ரார்த்தம் வரும்போது, பிராமணர்களுக்கு உணவளிக்க எந்தவித பதார்த்தங்களும் கிடைக்காமல், வெறும் கடுகு-உருண்டைகளை மட்டும் பரிமாறினான். அந்த பிராமணர்களுக்கு அதுவே அமிர்தத்தைப் போல இருந்தது என்று வராக புராண வாக்கியம் சொல்கிறது. பகவத் பக்தர்களுக்கே கடுகு-உருண்டை அமிர்தமாக தோன்றினால், அந்த பரமாத்மனுக்கு எப்படி அது கசப்பாகத் தோன்றும்? 

விதேஹ நாட்டின் ஸ்ருததேவ என்னும் பிராமணன், ஸ்ரீகிருஷ்ணனை பக்தியுடன் பிரார்த்திக்க, ஸ்ரீகிருஷ்ணன் அவனது பக்திக்கு மெச்சி, அந்த பிராமணனின் வீட்டிற்கு வந்தான். அப்போது அந்த பிராமணன் கடுகு-உருண்டையாலேயே ஸ்ரீகிருஷ்ணனை திருப்திப்படுத்தினான். ஸ்ரீகிருஷ்ணன் அதை அமிர்தத்தைப் போல நினைத்து உண்டான் என்று பாகவத 10ம் ஸ்கந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

பூதனி என்னும் அரக்கி, ஸ்ரீகிருஷ்ணனைக் கொல்வதற்காக தன் முலைகளில் விஷம் தடவி அந்தப் பாலை ஸ்ரீகிருஷ்ணனுக்கு ஊட்டி விடுவதற்காக வந்தால், ஸ்ரீகிருஷ்ணன் அதைக்கூட நிராகரிக்காமல் ஏற்றுக்கொண்டான் என்றபிறகு, நாம் கொடுக்கும் பதார்த்தங்களை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிப்பானா? ஒருக்காலும் நிராகரிக்க மாட்டான் என்பது பொருள்.

***

#26 - போஜனரசவிபாக சந்தி

#26 - போஜனரசவிபாக சந்தி

ஜீவக்ருத கர்மக3ள பி3டதெ ர
மாவரனு ஸ்வீகரிஸி ப2லகள
நீவனதிகாரானுசாரதி3 அவரிக3னவரத |
பாவகனு சர்வஸ்வ பு4ஞ்சிஸி
தா விகாரவனைதனொம்மெகு3
பாவனகெ பாவனனெனிப ஹரியெம்பு3தே3னரிது3 ||26

ஜீவக்ருத கர்மகள = ஜீவர்கள் தங்கள் கர்மங்களை விடாமல்
ரமாதவனு = லட்சுமியைவிட உத்தமனான பரமாத்மன்
ஸ்வீகரிஸி = ஏற்றுக்கொண்டு
அவரிகெ = அந்த ஜீவர்களுக்கு
அதிகாரானுசாரதி = அந்த ஜீவர்களின் தகுதிக்கேற்ப
அனவரத = தினந்தோறும் (எப்போதும்)
பலகளனீவ = பலன்களைக் கொடுக்கிறான்
பாவகனு = அக்னி
சர்வஸ்வ புஞ்சிஸி = நல்லது கெட்டது என்று பார்க்காமல் அனைத்தையும் எரித்து உண்பதைப் போல
ஒம்மெகெ = ஒரு சமயத்திலும்
விகாரவனெய்து = தன் உருவத்தை இழப்பதில்லை. இப்படியிருக்கையில்,
பாவனகெ பாவனனெனிப = பவித்ரமான கங்காதி நதிகளை, பவித்ரம் ஆக்குபவன் என்ற பெயரைப் பெற்றவனான
ஹரி = ஸ்ரீபரமாத்மன்
உம்புதேனரிது = நாம் கொடுக்கும் கர்ம பலன்களை ஏற்றுக் கொள்வதில், என்ன ஆச்சரியம்?

ரமாதேவியின் பதியான (அல்லது ரமாதேவியரைவிட உத்தமனான) பரமாத்மன், தேவமனுஷ்யாதி ஜீவர்கள் செய்யும் புண்யபாபாதி கர்மங்கள், அவற்றை செய்விப்பது பகவந்தனே என்று நினைத்து அவனுக்கு சமர்ப்பிக்க, ஸ்ரீஹரி அவற்றை விட்டுவிடாமல் ஏற்றுக்கொண்டு, தன் பக்தர்கள் செய்த பாவ கர்மங்களை எரித்து (அழித்து), அவரவர் செய்த புண்யங்களுக்கேற்ப, அவரவர்களின் தகுதிக்கேற்ப, அவரவர்களுக்கு பலன்களைக் கொடுக்கிறான். 

ஆனால், அப்ராக்ருதனான ரமா வல்லபன், ப்ராக்ருதர்கள் செய்யும் பூஜைகளை, இவர்கள் கொடுக்கும் ப்ராக்ருத அன்னங்களை எப்படி ஏற்றுக்கொள்கிறான் என்றால்: 


அக்னி அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறது. ஆனாலும் அதற்கு எந்தவொரு விகாரமும் வருவதில்லை. தேவதைகளின் தாரதம்யத்தில் ‘விஷ்ணு: பரமோ அக்னிரவம:’ என்று அக்னியை கடைசியானவன் என்று சொல்லியிருக்கின்றனர். இப்படிப்பட்ட அக்னியே அனைத்தையும் ஏற்று, விகாரமாகாதவனாக இருக்கையில், கங்காதி பவித்ரமான நதிகளை, பவித்ரமாக ஆக்குபவன் என்னும் பெயரைப் பெற்ற ஸ்ரீபரமாத்மன் ப்ராக்ருத உணவினை உண்டு, அவற்றை பவித்ரமாக ஆக்குவான் என்றால் அதில் என்ன ஆச்சரியம்?

***

Wednesday, April 15, 2020

#25 - போஜனரசவிபாக சந்தி

#25 - போஜனரசவிபாக சந்தி


3ணனெயில்லத பரமசுக2
த் கு3ணக3ணங்கள லேஷ லேஷகெ
எணெயெனிஸது ரமாப்ஜ பவ ஷக்ராதிக3ள சுக2வு |
உணுதுணுத மை மரெது க்ருஷ்ணா
ர்ப்பண வெனலு கைகொம்பனர்பக
ஜனனிபோ4ஜன சமயத3லி கை ஒட்டுவந்த33லி ||25

கணனெ இல்லத = எண்ணமுடியாத அளவிற்கு

பரமசுக சத்குணகணங்கள = பரமானந்த முதலான சத்குணங்களில்
லேஷலேஷக்கெ = பற்பல அம்சங்களில் ஒரே ஒரு அம்சமாவது
அப்ஜபவ = பிரம்மதேவர்
ஷக்ராதிகள = இந்திராதிகள்
எணெயெனிஸது = சமம் என்று சொல்லமுடியாது. 
உணுதுணுத = தான் போஜனம் செய்து கொண்டிருக்கும்போது
மை மரெது = பக்தியில் மெய்மறந்து
கிருஷ்ணார்ப்பணவெனலு = கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி அர்ப்பித்தால்
அர்பக = சிறுவன்
ஜனனி போஜன சமயதலி = தாய் தான் உண்ணும் சமயத்தில்
கை ஒட்டுவந்ததலி = கை நீட்டுவதைப் போல
கைகொம்பனு = ஏற்றுக் கொள்கிறான்

அபரிமிதமான சுக ஸ்வரூபனான ஸ்ரீபரமாத்மனிடம் இருக்கும் சத்குணங்களின் ஒரு அம்சம்கூட, ரமாபிரம்மாதிகளின் சுகத்திற்கு ஈடுசெய்வதற்கு சாத்தியமில்லை. இத்தகைய பரமாத்மனின் சேவை என்று நினைத்து, தான் போஜனம் செய்யும்போது, ஒவ்வொரு கை உண்ணும்போதும், பரமாத்மனின் ஸ்மரணையை செய்து, அந்த உணவினை பரமாத்மனுக்கு கிருஷ்ணார்ப்பணம் என்று சமர்ப்பித்தால், தாய் தான் உண்ணும்போது, குழந்தை அவள் அருகில் அமர்ந்து எச்சில் உணவினை ஏற்றுக்கொள்வது போல, நாம் கொடுப்பதை அவன் ஏற்றுக்கொள்கிறான்.

****


#24 - போஜனரசவிபாக சந்தி

#24 - போஜனரசவிபாக சந்தி

அபு3ஜஜாண்டோத3ரனு விபி1னதி3
ஷபரியெஞ்சலனுண்ட3 கோ3கு1
தப3லெயர னொலிஸி3னு ரிஷிபத்னியரு கொட்டன்ன |
சுபு4ஜ தா பு4ஞ்சிஸித ஸ்வரமண
குபு3ஜெக3ந்த4கெ ஒலித3 முனிக3

விபுத4ஸேவித பி3டுவனெ நாவித்த கர்மப2||24

அபுஜஜாண்டோதரனு = பிரம்மாண்டத்தை தன் வயிற்றில் தரித்திருக்கும் ஸ்ரீபரமாத்மன்
விபினதி = காட்டினில்
ஷபரியெஞ்சலனுண்ட = ஷபரி என்னும் வயதானவர் கொடுத்த எச்சில் பழங்களை உண்டான்
கோகுல தபலெயர நொலிசிதனு = கோகுலத்தில் இருக்கும் கோபிகா ஸ்த்ரியர்களை மெச்சி, அவர்கள் தன்னை அடையுமாறு செய்தான்
ரிஷிபத்னியரு = பூஜை செய்துகொண்டிருந்த பிராமண பெண்கள்
கொட்டன்ன = கொடுத்த அன்னத்தை
சுபுஜ = சுவையான உணவை உண்ணும் ஸ்ரீபரமாத்மன்
புஞ்சிஸித = உண்டான்
ஸ்வரமண = எந்தவொரு வேலைக்கும் யாருடைய உதவியும் தேவைப்படாதவன்
குபுஜெ = த்ரிவக்ரை என்பவள் கொடுத்த
கந்தகெ = சந்தனத்திற்கு
ஒலித = மகிழ்ந்து, அவள் தன்னை அடையுமாறு செய்தான்
முனிகண விபுதசேவித = முனிகணங்களாலும், தேவகணங்களாலும் வணங்கப்படுபவனான ஸ்ரீபரமாத்மன்
நாவித்த கர்மபல = நாம் சமர்ப்பித்த கர்மபலன்களை விட்டுவிடுவானோ?

ஸ்ரீபரமாத்மன் பக்தவத்ஸலன் என்று இங்கு சொல்கிறார். ஸ்ரீபரமாத்மன் ராமாவதாரத்தில், சீதா லட்சுமணனுடன் காட்டில் வசித்தபோது, ஷபரி என்னும் வயதானவள், ராமனின் வருகையை முதலிலேயே அறிந்து, மரத்திலிருந்து விழுந்த நல்ல பழங்களை சேகரித்து, அவற்றைக் கடித்துப் பார்த்து, சுவை நன்றாக இருந்தால், இவை ராமனுக்கு என்று தனியே எடுத்து வைத்திருந்தாள். இப்படி சேகரித்து வைத்த பழங்களை ராமன் வந்தபோது சமர்ப்பித்தாள். ஸ்ரீராமனும் அவளுடைய பக்தியை மெச்சி, அந்த பழங்களை ஏற்றுக்கொண்டான். 

அவன் ஸ்வரமணனாக இருந்தாலும், கோகுலத்தின் கோபிகா ஸ்த்ரியர்களுக்கு அருளினான். ரிஷி கணங்களாலும், பிரம்மாதி தேவ கணங்களாலும் வணங்கப்படுபவன் ஆனாலும், ரிஷிபத்னியர் கொடுத்த அன்னத்தை ஏற்றுக்கொண்டான். த்ரிவக்ரை என்னும் குப்ஜை சந்தனத்தைக் கொடுக்க, அதனை அன்புடன் ஏற்றுக்கொண்டு அவள் தன்னை அடையுமாறு செய்தான். 

இப்படி ஜாதி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வெறும் பக்தியை மட்டுமே மெச்சி, மேற்சொன்னவர்களுக்கு அருளினான் என்றபிறகு, நாம் பக்தியுடன் கர்மங்களின் பலன்களை அவனுக்கு சமர்ப்பித்தால், பரமாத்மன் நம்மை கைவிடுவானோ? சந்தேகமில்லாமல் அவற்றை ஏற்றுக்கொள்வான் என்று பொருள். 

Tuesday, April 14, 2020

#23 - போஜனரசவிபாக சந்தி

#23 - போஜனரசவிபாக சந்தி

ஸு11னேகோ1த்தர சுபஞ்சா
ஷத வரண க1ரணதி3 சதுரவிம்
ஷதி சுத1த்வதி தா4துக3ளொளித்த3விர தனிருத்34 |
ஜத1னமாள்பனு ஜகதி3ஜீவ
ப்ரததி1கள ஷண்ணவதி நாமக
சதுரமூர்த்தி க3ளர்ச்சிசுவ ரத3ரிந்த33ல்லவரு ||23

சுதப = சூரியனில் இருந்துகொண்டு உலகத்தில் நன்றாக வெப்பத்தை உருவாக்குவதால் சுதப என்று பெயரைக் கொண்ட பரமாத்மன்
ஏகோத்தர சுபஞ்சாஷத = 51
வரண = அ-முதலான அனைத்து எழுத்துக்கள்
கரணதி = மனோ இந்திரியத்திற்கு, காரணமான இதய கமலத்தின் 12 இதழ்களிலும்
சதுரவிம்ஷதி சுதத்வதி = 24 தத்வங்களிலும்
தாதுகளொளு = எலும்பு, தோல் முதலான 7 தாதுகளில் இருந்து
அனிருத்த = அனிருத்த நாமக ஸ்ரீபரமாத்மன்
அவிரத = இடைவிடாமல் (தொடர்ந்து)
ஜகதி = உலகத்தில்
ஜீவ ப்ரததிகள = ஜீவர்களை
ஜதனமாள்பனு = காப்பாற்றுவான்
அதரிந்த = ஆகையால்
ஷண்ணவதி நாமக = ஷண்ணவதி என்று பெயரைக் கொண்ட 96 ரூபங்களைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன்
சதுரமூர்த்திகள = அனிருத்த அனிருத்த, அனிருத்த பிரத்யும்ன, அனிருத்த சங்கர்ஷண, அனிருத்த வாசுதேவ என்னும் அனிருத்தனின் நான்கு ரூபங்களை, அறிந்தவர்கள் / ஞானிகள் அர்ச்சிக்கின்றனர். 

மேலே பார்த்த 96 ரூபங்களை விளக்கி, அதில் அனிருத்தனின் வியாப்தித்வத்தை விளக்குகிறார். ‘சம்யுக்தபதீதி சுதப:’ என்னும் குறிப்பினால், சூரியனில் இருந்து, உலகின் இருட்டினை போக்குபவன் ஆகையால், பரமாத்மனு சுதப என்று பெயர். அ-முதல் க்‌ஷ-வரை 51 எழுத்துகள். வர்ணங்களால் புகழப்படுபவனான பரமாத்மனின் ரூபங்கள் 51. அஜ, ஆனந்த, இந்திர, ஈஷான, உக்ர, ஊர்ஜ, ருதம்பர, ஊக, இஷ, ஈஜ, ஏகாத்ம, ஐர, ஓஜோப்ருத், ஔரஸ, அந்த, அர்த்தகர்ப்ப, கபில, கபதி, கருட, கர்ம, ஞஸார, சார்வங்க, சந்தோகம்ய, ஜனார்த்தன, ஜாடிதாரி, ஞம, டங்கி, டகல, டரிண, ணாத்ம, தார, தப, தண்டி, தன்வி, நம்ய, பார, பலி, பலீ, பக, மனு, யக்ஞ, ராம, லட்சுமிபதி, வராஹ, ஷாந்த, ஸம்வித், ஷட்குண, சாராத்ம, ஹம்ஸ, ளாளுக, நரசிம்ஹ என்று 51 ரூபங்கள், அ முதல் க்‌ஷ வரைக்குமான எழுத்துகளால் வர்ணிக்கப்படுபவன் என்று அறியவேண்டும்.


இதய கமலத்தில் இருக்கும் 12 இதழ்களில் பகவந்தனின் 12 ரூபங்கள் இருக்கின்றன. அவை: சக்தி, ப்ரதிஷ்டா, சம்வித், ஸ்பூர்த்தி, ப்ரக்ருதி, பரா, வித்யா, மதி, நியதி, மாயா, கால மற்றும் புருஷ. இவற்றைப் பற்றி தந்த்ரசார சங்க்ரஹத்தில் மிகவும் விளக்கமாக படிக்கலாம். ப்ருத்வி முதலான ரூபங்கள் 5, தன்மாத்ரா குணங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, சித்த, புத்தி, மனஸ், அஹங்கார இவற்றைச் சேர்த்து மொத்தம் 24 தத்வங்கள். இந்த தத்வங்களில் கேசவ நாமாதி 24 ரூபங்கள் உள்ளன. த்வக், சர்ம, மாம்ஸ, ருதிர, மேதஸ், மஜ்ஜா, அஸ்தி என்னும் ஏழு தாதுகளில் அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ, நாராயண, ஹம்ஸ, வசிஷ்ட என்னும் 7 ரூபங்கள் உள்ளன. பகவத்ரூப 1, ஜீவ 1 என மொத்தம் 96 ரூபங்களில் அனிருத்தன் அனைத்து ஜீவராசிகளிலும் இருந்து ஜீவர்களை காப்பாற்றுகிறான். ஞானிகள் இந்த அனிருத்தனின் ஸ்வரூபத்தையே அனிருத்தபிரத்யும்ன என்று 4 பாகங்களாகப் பிரித்து அர்ச்சிக்கின்றனர்.

***


#22 - போஜனரசவிபாக சந்தி

#22 - போஜனரசவிபாக சந்தி

ஷண்ணவதி நாமக1னு வசு மூ
1ண்ண பா4ஸ்கரரொளகெ3 நிந்து1 ப்ர
பன்னரனுதின நிஷ்க1பட1 த்ப4க்தியலி மாள்ப |
புண்யகர்மவ ஸ்வீகரிஸி கா
ருண்யஸாகர பித்ருக3ளிகெ3
3ண்ய சுக2வித்தவர பொரெவனு எல்லகா1லத3லி ||22

ஷண்ணவதி நாமகனு = 96 ஸ்வரூபங்களால், ஷண்ணவதி என்று அழைத்துக் கொள்ளும் ஸ்ரீபரமாத்மன்
வசுமூகண்ண பாஸ்கரரொளகெ = வசுகண, ருத்ரகண, சூர்யகண என இந்த மூன்று கணங்களுக்குள்ளும்
நிந்து = இருந்து
ப்ரபன்னரனு = தன்னை சரணடைந்தவர்களை
அனுதின = தினந்தோறும் (எப்போதும்)
நிஷ்கபட = கபடம் இல்லாமல்
சத்பக்தியலி = மிகச்சிறந்த பக்தியில்
மாள்ப = செய்யும்
புண்யகர்மவ = புண்ணிய கர்மங்களை
ஸ்வீகரிஸி = ஏற்றுக் கொண்டு
காருண்யசாகர = கருணைக்கடலான (பகவந்தன்)
பித்ருகளிகெ = அந்த பித்ருகணங்களுக்கு
அகண்ய சுகவித்து = அபரிமிதமான சுகங்களைக் கொடுத்து
எல்லகாலதலி = எப்போதும் (நிரந்தரமாக)
அவர = அந்த பித்ருகளை
பொரெவனு = காப்பாற்றுவான்.

பரமாத்மன் ஷண்ணவதி என்று அழைத்துக் கொள்வதற்கான காரணம்:

1 ஆண்டில் 96 ஸ்ரார்த்தங்கள் வருகின்றன. அவை எவை என்றால்: 

மன்வாதிகள் 14
யுகாதிகள் 4
பாத்ரபத பகுள பிரதமை முதல் அமாவாசை வரை மகாலய பட்சம் 15
சங்க்ரமணங்கள் 12
அமாவாசைகள் 12
வியதிபாதங்கள் 13
வைத்ருதிகள் 13
திஸ்ராஷ்ட 12
இறந்த திதி 1
ஆக மொத்தம் 96 ஸ்ரார்த்த போக்தன் ஆகையால், பரமாத்மனுக்கு ஷண்ணவதி ஸ்வரூபி என்று பெயர் வந்தது. மேலும், பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹர்களில் வசு, ருத்ர, ஆதித்ய ரூபங்களால் இருக்கிறான். பிரத்யும்னன் வசு ரூபமாகவும், சங்கர்ஷணன் ருத்ர ரூபனாகவும், வாசுதேவன் ஆதித்ய ரூபமாகவும் இருக்கிறான். 

வசுகள் 8
ருத்ரர் 11
ஆதித்யர் 12

மொத்தம் 31. இப்படி 31 ரூபங்களால் வசு ருத்ர ஆதித்யர்களின் தேகத்தில், வைகாரிக அஹங்கார இருக்கும் மனஸ், தைஜஸ அஹங்கார இருக்கும் இந்திரியங்கள், தாமஸ அஹங்கார இருக்கும் பஞ்சபூதங்கள், என வைகாரிகாதி மூன்று விதமான அஹங்காரங்களில் நிலைத்திருப்பதால், 31*3-93. பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹ என 3 ஆக மொத்தம் 93+3=96 ரூபங்களால் பித்ருகளில் இருந்து, தன்னை சரணடைந்தவர்களை, அதாவது ஒருவனின் வம்சத்தில் இருந்த பித்ருகளுக்காக, கபடங்கள் இல்லாமல், பக்தியுடன், ஸ்ரார்த்தங்களை செய்தால், அவற்றை ஸ்வீகரித்து, கருணைக்கடலான ஸ்ரீஹரி, அந்த பித்ருகளுக்கு அனந்த சுகங்களைக் கொடுத்து, அனைத்து காலங்களிலும் அந்த பித்ருகளை, ஸ்ரார்த்தம் செய்பவர்களைக்கூட காப்பாற்றுகிறான். 

***

Monday, April 13, 2020

#21 - போஜனரசவிபாக சந்தி

#21 - போஜனரசவிபாக சந்தி


த்ரினவதி1 சுரூபாத்மக1 னிரு
த்த4னு சதா யஜமானனாகி
த்த3னல யம ஸோமாதி3 பித்ருதேவதெக3ளிகெ3 அன்ன |
எனிபனா ப்ரத்3யும்ன சங்கரு
ஷண விபா4கவ மாடிகொண்டு3
ண்டுணிப நித்யானந்த போ4ஜனதா3யி துர்யாஹ்வ ||21


த்ரினவதி சுரூபாத்மக = 93 ஸ்வரூபங்களால் ஆன 
அனிருத்தனு = அனிருத்த நாமக பரமாத்மன்
சதா = எப்போதும்
யஜமானனாகி = ஸ்ரார்த்தங்களில் கர்த்ரு ரூபனாக
இர்த்து = கர்த்ருவின் உள்ளே இருந்து
ப்ரத்யும்ன = ப்ரத்யும்ன ரூபத்தினால்
அனல = அக்னி
யம சோமாதி = யமன், சந்திரன் முதலானவர்களே அதிபதிகளாக இருக்கும்
பித்ருதேவதெகளிகெ = பித்ரு தேவதைகளுக்கு
எந்தனு = தலைவன் என்று
எனிப = என்று சொல்லிக் கொள்ளும்
சங்கர்ஷண = சங்கர்ஷணன்
விபாகவ மாடி = பித்ரு பிதாமகர்களுக்கு பிரித்துக் கொடுத்து
கொண்டு = தானும் ஸ்வீகரித்து
உணிப = பித்ருகளுக்கு உண்ணக் கொடுப்பான்
துர்யாஹ்வ = நான்காம் வாயுதேவர்
நித்யானந்த போஜனதாயி = எப்போதும் ஆனந்தமயமான போஜனங்களைத் தருவான்.

பித்ருதேவதைகளுக்கு அன்னரஸங்களைப் பிரித்துக் கொடுக்கும் விதத்தை இங்கு சொல்கிறார். 

அனிருத்த நாமக பரமாத்மனும், 93 ஸ்வரூபங்களைக் கொண்டவனுமான பரமாத்மன். 93 எப்படியென்றால், விஸ்வே தேவதைகள் 10 பேர், ஸ்ரார்த்தாதிகளில் ஸ்வாஹாகாரத்தினால் ஆராதிக்கப்படுபவர்கள். புரூரவ, ஆர்த்ரா ஆகிய 5 பேர்களில் அனிருத்த ரூபமும், நாராயண ரூபமும் இருக்கிறது. பித்ரு தேவதைகளில், அமூர்த்தா கணங்கள் 3, மூர்த்த கணங்கள் 4, என மொத்தம் 7 கணங்கள் உள்ளன. இந்த ஒவ்வொன்று கணங்களிலும் பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ என்னும் ரூபங்கள் இருக்கின்றன. இப்படி 3*7 = 21 ரூபங்கள் ஆகின்றன. இதற்கு விஸ்வே தேவதைகள் 10 பேரை சேர்த்தால், 21+10=31 ஆகிறது. 

இந்த ஒவ்வொருவருக்கும் யஜமானன், அதாவது அதிபதி என்றால் அது, அக்னி, யமன் சந்திரன் இவர்கள் மூவர். ஆக மொத்தம் 31 * 3 = 93 ஆகிறது. இந்த 93 ஸ்வரூபங்களால் அனிருத்தாதி ஐந்து ரூபங்களைக் கொண்ட பரமாத்மன், அனிருத்த ரூபத்தினால் ஸ்ரார்த்த கர்த்ருவில் இருக்கிறான். விஷ்வே தேவதைகளில் அனிருத்த, நாராயண ரூபங்களால் இருக்கிறான். பித்ருதேவதைகளுக்கு அபிமானி தேவதைகளான அக்னி, யம, சந்திரர்களில் பிரத்யும்னன் இருந்து, அந்த பித்ருதேவதைகளுக்க்கு ப்ரேரகனாக (வழிநடத்துபவன் / தலைவன்) இருக்கிறான். 

சங்கர்ஷணன், ‘அமூர்த்தானாஞ்ச மூர்த்தானாம் பித்ருணாம் தீப்த தேஜனாம்’ என்னும் பிரமாணத்திற்கேற்ப தேவதைகள் செய்யும் ஸ்ரார்த்தாதிகளை அமூர்த்த பித்ருகணங்களுக்கும், மூர்த்தரான 4 கணங்களுக்கு பிராஹ்மண, க்‌ஷத்ரிய, வைஷ்ய, ஷூத்ர என்னும் 4 வர்ணத்தவர் செய்யும் ஸ்ரார்த்தங்களை பிரித்து, இந்த பித்ரு கணங்களிலும், விஷ்வே தேவதைகளிலும் வைத்து, தானும் அதை ஏற்றுக் கொள்கிறான். வாசுதேவன், விஷ்வே தேவதைகளுக்கும், பித்ரு கணங்களுக்கும் தான், நித்யானந்தகரமான போஜனங்களை உண்ணக் கொடுத்து, திருப்திப்படுத்துகிறான். 

***

#20 - போஜனரசவிபாக சந்தி

#20 - போஜனரசவிபாக சந்தி


மூல நாராயணனு ஐவ
த்தேளதி4க ஐனூரு ரூபவ
தா1ளி சர்வத்ரதி3 மானனொளிப்ப சர்வக்3|
லீலெகை3வனு ஸாவிரத3 மே
லேளு னூர்ஹன்னொந்து3 ரூபவ
தா1ளி பஞ்சப்ராணரொளு லோக13லஹுவனு ||20


மூல நாராயணன் = மூலரூபியான நாராயணன்
ஐவத்தேளதிக ஐனூரு ரூபவ = 557 ரூபங்களை
தாளி = தரித்து
சர்வத்ரதி = எல்லா பிராணிகளிலும்
சமானனொள் = சமான பிராண தேவருக்குள்
இப்ப = இருக்கிறான்
சர்வேஷ = அனைவருக்கும் ஈஷனான ஸ்ரீபரமாத்மன்
பஞ்சபிராணரொளு = பிராணாபானாதி பஞ்ச ப்ராணர்களில்
சாவிரத மேலேளுனூர்ஹன்னொந்து = 1711
ரூபவ தாளி = ரூபங்களை தரித்து
லீலெகைவனு = அனிருத்தாதி ரூபங்களால் சஞ்சரிக்கிறான்
லோககள = அனைத்து லோகங்களின் பிராணிகளை
சலஹுதிருவனு = காப்பாற்றுகிறான். 

சமான நாமக பிராணதேவருக்குள், ஸ்ரீமன் நாராயணன் சமான = ச=7 மா=5 ன=5, 557 ரூபங்களை தரித்து, அனைவரிடமும் வியாபித்திருக்கிறான். இப்படி சர்வேஸ்வரனான இந்த பரமாத்மன், அனிருத்தாதி ஐந்து ரூபங்களால், பிராண அபானாதி ஐந்து ரூபங்களில் முறையே, 

பிராணனில் 53, 
அபானனில் 511
வ்யானனில் 55
உதானனில் 535
சமானனில் 557,

என இவை அனைத்தையும் கூட்டினால், 1711 ரூபங்களை தரித்து, தன் லீலைகளால் உலக மக்களை காப்பாற்றுகிறான். ‘ப்ராணாபானா விடாயாஞ்ச பிங்களாயாஞ்ச சர்வஷ:’ என்னும் பாகவத 2ம் ஸ்கந்தத்தின் தாத்பர்ய வாக்கியத்திற்கேற்ப, 
* மனிதர்களின் இளா, பிங்கள என்னும் நாடிகளில் ப்ராண, அபான நாமக வாயுதேவரும் 
* நடுவில் இருக்கும் சுஷும்னா நாடியில் உதான வாயுதேவரும், 
* சந்தி நாடிகளில் சமான பிராணதேவரும், 
* தேகத்தில் அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கும் நாடியில் வ்யான பிராணதேவரும் - 
இருக்கிறார்கள் என்று அறியவேண்டும். 

***

Sunday, April 12, 2020

#19 - போஜனரசவிபாக சந்தி

#19 - போஜனரசவிபாக சந்தி


மூரதி4க ஐவத்து ப்ராண ஷ
ரீர தொளக3 னிருத்தனிப்பை
நூரு ஹன்னொந்த3தி4க பா1னனொளிப்ப1 ப்ரத்3யும்ன |
மூரனெ வ்யானனொளகை33ரெ
நூரு ரூபதி3 சங்கருஷணை
நூருமூவத்தைது3 தா3னனொளிப்ப1 மாயேஷ ||19


இப்போது, ப்ராண, அபானாதி பஞ்சப்ராணரில் இருக்கும் பகவத் ரூபங்களை சொல்கிறார்.
அனிருத்த = அனிருத்த ரூபி பகவந்தன்
ப்ராண ஷரீரதொளகெ = பிராண நாமக வாயுவின் ஸ்வரூப தேகத்தில்
மூரதிக ஐவத்து = 53 ரூபங்களால்
இப்ப = இருக்கிறான்
பிரத்யும்ன = பிரத்யும்ன நாமகன்
ஐனூரு ஹன்னொந்ததிக = 511 ரூபங்களால்
அபானனொளு = அபான நாமக பிராண சரீரத்தில்
இப்ப = இருக்கிறான்
சங்கர்ஷண = சங்கர்ஷண ரூபி பரமாத்மன்
மூரனெவ்யானனொளகெ = மூன்றாவதாக இருக்கும் வ்யான நாமக பிராண சரீரத்தில்
ஐதரெனூரு = 5+(100/2) = 55
ரூபதி = ரூபங்களால்
மாயேஷ = மாயாபதியான வாசுதேவன்
ஐனூரமூவத்தைது = 535 ரூபங்களால்
உதானனொளு = உதான நாமக பிராண சரீரத்தில்
இப்ப = இருக்கிறான்

பிராண = ப்ரா = 3 ண=5. பிராணிகளின் சரீரத்தில், பஞ்சபிராணனின் உள்ளே, அனிருத்தரூபி பரமாத்மன், பிராண நாமத்தில் 53 ரூபங்களால் இருக்கிறான். அபான = அ=1 பா=1 ன=5. 511 ரூபங்களில் பிரத்யும்னன் அபானனில் இருக்கிறான். மூன்றாவது பிராணனான வ்யான சரீரத்தில் வ்யானன் என்னும் பெயரில் சங்கர்ஷணன் இருக்கிறான். வாசுதேவன் உதான நாமக பிராணனில் - உ=5 த=3 ன=5 என 535 ரூபங்களில் இருக்கிறான். 

***

#18 - போஜனரசவிபாக சந்தி

#18 - போஜனரசவிபாக சந்தி


மூரு சாவிரதர்த்தஷத மே
லீரதி41 ரூபக3ள த4ரிஸி ஷ
ரீரதொள கானந்த3மய நாராயாணாஹ்வயனு |
ஈரெரடு சாவிரத3மேல் மு
ந்னூருஐது3 சுரூபதி3ந்த3லி
பா4ரதீஷனொளிப்ப நவனீதஸ்த2 க்4ருத1தந்தெ ||18


நாராயணாஹ்வயனு = நாராயண நாமகன்
மூரு சாவிரதர்தஷத மேலீரதிக = 3052
ரூபகள தரிஸி = ரூபங்களை தரித்து 
ஷரீரதொளகெ = நம் தேகங்களில்
ஆனந்தமய = ஆனந்தமய கோஷாதாரனாகி, ஆனந்த என்று அழைத்துக் கொள்கிறான்
ஈரெரடு சாவிரதமேல் முன்னூரு ஐது = (2+2)=4*1000= 4000 + 305 = 4305 
சுரூபதிந்தலி = சிறந்த ரூபங்களால்
நவனீதஸ்த = வெண்ணையில் (மறைந்து) இருக்கும்
க்ருததந்தெ = நெய்யைப் போல
பாரதீஷனொளு = பாரதிரமணனான முக்யபிராண தேவரில்
இப்ப = இருக்கிறான்

ஆனந்த என்னும் சொல்லின் எண்ணிக்கை. ஆ=2 நன்=50 த=3. இதை வலப்புறமாக படித்தால் 3052 ஆகிறது. ஸ்ரீ நாராயணன் இப்படி 3052 ரூபங்களை தரித்து, தேகத்தில் ஆனந்தகோஷ தாரகனாக ஆனந்த என்னும் பெயரில் இருக்கிறான். இது போலவே, அனிருத்தாதி 5 ரூபியான பரமாத்மன், 

அன்ன= 101, 
பிராண = 513, 
மன = 55, 
விக்ஞான = 584, 
ஆனந்த= 3052 

இவ்வளவு ரூபங்களிலும் இவை அனைத்தையும் கூட்டினால், 4305 என்றும் ஆகிறது. இவ்வளவு ரூபங்களால், வெண்ணையில் இருக்கும் நெய்யைப் போல பாரதிரமண முக்யபிராணனில் முக்யபிராணரூபியாக இருக்கிறான். வெண்ணையில் நெய் இருந்தாலும், அது நெய் போல தோன்றாமல், அதை காய்ச்சினால் மட்டுமே தெரியும். அதுபோலவே, பிராணதேவரிடம் பரமாத்மன் இருந்தாலும், முக்யபிராணரூபியாகவே பரமாத்மன் காணப்படுகிறான். 

***

Saturday, April 11, 2020

#17 - போஜனரசவிபாக சந்தி

#17 - போஜனரசவிபாக சந்தி


நூரவொந்து சுரூபதி3ம் ஷா
ந்தீ1ரமண தானன்ன னெனிபை
நூருமேல் மூரதி43தச ப்ராணாக்2ய ப்ரத்3யும்ன |
தோருதிஹ னயிவத்து ஐது3 வி
கா1ரமனதொ3ளு சங்கருஷணை
நூரு சதுராஷீதி விக்ஞானாத்ம விஷ்வாக்2||17


அன்னகோஷத்தில், அன்னாதிகளின் சமூகத்திற்கு (உதாரணம்: ஒரு பாத்திரத்தில் உள்ள மொத்த அன்னத்திற்கு) மய என்று பெயர். கோஷம் என்றால் அதற்கான உறை என்று பொருள். அதற்குள் முழுமையாக அன்னத்தை நிரப்பினால், அதை அன்னமய என்று அழைக்கலாம். கண்டரூபத்தினால் அன்னகோஷாதிகளில் இருக்கும் பகவத்ரூபங்களை முன்னர் கூறினார். இப்போது, அன்ன, பிராண ஆகிய சொற்களில் அழைக்கப்பட்டு அகண்ட ரூபங்களாக இருக்கும் பகவத்ரூபங்களை தெரிவிக்கிறார். 

ஷாந்திரமண = ஷாந்திதேவியின் பதியான அனிருத்த நாமக பரமாத்மன்
நூரவொந்து சுரூபதிம் = 101 ரூபங்களால்
அன்னனெனிபை = அன்னமய கோஷத்திற்கு அன்ன என்னும் பெயரில் ஆதாரபூதனாக இருக்கிறான்
ப்ரத்யும்ன = பிரத்யும்ன நாமகன்
ஐனூருமேல் மூரதிகதச = 513 ரூபங்களால்
ப்ராணாக்ய = பிராண என்னும் பெயரால் பிராணகோஷத்தை தரித்திருக்கிறான்
சங்கர்ஷண = சங்கர்ஷண நாமகன்
ஐவத்துஐது = 55 ரூபங்களால்
விகாரமனதொளு = சஞ்சலமான மனஸ் என்னும் கோஷத்திற்கு ஆதாரமாக மனஸ் என்னும் பெயரால் காணப்படுகிறான்
விஷ்வாக்ய = பிரபஞ்சத்தை காத்துக்கொண்டிருக்கும் வாசுதேவன்
ஐ நூருசதுராஷீதி = 584 ரூபங்களால்
விக்ஞானாத்ம = விக்ஞான கோஷத்திற்கு ஆதாரமாக விக்ஞான ஸ்வரூபனான இருக்கிறான்.

ஷாந்திரமணனான அனிருத்தன், சரீரத்தில் அன்னமயனாக அன்ன என்று அழைக்கப்படுகிறான். அதாவது, ஒவ்வொரு பருக்கையையும் தனித்தனியாக எடுத்துப் பார்த்தால், அது கண்ட எனப்படுகிறது. இப்படி பல கண்ட ரூபங்களால் ஆன ஒரு குழுவிற்கு, அகண்டமாக அன்ன என்று பெயர். முந்தைய பத்யத்தில் கண்ட ரூபத்தை சொல்லி, இங்கு அன்ன, பிராண என்னும் அகண்ட ரூபத்தை சொல்கிறார். அன்ன என்பதை எண்ணிக்கையில் சொன்னால், அ=1 ன்ன=10. இதை வலப்பக்கத்திலிருந்து படித்தால், 101 ரூபங்கள் ஆகிறது. இந்த ரூபங்களால் அனிருத்தன் அன்ன என்று அழைக்கப்படுகிறான். 

இதைப்போலவே, பிரத்யும்னன் பிராண என்பதை எண்ணிக்கையில் படித்தால், ப்ர=3 அ=1 ண=5 ஆகிறது. இதை வலப்பக்கத்தில் இருந்து படித்தால், 513 ரூபங்கள் ஆகிறது. இவ்வளவு ரூபங்களால் பிராணகோஷாதாரகனாகி பிராண எனப்படுகிறான். 

சங்கர்ஷணன் மனிதர்களுக்கு ஒவ்வொரு நொடியும் அழியும் தன்மையைக் கொடுக்கும் மனோகோஷத்திற்கு ஆதாரமாக, மன என்று அழைக்கப்படுகிறான். மன = ம=5 ன=5 என 55 என்று வருகிறது. 55 ரூபங்களால் மனஸ் என்று அழைத்துக் கொள்கிறான். விஷ்வாதாரனான வாசுதேவன் விக்ஞான கோஷத்திற்கு ஆதாரனாகி, வி=4, ஞா=8 ன=5 , அதாவது 584 ரூபங்களால் விக்ஞான என்று அழைத்துக் கொள்கிறான். 

***

#16 - போஜனரசவிபாக சந்தி

#16 - போஜனரசவிபாக சந்தி

ஐது3சாவிரனூர இப்ப
த்தைது3 நாராயணன ரூபவ
தா த4ரிசிகொண் ட3னுதினதி ஆனந்தமயனெனிப |
ஐது3லக்‌ஷத மேலெ எம்ப3
த்தை1து3 சாவிர நால்கு1ஷதக3

லைது3 கோ1ஷாத்மக விரிஞ்ச்யாண்ட3தொ3ளு தும்பி3ஹனு ||16

நாராயணன் = நாராயணரூபியான ஸ்ரீபரமாத்மன்
ஐதுசாவிரனூர இப்பத்தைது = 5125 
ரூபவ = ரூபங்களை
தா = தான்
தரிசிகொண்டு = தரித்து
அனுதினதி = தினந்தோறும் (எப்போதும்)
ஆனந்தமயனெனிப = ஆனந்தமய என்று தன்னை அழைத்துக் கொள்கிறான்
இதுகோஷாத்மக = அன்னமய, பிராணமய, மனோமய, விக்ஞானமய, ஆனந்தமய என்று ஐந்து கோஷாத்மகனாகி, அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ, நாராயண என்னும் 5 ரூபங்களால் 
ஐதுலக்‌ஷத மேலெ எம்பத்தைது சாவிர நால்குஷதகள = 585400 ரூபங்களில்
விரிஞ்சாண்டதொளகெ = பிரம்மாண்டத்தில்
தும்பிஹனு = நிலைத்திருக்கிறான்.

நாராயண என்பதை எண்ணிக்கையில் பார்த்தால், நா=5 ரா=2 ய=1 ண=5 என வருகிறது. இதை வலப்பக்கமாக படித்தால், 5125 ஆகிறது. ஸ்ரீபரமாத்மன் இவ்வளவு நாராயண ரூபங்களில் ஆனந்தமய என்று அழைத்துக் கொள்கிறான். ஆக பரமாத்மன், அன்னமய, பிராணமய, மனோமய, விக்ஞானமய, ஆனந்தமய என்னும் பெயர்களில் அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ, நாராயண என்னும் 5 ரூபங்களைக் கொண்ட பரமாத்மன் மொத்தம் 585400 ரூபங்களில் இந்த பிரம்மாண்டத்தில் அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கிறான். 

***