ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Showing posts with label பஞ்சமஹாயக்ஞ சந்தி. Show all posts
Showing posts with label பஞ்சமஹாயக்ஞ சந்தி. Show all posts

Monday, May 25, 2020

#35 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#35 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


ஜினவிமோஹக பு3த்த4பா1யுக3
3னுஜமர்த்த3ன கல்கி மேட்4ரதி
இனிது த3ஷரூபகள த3ஷகரணங்களலி திளிது3 |
அனுப4விப விஷயக3ள க்ருஷ்ணா
ர்ப்பண வெனலு கைகொம்ப வ்ருஜினா
ர்த்தன வரஜகன்னாத2 விட்டல விஷ்வவியாபகனு ||35

ஜினவிமோஹகபுத்த = ஜைன மதத்தவரை மயக்கிய புத்த ரூபி;
பாயுக = மலஜல இந்திரியங்களில்;
தனுஜ மர்த்தன = தைத்யர்களைக் கொல்லும் கல்கி ரூபி
மேட்ரதி = ஆண்குறியில்
இனிது = இதே விதமாக
தஷரூபகள = தசாவதார ரூபங்களை
தஷ கரணங்களலி = பத்து இந்திரியங்களில்
திளிது = அறிந்து
அனுபவிப = தான் அனுபவிக்கும்
விஷயகள = விஷய சுகங்களையே
கிருஷ்ணார்ப்பணவெனலு = கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்ல
வ்ருஜினார்த்தன = பாவங்களைப் போக்குபவனான
ஸ்ரீஜகன்னாத விட்டல,
விஷ்வவியாபகனு = உலகத்தையே வியாபித்திருக்கும் ஸ்ரீபரமாத்மன்,
கைகொம்ப = அதை ஏற்றுக்கொள்வான்.

பஞ்சமஹாயக்ஞ சந்தி என்னும் ஆறாம் சந்தி இங்கு முடிவுற்றது.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து


***

#34 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#34 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

மூலரூபனு மனதொ3ளிஹ ஸ்ரவ
நாலியொளகி3ஹ மத்ஸ்ய கூர்மனு
கோலரூபனு த்வக்ரசன தொளகி3ப்ப நரசிம்ஹ |
பா3லவடு1 வாமனனு நாஸி1
நாளதொ3ளு வத3னத3லி பா4ர்க்க3
வாலிப4ஞ்ன ஹஸ்த1தொ3ளு பாத33லி ஸ்ரீகிருஷ்ண ||34

மூலரூபனு = ஸ்ரீமன் நாராயணன்
மனதொளு = மனதில்
இஹ = இருக்கிறான்
ஸ்ரவண = காதுகளில்
ஆலியொளகெ = கண்களில்
மத்ஸ்யகூர்மனு = மத்ஸ்ய, கூர்மரூபி இருக்கிறான்.
கோலரூபனு = வராஹரூபி
த்வக் = த்வக் இந்திரியத்தில் இருக்கிறான்.
ரசனதொளகெ = நாக்கினில் இருக்கிறான்
நரசிம்ஹ = நரசிம்ம ரூபனாக
இப்ப = இருக்கிறான்
பாலவடு வாமனனு = பாலபிரம்மசாரியான வாமனன்
நாஸிக நாளதொளு = மூக்கின் துளைகளில்
வதனதலி = வாக் இந்திரியத்தில்
பார்க்கவ = பரசுராமன்
வாலிபஞ்சன = ஸ்ரீராமன்
ஹஸ்ததலி = கைகளில்
பாததலி = கால்களில்
ஸ்ரீகிருஷ்ண = ஸ்ரீகிருஷ்ண ரூபி
இருக்கிறான்.

சந்தியை முடிக்கும் தாசராயர், மனஸ் சேர்த்து 11 இந்திரியங்களில், மூலரூபத்தின் தசாவதாரங்களை சிந்தித்தால், பகவத் ப்ரசாதம் கிடைக்கிறது என்று, கடைசி இரு பத்யங்களில் சொல்கிறார்.

மனதில், மூலரூபியான ஸ்ரீமன் நாராயணன் இருக்கிறான்.
காதுகளில், மத்ஸ்ய ரூபி;
கண்களில் கூர்ம ரூபி;
சரீரத்தில் வராக ரூபி;
நாக்கினில் நரசிம்ம ரூபி;
மூக்கினில் பால பிரம்மசாரியான வாமன ரூபி;
வதனத்தில் பரசுராம ரூபி;
கைகளில் வாலியைக் கொன்றவனான ஸ்ரீராம ரூபி;
கால்களில் ஸ்ரீகிருஷ்ணரூபியும் இருக்கின்றனர்.

***

Sunday, May 24, 2020

#33 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#33 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


கரண கு3ண பூ4தக3ளொளகெ3
த்வரரெனிப பிரம்மாதி3 தி3விஜரொ
ளரிது ரூபசதுஷ்டய க3ளனுதினதி சர்வத்ர |
ஸ்மரிஸுதனு மோதி3ஸு1 ஹிக்கு3
பரவஷதி3 பாடு3வவரிகெ3
ன்னிரவ தோ1ரிஸி ப4வவிமுக்தர மாடி3 போஷிஸு||33

கரண = ஞானேந்திரிய, கர்மேந்திரியங்களில்
குண = குண த்ரயங்களில் அல்லது தன்மாத்ரா குணங்களில்
பூதகளொளகெ = பஞ்சபூதங்களில்
தத்வரரெனிப = அவற்றின் அதிபதிகள் எனப்படும்
பிரம்மாதி திவிஜரொளு = பிரம்மாதி தேவதைகளுக்குள்
ரூப சதுஷ்டயகளனு = அனிருத்தாதி ரூபங்களை
அரிது = அறிந்து
தினதினதி = தினந்தோறும்
சர்வத்ர = எல்லா பிராணிகளிலும்
ஸ்மரிசுத = நினைத்தவாறு
அனுமோதிசுத = நினைப்பவர்களைப் பார்த்து புகழ்ந்தவாறு
ஹிக்குத = மகிழ்ச்சிப்படுத்தி
பரவஷதி = மெய்மறந்து
பாடுவவரிகெ = பகவன் மகிமைகளை குறிக்கும் பதங்களை பாடுபவர்களுக்கு
தன்னிரவ = தன் ஸ்தானத்தை அல்லது ரூபத்தைக் காட்டி
பவவிமுக்தர = பிறப்பு இறப்பு துக்கங்களிலிருந்து முக்தராக
மாடி = செய்து
போஷிசுவ = காப்பாற்றுவான்.

தத்வங்களிலும், அபிமானி தேவதைகளிலும் அனந்தானந்த ரூபங்களை சிந்திக்க வேண்டுமென்று மேற்கூறிய பத்யங்களில் சொல்கிறார். இந்த ரூபங்களைத் தொகுத்து, சுலபமாக நினைவில் வைத்துக்கொண்டு உபாசனை செய்யும் வழியையும், அதன் பலன்களையும் இங்கு சொல்கிறார். ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, மனஸ் - இவற்றில் அனிருத்த ரூபத்தையும், தன்மாத்ரா குணங்களில் அல்லது சத்வாதி குணங்களில் பிரத்யும்ன ரூபத்தை, பஞ்சபூதங்களை சங்கர்ஷண ரூபத்தையும், தத்வாபிமானிகளான பிரம்மாதிகளில் வாசுதேவ ரூபத்தையும், இந்த விதமாக 4 ஸ்தானங்களில் நான்கு ரூபங்களையும் தினந்தோறும் அனைத்து பிராணிகளின் தேகத்திலும் நினைத்தவாறு, மகிழ்ந்தவாறு, மெய்மறந்து பகவன் மகிமைகளைச் சொல்லும் பதபத்யங்களைப் பாடுபவர்களுக்கு, தன் அபரோக்‌ஷத்தைக் கொடுத்து சம்சாரத்திலிருந்து முக்தராக மாற்றி காப்பாற்றுகிறான்.

விஷ்ணு சஹஸ்ர நாமாதிகளில், பகவன் நாமங்களை, அவற்றின் மகாமகிமைகளை விளக்கமாக சொல்லியிருப்பர். ஒருவேளை இந்த சஹஸ்ர நாமத்தைப் படிக்க முடியாவிடில், இறுதியான ஒரு ஸ்லோகத்தைப் படித்தால் மட்டுமே, சஹஸ்ர நாமம் படித்த பலன் வருகிறதென்று நமோஸ்துsனந்தாய சஹஸ்ரமூர்த்தயேஎன்னும் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதைப்போலவே படிக்கவேண்டிய கிரந்தங்கள் மிகவும் அதிகமென்றும், அவற்றை தினமும் முழுவதுமாக படிக்கமுடியாது என்பதாலும், ஆதி-அந்த ஸ்லோகங்களை மட்டும் தனியாக தொகுத்து அதை மட்டும் படித்து வரும் சம்பிரதாயமாக இருக்கிறது. சங்கோச விஸ்தராப்யாஞ்ச கதயந்திமனீஷிண:’. ஞானிகள், விஷயங்களை, அதிகாரிகளை அனுசரித்து மிகவும் சுருக்கமாகவும், விளக்கமாகவும் சொல்வதைப்போல, ஒவ்வொருவரின் தேகங்களிலும் அனந்தானந்த ரூபங்களை சிந்திப்பதற்கு சாத்தியம் இல்லாத அதிகாரிகள், அனைத்து பிராணிகளின் தத்வங்களில் / ததபிமானிகளான தேவதைகளில் 4 ரூபங்களையாவது சிந்தித்து க்ருதார்த்தர் ஆகவேண்டும் என்று இந்த உபாசனா கிரமத்தை தொகுத்து சொல்லியிருக்கிறார் தாசராயர்.


***

#32 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#32 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


ஸா3ரதொ3ளிஹ நதி3ய ஜல பே4
தா33தொ3ளிப்ப1ப்த33ல்லுது3
கா1கெ3 கு3ப்பி33ளரிய ப3ஹவெ நதி3ய ஜலஸ்தி2திய |
போ4கிவரப1ரியங்க1 ஷயனனொ
ளீகு3ணத்ரய ப3த்த4 ஜக3விஹு
தா33மக்3ஞரு திளிவரஞானிக3ளிக3ளவட3து3 ||32
சாகரதொளு = கடலில்
இஹ = இருக்கும்
நதியஜல = ஆற்று நீரின்
சேத = வேறுபாட்டினை
ஆகஸதொளு = ஆகாயத்தில்
இப்ப = பறக்கும்
அப்த = தண்ணீர் கொடுக்கும் மேகங்கள்
பல்லவு = அறியும்
காகி குப்பிகளு = காக்கை, குருவிகள்
நதியஜலச்சேத = கடலில் சேர்ந்த ஆற்றின் சுவையான நீரினை
அரியபல்லவெ = அறியுமோ?
போகிவர = சர்வஸ்ரேஷ்டனான சேஷதேவரே
பர்யங்க = படுக்கையாக்கிக் கொண்டிருக்கும்
ஷயனனொளு = படுத்திருக்கும் பரமாத்மனில்
ஈகுணத்ரயபத்த ஜகவு = சத்வ ரஜஸ் தமோ குணங்களுக்குக் கட்டுப்பட்ட இந்த பிரபஞ்சம்
இஹவு = இருப்பதை
ஆகமஜ்ஜரு = மத்வ சாஸ்திரத்தை நன்றாக அறிந்தவர்கள் அறிவார்கள்
அஞ்ஞாகளிகெ அளவடரு = அஞ்ஞானிகள் அறியமாட்டார்கள்.

த்வைத மத சித்தாந்தங்களை நன்றாக அறிந்தவர்களுக்கு மட்டுமே மேற்சொன்ன பேத ஞானம் சாத்தியமே தவிர, மற்றவர்களுக்கு புரிவதற்கு சாத்தியமில்லை என்னும் விஷயத்தை சொல்கிறார் தாசராயர். கடலில் கங்காதி நதிகள் சேர்ந்திருப்பதை, ஆகாயத்தில் பறக்கும் மேகக்கூட்டங்கள் மட்டுமே வேறுபடுத்திப் பார்க்கும். அந்த நீரைக் குடிக்கும் காக்கை, குருவிகள் இந்த வேறுபாட்டினை அறியுமோ? முடியாது.

அதுபோல, சாத்விக, ராஜஸ, தாமஸர்களான, தேவ, தானவ, மானுஷர்களாலும், த்ரிகுணமயமான பொருட்களாலும், நிரம்பிய இந்த உலகம், சேஷசாயியாக படுத்துக்கொண்டிருக்கும் பரமாத்மனுக்குள் அடங்கியிருந்தாலும், அது பரமாத்மனிடமிருந்து பின்னமாக இருக்கிறது என்னும் விஷயத்தை அறியவேண்டுமெனில், மத்வ சித்தாந்த சாஸ்திரங்களை நன்றாக அறிந்தவர்களால் மட்டுமே முடியுமே தவிர, அஞ்ஞானிகளுக்கு எப்படி புரியும்? என்றைக்கும் புரியாது என்பது பொருள்.


***

Saturday, May 23, 2020

#31 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#31 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


1ன்னனந்தானந்த ரூப ஹி
ரண்யக3ர்பா4திக3 ளொளகெ3 கா1
ருண்யஸா3ர ஹரகி3 அவரவரகி2ல வியாபா1|
பன்னபட3தெலெ மாடி3 மாடி3ஸி
4ன்யரெனிஸி மஸ்த தி3விஜர
புண்யக1ர்மவ ஸ்வீகரிஸி ப2லவித்து பா1லிஸுவ ||31

தன்னனந்தானந்த ரூபவ = தன் அனந்தானந்த ரூபங்களை
ஹிரண்யகர்ப்பாதிகளொளகெ = பிரம்மாதி தேவதைகளுக்குள்
காருண்யசாகர = கருணைக் கடலான ஸ்ரீபரமாத்மன்
ஹரஹி = நிலைத்திருந்து
அவரவர = அவரவர்கள் செய்ய வேண்டிய
அகிலவ்யாபார = அனைத்து காரியங்களையும்
பன்னபடதெலெ = எந்தவித சோர்வும் இல்லாமல்
மாடி மாடிஸி = (தான் அவர்களுக்குள் இருந்துகொண்டு) செய்து, செய்வித்து
சமஸ்ததிவிஜர = அனைத்து தேவதைகளும் செய்யும்
புண்யகர்மவ = தைத்ய சம்ஹார, தன்னை ஆராதிப்பது ஆகிய புண்யகர்மங்களை
ஸ்வீகரிஸி = ஏற்றுக்கொண்டு
பலவித்து = இஹத்தில் போகங்களையும், பரத்தில் அவரவர்களின் தகுதிக்கேற்ப முக்திசுகங்களைக் கொடுத்து
பாலிஸுவ = காப்பாற்றுவான்.

ஸ்ரீபரமாத்மன் பக்தர்களில் பரமப்ரீதியை செய்கிறான் என்பதை, பக்தியோகிகள் எனப்படும், பக்தியில் சிறந்தவர்கள் எனப்படும் பிரம்மாதி தேவதைகளில் இருந்துகொண்டு எப்படி செயல்களை செய்கிறான் என்பதையும், ஸ்ரீபரமாத்மனின் கருணையையும் இந்த பதத்தில் விளக்குகிறார் தாசராயர்.

கருணைக்கடலான ஸ்ரீபரமாத்மன், தன் அனந்தானந்த ரூபங்களால் தத்வாபிமானிகளான பிரம்மாதி தேவதைகளில் இருந்துகொண்டு, 24 தத்வங்களில், தத்-பதிகளாக இருந்துகொண்டு, கண், காது ஆகியவற்றால் அனைத்து பிராணிகளும் செய்யவேண்டிய செயல்களை, பிரம்மாதி தத்வபதி தேவதைகளில் இருந்து, தான் செய்து, அவர்கள் மூலமாக செய்ய வைக்கிறான் என்று பொருள்.

சத்யலோக, ஸ்வர்க்க லோகாதிகளில் வசித்திருக்கும், பிரம்ம ருத்ர, இந்திராதி அனைத்து தேவதைகளில், அந்தந்த உருவத்தில், அந்தந்த பெயர்களில், அனந்தானந்த ரூபங்களால், அவர்களில் இருக்கிறான். எப்படியெனில், பிரம்ம தேவரில் பிரம்மஎன்னும் சொல்லின் எண்ணைப் பார்த்தால், ப்ர=5 ஹ்ம=13. இதனை வலது பக்கத்திலிருந்து பார்த்தால் 315 ரூபங்கள் ஆகிறது.

பிரம்மாந்தர்கத வாசுதேவ மூர்த்தி, இவரின் எண்ணிக்கை. வா=4 சு=7 தே=3 வ=4. இதை வலது பக்கத்திலிருந்து படித்தால், 4374 ரூபங்களாகிறது. இதன் மேல், பிரம்மாதிகளின் பாஞ்சபௌதிக சரீரங்களிலும், 24 தத்வங்கள், தத்பதி தேவதைகள், அவர்களில் மேற்சொன்ன விதத்தில், 13,824 ரூபங்கள். இதைப்போல, அவர்களில் இருக்கும் தத்வாபிமானி தேவதைகளில் ஒவ்வொரு தேவதையிலும் அவ்வளவு ரூபங்கள் உள்ளன. இப்படி தத்வாபிமானி தேவதைகளுக்கும் அனந்த ரூபங்களைக் கொடுத்து, தான் ருத்ராதி ஒவ்வொருவரிலும் அனந்தானந்த ரூபங்களில் இருந்து, அவரவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை அவர்களுக்குள் இருந்து தான் செய்கிறான். அதாவது, தத்வாபிமானிகளில் இருந்து தத்வ கார்யங்களை செய்விக்கிறான்.

பிரம்ம தேவருக்குள் இருந்து ஸ்ருஷ்டிக்கிறான். ருத்ரரில் இருந்து சம்ஹாரம் செய்கிறான். இந்திரரில் இருந்து ஸ்வர்க்கத்தை ஆண்டவாறு, துஷ்ட நிக்ரஹத்தை செய்து, 100 அஸ்வமேத யாகங்களை செய்கிறான். இந்த காரியங்களை அந்தர்யாமியாக இருந்து, தான் செய்து, அவர்கள் மூலமாகவும் செய்வித்து, ஸ்ருஷ்டி கர்த்தா பிரம்மா, சம்ஹார கர்த்தா ருத்ர, வ்ருத்ராசுரனைக் கொன்றவன் இந்திரன், 100 அஸ்வமேதங்களை செய்தான், ருத்ரர் த்ரிபுராசுரர்களை சம்ஹரித்தார் என்னும் பற்பல புகழினை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் செய்த புண்ய கர்மங்களை தான் ஏற்று, இஹத்தில் அவர்களின் யோக்யதைக்கேற்ப பலன்களைக் கொடுத்து, முக்தியிலும், பிரம்மாதிகளுக்கு தாரதம்யத்திற்கேற்ப, மகிழ்ச்சியைக் கொடுக்கிறான்.

இப்படியாக, எந்தவித பிரதிபலன்களையும் எதிர்பார்க்காமல், இத்தகைய புகழையும், மகிழ்ச்சியையும் கொடுப்பவனாகையால், பரமாத்மன் கருணைக்கடல் ஆகிறான். இவ்வளவு செய்தாலும் பரமாத்மனுக்கு அகர்த்தஎன்று பெயர் உண்டு. அது எப்படியெனில், ‘அகர்த்தாsக்லிஷ்டகாரித்வாத்எவ்வளவு செயல்களை செய்தாலும், கொஞ்சம்கூட அதில் சோர்வு இல்லாததால், இந்தப் பெயர். இதையே தாசராயர், பன்னபடதலெ என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். சிரமம் இல்லாமல் செயல்களை செய்து செய்விக்கிறான் என்று பொருள்.


***

#30 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#30 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


வாஸுதே3வனிருத்த3 ரூபதி3 பும்ஷ
ரீர தொ3ளிஹனு ர்வத3
ஸ்த்ரீ ரீரதொ3ளிஹனு சங்கருஷணனு ப்ரத்3யும்ன |
த்3வாசுபர்ணா ஸ்ருதி வினுத
ர்வாஸு நிலய நாராயணன சது3
பானெய கை3வவரு ஜீவன்முக்தரெனிஸுவரு ||30

வாசுதேவ அனிருத்த ரூபதி = வாசுதேவ, அனிருத்த என்னும் இரு ரூபங்களில்
பும்ஷரீரதொளு = புருஷர்களின் சரீரத்தில்
ஸர்வத = எப்போதும்
இஹனு = இருக்கிறான்
ஸ்த்ரீசரீரதொளு = பெண்களின் சரீரத்தில்
சங்கர்ஷணனு பிரத்யும்ன = சங்கர்ஷண, பிரத்யும்ன என்னும் இரு ரூபங்களில்
இஹனு = இருக்கிறான்
த்வாசுபர்ணா ஸ்ருதி வினுத = த்வாசுபர்ணா என்னும் ஸ்ருதியால் போற்றப்படும்
சர்வாசு நிலய = அனைவரின் பிராணனிலும் நிலைத்திருக்கும்
நாராயணன = ஸ்ரீமன் நாராயணனின்
சதுபாசனெய கைவவரு = பரமாத்மன் தன்னிலிருந்து வேறுபட்டவன், சர்வஸ்வதந்த்ரன், ஜீவன் அஸ்வதந்த்ரன் ஆகியவற்றை சிந்தித்து உபாசனையை செய்பவர்கள்
ஜீவன்முக்தர் = முக்தர்களாக இருந்தாலும், சத்யாதி லோகங்களில் முக்தர்களைப் போல சுகமாக இருப்பதால், ஜீவன் முக்தர் என்று
எனிஸுவரு = அழைக்கப்படுவர்.

ஸ்த்ரி புருஷர்களின் சரீரத்தில் வாசுதேவாதி பஞ்ச ரூபங்களை உபாசனை செய்யும் கிரமத்தை விளக்குகிறார்.

வாசுதேவ, அனிருத்த என்னும் இரு ரூபங்களால் ஸ்த்ரி, புருஷர்களின் சரீரத்தில் இருக்கிறான். ஸ்த்ரி சரீரத்தில், சங்கர்ஷண, ப்ரத்யும்ன என்னும் இரு ரூபங்களால் வசிக்கிறான். ஸ்ரீநாராயண ரூபத்தினால், அனைவரின் பிராணர்களில் வசிக்கிறான். இத்தகைய பரமாத்மனை, சதுபாசனை என்றால், ஜீவ பரமாத்ம பேத ஞானத்தைப் பெற்று, பரமாத்மனின் தாசன் தான் என்று உபாசனை செய்வது. ஜீவ பரமாத்மருக்கிடையே பரஸ்பர பேதத்தை சொல்லும்

த்வாசுபர்ணா சயுஜாசகாய: சமானம் வ்ருக்‌ஷம் பரிஷஸ்வஜாதே |
தயோரன்ய: பிப்பலம் ஸ்வாத்தத்தி அனஷ்னன்யோ அபிசாகஷீதி ||

இந்த ஸ்ருதியால் வணங்கப்படுகிறான் என்று கூறுகிறார் தாசராயர். இந்த ஸ்ருதி, ஜீவ பரமாத்மனின் பேதத்தை, தாரதம்யத்தைக் காட்டுகிறது என்னும் விஷயத்தில், பாகவத 10ம் ஸ்கந்தம், 11ம் அத்தியாயத்தில்

அதபத்தஸ்ய முக்தஸ்ய வைலக்‌ஷண்யம் வதாமிதே |
விருத்த தர்மிணோஸ்தாத ஸ்திதயோரேஷ தர்மிணி ||

இங்கிருக்கும் பத்தமுக்த என்னும் பதங்களுக்கு பத்தன் என்றால் ஜீவன் என்றும், முக்தன் என்றால் விஷ்ணு என்றும், விஜயத்வஜீயத்தில் வியாக்யானம் செய்து, அதற்கு ஆதாரமாக, பாகவத தாத்பர்யத்தில் ஸ்ரீமதாசார்யரின் வாக்கியத்தை உதாரணம் காட்டியிருப்பார். அது என்னவெனில்:

பத்தா ஜீவா இமேஸர்வே பூர்வபந்த ஸமன்வயாத் |
நித்யமுக்தஸ்தமோ விஷ்ணுர் முக்தா நாமாஸதோதித: ||
அபத்தத்வாத மோக்‌ஷோபி தீப்யதே ஸௌரவிர்யதா ||

ஜீவர்கள் முக்திக்கு செல்வதற்கு முன், பத்தராக இருந்து, பின்னர் பகவத் பிரசாதத்தினால் முக்தர் ஆகின்றனர். ஜீவர்கள் பத்தர்களாக இருப்பதால், அவர்களுக்கு பத்தர் என்றே பெயர். நமே மோக்‌ஷோன பந்தனம்என்னும் பகவத் வாக்கியத்திற்கேற்ப, முக்தி என்பதற்கு, பந்தனத்திலிருந்து முக்தி என்று அர்த்தம் ஆகிறது. யார் பத்தரோ அவரே முக்தர் ஆகிறார். பரமாத்மனுக்கு பந்தனம் இல்லை; பின் முக்தி எங்கிருந்து வந்தது என்றால், சூரியனுக்கு சில காலம் பிரகாசம் உண்டு, சில காலம் இல்லை என்று எப்படி சொல்வதில்லையோ, அது போல, பரமாத்மன் நித்ய முக்தனாக இருப்பதால், பரமாத்மனுக்கு முக்தன் என்று பெயர் வந்திருக்கிறதே தவிர, அவருக்கு பந்தனத்திலிருந்து முக்தி என்று இல்லை.

சூரியன் எப்போதும் பிரகாசமானவனாகவே இருந்தாலும், கால தேசத்திற்கு ஏற்றவாறு, சில இடங்களில் அதிக வெப்பத்தையும், சில நாடுகளில் வெளிச்சம் குறைவாகவும் காணப்படுகிறான். அதாவது, மக்களுக்கு அதிக வெப்பம், குறைவான சூடு, மிதமான வெப்பம் எனத் தோன்றும். சில இடங்களில் சூர்ய அஸ்தமன காலத்திலேயே ஒளி இல்லாமல் ஆகிவிடும். உதயத்தில் வெளிச்சக் குறைவு, மதியத்தில் அதிக ஒளி என பலவிதமாக தோன்றுவது, தேச காலத்திற்கேற்ப இருப்பதே தவிர, சூரியனின் ஒளியில் எப்போதும் அதிகமோ குறைவோ இருப்பதில்லை.

அதுபோலவே, ஸ்ரீபரமாத்மன், ராம கிருஷ்ணாவதாரத்தில் வித்தவன் முக்தவச்சைவ கேஷவோ வேதனார்த்தவத்என்னும் நிர்ணய வாக்கியத்திற்கேற்ப, அடி வாங்கியவனைப் போலவும், தனக்கு எதுவுமே தெரியாதவனைப் போல இருப்பதும், உலகத்தை ஏமாற்றுவதற்காகவே என்றும், பரமாத்மனுக்கு என்றைக்கும் பந்தனம் இல்லை என்றும் தெளிவாகக் கூறியிருக்கிறார். பந்தனமும் இல்லை; அதிலிருந்து முக்தியும் இல்லை. நித்ய முக்தன் ஆகையால், அவனுக்கு முக்தன் என்று பெயர் மட்டுமே.


***

Friday, May 22, 2020

#29 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#29 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


லோஷ்டகா1ஞ்சன லோஹ ஷைலஜ
காஷ்ட மொத3லாத3கி2ல ஜட பர
மேஷ்டி மொத3லாதெ3ல்ல சேதனரொளகெ3 அனுதினவு |
சேஷ்டெக3ள மாடி3ஸு1 திளிதெ3
ப்ரேஷ்டனாகி3த் தெ3ல்லரிகெ3
ர்வேஷ்டதா3யக ந்தயிஸுவனு சர்வஜீவரனு ||29

லோஷ்ட = களிமண்
காஞ்சன = தங்கம்
லோஹ = இரும்பு
ஷைலஜ = மலைகள், அதில் இருக்கும் கற்கள், பாறைகள் ஆகிய
காஷ்ட முந்தாத = மரக்கட்டைகள்
அகிளஜட = அனைத்து ஜடப் பொருட்களில்
பரமேஷ்டி முதலாத = பிரம்ம முதலான
எல்ல சேதனரொளகெ = அனைத்து சேதனர்களிலும்
அனுதினவு = தினந்தோறும்
சேஷ்டெகள = செயல்களை
மாடிசுத = செய்வித்தவாறு
திளிஸதெ = தான் செய்யும் செயல்கள் என்னவென்று யாருக்கும் தெரியாமல்
ப்ரேஷ்டனாகித்து = பிராணிகளுக்குப் ப்ரியனாக இருந்து
எல்லரிகெ = அனைவரின்
சர்வேஷ்ட தாயக = அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி
சர்வஜீவரன = அனைத்து பிராணிகளையும்
ஸந்தயிசுவனு = திருப்திப்படுத்துவான்.

ஜட, சேதனாதி அனைத்து பொருட்களின் செயல்கள், ஸ்ரீபரமாத்மனாலேயே நடக்கிறது என்று சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இரும்பு, தங்கம், மலை, பாறைகள், கற்கள் ஆகிய அனைத்து ஜடப்பொருட்களிலும், பிரம்மாதி அனைத்து சேதனர்களிலும் இருந்து, தினந்தோறும் அவருக்கு தெரியாமலேயே, அனைத்து செயல்களையும் செய்து, செய்வித்தவாறு, அனைவருக்கும் ப்ரியனாக இருந்து, அவரவர்களின் விருப்பங்களை நிறைவேற்றியவாறு, அனைத்து ஜீவர்களையும் காப்பாற்றுவான்.


***

#28 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#28 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

கேவாதி3 ஸுமூர்த்தி த்வாத3
மாஸ புண்ட்3ரக3ளல்லி வேத3
வியாஸ அனிருத்தா5தி3 ரூப13ளாரு ருது13ளலி |
வாவாகி3ஹ வெந்து3 த்ரிம்ஷதி1
வாரதி3 த்க1ர்ம த4ர்ம நி
ராஷெயிந்த3லி மாடு31ருணவ பே3டு3 கொண்டா3டு3 ||28

கேஷவாதி = கேஷவ முதலான
சுமூர்த்தி = தாமோதரன் வரைக்குமான 12 மூர்த்திகள்
த்வாதஸ மாஸ = மார்கசிர முதல் கார்த்திக வரைக்குமான 12 மாதங்கள்
புண்ட்ரகளலி = 12 ஊர்த்வ புண்ட்ர நாமங்களில்
ருதுகளில் = வசந்தாதி 6 ருதுக்களிலும்
வேதவியாசன், அனிருத்தாதி ரூபகளு = வேதவியாச + அனிருத்த முதலான 5 ரூபங்கள் = 6 ரூபங்கள்
வாஸவாகிஹவெந்து = வசிக்கிறான் என்பதை அறிந்து

த்ரிம்ஷதி வாஸதலி = 30 திதிகளில், நந்தா, பத்ரா, ஜயா, ரிக்தா, பூர்ணா என்னும் குறியீடுகள், பிரதமை முதல் பஞ்சமி வரை பொருந்துகிறது. இப்படியே ஷஷ்டி முதல் தசமி வரைக்கும், பின், ஏகாதசி முதல் பௌர்ணமி வரைக்கும், பின்னர் கிருஷ்ண பட்சத்தில் மூன்று முறையும் என, மொத்தம் 6 முறை வருகின்றன. 6*5=30 நாட்களில் நந்தாதி 5 திதிகளில், அனிருத்தாதி 5 மூர்த்திகள் என ஒரு மாசத்திற்கு 30 திதிகளில் அனிருத்தாதி 5 மூர்த்திகளையும், 6 முறை சிந்தித்தால், 30 மூர்த்திகள் ஆகின்றன. இந்த விதமாக 30 நாட்களில்,

நிராஷெயிந்தலி = காம்ய பலன்களை விரும்புவதை விட்டு
சத்கர்ம தர்ம = சத்கர்மங்களை, பாகவத தர்மங்களை
மாடு = செய்
கருணவ பேடு = காம்ய கர்மங்களை விரும்பாமல் / கேட்காமல், ஸ்வாமியின் கருணையை மட்டும் வேண்டு
கொண்டாடு = பரமாத்மனை ஸ்தோத்திரம் செய்.

நாம் தரிக்கும் 12 புண்ட்ரங்களில், 12 மாதங்களில், ருதுகளில், திதிகளில், சிந்திக்க வேண்டிய பகவத்ரூபங்களை இங்கு விவரிக்கிறார்.

மார்கசிரவில் துவங்கி கார்த்திக வரை, கேசவாதி தாமோதர வரைக்குமான 12 மூர்த்திகளை சிந்தித்து பூஜைகளை செய்யவேண்டும். தினந்தோறும் ஸ்னானாதி சங்கல்பம் சமயத்தில், வைஷாக மதுசூதன, கார்த்திக தாமோதர என சொல்ல வேண்டும். 12 புண்ட்ர நாமங்களில், ‘லலாடே கேஷவம் த்யாயேன் நாராயணம் அதோதரேஎன வாக்கியங்களைப் போல, கேசவாதி 12 மூர்த்திகளை சிந்திக்க வேண்டும். வசந்தாதி 6 ருதுக்களில் வேதவியாஸ, அனிருத்தாதி நாராயணா வரை 5. என மொத்தம் 6 ரூபங்களை தியானிக்க வேண்டும். பிரதமை முதல் பஞ்சமி வரை இருக்கும் நந்தாதி திதிகளில், அனிருத்தாதி 5 ரூபங்களை சிந்திக்க வேண்டும். நந்தாதி திதிகள் 6 முறை திரும்பத் திரும்ப வரும். அது போல, அனிருத்தாதி ரூபங்களை 6 முறை சிந்திக்க வேண்டும்.


இப்படி, 12 மாதங்களில், ருதுகளில், திதிகளில், பகவத் ரூபங்களை சிந்தித்து, பலன்களைப் பற்றிய ஆசையைத் துறந்து, சத்கர்மங்களான சத்யாதி கர்மங்களையும், முக்திக்கு வழியான தர்மங்களையும், விரத நியமங்களையும் செய்தவாறு, அவற்றை பரமாத்மனுக்கு சமர்ப்பித்தவாறு, பரமாத்மனின் கருணையை மட்டுமே வேண்டி, அவனை ஸ்தோத்திரம் செய்ய வேண்டும் என்பது பொருள்.