ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Showing posts with label மங்களாசரண சந்தி. Show all posts
Showing posts with label மங்களாசரண சந்தி. Show all posts

Thursday, February 6, 2020

#13 - மங்களாசரண சந்தி

#13 - மங்களாசரண சந்தி

1ரிமளவு சுமனகளொளக3னல
நரணியொளகி3ப்பந்தெ தா3மோ
3ரனு பிரம்மாதி3கள மனத3லி தோரி தோரத3லெ |
இருதிஹ ஜகன்னாதவிட்டலன
கருண படெ3வ முமுக்‌ஷு ஜீவரு
பரமபா43வதரனு கொண்டாடுவுது ப்ரதிதி3னவு ||13

தாம = வயிறு
தாமோதரன் = யசோதையால் கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன்
பிரம்மாதிகள = பிரம்மதேவரே முதலான அனைத்து தேவதைகளின்
மனதலி = மனதில்
சுமனதொளகெ = புஷ்பத்தில்
பரிமளவு = வாசனையானது வருவதைப் போல
தோரி = காட்டி
அரணியொளகெ = நெருப்பு மறைந்திருப்பதைப் போல
தோரதலெ = கண்ணுக்குத் தெரியாமல்
இருதிஹவு = இருக்கின்றது. 
இந்தஹ ஜகன்னாதவிட்டலன = ஜகன்னாததாசரின் பிம்பரூபியான ஜகன்னாதவிட்டலனான பரமாத்மனின்
கருணபடெவ = கருணையைப் பெறவேண்டும் என்னும் விருப்பமுள்ள
முமுக்‌ஷுஜீவரு = மோட்சத்திற்கு யோக்யரான ஜீவர்கள் அனைவரும்
ப்ரதிதினவு = தினந்தோறும்
பரமபாகவதரன = பிரம்ம வாயு ஆகியோரில் துவங்கி மனுஷ்யோத்தமர் வரை, தாரதம்யத்தின்படி, இந்த சந்தியில் சொல்லப்பட்டிருக்கும் பரம பகவத் பக்தர்களை
கொண்டாடுவுது = நமஸ்காராதிகளை செய்து ஸ்தோத்திரங்களால் கொண்டாட வேண்டும். 

பொருள்:

மல்லிகை போன்ற புஷ்பங்கள் மலர்ந்தவுடன், அதன் வாசனையானது எப்படி அனைத்திடங்களிலும் பரவி, அனைவருக்கும் அது சென்று சேர்கிறதோ, அப்படி பிரம்ம வாயுகளுக்கு, அபரோக்‌ஷத்தில் பரமாத்மன் எப்போதும் காட்சியளித்துக் கொண்டேயிருக்கிறான். யாகசாலையில் அக்னியை வளர்ப்பதற்கு ஒரு அரச காஷ்டத்தை வைத்திருப்பர். அதை இன்னொரு காஷ்டத்துடன் உரசினால் நெருப்பு வரும். எனில் காஷ்டத்தில் இருக்கும் நெருப்பு நம் கண்ணிற்குத் தெரிவதில்லை. அப்படியே, ருத்ராதி தேவதைகளில் பரமாத்மன் இருந்தாலும், எப்போதும் நம் கண்ணுக்குத் தெரியாமல், தியானம் செய்யும்போது மட்டும் அபரோக்‌ஷத்தில் தன்னை காண்பித்துக் கொள்வான். ஆகையால், முக்தியோக்யர்கள் அனைவரும், தாரதம்யத்தின்படி பரம பகவத்பக்தர்களான பிரம்மாதி அனைத்து தேவதைகளுக்கும், தம்மைவிட உத்தமர்களான மனுஷ்யோத்தமர் வரை அனைவருக்கும் நமஸ்காரங்களை செலுத்தி அவர்களின் அருளைப் பெற்றால், பகவத் பிரசாதம் கிடைக்கும் என்று அறியவேண்டும். 

***


Wednesday, February 5, 2020

#12 - மங்களாசரண சந்தி

#12 - மங்களாசரண சந்தி

பாக1ஷாசன முக்ய சகல தி
வௌகசரிக3பினமிபெ ருஷிகளி
கேகசித்ததி பித்ருகளிகெ கந்த4ர்வ க்‌ஷிதிபரிகெ3 |
ஆ க1மலனாபா4தி யதிக3
நீக1கானமிசுவேனு பிடதெ3
மா களத்ரன தாசவர்க3க்கெ நமிபெனனவரத ||12

பாகஷாஸன முக்ய சகல திவௌகஸரிகெ = தேவேந்திரன் முதலான அனைத்து தேவதைகளுக்கு
ஏக சித்ததி = ஒரு மனத்துடன் புத்தியை அவர்களிடமே வைத்து
அபினமிபெ = சாஷ்டாங்க நமஸ்காரத்தை செய்து
ருஷிகளிகெ = விஸ்வாமித்ர, மரீச்யாதி ரிஷிகளுக்கு
பித்ருகளிகெ = பித்ரு கணங்களுக்கும்
கந்தர்வ = தேவ கந்தர்வ, மனுஷ்ய கந்தர்வர்களுக்கு
க்‌ஷிதிபரிகெ = ப்ரியம்வ்ரத முதலான அரசர்களுக்கு
ஆ கமலனாபாதி யதிகள = (ஸ்ரீமன் மத்வாசார்யரின் சிஷ்யரான) பத்மனாப தீர்த்தரே முதலான யதிகளுக்கு
ஆனீககெ = குழுவிற்கு
ஆனமிசுவெனு = நன்றாக வணங்குவேன்
பிடதெ = யாரையும் விடாமல்
ரமாகளத்ரன = ஸ்ரீலட்சுமிதேவியையே மனைவியாகக் கொண்ட ஸ்ரீபரமாத்மனின்
தாச வர்கக்கெ = தாச சமூகத்திற்கு
அனவரத = என்றைக்கும்
நமிபெ = வணங்குவேன்

இந்திராதி அனைத்து தேவதைகளுக்கும் நமஸ்காரம் செய்வேன். ரிஷிகளுக்கும், பித்ருகளுக்கும், கந்தர்வர்களுக்கும், அரசர்களுக்கும், பத்பனாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர் முதலான யதிஸ்ரேஷ்டர்களுக்கும், ஹரிதாசர்களான புரந்தர, விஜய முதலான தாச வர்க்கத்தவர்களுக்கும் ஒருமுகப்படுத்திய மனதுடன் வணக்கம் செலுத்துவேன். என்று தாரதம்யத்தின்படி ஸ்வோத்தமர் அனைவருக்கும், இந்த பத்யத்தில் நமஸ்காரங்களை செய்திருக்கிறார் ஸ்ரீதாசராயர். 

சிறப்புப் பொருள்:
’நாராயணம் நமஸ்க்ருத்ய’ என்னும் ஸ்லோகத்தில் சொல்லியபடி, தாரதம்யத்தின்படி ஸ்ரீமன் நாராயணனிலிருந்து ருத்ரர் வரை வணக்கங்களை சொல்லி, பிறகான இந்திராதி தேவதைகளை சொல்லி மனுஷ்யோத்தமர்களின் வரை இதில் நமஸ்காரங்களை சொல்கிறார். 

‘பாகஷாஸன முக்ய சகல திவௌகசரிகெ’ என்னும் வாக்கியத்தினால் பாகஷாசன என்றால் இந்திரன். இந்திரன் முதலான தேவதைகள் என்றால் - இந்திர காமன், அனிருத்த, ரதி, மனுகுரு, தக்‌ஷ, ஷசி, ப்ரவஹ, யம, ஷதரூபா, சந்திர, சூர்ய, வருணன் வரைக்குமான அனைத்து தேவதைகளுக்கும் வணக்கங்களை செலுத்துகிறார் என்று பொருள். 

ரிஷிகளிகெ என்று சொல்வதால் - நாரதர், ப்ருகு, அக்னி, ப்ரஸூதி, விஷ்வாமித்ர, மரீசி ஆகிய பிரம்மதேவரின் மகன்களும், புஷ்கரன் என்னும் கர்மஜதேவதையும், அஜானஜ என்னும் தேவதைகளும் என அனைவரையும் எடுத்துக் கொள்ளவேண்டும். 

அஜானஜர் என்றால் தேவகுலத்தில் பிறந்து, தத்வங்களுக்கு அபிமானியாகாமல், சோமபானத்திற்கு தகுதி பெறாமல் இருக்கும் தேவதைகள். தும்புரு முதலான முக்கிய கந்தர்வர்கள் 100 பேர், நாரதர் முதலான உசத்யர் வரைக்கும், மேலே தாரதம்யத்தில் சொல்லப்பட்டிருக்கும் ரிஷிகளை விட்டு வேறு ரிஷிகள் இவர்கள் அனைவரும் அஜானஜர் என்று அழைக்கப்படுகிறார்கள். ரிஷி என்றால் இவர்கள் அனைவருமே ஆவர். 

பித்ருகளிகெ என்றால் பித்ரு கணங்களில் சில கணங்கள் உத்தம கணங்கள் என்று சொல்லப்படுகின்றன. (இந்த தாரதம்யத்தின் மேலதிக தகவல்கள் ‘ப்ருஹத் தாரதம்ய சந்தி’யில் வருகிறது). அந்த பித்ருகளை விட்டு மிச்ச பித்ரு கணங்களை இங்கு எடுத்துக் கொள்ளவேண்டும். கந்தர்வ என்னும் சொல்லால் அஜானஜரில் சேர்ந்த தும்புரு முதலான முக்கிய கந்தர்வர்களை விட்டு மிச்ச கந்தர்வர்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். க்‌ஷிதிபர் என்றால் ப்ரியம்வ்ரதாதி உத்தமாதிகாரிகளைத் தவிர மிச்ச அரசர்களை, மனுஷ்யோத்தமர்கள் வரை எடுத்துக் கொள்ளவேண்டும். இதுவரை சொல்லியவர்கள் அனைவருக்கும் வணக்கங்களை சொல்லி, குரு பரம்பரையை வணங்குகிறார் தாசராயர். 

‘ஆ கமலனாபாதி யதிகள நீககா நமிஸுவெனு’ என்று ஸ்ரீமதாசார்யரின் நேரடி சிஷ்யர்களான பத்பனாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர், மாதவ தீர்த்தர், அக்‌ஷோப்ய தீர்த்தர் என்ற நான்கு யதிகளையும், இவரின் பரம்பரையில் வரும் டீகாராயர் (ஜயதீர்த்தர்), ஸ்ரீபாதராஜர், வியாசராஜர், வாதிராஜர், ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் ஆகிய யதிகளை வணங்குகிறார் என்று அறியவேண்டும். தமக்கு வியாசகூடத்தினவர் மேல் அபிமானம் இருக்கிறது என்பதையும், வியாசகூடத்தவரகளுக்கும், தாசகூடத்தவர்களுக்கும் வேறுபாடு இல்லை என்பதையும், தற்போது பேதங்களை சொல்பவர்கள் அஞ்ஞானிகள் என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டுமாறு, வியாசகூடத்தவர்களுக்கு முதலில் நமஸ்காரங்களை சொல்லி பிறகு தாசவர்க்கத்தவர்களுக்கு நமஸ்காரங்களை செய்கிறார். 

‘பிடதெ ரமாகளத்ரன தாசவர்கக்கெ நமிபெ நனவரத’ என்று ‘ரமாகளத்ரன’ என்று பரமாத்மன் கிருஹஸ்தாஸ்ரமியாக, ஜகத்குடும்பியாக சொல்லியாயிற்று. பகவத் தாசர்களில் பரமாத்மனுக்கு அதிக ப்ரீதி இருக்கிறது என்பதை ‘ரமாகளத்ரன’ என்று சொல்லி விளக்கியாயிற்று. ‘நாஹம்வஸாமி வைகுண்டே நயோகி ஹ்ருதயே ரவௌ | மத்பக்தா யத்ரகாயந்தி தத்ரதிஷ்டாமி நாரத’. ’ஹே நாரத ! நான் வைகுண்டத்திலோ அல்லது இதயங்களில் மட்டுமே இருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். என் பக்தர்கள் எங்கெங்கெல்லாம் பாடிக்கொண்டிருக்கிறார்களோ, அங்கு நான் எப்போதும் நிலைத்திருக்கிறேன்’ என்று பரமாத்மன் சொல்லியிருக்கிறார். இந்த பகவத் வாக்கியமானது, பரமாத்மனுக்கு தாசர்களில் இருக்கும் அன்பினை எடுத்துக் காட்டுகிறது. தாசவர்கக்கெ என்னும் சொல்லினால், புரந்தரதாசர், விஜயதாசர், பாகண்ணதாசர் என்று ஜகன்னாததாசரைவிட உத்தமர்களான தாசவர்கத்தினவருக்கு நமஸ்காரங்களை சொல்கிறார் தாசராயர். 

இப்படி முதல் சந்தியின் நோக்கத்தினை சொல்லும்போதே பார்த்த, முக்திக்கு முக்கிய காரணங்களான பஞ்சபேத, தாரதம்ய, 24 தத்வங்களை சொல்லி, தற்போது சந்தியை முடித்தவாறு, மங்கள ஸ்தோத்திரமாக தம் அந்தர்யாமியான பிம்பரூபி ஸ்ரீஜகன்னாதவிட்டல நாமக ஸ்ரீபரமாத்மனை வணங்குகிறார்.

***


Tuesday, February 4, 2020

#11 - மங்களாசரண சந்தி

#11 - மங்களாசரண சந்தி

க்ருத்திவாஸனெ ஹிந்தெ3 நீ நா
ல்வத்து11ல்ப சமீரனலி சி
ஷ்யத் ஹிசகி2ளா3 மார்த்தக3ளோதி3 ஜலதி4யொளு |
ஹத்து கல்பதி3 தபவகை3தா3
தி3த்யரொள கு3த்தமனெனிஸி புரு
ஷோத்தமன பரியங்க பத3வைதி3தெயோ மஹதேவ ||11

க்ருத்திவாசனே = புலித்தோலை ஆடையாக உடுத்தியவனே
மஹதேவ = தேவோத்தமனே
நீ = நீ
ஹிந்தே = ருத்ர பதவிக்கு வருவதற்கு முன்னர்
நால்வத்து கல்ப = 40 பிரம்ம கல்பத்தின் வரைக்கும்
ஸமீரனலி = வாயுதேவரிடம்
சிஷ்யத்வ = சிஷ்யனாக
வஹிஸி = இருந்து
அகிளாகமார்த்தகள = அனைத்து வேத சாஸ்திரங்களைப் படித்து
ஜலதியொளு = சமுத்திரத்தில்
ஹத்துகல்பதி = 10 பிரம்ம கல்பத்தின் வரைக்கும்
தபவகெய்து = தவம் செய்து
ஆதித்யரொளகெ = அதிதியின் மக்களான தேவதைகளிடம்
உத்தமனெனிஸி = உத்தமன் என்று போற்றப்பட்டு
புருஷோத்தமன = க்‌ஷாக்‌ஷரர்களில் சிறந்தவரான ஸ்ரீமன் நாராயணனின்
பர்யங்க = படுக்கையாக இருக்கும் சேஷனின்
பதவ = பதவியை
யைதிதெயோ = பெற்றாயே, இப்படியான நீ
எமகெ = எமக்கு
சதா = எல்லா காலங்களிலும்
மங்களவ = மங்களகரமான உத்தம ஞானத்தை
கருணிஸு = தயவுசெய்து அருள்வாயாக

பொருள்:
கருட புராண பிரம்ம காண்டத்தில், ருத்ரதேவருக்கு வாமதேவ என்ற பெயர் வந்ததற்கான காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. 

ஈஷான்யகோணே சம்ஸ்திதோயஸ்து ருத்ரோஹ்ய வாமதேவோ வாமதேவேதி சம்ஞாம் |
ஸ்வவாமபாகே சம்ஸ்திதம் வாசுதேவம் ஸ்வயோக்யபக்தா பூஜதே சர்வதெய்வ ||

இதன் பொருள்:

ஸ்ரீபரமாத்மன் நடுவில் மேற்கு நோக்கி அமர்ந்திருக்க, ருத்ரர் பரமாத்மனுக்கு ஈசான்ய மூலையில் (அதாவது பரமாத்மனின் பின்னே, வலது புறத்தில், மேற்கு நோக்கி அமர்ந்து), தம் இடது பக்கத்தில் இருக்கும் பரமாத்மனை, தம் தகுதிக்கேற்ப பக்தியுடன் பூஜித்திருப்பதால் அவருக்கு வாமதேவ என்ற பெயர் வந்தது. கிருத்திவாஸனெ என்னும் பதத்தினால் பொதுவாக தோல், ஆடை என்று பொருள் வந்தாலும், ‘வியாக்ர சர்மாம்பர தரம்’ என்னும் பாகவத வசனத்தினாலும், புரந்தரதாசரின் பதத்தில் இருக்கும் ‘உட்டத்து ஹுலி தொடலு பென்ன மேலெ ஹொத்த ஆனெய தொகலு’ என்னும் வாக்கியத்தாலும், ‘சாமஜாஸின வஸன பூஷண கிருத்திவாஸனே’ என்று இரு வேறு விஷயங்களைச் சொல்லி, மேற்சொன்ன அர்த்தத்தையே தாசராயர் குறிப்பிட்டிருக்கிறார். இதில் புனருக்தி தோஷம் இல்லை. ருத்ரதேவர், 40 பிரம்மகல்ப சாதனையை செய்துகொண்டு மேலும் 10 பிரம்மகல்ப தவத்தை செய்திருக்கிறார். மொத்தம் 50 பிரம்மகல்ப சாதனை என்று தாசராயர் சொல்லியிருக்கிறார்.

இதற்கு ஆதாரமான ஸ்ரீமதாசார்யரின் ‘ததைவ சத்வாரிம்ஷத்பி: பதம் ஷைவஞ்ச ஜன்மபி:’ என்னும் பாகவத தாத்பர்ய நிர்ணய வசனத்தாலும், ‘தஷகல்ப தபஸ்சீர்ணம் ருத்ரேண லவணார்ணவெ’ என்னும் அனுவியாக்யான வசனத்தாலும், ருத்ர தேவருக்கு 50 கல்ப சாதனை இருக்கிறது என்று தெரியவருகிறது. மேலும் பாகவத 4ம் ஸ்கந்த தாத்பர்யத்தில் மேற்கோள் காட்டியிருக்கும் அனுவியாக்யான வாக்கியத்தில் 

பிரம்மணாம் ஷதகாலத்து பூர்வ வாரப்ய சம்க்‌ஷய | 
பிரம்மணஸ்த்வேவதாவத்வம் பஞ்சாஷத் பிரம்மஸ்ததா |
ருத்ரஸ்ய விம்ஷதேவஸ்யாச் சக்ரஸ்யார்காதி கேதஷ: |

என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால் ருத்ரதேவருக்கு 50 கல்ப சாதனை இருக்கிறது என்று நிர்ணயம் ஆகிறது. இதே அபிப்பிராயத்தையே தாசராயரும் தம் கிரந்தத்தில் சொல்லியிருக்கிறார். 

ஒருவேளை புராணங்களில் சொல்லப்பட்ட வாக்கியங்கள், ஸ்ரீமதாசார்யரின் நிர்ணயத்திற்கு எதிராக இருந்தால், அதை அவர் சொன்ன மாதிரியே புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில், புராணங்களில் பல இடங்களில் கற்பனையாகவோ, அஞ்ஞானிகளை ஏமாற்றவோ பல விஷயங்கள் எதிர்ப்பதமாக சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றை சரிசெய்வதற்காகவே ஸ்ரீமதாசார்யர், தாத்பர்ய நிர்ணயாதி கிரந்தங்களை செய்திருக்கிறார். ஆகையால், புராணங்கள் நமக்கு எப்படி தெரிந்தாலும், அவர் கூறிய அர்த்தத்தையே உண்மை என்று அறியவேண்டும். இந்த விஷயத்தில் ‘நாஸ்மதுக்தி சத்ருஷம் ஹிதரூபம்’ என்னும் ஸ்ரீமதாசார்யரின் வாக்கியத்தினால் இந்த அர்த்தம் தெளிவாகிறது. 

மேலும் 

ருகாதயஸ்ச சத்வார: பாரதம் பஞ்சராத்ரகம் | 
மூல ராமாயணம் சைவ சாஸ்த்ரமித்யபிதீயதே ||

ருகாதி 4 வேதங்கள், பாரத, பாஞ்சராத்ர ஆகம, மூல ராமாயண இவற்றிற்கு சாஸ்திரங்கள் என்று பெயர். மீதம் இருக்கும் பாகவதாதி புராணங்கள் இவற்றை சார்ந்து இருந்தால் அவையும் சாஸ்திரங்களே ஆகும். இல்லையேல் இல்லை. ஆகையால், ஸ்ரீமதாசார்யர் பாரதாதிகளை அனுசரித்து பாகவத புராணத்திற்கு வியாக்யான ரூபமாக பாகவத தாத்பர்யம் என்னும் கிரந்தத்தை இயற்றினார். 

ஆனால் இன்று சில அஞ்ஞானிகள் தாசவேடம் தரித்து, தாசகூடத்திற்கும் வியாசகூடத்திற்கும் சண்டையை உண்டு பண்ணி, தாசராயர், ஸ்ரீமதாசார்யரின் சிஷ்யர் இல்லை என்று பொருள்படவும் சொல்வதுண்டு. அதில் உண்மையில்லை. ஏனெனில், ஸ்ரீமதாசார்யரின் வாக்கியத்திற்கு எதிராக அவர் என்றும் எதையும் சொல்லியதில்லை. ஆகையால், ஸ்ரீமதாசார்யரின் கிரந்தங்களுக்கு இந்த கிரந்தம், வியாக்யானமாக இருக்கிறது என்றே நினைக்கவேண்டும். 

இப்படியிருக்கையில், ஒரு வியாக்யானகாரர் தமது ஸ்ரீஹரிகதாம்ருதசார வியாக்யானத்தில், தாசரின் அபிப்பிராயம் ருத்ரதேவருக்கு 50 கல்ப சாதனை என்று எழுதி, அதற்கு ஆதாரமாக ஸ்ரீமதாசார்யரின் வாக்கியங்களை உதாரணம் கொடுத்து, 50 கல்ப சாதனையை நிர்ணயித்து, இறுதியாக கருட புராணத்து வாக்கியம் ஒன்றை எடுத்துக்காட்டி, அந்த வரிகளுக்கு சரியான அர்த்தத்தை புரிந்துகொள்ளாமல், ருத்ர தேவருக்கு 50 கல்ப சாதனை என்று யார் சொல்வார்களோ அவர் தமோயோக்யர் என்று சொல்லி, ஸ்ரீமதாசார்யர் மற்றும் ஸ்ரீதாசராயர் இருவரும் தமோ யோக்யர் என்று சொல்லியிருக்கிறார். இது கண்டனத்திற்குரியதாகும். பிரம்ம காண்டத்தில் ருத்ரதேவருக்கு 50 கல்ப சாதனை என்று அறிபவர்கள் தமோ யோக்யர்கள் என்று இருந்தாலும், ஆசார்யரின் மதத்தை அனுசரித்து அதை விளக்க வேண்டுமே தவிர, புராணங்களை நம்பி ஸ்ரீமதாசார்யரின் எதிர்ப்பை சம்பாதிக்கக்கூடாது. அப்படி ருத்ர தேவருக்கு 50 கல்ப சாதனை என்று அறிந்தவர்கள் தமோ யோக்யர்கள் என்று கருட புராணத்தில் சொல்லவேயில்லை. அங்கிருக்கும் வாக்கியம் என்னவென்றால் : 

பஞ்சாஷீதி பிரம்மகல்பம் யே விஜானந்திதே த்விஜ |
அந்தந்தம: ப்ரவிஷ்யந்தி சத்யம் சத்யம் மயோதிதம் ||

என்று இருக்கிறது. இதில் இருக்கும் பஞ்சாஷீதி என்னும் சொல்லுக்கு 50 என்னும் அர்த்தம் என்று எந்த அகராதியைப் பார்த்து அவர் அறிந்தாரோ நான் அறியேன். இத்தகைய சிறந்த கிரந்தத்திற்கு பற்பல ஆதாரங்களை உதாரணம் கொடுத்து, புகழடைந்த பல வியாக்யானகாரர்கள், பஞ்சாஷீதி என்னும் சொல்லுக்கு 50 என்றே பொருள் சொல்லியிருக்கின்றனர். இவர்களுக்கு ஏதோ குழப்பம் வந்திருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. சம்ஸ்கிருதத்தில் ‘பஞ்சாஷத்’ என்றால் 50 என்றும் ‘பஞ்சாஷீதி’ என்றால் 85 என்றும் அர்த்தம். இவர் தாம் உதாரணம் கொடுத்த ஸ்லோகத்தில் பஞ்சாஷீதி என்று இருக்கையில், பஞ்சாஷத் மற்றும் பஞ்சாஷீதி இரு சொற்களுக்கும் வித்தியாசம் உணராமல், ஒரு வித மயக்கத்தில் 50 என்று அர்த்தம் கொடுத்து, ஸ்ரீமதாசார்யரையும் தமோயோக்யராக மாற்றிவிட்டார். 

கருட புராணத்தின் வாக்கியம் என்னவென்றால்: 

கருட உவாச:
பஞ்சாஷீதி பிரம்ம கல்பம் சமாரப்ய மஹாப்ரபு |
ருத்ரஸ்ய ஹ்யபரோக்‌ஷம் ஸ்யாத்ததாஹ்யரப்த சம்க்‌ஷய: |
இதிஸ்ருதம் மயா ப்ரம்ம |||

கிருஷ்ண உவாச:
பஞ்சாஷீதி பிரம்மகல்பம் மேவிஜானந்தி ... ||

கருடனின் கேள்வி: ’ருத்ரதேவருக்கு 85 கல்பங்கள் முதலில் பிராரப்தமும் பின் அபரோக்‌ஷமும் ஆகும் என்று நான் பிரம்மதேவரிடமிருந்து கேட்டிருக்கிறேன். ஆனால் நீயோ 50 கல்ப சாதனை என்று சொல்கிறாயே, இதனால் எனக்கு சந்தேகம் வருகிறது. உங்கள் இருவரும் அபிப்பிராயமும் எப்படி வேறுபடும். இதற்கு என்ன காரணம்?’. அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் - ‘ஹே கருடனே! ருத்ரதேவருக்கு 85 கல்பசாதனை என்று சொல்பவர்கள் தமோயோக்யர்கள். என் வாக்கியத்திற்கும், பிரம்மன் சொன்னதற்கும் வேறுபாடு சொல்பவர்கள் அஞ்ஞானிகள் என்று அறிவாயாக. நாங்கள் இருவரும் சொல்வதை ஒன்று என்றே ஞானிகள் சொல்வார்கள்’. எப்படியெனில் - பிரம்மதேவர் சொன்ன 85ஐ எழுத்தில் எழுதினால், அந்த இரு எண்களையும் பெருக்கினால் 8 x 5 = 40 வருகிறது. இதுவே பிரம்மதேவர் சொன்ன பஞ்சாஷீதி என்னும் சொல்லுக்கு அர்த்தமாகும். இதுவே கருட புராணத்தின் வாக்கியத்திற்கு அர்த்தமாகும். 

இருக்கட்டும். அப்படியும், ஜகன்னாததாசர் சொல்வது 50 கல்ப சாதனை என்று. கருட புராணத்தின்படி 40தானே வருகிறது. இதிலும் வேறுபாடு இருக்கிறதே என்றால். ஸ்ரீமதாசார்யரோ, ஜகன்னாததாசரோ இருவரும் ருத்ரதேவருக்கு 50 என்று சொல்லவில்லை. 40 கல்ப சாதனை என்றும் பிறகு தனியாக 10 கல்ப சாதனை என்றும் சொல்லியிருக்கிறார்கள். இதன் விளக்கம் என்னவெனில்: ருத்ர பதவிக்கு வரவேண்டுமெனில், 40 கல்ப சாதனையையும், சேஷ பதவியை பெற்றபிறகு முக்தியை அடைவதற்காக 10 கல்பத்தை தனியாக சாதனை செய்யவேண்டும். நிர்ணய வியாக்யானத்தில் ‘தஷகல்பஸ்ய மோக்‌ஷ விசேஷார்த்தம் தப: பரத்வமுக்தம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியிருக்கையில், 40 கல்பங்கள் என்று சொல்லும் கிரந்தங்கள் அவை ருத்ர பதவிக்கு வருவதற்கு மட்டுமே என்றும். 50 கல்பங்கள் என்று சொல்பவை அது மோட்ச சாதனையையும் சேர்த்து சொல்லப்பட்டிருக்கிறது என்று அறியவேண்டும். இப்படி சொல்வதால், ஆசார்யரின் வாக்கியத்திற்கும், தாசராயரின் வாக்கியத்திற்கும், கருட புராணத்து வாக்கியத்திற்கும் எவ்வித வேறுபாடும் தோன்றுவதில்லை. 

புருஷோத்தமன பர்யங்க பதவைதிதெயோ மகாதேவா = என்று சேஷதேவரையும் சேர்த்து வணங்கியதைப் போல ஆயிற்று என்று நினைக்கவேண்டும். 

***


Monday, February 3, 2020

#10 - மங்களாசரண சந்தி

#10 - மங்களாசரண சந்தி

வாமதேவ விரிஞ்சித1னய உ
மாமனோஹர உக்3ர தூ4ர்ஜடி
சாமஜாஜின வசனபூ4ஷண சுமனசோத்தம்ஸ |
கா1மஹர கைலாஸமந்தி3ர சோம
சூர்யானல விலோசன
காமித1ப்ரத3 கருணிசெமகெ3 சதா சுமங்க3லவ ||10

பொருள்:

வாமதேவ = சாந்தமான ஸ்வபாவமுள்ள அல்லது தனது இடதுபாகத்திலிருக்கும் பரமாத்மனை எப்போதும் உபாசனை செய்துகொண்டிருப்பதால் வாமதேவ என்ற பெயர் கொண்ட,
விரிஞ்சிதனய = பிரம்மனின் மகனான
உமா மனோஹர = பார்வதி தேவியின், மனோஹர = மனதைப் பறிக்கும் (அதாவது உமாபதியான என்று பொருள்)
உக்ர = எதிரிகளுக்கு உக்ர ஸ்வரூபனான, அல்லது பிரளய காலத்தில் உக்ர ரூபத்தினால் பிரபஞ்சத்தை எரிப்பதால் உக்ர என்று பெயர் பெற்றவர்
துர்ஜடி = கங்கையைக் கொண்ட ஜடையுள்ள
ஸாமஜாஜின வஸன = ஸாமஜ = யானை. அஜின = தோலினால். வஸனெ = ஆடை.
பூஷண = அணிகலன்களாக உள்ள
ஸுமனஸோத்தம்ஸ = தேவோத்தமனான
காமஹர = மன்மதனை எரித்தவனான
கைலாஸ மந்திர = கைலாயத்தையே வீடாகக் கொண்ட
ஸோமசூர்யானலவிலோசன = ஸோம = சந்திரன். சூர்ய = சூரியன். அனல = அக்னி. என்று மூன்று தேவதைகளைக் கொண்ட மூன்று கண்களையுடையவன் (இட வல கண்களில் சந்திர சூரியர்கள். நெற்றிக்கண்ணில் அக்னி என்று அறியவேண்டும்).
காமிதப்ரத = வேண்டுபவர்களின் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுபவர்.

***


Sunday, February 2, 2020

#9 - மங்களாசரண சந்தி

#9 - மங்களாசரண சந்தி

1ஞ்சபே4தாத்மக ப்ரபஞ்சகெ
பஞ்சரூபாத்மகனெ தை3வக
பஞ்சமுக2 சக்ராதிக3ளு கிங்கரரு ஸ்ரீஹரிகெ |
பஞ்சவிம்ஷதி த1த்வ தரதம
பஞ்சிகெகளனு பே1ள்த பா4வி வி
ரிஞ்சியெனிபானந்த தீர்த்தர நெனெவெனனுதி3னவு ||9

பொருள்:
பஞ்ச பேதாத்மக ப்ரபஞ்சகெ = 5 பேதங்களைக் கொண்ட இந்த உலகத்திற்கு
பஞ்ச ரூபாத்மகனெ தெய்வக = அனிருத்தாதி 5 ரூபங்களைக் கொண்ட ஸ்ரீபரமாத்மனே தெய்வம்
ஸ்ரீஹரிகெ = இத்தகைய பரமாத்மனுக்கு
பஞ்சமுக ஷக்ராதிகளு கிங்கரரு = பஞ்சமுக = ஐந்து முகங்களைக் கொண்ட ருத்ரதேவர். ஷக்ர = தேவேந்திரன். ஆதிகளு = இவர்களிலிருந்து அனைவரும். கிங்கரரு = சேவகர்கள். 
பஞ்சவிம்ஷதி தத்வதரதம பஞ்சிகெகள = பஞ்சவிம்ஷதி = 25 தத்வங்கள். தர, தம = தேவதைகளில் உத்தம, மத்யம என்னும் தாரதம்யம் இவைகளை. 
பஞ்சிகெகள = மகிமைகளை
பேளித = தெரிவித்த
பாவிவிரிஞ்சியெனிப = அடுத்த கல்பத்தில் பிரம்மன் என்று சொல்லப்படும் வாயுதேவரின் அவதாரரான
ஆனந்த தீர்த்தர = ஸ்ரீமதானந்த தீர்த்தரை
அனுதினவு = தினந்தோறும்
நெனெவெனு = நினைப்பேன். 

பொருள்:
பஞ்சபேதங்களால் ஆன உலகம் என்றதன் விவரம். ஜீவ ஈஸ்வர பேதம், ஜீவ ஜீவ பேதம், ஜீவ ஜட பேதம், ஜட ஈஸ்வர பேதம், ஜட ஜட பேதம் என்று ஐந்து பேதங்கள். பஞ்சரூபங்கள் = அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ, நாராயண என்னும் பரமாத்மனின் 5 ரூபங்கள். இப்படி ஐந்து பேதங்களைக் கொண்ட உலகத்திற்கு, 5 ரூபங்களைக் கொண்ட ஸ்ரீபரமாத்மனே தலைவன் என்று பொருள். ‘த்யேய: பஞ்சமுகோ ருத்ர:’ என்னும் தந்திரசார வாக்கியத்தால், பஞ்சமுக என்றால் ருத்ரதேவர் என்று நிர்ணயம் ஆகிறது. 

25 தத்வங்கள் என்னவெனில்: பஞ்சபூதங்கள் 5, பஞ்ச தன்மாத்ரங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, அஹங்கார, மனஸ், புத்தி, சித்த தத்வங்கள் 4, என மொத்தம் 24 தத்வங்கள். பரமாத்மன் 1. ஆகமொத்தம் 25 தத்வங்கள். தரதம என்றால், விஷ்ணு சர்வோத்தமன். அவனுக்கு அடுத்தவர், ரமாதேவி. பிறகு பிரம்ம வாயுகள். அடுத்து சரஸ்வதி பாரதி என்ற பேதங்களைக் காட்டுவதே தாரதம்யம். இப்படியாக 25 தத்வங்களையும், பஞ்சபேதங்களையும், தாரதம்யங்களையும் உலகத்தில் பரப்பினார் என்பது கருத்து. வாயுதேவரே அடுத்த கல்பத்தில் பிரம்ம பதவிக்கு வருகிறார் ஆகையால் ‘பாவி-விரிஞ்சி’ என்று சொல்லியிருக்கிறார் என்று அறியவேண்டும். 

அடுத்து, அஹங்கார தத்வத்திற்கும் மனஸ்ஸிற்கும் அபிமானிகளான ருத்ர தேவரை, இரு ஸ்லோகங்களில் வணங்குகிறார். 

***

Saturday, February 1, 2020

#8 - மங்களாசரண சந்தி

#8 - மங்களாசரண சந்தி

க்‌ஷிதி1யொளகெ மணிமந்த1 மொத3லா
3தி1து3ராத்1மரு ஒந்த3தி4க விம்
ஷதி குபாஷ்யவ ரசிஸெ நடுமனெயெம்ப பிராம்மணன |
சதிய ஜடரதொளவதரிஸி பா4
ரதிரமண மத்வாபி4தானதி3
சதுரத3ஷ லோகதலி மெரெதப்ரதிமகொ3ந்திசுவெ ||8

பொருள்:
மணிமந்த மொதலாத = மணிமந்தன் முதற்கொண்டு
அதி துராத்மரு = தமோ யோக்யரான தைத்யர்கள்
க்‌ஷிதியொளகெ = பூமியில் பிறந்து
ஒந்ததிகவிம்ஷதி குபாஷ்யவ = பிரம்மசூத்திரத்திற்கு 21 குபாஷ்யங்களை
ரசிஸி = இயற்றி
பாரதிரமண = பாரதிபதியான வாயுதேவர்
நடுமனெயெம்ப = மத்யகேஹ பட்டர் என்னும் பிராமணரின்
ஸதிய = மனைவியின்
ஜடரதொளு = வயிற்றில்
அவதரிஸி = பிறந்த குழந்தையின் தேகத்தில் பிரவேசித்து
மத்வாபிதானதி = மத்வாசார்யர் என்னும் பெயரால்
சதுரதஷ லோகதலி = 14 உலகங்களிலும்
மெரெத = புகழடைந்த
அப்ரதிமெகெ = ஒப்புமை இல்லாத (அவரை)
வந்திஸுவெ = வணங்குவேன்.

பொருள்:

’ஏகவிம்ஷதி குபாஷ்ய தூஷகம்’ என்று மத்வவிஜயத்தில் சொல்லியிருக்கும்படி, ஸ்ரீமதாசார்யர் 21 குபாஷ்யங்களை நிராகரித்து, பிரம்மசூத்திரத்திற்கு 22வது பாஷ்யத்தை இயற்றினார். ‘நடுமனெ எம்ப பிராமணன ஸதிய ஜடரதொளவதரிஸி’ என்று சொல்லியதால், பொதுவாக நமக்கு மத்யகேஹ பட்டரின் மனைவியின் கர்ப்பத்தில் குழந்தையாக வந்து பிறந்தார் என்று தோன்றும். ஆனால், இவர் சுக்ல ஷோணித சம்பந்தங்களினால் கர்ப்பவாசத்தில் வந்து பிறந்தவரல்ல. 

பிறகு எப்படி பிறந்தார் என்றால்: மத்யகேஹ பட்டரின் மனைவி கர்ப்பவதியாகி, அழகான, மன்மத ஸ்வரூபனான ஒரு குழந்தையைப் பெற்றார். அப்போது வாயுதேவர் அங்கு வந்து, ஒரு நாட்டினை வென்ற அரசன், ஏற்கனவே அங்கு இருந்த அரசனை வெளியேற்றிவிட்டு தான் உள்நுழைந்து சிம்மாசனத்தில் அமர்வதைப் போல, அந்த குழந்தையின் உள்ளேயிருந்த ஜீவனை வெளியேற்றிவிட்டு, தான் உள்ளே பிரவேசித்தார். ஆகையால், அந்த குழந்தையின் உடல் மட்டுமே மத்யகேஹ பட்டரின் மனைவியின் கர்ப்பத்திலிருந்து வந்தது. பிறந்தபிறகு வாயுதேவரின் பிரவேசம். ‘ராஜீவ ஸத்சுரவரம் புவனாதிராஜோ நிஷ்காஸர்ய பரமஸௌபகர்வா விவேஷ’ என்னும் மத்யவிஜயத்தின் வாக்கியத்தின்படி இது தெளிவாகிறது. 

தாசராயர் ‘ஜடரதொளவதரிஸி’ என்று ஏன் சொன்னார் என்றால், இவரின் உடல் அந்த பெண்மணியின் கர்ப்பத்திலிருந்து வந்தது என்று அறியவேண்டும். ‘சதுரதஷலோகதலி மெரெத’ என்றால், இவரின் கீர்த்தி / புகழ் 14 உலகங்களிலும் வியாபித்திருக்கிறது என்று பொருள்.

***

Friday, January 31, 2020

#7 - மங்களாசரண சந்தி

#7 - மங்களாசரண சந்தி

வேதபீ12 விரிஞ்சி ப4வ ஷ
க்ராதி3சுர விக்ஞானதா3யக
மோத3 சின்மயகா3த்ர லோக1பவித்ர சுசரித்ர |
ச்சேத3 பே43 விஷாத3 கு1டி1லா
ந்தாதி மத்ய விதூ3ர ஆதா3
நாதி3 காரண பாத3ராயண பாஹி சத்1ராண ||7

பொருள்:
வேதபீட - வேதங்களை பீடமாகக் கொண்ட
விரிஞ்சிபவ ஷக்ராதிசுர = விரிஞ்சி = பிரம்மதேவர். பவ = ருத்ரர். ஷக்ர = இந்திரன். ஆதி = ஆகிய. சுர = தேவதைகளுக்கு
விக்ஞானதாயக = விக்ஞான = விசேஷ ஞானம். தாயக = கொடுப்பவர்
மோதசின்மயகாத்ர = மோத = ஆனந்தம். சின்மய = ஞானம். காத்ர = தேகத்தைக் கொண்ட.
லோக = மூன்று உலகங்களையும்
பவித்ர = பவித்ரமாக மாற்றும்
ஸுசரித்ர = உத்தமமான மகிமைகளைக் கொண்ட
சேதபேத விஷாத குடிலாந்தாதி மத்யவிதூர = சேத = கத்தி முதலான ஆயுதங்களால் சரீரத்தை சேதப்படுத்துதல். பேத = பாணங்களால் சரீரத்தை சேதப்படுத்துதல். விஷாத = துக்கமடைதல். குடில = நோய்களால் உடல் ஹீனமடைதல். இவற்றிலிருந்து, விதூர = இவை எவையும் பாதிக்காமல் தூரமாக இருப்பவன். (அதாவது மேற்சொன்ன தோஷங்கள் எதுவும் இல்லாதவன் என்று பொருள்).
ஆதானாதிகாரண = ஆதானாதி = பிரம்மாதிகளிடமிருந்து பூஜையை ஏற்றுக்கொள்ளல். காரண = காரணனான. சத்ராணா = ஸஜ்ஜனர்களை பாதுகாக்கும். பாதராயண = பதரி வ்ருக்‌ஷங்களால் சூழப்பட்ட. வனத்திற்கு பாதர என்று பெயர். அதையே தன் இருப்பிடமாகக் கொண்டிருப்பதால் இவருக்கு பாதராயண என்று பெயர். (அதாவது பதரிகாஸ்ரம-வாசி என்று பொருள்). அப்படிப்பட்ட வேதவியாச தேவரே,
பாஹி = உங்களுடைய சாஸ்திரங்களை சொல்வதற்கு புறப்பட்டுள்ள எனக்கு நற்புத்தியைக் கொடுத்து அருள்வீராக.

பொருள்:

'விதிஷக்ர பூர்வகீர்வாண விக்ஞானத மானதோஸ்மி’ என்னும் தந்திரசாரத்தின் வாக்கியத்திற்கேற்ப ‘விரிஞ்சிபவ ஷக்ராதி சுரவிக்ஞானதாயக’ ஆகிய சொற்களால் ‘வேதவியாஸர் ஒரு சாதாரண ரிஷி’ என்னும் பேச்சு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக வேதவியாசதேவரைப் பிரார்த்தித்து, தாரதம்யத்தின்படி முதலில் வாயுதேவரை வணங்கினாலும், த்வைத மதத்தை நிறுவியவரான, முக்திக்கு முக்கிய சாதனங்களான பஞ்சபேத தாரதம்யாதிகளை விளக்கிக் காட்டிய, வாயுதேவரின் அவதாரரான, சத்வைஷ்ணவர்களுக்கு முக்கிய குருகளான ஸ்ரீமத்வாசார்யரை இரண்டு பத்யங்களால் வணங்குகிறார் தாசராயர். 

***


Thursday, January 30, 2020

#6 - மங்களாசரண சந்தி

#6 - மங்களாசரண சந்தி

க்1ருதிரமண ப்ரத்3யும்ன நந்த3னெ
சதுரவிம்ஷதி த1த்1வப1தி தே
வதெக3ளிகெ3 கு3ருவெனிசுதிஹ மாருதன நிஜபத்னி |
சத11 ஹரியலி கு3ருகளலி ச
த்ரதிய பாலிஸி பா43வத பா4
ரத1 புராண ரஹஸ்ய த1த்வக3ளருபு1 கருணதலி ||6

க்ருதிரமண ப்ரத்யும்ன நந்தனெ = க்ருதி நாமகளான ரமா தேவியரின். ரமண = கணவனான ப்ரத்யும்ன = ப்ரத்யும்ன நாமகனான ஸ்ரீபரமாத்மனின். நந்தனெ = மகளான.
சதுரவிம்ஷதி தத்பதி தேவதெகளிகெ = 24 தத்வாபிமானிகளான தேவதைகளுக்கு 
குருவெனிஸுதிஹ = குரு என்று அழைக்கப்படும்
மாருதன = வாயுதேவரின்
நிஜபத்னி = நியத பத்னியான பாரதி தேவியே
ஸதத = எப்போதும்
ஹரியலி = ஸ்ரீபரமாத்மனிடம்
குருகளலி = பிரம்மதேவரில் துவங்கி நம் குருகளின் வரை, தாரதம்யத்தின்படி அனைத்து குருகளிடமும்
ஸத்ரதிய = விசேஷமான பக்தியை
பாலிஸி = கொடுத்து
கருணதலி = என் மேல் கருணையுடன்
பாகவத பாரத புராண ரஹஸ்யகள = பாகவத பாரதாதி புராணங்களில் அடங்கியிருக்கும் / மறைந்திருக்கும் அரிய பகவத் தத்வங்களை
அருபு = தெரியப்படுத்து. 

பொருள்:
முந்தைய பத்யத்தில் சரஸ்வதி தேவியரை வணங்கி நற்புத்தியை வேண்டி, பின் அடுத்த கல்பத்தில் சரஸ்வதி பதவிக்கு வரப்போகும் பாரதி தேவியிடம் தன் இஷ்டார்த்தங்களை இப்படியாக வேண்டுகிறார். தாயே! பாரதி! நீ பிரத்யும்ன ரூபியான பரமாத்மன் மற்றும் கிருதி என்னும் லட்சுமிதேவியின் ரூபத்திலிருந்து பிறந்தவள். ஆகையால் உனக்கு லட்சுமி நாராயணரே தாய் தந்தையாக இருக்கின்றனர். உன் பதியோ 24 தத்வாபிமானி தேவதைகளுக்கும் குரு எனப்படுகிறார். இத்தகைய உன்னை நான் வேண்டிக் கொள்கிறேன். ஸ்ரீபரமாத்மனிடமும், அவரின் பரம பக்தர்களான உன் கணவர் முதலான அனைத்து குருகளிடமும் எனக்கு திடமான பக்தியைக் கொடு. மேலும் என்னிடம் தயைகூர்ந்து, நான் எழுத முற்பட்டுள்ள இந்த ஹரிகதாம்ருதசார என்னும் கிரந்தத்திற்குத் தேவையான, பாரத பாகவத புராணங்களில் அடங்கியிருக்கும் / மறைந்திருக்கும் பகவத் தத்வங்களை எனக்கு புரியுமாறு / என் நினைவுக்கு வருமாறு எனக்கு அருள்புரிவாயாக. 

சிறப்புப் பொருள்:
பாரதி தேவியே பின்னர் சரஸ்வதிதேவியராக இருப்பார் என்பதை குறிக்கும் வகையில், பாரதி தேவிக்கு தனியாக நமஸ்காரங்களை செய்யவில்லை. அதிகார பேதம் இருப்பதால், பலன்களை மட்டும் தனியாக வேண்டியிருக்கிறார் என்பதை அறியவேண்டும். இந்த பாரதி தேவியர், கருட, சேஷ, ருத்ராதி தேவதைகளைவிட உத்தமர் என்பதை தெரிவிப்பதற்காக ‘க்ருதிரமண ப்ரத்யும்ன நந்தனெ’ என்னும் பதத்தை உபயோகம் செய்திருக்கிறார். 

ஸ்ருஷ்டியின் துவக்கத்தில் பரமாத்மன், வாசுதேவன், சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அனிருத்த என்னும் 4 ரூபங்களை தரித்தார். அப்போது, பகவத் ஆணையின்படி ரமாதேவியும்கூட மாயா, ஜயா, க்ருதி, ஷாந்தி என்னும் 4ரூபங்களை தரித்து, பரமாத்மனின் அந்த நான்கு ரூபங்களுக்கு முறையே பத்னியானார். வாசுதேவ + மாயாவிடமிருந்து புருஷ என்னும் மகன் தோன்றினார். சங்கர்ஷண + ஜயாவிடமிருந்து ஸூத்ரன் (Soothra) என்னும் மகன் தோன்றினார். பிரத்யும்ன + க்ருதியிடம், ப்ரக்ருதி, ஸ்ரத்தா என்று இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். புருஷனுக்கு ப்ரக்ருதியும், ஸூத்ரனுக்கு ஸ்ரத்தாவும் மனைவியர் ஆயினர். இந்த புருஷனே பிரம்மதேவர். ப்ரக்ருதியே சரஸ்வதி. ‘ஸூத்ரம்ஸவாயு: புருஷோவிரிஞ்சி: ப்ரத்யும்னதஸ்சாத க்ருதௌ ஸ்த்ரியௌ த்வே’ என்னும் மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தின் 3ம் அத்தியாயத்தின் வாக்கியம் இதற்கு ஆதாரமாகின்றது. ஸூத்ர நாமகரான பிரம்ம வாயுகளிடமிருந்து ஸூக்‌ஷ்மத்தில் கருட, சேஷ, ருத்ராதிகள் பிறந்தனர். இவர்களைவிட பாரதிதேவி உத்தமர் என்று சொல்வதைப் போலாயிற்று.

கருடசேஷஷஷாங்கதள சேகரர ஜனக - என்னும் மூன்றாம் பத்யத்தில் பிரம்மதேவர் கருடாதிகளுக்கு தந்தை என்று சொல்கிறார். 24 தத்வாபிமானிகளில் ஒருவரான வாயுதேவரை குரு என்று இந்த பத்யத்தில் சொல்கிறார். 24 தத்வங்கள் என்னவெனில்: ப்ருத்வ்யாதி மஹாபூதங்கள் 5, ஷப்தாதி தன்மாத்ரங்களான குணங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, சித்த, புத்தி, மனஸ், அஹங்கார தத்வங்கள் என மொத்தம் 24 தத்வங்கள் உள்ளன. இதில் சித்த தத்வத்திற்கு அபிமானியானவர் வாயுதேவர். இவரே அனைவரைவிடவும் உத்தமர். இந்த விஷயத்தைப் பற்றி பாகவதத்தில் மற்றும் விஷ்ணு ரகசியத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது என்னவெனில்:

ஒரு சமயம், 24 தத்வாபிமானிகளும் (வாயுதேவரைத் தவிர) தமக்குள் தாமே உத்தமர் என்று சொல்லி சண்டை போடத் துவங்கினர். அப்போது பரமாத்மன், ’ஹே தேவதைகளே, ஏன் இப்படி சண்டை போடுகிறீர்கள்? உமக்குள் இருக்கும் சக்தியை வைத்து யார் உத்தமர் என்று பார்ப்போம். இங்கே விழுந்திருக்கும் மிகப்பெரிய சரீரமானது, உம்மில் யார் நுழைந்தால் உயிர்பெற்று எழுகிறதோ, மேலும் யார் வெளியேறுவதால் உயிரற்று விழுகிறதோ அவரே உத்தமர் என்று நிர்ணயிப்போம். இப்போது உங்கள் சக்தியைக் காட்டுங்கள்’ என்றார். அப்படியே ஒவ்வொருவராக 23 தத்வாபிமானி தேவதைகள் நுழைந்தாலும், அந்த தேகம் எழுந்திருக்கவில்லை. 

‘சித்தேனஹ்ருதயம் சைத்ய: க்‌ஷேத்ரக்ஞ: ப்ராவிஷத்யதா |
விராட்ததைவ புருஷ: ஸலிலாதுததிஷ்டத: ||’

என்று சித்தத்தின் அபிமானியான வாயுதேவர் அந்த உடலின் இதயத்தில் நுழைந்த உடனேயே அந்த உடல் எழுந்தது. அடுத்து அனைத்து தத்வாபிமானியும் வெளியேறியபிறகும் அந்த உடல் விழவில்லை. வாயுதேவர் வெளியேறிய உடனேயே அந்த உடல் கீழே விழுந்தது. அப்போது கண் முதலான தத்வாபிமானி தேவதைகள், நாங்கள் 23 தேவதைகள் இல்லையெனில், வாயுதேவர் மட்டும் உடலில் இருந்து என்ன செய்வார்? என்று கேட்டனர். அதற்கு வாயுதேவர், தான் மட்டும் அந்த உடலில் நுழைந்து, 23 தத்வாபிமானிகளின் வேலைகளையும் தான் ஒருவரே செய்து காட்டினார். அதைக் கண்ட பிற அனைத்து தத்வாபிமானி தேவதைகளும், வாயுதேவரிடம் மன்னிப்பு கேட்டு, அவரிடம் சரண் புகுந்தனர். 

இது பாகவதாதிகளில் மிகவும் விஸ்தாரமாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆதாரத்தின் பேரிலேயே, தாசராயர், வாயுதேவரை தத்வாபிமானி தேவதைகளின் குரு என்றிருக்கிறார். ‘நிஜபத்னி’ என்றதால், அவதார ரூப, மூல ரூபங்களிலும் கூட பாரதி தேவியரே வாயுதேவருக்கு மனைவியாகிறார் என்று அறியவேண்டும். இத்தகைய நற்குணங்களைக் கொண்ட பாரதியே! எங்களுக்கு ஹரி குருகளில் சத்பக்தியைக் கொடுத்து அருள்வாயாக என்று வேண்டுகிறார் தாசராயர். 

இப்படியாக தாசராயர் ‘நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ நரோத்தமம் | தேவீம் சரஸ்வதிம் வ்யாஸம்’ என்னும் வசனத்தின்படி, பாரதி தேவியின் வரை தாரதம்யத்தின்படி வரிசையாக வேண்டினார். அடுத்து, பரமாத்மனின் அவதார ரூபமான மற்றும் பாரதாதி கிரந்தங்களை இயற்றியவரான ஸ்ரீ பாதராயண (வேதவியாஸ) தேவரை குருவாக நினைத்து வணங்குகிறார். ஸ்ரீமன் நாராயணனே வேதவியாஸராக இருந்தாலும், கிரந்தத்திற்கு காரணமானவனும், சர்வோத்தமனும் ஆன ஸ்ரீமன் நாராயணனுக்கு முதலில் வணக்கம் செலுத்தினார். அதிகார பேதத்தினால், அதாவது ஒரு குருவைப் போன்றவரான ஸ்ரீவேதவியாஸருக்கு தற்போது நமஸ்காரம் செய்கிறார் என்று அறியவேண்டும். 

‘வியாஸோகஸ்சனருஷி:’ என்று சில தாமஸ புராணங்களின் ஆதாரத்தில், சிலர் வேதவியாசரை வெறும் ஒரு சாதாரண ரிஷி என்று சொல்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் அப்படி நினைத்தே, தமது தமஸ் சாதனையை செய்துகொள்ளட்டும் என்று தற்போது வேதவியாசரை வணங்குகிறார் என்று கருட புராணத்தில் ஸூதர் ஷௌனகாதிகளுக்கு சொல்லியிருக்கிறார். 

ஸூதரின் வாக்கு: 
த்த்ராபிகாரணம் வக்‌ஷ்யேஸாதரேண முனீஷ்வரா |
வ்யாஸஸ்து கஷ்சனரிஷி: புராணே தாமஸேஸ்ம்ருத: ||
இதி ஞானாவலம்பேன தைத்யாதைத்யானுகாஸ்ஸதா |
ப்ரவிஷேயு:ர்ஹ்யந்ததம இஹிஹ்யந்தெ நமஸ்க்ருதம் ||
இதஞ்ச பரமம்கோப்யம் ஹ்ருதிதார்யன் நஸம்ஷய: ||

என்னும் வாக்கியங்களே மேலே சொன்ன விஷயத்திற்கு ஆதாரம் என்று அறியவேண்டும். இந்த காரணத்தினாலேயே தற்போது தாசராயர், வேதவியாஸ தேவரை வணங்குகிறார். 

***