ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Showing posts with label கருணா சந்தி. Show all posts
Showing posts with label கருணா சந்தி. Show all posts

Sunday, March 8, 2020

#31 - கருணா சந்தி

#31 - கருணா சந்தி

ஸ்ரீமனோஹர ஷமலவர்ஜித1
கா1மித1ப்ரத3 கை1ரவத3
ஷ்யாம ஷபல ஷரண்ய ஷாஸ்வத1 ஷர்க1ராக்‌ஷசக2 |
ஸான்னுத1 சகலகு3ணக3
தா4ம த்ரிஜகன்னாதவிட்டல
நீ மஹியொளவதரிஸி சலஹித சகல சுஜனரன ||31

ஸ்ரீமனோஹர = லட்சுமிதேவியின் மனதை பரிகரிக்கும்
ஷமலவர்ஜித = தோஷங்கள் அற்றவனான
காமிதப்ரத = விருப்பங்களை நிறைவேற்றும்
கைரவதள ஷ்யாம = குவளை மலரின் இதழைப் போன்ற நீல நிறத்தைக் கொண்ட
ஷபலஷரண்ய = பிராமணாதி வர்ணத்தவர்க்கு அருள்பவனான
சாஸ்வத = நிரந்தரமானவனான
ஷர்கராக்‌ஷ சகா = தேவதைகளுக்கு நண்பனான
சாமசன்னுத = சாமவேதத்தால் வணங்கப்படுபவனான
சகலகுணகணதாம = அனைத்து நற்குணங்களால் நிறைந்தவனான
ஸ்ரீஜகன்னாதவிட்டல = என் பிம்பமூர்த்தியான ஸ்ரீஜகன்னாதவிட்டலன் என்னும் ஸ்ரீபரமாத்மன்
ஈ மஹியொளவதரிஸி = இந்த பூமியில் 10 ரூபங்களால் அவதரித்து
சகலசுஜனரன = அனைத்து யோக்யர்களை
சலஹித = அருளினான்.

எந்த ஸ்ரீபரமாத்மன் மத்ஸ்ய, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமன, ரேணுகா புத்ரனான பரசுராம, ராவணாதிகளைக் கொன்ற தசரதராமன், தேனுகாசுரர்களைக் கொன்ற பலராமனில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணன், புத்த, கல்கி ஆகிய அவதாரங்களால் சஜ்ஜனர்களுக்கு அருள்கிறானோ;

மேலும் எந்த பரமாத்மன் லட்சுமி மனோஹரமானவனோ, தோஷங்கள் அற்றவனோ, பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறானோ, குவளை மலரைப் போல நீலவர்ணம் கொண்டவனோ, பிராமணாதி வர்ணத்தவர்களால் வணங்கப்படுபவனோ, அனாதி நித்யனோ, தேவதைகளுக்கு நண்பனாக இருக்கிறானோ, சாமவேதத்தால் வணங்கப்படுகிறானோ, அனைத்து நற்குணங்களால் நிரம்பியவனோ, யார் இந்த பூமியில் அனேக ரூபங்களால் அவதரித்து சஜ்ஜனர்களுக்கு அருள்கிறானோ அவனே என் பிம்பமூர்த்தியான ஸ்ரீஜகன்னாதவிட்டலன் என்னும் ஸ்ரீபரமாத்மன் - என்னும் மங்கள ஸ்லோகங்களால் இந்த சந்தியை முடிக்கிறார் தாசராயர்.

தாசராயர் தசாவதாரங்களைப் பற்றி சொல்லும்போது, கிருஷ்ணாவதாரத்தைக் குறித்து ‘தேனுகாசுர மதன’ என்கிறார். தேனுகாசுரனை பலராமன் கொன்றான் என்று பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கிருஷ்ணாவதாரத்தைக் குறிக்கும் பூதனா, த்ருணாவர்த்த, கம்ஸ ஆகியோரைக் கொன்றவன் என்று சொல்லாமல், பலராமனைக் குறிப்பதான தேனுகாசுரனை சொல்லி, பலராமனை எடுத்து, ஸ்ரீகிருஷ்ணனை விட்டுவிட்டதாக தோன்றுகிறது. தசாவதாரத்தில் ராமானுஜ மதத்தவர்கள் - 

மத்ஸ்யகூர்ம வராஹஸ்ச நாரசிம்ஹஸ்ச வாமன: |
ராமோராமஸ்ச ராமஸ்ச கிருஷ்ண: கல்கீசதேதஷ: ||

என்று மத்ஸ்ய முதல் வாமன வரைக்குமான 5 அவதாரங்கள், பரசுராம, தசரதராம, பலராம, கிருஷ்ண, கல்கி என 5, மொத்தம் 10 அவதாரங்கள் என்று சொல்கின்றனர். ஸ்ரீமதாசார்யரின்படி பார்கவ, ராம, கிருஷ்ண, கல்கி என்று பலராமனை விட்டு புத்தாவதாரத்தை சேர்த்து மொத்தம் 10 அவதாரங்கள் என்று சொல்கிறார். ஆனால், தாசராயரோ இரண்டு மதங்களையும் விட்டு, பலராம, புத்த, கல்கி என்று சொல்லி முக்கியமான கிருஷ்ணாவதாரத்தையே விட்டுவிட்டார். இது ஸ்ரீமதாசார்யரின் மதத்திற்கு எதிராக இருக்கிறது மட்டுமல்லாமல், தாசகூட வியாஸகூடத்தவர்களின் வேறுபாட்டைக் காட்டுகிறது என்று அறியக்கூடாது. தாசராயர் வியாசகூடத்திற்கு எதிராக எப்போதும் ஒரு சொல்கூட சொல்லியவரல்ல என்று அறியவேண்டும். அப்படியிருக்கையில், இப்படி சொல்வதற்கு என்ன காரணம் என்றால்:

இந்த விஷயத்தில் சிறிது கவனத்துடன் படித்தால் உண்மை புலப்படும். பாகவத 1ம் ஸ்கந்தத்தில் - பரமாத்மனின் முக்கிய அவதாரங்களைப் பற்றி பேசும்போது - ‘

ஏகோனவிம்ஷே விம்ஷதமேவ்ருஷ்ணிஷு ப்ராப்யஜன்மனி |
ராமக்ருஷ்ணாவிதிபுவோ பகவானஹரத்பரம் ||

19 மற்றும் 20வது அவதாரங்களாக, பலராம மற்றும் கிருஷ்ண என்னும் ரூபங்களால், வ்ருஷ்ணி வம்சத்தில் அவதரித்து, பூமியின் பாரத்தைக் குறைத்தார் என்று சொல்கிறார். இந்த வாக்கியத்தால், ராமகிருஷ்ணாதி ரூபங்களைப் போல, பலராம அவதாரமும்கூட, பரமாத்மனின் அவதாரங்களில் 19 மற்றும் 20தாக சேர்த்துக் கொள்வதால், இவையும் பரமாத்மனின் அவதாரங்களே என்று எண்ணவேண்டும். இப்படியிருக்கையில், நிர்ணயத்தில் ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருக்கும் வாக்கியத்திற்கு இது எதிராக இருக்கிறது. நிர்ணயத்தில் - 2ம் அத்தியாயம், 25ம் ஸ்லோகம்) - பரமாத்மனின் மத்ஸ்ய, கூர்மாதி அவதாரங்களை சொல்லியவாறு, 28ம் ஸ்லோகத்தில், 

ததைவ படவாவக்த: கல்கி தன்வந்த்ரி ப்ரபு: |
இத்யாத்யாகேவலோ விஷ்ணுர்னிஷாம் பேத: கதஞ்சன || என்கிறார்.

இந்த ஸ்லோகத்தின் பொருள் என்னவெனில்: மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பார்க்கவராம, கிருஷ்ண, புத்த, வேதவியாஸ, கபில, தத்தாத்ரேய, ரிஷப, சிம்சுமார, ரிஷி புத்ரரான நர நாராயணர், ஹரி, தாபஸ என்னும் மனு, மஹிதாஸ, ஹம்ஸ, மோகினி, ஹயக்ரீவ, பெண் குதிரையின் ரூபம், கல்கி, தன்வந்த்ரி - இந்த அவதாரங்கள் எல்லாம் பரமாத்மனின் சாட்சாத் அவதாரங்களே. இந்த அவதாரங்களில் பரஸ்பரம் பேதங்களை சிந்திக்கக்கூடாது என்று சொல்லி, பிறகு:

கயஸ்சலக்‌ஷ்மி ணாத்யாஸ்சத்ரயோ ரோஹிணி நந்தன: |
ப்ரத்யும்னோ ரௌக்மிணேயஸ்ச தத்புத்ரஸ்சானிருத்தக: ||
நர:பல்குன இத்யாத்யாவிசேஷாவேஷினோஹரே: ||

என்று பரமாத்மனின் விசேஷாம்ச அவதாரங்களை சொல்கிறார். இதில் லட்சுமண, பரத, ஷத்ருக்ன, பலராம ஆகியோரும் பரமாத்மனின் விசேஷாம்ச அவதாரர்கள் என்று தெரிகிறது. பலராமன், பரமாத்மனின் சுக்லகேஷாவேஷத்தால் கூடிய சேஷதேவர் என்று பாகவத வாக்கியம் சொல்கிறது. இப்படியாக, ஒரு இடத்தில் பலராமனை பரமாத்மனின் சாட்சாத் அவதாரம் என்றும், இன்னொரு இடத்தில் விசேஷ அம்சம் என்றும் சொல்லியதுபோல தோன்றுகிறது. இந்த இரண்டு வாக்கியங்களையும் ஒரே வாக்கியமாக சேர்ப்பதற்காகவே தாசராயர் ‘தேனுகாசுர மதன’ என்று கூறுகிறார். இதன் பொருள் என்னவெனில்:

ப்ரலம்பாசுர, தேனுகாசுர ஆகியோரைக் கொன்றது வெறும் பலராமனின் செயல் அல்ல. சுக்லகேஷாவேஷத்தினால் பலராமனுக்குள் நிலைத்திருக்கும் பரமாத்மனே தேனுக முதலானவர்களைக் கொன்றான் என்று பாகவத தாத்பர்ய வாக்கியத்தால் அறிகிறோம். பலராமனுக்குள் இருந்த எந்த பரமாத்மன் தேனுகாசுரர்களைக் கொன்றானோ, அதே பரமாத்மன், ஸ்ரீகிருஷ்ண ரூபத்தினால் கம்சாதிகளைக் கொன்றான் என்று சொல்வதற்காக ‘தேனுகாசுரனைக் கொன்றவன் கிருஷ்ணனே’ என்று புரியவைப்பதற்காக, கிருஷ்ணாவதாரத்திற்கு, ‘தேனுகாசுரமதன’ என்கிறார். 

புத்தாவதாரத்தை சொல்லும்போது ‘த்ரிபுரர ஹானிகைஸித நிபுண’ என்று தாசராயர் சொல்கிறார். உலகத்தில் த்ரிபுராரி என்று ருத்ரருக்கே பெயர் உண்டு. ஹரிவம்ச, பாரதாதிகளிலும், ருத்ரரே த்ரிபுராசுரர்களைக் கொன்றிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியிருக்கையில், ’த்ரிபுரவ ஹானிகைஸித’ பௌத்தாவதாரியான பரமாத்மன் என்று ஏன் சொல்கிறார்? இதன் விளக்கம்: பிரம்ம, விஷ்ணு ஆகியோரின் உதவியினால், ருத்ரதேவர் த்ரிபுரத்தைக் கொன்றது உண்மையானாலும், இந்த தைத்யர்கள் அனைவரும் பூமியில் மறுபடி பிறந்தனர். அது எப்போது என்றால், பாண்டவரின் வம்சத்தவர், வியாசரின் அருளால் தர்மபரிபாலனை செய்து வந்தபோது, பூமியில் அனைவரும் நற்சாஸ்திரங்களைப் படித்து வாழ்ந்து வந்தபோது, தைத்யர்கள் பூமியில் பிறந்து, ரிஷிகளுக்குத் தெரியாதவாறு அவர்களின் நடுவில் இருந்து, ஞானத்தை சம்பாதித்துக்கொண்டு, சத்சம்பிரதாயங்களை பின்பற்றத் துவங்கினர். 

வேதவியாச தேவருக்குப் பிறகும் நற்கல்வியினால் கெட்ட ஆகமங்கள் அனைத்தும் அழிந்துபோனதால், தைத்யர்கள்கூட நல்ல ஆகமங்களையே பின்பற்றத் துவங்கினர். அவிர்பாகமானது ஒரு நாய்க்கு எப்படி யோக்யதை இல்லையோ, அதைப்போலவே, தமஸ்ஸில் அபார துக்கங்களை அனுபவிக்க தகுதியானவர்களான தைத்யர்களுக்கு, சரியான சாதனைகளை செய்வித்து, அவரவர்களுக்கு சரியான கதியை கொடுக்கவேண்டுமென்று பரமாத்மனை தேவதைகள் வேண்டிக்கொண்டனர். பரமாத்மன் தேவதைகளுக்கு அபயம் அளித்து, ஒரு அழகான குழந்தையின் ரூபத்தை எடுத்தார். 

அந்த சமயத்தில் பூமியில் ஒரு அசுரனிடம் ஒரு அசுரன் சுத்தோதனன் என்னும் பெயரில் பிறந்தான். அவன் த்ரிபுராசுரர்களின் மூலபுருஷன். அதாவது பூமியில் அவர்கள் அனைவருக்கும் முன்னாடியே பிறந்தவன். அவனுக்கு ஜித என்றும் ஒரு பெயர் இருக்கிறது. இவனுக்கு கயெ என்னும் மனைவியிடம் ஒரு குழந்தை பிறந்தது. (அல்லது கயா க்‌ஷேத்திரல் பிறந்தது என்றும் அர்த்தம் கொள்ளலாம்). பரமாத்மன் அந்த சிசுவை விலக்கி, அந்த இடத்தில் தான் படுத்துக் கொண்டான். இதனை சுத்தோதனன் அறியாமல், அக்குழந்தையை தனது என்றே பாவித்தான். அந்த சமயத்தில், அந்த தைத்யர்கள் வைதிக கர்மங்களை பின்பற்றி வந்தனர். அதைக்கண்ட அக்குழந்தை சிரிக்க, அப்போதே பிறந்த குழந்தை சிரிப்பதைக் கண்டு, அதற்கான காரணத்தை கேட்டனர். 

அதற்கு அக்குழந்தை, நான் உங்களுக்கு தக்க ஞானோபதேசத்தை செய்வேன் ஆகையால், எனக்கு புத்தன் என்று பெயர். நீங்கள் பயத்துடன் செய்யும் வைதிக கர்மங்களைப் பார்த்து எனக்கு சிரிப்பு வருகிறது. இந்த கர்மங்கள் என்றும் சுகங்களை அளிப்பவையல்ல. என் உபதேசத்தின்படி நீங்கள் நடந்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும் என்று சொல்லி, சாஸ்திரத்திற்கு எதிரான சூன்ய மதத்தைப் போதித்தான். அதனை தைத்யர்கள் நம்பவில்லை. அப்போது, பகவத் ஆணையின்படி ருத்ராதி தேவதைகள் அனைவரும் அங்கு வந்து, தைத்யர்களுக்கு புத்தனின் வாக்கியத்தில் நம்பிக்கை வருவதற்காக, தத்தம் ஆயுதங்களை அக்குழந்தையின் மேல் பிரயோகிக்க, அனைத்தையும் அக்குழந்தை விழுங்கிவிட்டது. ஸ்ரீவிஷ்ணு தன் சக்கரத்தை பிரயோகிக்க, அதனைப் பிடித்து அக்குழந்தை தன் ஆசனமாக ஆக்கி, அதன்மேல் அமர்ந்துவிட்டது. 

அப்போது தேவதைகள் அனைவரும் அக்குழந்தையை வணங்கி, அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது அங்கிருந்த தைத்யர்கள் அனைவரும் புத்த மதத்தை அங்கீகரித்து, பரமாத்மனின் மாயையில் மயங்கி, சத்தர்மங்களை விட்டு, சூன்யவாதிகளாகி தமஸ்ஸை அடைந்தனர். இதற்கு ஆதாரம் நிர்ணய வாக்கியம் 32ம் அத்தியாயத்தில் ‘தக்தா: புராயே த்ரிபுரங்கத்யைவ ருத்ரேண ஜாதா: ப்ருதிவீதலேதே’ என்னும் 140 ஸ்லோகத்திலிருந்து 152 ஸ்லோகம் வரை இதே அர்த்தத்தையே சொல்லியிருக்கிறார். அதன் 148ம் ஸ்லோகத்தில் 

யஸ்த்ரை புராணம் ப்ரதமோத்ர ஜாத: ஷுத்தோதனேத்யேவ ஜினேதி ஜோக்த: |
க்‌ஷேத்ரே கயாக்யேஸ்ய ஷிசும் ப்ரஜாதம் சம்ப்ராஸ்யதூரேத்ர பபூவ விஷ்ணு: ||

என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி பௌத்த அவதாரத்தினால், த்ரிபுராசுரனை நாசம் செய்திருப்பதால் ‘த்ரிபுரவ ஹானி கைஸித’ என்று எழுதுவதற்கு ஆதாரம் கிடைத்தது. இதைத்தவிர, த்ரிபுராசுரர்களின் மனைவியர் தன் பதிவிரதத்தைப் பாதுகாத்து, பார்வதியை பூஜித்து, தமக்கு தீர்க்க சௌமங்கல்யத்தை தருமாறு வேண்ட, பார்வதியும், உங்களின் பதிவிரதத்திற்கு பிரச்னை வரும்வரை உங்கள் சௌமாங்கல்யத்திற்கு பிரச்னை இல்லை. விரதம் பங்கமானால், உங்களுக்கு விதவை நிலை வந்துவிடும் என்று வரமளித்தார். இந்த வரத்தினால், த்ரிபுராசுரர்கள் அழிக்கப்படமுடியாமல் இருந்தனர். ஸ்ரீபரமாத்மன் பௌத்த ரூபத்தினால் அந்தப் பெண்களை மோகித்து அவர்களின் விரதங்களை பங்கம் செய்தார். ஆகையால், த்ரிபுரவாசிகளான அசுரர்கள், நாசமடைந்தனர் என்று ஒரு கதையும் இருக்கிறது. 

இதற்கு கனகதாசர் தனது ஒரு கீர்த்தனையில் பரமாத்மனின் பத்து அவதாரங்களை, மூன்று சரணங்களில் பாடியிருக்கிறார். அதில் பௌத்தாவதாரத்தை துதித்திருக்கும் விதம் இப்படியாக இருக்கிறது. 

ராகம்: ஆனந்தபைரவி. தாளம்: ரூபகம்

சித்தஜ கோடி லாவண்ய முப்புரத 
உத்தம ஸ்த்ரியர வ்ரதவளிதெ
மத்தெ கல்கியாகி மதுபர கெடஹீத 
ஹத்தாவதாரத ஹரியெம்பெனல்லதெ |

பத்தலெ நிந்தவனெந்தெனெ தேஜியனேரி வத்திஹாரிதனெந்தெனெ
பாரி பாரிகெ சத்துஹுட்டிதவனெந்தனெ ஆதிகேசவ |
பக்தவத்ஸலனெந்து பொகளுவெனல்லதெ நின்ன 
நானேனெந்தெனோ ரங்கய்யா ரங்க நின்ன |

என்று சொல்லியிருக்கிறார். இதில் ‘முப்புரத உத்தம ஸ்த்ரீயர வ்ரதவளிதெ’ என்னும் வாக்கியம், மேற்சொன்ன கதைக்கு பொருந்துகிறது. இந்த காரணத்தினாலும், பௌத்தாவதாரத்தினால் த்ரிபுராசுரனை நாசம் செய்தான் என்று சொல்லமுடியும். 
‘கலிமுக தானவர சம்ஹரிஸி தர்மதி காய்த சுஜனரன’ இது கல்கி அவதாரத்தைக் குறிக்கிறது. பாகவத 12ம் ஸ்கந்தம் 3ம் அத்தியாயத்தில் :

இத்தம் கலௌ கதே ப்ராயே ஜனேஷு பரதர்ம ஸு |
தர்மத்ராணாய சத்வேன பகவானவதரிஷ்யதி ||
ஷம்பலாக்ராம முக்யஸ்ய ப்ராஹ்மணஸ்ய மஹாத்மன: |
பவனே விஷ்ணுயஷஸ: கல்கி: ப்ராதுர்பவிஷ்யதி ||
அஷ்வமாஷுகமாருஹ்ய தேவதத்தம் ஜகத்பதி: |
அஸினாஸாதுதமன மஷ்ட்யைஷ்வர்ய குணான்வித: ||
விசரன்னஸிர்மாக்‌ஷோண்யாம் ஹயேனாப்ரதிமத்யதி: |
ந்ருப லிங்கச்சதோதஸ்யோன் கோடிஷோ நிஹனிஷ்யதி ||

இப்படி பாவிகளால் நிறைந்த கலியுகம் முடியும்போது, மக்கள் அனைவரும் ம்லேச்சாசாரிகளாக இருப்பதை அறிந்து ஸ்ரீபரமாத்மன் தர்மத்தை காப்பதற்காக பூமியில் அவதரித்தான். ஷம்பல என்னும் கிராமத்தில், முக்யஸ்தனாக இருக்கும் விஷ்ணுயஷஸ் என்னும் பிராமணனின் வீட்டில் கல்கி என்னும் பெயரில் பரமாத்மன் அவதரித்து, அதிவேகமாக ஓடும் ‘தேவதத்த’ என்னும் குதிரைமேல் அமர்ந்து அஷ்ட ஐஸ்வர்யத்தால் நிறைந்து, வாளினை ஏந்தி பூமண்டலத்தில் சுற்றியவாறு, அரசனைப் போல வேடமணிந்த திருடர்களை கொல்வான். அப்போது கிருதயுகம் பிறக்கும். தொடர்ந்து நான்கு பாத தர்மத்தையும் நிர்ணயிப்பான் என்று சொல்லியிருக்கிறார். 

தாசராயரின் ‘கலிமுகதானவர சம்ஹரிஸி’ என்னும் வாக்கியத்தை பார்த்தால், கலி முதலான தைத்யர்களை கொன்றவன் என்ற அர்த்தம் வருகிறது. மேற்சொன்ன பாகவத வாக்கியத்தில் அரசர்களைப் போல வேடமணிந்த திருடர்கள் என்று அர்த்தம் வருகிறது. இந்த இரண்டையும் பொருத்திப் பார்த்தால், ‘கலிமுக’ என்றால், கலியை பார்த்திருப்பவன் என்று பொருள் வருகிறது. அதாவது, கலியுகத்தின் பலனாக அசுர ஆவேசத்தினால், பூமியில் பிறந்து, பாவங்களை செய்து, அரசன் என்று பெயர் பெற்ற திருடர்களைக் கொல்வேன் என்று பொருள். 

‘ஷர்க்கராக்‌ஷ சக’ என்றால் சூக்‌ஷத்ரிஷ்டி உள்ளவர்கள் அதாவது தேவதைகள் என்று பொருள். கீதா தாத்பர்யத்தில் இதற்கான விளக்கம் இருக்கிறது. 

அனைத்து வேதங்களும் பரமாத்மனையே துதித்திருந்தாலும் ‘ஸாமசன்னுத’ சாம வேதத்தினால் வணங்கப்படுபவன் என்று எதற்கு சொன்னான் என்றால், தேவதைகள் அனைவரும் தன்னை கொண்டாடினாலும் கானரூபமான சாமவேதத்தில், பகவன் மகிமை மிகவும் விசேஷமாக சொல்லப்பட்டிருப்பதால், சாமகான ப்ரியன் என்று பரமாத்மனுக்கு பெயர் வந்திருக்கிறது. மேலும், கீதையில் ‘வேதானாம் சாமவேதோஸ்மி’ - வேதங்களில் என் விபூதி ரூபத்தை சாம வேதத்தில் அறிவாயாக - என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். 

***


Saturday, March 7, 2020

#30 - கருணா சந்தி

#30 - கருணா சந்தி

மீனகூர்ம வராஹ நரப
ஞ்சானனாது1லஷௌர்ய வாமன
ரேணுகா1த்மஜ ராவணாரி நிஷாசரத்வம்ஸி |
தே4னுகா1சுர மத2ன த்ரிபு1ரவ
ஹானிகை3சித3 நிபுண க1லிமுக2
தா3னவர சம்ஹரிஸி த4ர்மதி3 கா1ய்த3 சுஜனரனு ||30

மீன = மத்ஸ்யாவதாரம்
கூர்ம = கூர்ம அவதாரம்
வராஹ = வராக அவதாரம்
அதுள ஷௌர்ய = அளவிடமுடியாத பராக்ரமசாலியான
நரபஞ்சானன = நரசிம்ம அவதாரம் (பஞ்சானன = விஸ்தாரமான முகத்தைக் கொண்ட)
வாமன = வாமன அவதாரம்
ரேணுகாத்மஜ = ரேணுகாவின் மகனான அவதரித்த பரசுராம அவதாரம்
ராவணாதி நிஷாசரத்வம்ஸி = ராவணாதி அசுரர்களைக் கொன்ற ராமாவதாரம்
தேனுகாசுர மதன = தேனுகாசுரனைக் கொன்ற பலராமனில் நிலைத்திருந்த ஸ்ரீகிருஷ்ண அவதாரம்
த்ரிபுரவ ஹானிகைஸித நிபுண = தந்திரத்தால் த்ரிபுராசுரர்களின் மனைவிகளின் விரதத்தை பங்கம் செய்து, அவர்களுக்கு நஷ்டம் விளைவித்த பௌத்தாவதாரம்
கலிமுகதானவர = கலியுகத்தில் கீழ்த்தரமாக கலியைப் பின்பற்றிய அசுராவேசத்தைக் கொண்ட அயோக்யர்களான அரசர்களைக் கொன்று
தர்மதி = தர்மத்தினால்
சுஜனரன = பக்தர்களுக்கு
காய்த = அருளிய கல்கி அவதாரம்

(இப்படி பத்து அவதாரங்களை எடுத்த மகிமை கொண்ட ஸ்ரீஹரியை வணங்குகின்றேன்).

***



Friday, March 6, 2020

#29 - கருணா சந்தி

#29 - கருணா சந்தி

கே23 மோத3 ஜயாப1ஜய மொத3
லாத தோ3ஷக3ளில்ல சின்மய
சாத3ரதி3 தன்னங்க்4ரி க1மலவ நம்பி ஸ்து1தி1சுவர |
கா1து3கொ1ண்டிஹ பரமக1ருண ம
ஹோத3தி4யு த1ன்னவரு மாட்த3
ராத33ள நோட33லெ சலஹுவ சர்வகா1மத3னு ||29

கேத = (ஸ்ரீபரமாத்மனுக்கு) அழிவில்லை
மோத = மகிழ்ச்சித்தன்மை
ஜயாபஜய = வெற்றி, தோல்வி
மொதலாத = ஆகிய
தோஷகளில்ல = தோஷங்கள் இல்லை
சின்மய = சித்-ஸ்வரூபம்
சாதரதி = பக்தியுடன்
தன்னங்க்ரி கமலவ = தன் பாதாரவிந்தங்களை
நம்பி துதிசுவர = நம்பி வணங்குபவர்களுக்கு
காதுகொண்டிஹ = எப்போதும் காத்துக்கொண்டிருப்பான்
பரம கருண மஹோததியு = அத்யந்த கருணைக்கடலான
சர்வகாமதனு = அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் ஸ்ரீபரமாத்மன்
தன்னவரு = தன் பக்தர்கள்
மாடிதபராதகள = செய்த தவறுகளை
நோடதலெ = எண்ணிப் பார்க்காமல்
சலஹுவ = காப்பாற்றுவான்.

பொருள்:
சிதானந்த ஸ்வரூபனான ஸ்ரீபரமாத்மனுக்கு, ஏதோ ஒரு பதார்த்தம் கிடைத்தால் மகிழ்ச்சியோ, அது தொலைந்து போனால் துக்கமோ, வெற்றி, தோல்வி இவைகளால் கிடைக்கும் சுக துக்கங்கள் எதுவும் கிடையாது. தன் பாத கமலங்களை நம்பி துதிப்பவர்களைக் காப்பாற்றுவதற்காக எப்போதும் அவர் அருகிலேயே காத்துக் கொண்டிருக்கிறான். பரம கருணைக்கடலும், அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவனான ஸ்ரீபரமாத்மன், தன் பக்தர்கள் செய்யும் தவறுகளை கவனிக்காமல், அவர்களுக்கு அருள்வான். 

சிறப்புப் பொருள்:
கேத மோத ஜயாபஜெய மொதலாத தோஷகளில்ல - என்று தாசராயர் சொல்லியிருக்கிறார். ஆனால், பரமாத்மனின் அவதார ரூபங்களில் சுக துக்கங்கள், மகிழ்ச்சி சோகங்கள் ஆகியவை இருப்பது போன்று, பாகவத, ராமாயண காவியங்களைப் படித்தால் நமக்குத் தோன்றும். அதாவது: ராமாயணத்தில் ராவணன் சீதையை அபகரித்துச் சென்றபிறகு, சீதையைப் பிரிந்த சோகத்தில் ஸ்ரீராமன் புலம்பியதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இவை அஞ்ஞானிகளை மயக்குவதற்காக செய்யப்பட்ட நாடகமே தவிர, உண்மை அல்ல. இந்த விஷயத்தில் நிர்ணய முதலாம் அத்யாயத்தில்:

அவதாரேஷு யத்கிஞ்சித் தர்ஷயென்னரவத்தரி: |
தச்சாஸுராணாம் மோஹாய தோஷாவிஷ்ணோர் நஹிக்விசித் ||36
அஞ்ஞத்வம் பாரவச்யம் வாவேத பேதாதிகம்ததா |
ததாப்ராக்ருத தேஹத்வம் தேஹத்வாகாதிகம் ததா ||38
அனீஷத்வம் சது:கித்வம் சாம்யமன்யைஸ்ச ஹீனதாம் |
ப்ரதர்ஷயதி மோஹாய தைத்யாதீனாம் ஹரி:ஸ்வயம் ||39
சதஸ்ய கஸ்சித்தோஷோஸ்தி பூர்ணாகிள குணோஹ்யஸௌ ||

ஸ்ரீபரமாத்மன் தன் அவதார ரூபங்களில், மனிதர்களைப் போலவே இருக்கிறான். அவை வெறும் அசுர ஜனர்களின் மோஹனத்திற்காகவே - மனிதர்களைப் போல சுக துக்கங்கள் அவனுக்குக் கிடையாது. சில சமயங்களில் எதுவும் தெரியாததைப் போல அவனும் மற்றவர்களுடன் சேர்ந்து யோசிப்பான். இது எப்போது என்றால், பாகவத 10ம் ஸ்கந்தத்தில்: சுதர்மனின் சபையில் உத்தவாதி மந்திரிகளுடன் ஸ்ரீகிருஷ்ணன் சபையில் அமர்ந்திருந்தபோது, இதற்குமுன் சந்தித்திராத ஒரு மனிதர், ஸ்ரீகிருஷ்ணனின் ஆணையின் பேரில் சபையில் நுழைந்து, ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்து - ‘தேவா! பாவியான ஜராசந்தன் 20,800 அரசர்களை கைது செய்து அவர்களை கிரிவ்ரஜ என்னும் பட்டணத்தில் வைத்திருக்கிறான். இவர்கள் அனைவரையும் ஈஸ்வரனுக்கு பலி கொடுக்க திட்டமிட்டிருக்கிறான். அந்த அரசர்கள் உன்னிடம் முறையிடுகின்றனர். நீயே ஜராசந்தனைக் கொன்று, அந்த அரசர்களை விடுவிக்க வேண்டும்’ என்று வேண்டினார். 

ராஜதூதனான அந்த பிராமணன் இப்படி சொல்லிக் கொண்டிருக்கையில், நாரதர் அங்கு வந்து கிருஷ்ணனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார். ‘கிருஷ்ணா! உன் அத்தை மகனான தர்மராஜன் ராஜசுய யாகம் செய்யத் திட்டமிட்டிருக்கிறான். நீ இல்லாமல் அந்த வேலை முடிவதில்லை. நீ இந்திரபிரஸ்தத்திற்கு சென்று அந்த வேலை செய்து முடிக்கவேண்டும். அந்த தர்மராஜனுக்கு தூதனாகவே நான் இங்கு வந்திருக்கிறேன்’ என்றார். 

இப்படி ஒரே நேரத்தில் இரண்டு பேர் இரு வேலைகளுக்காக வேண்டுகையில், ஸ்ரீகிருஷ்ணன் அந்த இரண்டில் எதை முதலில் செய்யவேண்டும் என்று புரியாமல் சிந்திக்கும்போது, சபையினரிடமும், ஸ்ரீகிருஷ்ணனிடம் உத்தரவு பெற்று, உத்தவன் சொல்வது : ‘சபையினரே, தர்மராஜன் செய்யத் தீர்மானித்திருக்கும் ராஜசுய யாகம் முடியவேண்டுமெனில் ஜராசந்தனின் வதம் ஆகவேண்டியிருக்கிறது. ராஜர்களை விடுவிக்க வேண்டும் என்றாலும் அதே காரியம் ஆகவேண்டும். இப்படி ஜராசந்தனின் வதம் இரு வேலைகளுக்கும் தேவையே ஆகியிருக்கிறது. அதற்காக, நாம் இப்போது இந்திரபிரஸ்தத்திற்குச் சென்று ராஜசுய யாகத்திற்காக, பீமசேனன் மூலமாக ஜராசந்தனைக் கொல்வதற்கு ஆக வேண்டிய காரியங்களைப் பார்ப்போம்’ என்றார். அனைவரும் இதனை ஒப்புக்கொண்டு அதைப் போலவே செய்வோம் என்றனர்.

ராமாயண காலத்தில் ஸ்ரீராமன், தெற்கு கடற்கரையில் தர்ப்பசயனத்தில் இருந்தபோது, விபீஷணன் ஸ்ரீராமனிடம் சரணாகதி அடைவதற்கு வர, ஸ்ரீராமனோ இவரை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று சுக்ரீவர்களுடன் ஆலோசனை செய்தான். அவர்களோ கூடாது என்றபிறகு, ஸ்ரீஹனுமந்தன் மட்டும் விபீஷணனை ஏற்றுக்கொள்வதே நியாயம் என்றான். ஸ்ரீராமனும், நான் சரணாகதி அடைந்தவர்களை என்றும் விடுவதில்லை என்று சொல்லி, விபீஷணனுக்கு அபயம் அளித்ததாக ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

இப்படி அங்கங்கு பரமாத்மன் அஞ்ஞானத்தை காட்டியிருக்கிறான். இவை அனைத்தும் அசுரர்களின் மோகனத்திற்காகவே (அவர்களை மயக்குவதற்காகவே) என்று நினைக்க வேண்டும். சில நேரங்களில் தான் பராதீனனாக இருப்பதாக காட்டிக் கொள்கிறான். அது எப்போது என்றால், சுபத்திரையின் திருமண சந்தர்ப்பத்தில், அவளை அர்ஜுனனுக்குக் கொடுப்பதற்கு பலராமனுக்கு இஷ்டம் இல்லாதபோது, தான் உலக மக்களைப் போல அவதாரம் எடுத்திருப்பதால், அண்ணனின் பேச்சை மீறமுடியாதவாறு இருந்து, அர்ஜுனனை யதி வேடம் தரித்து வருமாறு சொல்லி, பலராமாதி யாதவர்கள் அனைவரும் ரைவத பர்வதத்திற்கு சென்றிருக்கும்போது, இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்வித்து, இந்திரபிரஸ்தத்திற்கு அனுப்பி, தான் எதுவும் அறியாதவனைப் போல இருந்தான். 

இது மட்டுமல்லாமல், வசுதேவ, தேவகி, நந்தகோப, யசோதை, சாந்திபனி ஆகியோரின் வசத்தில் தான் இருப்பதாக காட்டினான். பீஷ்மாசார்யர் பாணம் விட்டபோது, தன் தேகத்தில் அந்த அம்பு பட்டு ரத்தம் வந்ததாக காட்டிக் கொண்டான். நரகாசுரனுடன் சண்டை போட்டபோது, அவன் விட்ட ஆயுதத்தினால் தான் மூர்ச்சையானது போல காட்டி, சத்யபாமாவினால் காப்பாற்றப்பட்டான். தன் தேகத்தை ப்ராக்ருத சரீரம் என்பதுபோல காட்டிக்கொண்டான். ராமாயணத்தில் ராவணனின் சம்ஹாரம் ஆனபிறகு, சீதையின் அக்னிப்பிரவேச காலத்தில், ஸ்ரீராமனை பிரம்மாதிகள் ஸ்தோத்திரம் செய்திருந்தபோது, ஸ்ரீராமன் தான் யார் என்றே தெரியாதவனைப்போல ‘ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தஷரதாத்மஜம்’ - நான் தசரத ராஜன் என்னும் அரசனின் மகனான மனுஷ்யன் என்கிறான். அப்போது பிரம்மதேவர் - ’அப்படியல்ல. நீ ஸ்ரீமன் நாராயணன். சீதை ஸ்ரீமகாலட்சுமி. நாங்கள் அனைவரும் உன்னை வேண்டியதால், ராவணாதிகளைக் கொல்வதற்காக நீ அவதரித்திருக்கிறாய்’ என்றார். 

கிருஷ்ணாவதாரத்தில் தன் தேகத்தை விட்டுப் போவதாக பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பாண்டவர்களின் வனபிரவேச காலத்திலும், சத்யபாமாவின் தந்தையை ஷததன்யன் கொன்றான் என்று கேள்விப்பட்ட சமயத்திலும், ராமாவதாரத்தில் சீதையைப் பிரிந்திருந்த காலத்திலும், அதிக துக்கமுள்ளவனான காட்டிக்கொண்டான். மேலும் ராம கிருஷ்ணாவதார காலத்தில் தசரத வசிஷ்டாதிகள், நந்தகோப, வசுதேவ, பலராம, தர்மராஜ, குந்தி ஆகியோருக்கு தான் நமஸ்கரித்து, அவர்களைவிட தான் சிறியவன் என்று காட்டிக்கொண்டான். இவை அனைத்தையும் அசுர மோகனத்திற்காகவே பரமாத்மன் செய்தான் என்று அறியவேண்டுமே தவிர, பூர்ண குணமுள்ள பரமாத்மனுக்கு எவ்வித தோஷங்களும் இல்லை என்று நிர்ணயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் ‘கேத மோத ஜயாபஜய மொதலாத தோஷகளில்ல’ என்று தாசராயர் சொல்கிறார். 


சாதரதி தன்னங்க்ரி கமலவ நம்பி துதிசுவர காதுகொண்டிஹ - பலிசக்ரவர்த்தி தன்னை முழுவதுமாக நம்பியிருக்கையில், வாமனாவதாரம் எடுத்து அவனை பூமிதானம் கேட்டு, அதன்மூலம் அனைத்தையும் வாங்கி, அவனை சுதல லோகத்திற்கு தள்ளி, அடுத்த மன்வந்தரத்தில் அவனுக்கு இந்திர பதவியைக் கொடுப்பதாக வாக்கு கொடுத்து, அதுவரைக்கும் அவனின் வீட்டு வாயிலை தான் காத்து வருவதாக சொல்லி, இப்போதும் வாமன ரூபத்தில் அப்படியே இருப்பதாக பாகவதம் சொல்கிறது. ஆகையால் தாசராயர் ‘பரமகருண மஹோததி’ என்கிறார். ‘தன்னவர மாடிதபராதகள நோடதலெ சலஹுவ’ என்னும் விஷயத்தில், பீஷ்மாதிகளின் உதாரணத்தைக் காட்டி ஏற்கனவே விளக்கியிருக்கிறோம். மேலும், பலிசக்ரவர்த்தி தானம் கொடுக்க முயன்றபோது, சுக்ராசார்யர் அவனை தடுத்தார். அதனையும் மீறி அவன் வாமனுக்கு தானம் கொடுத்ததால், அவனுக்கு அவர் சாபம் கொடுத்தார். ஆனாலும், ஸ்ரீபரமாத்மன் அவர் செய்த தவறுகளை மன்னித்து, அவருக்கு அருளினான். 

***


Thursday, March 5, 2020

#28 - கருணா சந்தி

#28 - கருணா சந்தி

கொ1ட்டுத3னு கைகொம்ப3க்‌ஷண
பி3ட்ட13ல த1ன்னவர து3ரித13
ளட்டுவனு தூ3ரத3லி து3ரிதா1ரண்ய பா1வக1னு |
பெ3ட்ட பெ3ன்னிலி ஹொரிசித3வரொளு
சிட்டு மாடித3னேனு ஹரி க
ங்கெ1ட்ட சுரரிகெ3 சுதெ3யனுணிசித1 முரித3னஹித1ரனு ||28


துரிதாரண்ய பாவகனு = பாவங்கள் என்னும் காட்டிற்கு நெருப்பைப் போல இருக்கும் ஸ்ரீபரமாத்மன்
கொட்டுதனு = பக்தர்கள் கொடுப்பதை
கைகொம்ப = பெற்றுக் கொள்வான்
அரக்‌ஷணபிட்டகல = பக்தர்களை அரை நொடியும் விட்டு விலக மாட்டான்
தன்னவர = தன் பக்தர்களை
துரிதகள = பாவங்களை (கஷ்டங்களை)
தூரதலி = வெகு தூரத்திற்கு
அட்டுவனு = ஓட்டுவான்
ஹரி = ஸ்ரீஹரி
பெட்ட = மந்த்ர பர்வதத்தை
பென்னலி = முதுகின் மேல்
ஹொரஸிதவரொளு = ஏற்றிய தேவதைகள் மேல்
சிட்டு மாடிதனேனு = கோபம் கொண்டானா? (இல்லை)
கங்கெட்ட சுரரிகெ = தன்னிலிருந்து வேறுபட்டிருக்கும் தேவதைகளுக்கு
சுதெய = அமிர்தத்தை
உணிஸித = குடிக்க வைத்தான்
அஹிதரன = அவர்களின் எதிரிகளான தைத்யர்களை
முரிதனு = சம்ஹரித்தான் (கொன்றான்)

பொருள்:
தன் பக்தர்கள் கொடுக்கும் சிறியதான பத்ர, புஷ்பங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறான். அரை நொடிகூட அவர்களை விட்டு இருப்பதில்லை. பக்தர்களின் பாவங்கள் என்னும் காட்டினை சுடும் விஷயத்தில் நெருப்பைப்போல இருக்கும் ஸ்ரீபரமாத்மன், அவற்றை தூர ஓட்டுகிறான். பாற்கடலை கடையும் நேரத்தில் மந்தர மலையை தன் முதுகின் மேல் ஏற்றி வைத்த தேவதைகள் மேல் கோபம் கொண்டானா பரமாத்மன்? (இல்லை). அதே தேவதைகளுக்கு அந்த அமிர்தத்தை பகிர்ந்தளிக்கவும் செய்தான். அவர்களின் எதிரிகளான தைத்யர்களைக் கொன்றான்.

சிறப்புப் பொருள்:
’கொட்டதனு கைகொம்ப’ - குசேலன் கொடுத்த ஒரு பிடி அவலைப் பெற்றுக்கொண்டான். கஜேந்திரன் கொடுத்த ஒரு தாமரை மலரைப் பெற்றான். இப்படி பரமாத்மன், தன் பக்தர்கள் கொடுக்கும் சிறிய அளவிலான பொருட்களையே பெரியதாக நினைத்து அன்புடன் அவற்றை ஏற்றுக்கொள்கிறான். நம்பியவர்களின் கஷ்டங்களை பரிகரிக்கிறான். 

ஒருமுறை தேவதைகள், துர்வாசரின் சாபத்தின் பலனாக, ராஜ்யத்தை இழந்து, பரமாத்மனிடம் தஞ்சம் புகுந்தனர். ஸ்ரீபரமாத்மன், தேவ-தைத்யர்களை பாற்கடலைக் கடையுமாறும், அமிர்தத்தை எடுக்குமாறும் சொல்ல, மத்தாக இருந்த மந்தரமலை பாரமாக இருந்த காரணத்தால் நீரில் மூழ்கத் தொடங்கியது. தேவதைகளும் பரமாத்மனிடம் அந்த மலையை மேலே தூக்கிக் கொடுக்குமாறு வேண்ட, அவர்களின் ஆசையை நிறைவேற்ற பரமாத்மன் கூர்ம ரூபத்தினால் அந்த மலையைத் தாங்கிப் பிடித்தான். இப்படி மலையை தன் மேல் வைக்கக் காரணமாக இருந்த தேவதைகளை மன்னித்து, அந்த அமிர்தத்தை அவர்களுக்கே பகிர்ந்தளித்தான் பரமாத்மன். 

இதையே தாசராயர் பெட்ட பென்னலி’ என்னும் வாக்கியத்தால் சொல்லியிருக்கிறார். அதே பாற்கடலைக் கடையும் சந்தர்ப்பத்தில் தேவதைகளை ஏமாற்ற எண்ணிய தைத்யர்களை ஏமாற்றி போரில் அவர்களைக் கொன்றார். அதையே தாசராயர் ‘முரிதனஹிதரன’ என்றார். 

***


Wednesday, March 4, 2020

#27 - கருணா சந்தி

#27 - கருணா சந்தி

1ண்ணிகெ3வெயந்த33லி கை1 மை
தி1ண்ணிகொ3தகு3வ தெ1ரதி11ல்க3ளு
1ண்ணு ப4லகளனகிது ஜிஹ்வெகெ3 ரசவனீவந்தெ1 |
பு1ண்ய ப4லவீவந்த33லி நுடி3
வெண்ணி நாண்மாண்ட3தொ3ளு லக்‌ஷமண
நண்ணனொத3கு3வ ப4க்தரவசன கமரக3ணசஹித ||27

கண்ணிகெவெயந்ததலி = கண்ணிற்கு இரப்பைகள் உதவி செய்வதைப் போல
கை = கைகள்
மைதிண்ணிகெ = உடம்பில் அரிப்பு ஏற்படும்போது
ஒதகுவந்ததி = உதவி செய்வதைப் போல
பல்களு = பற்கள்
பண்ணு பலகளனகிது = பழம், கரும்பு ஆகியவற்றைக் கடித்து
ஜிஹ்வெகெ = நாக்கிற்கு
ரசவனீவந்தெ = சாற்றினைக் கொடுப்பதைப்போல
நுடிவெண்ணின = வாக்தேவதையான சரஸ்வதிதேவியை
ஆண்ம = ஆளும் பிரம்மதேவர் (என்னும் பெயர் கொண்ட)
அண்டதி = பிரம்மாண்டத்தில்
புண்யபலகளனீவந்தெ = பிரம்மஜனர்களுக்கு புண்யபலன்களைக் கொடுப்பதைப்போல
லட்சுமணனண்ண = ஸ்ரீராமதேவர்
அமரகண சஹித = தேவதைகளுடன் சேர்ந்து
பக்தரவரகெ = பக்தர்களுக்குத் தேவைப்படும்போது சரியாக வந்து உதவுவான்

பொருள்:
கண்ணில் தூசு விழுந்தால், உடனடியாக இரப்பைகள் கண்களை மூடி அதனை காப்பாற்றிவிடுகிறது. அதே இரப்பைகள், கண்களிடமிருந்து எந்தவித பிரதிபலன்களையும் எதிர்பார்ப்பதில்லை. உடம்பில் எங்காவது அரிப்பு ஏற்பட்டால், உடனடியாக கை அங்கு சென்று அதை தீர்த்துவைக்கிறது. அந்த உதவிக்கு எந்த பிரதிபலனையும் கை எதிர்பார்ப்பதில்லை. பழம், கரும்பு ஆகியவற்றை பற்கள் கடித்து, அவற்றின் சாற்றினை நாக்கிற்கு அனுப்புகிறது. அவையும் எந்தவித பிரதிபலன்களையும் எதிர்பார்ப்பதில்லை. இவற்றைப்போலவே, ஸ்ரீபரமாத்மன் பிரம்மாண்டத்தில் இருக்கும் மக்களுக்கு புண்ய பலன்களைக் கொடுப்பதற்கு, தேவதைகளுடன்கூடி, பக்தர்களுக்கு தேவைப்பட்ட நேரத்தில் சரியாக வந்துவிடுகிறார். 

***

Tuesday, March 3, 2020

#26 - கருணா சந்தி

#26 - கருணா சந்தி

பி3ட்ட1வர ப4வபா1ஷதி3ந்த3லி
1ட்டு1வனு ப3ஹுகடி2ணனிவ சி
ஷ்டே1ஷ்ட1 னெந்த3ரித1னவரத1 சத்ப4க்தி பாஷதலி |
கட்டுவர ப4வகட்டு பி3டி3சுவ
சிட்டிரவனிவனல்ல கா1மத3
கொ1ட்டு கா1வனு சகல சௌக்யவ னிஹபரங்க3ளல்லி ||26

பிட்டவர = தன்னை வணங்காமல் விட்டவர்களை
பவபாஷதிந்தலி = சம்சாரம் என்னும் கயிற்றில் கட்டுவான்
இவ = இந்த பரமாத்மன்
பஹுகடிணனிவ = மிகவும் கடினமானவனைப் போல இருப்பான்
சிஷ்டேஷ்டனெந்து = பக்தர்களின் தெய்வம் என்று
அனவரத = அனைத்து காலங்களிலும்
சத்பக்தி பாஷதலி = உத்தமமான பக்தி என்னும் கயிற்றில் 
கட்டுவர = தன்னை கட்டுபவர்களின்
பவகட்டு = சம்சாரம் என்னும் கட்டினை
பிடிசுவ = விடுவிக்கிறான்
சிட்டிரவனிவனல்ல = இவன் (அவர்களின் விஷயத்தில்) கோபப்படுபவன் அல்ல
இஹபரங்களல்லி = இஹ, பர லோகங்களில்
காமத = அவர்கள் விரும்பும் அனைத்து விஷயங்களையும் கொடுத்து
காவனு = காப்பாற்றுகிறான். 

பொருள்:
ஸ்ரீபரமாத்மனை யார் பஜிக்காமல் விட்டுவிடுகிறார்களோ, அவர்களை சம்சாரம் என்னும் கயிற்றில் கட்டுகிறான். அவர்களின் விஷயத்தில் மிகக்கடினமானவனாக (கடுமையானவனாக) காட்டிக்கொள்கிறான். தன் பக்தர்களின் ஆபத்துகளை, எப்போதும் பஜித்தவாறு பக்தி என்னும் கயிற்றால் அவனைக் கட்டினால், அத்தகையவர்களுக்கு இருக்கும் சம்சார பந்தங்களை விடுவிக்கிறான். அவர்களிடம் கொஞ்சம்கூட கோபத்தைக் காட்டுவதில்லை. அவரவர்களின் தகுதிக்கேற்ப, அவர்கள் வேண்டும் அனைத்து விதமான விஷயங்களையும் இஹ பரங்களிலும் கொடுத்து, அவர்களை காப்பாற்றுகிறான் (அவர்களுக்கு அருள்கிறான்).

சிறப்புப் பொருள்:
பிட்டவர பவபாஷதிந்தலி கட்டுவனு பஹு கடினனிவ - என்னும் தாசராயரின் வாக்கிற்கு ஆதாரமாக பாகவதத்தில்:

தானஹம் த்விஷத: க்ரூரான் சம்ஸாரேஷுனராதர்மா |
க்‌ஷிபாம்யஜஸ்ரமஷுபானாசுரேஷ்வேவயோனிஷு: ||
ஆஸுரீம் யோனிமாபன்னாமூடா ஜன்மனி ஜன்மனி |
மாம ப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாங்கதிம் ||

’ஹே பார்த்தா! என்னை த்வேஷிக்கும் க்ரூரனான அந்த நர-அதமர்களை நிரந்தரமாக தைத்ய குலத்திலேயே பிறக்க வைக்கிறேன். மூடர்களான அந்த த்வேஷிகள் தொடர்ந்து அனைத்து பிறவிகளிலும் அசுர யோனிகளிலேயே பிறந்து, என்னை த்வேஷித்து, இறுதியில் என்னை சேராமல், அந்தம் தமஸ்ஸிற்குப் போய் சேர்கிறார்கள்’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணன். இதிலிருந்து தன்னை விட்டவரை சம்சார பந்தனத்தில் கட்டுகிறான். அவர்களின் விஷயத்தில் கடினன் என்று தீர்மானமாக சொல்கிறான். பக்தி என்னும் கயிற்றால் தன்னைக் கட்டிய பிரகலாதன், பலி, குசேல முதலானவர்களுக்கு, இஹத்தில் பலவித போகங்களைக் கொடுத்து, அவர்களை சம்சார பந்தனங்களிலிருந்து விடுவித்து, பரலோகத்தில் தன் பாதார விந்தங்களைக் கொடுத்து, பலவித போகங்களைக் கொடுக்கிறான். 

சிட்டினவனிவனல்ல - தன் பக்தர்கள் தவறுகளை செய்தால் அவர்கள் மேல் கோபம் கொள்ளமாட்டான். பாகவத 1ம் ஸ்கந்தம் 14ம் அத்தியாயத்தில் - அர்ஜுனன் சொல்வது: ’சக்ய: சகேவ பித்ருவத்தனயஸ்யசர்வம் சேஹேமஹாமஹித யாகுமதேரகம்மே’ - நண்பன் செய்யும் தவறுகளை நண்பன் எப்படி மன்னிக்கிறானோ, மகனின் தவறுகளை தந்தை எப்படி மன்னிக்கிறாரோ, அப்படி குறைந்த மதியுடைய நான் செய்யும் அனைத்து தவறுகளையும், மகாமகிமையுள்ள ஸ்வாமி மன்னிப்பான் என்று கூறுகிறான். இதிலிருந்து பக்தர்கள் மேல் பகவந்தன் எப்போதும் கோபம் கொள்ளமாட்டான் என்று புலனாகிறது. ஆனால், சில இடங்களில், பரமாத்மன் இந்திராதிகளின் மேல் கோபம் கொண்டதாக கதை இருக்கிறது. அதன் பொருள் என்னவெனில்: பக்தர்கள், அசுர ஆவேசத்தின் பலனாகவோ, கர்வத்தினாலோ தன்னை நிராகரித்தால், அதனை பரிகரித்து, அவர்களுக்கு அருள்வதற்காக அவர்களிடம் கோபம் கொள்வதாக காட்டிக்கொள்கிறான். 

நந்தகோபர்கள் செய்துவந்த யாகத்தைக் கெடுத்து, அவர்களை அவமானம் செய்து, பிரளய காலத்தைப் போல மழை சூறாவளியை இந்திரன் வரச்செய்தபோது, கோவர்த்தன மலையை தன் ஒரு விரலில் ஏந்தி, இந்திரனுக்கு மானபங்கம் செய்து, அவன் கர்வத்தைப் போக்கி, அருளினான். கோபிகா ஸ்த்ரியர்களுக்கு கர்வம் வந்தபோது, அவர்களின் கண்களிலிருந்து மறைந்து, அவர்களை அலைக்கடித்து, கர்வத்தை அடக்கி, பின் அவர்களுக்கு அருளினான். இப்படி பக்தர்களுக்கு அருள்வதற்காகவே அவர்களை திருத்துவான். இது உண்மையான கோபத்தின் காரணமல்ல. ஆகையால் ‘சிட்டினவனிவனல்ல’ என்று சொல்லியிருக்கிறார் தாசராயர். 

***



Monday, March 2, 2020

#25 - கருணா சந்தி

#25 - கருணா சந்தி

ஒட3ல நெளலந்த33லி ஹரி ந
ம்மொட3னெ திருகு3வ னொந்த3ரெக்‌ஷண
பி3டதெ3 பெ3ம்ப3லனாகி34க்தாதீ4னனெந்தெ3னிஸி |
1டெ3வ து3ரிதௌ143ள கா1மத3
கொ1டு3வ சக1லேஷ்ட13ள சந்த11
நடெ3வ நம்மந்த33லி நவசுவிசேஷ சன்மஹிம ||25

நவசுவிசேஷ சன்மஹிம = புதிதான, மிகவும் விசேஷமான, சிறந்த, மகிமைகளைக் கொண்ட 
ஹரியு = ஸ்ரீபரமாத்மன்
ஒடலனெளலந்ததலி = தேகத்தின் நிழலில்
பெம்பலனாகி = நம்மை எப்போதும் இடைவிடாமல் காப்பாற்றுபவனாக
பக்தரதீனனெந்தெனிஸி = தான் பக்தர்களுக்கு வசப்பட்டவன் என்று நினைத்து
ஒந்தரக்‌ஷணபிடதெ = ஒரு நொடியும் விடாமல்
நம்மொடனெ = நம்முடனேயே
துரிதௌககள = கஷ்ட, பிரச்னைகளை
தடெவ = வராதவாறு தடுக்கிறான்
காமத = நாம் விரும்பும்
சகலேஷ்டகள = நம் யோக்யதைக்கேற்ப அனைத்து இச்சைகளையும் கொடுக்கும்
நம்மந்ததலி = நம்மைப் போலவே
சந்தத = எல்லா காலத்திலும்
நடெவ = நடப்பான்.

பொருள்: 
எப்போதும் புதிதுபுதிதான மகிமைகளைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன், நம் நிழலானது எப்போதும் நம்முடனேயே இருப்பதைப் போல, அவனும் நம்முடன் இருந்து, நமக்கு வரும் ஆபத்துகளை பரிகரிக்கிறான். நம் தகுதிக்கேற்ப நாம் வேண்டும் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவான். 

சிறப்புப் பொருள்:
விஷஜலாஷயாத்வ்யாள ராக்‌ஷஸாத்வர்ஷ மாருதாத்வைர்யுதானலாத் |
வ்ருஷயயாத்பயாத்வஸ்வதோ முகாத்வ்ருஷபதேவயம் ரக்‌ஷிதாமுஹு: ||

கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீபரமாத்மன், கோப கோபியர்களுடன் எந்நேரமும் இருந்து, அவர்களுக்கு வந்த ஆபத்துகளை பரிகரித்தான். காளிந்தி மடுவில் இருக்கும் விஷ நீரினைக் குடித்து, கோப கோபாலகர்கள் அனைவரும் மரணமடைய, அவர்களைக் காப்பாற்றினான், உயிர் பிழைக்க வைத்தான். த்ருணாவர்த்த என்னும் அரக்கனிடமிருந்து, சூறாவளிக் காற்றிலிருந்து, காட்டுத்தீயிலிருந்து, வத்ஸாசுர ஆகியோரிடமிருந்து என பல பிரச்னைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றியிருக்கிறான். ’நான்கு திசைகளிலிருந்தும் வந்த அனைத்து ஆபத்துகளிலிருந்தும் உன்னால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம்’ என்று கோபிகா ஸ்த்ரியர்கள் ஸ்ரீகிருஷ்ணனை துதிக்கின்றனர். மேலும் பாகவத 1ம் ஸ்கந்த 8ம் அத்தியாயத்தில், குந்திதேவி ஸ்ரீகிருஷ்ணனை துதிக்கும்போது:

விஷான்மஹாக்னே: புருஷாததம்ஷனாத ஸத்ஸ பாயா:வனவாஸ க்ருச்சத: |
ம்ருதேம்ருதேsனேக மஹாரதாஸ்த்ரதோ த்ரௌண்யஸ்த்ரதஷ்சாஸ்ம ஹரேsபிரக்‌ஷிதா: ||

பீமசேனனைக் கொல்வதற்காக துரியோதனன் அவனுக்கு விஷம் கலந்த பக்‌ஷ்யங்களைக் கொடுத்தபோது அந்த விஷத்திலிருந்தும், எங்களைக் கொல்வதற்காக அந்த வீட்டில் வைக்கப்பட்ட நெருப்பிலிருந்தும், ஹிடிம்ப, பக ஆகிய அசுரர்களின் தொல்லைகளிலிருந்தும், பீமசேனனை பாம்புகள் கொல்ல வந்தபோது அவற்றைக் கொன்றும், அயோக்யனான துரியோதனனின் சபையில் திரௌபதிக்கு நடந்த மானபங்க சமயத்தில் அவள் மானத்தைக் காத்தும், வனவாச, அஞ்ஞானவாச ஆகிய காலங்களில் வந்த கஷ்டங்களிலிருந்தும், போரின்போது எதிரிகள் விட்ட விஷ பாணங்களிலிருந்தும், அஸ்வத்தாமன் ஏவிய பிரம்மாஸ்திரத்திலிருந்தும், உன் அருளாலேயே நாங்கள் காப்பாற்றப்பட்டோம் - என்கிறார். 

ஆனால் பாரதாதிகளில் எங்கும் ஸ்ரீகிருஷ்ணனே வந்து இந்த கஷ்டங்களிலிருந்து காப்பாற்றினான் என்று சொல்லப்படவில்லை. இப்படியிருக்கையில், குந்திதேவி, ’உன்னாலேயே நாங்கள் காப்பாற்றப்பட்டோம்’ என்று எப்படி சொன்னார் என்றால், ஆபத்து வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாண்டவர்கள் ஸ்ரீகிருஷ்ணனை நினைத்தவாறு செயல்களை செய்ததால், ஸ்ரீகிருஷ்ணன் சில கஷ்டங்களை மறைந்திருந்தும், சில கஷ்டங்களை பிரத்யட்சமாக நேரில் நின்றும் பரிகரித்தான். இந்த விஷயத்தை குந்திதேவி நன்றாக அறிந்திருந்தார். ஆகையாலேயே அவர் இப்படி ஸ்தோத்திரம் செய்தது நியாயமே என்று அறியவேண்டும். அதனால்தான் தாசராயர் ‘தடெவ துரிதௌககள காமத கொடுவ’ என்றார். 


மகாமகிமையுள்ள பரமாத்மன் ‘நம்மந்ததலி நடெவ’ - நமக்குள் இருந்து செயல்களை செய்வதற்கு தீர்மானித்து, நம்மிடமிருந்து அவற்றை செய்விக்கிறான், செய்கிறான். பாகவத தாத்பர்யத்தில் - ‘அதஸ்தத்ப்ரேரணாதேவ ப்ரேமாத்யாமமஜக்ஞிரே’ அவன் மேல் வைக்கும் பக்தியும் அவனுடைய விருப்பத்தாலேயே ஆயிற்று என்று பாகவதோத்தமர்கள் நினைப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார். மேலும் ‘நா அஹம் கர்த்தா ஹரி: கர்த்தா’ - எந்த செயலையும் நான் செய்வதில்லை. என் உள்ளிருந்து பரமாத்மனே செய்விக்கிறான்’ என்று பரமத்மனை பிரார்த்தனை செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர். ‘ நம்மந்ததலி நடெவ’ என்னும் வாக்கியத்திற்கு இந்த அர்த்தம் பொருந்துகிறது. 

***


Sunday, March 1, 2020

#24 - கருணா சந்தி

#24 - கருணா சந்தி

தந்தெதாய்களு தம்ம சிசுவிகெ3
3ந்த ப4யகள பரிஹரிஸி நிஜ
மந்தி3ரதி3 பே3டி3து33னித்தா13ரிசுவந்த33லி |
ஹிந்தெ3முந்தெ333லதி3 ஒளஹொர
கிந்தி3ரேஷனு த1ன்னவர னெ
ந்தெந்து3 சலஹுவனாக3சத3 வோலெத்த3 நோடி33ரு ||24

தந்தெதாய்களு தம்ம சிசுவிகெ = பெற்றோர், தம் மக்களுக்கு
பந்த பயகளபரிஹரிஸி = வந்த பயங்களைப் போக்கி
நிஜமந்திரதி = தம் வீட்டில்
பேடிதுதனித்து = வேண்டியதைக் கொடுத்து
ஆதரிசுவந்ததலி = ஆதரிப்பதைப் போல
தன்னவரனு = தன் பக்தர்களை
ஹிந்தெமுந்தெடபலதி = முன்னும், பின்னும், இடம், வலத்திலும்
ஒளஹொரகெ = உள்ளே வெளியேயும்
இந்திரேஷனு = லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மன்
அகஸதவோல் = ஆகாயத்தைப் போல
எத்த நோடிதரு = அனைத்து இடங்களிலும் வியாப்தனாக
எந்தெந்து = எப்போதும்
சலஹுவ = தன் பக்தர்களை காப்பாற்றுவான்.

குழந்தையானது, ஏதாவது சிறு பிராணியைப் பார்த்து பயம் கொண்டால், பெற்றோர் ஆனவர், உடனடியாக அந்தக் குழந்தையின் அருகில் இருக்கும், அதற்கு பயம் உண்டாகக் காரணமான பிராணியை தூர ஓட்டி, குழந்தையை வீட்டில் அழைத்துப்போய், அதை சமாதானம் செய்து, அக்குழந்தை விரும்பியதைக் கொடுத்து அதை ஆதரிப்பர். அது போலவே, ஸ்ரீபரமாத்மனும் தன் பக்தர்களின் முன்னும் பின்னும், இட வலதில், உள்ளும் வெளியேயும் என அனைத்து இடங்களிலும் நின்று வியாபித்திருக்கிறான். அப்படியாக இருந்து அவர்களை எந்நேரமும் காக்கிறான். 

அக்ரத: ப்ருஷ்டதஸ்சைவ பார்ஷ்வதஸ்ச மஹாபலௌ |
ஆகர்ணபூர்ண தன்வானௌ ரக்‌ஷேதாம் ராமலட்சுமணௌ ||


பயணத்திற்குப் போகும்முன் இந்த ஸ்லோகத்தை சொல்லும் வழக்கம் நம்மில் உண்டு. ஆனால் இதன் பொருள் என்ன? முன்னும், பின்னும், இட, வலதில், காது வரைக்கும் இழுத்துக் கட்டப்பட்ட வில்லை ஏந்தியிருக்கும் ராம லட்சுமணர்கள் நம்மை காப்பாற்றட்டும் - என்பதே ஆகும். இப்படியாக பரமாத்மன் தன் பக்தர்களை காக்கிறான் என்பதையே தாசராயர் விளக்குகிறார்.

***