ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Showing posts with label பஞ்சதன்மாத்ர சந்தி. Show all posts
Showing posts with label பஞ்சதன்மாத்ர சந்தி. Show all posts

Wednesday, June 10, 2020

#33 - பஞ்சதன்மாத்ர சந்தி

ஸ்ரீனிகேதன ஸாத்வதாம்பதி1

ஞானக3ம்ய க3யாசுரார்த்த4

மௌனிகுலன்மான்ய மானத3 மாதுலத்4வம்ஸி |

தீ3னஜனமந்தா3ர மது4ரிபு

ப்ராணத3 ஜகன்னாத2விட்டல

தானெ க3தியெந்த3னுதி3னதி3 நம்பி33வரனு பொரெவ ||33

 

ஸ்ரீனிகேதன = லட்சுமிதேவியரின் வீடு. அதாவது, லட்சுமிதேவியரை எப்போதும் வக்‌ஷஸ்தலத்தில் வைத்திருக்கும்

ஸாத்வதாம்பதி = சாத்விக குலத்தின் ஸ்வாமியான. அல்லது, சஜ்ஜனர்களின் ஸ்வாமியான

ஞானகம்ய = ஞானத்தினாலேயே அறியக்கூடியவனான

கயா சுரார்த்தன = கயா என்னும் தைத்யனைக் கொன்ற

மௌனிகுல ஸன்மான்ய = ரிஷிகுலத்தினால் புகழப்பட்டிருக்கும்

மானத = தன் பக்தர்களுக்கு தக்க கௌரவத்தைக் கொடுக்கும்

மாதுலத்வம்ஸி = தாய்மாமனான கம்ஸனைக் கொன்ற

தீனஜனமந்தார = தீனனான பக்தர்களுக்கு கல்பவ்ருக்‌ஷத்தைப் போல இருக்கும்

மதுரிபு = மது என்னும் அசுரனைக் கொன்ற

ப்ராணத = அனைவருக்கும் பிராணனைக் கொடுத்து காப்பாற்றும்

ஜகன்னாதவிட்டல = (தாசராயரின் பிம்பரூபியான) ஜகன்னாதவிட்டலன் என்று அழைக்கப்படும் ஸ்ரீபரமாத்மன்

தானே கதியெந்து = பரமாத்மனே கதி என்று

அனுதினதி = தினந்தோறும்

நம்பிதவரனு = தன்னை நம்பியவர்களை

பொரெவ = காப்பாற்றுவான்.

 

சந்தியை முடித்தவாறு, பரமாத்மானை வணங்கி, இத்தகைய பரமாத்மனை வணங்கியவர்களை அவன் காப்பாற்றுவான் என்கிறார் தாசராயர்.

 

ஸ்ரீலட்சுமிதேவியை எப்போதும் தன் மார்பில் வைத்துக் கொண்டிருப்பதால், பரமாத்மனுக்கு ஸ்ரீனிகேதன என்று பெயர். யாதவ குலத்தைச் சேர்ந்த, சாத்வத குலத்தில் பிறந்ததால் பரமாத்மனுக்கு சாத்வதாம்பதி என்று பெயர். அல்லது, சாது சஜ்ஜனர்களுக்கு ஸ்வாமியானதாலும் ஸாத்வதாம்பதி என்று பெயர். பரமாத்மனை சேர்வேண்டுமெனில், ஞானத்தினாலேயே சாத்தியம் ஆகையால், ஞானகம்ய என்று பெயர் பெற்றார். கயா என்னும் அசுரனைக் கொன்று, புண்ணிய க்‌ஷேத்திரமான கயாவை காப்பாற்றியவர். முனிவர்களால் மரியாதை செய்யப்படுகிறவன். தான் இந்த பிரம்மாதிகளுக்கு மரியாதை நிமித்தமாக சன்மானம் செய்கிறவன். தன் தாய்மாமனான கம்சனைக் கொன்று, யாதவர்களைக் காத்தவன். தன் பக்தர்களுக்கு கல்பவ்ருக்‌ஷம் போல இருப்பவன். மது என்னும் மிகக்கொடிய தைத்யனைக் கொன்றவன். அனைவருக்கும் பிராணனைக் கொடுப்பவன்.

 

இத்தகைய பிம்பரூபியான ஸ்ரீஜகன்னாதவிட்டலனை நீயே கதி என்று யார் திடமாக நம்புகின்றனரோ, அவர்களை ஸ்வாமி காப்பாற்றுகிறான்.

 

பஞ்சதன்மாத்ரா சந்தி என்னும் 7ம் சந்தியின் உரை முடிவுற்றது.

 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

 

***


#32 - பஞ்சதன்மாத்ர சந்தி

ப்ரளய ஜலதி3யொளுள்ள நாவெயு

ஹொலபு3கா3ணதெ3 ஸுத்துவந்த3தி3

ஜலருஹேக்‌ஷண அமல கு3ண ரூபக3ள சிந்திஸுத |

நெலெயகா3ணதெ3 மஹலகுமி

ஞ்சலவனைதி3 ளல்ப ஜீவரி

3ளவடு3வ தே3னிவன மஹிமெக3ளீ ஜக3த்ரயதி3 ||32

 

ப்ரளய ஜலதியொளுள்ள = பிரளய சமுத்திரத்தில் இருக்கும்

நாவெயு = படகு

ஹொலபுகாணதெ = அதன் கரையைக் காணாமல்

ஸுத்துவந்ததி = சுற்றிக் கொண்டிருப்பதைப் போல

ஜலருஹேக்‌ஷணன = தாமரைக் கண்ணனான ஸ்ரீஹரியின்

அமலகுண ரூபகள = மிகச்சிறந்த களங்கமற்ற குணரூபங்களை

சிந்திஸுத = எண்ணியவாறு

நெலெயகாணதெ = அதனை அறியமுடியாமல்

மஹாலகுமி = மஹா லட்சுமியானவர்

சஞ்சலவனு = மன சஞ்சலத்தை

யைதிதளு = அடைந்தாள். (இப்படி இருக்கையில்)

ஈ ஜகத்ரயதி = இந்த மூன்று உலகங்களையும் (பாதாள, பூமி ஸ்வர்க்காதி மூன்று உலகங்களையும்)

இவன மஹிமெகளு = இந்த பரமாத்மனின் மகிமைகளை

அல்ப ஜீவரிகெ = சாமான்ய ஜீவர்களுக்கு

அளவடுவதேனு? = இவ்வளவுதான் என்று சொல்வதற்கு சாத்தியமா? (என்றைக்கும் சாத்தியம் இல்லை என்று பொருள்)

 

பகவந்தனின் குணரூபாதி மகிமைகளை, முழுமையாக அறிவதற்கு, யாருக்கும் சாத்தியம் இல்லை என்னும் விஷயத்தை ஓர் ஆதாரத்துடன் விளக்குகிறார்.

 

உலகம் முழுக்க பிரளய நீரில் மூழ்கியிருக்கும்போது, அதில் ஒரு படகு மட்டும் இருந்தால், அந்த படகு கரையைக் காணாமல் எப்படி தண்ணீரில் சுற்றிக்கொண்டிருக்குமோ, அதுபோல, மகாலட்சுமிதேவி பரமாத்மனின் அபாரமான குணராசிகளின் ஆதி-அந்த்யத்தைக் காணமுடியாமல், அதிலேயே சுற்றிக்கொண்டு, மன சஞ்சலத்தை அடைந்தாள். இப்படி சொன்னபிறகு, இன்னும் சாதாரண இதர ஜீவர்கள், பரமாத்மனின் குணாதி மகிமைகளை அறிவது எப்படி?


***

#31 - பஞ்சதன்மாத்ர சந்தி

இந்தனந்தானந்த கு3ணக3

ப்1ராந்த1கா1ணதெ3 மஹலகுமி ப43

வந்த கா34ரணாயுதா4ம்ப3ர ஆலயக3ளாகி3 |

ஸ்வாந்தத3லி நெலெகொ3ளிஸி பரம து3

ரந்த மஹிமன தௌ3த்யகர்ம நி

ரந்தரதி3 மாடு31லி தத3தீ3னத்வ வைதி3ஹளு ||31

 

இந்து = இத்தகைய

அனந்தானந்த குணகள = அனந்தானந்த குணங்களின்

ப்ராந்தகாணதெ = முடிவைக் காணமுடியாமல்

மஹாலகுமி = மகாலட்சுமி

பகவந்தகெ = பரமாத்மனுக்கு

ஆபரண = கௌஸ்துபாபரண ரூபியாக இருக்கிறார்

ஆயுத = தனுஸ் முதலான ஆயுத ரூபியாக இருக்கிறார்

அம்பர = வஸ்த்ர ரூபியாக இருக்கிறார்

ஆலமகளாகி = வீடாகவும் இருக்கிறார்

ஸ்வாந்ததலி = தன் அந்தரங்கத்தில் (மனதில்)

நெலெகொளிஸி = (திடமாக பகவத்ரூபத்தை) நிலைத்திருந்து

பரம துரந்த மஹிமன = மிகச்சிறந்த மற்றும் எல்லையற்ற மகிமைகளைக் கொண்ட பரமாத்மனின்

தௌத்யகர்ம = தாச கர்மங்களை

நிரந்தரதி = தொடர்ந்து (இடைவிடாமல்)

மாடுதலி = செய்துகொண்டு

தததீனத்வ = பரமாத்மனின் அதினமாக

யைதிஹளு = இருக்கிறாள்.

 

முந்தைய பத்யத்தில், பிரம்மாதிகளும் அறியாத பகவத் மகிமைகளை ரமாதேவியர் அறிவார் என்று சொல்வதால், அத்தகைய மகிமைகளை அவர் முழுமையாக அறிவாரோ என்று எழும் சந்தேகத்தை இங்கு போக்குகிறார்.

 

பிரம்மாதிகளைவிட அதிகமாக பகவத் மகிமைகளை ரமாதேவியர் அறிந்திருந்தாலும், பரமாத்மனின் அனந்தானந்த குணங்களின் எல்லைகளைக் காணாமல், பகவத் ரூபங்களை தன் மனதில் நிலைநிறுத்தி, அந்த குணங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவற்றை முழுமையாக அறியார். அத்தகைய பகவந்தனின் சேவையை செய்வதற்கு, தம் ஒரே ரூபத்தினாலும், ஸ்ரீ, பூ, துர்கா என்னும் மூன்று ரூபங்களாலும், சேவை செய்துவந்தாலும், அதில் திருப்தி அடையாமல், வஸ்திரம், ஆபரணம், சத்ர, சாமரம் ஆகிய ரூபங்களை தரித்து, அவற்றின் மூலமாக சேவை செய்து, பரமாத்மனை புகழ்ந்திருக்கிறார். மேலும் தமக்கு அனேக தாசியர்கள் இருந்தாலும், பகவந்தனின் சேவாதிகளை தாமே செய்கிறார். பாகவத 3ம் ஸ்கந்தம், 19ம் அத்தியாயம், 21ம் ஸ்லோகம் :

 

ஸ்ரீரூபிணீ க்வணயதீ சரணாரவிந்தம் நீலாம்புஜேன ஹரிஸத்மனி முக்த தோஷா |

ஸம்லக்‌ஷ்யதே ஸ்படிக குட்ய உபேதஹேம்னி ஸம்மார்ஜதீய தனுக்ரஹணேன்ய யாத்னா: ||

 

விஜயத்வஜீய வியாக்யானம்:

 

அனேஷா முபாஸகானாம் அஸ்மாதாதீனாம் உபாசனாதி ப்ரயத்னா யஸ்யானுக்ரஹணேs னுக்ரஹார்த்தம் ஸ்யு: |

 

இதரரான நம்மைப் போன்றவர்கள், லட்சுமிதேவியரின் மகிமைகளைப் பெறுவதற்காக, அவரை பூஜிக்கிறோமோ, அத்தகைய பிறப்பு இறப்பு போன்ற சுழற்சிகள் இல்லாதவரான லட்சுமிதேவி, தம் திவ்ய ரூபத்தினால் பரமாத்மனின் அந்தப்புரத்தில், அவன் சரணாரவிந்தங்களில் அலங்கரித்துக் கொண்டிருக்கும், சலங்கையின் சப்தத்தை உருவாக்கியவாறு. நீலவர்ணனான, தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, பெருக்கும் துடைப்பத்தைக் கையில் ஏந்தி குப்பையைக் கூட்டிக்கொண்டு, தங்க மயமான, ஸ்படிக மணிகளால் அலங்கரிக்கப்பட்ட சுவரில் தன்னை பிரதிபிம்பராக காட்டிக்கொள்கிறார் என்று சொல்கிறார்.

 

இதுமட்டுமல்லாமல், புரந்தரதாசர் இயற்றிய ஏனு தன்யளோ லகுமி எந்தா மான்யளோஎன்னும் பத்யத்தில், ‘சத்ர சாமர வ்யஜன பர்யங்க பாத்ரரூபதல்லி நிந்து, சித்ர சரிதனாத ஹரிய நித்ய சேவே மாடுதிஹளுஎன்கிறார். இதே விஷயத்தையே தாசராயர் சொல்கிறார் -- தினந்தோறும் தூத கர்மத்தை செய்து வருகிறார்’ - என்கிறார். ஒரு வேலைக்காக ஒருவர் மூலமாக இன்னொருவரிடம் செல்வதற்கே தூது என்ற பெயர் இருக்கிறது. சீதைக்கு மோதிரத்தைக் கொடுத்து அவரிடமிருந்து சூடாமணியைக் கொண்டுவர ராமதேவர் ஹனுமந்ததேவரை அனுப்பியதாலேயே, அல்லது ராவணனிடம் அனுப்பியதாலேயே, ஹனுமந்ததேவருக்கு ஸ்ரீராமதூதஎன்று பெயர் வந்தது. ஸ்ரீகிருஷ்ணன் பாண்டவர்களுக்கு ராஜ்யத்தைக் கொடுப்பதற்காக, குருபாண்டவர்களின் சமாதானத்திற்காக தூதனாக சென்றான். அப்படியே, லட்சுமிதேவியரும் தூதராக இருந்தாரா? தூதராக செயல்பட்டார் என்று தாசராயர் எப்படி சொல்கிறார் என்றால்:

 

தாச தாசியர்களுக்கு தௌத்ய (தூத) கர்மம் சகஜமானதே ஆகும். தூதுக்கு மட்டும் தாச தாசியர்களே இருக்க வேண்டும் என்னும் விதி ஒன்றும் இல்லை. தாசர்களாக இல்லையென்றாலும்கூட தாஸ்யத்தை செய்யலாம். ராஜசூய யாகத்தில் தர்மராஜனுக்கு நாரதர் தூதராகச் சென்றார். பாண்டவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணன் தூதனாகச் சென்றான். த்ருபதராஜனின் புரோகிதர் தூதராக த்ருதராஷ்டிர ராஜனிடம் வந்தார். இவர்கள் அனைவரும் தூத கர்மத்தை செய்திருந்தாலும், தாசர் ஆகவில்லை. தாசதாசியருக்கு மட்டும், மேற்சொன்ன தூதகாரியம் சகஜமாக இருந்தே இருக்கிறது.

 

பாண்டவர்களும் குரு வம்சத்திலேயே பிறந்ததால், அவர்களுக்கும் கௌரவஎன்னும் சொல் பொருந்தியது. ஆனால், அவர்களின் மகிமையால், கௌவர்களை தனியே பிரித்து, பாண்டுராஜனின் மக்களான பாண்டவர்களை அவர்களிடமிருந்து பிரித்தனர். கௌரவ என்னும் சொல் மட்டும் பாண்டவர்களுக்கும் பொருந்துமே தவிர, பாண்டவர் என்னும் சொல், கௌவர்களுக்கு எப்படி சேராதோ, அதைப்போலவே தாசியர்களை தூதி என்று சொல்லலாமே தவிர, தூதியர் அனைவரும் தாசியர் அல்ல என்று சொல்லவேண்டும்.

 

ஆனால், ரமாதேவியரை, பரமாத்மனுக்கு தாசியர் என்றே சொல்ல வேண்டியதாயிற்று. தௌத்ய கர்மம் செய்து வந்ததாலேயே இப்படி சொன்னார்கள் என்றால், சாதாரணமாக சம்பளத்திற்கு வேலை பார்க்கும் தாசியர், அதைத்தவிர சில வெளி வேலைகளையும் செய்வார்களே தவிர, அந்தரங்க வேலைகளான தௌத்யாதி கர்மங்களை அவர்களிடம் செய்விக்க சாத்தியம் இல்லை. ஆகையாலேயே, அரசகுமாரிகள், தம்மிடம் சரியான தாசியர்கள் இல்லையெனில், தம் உறவினர்களையே தௌத்ய விஷயங்களில் அனுப்பும் வழக்கம் உண்டு. ஆகையால், அந்தரங்க விஷயத்திற்கு ஏற்றவர் மட்டுமே தௌத்ய கர்மத்திற்கு தகுதியானவர். ஆகையால், ரமாதேவியர் பரமாத்மனின் அந்தரங்க தாசியராக இருந்தார் என்பதை காட்டுவதற்காக தௌத்யகர்மஎன்று சொன்னார் என்று அறியவேண்டும். இப்படி, பகவந்தனின் அதீனராகி பகவத் அருளினாலேயே பகவன் மகிமைகளை பிரம்மாதிகளைவிட அதிகமாக தம் தகுதிக்கேற்ப அறிந்திருக்கிறார் என்று பொருள்

Tuesday, June 9, 2020

#30 - பஞ்சதன்மாத்ர சந்தி

ஆதி3தே1யரு திளியதி3ஹ கு3

வேத3மானிக3ளெ ந்தெ3னிப வா

ண்யாதி33ளு ப3ல்லரவரரியத3 கு3ணக3ணங்களனு |

வேத33ல்லனு பொ3ம்மனரியத3

கா34கு3ணக3ள லகுமி ப3ல்லளு

ஸ்ரீத4ரொப்ப3னுபா1ஸ்ய த்கு3ணபூர்ண ஹரியெந்து3 ||30

 

ஆதிதேயரு = தேவதைகள்

திளியதிஹ = அறியாத

குண = பரமாத்மனின் குணங்களை

வேதமானிகளெந்தெனிப = வேதாபிமானிகள் என்று எண்ணும்

வாண்யாதிகளு = சரஸ்வதி பாரதியர்

பல்லரு = அறிவர்

அவரரியத = சரஸ்வதி, பாரதிதேவியர் அறியாத

குணகணங்களனு = குணங்களை

வேத = பிரம்மதேவர்

பல்லனு = அறிவார்

பொம்மனரியத = பிரம்மதேவர் அறியாத

அகாதகுணகள = அபாரமான குணங்களை

லகுமி பல்லளு = லட்சுமிதேவி அறிவார்

ஸ்ரீதரனு = லட்சுமிதேவியை வக்‌ஷஸ்தளத்தில் தரித்த

ஒப்பனு = ஸ்ரீதரனான ஸ்ரீஹரியே

உபாஸ்ய = வணங்கத்தக்கவன் (சிறந்தவன்)

ஸத்குணபூர்ண = மிகச்சிறந்த குணபூர்ணனான

ஹரியெந்து = ஹரி என்னும் பரமாத்மனே என்று (லட்சுமிதேவி அறிவார்).

 

முந்தைய மூன்று பத்யங்களால், லட்சுமிதேவியரின் மகாமகிமைகளை சொல்லி, அத்தகைய ரமாதேவியர் பரமாத்மனின் அபார குணங்களை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார் என்னும் வசனங்களால் விசேஷமான பகவத்மகிமைகளை கூறுகிறார்.

 

ருத்ராதி தேவதைகள் அறியாத பகவத் மகிமைகளை வேதாபிமானிகள் என்றே அழைக்கப்படும் சரஸ்வதி, பாரதி தேவியர் அறிவர். அவர் அறியாத குணங்களை பிரம்மதேவர் அறிவார். பிரம்மதேவருக்கும் தெரியாத மகா மகிமைகளை லட்சுமிதேவி அறிவார். தன் மார்பில் லட்சுமிதேவியரை தரித்திருக்கும், சர்வசத்குண பூர்ணன், ஹரி என்று அழைக்கப்படுபவனுமான, பரமாத்மன் ஒருவனே அனைவரையும்விட உத்தமன்; உபாஸ்யன் என்கிறார்.

***
 

#29 - பஞ்சதன்மாத்ர சந்தி

ஜீவஜீவர பே43 ஜட3ஜட3

ஜீவஜட3 ஜட3ஜீவரிந்த3லி

ஸ்ரீவரனு அத்யந்தபி4ன்ன விலக்‌ஷணனு லகுமி

மூவரிந்த3லி பதுமஜாண்ட3தி3

தா விலக்‌ஷணளெ னிசுதிப்பளு

ஸாவதி4ம ஷூன்யளெந்த3ரிதீர்வரனு ப4ஜிஸு ||29

 

ஜீவஜீவர = ஜீவ ஜீவருக்கும்

பேத = ஒருவருக்கொருவர் நடுவே வேறுபாடு

ஜடஜட = ஜட ஜடங்களுக்கும் வேறுபாடு

ஜீவஜட = ஜீவ ஜடர்களுக்கு நடுவே வேறுபாடு

ஜடஜீவரிந்தலி = ஜட, ஜீவர்களைவிட

ஸ்ரீவரனு = லட்சுமிக்கு கணவனான ஸ்ரீஹரி

அத்யந்த பின்ன = மிகுந்த வேறுபாடு கொண்டவன்

லட்சுமி = லட்சுமிதேவி

மூவரிந்தலி = ஜீவ, ஜட, பரமாத்மா என்னும் மூவரைவிட

பதுமஜாண்டதி = பிரம்மாண்டத்தில்

தா = தான்

விலக்‌ஷண எனிசுதிப்பளு = வேறுபட்டிருப்பவள்

சாவதிக = நற்குணங்களைப் பெற்றவள்

சம சூன்யளெந்து = சமம் இல்லாத; வேறுபாடு கொண்டவள்

அரிது = அறிந்து

ஈர்வரனு = லட்சுமி, நாராயணன் என்னும் இருவரையும்

பஜிஸு = ஸ்தோத்திரம் செய்.

 

ஜட சேதனர்கள் நிறைந்த பிரபஞ்சத்தில் வியாப்தனாக இருக்கிறான் என்று உபாசனை செய்யவேண்டும் என்று முந்தைய பத்யத்தில் சொல்லியிருந்தார். இப்போது, இந்த பிரபஞ்சத்தில் இருந்தாலும். அந்த ஜட சேதனர்களிலிருந்து வேறுபட்டவன்  லட்சுமி நாராயணன் என்று உபாசனை செய்தவாறு, அதற்கு முக்கிய சாதனமான பஞ்சபேதத்தை இங்கு விளக்குகிறார்.

 

ஜீவருக்கும் ஜீவருக்கும் இருக்கும் வேறுபாடு,

ஜடத்திற்கும் ஜடத்திற்கும் இருக்கும் வேறுபாடு,

ஜீவருக்கும், ஜடத்திற்கும் இருக்கும் வேறுபாடு,

ஜடத்திற்கும், பரமாத்மனுக்கும் இருக்கும் வேறுபாடு,

ஜீவனுக்கும் பரமாத்மனுக்கும் இருக்கும் வேறுபாடு

என்னும் பஞ்ச பேதங்களை அறியவேண்டும்.

 

ஜீவனுக்கும் ஜீவனுக்கும் வேறுபாடு இருக்கிறது என்பது நம் அனுபவத்திலேயே தெரிகிறது. உலகத்தில் இருக்கும் அனேக பிராணிகளில் சில சுகப்படுகின்றன; சில துக்கப்படுகின்றன. சிலர் ரோகிகள். சிலர் வலிமையானவர்கள். கழுதை, குதிரை ஆகியவை அனைத்தும் ஒன்றே என்று எப்படி சொல்வது? ஆகையால், ஜீவர்களில் வேறுபாடு உண்டு என்று சொல்லியே ஆகவேண்டும்.

 

ஜீவர் நித்யர். தேகம் அநித்யம். கடேபின்னேயதாகாஷ ஆகாஷஸ்யாத்யதாவுராஎன்னும் பாகவத 12ம் ஸ்கந்த வாக்கியத்தின்படி, பானை உடைந்தால், அதற்குள் இருக்கும் ஆகாயம், ஆகாயமாக நின்றுவிடுகிறது. அந்த ஆகாயம் அழிவதில்லை. தேகம் அழிந்தாலும், ஜீவன் அந்த தேகத்திலிருந்து விடுபட்டுவிடுகிறது. ஆகையாலேயே, ஜீவனுக்கும் ஜடத்திற்கும் வேறுபாடு உண்டு என்று அறியவேண்டும். ஜடத்திற்கும் ஜடத்திற்கும்கூட வேறுபாடு உண்டு. கழுதை, குதிரை, எறும்பு ஆகிய பிராணிகளின் தேகங்களுக்கும், மலை, ஆறு ஆகியவற்றிற்கும் ஒன்றுக்கொன்று வேறுபாடு இருப்பதால், ஜடத்திற்கும் ஜடத்திற்கும் வேறுபாட்டினை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஜீவனுக்கும் பரமாத்மனுக்கும் வேறுபாடு எப்படியெனில்:

 

ஜீவன் அஸ்வதந்த்ரன். பிறப்பு இறப்பு இருக்கிறது (அதாவது, ஜீவ நித்யம் ஆனாலும், சரீர சம்பந்தம் ஆவதே = பிறப்பு. அந்த சம்பந்தம் விடுபடுவதே = இறப்பு). இந்த துக்கங்களை அனுபவிக்க வேண்டியவர்கள். பரமாத்மன் ஸ்வதந்த்ரன். ஆனந்த பூர்ணன். எல்லையற்ற மகிமைகளைக் கொண்டவன். இந்த காரணங்களால், ஜீவ பரமாத்மனுக்கிடையே வேறுபாட்டினை ஒப்புக் கொள்ள வேண்டும்.

 

ஜடங்களில் தானாக செயல்களை செய்யும் சக்தி இல்லாததால், ஜடத்திற்கும் பரமாத்மனுக்கும் வேறுபாடு உள்ளது என்று அறியவேண்டும். ஜீவ ஜடாதிகளில் இல்லாத விலக்‌ஷண (தனித்துவ) தர்மம், பரமாத்மனிடம் இருப்பதால், அவனுக்கு விலக்‌ஷணன் என்று பெயர். லட்சுமிதேவி, பரமாத்மனைவிட, ஜடங்களைவிட, ஜீவர்களைவிட, விலக்‌ஷணனாகிருக்கிறார். பிரம்மாதிகளுக்கு சரீர வியாப்தி, சரீர நாசங்கள் உண்டு. ரமாதேவியர்களுக்கு அது இல்லை. பிரளய காலத்தில் கூட இருக்கிறார். ஆகையால், அவர் ஜீவ விலக்‌ஷணர் என்று சொல்ல வேண்டியதாயிற்று. ஜகத் ஸ்ருஷ்டிக்கு ஜடப்ரக்ருதி ரூபமாக இருந்தும், ஜடஸ்ருஷ்டிக்கு ஜடரூபத்தை ஸ்வீகரிப்பரே தவிர, தாம் ஜடர் அல்ல. ஏனெனில், பிரம்மாதிகளை ஸ்ருஷ்டிக்கும்போது சேதன ஸ்வரூபத்திலேயே இருக்கிறார். சேதனர்களுக்கு, க்ரியா சக்தி இருப்பதால், சாமர்த்தியம் உள்ளவர், ஜடசேதனாதி ரூபங்களை தரிக்க முடியும். வெறும் ஜடம் மட்டும் என்றைக்கும் சேதனர் ஆகமுடியாது. ஆகையால், லட்சுமிதேவியர், ஜடத்திலிருந்து வேறுபட்டவர் என்று சொல்ல வேண்டியதாயிற்று. பரமாத்மனைப் போல பிரளய காலத்திலும்கூட நாசம் இல்லாத சரீரம் கொண்டவரான காரணத்தினால், பரமாத்மனே லட்சுமிரூபம் என்று சொல்ல வேண்டுமெனில், பிரளய காலத்திலாவது பரமாத்மனின் அதீனராகி அஸ்வதந்த்ரராகவே இருக்கிறார். ஆகையால், பரமாத்மனிடமிருந்து வேறுபட்டவர். இந்த விலக்‌ஷணத்தையே தாசராயர் சொல்கிறார். ஸாவதிக ஸமஷூன்யளெந்துஎன்றால் பரமாத்மனைவிட குறைவான குணங்களைக் கொண்டவள். பிரம்மாதிகளைவிட உத்தமள். இவளுக்கு சமம் என்று யாரும் இல்லை. இப்படியாக லட்சுமி நாராயணர் லோக விலக்‌ஷணர் என்று உபாசனை செய்யவேண்டுமென்று அர்த்தம்.

***
 

Monday, June 8, 2020

#28 - பஞ்சதன்மாத்ர சந்தி

மணிக3ளொளகி3ஸுத்ரத3ந்த3தி3

ப்ரணவபாத்3யனு சேதனா சே

தன ஜக3த்தினொளனு தி3னதொளாடுவனு சுக2பூர்ண |

3ணிவிகெயு இவகி3ல்ல பஹுகா

ருணிகனந்தானந்த ஜீவர

3ணதொளேகாஷம்ஷ ரூபதி3 நிந்து1 நியமிஸு||28

 

மணிகளொளு = மாணிக்கத்துக்குள்

இஹ = இருக்கின்ற

சூத்ரதந்ததி = கயிறினைப் போல

ப்ரணவபாத்யனு = ஓம்கார பிரதிபாத்யனான ஸ்ரீஹரி

சேதனாசேதன ஜகத்தினொளு = ஜட சேதனாத்மகவான இந்த சரீரத்தில்

அனுதினதொளு = தினந்தோறும்

ஆடுவனு = லீலைகளை செய்வான்

சுகபூர்ண = சுகபூர்ணன் ஆனதால்

தணுவிகெயு = சோர்வு

இவகில்ல = இவனுக்கு இல்லை

பஹுகாருணிக = பஹு கருணைக்கடலான

அனந்தானந்த ஜீவர கணதொளு = பற்பல ஜீவர்களின் கணங்களில்

ஏகாம்ஷரூபதி = பிம்பரூபியாகவும், பிரதிபிம்பனான ஜீவனுக்குள்ளும்

நிந்து = இருந்து

நியமிசுவ = நடத்துகிறான்.

 

ஒரு நூலில் மாணிக்கங்களை கோர்த்தால் எப்படி அந்த நூலானது அந்த மாணிக்கங்களுக்கு ஆதாரமாக இருக்கிறதோ, அப்படி ஸ்ரீபரமாத்மன் பிரம்மாதி சேதனர்களில் இருந்து, அசேதனகளான நதி, மலை ஆகியவற்றிலும், என அனைத்து பிரபஞ்சங்களுக்கும் ஆதாரமாக இருந்து அவரவர்கள் செய்யவேண்டிய செயல்களை எப்போதும் செய்து, செய்வித்து, அவன் சுகபூர்ண ஸ்வரூபன் ஆகையால், சோர்வில்லாமல் தன் லீலைகளை செய்கிறான். கருணாசமுத்திரனான ஸ்ரீஹரி வாசுதேவ ஸ்வாம்ஷரூபத்தினால் பிரம்ம தேவரில் இருந்துகொண்டு, பிரம்மாம்சத்தினால் ருத்ரதேவரில் இருந்து, இப்படி ஸ்வாம்ஷங்கள், ராம, கிருஷ்ணாதி ரூபங்களின் அம்ஷாம்ஷ ரூபங்கள், இவற்றைத் தவிர ஜீவர்களிலும் இருந்து, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப செயல்களை தீர்மானித்து, செய்து, செய்விக்கிறான் என்று பொருள்.


***