ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, May 28, 2020

#6 - பஞ்சதன்மாத்ர சந்தி

#6 - பஞ்சதன்மாத்ர சந்தி


ஷிரக3ளைதை3தெ3ரடு பா3ஹுக3
ளெரடு3 பாத33ளொந்து3 மத்4யோ
3ரதி3 ஷோபி4ப வாங்மனோமய னெனிஸி நித்யதலி |
கரண தா4து13ளல்லி எப்ப
த்தெரடு3 ஸாவிர நாடிக3ளலி
ப்பரவிதூ3ரனு பா4ரதப்ரதிபாத்3ய னெந்தெ3னிஸி ||6

ஷிரகளைது = பஞ்சபூதங்கள் என்னும் 5 தலைகள்
ஐதெரடு பாஹுகளு = ஞானேந்திரிய கர்மேந்திரியங்கள் என்னும் 10 தோள்கள்
எரடு பாதகளு = புண்ணிய, பாவம் என்னும் 2 பாதங்கள்
ஒந்து மத்ய = அஹங்காரா என்னும் 1 இடுப்பு
உதரதி = புத்தி என்னும் 1 வயிறு
ஷோபிப = ஒளிர்ந்து கொண்டிருக்கும்
வாங்மனோமய நெனிஸி = வாங்மனோமய என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வரும் ஸ்ரீஹரி
நித்யதலி = எப்போதும் / தினந்தோறும்
கரண = பத்து இந்திரியங்களிலும்
தாதுகளல்லி = 7 தாதுகளில்
எப்பத்தெரடு சாவிர நாடிகளலி = 72,000 நாடிகளில்
இப்ப = இருக்கிறான்
அரவிதூரனு = தோஷங்கள் அற்றவன்
பாரத்ப்ரதிபாத்ய நெந்தெனிஸி = வேதத்தைவிட உத்தமமான பாரதத்தில் புகழப்படுபவன்

வாக்கு, மனது இவற்றின் ரூபியாக இருக்கும் பரமாத்மனின் உபாசனா கிரமத்தை சொல்கிறார். அனைத்து பிராணிகளின் முக்கிய இந்திரியங்களான வாக்கிலும், மனஸ்ஸிலும் இருந்து, அனைத்து காரியங்களையும் செய்கிறான் ஆகையால், வாங்மய என்றும், மனோமய என்றும் பரமாத்மனுக்குப் பெயர். இந்த் வாங், மனோமய ரூபங்களை உபாசனை செய்யும் கிரமம் என்னவெனில்,

* பஞ்சபூதங்களே இந்த ரூபங்களுக்கு 5 தலைகளாக,
* பத்து இந்திரியங்களே 10 கைகளாகவும்,
* புண்ய பாப என்னும் இரு கர்மங்களே இரு பாதங்களாகவும்,
* அஹங்கார 1, புத்தி 1 இவை இரண்டும் மத்திய பிரதேச வயிறு எனவும்,
சிந்திக்க வேண்டும்.

இத்தகைய ரூபத்தினால் அனைத்து இடங்களிலும் இருக்கிறான். இப்படியாக தினமும், இந்திரியங்களிலும், நாடிகளிலும் இருந்தாலும், புண்ய பாபாதி கர்மங்களை செய்விப்பவனாகவும் இருந்தாலும், தான், ‘அரவிதூரநிர்லிப்தனாக (எதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாமல்) இருப்பதால், நிர்தோஷியாக இருக்கிறான். வேதங்களில் புகழப்படுகிறான் என்று அனைத்து சாஸ்திரங்களும் கொண்டாடும்போது, பாரதத்தால் புகழப்படுபவன் என்று தாசராயர் சொன்னது எதற்கு என்றால், வேத அத்யயனம் செய்திருந்தாலும், உண்மையான அர்த்தம் உணர்வதற்கு கஷ்டமாகையால், மற்றும் ஸ்த்ரீ மற்றும் நான்காம் வர்ணத்தவர்க்கு அதைப் படிக்கும் தகுதி இல்லாததாலும், வேதங்களில் இருக்கும் பகவந்தனின் மகிமைகளை மக்கள் அனைவரும் அறிவது கஷ்டம் என்று வேதங்களில்கூட சொல்லப்படாத பகவன் மகிமைகளை பாரதத்தில் சேர்த்திருக்கின்றனர், என்னும் ஆசார்யரின் வாக்கியமே உள்ளது.

வேதார்த்தங்களால் கூடிய பாரதத்தால் புகழப்படுபவன் என்ற பிறகு வேதாதிகளும் அதிலேயே அடங்கியிருக்கின்றன என்ற சிந்தனையில் இப்படி சொல்லியிருக்கிறார். அல்லது, வேதாதிகளை படித்தாலும் மத்வ சாஸ்திரத்தை அறிந்தாலே, வேதங்கள் சரியாக அர்த்தம் ஆகும் என்பதால், பாரதத்தால் புகழப்படுபவன் என்று சொன்னதால், மத்வ சாஸ்திரத்தால் புகழப்படுபவன் என்றும் அர்த்தம் கொள்ளலாம். அது எப்படியெனில்:

பாகவத ஸ்ருதிகீதையில் - பரதமதஸ்சகாஸி’ - வாயுமதத்தைப் பின்பற்றுபவர்களால் சொல்லப்படும் பேதஞானத்திலேயே ஒளிர்வாய் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பரதமதஎன்று சொன்னால் அதை வாயு மதம் என்று எப்படி சொல்லலாம் என்று கேட்டால்,

ரதத்வாத்பாத்மகே விஷ்ணுவதாவாபி ஸ்வயம்ப்ருதே |
பரதோ வாயுருத்திஷ்ணோ பாரதீதத்ஸரஸ்வதே ||

என்னும் பதத்தினால், ப என்றால் பரமாத்மன். அவனில் ரதராக இருப்பதால், பாரத என்று வாயுதேவருக்குப் பெயர் வந்தது. ஆகையாலேயே, ‘பரதஸ்ய ஸதே பாரதீஎன்று வாயுதேவரின் மனைவிக்கு பாரதி என்று பெயர் வந்தது. ஆகையால், பாரத என்றால் பரத சம்பந்தி பாரத வாயு சம்பந்தப்பட்ட கிரந்தங்களுக்கு பாரத என்று பெயர். வாயுதேவரே மத்வாசார்யர் ஆகையால், பாரத ப்ரதிபாத்யன் என்றால், மத்வ சாஸ்திர பிரதிபாத்யன் என்று பொருள். அப்படியில்லை என்றால், தவறான ஞானத்தால் கெட்டுப் போவார்களே தவிர, உண்மையான ஞானம் பெறுவதில்லை. ஆகையால், இந்த அர்த்தமே சரியானது என்று அறியவேண்டும்.


***

#5 - பஞ்சதன்மாத்ர சந்தி

#5 - பஞ்சதன்மாத்ர சந்தி


ஈ ஷரீர சதுஷ்டயக3ளொளு
கோ1ஷதா4து13 பா4ரதிப ப்ரா
ணேஷ னிப்பத்தொந்து3 ஸாவிரதா3ரு நூரெனிப |
ஷ்வாரூபக ஹம்ஸ பா4ஸ்கர
பே4ஷரொளகி3த்த3வர கைபிடி3
தீ ரோஜ ப4வாண்ட3தொ3ளு ர்வத்ர தும்பி3ஹனு ||5

ஈ ஷரீர சதுஷ்டயகளொளு = மேற்கூறிய நான்கு விதமான சரீரங்களில்
கோஷ = அன்னமய, பிராணமய, மனோமய, விக்ஞானமய, ஆனந்தமய என்னும் 5 கோஷங்களில்
தாதுக = மேதஸ், மஜ்ஜ முதலான 7 தாதுகளில் வியாபித்திருக்கும்
பாரதிப ப்ராணேஷ = பாரதிரமண முக்யபிராணாந்தர்கதனான
ஹம்ஸ = ஹம்ஸரூபி ஸ்ரீபரமாத்மன்
இப்பத்தொந்து சாவிரதாரு நூரெனிப = 21,600 என்னும்
ஸ்வாசரூபக = ஹம்ஸ மந்திர ஜப என்னும் ஸ்வாச ரூபனாக
பாஸ்கர பேஷரொளு = இட வல மூக்குகளிலிருந்து வெளியேறும் மூச்சுக்குக் காரணமான சூர்ய சந்திரர்களில் இருந்து
அவர = சந்திர சூர்யரின்
கைவிடிது = கைபிடித்து. அதாவது அவர்களின் வழிகாட்டியாக
ஈ சரோஜ பவாண்டதொளு = இந்த பிரம்மாண்டத்தில்
சர்வத்ர = எல்லா இடங்களிலும்
தும்பிஹனு = நிலைத்திருக்கிறான்.

ஸ்வரூப தேகம் முதலான 4 தேகங்களில் முக்ய பிராணதேவர் இருந்து செய்யும் வேலைகளை சொல்கிறார். இந்த 4 சரீரங்களில், கோஷங்கள் 5. தாதுக்கள் 7. இவற்றில் இருக்கும் பாரதிரமண முக்யபிராணாருக்கு பதியான - அதாவது, ஸ்வாமியான ஸ்ரீபரமாத்மன், ஹம்ஸரூபத்தினால் பிராணதேவரில் இருந்து 21,600 ஹம்ஸ மந்திர ஜபரூபமான ஸ்வாசங்களை, இடது வலது மூக்கினால் வரும் ஸ்வாசங்களுக்கு காரணமான சந்திர சூர்யரின் வழிகாட்டியாக, அவர்களை காப்பாற்றியவாறு, இந்த பிரம்மாண்டத்தில் அனைத்து இடங்களிலும் இருந்து நிலைத்திருக்கிறான்.


***

Wednesday, May 27, 2020

#4 - பஞ்சதன்மாத்ர சந்தி

#4 - பஞ்சதன்மாத்ர சந்தி


கலுஷவில்லத த3ர்ப்ப1ணதி3 ப்ரதி
2லிஸி ர்வ பதா3ர்த்த23ளு க
ங்கொ3ளிஸுவந்த3தி3 பி3ம்ப3 ஜட3 சேதனக3ளொளகி3த்து |
பொளெவ ப3ஹுரூபத3லி ஜ்ஜன
ரொளகெ மனத3ர்ப்ப1ணதி தா1 நி
ஸ்சல நிராமய நிர்விகார நிராஸ்ரய அனந்த ||4

கலுஷவில்லத = தூய்மையான
தர்பணதி = கண்ணாடியில்
ப்ரதிபலிஸி = பிரதிபலித்து
சர்வ பதார்த்தகளு = அனைத்து பதார்த்தங்களும்
கங்கொளிசுவந்ததி = கண்ணுக்குத் தெரிவதைப் போல
பிம்ப = பிம்பரூபியான பரமாத்மன்
ஜட சேதனகளொளகித்து = ஜட சேதனர்களில் இருந்து
பஹுரூபதலி = அனேக ரூபங்களால்
பொளெவ = ஒளிர்கிறான்
சஜ்ஜனரொளகெ = சஜ்ஜனர்களில்
மனதர்ப்பணதி = மனம் என்னும் கண்ணாடியில்
அனந்த = அனந்த ரூபங்களைக் கொண்ட
நிராஸ்ரய = யாரையும் நம்பியிருக்காத, ஸ்ரீபரமாத்மன்
தா = தான்
நிஸ்சல = நிஸ்சலனாக (நிலையானவன்)
நிராமய = நோய்கள் அற்றவனாகவும்
நிர்விகார = எவ்வித குறைகளும் அற்றவன்
பொளெவ = ஒளிர்கிறான்.

பிம்ப பிரதிபிம்பர்கள் என்னும் வகையில், பகவத் உபாசனையைப் பற்றி விளக்குகிறார். தூய்மையான கண்ணாடியில் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் அதன் பிரதிபிம்பமாக எப்படி தோன்றுகிறதோ, அப்படியே பிம்பரூபியான ஸ்ரீபரமாத்மனுக்கு நித்யமான, ஜீவனஸ்வரூப தேகம் கண்ணாடியைப் போல இருக்கிறது. அந்த ஸ்வரூப தேகம் என்னும் கண்ணாடியில் நித்யமான பிம்பரூபியான பரமாத்மனின் பிரதிபிம்பமே ஜீவனாக பிரதிபலித்து தெரிகிறது. பிம்பரூபி ஒருவனே ஆனாலும், சரீரங்கள் வேறாகையால், பற்பல ப்ரதிபிம்பங்களாக காட்சியளிக்கிறது. உபாதி பேதத்தினாலேயே சாத்விகாதி மூன்று வித ஜீவர்களாக இருக்கிறது.

தீபமானது எப்போதும் ஒரே மாதிரியான ஒளியைக் கொடுத்தாலும், மேலிருக்கும் சிம்னிக்கேற்ப, சிவப்பு, வெள்ளை, மஞ்சள், கருப்பு என எப்படி பல வண்ணங்களாக தெரிகிறதோ. அதுபோலவே பரமாத்மனின் ரூபமானது நிஸ்சல, நிராமய மற்றும் நிராஸ்ரயமாக இருந்தாலும், ஜீவ ஸ்வரூபம் அதன் தேகத்தை அனுசரித்து, சாத்விக, ராஜஸ, தாமஸ என்னும் பேதங்களாக தெரிகிறது.

ஜ்யோதிர்யதைவோதக பார்த்திவேஷ்வத: ஸமீர வேகானுகதம் விபாவ்யதே -- என்னும் பாகவத 10ம் ஸ்கந்த வாக்கியத்தின்படி, தண்ணீரில் தெரியும் சூரியனின் பிரதிபிம்பமானது, தண்ணீர் ஆடும்போது, உடைந்திருப்பதைப் போல தெரிகிறது. அதே பிரதிபிம்பம், ஒரு சிலையில் தெரியும்போது, தெளிவாக நிஸ்சலமாக தெரிகிறது. இப்படி சூரியனின் பிரதிபிம்பமானது, தெளிவாகவும் / உடைந்தது போலவும் தெரிவதற்கு, தண்ணீரும், சிலையும் காரணங்களே தவிர, சூரியனின் கிரணங்களில் எவ்வித பிரச்னைகளும் இல்லை. அதுபோலவே, ஜீவர்களின் ஸ்வரூப யோக்யதைக்கேற்ப, பிரதிபிம்பரான ஜீவரே தோஷிகள் ஆகுவரே தவிர, பரமாத்மன் தோஷியல்ல. அதில், சாத்விகரான யோக்ய ஜீவர் மட்டும் தூய்மையான, நிஸ்சலமான தம் மனம் என்னும் தர்மங்களில் கூடி ஒளிரும் பிம்பரூபியான பரமாத்மனை காண்பர்.

சூரியன் எப்போதும் ஒளிர்பவனே ஆனாலும், மேகங்கள் மறைத்துவிட்டால் சூரியனை எப்படி காணமுடியாதோ, அப்படியே பரமாத்மன், தமக்குள் பிம்பரூபியாக இருந்து ஒளிர்ந்து கொண்டிருந்தாலும், அஞ்ஞானிகளும், அயோக்யர்களும், அஞ்ஞானத்தில் மூழ்கி, அவனைக் காணமாட்டார்கள். ஜடங்களில் ஜடரூபனாகவும், சேதனர்களில் சேதனரூபியாகவும், அனைவரிலும் ஒளிர்பவனாகவும் இருப்பதை ஞானிகள் மட்டுமே அறிவார்கள்.

பரமாத்மன் நிஸ்சலமாக இருக்கிறான் என்றால் கல் போன்று இருக்கிறான் என்று அர்த்தமல்ல. ஜடத்தில் நிஸ்சலமாக இருக்கிறான். ஜடசேதனாதிகளில் சலிஸதெஎன்றால் ஸ்திரமாக இருக்கிறான் என்று பொருள். மனுஷ்யாதி சரீரங்களில் இருந்தாலும், ஜீவனுக்கு அவன் யோக்யதைக்கேற்ப நோய்கள் வந்திருந்தாலும், தான் மட்டும் நிரோகியாக இருக்கிறான். ஜீவன் சுக துக்கங்களால் விகாரம் (தோற்றத்தில் மாற்றம்) பெற்றாலும், தான் நிர்விகாரனாக இருக்கிறான்.

ரமா பிரம்மாதி அனைத்து சேதனர்களும், ஜடர்களும் தன்னை நம்பியவர்களாக இருந்தாலும், தான் யாரையும் நம்பியவனாக இருப்பதில்லை. தான், ஒருவனே ஆனாலும், அனந்தரூபனாக இருக்கிறான். ஆகையால், தாசராயர், நிஸ்சல, நிராமய, நிர்விகார நிராஸ்ரய என்னும் சிறப்பு குணங்களை சொல்கிறார். இதிலிருந்து ஜீவ பரமாத்மரின் வேறுபாடுகளை காட்டுவது போலவும் ஆயிற்று. ஜீவன், தேகத்தை விட்டுப் போகிறவன் ஆகையால், சலன். ஜீவன் நோய்களால் பீடிக்கப்படுபவன். இந்த இரண்டும் பரமாத்மனுக்கு இல்லை. ஜீவன் சுகதுக்காதிகளால் விகாரம் பெறுகிறான். பரமாத்மன் நிர்விகாரன். ஜீவன், பராஸ்ரயன், அஸ்வதந்த்ரன். பரமாத்மன் நிராஸ்ரயன், ஸ்வதந்த்ரன். இத்தகைய பற்பல ரூபங்களால் ஒளிரும் பரமாத்மனை ஞானிகள் மட்டுமே காண்பர்.


***

#3 - பஞ்சதன்மாத்ர சந்தி

#3 - பஞ்சதன்மாத்ர சந்தி


ஜீவ லிங்க3னிருத்த ஸ்தூ2ல க
ளேவரக3ளலி விஷ்வ து1ரக3
க்3ரீவ மூலேஷாச்யுத த்ரய ஹம்ஸ மூர்த்திக3|
ஈ வித3 சதுஸ்தா2னத3லி ஷா
ந்தீவரன ஈரெரடு3 ரூபவ
பா4விஸுவுதே3கோன விம்ஷதி மூர்த்தி சர்வத்ர ||3

ஜீவலிங்கனிருத்த ஸ்தூல கலேவரகளலி = ஜீவனின் ஸ்வரூப தேகத்தில், லிங்க தேகத்தில், அனிருத்த தேகத்தில், ஸ்தூல தேகத்திலும்
விஷ்வ = விஸ்வரூபத்தினால்
துரகக்ரீவ = ஹயக்ரீவ ரூபத்தினால், அனிருத்த ரூபத்தினாலும்
மூலேஷ = நாராயண அல்லது பத்பனாப ரூபத்தினாலும்
அச்யுதத்ரய = அச்யுத, அனந்த, கோவிந்த என்னும் மூன்று ரூபங்களால்
ஹம்ஸ மூர்த்திகள = ஹம்ஸ என்னும் 4 மூர்த்திகளை
ஈ வித சதுஸ்தானதலி = மேற்சொன்ன 4 தேகங்களில்
சாந்திவரன = சாந்திபதியான அனிருத்தன்
ஈரெரடு ரூபதி = 4 ரூபங்களை
பாவிசுவுது = நினைக்க வேண்டும்.
சர்வத்ர = மேற்சொன்ன அனைத்து இடங்களிலும்
ஏகோன விம்சதி மூர்த்தி = 19 மூர்த்திகளை. அதாவது, ஷப்தாதி தன்மாத்ரா குணங்களுடன் கூடிய பஞ்சபூதங்களில், அனிருத்தாதி 5 ரூபங்களை, ஞானேந்திரிய 5ல் 5 ரூபங்களை, கர்மேந்திரிய 5ல் அனிருத்தாதி 5 ரூபங்களை, என 15, அவ்யக்த, மஹத், மனஸ், அஹங்கார என்னும் 4ல் அச்யுத, அனந்த, கோவிந்த, ஹம்ஸ என்னும் 4 ரூபங்களையும் சேர்த்து, 19 ரூபங்களையும், ஒவ்வொரு சரீரங்களிலும் சிந்திக்க வேண்டும்.

இந்த பத்யத்தில், நான்குவித தேகங்களிலும், உபாசனை செய்யவேண்டிய பகவத்ரூபங்களை சொல்கிறார்.

ஜீவனின் :
* ஸ்வரூப தேகத்தில் விஸ்வரூபத்தையும்,
* லிங்க சரீரத்தில் ஹயக்ரீவ ரூபத்தையும்
* அனிருத்த தேகத்தில் அனிருத்த ரூபத்தையும்
* ஸ்தூல தேகத்தில் நாராயண ரூபத்தையும்
* அனிருத்தனே இருக்கிறான்; அல்லது,

அச்யுத, அனந்த, கோவிந்த, ஹம்ஸ என்னும் 4 ரூபங்களை தரித்து மேற்கண்ட 4 தேகங்களில் இருக்கிறான்.

இப்படி, சாந்திபதியான அனிருத்தன் 4 ரூபங்களால் 4 ஸ்தானங்களில் இருப்பதே பஞ்சபூத 5, கர்மேந்திரிய 5, ஞானேந்திரிய 5, என மொத்தம் 19 தத்வங்களில் அனிருத்தாதி 5*3=15 ரூபங்களாலும், அச்யுதானந்த கோவிந்த என்னும் 3 ரூபங்கள், ஹம்ஸ 1 என மொத்தம் 19 ரூபங்களால், நான்கு தேகங்களிலும் வசிக்கிறான் என்று சிந்திக்க வேண்டும்.


***

Tuesday, May 26, 2020

#2 - பஞ்சதன்மாத்ர சந்தி

#2 - பஞ்சதன்மாத்ர சந்தி


ப்ரணவ ப்ரதிபாத்3ய த்ரிநாமதி3
1னுவினொளு த்ரிஸ்தா2னக3 னிரு
த்த4னு த்ரிபஞ்சக ஏகவிம்ஷதி1 சதுரவிம்ஷதி1
நெனிஸி எப்பத்தெரடு3 ஸாவிர
இனிது1 நாடிக3ளொளு நியாமிஸு
தின கப4ஸ்திக3 லோகதொ3ளு சர்வத்ர பெ3ளகு3வனு ||2

ப்ரணவ ப்ரதிபாத்யனு = ஓம்காரத்தால் புகழப்படுபவன்
த்ரிநாமதி = ஓம்காரத்தில் இருக்கும் எழுத்துக்கள், அ+உ+ம.
* ஆனந்த ஸ்வரூபன் ஆகையால் ஆ என்று பெயர்.
* ஆனந்த த்வாதனாமாஸௌ, உத்க்ருஷ்டத்வாது நாமக: - என்னும் வாக்கியத்திற்கேற்ப மிகச்சிறந்தவன் ஆகையால், உ என்று பெயர்.
* அனைவராலும் பூஜிக்கப்படுபவன் ஆகையால் ம என்று பெயர்.
இத்தகைய மூன்று ரூபங்களால்,
தனுவினொளு = தேகத்தில்
த்ரிஸ்தானக = லிங்க, அனிருத்த, ஸ்தூல சரீரங்களில் இருந்து, அல்லது ; ,,ம இவை மூன்று எழுத்துக்களும் தோன்றும் ஸ்தானங்கள் அ= அடி வயிற்றிலிருந்து. உ = கழுத்திலிருந்து; ம = உதடுகளிலிருந்து. இந்த விதமாக, மூன்று ஸ்தானங்களில்,
அனிருத்தனு = அனிருத்த ரூபியான பரமாத்மன்
த்ரிபஞ்சக = 15 ரூபங்களாலும்
ஏகவிம்ஷதி = 21 ரூபங்களாலும்
சதுர விம்ஷதிக = 24 ரூபங்களாலும் இருக்கிறான் என்று அழைக்கப்பட்டு
இனிது = இதைப் போலவே
எப்பத்தெரடு சாவிர நாடிகளொளு = தேகத்தில் இருக்கும் 72,000 நாடிகளில்
நியாமிஸுத = நிலைத்திருந்து, அந்தந்த செயல்களை செய்தவாறு
இனகபஸ்திக = இதைப்போல, சூர்யனின் கிரணங்களிலும் இருந்து
சர்வத்ர = அனைத்து இடங்களிலும்
பெளகுவனு = ஒளிர்கிறான்.

இந்த தேகத்திலும், நாடிகளிலும் உபாசனை செய்யவேண்டிய பகவத்ரூபங்களைப் பற்றி தாசராயர் சொல்கிறார்.

ப்ரணவ ப்ரதிபாத்ய - ஓம்கார ப்ரதிபாத்யனு த்ரினாமதி என்றால், அ+உ+ம என இந்த மூன்று எழுத்துக்களை சேர்த்து, ஓம் என்று ஆகிறது. இதன் பொருள்: சாந்தோக்ய உபநிஷத்தில்

அகாரேணாதிகம் ப்ரோக்த முகாரேணோச்ச முச்யதே |
ததாமிதம் சர்வவேதைர் மகாரேணாபி தீயதே |
அதிகோச்சமிதி ஞாதமோமித்யஸ்ய ஈரித: ||

அதிகமானவனாகையால் (மிகச்சிறந்தவன் ஆகையால்), அ-நாம என்றும் , உச்சம் ஆனதால் உ-நாம என்றும், அனைத்து வேதங்களைவிடவும் உயர்ந்தவன், அதாவது, அவற்றினால் அறிந்துகொள்ளப்படுபவன் ஆகையால் ம-காரத்தால் அறியப்படுபவன் பரமாத்மன்.

ஓம் நாமானமுபாஸீத ததர்த்தகுண பூர்வகம் ஓதத்வாதவ நாம்னானாதரிகோச்சத்வ காரணாத் |
அனந்தாதோஜஸஸ்சைவ பரணாதோ முதாஹ்ருத: ||

ஓம்காரத்தால் அறியப்படுபவனான பரமாத்மனை தெளிவான ஞானத்துடன் உபாசிக்க வேண்டும். பிரபஞ்சம் அனைத்தும் பரமாத்மனில், ஆடையின் நூல்களைப் போல சேர்ந்திருப்பதால், அந்த பிரபஞ்சம் அனைத்தையும் காப்பாற்றுவதால், அனைவராலும் வணங்கப்படுபவன் ஆகையால், அதிகமான உச்சத்தில் இருப்பவன் ஆகையாலும், ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலும், பலசாலியாகையாலும், உலகத்தையே தன்னுள் வைத்திருப்பதாலும், பரமாத்மனுக்கு ஓம் என்று பெயர் -- என்று கூறுகிறார்.

இதே போல, மூன்று பெயர்களில், லிங்க சரீரத்திலும், அனிருத்த சரீரத்திலும், ஸ்தூல சரீரத்திலும், இந்த தேகத்தின் மூன்று ஸ்தானங்களில் அனிருத்தன் வசிக்கிறான். அல்லது, அகார, உகார, மகாரங்களின் பிறப்பிடமான அடிவயிறு, கழுத்து, உதடுகள் என்னும் மூன்று இடங்களில் வசிக்கிறான். இது மட்டுமல்லாது,

* அனிருத்தன், ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, பஞ்சபூதங்கள் 5 என 15 இடங்களில் அனிருத்தன், அனிருத்தாதி 5 ரூபங்களால் 3*5 இடங்களில், 3*5=15 ரூபங்களில் லிங்கதேகத்திலும்,

* இந்த 15ல் பஞ்சதன்மாத்ரா குணங்கள் 5, மனஸ் 1 என இந்த 6ஐயும் சேர்த்து, 21ல் அனிருத்த தேகத்தில், ஷக்தி பிரதிஷ்டா 11 + தசாவதார 10 = 21 ரூபங்களாலும்,

* ஸ்தூல சரீரத்தில் இந்த 21 தத்வங்களில் அவ்யக்த, மஹத், அஹங்கார இந்த மூன்றையும் சேர்த்து, 24ல், கேசவாதி 24 ரூபங்களிலும் இருக்கிறான்.

மேலும், 1 மாதத்திற்கு, 30 பகல் 30 இரவுகள் இருப்பதைப் போல, ஒரு ஆண்டிற்கு 360 இரவு 30 பகல்கள் மனித ஆயுளின்படி, 100 ஆண்டுகளுக்கு 36,000 பகல்கள், 36,000 இரவுகள் ஆகின்றன. இவையே சூரியனில் தட்சிணாயனத்தில் 36,000 உத்தராயனத்தில் 36,000 கிரணங்களாக ஆகின்றன. இந்த கிரணங்களே நம் சரீரத்தில் இடது பக்கத்தில் 36000 வலது பக்கத்தில் 36000 என 72000 நாடிகளாக இருக்கின்றன. அந்த நாடிகளில் அவ்வளவே ரூபங்களால் நியாமகனாக இருந்து, சூர்யனின் கிரணங்களில் கூட இருந்து, அனைத்து இடங்களிலும் ஒளியைப் பாய்ச்சுகிறான்.



***

#1 - பஞ்சதன்மாத்ர சந்தி

#1 - பஞ்சதன்மாத்ர சந்தி


ஹரிகதா2ம்ருதசார கு3ருக3
கருணதிந்தா3பநிது பே1ளுவே
பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

பூ4 லில ஷிகி2 பவன பூ4தா
காஷ தொ3ளகை3தை3து3 தன்மா
த்ரா ஹித ஒந்ததி4க பஞ்சாஷத் வரணவேத்3|
ஈ ஷரீரதி3 வ்யாபிஸித்து3 சு
ராசுரரிகெ3 நிரந்தரத3லி சு
கா2 சுக2ப்ரத3னாகி3 ஆடுவ த்வேஷிபர பி3டு3||1

பூ = பூமி
சலில = தண்ணீர்
ஷிகி = அக்னி
பவன = வாயு
பூதாகாஷதொளு = ஆகாயம்
ஐது = 5
தன்மாத்ரா சஹித = ஷப்த, ஸ்பர்ஷாதி 5 குணங்களுடன் கூடிய
ஈ ஷரீரதி = இந்த பாஞ்சபௌதிக சரீரத்தில்
ஒந்ததிக பஞ்சாஷத் வரணவேத்ய = 51 எழுத்துக்களால் அறியப்படுபவனான
வியாபிஸி = வியாபித்தவாறு இருந்து
சுராசுரரிகெ = தேவ தைத்யர்களுக்கு
ஸுகாசுகப்ரதனாகி = சுக துக்கங்களை கொடுப்பவனாக
ஆடுவ = விளையாடும் (செயல்களை செய்யும்)
த்வேஷிபர = த்வேஷிகளை
பிடுவ = சம்ஹரிக்கிறான்.

இந்த சந்தியில், தன்மாத்ர குணங்களில் இருக்கும் பகவத்ரூபங்களை சொல்லியாறு, முதல் பத்யத்தில் அதன் சாரத்தை சொல்கிறார். ப்ருதிவி, அபு, தேஜஸ், வாயு, ஆகாச என்னும் 5 பஞ்சபூதங்கள். இவற்றின் மாத்ரா குணங்கள், கந்த, ரஸ, ரூப, ஸ்பர்ஷ மற்றும் ஷப்த. இவற்றைக் கொண்டிருக்கும் இந்த சரீரத்தில் ஆகாஷாதி 51 எழுத்துக்களால் புகழப்படும் அஜ, ஆனந்தாதி 51 ரூபங்களை சிந்திக்க வேண்டும். மஹாபூதங்களில் ஆகாஷாதி ஒவ்வொரு பூதங்களிலும், வாய்வாதி 5 பூதாதிகளின் சம்பந்தம் இருக்கிறது. அதுபோலவே, ஆகாஷாதிகளின் தன்மாத்ரா குணங்களான ஷப்தாதிகளில் ஸ்பர்ஷாதி குணங்கள், ஸ்பர்ஷாதிகளில் ஷப்தாதி குணங்களின் கலவை இருக்கிறது. ஒவ்வொரு பூதங்களிலும் மற்ற 4 பூதங்களின் சம்பந்தமும், மாத்ரா குணங்கள் ஒவ்வொன்றிலும் இதர 4 மாத்ரா குணங்களின் சம்பந்தமும் இருக்கிறது என்று அறிய வேண்டும்.

பாகவத 3ம் ஸ்கந்தம் 27ம் அத்தியாயம் 51ம் ஸ்லோகம் பரஸ்ய த்ருஷ்யதே தர்மோஹ்ய பரஸ்மின்னமுன்வயாத்’. இதை விஜயத்வஜீய வியாக்யானத்தில் பரஸ்ய பூர்வஸ்ய, காரணஸ்ய ஷாகாஷாதேதர்ம: ஷப்தாதி குணோsபரஸ்மின் பச்சாத்தனேகார்யே வாய்வாதௌ த்ருஷ்யதேஹி | குத: சமன்வயாத் சம்பந்தாத் ||’. பரஸ்ய = முன்னர் இருக்கக்கூடிய. ஆகாஷாதி தர்மம் என்றால் ஷப்தாதி குணங்கள். அபரர்ஸ்மி = இதற்குப் பிறகு காரியபூதமான வாயுகளில் இருக்கிறது. அது எப்படியெனில், ஸமன்வயாத் = ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருப்பதால், என்று சொல்லியிருக்கிறார்.

இந்த ஆதாரத்தினால், பஞ்சபூதம் 5. ஒவ்வொன்றிலும் இதர பூதங்கள் 4 என்றால், பூமி ஒன்று. அதில் தண்ணீர் முதலான 4 ரஸ சம்பந்தங்கள் 5. இப்படியாக ஒவ்வொன்றிலும் 5 என்றால், மொத்தம் 25 ஆகிறது. இதைப்போல, தன்மாத்ரா ஷப்தாதிகள் 25. மொத்தம் 50. இதனுடன் மனஸ் சேர்த்தால், 51. இந்த 51ல் அஜ, ஆனந்த முதலான 51 எழுத்துக்களால் வர்ணிக்கப்படுபவனை அறியவேண்டும். நம் தேகத்தில் தத்வாபிமானி தேவதைகள் எவ்வளவு பேர் இருக்கின்றனரோ, அவ்வளவு தத்வாபிமானி தைத்யர்களும் இருக்கின்றனர். தேவதைகள், புண்ய கர்மங்களை செய்விப்பவர்கள். தைத்யர்கள், பாவ கர்மங்களை செய்விப்பவர்கள்.

பாகவத 11ம் ஸ்கந்தம், 2ம் அத்தியாயம், 49ம் ஸ்லோகத்தில் தேஹேந்த்ரிய ப்ராணதியாம்என்பதின் பாகவத தாத்பர்யத்தை, விஜயத்வஜீய வியாக்யானத்தில் சொல்லியிருக்கிறார். அது என்னவெனில்:

தேஹேந்த்ரிய ப்ராணதியாம் த்ரிதைவத்வபிமானின: |
தத்ரோத்தமா தேவதாஸ்தா: ஸர்வ தோஷ விவர்ஜிதா: ||
மத்யமா குணதோஷேதா அவமா அஸுரா மதா: |
தேப்யோன்யோ மானுஷோ ஜீவஸ்தப்யாம் தேவாஸுராவபி |
ஜீவாபிமானினஸ்சைவ த்ரிவிதா சம்ப்ரகீர்த்திதா: ||
ஜீவமான்யுத்தமோ பிரம்மா மத்யம: ஸ்வயமேவது |
அதம: கலிருத்திஷ்ட: தத்ர மத்யம நீசயோ: ||
ம்ருதிஜன்ம க்‌ஷுதாதுக்க ப்ரப்ருத்யகிலமேவது ||
நோத்தமஸ்யது ஜீவஸ்ய தேஹாதேஷ்ச கதஞ்சன ||
அசுராணாமதர்மஸ்ய வ்ருத்யா சுகமபீஷ்யதே ||
தேவானாம் நைவகேனாபி துக்கம் ப்ரீதிஸ்துதர்மத: |
அதர்மோபி ப்ரீதயேஸ்யாத சுராணாம் தமோகதே: ||
தேவானாம் புண்யபாபாப்யாம் சுகமேபோத்த ரோத்தரம் |
தேஷாம் துக்காதிகம் கிஞ்சிதசுராவேஷதோ பவேத் ||
ப்ராணஸ்ய நாசுராதேஷோ ஹரிணாச (அகணாஸ்ச) சமோஹிஸ: ||
சம்பூர்ணானுக்ரஹாத்விஷ்ணோ: ப்ராண: பூர்ணகுணோமத |
அஸுராணாம் சுகாத்யாஷ்ச தேவாவேஷாதுரீரிதா: ||

தேகம், இந்திரியங்கள், பிராண, புத்தி ஆகியவற்றிற்கு அபிமானிகள், மூன்று விதங்கள்.
* உத்தமர் தேவதைகள், தோஷங்கள் இல்லாதவர்கள்.
* மத்யமர் குணதோஷங்கள் கொண்டவர்கள்.
* அதமர் தைத்யர் அனைவரும் தோஷங்கள் கொண்டவர்கள்.

இந்த மூன்றிலிருந்து வேறுபட்டவர்கள், மனுஷ்யஜீவர்கள். இவனுக்கு, தேவாசுரர்கள் அபிமானிகள்.

ஜீவாபிமானிகள் கூட மூன்று விதமானவர்கள்.
* ஜீவமானிகளில் உத்தமர் பிரம்மதேவர்.
* மத்யமன் ஜீவன் மற்றும் புரஞ்சனன் என்னும் ராஜன்.
* அதமன், கலி.

இவற்றில், மத்யமனான ஜீவனுக்கும், ஜீவமானியான புரஞ்சனனுக்கும், நீசனான கலிக்கும், மரணம், ஜனனம், பசி முதலான துக்கங்கள் உண்டு.

இதேபோல, தேகத்தில் இருக்கும் தத்வாபிமானி தேவதைகளுக்கு, தேகத்தில் இருக்கும் சுகங்கள் மட்டுமே உண்டு. ஜீவனுக்கு சுக துக்கங்கள் என இரண்டின் சம்பந்தமும் இருக்கிறது. அசுரர்களுக்கு அதர்ம வழியாதலால், துக்கம் மட்டுமே உண்டாகிறது. துரியோதனாதிகளுக்கு ஆனதைப் போல, சில துக்கங்களே பல-ரூபமாக, சுகமும் ஆவதுண்டு. ஆனால் அதுவும் அவர்களின் பாவத்திற்கே வழிவகுக்கும். தேவதைகளுக்கு எவ்வித துக்கங்களும் இல்லை. தர்மத்தை பின்பற்றினால், பரமாத்மன் மேல் அன்பு அதிகரிக்கும். சில சமயங்களில் தேவதைகள் அதர்ம செயல்களை செய்தாலும், அது அசுரர்களின் தமஸ் சாதனைக்காக, தாம் செய்து, அந்த பலன்களை தைத்யர்களுக்கே கொடுப்பர். ஆகையால், தேவதைகள், புண்ணியம் செய்தாலோ, பாவம் செய்தாலோ, அல்லது தேகங்களைக் கொண்டிருக்கும் நம்மிடமிருந்து புண்ய பாவங்களை செய்வித்தாலோ, அவர்களுக்கு புண்ய பலன்களே கிடைக்கிறது. பாப பலன்கள், அதன் அபிமானி தைத்யர்களுக்கே ஆகிறது. இதைத்தவிர, தைத்ய ஜீவர்களுக்கு என்றைக்கும் சுகம் இல்லை. தேவதைகளுக்கு என்றைக்கும் துக்கம் இல்லை.

அஞ்ஞான வாசத்தில் பாண்டவர்கள் கஷ்டப்படவில்லையா? துர்யோதனாதிகள் அரசைப் பெற்று சுகப்படவில்லையா? என்றால், தேவதைகளுக்கு இருக்கும் அசுர ஆவேசத்தினால் மிகச்சிறிய அளவிற்கு துக்கம் உண்டாகலாம். தேவதைகளின் உள்ளே இருக்கும் தைத்யர்களே அதனை அனுபவிப்பர். தேவதை ஜீவிகள் அதனை அனுபவிக்க மாட்டார்கள். தைத்யர்களுக்கு சுகம் ஆனாலும், தேவ ஆவேசத்தாலேயே ஆகிறதே தவிர, தைத்ய ஜீவர்களுக்கு அல்ல.

பிராணதேவருக்கு மட்டும் என்றைக்கும் அசுர ஆவேசம் இல்லை. பரமாத்மனின் ஸ்வரூபத்தைக் காட்டும் விஷயத்தில் அவர் உரைகல் போல. பரமாத்மனின் பரமானுக்கிரகத்தினால் அவர் பூர்ண குணங்களைக் கொண்டவர் என்று அறியவேண்டும். தேகங்களில் இருக்கும் தத்வாபிமானி தேவ தைத்யர்களுக்கு சுக துக்கங்களை, அதாவது தேவதைகளுக்கு சுகங்களை, தைத்யர்களுக்கு துக்கங்களைக் கொடுத்து, இதே சரீரத்தில் நிலைத்திருந்து, அவரவரின் கர்மங்களுக்கேற்ப, த்வேஷிகளை திருத்தி, பரத்தில், தமோரூபமான தண்டனையைக் கொடுக்கிறான் என்று பொருள்.


***